Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Swamy Ramatheethar Aathma Anubavam
Swamy Ramatheethar Aathma Anubavam
Swamy Ramatheethar Aathma Anubavam
Ebook113 pages41 minutes

Swamy Ramatheethar Aathma Anubavam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நம் கைகளில் உள்ள ராமதீர்த்தரின் ஆத்ம அனுபவம் என்ற நூல் ஆன்மீக உலகின் ஓர் அடையாளம். ஜகத்ஜோதி, லோக குரு சுவாமி சிவானந்த பரமஹம்சர். அவர்கள் வழியில் வாசியோகம் என்றும் சித்தவித்தை பயிற்சி செய்து ஜீவமோட்சம் அடைய விரும்பும் உலகவாசிகள் அனைவருக்கும், மோட்ச சூத்திரம், ஜீவசரித்திரம் என்றும் போற்றப்படும் ஐந்தாம் வேதம் சித்தவேதம். சிவானந்த பரமஹம்சரின் அருளினால் வெளிபட்டது. அந்த நூல் அரிய பொக்கிஷம்.

Languageதமிழ்
Release dateJul 17, 2021
ISBN6580145707246
Swamy Ramatheethar Aathma Anubavam

Related to Swamy Ramatheethar Aathma Anubavam

Related ebooks

Reviews for Swamy Ramatheethar Aathma Anubavam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Swamy Ramatheethar Aathma Anubavam - Brahmasri Subash

    https://www.pustaka.co.in

    சுவாமி ராமதீர்த்தர் ஆத்ம அனுபவம்

    Swamy Ramatheethar Aathma Anubavam

    Author:

    பிரம்மஶ்ரீ சுபாஸ்

    Brahmasri Subash
    For more books

    https://www.pustaka.co.in/home/author/brahmasri-subash

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ஆத்ம தர்மம்

    பரிபூர்ண அன்பும் தற்சோதனையும்

    சோம்பேறித்தனம் அல்லது தமோகுணம்

    சுயம் ஜோதி

    சமஷ்டி பாவனையும் ஆத்மானுபவமும்

    மதிப்புரை

    ஆத்ம சகோதர, சகோதரிகளுக்கு வணக்கம்,

    நம் கைகளில் உள்ள ராமதீர்த்தரின் ஆத்ம அனுபவம் என்ற நூல் ஆன்மீக உலகின் ஓர் அடையாளம்.

    ஜகத்ஜோதி, லோக குரு சுவாமி சிவானந்த பரமஹம்சர்.

    அவர்கள் வழியில் வாசியோகம் என்றும் சித்தவித்தை பயிற்சி செய்து ஜீவமோட்சம் அடைய விரும்பும் உலகவாசிகள் அனைவருக்கும், மோட்ச சூத்திரம், ஜீவசரித்திரம் என்றும் போற்றப்படும் ஐந்தாம் வேதம் சித்தவேதம். சிவானந்த பரமஹம்சரின் அருளினால் வெளிபட்டது. அந்த நூல் அரிய பொக்கிஷம்.

    ஆத்மவிசாரணை, தத்துவ பெருங்கடல், நான்கு வேதங்களின் சாரம் என்று அதன் பெருமைகளை அடுக்கி அடுக்கிகொண்டே போகலாம். அப்பேர்ப்பட்ட சித்த வித்தை பயிற்சி செய்யும்போது பிரம்மஸ்ரீ சுபாஷ் அவர்களுடைய 30 வருட பழக்கம் எனக்கும் அவருக்கும் தன்னை அறிதலின் எனக்கும் அவருக்கும் ஒரே மனநிலை, இறை நோக்கிய பயணத்தில் அவருடன் நெருங்கி நிறைய பயணம் செய்திருக்கிறேன்.

    அப்போது, ஓர் நாள் சுவாமி ராமதீர்த்தரின் நூல் ஒன்று, தொகுக்க போகிறேன் நீங்கள்தான் மதிப்புரை செய்து, தரவேண்டும் என்று கேட்டுகொண்டார்கள். சுவாமி ராமதீர்த்தரை பற்றி முதலில் சொல்லியாக வேண்டும். அற்புதத்தை விவரிக்க அளவீடு எதற்கு? அற்புதம் அற்புதம் தான் சுவாமி ராமதீர்த்தர் என்றும் மெய்ஞானி ஆன்மீக உலகின் களங்கரை விளக்கம். இந்த நூல் மற்றும் ஒரு ஆத்ம விசாரணைக்கு எடுத்துகாட்டு, சொல்ல இயலாத அத்தனையும் சுவாமி ராமதீர்த்தரின் இறை அனுபவம் இந்த நூல் தொகுத்து மக்களுக்கு கொடுப்பதில் பிரம்மஸ்ரீ சுபாஷ் அவருக்கு இறை நிலையோடு நின்று வாழ்த்தும் இந்த பணி தொடர இறையாற்றல், குரு ஆசி, அருள் கிடைக்க மென்மேலும் வாழ்த்துகிறேன்.

    பிரம்மஸ்ரீ கோதண்டவேலு

    சென்னை சித்த வித்தியார்திகள் அறக்கட்டளை.

    மதிப்புரை

    ஸ்வாமி இராமதீர்த்தரின் ஆத்ம அனுபவங்கள்

    துறவியர் வருவார்கள் போவார்கள். ஆனால் ஆன்மீக ஆகர்ஷனம் கொண்ட ராமதீர்த்த சுவாமி போன்றவர்கள் மனித சமூகத்தின் இக்கட்டான சூழலில் தோன்றி அறியாமை இருளகளற்றி மானுடத்தின் துன்பங்களிலிருந்தும் துயரங்களிலிருந்தும் விடுதலை கொடுத்து, தங்களை நேசிக்கின்ற லட்சோபலட்சம் விசுவாசிகளின் மனத்தில் அவர்கள் பூதஉடல் மறைந்த பின்னரும் ஆட்சி செய்வார்கள்

    - அயோத்திநாத்

    (In Woods of God Realisation VGP III XIX)

    ஆதிசங்கரரின் அத்வைதம் வேதாந்தாவாக மலர்கிறது. அமெரிக்காவை முதன்முதலில் படையெடுத்துச் சென்ற விவேகானந்தர் அனுபவ வேதாந்தமாக (Practical Vedanta) மணம் கமழச் செய்கிறார் தொடர்ந்து சென்ற ஸ்ரீசுவாமி ராமதீர்த்தர், விவேகனாந்தரின் அனுபவத்திற்குச் செயல்வடிவம் கொடுத்து செயல்பாட்டு வேதாந்தமாகக் (Applied Vedanta) கனிய வைக்கிறார்.

    சில வாய்ப்புகள் கையைவிட்டு நழுவிச்செல்லும் போது வேதாந்தத்தில் நம்பிக்கையற்றவன் நம்பிக்கை இழப்பது மட்டுமல்ல, அனைத்துமே அன்றோடு முடிந்துவிட்டது என்ற லௌகீக ஏமாற்றத்தின் உச்சத்திற்குச் செல்கிறான். ஆனால் நம்பிக்கையுள்ளவன், தன்திறமை மீது நம்பிக்கையுள்ளவன், ஏதோ ஒரு நல்ல வாய்ப்பு கடவுள் ஏற்படுத்தித் தர உள்ளார் என் நம்பிக்கை கொள்கிறான். இது ராமனின் அசையாத நம்பிக்கை.

    அவரைப் பொறுத்தவரை ஆன்ம இலக்கு ஒன்று மட்டுமே உறுதியானது, நிலையானது.

    நான் என் குடும்பத்தைக் காப்பாற்ற முடியும் என்ற நிலை வரும்போது நான் பணியிலிருந்து விலகி வேதாந்தத்தைப் பரப்புவதில் என் முழுக்காலத்தையும் செலவு செய்வேன் என் உறுதிகொள்கிறார்.

    அவரைப் பொறுத்தவரை அறிவு என்பது மாயை அகற்றித் தெரிந்ததலிருந்து தெரியாததை நோக்கிச் செல்லும் குறிக்கோள் உடையது.

    உண்மையான ஊதியம் ஆன்மீகத் தொண்டில் கிடைக்கும் அனுபவமே என்பார்.

    ஆன்மா என்பது எந்த ஒரு தடைக்கும் கட்டுப்பட்டதில்லையெனினும் கூட மேம்படுத்தும் பொருட்டு அத்வைத வேதாந்தத்தின் நெறிமுறைகள் அறவழி ஒழுகுதலையும், வேதங்களைக் கற்றுணர்வதையும் வலியுறுத்துகின்றது. ஆன்மா மாற்றத்திற் உட்படுத்த முடியாதது என்றுரைப்பினும், வாழ்வியல் நெறியில் ஆன்மா சுத்தி செய்வதற்கும் மெய்யுணர்வு பெறுவதற்கும் இவை தேவையென்றே உணரலாம். இராமதீர்த்தகரைப் பொறுத்தவரை ஆன்மீகத் தேடல் என்பது உலகத்தோடு ஒத்த ஒன்றாகவே அனைத்து மானிடர்களிலும் உள்ளதாகக் கருதுகிறார்.

    இந்த புதிய அத்வைத வேதாந்தத்தை 1902 - 1904 வரை அமெரிக்கர்களிடம் பரப்பினார்.

    ஜப்பானில் தொடங்கிய அவரது ஆன்மீக உரை வெற்றியின் ரகசியம். தொடர்ந்து அமெரிக்காவில் 12,000 மைல்தூரம் பயணம் செய்து சான்பிரான்ஸிஸ் கோவில் தொடங்கி 1904 அக்டோபர் 3ல் நியூயார்க துறைமுகத்திலிருந்து புறப்பட்டு இடையில் எகிப்தின் போர்ட்செட்டில் உரையாற்றுகிறார். சுமார் 60 தலைப்புகளில் அவர் ஆற்றிய பேரூரைகள் அத்வைத செயல்பாட்டு வேதாந்தத்தின் வைரச்சுரங்கம்.

    தன்னிலே இறைவனைக் காணவேண்டும் என்பது சுவாமி ராமதீர்த்தரின் அசையாத கொள்கை.

    பிரம்மயாகம் செய்து ஆத்ம ஞானத்தை அடைந்தவன் விடுதலை பெறுகிறான். அதுதான் உள்ளுரை ஆன்மாவின் அரசபீடம் அப்படிப்பட்ட ஒருவர் ஞானம் என்னும் தீயில் அனைத்துப் புலன்களையும் லௌகீக விருப்புகள், தான் தனது என்ற கோட்பாடுகள், பேரார்வம், சுற்றம், கேள்விகள், வடிவங்களும், பெயர்களும் மற்றும் இதைப்போன்ற அனைத்தையும் எரித்துவிடுகின்றான். இவைகள் எல்லாம் எரியூட்டப்பட்டு ஒன்றிணைந்து வரும் வாசமானது நீயே அது என்றும் கருவறையில் மிளிர வேண்டும். In woods of God realisation Vol.2

    இப்படிப்பட்ட ஆன்ம ஒளியை விளக்கும் ஆத்மதர்மம், பரிபூர்ண அன்பும்

    Enjoying the preview?
    Page 1 of 1