Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Communisathirkku Pin Russia
Communisathirkku Pin Russia
Communisathirkku Pin Russia
Ebook218 pages1 hour

Communisathirkku Pin Russia

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நாம் வாழும் இடத்தின் சிறப்புகள், மற்றும் பிற நகரங்களின் வரலாற்றுச் சிறப்புகள் நிறைந்த இடங்கள், தொழிற்சாலைகள், கல்வி நிலையங்கள், அருங்காட்சியகங்கள், நாட்டுத்தலைவர்களின் நினைவிடங்கள் நிறைந்த சிறப்புமிக்க இடங்களைப் பற்றி நேரில் கண்டு அறியும் வாய்ப்பு பலருக்கும் கிடைப்பது அருமை.

தஞ்சை மாவட்டத்தில் பிறந்த ஓர் இளைஞர், தான் பிறந்த ஊரைப்பற்றியும் நாட்டைப்பற்றியும் நன்கு அறிந்தவர், உலகிலேயே நல்லாட்சி செலுத்திய சோவியத் ரஷ்யாவைப் பற்றியும் நன்கு அறிந்தவர், உடன் படித்த நண்பர்கள் ஆன்றோர்கள் வாயிலாக மார்க்சியம் பற்றிய தெளிவு பெற்று அக்கொள்கையைப் போற்றித் தாமும் கடைப்பிடித்தவர், கொடுங்கோல் ஆட்சி புரிந்த ஜார் மன்னனை வீழ்த்தி 1917-க்குப் பின் லெனின் பொறுப்பேற்று, நாடு பல துறைகளிலும் முன்னேறக்காரணமான அவரின் ஆட்சியில் நிகழ்ந்த வியத்தகு சாதனைகளையெல்லாம் தன் மனத்திரையில் பதிவு செய்து கொண்டு வந்தவர் என்றும் நல்லொழுக்கத்திற்கும் நற்பண்புகளுக்கும் நிலைக்களனானவர், ஆசிரியராகவும் பணியாற்றியவர். லெனினுக்குப் பின்னராவது சென்று, அந்நாட்டின் சிறப்புக்களை நேரில் கண்டும் லெனினின் நினைவிடத்தைப் பார்க்கவும் திட்டமிட்டு, ரஷ்யாவில் பணிபுரியும் தன் நண்பரின் ஒத்துழைப்போடு தன் மகனையும் அழைத்துக் கொண்டு 2010-இல் தன் சொந்த செலவில் சோவியத் பயணம் மேற்கொண்டவர் யாராக இருக்கக்கூடும்? உங்களால் ஊகிக்க முடிகிறதா?

லெனின் ஆட்சிக்காலம் தொடங்கி, தற்காலம் வரை நாம் படித்தும், கேட்டும் இராத சோவியத் குறித்த செய்திகளை, திரைப்பட நடிகர் ராஜேஷ் அவர்கள் 'கம்யூனிஸத்திற்குப் பின் ரஷ்யா' என்று ஒரு தொகுப்பு நூலைச் சுவைபட எழுதியுள்ளார். 1917-க்குப்பின் 75 ஆண்டுகள் சோவியத் நாடு உலகிலேயே முதல் வல்லரசு நாடாகத் திகழ்ந்ததற்கு லெனினே காரணம் என்று உறுதிபடக் கூறுகிறார். அத்தகைய சாதனையாளரின் நினைவிடத்தையாவது பார்த்தாக வேண்டும் என்ற மன உறுதியுடையவராக இருந்துள்ளார். தன்னுடைய சொந்த செலவிலேயே பயணத்தை மேற்கொண்டார் என்பதிலிருந்து லெனினிடம் அவருக்கிருந்த ஆழ்ந்த பற்றைத் தெளிவாக அறிந்துகொள்ள முடிகிறது.

பயணத்தின் முன் ஏற்பாடுகள், பீட்டர்ஸ்பர்க், துபாய் ஆகிய இடங்களில் தங்கியிருந்தபோது பெற்ற அனுபவங்கள், உண்ட உணவுவகைகள் குறித்தும், மாஸ்கோவில் மொழிப்பிரச்சினை, பொருட்காட்சி சாலையின் சிறப்பு குறித்தும், லெனின் உடல் படுத்த நிலையில் கண்ணாடிப்பெட்டியில் பொருத்தியுள்ள சமாதியைக் காண வருவோர்க்கான கட்டுப்பாடுகள் குறித்தும் வியப்பு மேலிட விவரித்துள்ளார்.

மாஸ்கோவில் ரயில் பயணங்களிலும் பிற இடங்களிலும் மக்கள் அமைதியைக் கடைப்பிடிக்கின்றனர். கார்களைப் பயன்படுத்துவோர் அதிகம். ஆதலால் காலையும், மாலையும் போக்குவரத்து நெரிசல் சகஜம். மக்களின் தோற்றம், நடை உடை பாவனையில் ஒற்றுமையே காணப்படுகிறது. மக்களுக்குத் தேவையான அனைத்தும் அரசாங்கமே வழங்கியது என்பதை அறிவிப்பதோடு 1991-க்குப்பின் கம்யூனிசம் வீழ்ச்சியடைந்ததால் நாடு அடைந்துள்ள சீர்கேடுகளையும் குறிப்பிட்டுள்ளார். மக்கள் எண்ணிக்கையில் பெண்களே மிகுதி, 2-ஆம் உலகப் போரில் எண்ணற்ற ஆண்கள் – வீரர்கள் உயிரிழந்துள்ளனர். பெண்கள் வேலைக்குச் செல்வது கட்டாயம், ஆடம்பரப்பிரியரும்கூட. விற்பனை செய்யப்படும் எல்லாப் பொருள்களுமே விலை மிகுதியாம். மக்கள் விளையாட்டுகளிலும் ஓட்டப்பந்தயங்களிலுமே பெருவிருப்போடு பங்குகொள்கின்றனர்.

நூலாசிரியர் நடிகர் திரு.ராஜேஷ் அவர்கள், தான் வெளியிடும் பயணக் குறிப்புகள் வாசகர் மனதில் நன்கு பதித்து நினைவில் நிலைத்து நிற்க வேண்டும் என்ற நோக்கத்தால் எழுதப்பட்ட இந்த நூல் ஒரு சிறந்த ஆவணமாகத் திகழும் என்பதில் ஐயமில்லை.

நூலின் இறுதியில் வாசகர்கள் நினைவில் நிறுத்துவதற்கு ஏற்றவண்ணம் அமைத்துள்ள 'நினைவுக் குறிப்புகளின்' பயன் அறிந்து யாவரும் போற்றுவர்.

'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்ற ஆன்றோர் வாக்குக்கு இணங்க எழுதப்பட்ட இந்நூல் சோவியத் குறித்த சிறப்புக்களையும், முந்தைய இன்றைய நிலைமையை அறியவும் அரிய வாய்ப்பினை நல்கியுள்ளது. வாசகருக்கு இலக்கிய விருந்தைப் படைத்த ராஜேஷ் அவர்களுக்கு நன்றி

Languageதமிழ்
Release dateApr 8, 2020
ISBN6580131605237
Communisathirkku Pin Russia

Read more from Actor Rajesh

Related to Communisathirkku Pin Russia

Related ebooks

Reviews for Communisathirkku Pin Russia

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Communisathirkku Pin Russia - Actor Rajesh

    http://www.pustaka.co.in

    கம்யூனிஸத்திற்குப் பின் ரஷ்யா

    Communisathirkku Pin Russia

    Author:

    நடிகர் ராஜேஷ்

    Actor Rajesh

    For more books

    http://www.pustaka.co.in/home/author/actorrajesh-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ஆசிரியர்

    பதிப்புரை

    அணிந்துரை - தா. பாண்டியன்

    முன்னுரை

    பகுதி I

    பகுதி II

    ஆசிரியர்

    நடிகர் ராஜேஷின் சொந்த ஊர் பட்டுக்கோட்டைக்கு அருகிலுள்ள அணைக்காடு என்கிற கிராமம். 7 ஆண்டுகள் ஆசிரியர் வேலை பார்த்தவர். 1979-ஆம் ஆண்டு நடிக்க ஆரம்பித்து இன்று வரை தொடர்ந்து திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். நடித்த திரைப்படங்கள் 150க்கு மேல், தொலைக்காட்சி தொடர்கள் 12. இதற்கு முன்பு 7 புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.

    *****

    பதிப்புரை

    நாம் வாழும் இடத்தின் சிறப்புகள், மற்றும் பிற நகரங்களின் வரலாற்றுச் சிறப்புகள் நிறைந்த இடங்கள், தொழிற்சாலைகள், கல்வி நிலையங்கள், அருங்காட்சியகங்கள், நாட்டுத்தலைவர்களின் நினைவிடங்கள் நிறைந்த சிறப்புமிக்க இடங்களைப் பற்றி நேரில் கண்டு அறியும் வாய்ப்பு பலருக்கும் கிடைப்பது அருமை.

    தஞ்சை மாவட்டத்தில் பிறந்த ஓர் இளைஞர், தான் பிறந்த ஊரைப்பற்றியும் நாட்டைப்பற்றியும் நன்கு அறிந்தவர், உலகிலேயே நல்லாட்சி செலுத்திய சோவியத் ரஷ்யாவைப் பற்றியும் நன்கு அறிந்தவர், உடன் படித்த நண்பர்கள் ஆன்றோர்கள் வாயிலாக மார்க்சியம் பற்றிய தெளிவு பெற்று அக்கொள்கையைப் போற்றித் தாமும் கடைப்பிடித்தவர், கொடுங்கோல் ஆட்சி புரிந்த ஜார் மன்னனை வீழ்த்தி 1917-க்குப் பின் லெனின் பொறுப்பேற்று, நாடு பல துறைகளிலும் முன்னேறக்காரணமான அவரின் ஆட்சியில் நிகழ்ந்த வியத்தகு சாதனைகளையெல்லாம் தன் மனத்திரையில் பதிவு செய்து கொண்டு வந்தவர் என்றும் நல்லொழுக்கத்திற்கும் நற்பண்புகளுக்கும் நிலைக்களனானவர், ஆசிரியராகவும் பணியாற்றியவர். லெனினுக்குப் பின்னராவது சென்று, அந்நாட்டின் சிறப்புக்களை நேரில் கண்டும் லெனினின் நினைவிடத்தைப் பார்க்கவும் திட்டமிட்டு, ரஷ்யாவில் பணிபுரியும் தன் நண்பரின் ஒத்துழைப்போடு தன் மகனையும் அழைத்துக் கொண்டு 2010-இல் தன் சொந்த செலவில் சோவியத் பயணம் மேற்கொண்டவர் யாராக இருக்கக்கூடும்? உங்களால் ஊகிக்க முடிகிறதா?

    லெனின் ஆட்சிக்காலம் தொடங்கி, தற்காலம் வரை நாம் படித்தும், கேட்டும் இராத சோவியத் குறித்த செய்திகளை, திரைப்பட நடிகர் ராஜேஷ் அவர்கள் 'கம்யூனிஸத்திற்குப் பின் ரஷ்யா' என்று ஒரு தொகுப்பு நூலைச் சுவைபட எழுதியுள்ளார். 1917-க்குப்பின் 75 ஆண்டுகள் சோவியத் நாடு உலகிலேயே முதல் வல்லரசு நாடாகத் திகழ்ந்ததற்கு லெனினே காரணம் என்று உறுதிபடக் கூறுகிறார். அத்தகைய சாதனையாளரின் நினைவிடத்தையாவது பார்த்தாக வேண்டும் என்ற மன உறுதியுடையவராக இருந்துள்ளார். தன்னுடைய சொந்த செலவிலேயே பயணத்தை மேற்கொண்டார் என்பதிலிருந்து லெனினிடம் அவருக்கிருந்த ஆழ்ந்த பற்றைத் தெளிவாக அறிந்துகொள்ள முடிகிறது.

    பயணத்தின் முன் ஏற்பாடுகள், பீட்டர்ஸ்பர்க், துபாய் ஆகிய இடங்களில் தங்கியிருந்தபோது பெற்ற அனுபவங்கள், உண்ட உணவுவகைகள் குறித்தும், மாஸ்கோவில் மொழிப்பிரச்சினை, பொருட்காட்சி சாலையின் சிறப்பு குறித்தும், லெனின் உடல் படுத்த நிலையில் கண்ணாடிப்பெட்டியில் பொருத்தியுள்ள சமாதியைக் காண வருவோர்க்கான கட்டுப்பாடுகள் குறித்தும் வியப்பு மேலிட விவரித்துள்ளார்.

    மாஸ்கோவில் ரயில் பயணங்களிலும் பிற இடங்களிலும் மக்கள் அமைதியைக் கடைப்பிடிக்கின்றனர். கார்களைப் பயன்படுத்துவோர் அதிகம். ஆதலால் காலையும், மாலையும் போக்குவரத்து நெரிசல் சகஜம். மக்களின் தோற்றம், நடை உடை பாவனையில் ஒற்றுமையே காணப்படுகிறது. மக்களுக்குத் தேவையான அனைத்தும் அரசாங்கமே வழங்கியது என்பதை அறிவிப்பதோடு 1991-க்குப்பின் கம்யூனிசம் வீழ்ச்சியடைந்ததால் நாடு அடைந்துள்ள சீர்கேடுகளையும் குறிப்பிட்டுள்ளார். மக்கள் எண்ணிக்கையில் பெண்களே மிகுதி, 2-ஆம் உலகப் போரில் எண்ணற்ற ஆண்கள் – வீரர்கள் உயிரிழந்துள்ளனர். பெண்கள் வேலைக்குச் செல்வது கட்டாயம், ஆடம்பரப்பிரியரும்கூட. விற்பனை செய்யப்படும் எல்லாப் பொருள்களுமே விலை மிகுதியாம். மக்கள் விளையாட்டுகளிலும் ஓட்டப்பந்தயங்களிலுமே பெருவிருப்போடு பங்குகொள்கின்றனர்.

    நூலாசிரியர் நடிகர் திரு.ராஜேஷ் அவர்கள், தான் வெளியிடும் பயணக் குறிப்புகள் வாசகர் மனதில் நன்கு பதித்து நினைவில் நிலைத்து நிற்க வேண்டும் என்ற நோக்கத்தால் எழுதப்பட்ட இந்த நூல் ஒரு சிறந்த ஆவணமாகத் திகழும் என்பதில் ஐயமில்லை.

    நூலின் இறுதியில் வாசகர்கள் நினைவில் நிறுத்துவதற்கு ஏற்றவண்ணம் அமைத்துள்ள 'நினைவுக் குறிப்புகளின்' பயன் அறிந்து யாவரும் போற்றுவர்.

    'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்ற ஆன்றோர் வாக்குக்கு இணங்க எழுதப்பட்ட இந்நூல் சோவியத் குறித்த சிறப்புக்களையும், முந்தைய இன்றைய நிலைமையை அறியவும் அரிய வாய்ப்பினை நல்கியுள்ளது. வாசகருக்கு இலக்கிய விருந்தைப் படைத்த ராஜேஷ் அவர்களுக்கு நன்றி பாராட்டி எமது பதிப்பகம் இந்நூலை மகிழ்வுடன் வெளியிடுகின்றது.

    பதிப்பகத்தார்.

    *****

    அணிந்துரை

    தா. பாண்டியன்

    மாநிலச் செயலாளர்

    இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

    திரைப்படக் கலைஞர் திரு. ராஜேஷ் எழுதி வெளியிடவுள்ள கம்யூனிஸத்திற்குப் பின் ரஷ்யா என்ற தலைப்பிட்ட பயணக் கட்டுரையைப் படித்தேன்.

    ஜார் மன்னர்களால் ஆளப்பட்ட பழைய ருசிய நாடு, ‘ஐரோப்பாவின் நோயாளி' என அப்போதைய வரலாற்றாசிரியர்களால் கிண்டல் செய்யப்பட்டது. ஜார் காலத்தில் மிகப்பெரும் பரப்பளவு நிலத்தையுடைய ருசிய நாடு, பொருளாதாரத்துறையில் மிக மிகப் பின் தங்கி இருந்தது. ஐரோப்பாவில் தொழில் புரட்சி தொடங்கி விரிவடைந்தும் கூட அது ருசிய நாட்டிற்குள் பரவவில்லை.

    பல மொழிகள் - பல இனங்கள் - இடைவிடாத உள் நாட்டுக் குழுப் போர்கள் - என்பது தான் ருசிய நாட்டு வரலாறாக இருந்தது. ஜார் மன்னர்கள் கொடுமையான அடக்குமுறை சர்வாதிகார ஆட்சியை நடத்தி வந்தனர்.

    ஜார் நாடாண்ட போது, ஒரு கல்வி அதிகாரியின் மகனாகப் பிறந்தவர்தான் லெனின். இவரது சொந்த அண்ணன் ஜார் மன்னரின் காவற்படையினரால் கொல்லப்பட்டார்.

    அந்தச் சம்பவமும் லெனினை ஆட்சி மாற்றத்தைப் பற்றிச் சிந்திக்க வைத்திருக்கக் கூடும். ஆனால் தனிநபர் துணிச்சலுடன் அவர் செயலில் ஈடுபடவில்லை.

    அவர் மார்க்சிய நூல்களைத் தேடிப் பெற்றுப் படித்தது என்பதே ஒரு புரட்சிகரச் செயல்… லெனின் நாடு கடத்தப்பட்டார் - சைபீரியப் பாலையிலும் சிறையிடப்பட்டார்.

    எந்தக் கொடுஞ்செயலும் அவரை முடக்கிவிடமுடியவில்லை.

    கம்யூனிஸ்டுக் கட்சியை சமூக ஜனநாயக் கட்சியினருடன் சேர்ந்து இயக்கி வந்தார். தலைமறைவின் போதும் அவர் அரசியல் கட்டுரைகள் எழுதி வெளியிடுவதைக் கைவிட்டதே இல்லை.

    முதல் உலகப் போர் இறுதிக் கட்டத்தை 1914-ல் தொடங்கி 1917ல் நெருங்கிக் கொண்டிருந்தது. ரஷ்ய நாட்டிற்குள் கெய்டரின் ஜெர்மன் ராணுவம் வெகுதூரம் நுழைந்து விட்டது. ஜாரின் ரஷ்யப் படை பெரும் தோல்விகளைத் தொடர்ந்து சந்தித்து வந்தது.

    இந்தச் சூழலில்தான் 1917ல் ரஷ்யாவிற்கு மீண்டும் திரும்பினார். புரட்சிக்குத் திட்டமிட்டார். உழைக்கும் மக்கள் திரண்டனர். ராணுவத்தின் ஒரு பகுதியும் ஆதரவாகக் கிளர்ந்து எழுந்தது.

    எனவே மகத்தான புரட்சி வெற்றி பெற்றது.

    லெனின் தலைமை ஏற்றார். ஒரு புதுவகை அரசு பூவுலகில் மலர்ந்தது.

    லெனின் மிகக் குறுகிய காலம்தான் தலைமைப் பொறுப்பில் இருந்தார். அவருக்குப் பின் ஜோசப் ஸ்டாலின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

    அவர் தலைமையில்தான் செஞ்சேனை ஹிட்லரின் நாஜிப் படையை வென்று முறியடித்துக் காட்டியது. அதற்காக இரண்டு கோடி வீரர்களையும் ஒரு கோடி மக்களையும் பலி கொடுத்து மனித குலத்தை நாஜிகளின் அடிமைகளாக ஆக விடாமல் தடுத்துக் காத்த நாடாக மாறியது.

    இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், ருசியா பல துறைகளில் வியக்கத்தக்க முன்னேற்றத்தைக் கண்டது. விஞ்ஞானத் துறை முதல், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வரை சோவியத் யூனியனாக வளர்ந்த ருசியா, உலக மக்கள் புகழ்ந்த நாடாக மாறியது.

    ஸ்டாலின் மறைவுக்குப் பின்னர் வந்த உலகச் சூழலில், விஞ்ஞானத் தொழில்நுட்பப் புரட்சியை ருசிய நாடு தன் வயப்படுத்திக் கொள்ளத் தவறியதுதான், மக்களின் அதிருப்திக்கும், எதிர்ப்புக்கும் முக்கியக் காரணமாகும்,

    சோவியத் யூனியனாக பல துறைகளில் வளர்ந்து, பல நாடுகட்கும் பேருதவி புரிந்த காலத்தில், அதை மிகவும் நேசித்தவர்களில், திரு.ராஜேசும் ஒருவராவார்.

    அக்கொள்கை மீதும், அந்த நாட்டின் மீதும் நன் மதிப்புக் கொண்டிருந்த, திரு. ராஜேசுக்கு, அவரையொத்த பல நல் உள்ளங்களுக்கும், சோவியத் கட்டமைப்பு குலைந்தது பெரும் கவலையை உண்டு பண்ணியது. அதை இந்த நூலில் விரிவாக எழுதியுள்ளார் ராஜேஷ்.

    அற்புதமாக வளர்ந்த சோவியத் யூனியன், ஏகாதிபத்தியத்தை அடக்கும் சக்தியாக எழுந்த பலமுள்ள சோவியத் நாடு, அரசுக்கட்டமைப்பு கலகலத்து மாற்றம் பெற்றது ஏன்? ஏன்? என்ற ஏக்கம், கவலை நிறைந்த கேள்வியைத்தான் எழுப்பியது. அக்கவலையை இவர் எழுதியுள்ள பல பக்கங்களில் காணலாம்.

    அடுத்து, இப்போதுள்ள புட்டின் தலைமையிலான ஆட்சி நடக்கும் ருஷ்ய நாட்டை ராஜேஷ் நேரில் போய்ப் பார்த்து வந்துள்ளார்.

    நானும் 2011ல் போய்ப் பார்த்து வந்தவன்தான்

    என்னுள் எழுந்த சில கேள்விகள் இவருள்ளும் எழுந்துள்ளன.

    70ஆண்டுகட்கு மேலாக முதலாளித்துவம் நிலப்பிரபுத்துவம் அகற்றப்பட்டு, சமதர்ம ஆட்சி வெற்றிகரமாக நடந்த நாட்டில், மீண்டும் திடீரெனக் கோடீசுவரர்கள் எங்கிருந்து வந்தார்கள்?

    சமதர்ம ஆட்சியின் நற்பலன்களை அனுபவித்த மக்கள் - குறிப்பாக, தொழிலாளர்கள் எவ்வாறு இந்த மாற்றத்திற்கு ஆளானார்கள்?

    என்ன கோபம்? என்ன தவறு?

    கம்யூனிஸ்டுக் கட்சிக்குள் உட்கட்சி விவாதம் குறைகளைத் தடுக்கத் தானே, கடைப்பிடிக்கப்படுகிறது. அந்தக் கோட்பாடு ஏன் இந்த விபத்தைத் தவிர்க்க முடியாமல் போனது?

    லெனினுடைய சிலைகள் தகர்க்கப்பட முயன்ற நிகழ்ச்சிகளின் போது கூட, தொழிலாளர்கள், அதை எதிர்த்துக் கண்டனம் செய்ய எழவில்லையே ஏன்? என்ற பல கேள்விகளை ராஜேசும் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

    இது போன்ற கேள்விகள் உலகம் முழுவதிலும் விவாதிக்கப்படுகின்றன. விளக்கம் தர பொறுப்பான அமைப்போ, தோழர்களோ இதுவரை கிட்டவில்லை.

    எனவே நாமாக யூகித்துக் கொள்ள வேண்டியே இருக்கிறது. இப்போதைய மாஸ்கோவில் புதிய மாடிக்கட்டிடங்கள் எழுந்துள்ளன. எல்லாவகைக் கடைகளும் திறக்கப்பட்டுள்ளன.

    லஞ்சமும், விபச்சாரமும் வளர்ந்திருப்பதோடு, தேசிய இனப் பிரச்சினை மீண்டும் வெளிப்பட்டிருப்பது வேதனைக்குரியதாக உள்ளது.

    ஆனால், ருசியக் கம்யூனிஸ்டுக் கட்சி மாநாட்டில் நான் பங்கேற்ற போது, சில நம்பிக்கை தரும் வளர்ச்சிப் போக்குகளைக் கூறினார்கள்.

    தேர்தலில் கூட, முன்னைவிட அதிக இடங்களையும், வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

    அனைத்து நாடுகளிலும் உள்ள கம்யூனிஸ்டுகள் - முற்போக்காளர்கள் சிந்திக்க வேண்டியது உள்ளது. அதைத் தூண்டும் நூலாக இந்நூலை எழுதியுள்ளார் கலைஞர் ராஜேஷ். அவரது எழுத்துப் பணி சிறக்கட்டும்!

    *****

    முன்னுரை

    வாழ்க்கையில் என்றாவது ஒரு நாள் ரஷ்ய நாட்டைப் பார்க்க வேண்டும், மாஸ்கோ செல்ல வேண்டும், மாவீரன் மாமேதை என்று அழைக்கப்படும் ரஷ்யாவின் தந்தை லெனின் அவர்களது பாதுகாக்கப்பட்டிருக்கும் உடலைப் பார்க்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவு. என்னுடைய அப்பாவின் தந்தை ஒரு மார்க்ஸீய அனுதாபி, எனவே எனக்கு 6 வயதிருக்கும் பொழுதே ரஷ்யா, லெனின், ஸ்டாலின் என்ற பெயர்களை அவருடைய வாயால் பலமுறை உச்சரித்துக் கேட்டிருக்கிறேன்.

    லெலினின் உடலைப்பற்றித் தெரிந்து கொண்டேன்:

    நான் மதுரை மாவட்டத்தில் தேனிக்கு அருகிலுள்ள சின்னமனூர் என்ற

    Enjoying the preview?
    Page 1 of 1