Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aanmeega Muthukal
Aanmeega Muthukal
Aanmeega Muthukal
Ebook343 pages2 hours

Aanmeega Muthukal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஆன்மிகம் என்பது என்ன?

“ஒவ்வொரு மானிட நிகழ்வின் தெய்வீக அர்த்தத்தில் ஒவ்வொரு விழுமிய செயல் - எண்ணத்தின் உள்ளார்ந்த புனிதத்தின் மனப்பான்மையை 'ஆன்மிகம்' என நாம் பொருள் கொள்கின்றோம்; உலகாயத பயன்களைப் பொருட்படுத்தாது ஒவ்வொரு கடமையையும் நுட்பமான அறிவுடன் செம்மையாகச் செய்வதும், அனைத்திலும் உறுதியாக உள்ள ஒற்றுமை அம்சத்தை அறிவதும் ஆன்மிகம் ஆகும்” என்பது மகாகவி சுப்பிரமணிய பாரதியார் வழங்கியுள்ள தத்துவ வாக்காகும்.

‘ஆன்மிகம்' இது நாடு கடந்து, மதம், இனம், மொழி இவற்றைக் கடந்து உலகெங்கும் வியாபித்திருக்கிறது. ஒவ்வொரு மதமும் (எண்ணிக்கை 100ஐத் தாண்டும் என்கிறது ஒரு புள்ளி விவரம்) ஒவ்வொரு தெய்வத்தை அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட தெய்வங்களை அல்லது உருவமற்ற ஒன்றை வழிபாடு செய்து மனநிறைவு பெறுவதோடு, மேன்மைகளையும் பெற்று வருகிறது. ஆனால் அனைத்து மதங்களும் ஒன்றே போல் வற்புறுத்துவது இதைத்தான். 'தன் ஆணவத்தை நீக்கி மனித நேயம் பூண்டு பிற உயிர்களிடம் அன்பு செலுத்து' என்பதைத்தான். இக்கொள்கையில்லாத மதம் ஏதுமில்லை!

நம்முடைய இந்து மதத்தைப் பொறுத்தவரை ஒன்றுக்கு மேற்பட்ட தெய்வங்களை வழிபடுகின்றோம். அந்தந்த இறைவன் எடுத்த அவதாரங்கள், பிற கடவுள்கள் ஆகியவர்களைச் சுற்றி தொன்று தொட்டு கூறப்படும் புராண, இதிகாச, வரலாற்றுக் கதைகள், சம்பவங்களை நாம் வழிபடுவதை ஏற்றுக் கொண்டு நம்பி, நம் வழிபாடுகளை முன்னோர்கள் வகுத்துள்ள முறைகளில் இன்றுவரை பக்திபூர்வமாக செய்து வருகிறோம். பழமை பொருந்திய அர்த்தமுள்ள இந்துமதம் குறித்தான ஆயிரக்கணக்கான அரிய விஷயங்களை இன்றைய தலைமுறையினர் பலர் அறியாமல் இருப்பதற்குக் காரணம் - அதனை சரிவர எடுத்துச் சொல்லும் உறவு நட்பு வட்டங்கள் இல்லாமல் போனதுதான்!

இன்றைய பரபரப்பு வாழ்க்கையில் இந்து மதம் குறித்து கேட்டுக் கொள்ள இளம் தலைமுறையினருக்கு நேரம் இருப்பதில்லை. அதுதவிர அவற்றை அவர்களுக்கு எடுத்துச் சொல்லும் இல்லப் பெரியோர் சூழ்நிலைகள் காரணமாக கூட்டுக் குடும்ப முறையை விட்டு விலகி தனித்தோ அல்லது முதியோர் இல்லங்களிலோ வாழும் நிர்ப்பந்தம் ஏற்பட்டு விடுகிறது.

அதனால் வீட்டு சிறுவர், சிறுமிகளுக்கு நம் மதம் கொண்ட சிறப்பு, தெய்வ, ஆகம விஷயங்கள், பண்டிகை முறைகள், நல்ல புண்ணிய திதிகள், ஆலயக் கட்டமைப்பு, சிற்ப விஷயங்கள், கோவில்கள் கொண்டுள்ள புராண, வரலாற்றுப் பின்னணிகள் போன்றவற்றை அறியும் வாய்ப்பு அடியோடு நழுவி விடும் நிலை உருவாகி விட்டது. இருந்தாலும் அந்நிலை ஓரளவு நீங்கும் விதமாக ஆலயங்கள், பொது இடங்களில் ஆன்மீகப் பெரியவர்கள் ஆற்றும் சொற்பொழிவுகள், நூல்கள், பத்திரிகைகள், தொலைக்காட்சி சேனல்கள், கணினி கருவிகள் இவைகள் மூலமாக தெய்வீகத்தலங்கள் பொது மக்களை அடைந்துதான் வருகின்றன.

இந்த அடிப்படையிலேயே, எனக்குத் தெரிந்த, யான் கற்ற பல ஆன்மீகத் தகவல்களை, நூல் படிப்போரின் மனதில் பட, இந்த முறையில் கூறினால் ஏற்புடையதாக அமையும் என்ற எண்ணத்தில் இந்நூலை எழுதியிருக்கின்றேன்.

'ஆன்மிக முத்துக்கள் அறுநூறு' என்ற இந்த தொகுப்பு நூல் வாசகர்களால் வரவேற்கப்பட நான், போற்றி வணங்கும் வயலூர் முருகன், ஷீர்டி பாபா, காஞ்சி மகாப் பெரியவாள் ஆகியோர்களின் ஆசிகளை வேண்டுகின்றேன்.

இனி நீங்கள் நூலைத் தொடர்ந்து படிக்க அன்புடன் வழிவிடுகின்றேன்.

- ஆரூர் ஆர்.சுப்பிரமணியன்

Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580141206523
Aanmeega Muthukal

Read more from Aroor R. Subramanian

Related to Aanmeega Muthukal

Related ebooks

Reviews for Aanmeega Muthukal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aanmeega Muthukal - Aroor R. Subramanian

    http://www.pustaka.co.in

    ஆன்மீக முத்துக்கள்

    Aanmeega Muthukal

    Author :

    ஆருர் ஆர். சுப்பிரமணியன்

    Aroor R. Subramanian

    For more books

    https://www.pustaka.co.in/home/author/aroor-r-subramanian

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    சமர்ப்பணம்

    முன்னுரை

    அணிந்துரை

    என்னுரை

    ஆன்மீக முத்துக்கள்

    சமர்ப்பணம்

    எங்கள் அன்புக்குரிய பாசப் பறவைகளான பேரன்கள் – பேத்திகள்.

    செல்விகள்

    ஆர். சாய்நந்தினி

    பி. ஸ்ருதி

    பி. ஸ்ம்ருதி

    செல்வன்கள்

    எஸ். பத்ரி நாராயண்

    ஆர். வைத்தியநாதஸ்வாமி

    எஸ். சரபேஷ்வரர்

    ஆகியோருக்கு நல்லாசிகள் கூறி காணிக்கையாக்குகிறேன்.

    முன்னுரை

    சொல்லருவி மு. முத்துசீனிவாசன்

    தலைவர், புதுக்கோட்டை இலக்கியப் பேரவை.

    ஜி.4, மீனாட்சி பிளாட்ஸ்

    ஸ்டேட் பாங்க் காலனி விரிவு

    முதல் குறுக்குத் தெரு,

    நங்கநல்லூர்,

    சென்னை - 600 061.

    செல்: 9443041103

    இறைவன் படைப்பில் மனித வாழ்க்கை மகத்தானது. அன்பு, பாசம், உறவு, நெறிமுறைகள் என பல வரையறைக்கு உட்பட்டு, பண்புடன் வாழும் வாழ்க்கை மனிதர்களுக்கே உரியது.

    இப்படிப்பட்ட மனித வாழ்க்கை இன்றைய பரபரப்பான உலகத்தில், மிக வேகமாகப் போய்க் கொண்டிருக்கிறது. வேகத்தினிடையே அன்பு, பாசம், நெறிமுறைகள், உறவு என்பன போன்றவைகள்கூட தள்ளி வைக்கப்படுகின்றன. சில நேரங்களில் கவனிப்பாரற்றும் போய் விடுகின்றன.

    பொருளீட்டுவது மட்டுமே வாழ்க்கை, பொருளை வைத்து அனைத்தையும் வாங்கிவிட முடியும் என்று எண்ணுகின்ற மனோபாவம் மனித சமுதாயத்திற்கு வந்துவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகின்ற வகையில் மனித வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது.

    எதிலும் அவசரம், தேவையற்ற வேகம், அதனால் ‘டென்ஷன்’ என ஓடும் வாழ்க்கையை, சாந்தப்படுத்தி, ஒருநிலைப்படுத்தி, இறைவழிபாட்டுடன் நல்வழிப்படுத்துவதே ஆன்மீகம் எனலாம். எனவே, ஆன்மீக நெறிமுறைகள் மனிதனைப் பண்படுத்துகின்றன. நல்வழிகளில் செல்ல உறுதுணை புரிகின்றன. புரிதலுடன் வாழ்க்கையை வாழ வழிகோலுகின்றன.

    இத்தகைய காலக்கட்டத்தில், மனிதர்களிடம் இறை வழிபாடு மிகவும் வளர்ந்து இருக்கின்றது. அவரவர்கள் அவர்களுக்குத் தோன்றிய வண்ணம் வழிபடுகின்றனர். செயல்படுகின்றனர். அவர்கள் மனதில் ஆன்மீகம் பற்றிய ஆயிரம் சந்தேகங்கள் கேள்விகளாக உருவெடுத்து உள்ளன. அவர்களது சந்தேகங்களுக்கு உரிய விடையளித்து, நிவர்த்தி செய்வது யார்?

    நம்மிடையே எத்தனையோ மகான்கள் தோன்றியுள்ளனர். அருளுரைகள் அளித்துள்ளனர். பல நூல்களும் வெளிவந்து உள்ளன. இருந்தாலும்கூட பாமரர்களுக்கும் சென்றடையும் வண்ணம் நெறிமுறைகள், விளக்கங்கள் முழுமையாகச் சென்றடைந்திருக்கின்றவா என்றால் இல்லை என்றே கூறலாம்.

    குறிப்பாக, மகளிரிடையே பக்தி பிரவாகமெடுத்து ஓடுகிறது. ஒவ்வொரு செயலுக்கும் பொருள் புரிந்து செய்கிறார்கள் என்று கூறிவிட முடியாது. வீட்டிலிருக்கும் பெரியவர்கள் சொல்லி வைத்தபடி, செவிவழி கேள்விப்பட்டபடி, ஆன்மீக வழிபாட்டு முறைகளைச் செய்து வருகின்றனர்.

    எனவே, ஆன்மீக வழி செல்லும் அன்பர்களுக்கு ஒரு வழிகாட்டி நூல் போல் ஒன்று இருந்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று சிந்தித்ததின் விளைவுதான் ஆன்மீக முத்துக்கள் (அறுநூறு) என்ற அற்புதமான இந்த நூல்.

    மக்களுக்கு எளிதில் புரியும் வண்ணம், பலர் மனதிலே எழுந்து நிற்கும் கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில், அறுநூறு கேள்விகளைக் கேட்டு, ஆதாரப்பூர்மான விளக்கங்களை பதிலாகத் தந்துள்ளார் திரு. ஆரூர் ஆர். சுப்பிரமணியன் அவர்கள்.

    ஆரூர் ஆர். சுப்பிரமணியன் அவர்கள் ஒரு அற்புதமான எழுத்தாளர், ஆன்மீக நெறிமுறைகளை அறிந்தவர். காஞ்சிப் பெரியவரால் ஆசீர்வதிக்கப்பட்டவர். பல நூல்களை எழுதியவர். தமிழக அரசின் வருவாய்த்துறையில் உயர் பதவி வகித்து ஓய்வு பெற்றவர். பணியாற்றும்போது நேர்மையைக் கடைப்பிடித்தவர். கறைபடியாத கரங்களுக்குச் சொந்தக்காரர். உறவுகளை மதிக்கும் உத்தமர்.

    அவரே மனித சமுதாயத்திற்கு இறைவன் அளித்த அருட்கொடை. அப்படியிருக்க ஆன்மீக முத்துக்கள் (அறுநூறு) மனித சமுதாயத்திற்கு அவர் அளித்திருக்கும் அருட்கொடை என்றே கூறலாம்.

    அறுநூறு முத்துக்களில் எல்லாமே சுவையானவை. இதில் எதைக் கூறுவது? எதை விடுவது? இருந்தாலும் இவ்வணிந்துரையின் முதலில் நான் குறிப்பிட்டுள்ள மனஅமைதிக்கு விடையளிக்கிறார் ஆசிரியர்.

    மனஅமைதி பெற வழியுள்ளதா?

    ‘நிலையில்லாததும், சுகமற்றதுமான இப்பூவுலக வாழ்க்கையில், நீ அமைதி பெற என்னைப் பூஜிப்பாயாக’ (‘அதித்யமஸீகம் லோகமிமம் ப்ரால்ய பஜாஸ்து மாம்’ - கீதை) இறை பூஜை என்றுமே மனிதனுக்கு நிம்மதியை அளிக்கும்.

    இந்த நூல் அருமையாக அமைந்துள்ளது. ஆன்மீக நெஞ்சங்களுக்கு இந்நூல் ஒரு அருமருந்தாகும். ஆன்மீக உலகுக்கு ஒரு விளக்க வழிகாட்டியாகும்.

    ஆரூராரின் அரும்பணியைப் பாராட்டுகிறேன். இதுபோல அவர் எண்ணற்ற நூல்களைப் படைத்து மனித சமுதாயம் மேம்பட, பாடுபட வேண்டுமென்று என் விருப்பத்தைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

    இந்நூலை அனைவரும் வாங்கிப் பயன் அடையுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

    (சொல்லருவி மு. முத்துசீனிவாசன்)

    அணிந்துரை

    முனைவர் சோ. அய்யர் இ.ஆ.ப.(ஓ)

    தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையாளர்.

    208/2, ஜவஹர்லால் நேரு சாலை,

    அரும்பாக்கம்

    சென்னை - 600 106.

    அருமை நண்பர் திரு. ஆர் சுப்பிரமணியன் அவர்களின் ஆன்மீக முத்துக்கள் அறுநூறு எனும் நூல் அனைவருக்கும் பயன்படும் அளவில் சீரிய ஆன்மீக கருத்துக்களை உள்ளடக்கிய புத்தகமாக வெளிவருவது மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒன்றாகும். இந்நூலில் ஆன்மீகம் தொடர்புடைய அறுநூறு கேள்விகள் தொகுக்கப்பட்டு மிக நேர்த்தியான முறையில் அவற்றிற்கு பதில் அளித்துள்ளது பாராட்டத்தக்கதாகும். திரு. ஆர். சுப்பிரமணியன் அரசு அலுவலராக பல நிலைகளில் பல்வேறு பணிகளை செம்மையாக செய்து வந்துள்ள நிலையில் அவர் திறமையான எழுத்தார்வத்துடன் ஆன்மீகம் கலந்த இலக்கிய ஆர்வமும் கொண்டவராக திகழ்ந்ததால் பயனுள்ள ஆன்மீக முத்துக்கள் அறுநூறு எனும் இந்நூலினை அனைவரும் பயன்பெறும் வகையில் நமக்கு அளித்துள்ளார்.

    பகவான் ஸ்ரீரமண மகரிஷி அவர்கள் வேதங்கள் அறிவுச் செல்வம், மற்றவர்களுக்கு எழுகின்ற சந்தேகங்கள், சங்கடங்களுக்கு விளக்கம் தருபவை, சந்தேகம் வந்தாலும் வேதங்களில் விளக்கங்கள் அடங்கியிருக்கின்றன என தெளிவுரை அளித்துள்ளார். அதற்கேற்ப ஆன்மீகம் தொடர்புடைய ஒவ்வொருவருக்கும் எழக்கூடிய சந்தேகங்களை அறுநூறு வினாக்களின் கீழ் மிக அழகாக விளக்கியுள்ளது பாராட்டுக்குரியதாகும். விடையளிப்பதில் புதிய உத்தியாக தொடர்புடைய பல்வேறு வரலாறுகள், கதைகள் மூலம் ஆங்காங்கே விளக்கியிருப்பது வாசகர்கள் மிகவும் தெளிவும், தேர்ந்தநிலையும் பெற்றிட பெரிதும் உதவும்.

    சிறப்புக்குரிய வகையில் நமது பண்பாட்டை பறைசாற்றும் வகையில் இந்நூல் அமைந்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. அனைவரும் இந்நூலால் பயன்மிகுதி பெறலாம் என்பது என் அவா! வாழ்த்துக்கள்!

    (சோ. அய்யர்)

    என்னுரை

    ஆன்மிகம் என்பது என்ன?

    ஒவ்வொரு மானிட நிகழ்வின் தெய்வீக அர்த்தத்தில் ஒவ்வொரு விழுமிய செயல் - எண்ணத்தின் உள்ளார்ந்த புனிதத்தின் மனப்பான்மையை ‘ஆன்மிகம்’ என நாம் பொருள் கொள்கின்றோம்; உலகாயத பயன்களைப் பொருட்படுத்தாது ஒவ்வொரு கடமையையும் நுட்பமான அறிவுடன் செம்மையாகச் செய்வதும், அனைத்திலும் உறுதியாக உள்ள ஒற்றுமை அம்சத்தை அறிவதும் ஆன்மிகம் ஆகும் என்பது மகாகவி சுப்பிரமணிய பாரதியார் வழங்கியுள்ள தத்துவ வாக்காகும்.

    ‘ஆன்மிகம்’ இது நாடு கடந்து, மதம், இனம், மொழி இவற்றைக் கடந்து உலகெங்கும் வியாபித்திருக்கிறது. ஒவ்வொரு மதமும் (எண்ணிக்கை 100ஐத் தாண்டும் என்கிறது ஒரு புள்ளி விவரம்) ஒவ்வொரு தெய்வத்தை அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட தெய்வங்களை அல்லது உருவமற்ற ஒன்றை வழிபாடு செய்து மனநிறைவு பெறுவதோடு, மேன்மைகளையும் பெற்று வருகிறது. ஆனால் அனைத்து மதங்களும் ஒன்றே போல் வற்புறுத்துவது இதைத்தான். ‘தன் ஆணவத்தை நீக்கி மனித நேயம் பூண்டு பிற உயிர்களிடம் அன்பு செலுத்து’ என்பதைத்தான். இக்கொள்கையில்லாத மதம் ஏதுமில்லை!

    நம்முடைய இந்து மதத்தைப் பொறுத்தவரை ஒன்றுக்கு மேற்பட்ட தெய்வங்களை வழிபடுகின்றோம். அந்தந்த இறைவன் எடுத்த அவதாரங்கள், பிற கடவுள்கள் ஆகியவர்களைச் சுற்றி தொன்று தொட்டு கூறப்படும் புராண, இதிகாச, வரலாற்றுக் கதைகள், சம்பவங்களை நாம் வழிபடுவதை ஏற்றுக் கொண்டு நம்பி, நம் வழிபாடுகளை முன்னோர்கள் வகுத்துள்ள முறைகளில் இன்றுவரை பக்திபூர்வமாக செய்து வருகிறோம். பழமை பொருந்திய அர்த்தமுள்ள இந்துமதம் குறித்தான ஆயிரக்கணக்கான அரிய விஷயங்களை இன்றைய தலைமுறையினர் பலர் அறியாமல் இருப்பதற்குக் காரணம் - அதனை சரிவர எடுத்துச் சொல்லும் உறவு நட்பு வட்டங்கள் இல்லாமல் போனதுதான்!

    இன்றைய பரபரப்பு வாழ்க்கையில் இந்து மதம் குறித்து கேட்டுக்கொள்ள இளம் தலைமுறையினருக்கு நேரம் இருப்பதில்லை. அதுதவிர அவற்றை அவர்களுக்கு எடுத்துச் சொல்லும் இல்லப் பெரியோர் சூழ்நிலைகள் காரணமாக கூட்டுக் குடும்ப முறையை விட்டு விலகி தனித்தோ அல்லது முதியோர் இல்லங்களிலோ வாழும் நிர்ப்பந்தம் ஏற்பட்டு விடுகிறது.

    அதனால் வீட்டு சிறுவர், சிறுமிகளுக்கு நம் மதம் கொண்ட சிறப்பு, தெய்வ, ஆகம விஷயங்கள், பண்டிகை முறைகள், நல்ல புண்ணிய திதிகள், ஆலயக் கட்டமைப்பு, சிற்ப விஷயங்கள், கோவில்கள் கொண்டுள்ள புராண, வரலாற்றுப் பின்னணிகள் போன்றவற்றை அறியும் வாய்ப்பு அடியோடு நழுவிவிடும் நிலை உருவாகி விட்டது. இருந்தாலும் அந்நிலை ஓரளவு நீங்கும் விதமாக ஆலயங்கள், பொது இடங்களில் ஆன்மீகப் பெரியவர்கள் ஆற்றும் சொற்பொழிவுகள், நூல்கள், பத்திரிகைகள், தொலைக்காட்சி சேனல்கள், கணினி கருவிகள் இவைகள் மூலமாக தெய்வீகத்தலங்கள் பொதுமக்களை அடைந்துதான் வருகின்றன.

    இந்த அடிப்படையிலேயே, எனக்குத் தெரிந்த, யான் கற்ற பல ஆன்மீகத் தகவல்களை, நூல் படிப்போரின் மனதில் பட, இந்த முறையில் கூறினால் ஏற்புடையதாக அமையும் என்ற எண்ணத்தில் இந்நூலை எழுதியிருக்கின்றேன்.

    ‘ஆன்மிக முத்துக்கள் அறுநூறு’ என்ற இந்த தொகுப்பு நூல் வாசகர்களால் வரவேற்கப்பட நான், போற்றி வணங்கும் வயலூர் முருகன், ஷீர்டி பாபா, காஞ்சி மகாப் பெரியவாள் ஆகியோர்களின் ஆசிகளை வேண்டுகின்றேன்.

    இந்த நூல் வெளிவர முக்கிய காரண கர்த்தாக்களாக விளங்கும் எனது கெழுதகைய நண்பர்களாக பழம்பெரும் எழுத்தாளர் தீபம் திருமலை அவர்களும், எழுத்தாளர்களை ஏற்றிவிடும் ஏணியென அழைக்கப்படும் குழந்தை இலக்கியச் செல்வர் திரு.பி. வெங்கட்ராமன் (உள்ளகரம்) அவர்களும், என் நெஞ்சில் நீங்கா இடம் பெறுகிறார்கள்.

    நான் எழுத்துப் பாதையில் இன்று நடை போட முன்னோடிகளாக விளங்கும் எனது மூத்த தமையனார்கள் திருவாளர்கள் ஆர். சுந்தரம், (துணை கலெக்டர் - ஓய்வு), ஆர். நாராயணன் (லேபர் ஆபிசர் - ஓய்வு) ஆகியோர் என் வணக்கத்துக்கு உரியவராகிறார்கள்.

    ஆன்மிக நூல்கள் படைக்க என் எழுத்தாள மனைவி திருமதி. கீதா சுப்பிரமணியன் என்னை மேன்மேலும் நூற்கள் எழுத உற்சாகப்படுத்தி வரும் என் பிள்ளைகள் - மருமகள்களான திருவாளர்கள் ரவிச்சந்திரன் - ப்ரியா, சாய்சந்திரன் - லலிதா, பாலச்சந்தர் - தீபா ஆகியோர்களை மகிழ்ச்சியோடு இங்கே குறிப்பிட விரும்புகின்றேன்.

    இந்த ஆன்மீக நூலுக்கு அணிந்துரை அளித்துள்ள சொல்லருவி திரு.முத்து சீனிவாசன் அவர்கள் ஆண்டுதோறும் தான் தலைவராக பணிபுரியும் புதுக்கோட்டை இலக்கியப் பேரவை மூலம் பல்வேறு துறைகளைச் சார்ந்த அறிஞர்கள், சாதனையாளர்களுக்கு கடந்த 12 ஆண்டுகளாக வருடந்தோறும் விழா எடுத்து, அவர்களைப் பாராட்டி விருதுகள், மெடல்கள், நினைவுப் பரிசு இவைகளைத் தந்து சிறப்பு செய்வதுடன், அவர்களுடைய சுருக்கமான வாழ்க்கை வரலாற்றை வெளிப்படுத்தும் சிறப்பு மலரையும் வெளியிட்டு கௌரவப்படுத்தி வருகிறார். அதுபோன்ற சிறப்பை அந்த இனிய நண்பர் எனக்கும் ‘ஆன்மீக அறிவொளி’ என்ற விருதை அளித்துள்ளார். இந்த எல்லாவற்றுக்கும் என் இதய பூர்வ நன்றிகள்.

    அடுத்து, எனக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் நூலுக்கு சிறப்புரை வழங்கி வாழ்த்தியுள்ள முனைவர். திரு. சோ. அய்யர், ஐ.ஏ.எஸ். அவர்கள் (தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர்) எனது பணிகாலத்திலும், வாழ்க்கையிலும், எழுத்துப்பணியிலும் பல்லாண்டு காலமாக அன்பும், அக்கறையும் காட்டி, சிறந்த வழிகாட்டியாகத் திகழ்ந்து வருவது என் பெரும் பாக்கியம். பல்வேறு அலுவல்களுக்கிடையே நூலுக்கு வாழ்த்து வழங்கியுள்ளதற்காக என் நெஞ்சார்ந்த நன்றிகளை அந்தப் பெருந்தகைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

    இனி நீங்கள் நூலைத் தொடர்ந்து படிக்க அன்புடன் வழிவிடுகின்றேன்.

    ஆரூர் ஆர். சுப்பிரமணியன்

    துணை கலெக்டர் – ஓய்வு

    செல்: 9500142572

    A1 - நாராயணி

    பிரதோஷ் அப்பார்ட்மெண்ட்

    (பிளாட் எண். 10A)1/356, கார்த்திகேயபுரம்

    முதல் குறுக்குத் தெரு,

    மடிப்பாக்கம், சென்னை - 91.

    ஆன்மீக முத்துக்கள்

    (கேள்வி – பதில்)

    1. நாளிகேராம்ர - கதளீ குட பாயச - தாரிணம் சரத் சந்த்ராம் - வபூஷம் பஜே பக்த காணதிபம் என்ற கணபதி சுலோகத்தின் பொருள் என்ன?

    தேங்காய், மாம்பழம், வாழைப்பழம், வெல்லத்தால் ஆன பாயசம் நிரம்பப் பெற்ற பாத்திரம் இவைகளை தம்முடைய பொற்கரங்களில் வைத்துள்ளவரும், சரத் காலத்தில் உதிக்கும் பூரணசந்திரனைப் போன்ற அழகு மேனியை கொண்டவருமான பக்தி கணபதியே உன்னை யான் வணங்குகின்றேன் என்று அந்த சுலோகத்துக்குப் பொருள்.

    2. அஷ்ட புஷ்பங்கள் எவை?

    புன்னை, வெள்ளெருக்கு, சண்பகம், நந்தியாவட்டை, பாதிரி, நீலோற்பலம், அலரி, செந்தாமரை ஆகிய எண்வகை பூக்கள்தான்.

    3. நமது அடிமனம் எத்தகையது?

    "நமது கட்டுப்பாட்டில் இருப்பதாக நாம் நினைக்கும் புறமனமும், நமக்கு எட்டாத அகமனமும் ஒன்றுதான்!

    புறமனத்தின் எல்லை மிகச் சிறிய ஒன்றே; ஆனால் அகமனம் கொண்டதோ மிகப்பெரிய எல்லை கொண்ட சக்தி. இரண்டுமே இடையறாத தொடர்ச்சி கொண்டவைதான்!

    கடலின் அடித்தளம்போல் சலனமின்றி கிடக்கும் அடிமனம் எல்லையில்லா பரம்பொருளான ஞான பரிபூரணத்தோடு தொடர்பு கொண்டேயிருக்கும் தன்மை படைத்தது. ஞானசக்தி, கிரியாசக்தி என்ற பேராற்றல்களுடன், அறிவு, செயல் இவற்றின் மூலக் களஞ்சியத்தோடு தொடர்பு பெற்றே அது இயங்கும்" என்பார்கள் தவயோகிகள்.

    4. ‘சைலத்’ எனும் பொய்ச் சண்டை ஒரு ஆலய விழாவில் இடம் பெறுமாமே?

    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி பத்திரக் காளியம்மன் திருக்கோயில் விழாவில் இருவர் கலந்து கொண்டு, ஒருவரையொருவர் பொய்யாக அடித்து, குத்தி சண்டையிடுவது பொதுமக்கள் கண்டு மகிழும் சம்பவமாக ஆண்டுதோறும் இடம் பெறும்.

    5. விநாயகரின் வாகனமான மூஞ்சுறு கொண்ட சிறப்பென்ன?

    உலகிலுள்ள பால் குடிக்கும் பிராணிகளில் மிகச் சிறியது மூஞ்சுறு.

    மூஞ்சுறு வடிவத்தில் அக்னி பகவான் இருந்தாராம்.

    ஒரு சமயம் அக்னி பூமிக்கு அடியில் மறைய நேர, பரமசிவன் அதைத் தேடிக்கொண்டு வந்து கணபதிக்கு அளிக்கவே, அதுவே அக்னி வடிவ மூஞ்சூறு வாகனமானது என்பதை தைத்திரிய பிரமாண நூல் கூறுகிறது.

    அக்னி சக்தியைக் கட்டுப்படுத்தும் மகாசக்தியாக பிள்ளையார் திகழ்கிறார்!

    6. நம் மனம் செம்மையானால் என்ன பலன்கள் கிட்டும்?

    மனம் செம்மையாக மந்திர உச்சாடனம் தேவையற்றது; வாயுவை அடக்க வேண்டாம்; வாசியை உயர்த்த வேண்டாம்; மனம் செம்மையாக, மந்திரமும், செம்மையாகும் என்று சிவவாக்கியர் அருளுவார்.

    ‘தூய்மையான மனமே உயர்ந்த மந்திர சக்தி’ கொண்டது என்பார் ஞானசம்பந்தர் தன் பாடல் ஒன்றில்.

    7. ‘ராஜ சியாமளா’ என்ற தெய்வம் எவ்வூரில் குடி கொண்டுள்ளது?

    கல்விக் கடவுள் சரஸ்வதிதேவியின் மறுபெயரே இது.

    ராஜ சியாமளா என்ற திருப்பெயருடன், காஞ்சிபுரம் காமாட்சி ஆலய பிரகாரத்தில் அதிசயமாய் எட்டுத் திருக்கரங்களுடன் தனி சன்னிதியில் அந்த கலைமகள் தரும் தரிசனம் அற்புதம்!

    8. ஆலயக் கருவறைகள் எதிரே எந்தெந்த தெய்வத்திற்கு எந்த வாகனம் அமைக்கப்பட வேண்டும்?

    சிவபிரான் எதிரில் நந்தி

    அம்மாள் முன்பு சிங்கம்

    விநாயகர் எதிரே முஷிகம்

    திருமாலுக்கு முன்பாக கருடன்

    முருகவேலுக்கு எதிரே மயில்.

    சில ஆலயங்களில் விதிவிலக்கு உண்டு.

    9. சிரஞ்சீவி என்று யார் யாரை அழைக்கிறார்கள்?

    ஆஞ்சநேயர், விபீஷணன், அசுவாத்தாமர், வியாசர், மகாபலி, கிருபர், பரசுராமர் ஆகிய இந்த எழுவரே ‘உலக சிரஞ்சீவிகள்’.

    10. யாகங்களில் பயன்படுத்தப்படும் ஸமித்துக்கள் எந்த மரங்களிலிருந்து எடுக்கப்படுகின்றன?

    வில்வம், ஆல், வன்னி, கருங்காலி, மா, முருங்கை, அத்தி, பலாசு, சந்தனம், வேங்கை, அரசு, வாகை ஆகிய வகைகளான குறிப்பிட்ட மரங்களிலிருந்து எடுக்கப்படுபவையே ஸமித்துகள்.

    11. பகவான் நாமத்தை உச்சரித்தால் புண்ணியம்தான்; அந்த புண்ணியம், தலத்தின் பெயரை உச்சரித்தால் கிடைக்குமா?

    இந்தக் கதையைப் படித்தால் அதற்கான விடை கிடைக்கும்.

    காவிரி டெல்டாப் பிரதேசங்களில் தென்னை, வாழை சிறப்பாக விளையும். நதிக்கரையோரம் உள்ள தென்னை மரத்திலிருந்து அடிக்கடி காய்கள் விழுவதால், காவிரி நீர் சுவையாகிவிடும். அத்தண்ணீர் பாய்ச்சலால் விளையும் நெற்கதிர்களும் சுவையான அரிசியைத் தரவல்லது. எனவே ஒரு வெளியூர் அரிசி வியாபாரி வேறு இடத்தில் விளைந்த தான் விற்கும் அரிசியை வண்டியில் ஏற்றி ஸ்ரீரங்கம் டெல்டா பகுதியில் விளைந்த அரிசியாக இது இருப்பதாக காட்ட திருவரங்கம் அமுதுபடி வாங்கலியோ! எனக் கூவி விற்று வாழ்ந்து வந்தான். அவ்வூர் பெயர் சொல்லிவிட்டதால் அரிசியின் தரம் அருமையாக இருக்கும் என்று பலபேர் போட்டிப் போட்டுக் கொண்டு அந்த அரிசியை வாங்கவே, அந்த வியாபாரி பெரிய செல்வந்தனானான்.

    ஒருநாள் அந்த வியாபாரி இறந்து விட்டான். அவன் திருவரங்கத்தில் தயாராகாத அரிசியை பொய் சொல்லி விற்றதால், அவனை நரகத்திற்கு யமகிங்கரர்கள் அழைத்துச் சென்றனர். ஆனால் அவர்கள் எதிரே வந்து குறுக்கிட்ட நாராயண தூதர்கள் இந்த பரமபக்தன் ஸ்ரீவைகுண்டம் புக தகுதியானவன்; அவனை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனச் சொன்னார்கள். அதன் காரணத்தையும் இப்படி உரைத்தார்கள்.

    இந்த வியாபாரி பொய் சொல்லி தினமும் தன் விற்பனையைச் செய்திருந்தாலும், தினசரி ஸ்ரீரங்க திவ்யதேச திருநாமத்தைக் கூவி சொன்னதால், இவனுடைய பாவங்கள் அனைத்தும் ஒழிந்துவிட்டன. எனவே வைகுந்த விண்ணகரிலே நித்ய சூரிகளுடன் கலந்து வாழும் பாக்கியத்தை பெற்று விட்டான் இவன் என்று.

    எனவே, நாம பலன்‚ தல உச்சரிப்பு பலன் இரண்டுமே சிறப்பானவைதான்!

    12. குறிப்பிட்ட காலங்களில்தான் நீராட வேண்டுமா?

    நமது இந்து தர்மப்படி, காலை 4 மணி முதல் 5 மணி வரை முனிவர்கள் ஸ்நான காலமென்றும், காலை 5 மணி முதல் 6.30 மணி வரை சாதாரண மனிதர்கள் குளிக்க வேண்டிய நேரமென்றும் வரையறுக்கப்பட்டுள்ளது; அதற்குப்பிறகு எப்போது நீராடினாலும் ஒன்றுதான்!

    13. அத்வைதம், த்வைதம், விசிஷ்டாத்வைதம் இவைகள் கொண்ட வேறுபாடு?

    பிரம்மம் வேறு, ஜீவன் வேறு அல்ல என்பது ஆதிசங்கரரின் அத்வைதம். இது இரண்டற்ற நிலையென்பது அவருடைய சித்தாந்தம்.

    த்வைத சித்தாந்தங்கொண்ட மத்வாச்சார்யார், பிரம்மம் வேறு, ஜீவன் வேறு, அதாவது இரண்டு நிலை என்பார்.

    ஆனால் ராமானுஜரோ பிரம்மம் வேறு, ஜீவன் வேறு என இரண்டாக இருந்தாலும் அவை இறுதியில் ஒன்றாகி விடும் என்ற விசிஷ்டாத்வைத சித்தாந்தியாகிறார்.

    எல்லா சித்தாந்தங்களுமே கடவுளை அடையும் வழியையேக் காட்டுகின்றன.

    14. ஆறே நாட்களில் முக்தி பெற்ற பாக்கியசாலி யார்?

    உண்மையான அன்பை இயற்கையாக, எந்த ஆரவாரமின்றி இறைவனிடம் வெளிப்படுத்தி என் கண்ணானவன் இவன்! என சிவபிரானே போற்றிய ஸ்ரீகண்ணப்ப நாயனாரே, தொடர்ந்து ஆறு தினங்கள் சிவனை வழிபட்டு ‘அவன்’ திருப்பாதம் சேர்ந்தார்.

    15. ‘திரிகூடாசலம்’ ஊர் எங்குள்ளது?

    யாவரும் அறிந்த திருக்குற்றாலம் கொண்ட பெயர்தான் அது. உத்தாலகவனம் என்ற வேறு பெயருமுண்டு அவ்வூருக்கு.

    குழல்வாய் மொழியம்மை உடனுறை குறும்பலாவீசர், குற்றால அருவி அருகே குடிகொண்டுள்ளார். இத்தலத்தில் சிவபெருமான் பிரம்ம தேவராகவும், விஷ்ணுவாகவும் இருந்து வருகிறார். தாய குற்றாலம் குறும்பலாநாதர் குழல்வாய் மென் மொழியாய் மகிழருவி என்பார் சம்பந்தர். அகத்திய முனிவர் இங்கே இறைவழிபாடு செய்து நற்பலன் பெற்றார்.

    16. ‘ஞான வாசிட்டம்’ என்றால் என்ன?

    அது ஒரு சிறந்த நூலின் பெயர். இராமபிரானுக்கு வசிஷ்ட மாமுனிவர் உபதேசித்த அருமையான வேதாந்த சார தொகுப்பு அது. 2055 சிறப்பான சுலோகங்கள் அதில் உள்ளடக்கம்.

    ஞானம் குறித்து வசிஷ்டர் அந்நூலில் கூறியுள்ளதால் ஞானவா சிட்டம் என்ற பெயர் அந்நூலுக்கு.

    17. ஒரு முகங்கொண்ட அனுமன் எதனால் பஞ்சமுக வடிவமெடுத்தார்?

    இராம - இராவணப் போர் நடக்கையில் இலங்கை வேந்தன் அழிந்து போகிறான். இதனால் ஆவேசங்கொண்ட சதகண்டன் என்ற அரக்கன், தன்னுடன் போரிட இராமனை அழைத்தான். அவர் ஆஞ்சநேயனின் தோளில் அமர்ந்து போரிட புறப்படுகையில், அனுமன், சதகண்டன் மாயாவி என்பதால், தான் தனித்து அவர்களை எதிர்க்க விரும்பினார். இதற்கு தலைவனின் அனுமதி கிடைத்தது.

    அந்த ஆனந்தமுடன்,

    Enjoying the preview?
    Page 1 of 1