Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ulagam Pottrum Thirai Kaaviyangal
Ulagam Pottrum Thirai Kaaviyangal
Ulagam Pottrum Thirai Kaaviyangal
Ebook222 pages1 hour

Ulagam Pottrum Thirai Kaaviyangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

திரையில் வாழ்க்கையையும், பல விசித்திரங்களையும், சுவாரஸ்யமான திருப்பங்களுடன் தந்து ரசிகர்களை மகிழ்வித்த உலகத் திரைப்படங்களையும் நாம் பார்த்திருக்கிறோம்.

இந்நூல், அவ்வாறு உலகப் புகழ்பெற்ற திரைப்படங்களில் முக்கிய திரைப்படங்களைப் பற்றியும், அந்த திரைப்படங்கள் மக்கள் மனதில் எதனால் நீங்காத இடம்பெற்று நிலைத்து நின்றது என்ற காரணங்களையும், வாசகர்களுக்கு எடுத்துச் சொல்வதோடு மட்டுமல்லாமல், அந்த திரைப்படங்கள் உருவாக்கிய சூழலை சாதனையாளர்களின் இளமைக்கால வாழ்க்கையையும் எடுத்துச் சொல்வது சிறப்பாகும்.

வித்தியாசமான சிந்தனைகளுடன் வென்ற திரைப்படங்களின் இன்னொரு பக்கத்தை வாசகர்களுக்கு வழங்கி, தமிழ்த் திரைத்துறைக்கு இந்நூல் அரிய தொண்டாற்றி இருக்கிறது.

வருங்கால தலைமுறையினருக்கு சினிமாவைப் பற்றிய பார்வையையும், நம்பிக்கையையும் ஊட்டுவதாகவும் இந்தப் படைப்பு இருக்கிறது.

"சென்றிடுவீர்...! எட்டுத்திக்கும்... கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்..." என்ற மகாகவி பாரதியின் வரிகளுக்கு ஏற்ப பெரும் முயற்சி எடுத்து, நீண்ட தேடலுடன் தகவல்களைத் திரட்டி, தமிழ்த்திரையுலகின் படைப்பாளுமை சிறக்க திரு.ராஜேஷ் ஆற்றியிருக்கும் பணி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.

திரையுலகில், எதிர்வரும் காலங்களில் பயணிக்கவுள்ள படைப்பாளிகளுக்கு சிறந்த வழிகாட்டியாக இந்நூல் விளங்கும்.

அன்புடன்

சேரன்

Languageதமிழ்
Release dateApr 8, 2020
ISBN6580131605236
Ulagam Pottrum Thirai Kaaviyangal

Read more from Actor Rajesh

Related to Ulagam Pottrum Thirai Kaaviyangal

Related ebooks

Reviews for Ulagam Pottrum Thirai Kaaviyangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ulagam Pottrum Thirai Kaaviyangal - Actor Rajesh

    http://www.pustaka.co.in

    உலகம் போற்றும் திரைக்காவியங்கள்

    Ulagam Pottrum Thirai Kaaviyangal

    Author:

    நடிகர் ராஜேஷ்

    Actor Rajesh

    For more books

    http://www.pustaka.co.in/home/author/actorrajesh-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    காணிக்கை

    பதிப்புரை

    ஆசியுரை

    முன்னுரை

    செயற்கரிய செயல்...

    வாழ்த்துரை

    சிந்தனையைத் தூண்டும் நூல்

    என்னுரை

    1. City Lights

    2. 'M'

    3. 42nd Street

    4. It Happened One Night

    5. The Informer

    6. The 39 Steps

    7. Top Hat

    8. Mutiny on the Bounty

    9. A Night at the Opera

    10. San Francisco

    11. Way Out West

    12. Gone with the Wind

    13. Citizen Kane

    14. Casablanca

    15. The Bicycle Thieves

    16. The Third Man

    17. Singing in the Rain

    18. The Bridge on the River Kuwai

    19. Touch of Evil

    20. Psyco

    21. Lawrence of Arabia

    22. How Green was My Valley

    23. She Done Him Wrong

    24. Dinner at Eight

    25. The Maltese Falcon

    26. Grand Hotel

    27. Death Takes A Holiday

    28. The Letter

    *****

    காணிக்கை

    எனது அருமை நண்பர் வலம்புரி ஜான் அவர்கள் நிறைய படிப்பவர், நிறைய எழுதுபவர், நல்ல பேச்சாளர், எந்த ஒரு சந்தேகம் நமக்குள் எழுந்தாலும் அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். அப்படிப்பட்ட தகுதிகளை உடைய நல்ல தமிழனை, நல்ல அறிவாளியை நான் கடைசியாகச் சந்தித்தது மருத்துவமனையில், அவருடைய கடைசி நாட்களை அவர் எண்ணிக் கொண்டிருந்த நேரம் அது. அந்த சந்திப்பில் அவர் என்னிடம் கூறியது. ராஜேஷ் நீங்கள் நிறைய படிக்கின்றீர்கள். அதன் மூலம் உங்களிடம் நிறைய விஷயங்கள் இருக்கிறது. அது யாருக்கும் பயன்படாமல் வீணாகி விடக்கூடாது. அது எல்லோருக்கும் பயன்படும் விதமாக புத்தகங்கள் எழுதுங்கள். அதுவும் எத்தனை வருடங்கள் இந்த உலகத்தில் நீங்கள் வாழுகின்றீர்களோ, வருடத்திற்கு ஒரு புத்தகம் வீதம் அத்தனை புத்தகங்கள் எழுதுங்கள் என்று என்னிடம் கேட்டுக் கொண்டார். அதனால் இந்த நூல் திரு.வலம்புரிஜான் அவர்களுக்கு நான் செலுத்தும் காணிக்கையாகும்.

    *****

    பதிப்புரை

    உலகம் போற்றும் திரைக்காவியங்கள் என்ற இந்த நூலை திரைப்படக் கலைஞர் ராஜேஷ் எழுதியுள்ளார். புகழ்பெற்ற 28 திரைப்படங்களைப் பற்றிய அரிய தகவல்கள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.

    நல்ல தமிழ் சினிமா பற்றிய கனவு காண்பவர்களுக்கு நல்ல திரைப்படங்களைத் தெரிந்துகொள்ளவும் வாய்ப்பு வேண்டும். அத்தகைய வாய்ப்பை இந்நூலாசிரியர் வழங்கியுள்ளார்.

    சிறந்தப்படங்களை உருவாக்க விரும்புகிறவர்கள், சிறந்த படங்களின் பாணியைப் பின்பற்ற வேண்டும் என்று சொல்லுவார்கள். அதற்கு முன்னதாக சிறந்த படங்களைப் பற்றிய அறிமுகம் வேண்டும் அல்லவா! அத்தகைய அறிமுகத்தை இந்நூல் வழங்குகிறது.

    சார்லி சாப்ளின், ஃபிரிட்ஸ்லாங், ப்ராங் காப்ரா, ஜான் ஃபோர்டு, ஹிட்ச்காக், விக்டர் பிளமிங், ஆர்சன் வெல்ஸ், விட்டோரியா டிசிகா, டேவிட் லீன், ஜார்ஜ் கக்கர், வில்லியம் வைலர் முதலான உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர்களின் சிறப்பான படங்களை இந்த நூலில் தெரிந்து கொள்ளலாம்.

    சார்லி சாப்ளினைப் போலவே, லாரல் ஹார்டியின் சிறப்புகளையும் இந்த நூல் எடுத்துக் கூறுகிறது.

    பீட்டர் லோரி, கிளார்க் கேபிள், சார்லஸ் லாப்டன், ஹம்ப்ரி போகார்ட், ஜோசப் காட்டன் முதலான புகழ்பெற்ற நடிகர்களும் விவியன் லை, இன்கிரிட் பெர்க்மான், மேவெஸ்ட், ஜீன் ஹார்லோ போன்ற பிரபல நடிகையர்களும் இப்படங்களில் நடித்திருப்பதை நாம் தெரிந்து கொள்ள முடிகிறது.

    இந்நூல் படம் பார்ப்பவர்களும், படம் பற்றி படிப்பவர்களுக்கும் சிந்தனை விருந்து எனலாம்.

    தமிழ் வாசகர் உலகம் திரைப்படக் கலைஞர் ராஜேஷின் இந்த நூலுக்கு சிறந்த ஆதரவு தர வேண்டுகிறோம்.

    -- பதிப்பகத்தார்

    *****

    ஆசியுரை

    நண்பர் திரு. ராஜேஷ் அவர்கள் கற்றவர், கற்பித்தவர், சிந்தனையாளர். சிறந்த நடிகர் இவரை நான் எப்போது சந்தித்தாலும், அரிய பெரிய விஷயங்களை, அனுபவங்களை ஆதாரப்பூர்வமாகச் சொல்லி அசத்திவிடுவார். என் சிந்தனைக்கு மேலும் சில நல்ல தகவல்களை தந்து ஊக்குவிப்பார், இன்னும் கொஞ்சம் சொல்லுங்களேன் என்று கேட்கணும் போல இருக்கும்...

    இவரளவிற்கு நான் கற்றவனல்ல... எனினும் வயதில் நான் கனிந்த கனியாக வாழ்வதால் என் கருத்தையும் கேட்டுத் தெரிந்துகொள்ள ஆவலாய் எதிர்பார்த்து தன் அன்பு உள்ளத்தை திறந்து வைத்திருக்கிறார் என் இனிய சகோதரர்.

    மௌனப் படத்திலிருந்து பேசும்படம் வரை சினிமா உலகம் எப்படி தோன்றியது, எந்த எந்த காலகட்டத்தில் எது எது வெளியானது என்ற ஆராய்ச்சியில் மூழ்கி பல நல்ல கலை முத்துக்களை எடுத்துத்தொகுத்து கலையுலக நண்பர்கள் கவனத்திற்கு ஒளியேற்றியிருக்கிறார்...

    அனைவரும் படித்து பத்திரமாகப் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம் என்பதில் சிறிதும் ஐயமில்லை...

    ராஜேஷ் அவர்களின் கன்னி முயற்சியை எண்ணி நெஞ்சார பாராட்டி வாழ்த்துகிறேன்.

    அன்புடன்

    கலைஞானம்

    6-10-2009

    *****

    முன்னுரை

    திரைப்படங்களைப் பற்றிய எழுத்துக்களும், கட்டுரைகளும் இல்லாத பாலைவனச் சூழலில் ராஜேஷ் அவர்களின் இந்த முயற்சி சோலையும், கனியும் மலரும் கொடியும் எல்லாம் சேர்ந்த, ஓசோனில் ஒட்டையில்லாத ஒரு வானம் -

    சினிமா எந்த நாளிலும் ஒரு உன்னதமான கலையாகவோ, அல்லது மறுக்கமுடியாத தொழிலாக நிச்சயமாக அங்கீகரிக்கப்படப் போவதில்லை - என்றாலும் அதே விமர்சகர்கள், ஆய்வாளர்களின் வாழ்க்கையில் சினிமா எப்படிப்பட்ட ஒரு முக்கியமான அங்கம் என்பதை அவர்களே மறுக்கமாட்டார்கள் -

    ராஜேஷ் அவர்கள் இந்த எந்தவிதச் சலனமும் இல்லாமல் உலகின் மிகச்சிறந்த திரைப்படங்களின் கதைகளை நமக்கு மறுபடியும் ஒருமுறை தூசிதட்டி, சந்தனம் தடவி வெள்ளித்தட்டில் வைத்து நம் எதிரே நீட்டியுள்ளார் -

    சார்லி சாப்ளினின் சிட்டி லைட்ஸில் தொடங்கி இந்த சினிமா எக்ஸ்பிரஸ் It Happend one night, Singing in the Rain, Gone with the Wind, The 39 Steps ஆகிய இந்த சினிமாக்களில் எல்லாம் பயணித்து தீவிரமாக The Bicycle Thieves, The Third Man, Citizen Kane, Death takes a holiday போன்ற கதைகளை உன்னிப்பாக அலசி நம்மை நிகழ்கால நிலையத்தில் நிறுத்துகிறது.

    Gone with the Wind இயக்குநர், படப்பிடிப்பில் நடந்த பிரச்சனைகளில் வெறுப்படைந்து - கார் ஓட்டி வரும்போது எதிர் காரில் மோதிவிடலாமா என்று அவஸ்தைப்பட்டதை படிக்கும்போது, ஆஹா... இது நம் வாழ்க்கையல்லவா என்று நினைக்க வைக்கிறார் ராஜேஷ். Victer Fleming உணர்ச்சியை நாம் அடையாளம் கண்டாகி விட்டோம். இனி ராஜேஷ் தயவில் தமிழில் Gone with the Wind போன்ற படங்கள் வெளிவர முயற்சிப்பது, சினிமா ரசிகனாக, கலைஞனாக நம் குறிக்கோளாக வேண்டும்.

    அருமையான இத்தொகுப்பில், வித்தியாசமான கதைகள் மட்டுமில்லாமல் இத்தகைய கதைகளை படமாக்குவதற்குள் இந்த இயக்குநர்கள் பட்ட கஷ்டங்களும், அவர்களின் வித்தியாசமான அணுகுமுறைகளையும் இத்தொகுப்பில் ராஜேஷ் அவர்கள் மிக அருமையாக கோடிட்டுக் காட்டியிருக்கிறார்.

    தனிச்சிறப்புடைய சர்வதேச திரைப்படங்களில் அவற்றை அச்சிறப்புக்கு உண்டாக்கிய சில முத்துக்களையும் வைரங்களையும் பூதக்கண்ணாடியில் காட்டி நம்மைக்கட்டி இழுக்கிறார். Citizen Kane படத்தில் Rose Bud வார்த்தையில் உள்ள மர்மம். Third Man கதையில் அந்த 3வது மனிதன் யார் என்ற எதிர்பார்ப்பு நிலை, இவை போன்றவற்றின் முடிச்சை லாவகமாக அவிழ்த்திருப்பது, சினிமா விற்பன்னருக்கு ஒரு ஞாபகக்குட்டு, சினிமா மாணவனுக்கு கலங்கரை வெளிச்சம்.

    இத்தொகுப்பில் உள்ள ஒவ்வொரு படங்களையும், ஒவ்வொரு சினிமா ரசிகனும், சினிமாக்கலைஞனும் பார்த்தே ஆகியிருக்க வேண்டும் - அந்த வசதி இல்லையென்றால், இத்தொகுப்பு ஒரு வரப்பிரசாதம். நல்ல எழுத்துக்களை ஆங்கிலத்திலேயே தேடி, படித்து, நொடித்த என்னைப் போன்ற தமிழ்முறைக் கல்வியில் பயின்றவர்களுக்கு ராஜேஷ் செய்துள்ள உதவி மிக முக்கியமானது -

    3 வருடங்களில் 'இந்திய சினிமா' என்ற வகுப்பில் படித்துத் தெரிந்து கொண்ட விஷயங்களை, நிமிஷங்களில் இப்புத்தகத்தில் படித்த நிம்மதி சந்தோஷத்தில் என் நன்றியும் ராஜேஷுக்கு - அடுத்து திரை நுணுக்கங்களையும் எழுதுங்கள் - படையே காத்திருக்கிறது தமிழில் அறிய... நன்றி

    அன்புடன்

    சுஹாசினி

    *****

    செயற்கரிய செயல்...

    திரையில் வாழ்க்கையையும், பல விசித்திரங்களையும், சுவாரஸ்யமான திருப்பங்களுடன் தந்து ரசிகர்களை மகிழ்வித்த உலகத் திரைப்படங்களையும் நாம் பார்த்திருக்கிறோம்.

    இந்நூல், அவ்வாறு உலகப் புகழ்பெற்ற திரைப்படங்களில் முக்கிய திரைப்படங்களைப் பற்றியும், அந்த திரைப்படங்கள் மக்கள் மனதில் எதனால் நீங்காத இடம்பெற்று நிலைத்து நின்றது என்ற காரணங்களையும், வாசகர்களுக்கு எடுத்துச் சொல்வதோடு மட்டுமல்லாமல், அந்த திரைப்படங்கள் உருவாக்கிய சூழலை சாதனையாளர்களின் இளமைக்கால வாழ்க்கையையும் எடுத்துச் சொல்வது சிறப்பாகும்.

    வித்தியாசமான சிந்தனைகளுடன் வென்ற திரைப்படங்களின் இன்னொரு பக்கத்தை வாசகர்களுக்கு வழங்கி, தமிழ்த் திரைத்துறைக்கு இந்நூல் அரிய தொண்டாற்றி இருக்கிறது.

    வருங்கால தலைமுறையினருக்கு சினிமாவைப் பற்றிய பார்வையையும், நம்பிக்கையையும் ஊட்டுவதாகவும் இந்தப் படைப்பு இருக்கிறது.

    சென்றிடுவீர்...! எட்டுத்திக்கும்... கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்... என்ற மகாகவி பாரதியின் வரிகளுக்கு ஏற்ப பெரும் முயற்சி எடுத்து, நீண்ட தேடலுடன் தகவல்களைத் திரட்டி, தமிழ்த்திரையுலகின் படைப்பாளுமை சிறக்க திரு.ராஜேஷ் ஆற்றியிருக்கும் பணி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.

    திரையுலகில், எதிர்வரும் காலங்களில் பயணிக்கவுள்ள படைப்பாளிகளுக்கு சிறந்த வழிகாட்டியாக இந்நூல் விளங்கும்.

    அன்புடன்

    சேரன்

    *****

    வாழ்த்துரை

    திருக்குறளை திறம்பட ஒப்புவிக்கும் குழந்தையை புருவம் உயர்த்தி ஆச்சர்யத்துடன் பார்ப்பதைப்போல... குறைந்தபட்சம் 1330 திரைப்படங்களையாவது தங்கு தடையின்றி அதன் இயக்குனர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் உட்பட கதையை அக்குவேறு ஆணிவேறாக புட்டு புட்டு வைப்பதில் திரு.ராஜேஷ் அவர்களை வியப்பு குறையாமல் இன்னமும் ரசித்து மதித்து வருகிறேன். அவர் சினிமாவைப் பற்றி அதுவும் ஆங்கில படங்களை பற்றி பேசுவதைக் கேட்டால், வாயில் ஈ மட்டுமல்ல F, G, H, I, J இப்படி Z வரை நுழைவது தெரியாது. அவ்வளவு சுவாரஸ்யம்!

    இவ்வளவு நுணுக்கங்கள் தெரிந்தவர்கள் எவ்வளவு பேர் சினிமாவில் இருப்பார்கள் என்பதே கேள்விக்குறி!

    யாம் பெற்ற இன்பத்தை சினிமாவை நேசிக்கும் பலரும் அனுபவிக்க...

    'உலகம் போற்றும் திரைக்காவியங்கள்' இந்த புத்தகத்தில் 28 திரைப்படங்கள் குறித்து அற்புதமாக எழுதியுள்ளார்.

    தகுதி வாய்ந்தவர் திரு. ராஜேஷ் என்பதனால், தனிப்பட்ட வாழ்த்துக்கள் அவருக்கு தேவையில்லை. அவரது அடுத்தடுத்த படைப்புகளை ருசிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    ப்ரியமுடன்

    ரா. பார்த்திபன்

    திரைக்கலைஞன்

    24-10-2009

    சென்னை - 78.

    *****

    சிந்தனையைத் தூண்டும் நூல்

    சினிமா என்பது ஆற்றல்மிக்க கலை சாதனம். பல்வேறு கலைகளின் ஆற்றல் அனைத்தையும்

    Enjoying the preview?
    Page 1 of 1