Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Naan Kanda China
Naan Kanda China
Naan Kanda China
Ebook137 pages43 minutes

Naan Kanda China

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சீனாவைக் கண்டேன் என்ற இந்த நூலை, சீனாவுக்குச் சென்றபோது இருந்த அதே உற்சாகத்துடன் எழுதினேன்.

அப்போது எனக்குள் ஏற்பட்ட மனப்பதிவுகளை நூலில் இடம்பெறச் செய்துள்ளேன்.

இந்தியாவின் வளர்ச்சி குறித்த என்னுடைய எதிர்பார்ப்பும் ஆங்காங்கே வெளிப்பட்டுள்ளது.

சீனாவுக்கு இன்னும் பலமுறை பயணம் செய்தாலும் புதிய புதிய அனுபவமும் சிந்தனையும் தோன்றும் என்பது எனது கருத்து.

- ராஜேஷ் திரைப்படக் கலைஞர்
Languageதமிழ்
Release dateMar 24, 2020
ISBN6580131605137
Naan Kanda China

Read more from Actor Rajesh

Related to Naan Kanda China

Related ebooks

Related categories

Reviews for Naan Kanda China

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Naan Kanda China - Actor Rajesh

    http://www.pustaka.co.in

    நான் கண்ட சீனா

    Naan Kanda China

    Author:

    நடிகர் ராஜேஷ்

    Actor Rajesh

    For more books

    http://www.pustaka.co.in/home/author/actor-rajesh

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    முன்னுரை

    திரைப்படக் கலைஞர் ராஜேஷ் நடிப்பிலும் படிப்பிலும் சிறந்து விளங்குபவர். பல்துறை சார்ந்த நூல்களை இடையறாது படித்துக் கொண்டிருப்பவர். மேடைகளிலும் திறமையாகப் பேசக்கூடியவர். ஆசிரியராகப் பள்ளியில் பணியாற்றிய அனுபவம் மிகுந்தவர்.

    சீனாவுக்கு இருமுறை சென்று திரும்பியுள்ள அவர் சீன மக்களின் வாழ்க்கையை நன்கு ஊடுருவிப் பார்த்துள்ளார். அவரது பார்வை கோணம் சற்று வித்தியாசமானது.

    சீனாவின் ஒவ்வொரு வளர்ச்சியையும் பார்த்து, அதனை இந்தியாவில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி நிலைமைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும் பார்வை நடை அவரிடம் காணப்படுகிறது.

    சீனாவில் புரட்சி வெற்றி பெற்று 60 ஆண்டுகள் ஆகி விட்டன. 1949 அக்டோபர் 1-ல் பெற்ற வெற்றியின் மகத்தான அறுபதாம் ஆண்டு விழா 2009, அக்டோபரில் தியானென்மன் சதுக்கதில் வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.

    சீனா வல்லரசாகவும் நல்லரசாகவும் விளங்க வேண்டும். இந்திய - சீன எல்லைத் தகராறுகள் சரி செய்யப்பட வேண்டும். கலாச்சார, அரசியல், பொருளாதார, வணிக உறவுகள் வளர்ந்து வலுப்பெற வேண்டும் என்றே இந்திய நெஞ்சம் ஏங்குகிறது. ராஜேஷின் பார்வையும் அதே திசைவழியில் செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    தமிழ் வாசகர் உள்ளம் இந்த நல்ல நூலை இனிக்கும் வெல்லமென கருதி வரவேற்கும் என்று நம்புகிறோம்.

    *****

    மனதாரப் பாராட்டுகிறேன்

    திரைப்பட நடிகராக தமிழ்நாட்டு மக்களுக்கு நன்கு அறிமுகமான நடிகர் திரு. ராஜேஷ் சீன நாட்டிற்கு இருமுறை சென்று, சுற்றிப் பார்த்து விட்டுத் திரும்பியுள்ளார்.

    நடிகர் ராஜேஷ் திரை உலகத்திற்குள் நுழைவதற்கு முன்னதாக, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கெல்லட் பள்ளியில் 7 ஆண்டுகள் ஆசிரியர் பணி புரிந்தவர். இவரது பெற்றோரும் ஆசிரியப் பணிகளில் இருந்தவர்கள். தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டைக்கருகில் உள்ள அணைக்காடு தான் இவரது முன்னோர்கள் வாழ்ந்த இடம். எனவே, குழந்தைப் பருவம் முதல், தஞ்சை மாவட்டத்தில் வீறுடன் இயங்கி வந்த தேசிய விடுதலை இயக்கம், பெரியாரின் சுயமரியாதை இயக்கம், உழைப்பாளர்களுக்காகப் போராடிய பொதுவுடைமை இயக்கம் ஆகிய மூன்று பெரும் நீரோட்டங்களில் நனைந்தவர். அந்த இயக்கங்களின் சீரிய சிந்தனைகளைத் தன்வயப்படுத்தியுள்ளார்.

    எனவேதான், இயக்கங்களின் களங்களில் வளர்ந்தவர் ஆதலால், அவர் சீனாவைப் பார்த்துவிட்டு எழுதியுள்ள நூல் ஒரு பயண அனுபவ வருணனையாக அமையாமல், அதாவது புகைப்படப் படப்பிடிப்பாக மட்டுமல்லாது ஊடுவிப் படம் எடுக்கும் எக்ஸ்ரேயின் பணியையும் மேற்கொண்டுள்ளதைக் காட்டுகிறது.

    இந்திய நாடு விடுதலை பெற்ற இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான் சீனம் சியாங்கே சேக்கைத் தோற்கடித்துத் துரத்திவிட்டு மக்களாட்சியை அமைத்தது. சீன நாட்டில் மாசேதுங், சூ என்லாய் ஆகியோரின் தலைமையில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. உலக நாடுகளிடையே மாபெரும் மாற்றத்தைக் குறிப்பதாக அமைந்தது.

    அது அமெரிக்க அரசாலும், அந்நாட்டின் ஆதரவு நாடுகளாலும் அங்கீகரிக்கப்படாதிருந்தது. 30 ஆண்டுகள் இந்நிலை நீடித்தது. அதற்குப் பிறகும் கூட, ஐக்கிய நாடுகள் சபையில் சீனா இடம் பெற வேண்டும் என்று இந்தியா வாதாடி வந்தது.

    அது அன்று இந்தியா கடைப்பிடித்த சுதந்திரமான - நடுநிலை - வெளியுறவுக் கொள்கை.

    காலம் சுழன்று விட்டது. சீனாவும் மாறி வளருகிறது. இந்தியாவும் வளர்ச்சியால் மாறி நிற்கிறது.

    இரு நாடுகளுக்குமிடையில் வணிகப் போட்டி இருக்கவே செய்கிறது. அரசியல் தலைமைக்காகவும் போட்டியிருக்கிறது. ஆனால், இந்த இரு பெரும் நாடுகளும் - பல ஒற்றுமை அம்சங்களைக் கொண்டுள்ளன.

    இரு நாட்டவரும் புத்தரைப் போற்றுகிறவர்கள். இரு நாடுகளிலும் விவசாயிகள் அதிகம். இரு நாடுகளும் ஐயாயிரம் ஆண்டு அறிந்த வரலாற்றை உடையவை. தொன்மையான மொழிகளும், இலக்கியங்களும் உடையவை.

    அமெரிக்க எதிர்ப்பால், ஐக்கிய நாடுகள் சபையிலும் சீனா உறுப்பினராகச் சேர்க்கப்படவில்லை. பொருளாதார முற்றுகை போடப்பட்டது. அவதூறுப் பிரச்சாரம் உலகம் முழுவதிலும் நடந்தது. ஆனால், இந்தியா, நேருஜி தலைமையில் 100 கோடி மக்கள் வாழும் சீனாவை ஒதுக்கிவிட்டு ஒரு உலக அமைப்பு இருப்பதாகக் கூறுவது கேலிக்கூத்து எனத் துணிச்சலுடன் வாதாடியது.

    1962இல் இந்திய - சீன எல்லையில் மோதல் ஏற்பட்டது. நெருங்கிய நட்பு நாடுகளாக இருந்து பஞ்சசீலக் கொள்கைப் பிரகடனம் செய்த நாடுகள் மோதிக் கொண்டு பகைமை வளர்த்தது வரலாற்றில், ஏகாதிபத்திய சக்திகளுக்கு, ஒரு புதிய வாய்ப்பை ஏற்படுத்த உதவியது.

    விவேகானந்தர் சீனா சென்ற போது, அங்கு வறுமையும், விபச்சாரமும், அபின் தின்றதால் சாவும் மலிந்திருந்த அலங்கோலத்தைக் கண்டு மனம் வெதும்பினார். தூரப்பார்வை உள்ள ஞானியாக விவேகானந்தர் இருந்ததால், கண்ணில் பட்ட காட்சிக்கு அப்பால், சீன மண்ணில் புதைந்திருந்த ஒரு சக்தியையும் காண முடிந்தது.

    உறங்கிக் கொண்டிருக்கும் இந்த சீன (மக்கள்) அரக்கன் எழுந்தால் உலகத்தையே அதிர வைப்பான் என்று எழுதினார்.

    ஆம், அதிர வைத்துவிட்டது. புரட்சியிலும் புதுமை செய்தது. உற்பத்தியைப் பெருக்கி, உலக முதலாளித்துவத்தின் பிடரிமயிரைப் பிடித்துக் குலுக்குவதிலும் புதுமை செய்துவிட்டது.

    இதையே இரு நாடுகளும் சேர்ந்து செய்யும் வாய்ப்புக் கிட்டினால் முதலாளித்துவ அமைப்புக்கு இறுதிக்காலம் தொடங்கிவிடும்...

    திரு. ராஜேஷ், ஆசிரியப் பணியில் பயிற்சி பெற்றதால், தெளிவாக எழுதியிருக்கிறார். சரளமான நடை, எழுத்தில் நல்ல படப்பிடிப்பு.

    சீன மக்களின் உழைப்பை வியந்து பார்க்கிறார். இந்தியா மீது பகைமை இல்லாதிருப்பது கண்டு மகிழ்கிறார்.

    மலிவாக உற்பத்தி செய்து விற்பனை செய்ய முனைந்து நிற்கிற நாடு, முந்தத்தானே செய்யும் என்று வணிகத் தீர்ப்பையும் பதிவு செய்கிறார்.

    இவர் சீனாவில் கண்ட சிறப்புகளைக் குறிப்பிட்டிருப்பது சீனாவைப் புகழ்வதற்காக அல்ல - இந்திய நாடும் அந்த முறைகளை ஏற்று சிறப்படைய வேண்டும் என்ற ஆவல்தான்!

    திரு. ராஜேஷ் புத்தகங்களைப் படிப்பதில் ஆர்வம் உள்ளவர். தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஏக்கம் உள்ளவர். தெரிந்ததைக் கூற வேண்டும் என்ற ஊக்கம் உள்ளவர்.

    தமிழ் மக்களுக்கு சீன மக்களை அறிமுகம் செய்வதில் வெற்றி கண்டள்ளார்.

    இவரது நூலை அச்சிட்டு

    Enjoying the preview?
    Page 1 of 1