Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ulaga Thirai Padangal
Ulaga Thirai Padangal
Ulaga Thirai Padangal
Ebook188 pages1 hour

Ulaga Thirai Padangal

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

மொழி மாறிவிட்டது. மனிதர்கள் மாறிவிட்டார்கள், உறவுகள் மாறிவிட்டன, உலகமே தலைகீழாக மாறிவிட்டது என்பது உண்மைதான். அந்தக் காலத்தில் எண்ணை விளக்குகள் நேராக எரிந்து கொண்டிருந்தன. மின்சாரம் வந்தவுடன் விளக்குகள் தலைகீழாக தொங்கிக்கொண்டு எரிகின்றன. இருப்பினும் மகாபாரதம், இராமாயணம், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், ஷேக்ஸ்பியரின் கதைகள் போன்றவை இத்தனை ஆண்டுகளாக இன்றும் நிலைத்து நிற்கின்றன. இதில் வருகின்ற பாத்திரங்கள், காட்சிகள் எல்லாம் எக்காலத்தவர்க்கும் இன்று சமகாலத்தவர்க்கும் பொருந்தக்கூடியதாக இருக்கிறது எனவேதான் இன்றுவரை அவை நிலைத்து நிற்கின்றன.

ஒரு திரைப்படத்தைப் பார்ப்பது, ரசிப்பது என்பது ஒரு வகை. அப்படத்தின் சிறப்பு அம்சங்களையும், பலவீனங்களையும் பற்றி விமர்சிப்பது என்பது மற்றொரு வகை. இந்த இரண்டாவது வகையான விமர்சிப்பது என்பதுதான் இந்த புத்தகத்தைப் படிப்பதன் மூலம் நமக்கு கிடைக்கின்ற ஒன்றாகும். வாழ்க்கையை அந்த அளவிற்கு நெருக்கத்தில் காட்டுகின்ற ஒரே கலைவடிவம் சினிமா மட்டும்தான். எனவே பார்வையாளர்களின் உணர்வுகளை மிக உயர்ந்த அளவு பாதிக்கக்கூடிய சக்தி சினிமாவிற்கு மட்டுமே உள்ளது. பீத்தோவனையோ, மொஸட்டையோ, பிக்காஸோவையோ, மைக்கலேஞ்லோவையோ, வியானோ டா டாவின்சியைப் பற்றியோ நமது நாட்டு தலைசிறந்த ஓவியர் ரவிவர்மாவைப் பற்றியோகூட தெரியாத மக்கள் இருப்பார்கள். ஆனால் சார்லி சாப்ளினைப் பற்றியோ, புரூஸ்லியைப் பற்றியோ ராஜ்கபூரைப் பற்றியோ, எம்.ஜி.ஆர் பற்றியோ தெரியாதவர்கள் நிச்சயம் இருக்க மாட்டார்கள். புத்தகங்களைப் படிக்காதவர்கள் இசையை விரும்பிக் கேட்காதவர்கள், ஓவியங்களைப் பற்றி தெரியாதவர்கள், நடனக் கலையை ரசிக்காதவர்கள் இருப்பார்கள். ஆனால் தன்னுடைய வாழ்நாளில் சினிமா பார்க்காதவர்கள் நிச்சயமாக இருக்க மாட்டார்கள்.

எல்லா காலங்களிலும், எல்லா கலைகளும் மனிதனைப் பற்றிதான் இருந்திருக்கின்றது. எல்லா கலைகளுக்கும் மூலம் மனிதன்தான். எனவே மனிதனுடைய உணர்வுகள், போராட்டங்கள், வெற்றிகள் போன்றவற்றை மையமாக வைத்து எழுதப்பட்ட கதைகள்தான் காலத்திற்கு நிலைத்து நிற்கும்.

மனிதத்தன்மைகளின் மிக உயர்ந்த உணர்வுகளை சினிமாவில் மட்டுமே காட்ட முடியும். அதுவும் நேரில் பார்க்க முடியாத அளவிற்கு குளோசப்பில் மிகத்தெளிவாகப் பார்க்க முடியும்.

மேலே குறிப்பிட்ட அளவு சக்தி வாய்ந்த இந்த சினிமா உலகம் இன்றுவரை ஆயிரக்கணக்கான திரைப்படங்களை உருவாக்கியுள்ளது. இந்தப் புத்தகத்தில் 17 மேல்நாட்டுத் திரைப்படங்களைப் பார்த்து அந்த படங்களின் கதை, திரைக்கதை, மையக்கருத்து, படத்தின் மூலம் சொல்லப்படும் செய்தி போன்றவற்றை முடிந்த அளவு எழுதியிருக்கிறேன். இதில் தவறுகள் இருந்து அவற்றைச் சுட்டிக்காட்டினால் மிகவும் மகிழ்ச்சியடைவேன். அடுத்தப் பதிப்பில் அந்தக் குறைகள் திருத்தப்படும்.

மேலும் இப்புத்தகம் வெளிவர உதவிய எனது மகள் திவ்யாவிற்கு நெஞ்சார்ந்த நன்றி!

Languageதமிழ்
Release dateApr 8, 2020
ISBN6580131605235
Ulaga Thirai Padangal

Read more from Actor Rajesh

Related to Ulaga Thirai Padangal

Related ebooks

Reviews for Ulaga Thirai Padangal

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ulaga Thirai Padangal - Actor Rajesh

    http://www.pustaka.co.in

    உலகத் திரைப்படங்கள்

    Ulaga Thirai Padangal

    Author:

    நடிகர் ராஜேஷ்

    Actor Rajesh

    For more books

    http://www.pustaka.co.in/home/author/actorrajesh-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    பதிப்புரை

    என்னுரை

    1. A Perfect Murder

    2. Absolute Power

    3. Basic Instinct

    4. Cape Fear

    5. Enough

    6. Falling in Love

    7. Indecent Proposal

    8. No Way Out

    9. Sleeping with the Enemy

    10. The Day of the Jackal

    11. The Fugitive

    12. The Godfather

    13. The Odessa File

    14. The Silence of the Lambs

    15. The Untouchables

    16. The War of the Roses

    17. Unfaithful

    *****

    பதிப்புரை

    ஹாலிவுட் திரைப்படங்கள் செய்யும் சாதனைகள் பூமியின் மூலைமுடுக்குகளுக்கெல்லாம் போய்ச் சேர்ந்துவிடுவது உண்மை.

    இங்கு தற்போது வெளிவருகின்ற ஒரு சில திரைப்படங்களெல்லாம் சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பே ஹாலிவுட் திரைப்படங்களின் கதையாகவோ அல்லது அதன் சாயலாகவோதான் அமைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஹாலிவுட் திரைப்படங்கள் முன்கூட்டியே தம்மை பதிவு செய்து கொள்கிறது எனலாம்.

    ஹாலிவுட் திரைப்படங்களின் பிரமாண்டமும், அதன் தாக்கமும் யாரையும் சென்றடைந்துவிடுகிறது; முக்கியமாக சிறுவர்களைக்கூட. அப்படங்கள் வெற்றியடைவதற்காக கோடிக்கணக்கில் பணமும் வருடக்கணக்கில் உழைப்பையும் போடுகிறார்கள். இதில் சில வெற்றியடைகின்றன. சில தோல்வியைத் தழுவுகின்றன. பெரும்பாலும் ஹாலிவுட் திரைப்படங்கள் மனித வாழ்வியல் குறித்த சம்பவங்களையும், அதன் நுணுக்கங்களையும் மிக அழகாக செதுக்கித் தருவதன் லாவகம் அவர்களுக்கே உரியது. இன்னும் கொஞ்சம் பின்னோக்கி பார்த்தோமானால்... பல படங்களின் வரிசையில்; சில படங்களை உதாரணத்திற்கு எடுத்தோமானால்……

    'இன் ஓ சென்ட் வாய்ஸ்' என்றொரு படம்; ஐந்து வயதுக்கு மேலுள்ள சிறுவர்களை ராணுவத்திற்கு வலுக்கட்டாயப்படுத்தி பலவந்தப்படுத்தி இழுத்துச் செல்வார்கள். அப்படி போகவில்லை என்றால் சுட்டுக்கொல்வது போன்ற படம். யார் நெஞ்சையும் தட்டி உள்ளே சென்றுவிடும்.

    'தி வே ஹோம்' என்றொரு படம்; ஒரு பாட்டிக்கும் போனுக்கும் இடையே நிகழும் பாசப் போராட்டத்தின் கதை. பாட்டியிடம் பேரன் என்னென்னவோ கேட்டு கஷ்டப்படுத்துகிறான். அதற்கு பாட்டியும் வளைந்து கொடுக்கிறாள். முடிவில் பேரன் பாட்டியின் பாசத்தில் வீழ்வது போன்ற சித்திரிப்பு மிக பிரமாதமாக இருக்கும்.

    'போஸ்ட் மேன்' என்றொரு படம்; ஒரு போஸ்ட் மேன் ஓய்வுபெறும் காலகட்டத்தில் தம் மகனை அந்த வேலைக்காக அந்த ஊரில் உள்ளோரிடமெல்லாம் அறிமுகப்படுத்தி விட்டு வருவது போன்ற கதையமைப்பும், மகன் தந்தைக்கு துணை நிற்பது போன்ற காட்சியமைப்பும் மிகத் தத்ரூபமாக பின்னப்பட்டிருக்கும். இப்படி; ஹாலிவுட் திரைப்படங்களைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். எல்லா கதைகளிலும் ஓர் உணர்வு இழையோடிக்கொண்டு இருக்கும் — அத்தோடு அப்பட்டமான எதார்த்தமும் நிறைந்திருக்கும்.

    ஒரு சில திரைப்படக் கலைஞர்கள் புத்தகம் படிப்பதும் — எழுதுவதும் ஒரு சுமையாகவும் — அல்லது நேரமில்லை என்று சாக்குபோக்கு கூறுவதையுமே தொழிலாகக் கொண்ட காலத்தில் ஒரு நடிகர் அதுவும் நல்ல கதையம்சம் கொண்ட பல வெற்றிபடங்களில் நடித்த நடிகர் உலகத்தில் உள்ள இலக்கிய நூல் — திரைப்படங்கள் யாவையும் பார்த்து — படித்து அதை ஆய்ந்து அதைத் தம்மோடு விட்டுவிடாமல் மற்றவர்க்கும் அறிமுகம் செய்விப்பதில் அல்லது எடுத்துக் கூறுவதில் இருக்கும் ஆர்வம் ராஜேஷ் அவர்களுக்கே உரிய குணம் போலும்.

    பிரமாண்ட சினிமாவிற்கும் இயல்பான சினிமாவிற்கும் ரொம்ப வித்தியாசம் உண்டு. எப்போதுமே நேரடியாக அல்லது எதார்த்த சூழலுடன் கூடிய கதைகளுக்கு மவுசு அதிகம் என்பது ஹாலிவுட்டிற்கே உரிய உத்தி.

    ஹாலிவுட் திரைப்படங்களைப் பற்றி அறிந்தவர்க்கும் — அறியாதவர்க்கும் இந்நூல் மிகப்பெரிய எடுத்துக் காட்டாகவும் — வாங்கி பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளும் விதமாகவும், ஹாலிவுட் திரைப்படங்கள் ஒவ்வொன்றையும் தேர்ந்தெடுத்து, அதிலுள்ள கதாபாத்திரங்களை மனக் கண்முன் நடக்கவிட்டாற் போல் தந்திருக்கும் நூலாசிரியர் திரைப்படக் கலைஞர் ராஜேஷ் அவர்களுக்கு நன்றி கூறி வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறது எங்கள் நிறுவனம்.

    *****

    என்னுரை

    மொழி மாறிவிட்டது. மனிதர்கள் மாறிவிட்டார்கள், உறவுகள் மாறிவிட்டன, உலகமே தலைகீழாக மாறிவிட்டது என்பது உண்மைதான். அந்தக் காலத்தில் எண்ணை விளக்குகள் நேராக எரிந்து கொண்டிருந்தன. மின்சாரம் வந்தவுடன் விளக்குகள் தலைகீழாக தொங்கிக்கொண்டு எரிகின்றன. இருப்பினும் மகாபாரதம், இராமாயணம், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், ஷேக்ஸ்பியரின் கதைகள் போன்றவை இத்தனை ஆண்டுகளாக இன்றும் நிலைத்து நிற்கின்றன. இதில் வருகின்ற பாத்திரங்கள், காட்சிகள் எல்லாம் எக்காலத்தவர்க்கும் இன்று சமகாலத்தவர்க்கும் பொருந்தக்கூடியதாக இருக்கிறது எனவேதான் இன்றுவரை அவை நிலைத்து நிற்கின்றன.

    ஒரு திரைப்படத்தைப் பார்ப்பது, ரசிப்பது என்பது ஒரு வகை. அப்படத்தின் சிறப்பு அம்சங்களையும், பலவீனங்களையும் பற்றி விமர்சிப்பது என்பது மற்றொரு வகை. இந்த இரண்டாவது வகையான விமர்சிப்பது என்பதுதான் இந்த புத்தகத்தைப் படிப்பதன் மூலம் நமக்கு கிடைக்கின்ற ஒன்றாகும். வாழ்க்கையை அந்த அளவிற்கு நெருக்கத்தில் காட்டுகின்ற ஒரே கலைவடிவம் சினிமா மட்டும்தான். எனவே பார்வையாளர்களின் உணர்வுகளை மிக உயர்ந்த அளவு பாதிக்கக்கூடிய சக்தி சினிமாவிற்கு மட்டுமே உள்ளது. பீத்தோவனையோ, மொஸட்டையோ, பிக்காஸோவையோ, மைக்கலேஞ்லோவையோ, வியானோ டா டாவின்சியைப் பற்றியோ நமது நாட்டு தலைசிறந்த ஓவியர் ரவிவர்மாவைப் பற்றியோகூட தெரியாத மக்கள் இருப்பார்கள். ஆனால் சார்லி சாப்ளினைப் பற்றியோ, புரூஸ்லியைப் பற்றியோ ராஜ்கபூரைப் பற்றியோ, எம்.ஜி.ஆர் பற்றியோ தெரியாதவர்கள் நிச்சயம் இருக்க மாட்டார்கள். புத்தகங்களைப் படிக்காதவர்கள் இசையை விரும்பிக் கேட்காதவர்கள், ஓவியங்களைப் பற்றி தெரியாதவர்கள், நடனக் கலையை ரசிக்காதவர்கள் இருப்பார்கள். ஆனால் தன்னுடைய வாழ்நாளில் சினிமா பார்க்காதவர்கள் நிச்சயமாக இருக்க மாட்டார்கள்.

    எல்லா காலங்களிலும், எல்லா கலைகளும் மனிதனைப் பற்றிதான் இருந்திருக்கின்றது. எல்லா கலைகளுக்கும் மூலம் மனிதன்தான். எனவே மனிதனுடைய உணர்வுகள், போராட்டங்கள், வெற்றிகள் போன்றவற்றை மையமாக வைத்து எழுதப்பட்ட கதைகள்தான் காலத்திற்கு நிலைத்து நிற்கும்.

    மனிதத்தன்மைகளின் மிக உயர்ந்த உணர்வுகளை சினிமாவில் மட்டுமே காட்ட முடியும். அதுவும் நேரில் பார்க்க முடியாத அளவிற்கு குளோசப்பில் மிகத்தெளிவாகப் பார்க்க முடியும்.

    மேலே குறிப்பிட்ட அளவு சக்தி வாய்ந்த இந்த சினிமா உலகம் இன்றுவரை ஆயிரக்கணக்கான திரைப்படங்களை உருவாக்கியுள்ளது. இந்தப் புத்தகத்தில் 17 மேல்நாட்டுத் திரைப்படங்களைப் பார்த்து அந்த படங்களின் கதை, திரைக்கதை, மையக்கருத்து, படத்தின் மூலம் சொல்லப்படும் செய்தி போன்றவற்றை முடிந்த அளவு எழுதியிருக்கிறேன். இதில் தவறுகள் இருந்து அவற்றைச் சுட்டிக்காட்டினால் மிகவும் மகிழ்ச்சியடைவேன். அடுத்தப் பதிப்பில் அந்தக் குறைகள் திருத்தப்படும்.

    மேலும் இப்புத்தகம் வெளிவர உதவிய எனது மகள் திவ்யாவிற்கும், புத்தகத்தை நல்ல முறையில் அச்சிட்ட தாமரை பப்ளிகேஷனுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி!

    *****

    1. A Perfect Murder

    இது ஒரு முக்கோணக் காதல் விவகாரம். பிறரை நீ எப்படி தீர்க்க நினைக்கிறாயோ, அப்படியே நீயும் தீர்க்கப்படுவாய் என்பதுதான் கதையின் மையக்கரு. அதுதான் இந்தப் படத்தின் செய்தி (message).

    1998-ஆம் ஆண்டு வெளியான இந்த த்ரில்லர் படத்தை Andrew Davis எனும் இயக்குனர் இயக்கினார். Michael Douglas மற்றும் Gyneth Paltrow இப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தார்கள். 1954ஆம் ஆண்டு வெளியான இப்படம், புகழ்பெற்ற இயக்குனர் Alfred Hitchcock இயக்கிய Dial M for Murder என்ற படத்தின் தழுவலால் உருவாக்கப்பட்டது.

    கதை

    தனது மனைவி வேறு ஒருவனுடன் தொடர்பு வைத்துள்ளாள் என்பதை அறிகிறான் கணவன். அதனால் தனது மனைவியின் காதலனிடமே பணத்தை கொடுத்து, அவளை கொலை செய்ய உத்தரவிடுகிறான். ஆனால் சில எதிர்பாராத நிகழ்வுகள் நடப்பதால், இறுதியில் அந்த மனைவிக்கே இந்த கொலை முயற்சி பற்றி தெரிய வருகிறது. இதன் பின் என்ன நடக்கிறது என்பது தான் இப்படத்தின் கதை.

    திரைக்கதை

    ஸ்டீவன் டைலர் (Michael Douglas) என்பவர் ஏழையாக பிறந்து, நிறைய கஷ்டப்பட்டு, முன்னுக்கு வந்தவர். பின்பு ஒரு பெரிய நிதி நிறுவனத்தில், ஒரு நல்ல பதவியில் இருக்கிறார். இவருக்கு ஓர் அழகான மனைவி இருக்கிறது. அவரது பெயர் எமிலி (Gyneth Paltrow). இவருக்கும் அவரது மனைவிக்கும் நிறைய வயது வித்தியாசம். சில மாதங்களாகவே ஸ்டீபன் தனது வேலையால் நிறைய பிரச்சனைகள் மற்றும் கடன்களுக்கு உள்ளாகிறார். தன்னுடைய இந்த வசதிகளை எல்லாம் சமாளிக்க வேண்டும் என்றால், அவரது மனைவியின் சொத்துக்கள் அவருக்கு தேவைப்படுகிறது. அவருடைய மனைவி எமிலி பார்ப்பதற்கு அன்பானவளாக வெளியில் தெரிந்திருந்தாலும், அவர் டேவிட் (Viggo Mortensen) எனும் ஓவியருடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளார். இதனால் எமிலி தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெறும் முயற்சியிலும் இருக்கிறார்.

    இதெல்லாம் தன்னுடைய கணவன் ஸ்டீவனுக்கு தெரியாது என்று எமிலி நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அவளுடைய கணவன் ஸ்டீவனுக்கு எல்லாம் தெரியும். அதோடு அவர் அவளுடைய கள்ளக்காதலன் ஓவியர் டேவிட்டை பற்றி எல்லா விஷயங்களையும் சேகரித்து வைத்திருக்கிறார். ஓவியர் டேவிட் இதற்கு முன்பு சிறிது காலம் சிறையில் இருந்தார் என்பதையும், எமிலிக்கு முன் டேவிட்டிற்கு நிறைய பெண்களுடன் இதேபோல் தொடர்பு வைத்திருந்தார் என்பதையும் டேவிட் கண்டுபிடித்து விடுகிறார்.

    இந்த விஷயங்களை எல்லாம் டேவிட்டிடம் கூறி, அவரிடம் ஒரு வேலையை கொடுக்கிறார். அதாவது தனது மனைவியை டேவிட் கொலை செய்ய வேண்டும். அப்படி கொலை செய்தால் டேவிட்டிற்கு நிறைய பணம் தருவதாகவும் ஸ்டீவன் கூறுகிறார். இதற்காக தாம் ஏற்கெனவே எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டதாகவும் டேவிட்டிடம் ஸ்டீவன் கூறுகிறார்.

    Enjoying the preview?
    Page 1 of 1