Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Natrinai
Natrinai
Natrinai
Ebook759 pages2 hours

Natrinai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது கடைச்சங்கம். அந்த கடைச்சங்க காலத்தில் மிகச் சிறந்து விளங்கிய நூல்கள் எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும்.

இந்த நூல்கள் தமிழ் மக்களின் நெறிசார்ந்த வாழ்வியல் தத்துவங்களையும், வரலாற்றுச் செய்தி களையும் செழுமையான அறிவையும் கலை உணர் வையும், எடுத்துரைக்கின்றது.

மேலும், அத்தகைய பெருமை மிக்க வாழ்வு வாழ்ந்தவர்களின் வழியில் வந்தவர்கள் நாம் என்று நினைக்கும்போது நமக்கும் பெருமை உண்டாகிறது. அகப்பொருட்களை விளக்கக் கூடிய எட்டுத் தொகை நூல்களில் ஒன்றாகத் திகழ்வது நற்றிணையாகும். அகப்பொருள் சார்ந்த நெடுந்தொகை, நற்றிணை, குறுந்தொகை என்ற மூன்றும் தொகை நூல்களாகும்.

இவைகள் அனைத்தும் செய்யுளின் வளத்தையும் அடிகளின் அளவையும் கருத்தில் கொண்டு தொகுக்கப்பட்டுள்ளது. இந்த நூல்கள் ஒவ்வொன்றும் 400 செய்யுட்களைக் கொண்டுள்ளது.

தொகை நூல்கள் ஒவ்வொன்றையும் தொகுத்தவர் இவர் என்றும் தொகுக்கும் பணிக்கு நிதியுதவி செய்தவர் இவர் என்றும் குறிப்புகள் காணப்படும்.

இந்த மன்னன் துணையுடன் இந்த சான்றோர் இந்த நூலைத் தொகுத்தார் என்று அந்த நூல்களில் இயல்பாக காணப்படும். அந்த வரிசையில் நற்றிணையைத் தொகுப்பித்தவர் பாண்டியன் பான்னாடு தந்தான் மாறன் வழுதி என்று குறிப்பு காணப்படுகிறது.

இதில் பன்னாடு தந்தான் என்று கூறுவது அவன் வீரத்தை குறிப்பிடும் சிறப்புப் பெயராகும். இவனுடைய உதவிகளைப் பற்றி நற்றிணை, குறுந்தொகைப் பாடல்களில் காணப்படுகிறது.

குறிப்பாக நற்றிணையில் 97, 301 ஆகிய பாடல்களில் பாடப்படுகிறது. இவை அந்த மன்னனுடைய தமிழ் புலமையையும் பேராற்றலையும் பறைசாற்றுகின்றது. இருப்பினும் இந்த நூலைத் தொகுத்தவர் யார் என்ற குறிப்புகளும் ஒன்றும் காணப்படவில்லை. சிறப்பாக தொகுத்துள்ளதைப் பார்க்கும்போது இவர் அகப்பொருள் செய்யுட்களை படைப்பதில் பெரும் புலவராக இருந்திருக்க வேண்டும் என்று கருதலாம்.

400 செய்யுட்களைக் கொண்ட நற்றிணையில் ஒன்பது அடிகளில் சிறிய செய்யுட்களும், 12 அடிகளில் சற்று நீளமான செய்யுட்களையும் கொண்டு இந்த நூல் தொகுக்கப்பட்டுள்ளது.

இந்த நூலில் ஐந்திணைகளில் குறிஞ்சிக்கு 132, பாலைக்கு 106, நெய்தலுக்கு 101, மருதத்துக்கு 32, முல்லைக்கு 29 என்ற எண்ணிக்கையில் செய்யுட்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

இந்த நூலை தொகுத்தவரின் மதிப்பீட்டின்படி அவர் செறிவு மிக்கதாக நினைத்த செய்யுட்கள் மட்டுமே தொகுக்கப்பட்டுள்ளது என்பதையும் கண்டு கொள்ள முடியும்.

எட்டுத்தொகை நூல்களைப் பற்றி வரிசையாக கூறக்கூடிய பழம்பாடல் ஒன்று உள்ளது.

“நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல் கற்றறிந்தார் ஏத்தும் கலியே அகம்புறம் என்று இத்திறத்த எட்டுத் தொகை”

நற்றிணை என்பதில் திணை என்றால் ஒழுக்கம் என்று அர்த்தம். நல்ல திணை என்றும் நல் ஒழுக்கம் என்றும் இதனைக் கூறலாம். திணை ஒழுக்கங்களில் நல்ல மரபும், பண்பும் உள்ள செய்யுட்களைத் தொகுத்து நற்றிணை ஆக்கப்பட்டுள்ளது என்று கருதலாம். இந்த நூலுக்கு கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் என்று அறிகின்றோம்.

தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய சான் றோர்கள் பலர் இந்த செய்யுட்களைத் தங்களுடைய உரைகளில் பல இடங்களில் எடுத்துக் காட்டியுள்ளனர்.

தொடர்ந்து தமிழ் சான்றோர்களின் தமிழ்ப் பணியால் தமிழ் அறிந்தவர்கள் எல்லாம் நற்றிணையைப் பற்றி பேசவும், ஆராயவும், படித்து மகிழவும் பேச்சிலும் எழுத்திலும் எடுத்துக் காட்டவும் கருத்து விருந்து அளிக்கவும் நற்றிணை தமிழ் கூறும் நல்லுலகம் என்றும் பரவலாயிற்று.

Languageதமிழ்
Release dateAug 14, 2021
ISBN6580144206867
Natrinai

Read more from Azhwargal Aaivu Maiyam

Related to Natrinai

Related ebooks

Reviews for Natrinai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Natrinai - Azhwargal Aaivu Maiyam

    https://www.pustaka.co.in

    நற்றிணை

    Natrinai

    Author:

    டாக்டர். எஸ். ஜெகத்ரட்சகன்

    Dr. S. Jagathrakshakan
    For more books

    https://www.pustaka.co.in/home/author/azhwargal-aaivu-maiyam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    முன்னுரை

    இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது கடைச்சங்கம். அந்த கடைச்சங்க காலத்தில் மிகச் சிறந்து விளங்கிய நூல்கள் எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும்.

    இந்த நூல்கள் தமிழ் மக்களின் நெறிசார்ந்த வாழ்வியல் தத்துவங்களையும், வரலாற்றுச் செய்தி களையும் செழுமையான அறிவையும் கலை உணர் வையும், எடுத்துரைக்கின்றது.

    மேலும், அத்தகைய பெருமை மிக்க வாழ்வு வாழ்ந்தவர்களின் வழியில் வந்தவர்கள் நாம் என்று நினைக்கும்போது நமக்கும் பெருமை உண்டாகிறது.

    அகப்பொருட்களை விளக்கக் கூடிய எட்டுத் தொகை நூல்களில் ஒன்றாகத் திகழ்வது நற்றிணை யாகும். அகப்பொருள் சார்ந்த நெடுந்தொகை, நற்றிணை, குறுந்தொகை என்ற மூன்றும் தொகை நூல்களாகும்.

    இவைகள் அனைத்தும் செய்யுளின் வளத்தையும் அடிகளின் அளவையும் கருத்தில் கொண்டு தொகுக்கப்பட்டுள்ளது. இந்த நூல்கள் ஒவ்வொன்றும் 400 செய்யுட்களைக் கொண்டுள்ளது.

    தொகை நூல்கள் ஒவ்வொன்றையும் தொகுத்தவர் இவர் என்றும் தொகுக்கும் பணிக்கு நிதியுதவி செய்தவர் இவர் என்றும் குறிப்புகள் காணப்படும்.

    இந்த மன்னன் துணையுடன் இந்த சான்றோர் இந்த நூலைத் தொகுத்தார் என்று அந்த நூல்களில் இயல்பாக காணப்படும். அந்த வரிசையில் நற்றிணையைத் தொகுப்பித்தவர் பாண்டியன் பான்னாடு தந்தான் மாறன் வழுதி என்று குறிப்பு காணப்படுகிறது.

    இதில் பன்னாடு தந்தான் என்று கூறுவது அவன் வீரத்தை குறிப்பிடும் சிறப்புப் பெயராகும். இவனுடைய உதவிகளைப் பற்றி நற்றிணை, குறுந்தொகைப் பாடல்களில் காணப்படுகிறது.

    குறிப்பாக நற்றிணையில் 97, 301 ஆகிய பாடல்களில் பாடப்படுகிறது. இவை அந்த மன்னனுடைய தமிழ் புலமையையும் பேராற்றலையும் பறைசாற்றுகின்றது.

    இருப்பினும் இந்த நூலைத் தொகுத்தவர் யார் என்ற குறிப்புகளும் ஒன்றும் காணப்படவில்லை. சிறப்பாக தொகுத்துள்ளதைப் பார்க்கும்போது இவர் அகப்பொருள் செய்யுட்களை படைப்பதில் பெரும் புலவராக இருந்திருக்க வேண்டும் என்று கருதலாம்.

    400 செய்யுட்களைக் கொண்ட நற்றிணையில் ஒன்பது அடிகளில் சிறிய செய்யுட்களும், 12 அடிகளில் சற்று நீளமான செய்யுட்களையும் கொண்டு இந்த நூல் தொகுக்கப்பட்டுள்ளது.

    இந்த நூலில் ஐந்திணைகளில் குறிஞ்சிக்கு 132, பாலைக்கு 106, நெய்தலுக்கு 101, மருதத்துக்கு 32, முல்லைக்கு 29 என்ற எண்ணிக்கையில் செய்யுட்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

    இந்த நூலை தொகுத்தவரின் மதிப்பீட்டின்படி அவர் செறிவு மிக்கதாக நினைத்த செய்யுட்கள் மட்டுமே தொகுக்கப்பட்டுள்ளது என்பதையும் கண்டு கொள்ள முடியும்.

    எட்டுத்தொகை நூல்களைப் பற்றி வரிசையாக கூறக்கூடிய பழம்பாடல் ஒன்று உள்ளது.

    நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு

    ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்

    கற்றறிந்தார் ஏத்தும் கலியே அகம்புறம் என்று

    இத்திறத்த எட்டுத் தொகை

    நற்றிணை என்பதில் திணை என்றால் ஒழுக்கம்  என்று அர்த்தம். நல்ல திணை என்றும் நல் ஒழுக்கம் என்றும் இதனைக் கூறலாம். திணை ஒழுக்கங்களில் நல்ல மரபும், பண்பும் உள்ள செய்யுட்களைத் தொகுத்து நற்றிணை ஆக்கப்பட்டுள்ளது என்று கருதலாம். இந்த நூலுக்கு கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் என்று அறிகின்றோம்.

    தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய சான் றோர்கள் பலர் இந்த செய்யுட்களைத் தங்களுடைய உரைகளில் பல இடங்களில் எடுத்துக் காட்டி யுள்ளனர்.

    தொடர்ந்து தமிழ் சான்றோர்களின் தமிழ்ப் பணியால் தமிழ் அறிந்தவர்கள் எல்லாம் நற்றிணையைப் பற்றி பேசவும், ஆராயவும், படித்து மகிழவும் பேச்சிலும் எழுத்திலும் எடுத்துக் காட்டவும் கருத்து விருந்து அளிக்கவும் நற்றிணை தமிழ் கூறும் நல்லுலகம் என்றும் பரவலாயிற்று.

    அன்புடன்

    டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகன்

    நற்றிணை

    கடவுள் வாழ்த்து

    பாடியவர் : பாரதம் பாடிய பெருந்தேவனார்

    ‘மாநிலஞ் சேவடி யாகத், தூநீர்

    வளைநரல் பௌவம் உடுக்கை யாக,

    விசும்புமெய் யாகத் திசைகை யாகப்

    பசுங்கதிர் மதியமொடு சுடர்கண் ணாக

    இயன்ற வெல்லாம் பயின்று, அகத் தடக்கிய

    வேத முதல்வன்’ என்ப

    ‘தீதற விளங்கிய திகிரி யோனே’

    இந்த மிகப் பெரிய பூமியை தன்னுடைய திருவடியாகக் கொண்டவன். சங்குகள் முழங்கும் தெளிவான நீர் நிறைந்த கடலை தனது ஆடையாக அணிந்தவன். வானத்தை தன் உடம்பாகக் கொண்டவன். திசைகள் எட்டையும் தன்னுடைய எட்டு தோள்களாகக் கொண்டவன்.

    சூரியன், சந்திரன், அக்னி, ஆகிய மூன்றையும் தன்னுடைய கண்களாகக் கொண்டவன். உலகப் பொருட்கள் அனைத்தையும் தன்னுடைய உறுப்பாகக் கொண்டு அவற்றை தனக்குள் அடக்கி தான் அவற்றுக்குள் அடங்கியும் அடங்காமலும் இருப்பவன். உயிர்கள் அனைத்தும் மல மாசுகள் நீங்கி ஞான வாழ்வு பெறும்படி திருவருளாகிய ஆணையை பிறப்பிக்கும் முதல்வன்.

    வேதங்களில் கூறப்படும் பொருட்களில் மெய்யுணர்வாக இருப்பவன். அந்த திருமால் அவனை நாம் தெளிந்து அறிந்து வழிபடுவோமாக.

    1. குறிஞ்சி

    பாடியவர் : கபிலர், திணை குறிஞ்சி, பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைவி சொல்லியது

    நின்ற சொல்லர்; நீடுதோறு இனியர்;

    என்றும் என் தோள் பிரிபு அறியலரே''

    தாமரைத் தண் தாது ஊதி, மீமிசைச்

    சாந்தில் தொடுத்த தீம் தேன் போல,5

    புரைய மன்ற, புரையோர் கேண்மை;

    நீர் இன்று அமையா உலகம் போலத்

    தம் இன்று அமையா நம் நயந்தருளி,

    நறு நுதல் பசத்தல் அஞ்சிச்

    சிறுமை உறுபவோ? செய்பு அறியலரே!

    பொய் இல்லாத சொற்களைப் பேசக் கூடியவன் நம் தலைவர். எப்போதும் என் தோள்களை விட்டுப் பிரியாத இனிய இயல் புடையவர். என்னை விட்டுப் பிரிய வேண்டும் என்று நினைத்துக் கூட பார்க்க மாட்டார்.

    பொய்கையில் மலர்ந்த தாமரையின் தாதுக்களை ஊதி மலையில் நிற்கும் சந்தன மரத்தில் உள்ள இனிய தேனை போன்றவர். உயர்ந்தவர் களுடைய நட்புக்கள் எப்போதும் உயர்ந்தவையாகவே இருக்கும் என்று தெளிவாக அறிந்து கொள்.

    நீரின்றி இந்த உலகம் அமையாது. அதுபோல, அவர் இன்றி எனக்கு மகிழ்ச்சி இல்லை. அவர் மனம் கமழும் அன்பு மிக்கவர். அவர் எனக்கு ஒருபோதும் சிறுமையான செயல்களை செய்யமாட்டார்.

    இடியினும் கொடியதாகும்?

    2. பாலை

    பாடியவர் பெரும்பதுமனார்

    அழுந்துபட வீழ்ந்த பெருந் தண் குன்றத்து,

    ஒலி வல் ஈந்தின் உலவைஅம் காட்டு,

    ஆறு செல் மாக்கள் சென்னி எறிந்த

    செம் மறுத் தலைய, நெய்த்தோர் வாய,5

    வல்லியப் பெருந் தலைக் குருளை, மாலை,

    மான் நோக்கு இண்டு இவர் ஈங்கைய சுரனே;

    வை எயிற்று ஐயள் மடந்தைமுன் உற்று

    எல்லிடை நீங்கும் இளையோன் உள்ளம்,

    காலொடு பட்ட மாரி10

    ஆழமாக வேர் விட்ட மரங்கள் நிறைந்த வனம் மலையைச் சுற்றிலும் விளைந்துள்ளது. அங்கு காற்றுக்கள் மோதி மேனியைத் தழுவும். அந்த காட்டு வழியிலே செல்லும் மாக்களைக் கொன்று தலையை பிளந்து உண்டதால் ரத்தம் படிந்த தலையையும் வாயையையும் கொண்ட புலிகள் தம்முடைய குட்டிகளுடன் திரியும். 

    மாலைகளை தொடுத்து தணிந்தது போல மரங்களில் படர்ந்த இண்டை கொடிகள் ஈங்கை மரங்களை உடைய காடுகளில் காணப்படும் கூர்மையான பற்களையும் மென்மையான தன்மையையுடைய பெண்களாகிய நாம், காதலில் மனத்தை செலுத்தி பகற்பொழுதை கழிக்கின்றோம்.

    இந்த நிலையில், தங்கள் ஊர் அடைவதை எண்ணி அவள் பின்னே செல்லும் இளைஞர்களின் உள்ளம். காற்றினால் தாக்கப்படும் மழை மேகங்கள் தோன்றி பெரிய மலைப் பாறைகள் இடிந்து விழும்படி இடியை இடிக்கும். இந்த காட்டு வழியில் அவர் எவ்வாறு ஊர் போய் சேருவார் என்று தலைவி கூறுகிறாள்.

    3. பாலை

    பாடியவர் இளங்கீரனார்

    முன் ஒரு காலத்துப் பொருள்வயிற் பிரிந்த தலைமகன் பின்னும் பொருள் கடைக் கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது.

    ஈன் பருந்து உயவும் வான் பொரு நெடுஞ் சினைப்

    பொரி அரை வேம்பின் புள்ளி நீழல்,

    கட்டளை அன்ன இட்டு அரங்கு இழைத்து,

    கல்லாச் சிறாஅர் நெல்லி வட்டு ஆடும்5

    வில் ஏர் உழவர் வெம் முனைச் சீறூர்ச்

    சுரன்முதல் வந்த உரன் மாய் மாலை

    உள்ளினென் அல்லெனோ, யானே-உள்ளிய

    வினை முடித்தன்ன இனியோள்

    மனை மாண் சுடரொடு படர் பொழுது எனவே?10

    முட்டையை ஈன்ற பருந்துகள் அடைகாத் திருந்து வருந்தும். வானத்தை தொட்டு நிற்கும் நீண்ட கிளைகளையும் பருத்த வேர்களையும் கொண்டது வேப்பமரம். புள்ளி வைத்தது போல அவற்றின் நிழல் தோன்றுகிறது.

    கட்டளை கற்களைப் போல வடிவத்தைக் கொண்ட வட்டாளும் அரங்கு வகுக்கப்பட்டிருந்தது. தனக்குரிய தொழில்களை கற்காமல் திரியும் சிறுவர்கள் நெல்லிக் காய்களை வட்டாக வைத்து அங்கு விளையாடுவர். வில் தொழில் செய்யும் வேடர்கள் வாழும் இடமாக இது விளங்குகிறது.

    அங்கு தங்கியிருந்தபோது நமது உள்ளத்தில் உறுதி சிதையும்படி மாலைப் பொழுது வந்தது. அந்த சமயம் செய்ய வேண்டிய வினைகளை செய்து முடிப்பது இன்பம் போல தோன்றியது. இனிமை மிக்கவள் நம் காதலி. இருள் சூழ்வதால் அவள் விளக்கேற்றும் முன்பு வீட்டுக்கு பிரிந்து செல்வாளே என்று வருந்தி என் நெஞ்சே வருத்தத்தில் வாடிக் கொண்டிருக்கின்றாய்.

    4. நெய்தல்

    பாடியவர் -அம்மூவனார்

    தலைவன் சிறைப்புறத்தானாக, தோழி அலர் அச்சம் தோன்றச் சொல்லி வரைவு கடாயது.

    கானல் அம் சிறுகுடிக் கடல் மேம் பரதவர்

    நீல் நிற புன்னைக் கொழு நிழல் அசைஇ,

    தண் பெரும் பரப்பின் ஒண் பதம் நோக்கி,

    அம் கண் அரில் வலை உணக்கும் துறைவனொடு,  5

    ''அலரே அன்னை அறியின், இவண் உறை வாழ்க்கை

    அரிய ஆகும் நமக்கு'' எனக் கூறின்,

    கொண்டும் செல்வர்கொல்-தோழி!-உமணர்

    வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி,

    கண நிரை கிளர்க்கும் நெடு நெறிச் சகடம்10

    மணல் மடுத்து உரறும் ஓசை கழனிக்

    கருங் கால் வெண் குருகு வெரூஉம்

    இருங் கழிச் சேர்ப்பின் தம் உறைவின் ஊர்க்கே

    கானல் சோலைகளில் உள்ள சிறிய குடில்களில் இருந்து கடல் மீன்களை பிடித்து வாழ்பவர்கள் பரதர்கள். நீலநிறத்தைக் கொண்ட புன்னை மரத்தின் நிழலில் தங்கி மிகப் பெரிய நீர் பரப்பாகிய கடலில் மீன்களை எதிர்நோக்கி இருப்பார்கள்.

    அழகிய கண்களுடன் கூடி சிக்குண்டு கிடக்கும் வலையை மணற் பரப்பில் பிரித்து காய வைத்திருக்கும் கடல் துறைக்கு தலைவனே நம் இருவரிடையே உண்டான நட்பு இந்த ஊர் முழுவதும் பரவி அலறை உண்டாக்கி விட்டது. நம்முடைய அன்னை அதை அறிந்தால் துன்பமாகும். நமக்கு இவ்விடத்தில் தலைவனுடைய கூடிய களவு இன்பம் முடிவுக்கு வந்து விடும்.

    எனவே, அவ்வாறு அலர் உண்டாவதற்கு முன்பே நாம் அவரிடம் தெரிவிப்போம். உப்பு வணிகர்கள் வெண்மையான கல்லை போல் இருக்கும் உப்பை விலை சொல்லி கூவிக்கொண்டு செல்வது போல அவற்றை வண்டியில் இழுத்துச் செல்லும் எருதுகளை கொண்டு யூகித்து அறியலாம். வண்டிச் சக்கரம் மணலில் புதைத்து செய்யும் ஓசை வெளியில் கேட்கும்.

    கழனிகளில் மேயும் கருப்பு கால்களைக் கொண்ட வெண் குறுகுகள் அச்சம் கொண்டு அங்கிருந்து நீங்கும். கருப்பு கழி சூழ்ந்த நெய்தல் நிலத்தில் உள்ள நாம் வாழ்வதற்கு இனிய ஊருக்கு இருவரும் சேர்ந்து சென்று விடுவதே நன்று.

    5. குறிஞ்சி

    பாடியவர் - பெருங்குன்றூர்கிழார்

    தலைவன் செலவுக் குறிப்பு அறிந்து வேறுபட்ட தலைவிக்குத் தோழி சொல்லியது.

    நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப,

    அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர் கால்யாப்ப,

    குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர்

    நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகைப்ப,5

    பெரும் பெயல் பொழிந்த தொழில எழிலி

    தெற்கு ஏர்பு இரங்கும் அற்சிரக் காலையும்,

    அரிதே, காதலர்ப் பிரிதல்-இன்று செல்

    இளையர்த் தரூஉம் வாடையொடு

    மயங்கு இதழ் மழைக் கண் பயந்த, தூதே.

    நிலம் அதிகமாக மழை நீரை பெற்றதால் குளிர்ந்து காணப்படும். குன்றங்கள் எல்லாம் மரம் செடி கொடிகள் பச்சை நிறத்துடன் தோன்றும். சுனைகளில் நீர் பெருகி கால்வாய் வழியாக ஓடும். அந்த நீர் குறவர்கள் செய்யும் பயிர்களுக்கு பாய்ந்து வளம் சேர்க்கும்.

    குறவர்கள் வெட்டி எறிந்த நறைக் கொடிகள் வேர்களுடன் விழுந்து வளர்ந்து காணப்படும். அவை அருகில் உள்ள சந்தன மரங்களை சுற்றிப் படர்ந்து தழைக்கும். பெரும் மழை தன்னுடைய தொழிலை இனிதே செய்தது. அதனால் மேகங்கள் தெற்கு திசை நோக்கி எழுந்து சென்று முழங்கும்.

    வாடைக் காற்று வீசும். மெல்லிய மழைத் துளிகளை பூமாரியாக பொழியும். வாடைக் காற்று ஒன்டோ ஒன்ற பூவிதழ்களை கூடச் செய்யும். எனவே, அதனைக் கண்ட நாம் காதலரை பிரிந்து இருப்பது தவறாகும். அதை தூதாகச் சென்று தோழியே உரைப்பாயாக. காதலர்கள் பிரிந்திருப்பது அரிய செயல் அல்ல. அது வருத்தத்தை கொடுக்கும்.

    6. குறிஞ்சி

    பாடியவர் - பரணர்

    இரவுக்குறிப்பாற்பட்டு ஆற்றானாய தலைவன், தோழி கேட்ப, தன்நெஞ்சிற்குச் சொல்லியது.

    நீர் வளர் ஆம்பற் தூம்புடைத்திரள் கால்

    நார் உரித்தன்ன மதன் இல் மாமை,

    குவளை அன்ன ஏந்து எழில் மழைக் கண்,

    திதலை அல்குல், பெருந் தோள், குறுமகட்கு5

    எய்தச் சென்று செப்புநர்ப் பெறினே,

    ''இவர் யார்?'' என்குவள் அல்லள்; முனாஅது,

    அத்தக் குமிழின் கொடு மூக்கு விளை கனி

    எறி மட மாற்கு வல்சி ஆகும்

    வல் வில் ஓரி கானம் நாறி,10

    இரும் பல் ஒலிவரும் கூந்தல்

    பெரும் பேதுறுவள், யாம் வந்தனம் எனவே.

    நீரில் வளரும் ஆம்பள் மலரின் உள்ளே திரண்ட காளைப் போல தண்டுகள் காணப்படும். அந்த நாரை உரித்து நீக்கியதைப் போல அழகும் ஒளியும் கொண்ட மாநிறத்தையும் குவளை மலர் போன்ற அழகு மிக்க கண்களையும் வரி படர்ந்த அல்குலையும் பெரிய தோள்களையுடையவளாக இளையவளாக இந்த தலைவி விளங்குகிறாள். அவளின் அருகில் சென்று யார் சொல்வார்.

    வந்தவர் யார் என்று கேட்காமல் வழியில் நிற்கும் குமிழ மரத்தின் வளைந்த மூக்கையுடைய முதிர்ந்து உதிரக் கூடிய கனிகள் வெறுப்பை விளைவிக்காது. அவை துள்ளியோடும் மான்களுக்கு உணவாகும். கடையேழு வள்ளல்களில் ஒருவரான ஓரி என்பவனின் கொல்லி நாட்டில் அவை மணம் கமழ்ந்தது.

    பலவாக தழைத்து அடர்ந்திருக்கும் கூந்தலைக் கொண்டவள் தலைவி. அவள் தலைவன் இல்லாமல் வருந்தி நின்றான். பெரும் கலக்கமுற்றான் அதை கண்டு கொள்ள. இந்த பாட்டில் துள்ளும் மானுக்கு குமிழின் கனி பசி நீக்கி இன்பம் செய்வது போல தலைவன் வந்து தலைவியின் உடல் வேறுபாட்டை நீக்கி இன்புற வேண்டும் என்பதாகும்.

    7. பாலை

    பாடியவர் - நல்வெள்ளியார்

    பட்ட பின்றை வரையாது கிழவோன் நெட்டியிடைக் கழிந்து பொருள்வயிற்பிரிய,ஆற்றாளாய தலைவிக்குத்தோழிசொல்லியது.

    சூருடை நனந் தலைச் சுனை நீர் மல்க,

    பெரு வரை அடுக்கத்து அருவி ஆர்ப்ப,

    கல் அலைத்து இழிதரும் கடு வரற் கான் யாற்றுக்

    கழை மாய் நீத்தம் காடு அலை ஆர்ப்ப,5

    தழங்கு குரல் ஏறொடு முழங்கி, வானம்

    இன்னே பெய்ய மின்னுமால்-தோழி!

    வெண்ணெல் அருந்திய வரி நுதல் யானை

    தண் நறுஞ் சிலம்பில் துஞ்சும்

    சிறியிலைச் சந்தின வாடு பெருங் காட்டே.10

    மலைப் பகுதிகளில் தெய்வம் வாழும் இடங்களில் சுனையில் உள்ள நீர் இணைந்து வழிந்தோடியது. எனவே, அருவியில் நீர் பெருகி ஆரவாரம் செய்தது. கற்களை அடித்துக் கொண்டு காட்டாறு சென்றது. ஓடங்கள் செல்ல முடியாதவாறு நீர்ப்பெருக்கு காடு முழுவதும் பறந்து அலை மோதியது. வானம் இடி என்னும் பேரொளியை முழங்கியது.

    மேகங்கள் மழை பொழிய கருதியது. அதனால் மின்னல் மின்னுவதை பார்ப்பாயாக. தோழியே அரிசியை உண்ட பெருமையையும் தலைமையும் கொண்ட யானை கலைப்பைப் போக்க மிளகு கொடி மலரும் மலைகளில் கிடந்து உறங்கும்.

    சிறிய இலைகளைக் கொண்ட சந்தன மரங்கள் கோடைக் காலத்தில் வாடிக் கிடக்கும். வெந்நெல்லை உண்டு மிளகுக் கொடியில் யானை மகிழ்ச்சியுடன் உறங்குவதை குறிப்பால் காட்டி தலைவன் மார்பில் கிடந்து உறங்க வேண்டும் என்ற தலைவியின் உணர்வை இந்த பாடல் வெளிப்படுத்துகிறது. எனவே, இது இனிதுறு கிளவி என்னும் வகையைச் சேர்ந்தது.

    8. குறிஞ்சி

    பாடியவர் - பெருங்குன்றூர் கிழார்

    இயற்கைப் புணர்ச்சி இறுதிக்கண் தலைமகளை ஆயத்தொடும் கண்ட தலைமகன்சொல்லியது.

    அல்கு படர் உழந்த அரி மதர் மழைக்கண்,

    பல் பூம் பகைத் தழை நுடங்கும் அல்குல்,

    திரு மணி புரையும் மேனி மடவோள்

    யார் மகள்கொல்? இவள் தந்தை வாழியர்!

    துயரம் உறீஇயினள் எம்மே: அகல்வயல்5

    அரிவனர் அரிந்தும் தருவனர்ப் பெற்றும்

    தண் சேறு தாஅய், மதனுடை நோன் தாள்

    கண் போல் நெய்தல் போர்வில் பூக்கும்

    திண் தேர்ப் பொறையன் தொண்டி-

    தன் திறம் பெறுக, இவள் ஈன்ற தாயே!10

    தன்னால் காணப்பட்ட நிலையான துன்பம் பெறுவதற்கு காரணமான குளிர்ந்த கண்களைக் கொண்டவள். பல்வேறு மாறுபட்ட நிறங்களால் கோர்க்கப்பட்ட பூக்களை அணிந்த மேகலையைக் கொண்டவள். மணி போல மேனி கொண்டவள். இளம் மகள்.

    இவள் யார் என்று அறியவில்லை நான். இந்த அழகிய பெண்ணைப் பெற்ற இவளுடைய தந்தை நீடூழி வாழட்டும். இவளால் எனக்கு அவன் துயரத்தை உண்டாக்கி விட்டான். வயலில் நெல் அறுப்பவர்களால் அவை அறுக்கப்பட்டு கொண்டிருந்தது. அந்த நெல் சூட்டை சிலர் கொண்டு போய் வேறு இடத்தில் இட்டனர்.

    சேறுகளில் நனைந்த தாழையுடையது நெல். நெய்தல் பூக்களானது அந்த பெண்ணின் கண் போல மலரும். வலிமை மிக்க தேரைக் கொண்ட சேரமானுக்குரிய  தொண்டி நகர் பெற்ற செல்வம் அனைத்தும் இவள் தாய் பெறுவாளாக.

    9. பாலை

    பாடியவர் - பாலை பாடிய பெருங்கடுங்கோ

    உடன்போகாநின்ற தலைமகன் தலைமகட்கு உரைத்தது.

    அழிவிலர் முயலும் ஆர்வ மாக்கள்

    வழிபடு தெய்வம் கண் கண்டாஅங்கு,

    அலமரல் வருத்தம் தீர, யாழ நின்

    நல மென் பணைத் தோள் எய்தினம்; ஆகலின்,5

    பொரிப் பூம் புன்கின் அழற் தகை ஒண் முறி

    சுணங்கு அணி வன முலை அணங்கு கொளத் திமிரி,

    நிழல் காண்தோறும் நெடிய வைகி,

    மணல் காண்தோறும் வண்டல் தைஇ,

    வருந்தாது ஏகுமதி-வால் எயிற்றோயே! 10

    மா நனை கொழுதி மகிழ் குயில் ஆலும்

    நறுந் தண் பொழில, கானம்;

    குறும் பல் ஊர, யாம் செல்லும் ஆறே.

    உறுதிப்பொருளை நாடிச் செல்வர் பேரன்பு கொண்ட பெரியோர்கள். அந்த தெய்வத்தை அடைவதற்காக தினமும் வழிபாடு செய்வார்கள். அதுபோல, களவு இன்பத்திற்காக பல வகையில் அலைந்து வருந்திய நமது துயரம் தீரட்டும். உன்னுடைய மெல்லிய தோல்களை துணையாக பெற்றேன்.

    அதனால் பூக்களுடைய புன்னை மரத்தின் அழகிய தளிர்களை உன்னுடைய பரந்த முலை முற்றத்தில் தெய்வம் அமருமாறு அணிந்து கொள்க. நிழல் மிக்க இடங்களைப் பார்க்கும்போதெல்லாம் அங்கே தங்கி தூய மணல் படர்ந்த இடங்களை பார்க்கும்போதெல்லாம் வருந்தாமல் செல்லுக. மென்மையான பற்களைக் கொண்டவளே. மாமரத்தின் அரும்பு கோதி உண்டு மகிழ்ந்து குயில்கள் பாடும். எழில் மிக்கது இந்த காடுகள். நாம் இருவரும் செல்லும் வழிகளும் பல ஊர்கள் காணலாம்.

    10. பாலை

    உடன் போக்கும் தோழி கையடுத்தது

    அண்ணாந்து ஏந்திய வன முலை தளரினும்,

    பொன் நேர் மேனி மணியின் தாழ்ந்த

    நல் நெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும்,

    நீத்தல் ஓம்புமதி-பூக் கேழ் ஊர!5

    இன் கடுங் கள்ளின் இழை அணி நெடுந் தேர்க்

    கொற்றச் சோழர் கொங்கர்ப் பணீஇயர்,

    வெண் கோட்டு யானைப் போஒர் கிழவோன்

    பழையன் வேல் வாய்த்தன்ன நின்

    பிழையா நல் மொழி தேறிய இவட்கே

    நிமிர்ந்து உயர்ந்த இவளுடைய மார்புகள் தளர்ந்து சாய்ந்த காலத்திலும் தங்கம் போன்ற மேனியில் நீல மணியின் கரிய நிறத்துடன் அவை தாழ்ந்து அசையும்.

    நீண்ட கூந்தல்கள் அள்ளி முடிக்கப்பட்ட போதும் பூக்கள் நிறைந்த சோலை களையும் பொய்கைகளையும் காண இவளை அழைத்துச் செல்லும் அந்த ஊரைச் சேர்ந்த தலைவனே. இவளை கை விடாமல் காப்பதே தொழிலாக கொள்வாயாக.

    மகிழ்ச்சியுடன் கள்ளையும் பல வகை இழை களால் அலங்கரிக்கப்பட்ட தேர்களையும் கொண்ட வனே. வெற்றி முழக்கமிடும் சோழ மன்னர்கள் கொங்கு நாட்டை அடக்குவதற்கு போர் செய்தனர்.

    வெண்மையான கோடுகளைக் கொண்ட யானைகளை தனக்கு எனக் கொண்டு போஓர் என்னும் ஊருக்கு உரியவனும் சோழர்களுக்கு தானை தலைவனுமான பழயன் என்பவன் எறிந்த வேல் படை வெற்றி விளைவித்ததைப்போல நீ தலைவியை காப்பாற்றுவாய் என்று சொன்ன சொற்கள் உறுதியாக இருக்கட்டும். அதனால் உன்னுடன் அவள் உடன்போக்காக வருகின்றாள்.

    11. நெய்தல்

    பாடியவர் - உலோச்சனார்

    காப்பு மிகுதிக்கண்இடையீடுபட்டு ஆற்றாளாய தலைமகட்கு, தலைமகன்சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது.

    பெய்யாது வைகிய கோதை போல

    மெய் சாயினை, அவர் செய் குறி பிழைப்ப;

    உள்ளி நொதுமலர் நேர்பு உரை தெள்ளிதின்

    வாரார் என்னும் புலவி உட்கொளல்5

    ஒழிகமாள நின் நெஞ்சத்தானே;

    புணரி பொருத பூ மணல் அடைகரை,

    ஆழி மருங்கின் அலவன் ஓம்பி,

    வலவன் வள்பு ஆய்ந்து ஊர,

    நிலவு விரிந்தன்றால் கானலானே.

    கூந்தலில் சூடாமல் எறியப்பட்ட பூமாலையைப் போல காதலர் கூறிய குறிகள் பிழையாகப் போய் விட்டது. அதனால் தலைவி மேனி மெலிந்து வருந்தினாள். அயலார்கள் சொல்லும் அலர் வார்த்தைகளை அவள் கேட்க நேர்ந்தது. தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் அவளுடைய நெஞ்சத்தில் காதலர் வர மாட்டார் என்று வருந்தினாள்.

    எனவே, அலைகளால் அலைகழிக்கப்படும் பூக்கள் உதிர்ந்து கிடக்கும் கடல் மணல் பரப்பில் ஊர்ந்து வரும் தேர்க்காலில் பட்டு திரியும் நண்டுகள் நசுங்கி விடாதபடி தேர்பாகனிடம் குதிரையை செலுத்தும்படி கூறி நிலவு வீசும் பொழுதினில் சென்று காண்பாயாக.

    12. பாலை

    தோழி உடன்போக்கு அஞ்சுவித்தது

    பாடியவர் - கயமனார்

    விளம்பழம் கமழும் கமஞ்சூற்குழிசிப்

    பாசம் தின்ற தேய் கால் மத்தம்

    நெய் தெரி இயக்கம் வெளில்முதல் முழங்கும்

    வைகு புலர் விடியல் மெய் கரந்து, தன் கால் 5

    அரி அமை சிலம்பு கழீஇ, பல் மாண்

    வரி புனை பந்தொடு வைஇய செல்வோள்,

    ''இவை காண்தோறும் நோவர்மாதோ;

    அளியரோ அளியர் என் ஆயத்தோர்!'' என

    நும்மொடு வரவு தான் அயரவும்,10

    தன் வரைத்து அன்றியும் கலுழ்ந்தன கண்ணே.

    விளாம்பழத்தின் மணம் கமழும் பானையில் கடைக் கயிற்றால் அரைத்து தேய்த்து வரும் சிறிய காளையைக் கொண்டது மத்து. அந்த மத்தினால் நெய் பெறுவதற்காக கடையும் ஓசை வெளியிலும் சப்தத்தை உண்டாக்கும்.

    இரவு முடிந்து தொடங்கும் விடியற் காலத்தில் தன் உடலை மூடிக் கொண்டு தன் காலில் அணிந்த சிலம்புகளை கழற்றி பந்தின் கையில் எடுத்துக் கொண்டு செல்லக் கூடியவள் தலைவி. இவற்றை பார்க்கும்பொழுதெல்லாம் என்னுடைய ஆயர் மகளிர் அனைவரும் என்னை நினைத்து வருந்து வார்கள். அவள் உன்னுடன் வர வேண்டும் என்று நினைத்தாலும் அவளுடைய கண் விழிகள் கலங்கும். அதனை நீ நினைத்துக் கொள்வாயாக.

    13. குறிஞ்சி

    பாடியவர் - கபிலர்

    இயற்கைப்புணர்ச்சியின் பிற்றை ஞான்று, தலைவியின் வேறுபாடு கண்ட தோழி, தலைவி மறைத்தற்குச் சொல்லியது.

    எழாஅஆகலின், எழில் நலம் தொலைய

    அழாஅதீமோ, நொதுமலர் தலையே!-

    ஏனல் காவலர் மா வீழ்த்துப் பறித்த

    பகழி அன்ன சேயரி மழைக் கண்,5

    நல்ல பெருந் தோளோயே! கொல்லன்

    எறி பொன் பிதிரின் சிறு பல தாஅய்

    வேங்கை வீ உகும் ஓங்கு மலைக் கட்சி

    மயில் அறிபு அறியாமன்னோ;

    பயில் குரல் கவரும் பைம் புறக் கிளியே.

    கிளிகளின் வரவு கண்டதும் நீ எழுந்து செல்லவில்லை. உன்னுடைய அழகிய மேனி கெடும்படி அழுவதை நிறுத்திக்கொள்க. இது மற்றவர்களும் இருக்கும் இடம். தினைக் கொல்லை யில் காவல் காக்கும் குரவர்கள் காட்டுப் பன்றிகளைக் கொன்று அதன் உடலில் இருந்து பிதுங்கிய அம்பைப் போன்ற குளிர்ந்த கண்களையும் பெரிய தோள்களையும் கொண்டவனே.

    கொல்லன் பழுக்க காய்ச்சிய இரும்பில் இருந்து சிதறும் தீப்பொறியைப் போல வேங்கைப் பூக்கள் உதிரும். உயர்ந்த மலைகளில் அருகில் வாழும் மயில்கள் தங்களுடைய செயலை பார்த்துக் கொண்டிருப்பதை அறியாமல் பச்சை கிளிகள் முற்றிய கதிர்களை கவர்ந்து கொண்டு போகின்றன. இந்த பாடல் தலைவியின் வேறுபாட்டை கண்ட தோழி தன்னுடைய ஆராய்ச்சியை மறைத்துக் கூறியதாகும்.

    14. பாலை

    பாடியவர் - மாமூலனார்

    இயற்பழித்த தோழிக்குத் தலைவி இயற்பட மொழிந்தது.

    தொல் கவின் தொலைய, தோள் நலம்சாஅய,

    நல்கார் நீத்தனர்ஆயினும், நல்குவர்;

    நட்டனர், வாழி!-தோழி!-குட்டுவன்

    அகப்பா அழிய நூறி, செம்பியன்5

    பகல் தீ வேட்ட ஞாட்பினும் மிகப் பெரிது

    அலர் எழச் சென்றனர் ஆயினும்-மலர் கவிழ்ந்து

    மா மடல் அவிழ்ந்த காந்தள்அம் சாரல்,

    இனம் சால் வயக் களிறு பாந்தட் பட்டென,

    துஞ்சாத் துயரத்து அஞ்சு பிடிப் பூசல்10

    நெடு வரை விடரகத்து இயம்பும்

    கடு மான் புல்லிய காடு இறந்தோரே.

    தனது பழைய அழகு கெடவும் தோள்கள் குன்றவும் நம்மை காணாது காதலன் நம்மை கைவிட்டு பிரிந்தான் என்று சொல்லுகின்றாய். நாளைக்கு நமது அருளை செய்யாமல் அவர் நம்மை பிரியேன் என்று சொல்லி நட்பு செய்வது என்றால் பகைவர்களின் அகப்பாய் என்ற நகரை அழித்து அங்கே செம்பினால் செய்த மதில் சுவரை தீயிட்டு அழித்து போரில் இருந்த ஆரவாரத்தாலும் மிக மிக அலர் உண்டாகி அதனால் பிரிந்தனர்.

    மடல் விரித்த காந்தள் மலர் சாரல்கள் சூழ்ந்த மலைச்சாரலில் தங்கள் இனத்தோடு சேர்ந்த யானை மலைப்பாம்பின் வாயிற்குள் அகப்பட்டு அழிந்தது. பாம்பு பிடித்த யானை அஞ்சி கதறியது.

    நெடிய மலைத் தொடரில் அந்த யானையின் குரல் எதிரொலிக்கும். அதுபோல, குதிரையில் பிரிந்து சென்ற தலைவன் புல்லி என்பவனின் வேங்கட நாட்டு காட்டை கடந்து சென்று விட்டான்.

    15. நெய்தல்

    பாடியவர் - அறிவுடைநம்பி

    வரைவு நீட்டித்தவழி, தோழி தலைமகற்குச் சொல்லி வரைவு கடாயது.

    முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர்,

    நுணங்கு துகில் நுடக்கம் போல, கணம் கொள

    ஊதை தூற்றும் உரவுநீர்ச் சேர்ப்ப!

    பூவின் அன்ன நலம் புதிது உண்டு,5

    நீ புணர்ந்தனையேம் அன்மையின், யாமே

    நேர்புடை நெஞ்சம் தாங்கத் தாங்கி,

    மாசு இல் கற்பின் மடவோள் குழவி

    பேஎய் வாங்கக் கைவிட்டாங்கு,

    சேணும் எம்மொடு வந்த10

    நாணும் விட்டேம்; அலர்க, இவ் ஊரே!

    அலைகள் முழங்கும் பெரிய மணற்பரப்பில் நுட்பமான நூலால் செய்த ஆடை சுருண்டு ஓடுவது போல குளிர்காற்று வீசும் கடலைச் சார்ந்த நெய்தல் நிலத் தலைவனே. புதிதாக மலர்ந்த பூவைப் போன்ற புதிய நலத்தை முதன் முதலில் தலைவியுடன் கூடி நீ நுகர்ந்தபோது இருந்த புதுமையும் அருமையும் இப்போது காணப்படவில்லை.

    அதனால் இப்போது நாங்கள் எம்முடைய நெஞ்சம் தாங்கும் அளவு வேதனையை தாங்கி குற்றமற்ற கற்புடைய இளம் பெண் ஒருத்தி ஈன்ற குழவியை பேய் மகள்

    Enjoying the preview?
    Page 1 of 1