Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Arputha Mahaan Shirdi Saibaba Part - 1
Arputha Mahaan Shirdi Saibaba Part - 1
Arputha Mahaan Shirdi Saibaba Part - 1
Ebook167 pages1 hour

Arputha Mahaan Shirdi Saibaba Part - 1

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

"நான் ஒவ்வொரு நொடியும் உங்களுடைய அனைத்து நன்னெறிச் செயல்களிலும் வழி நடத்துகிறேன்.

இறைவனை விட மிகுந்த அன்பு செலுத்துபவர்கள் உலகில் யாருமே இல்லை. நீங்கள் பஜனையோ, சேவையோ செய்தாலும் அது அந்த இறைவனின் கருணையைப் பெறுவதற்காக மட்டுமே அமையும். ஒருவன் என்ன, எங்கே, எப்பொழுது, எப்படி செய்ய வேண்டும் என்பதெல்லாம் முன்னமேயே இறைவன் கொண்ட சங்கல்பத்தால் முடிவானவையே."

இப்படி அருளியிருப்பவர், இன்று உலகெங்கம் போற்றிப் பேசப்படும் மகான் ஷீர்டி சாய்பாபாதான்!

இனி மகான் தரிசனத்தை வாசகர்கள் பெறலாம். மிக்க நன்றி

- ஆரூர். ஆர். சுப்பிரமணியன்

Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580141206522
Arputha Mahaan Shirdi Saibaba Part - 1

Read more from Aroor R. Subramanian

Related to Arputha Mahaan Shirdi Saibaba Part - 1

Related ebooks

Reviews for Arputha Mahaan Shirdi Saibaba Part - 1

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Arputha Mahaan Shirdi Saibaba Part - 1 - Aroor R. Subramanian

    http://www.pustaka.co.in

    அற்புத மகான் ஷீர்டி சாய்பாபா

    பாகம் - 1

    Arputha Mahaan Shirdi Saibaba

    Part - 1

    Author:

    ஆருர் ஆர். சுப்பிரமணியன்

    Aroor R. Subramanian

    For more books

    https://www.pustaka.co.in/home/author/aroor-r-subramanian

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. பாபாவின் பண்பு

    2. எளிமையின் வடிவம் சாய்பாபா

    3. மதங்களை கடந்தவர் ஷீரடி மகராஜ்

    4. பிரம்ம ஞானம் என்ன விலை?

    5. பணியாளன் தந்த உபதேசம்...

    6. தேங்காயை தலையில் உடைப்பேன்

    7. கனவு கண்டேன்...

    8. மறதியும் ஒரு தவறே...

    9. வாழ்வா... துறவா...?

    10. குரு என்னும் கருணைக் கடல்...

    11. பக்தனிடம் தாழ வருபவனே கடவுள்

    12. கடன் வாங்கி கடவுள் தரிசனம்...

    13. சாது மிரண்டால்...

    14. முற்பகல் செய்யின்...

    15. வருமுன் காப்போம்...

    16. தற்பெருமை நீங்கினால் தரிசனம்

    17. பாபா பட்டினி...

    18. உருவத்தை எடை போடாதே...

    19. வாசி... வாசி... நன்றாக!

    20. எங்கும் தொடரும் பாபா...

    21. மெய்யானது கூற்று...

    22. நல்ல யோசனைதான்...

    23. நாடு சுதந்திரத்திற்கு அருளிய பாபா

    24. பாபாவின் வார்த்தையை கேள்...

    25. காவி உடையில் தரிசனம்...

    26. விஷ்ணு சகஸ்ரநாமம்

    27. கேட்பதை அளிக்கும் சாய்பாபா...

    அற்புத மகான் ஷீர்டி சாய்பாபா

    பாகம் - 1

    முனைவர். சோ. அய்யர், இ.ஆ.ப.(ஓ)

    நடுநிலையாளர்,

    தமிழ்நாடு உள்ளாட்சித் துறை

    ஓம்பட்ஸ்மேன் அலுவலகம்

    100, அண்ணா சாலை,

    சென்னை - 600032.

    அணிந்துரை

    மனிதன் கொண்ட ஆன்மாவானது உருவமற்ற ஒன்றே! ஆனால் அது சாதாரணமாக முற்றாக வளைந்து நிற்கும் நிலை பெற்றது. அதன் காரணம், மனிதன் கொண்ட ஆணவமலம் ஆன்மாவை தன் பலத்தால் முற்றிலும் அழுத்திவிடுவதால் அப்படி ஆகி விட்டது. அதுமட்டுமல்லாது, அது கொண்ட இயல்பால் ஆன்மாவை அணுப் பொருளாக்கி, அதனைக் கல்லைப் போலும் பிறகு ஒரு இரும்புத் தண்டின் கடினத்தன்மைக்கும் அது மாற்றிவிடுகிறது. இதன் மூலம் ஆன்மா எல்லாம்வல்ல அந்த இறைவனின் சக்தியை அறியும் வாய்ப்பினை பாவம், இழந்து நிற்கிறது!

    இது தவிர, ஆணவமலம் சூழப்பட்ட ஆன்மா கொண்ட அறிவு தேவையற்ற புலன் நுகர்ச்சிகளில் ஈடுபாடு கொண்டு மிகக்கீழ்மையான நிலைக்கும் தள்ளப்பட்டு விடுகிறது.

    இத்தகைய விரும்பத்தகாத ஆன்மாவை பஞ்சு போல மென்மையாக ஆக்கி, பண்படுத்தவே இறைவன் பூவுலகில் பல அவதாரங்கள் பிறப்பிக்க அருளினார்; வெவ்வேறு காலக்கட்டங்களில். நமது இந்திய நாடு புனித பூமியாகையால் உலகின் பெரும்பான்மையான புண்ணிய அவதாரங்கள் இங்கேதான் நிகழ்ந்துள்ளன.

    அத்தகைய அவதாரங்களில் ஒருவராக தோன்றியவரே, அருள்மிகு. ஷீர்டி சாய்பாபா அவர்கள். மக்களின் துன்பங்களை போக்க அவதாரமான மகான் பாபா இந்து, முஸ்லீம், பார்சி, கிறித்தவர், சீக்கியர் என்று மத இன வேறுபாடு இன்றியும், செல்வந்தர், ஏழை என்ற பாகுபாடு இன்றியும், எவ்வித பேதமில்லாமல் அனைவரையும் சமமாக பாவித்து, தன்னை நாடி வந்தோரின் இடர்களை கலைந்து, அவர்கள் கோரும் நல்வரங்களை அருளினார். இன்றும் அருள்புரிந்து வருகிறார். இதற்கு சான்றாக நாடெங்கும், ஏன் நம் நாடு கடந்து பல நாடுகளிலும் மகான் ஷீர்டி சாய்பாபாவிற்கு நிறையை ஆலயங்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

    என் இனிய நண்பர் திரு. ஆரூர். ஆர். சுப்பிரமணியன் அவர்கள் தமிழக அரசுப் பணியினின்று ஓய்வு பெற்ற நாளிலிருந்து ஆன்மீக கட்டுரைகள், நூல்கள் எழுதுவதை தன் கடமையாகக் கொண்டு வாழ்ந்து வருகிறார். நான் கரூர் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்த காலத்தில் என்னிடம் துணை ஆட்சியராக பணிபுரிந்த போதும், அதற்குப் பிறகும் தனது பணிகளில் திறமை, நேர்மை, அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டுள்ளதை இங்கு நினைவு கூர்கின்றேன்.

    இந்த நேரத்தில், திரு. சுப்பிரமணியன் ஒரு நாளிதழில் மாதக்கணக்காக எழுதி வந்த அற்புத மகான் ஸ்ரீ ஷீர்டி சாய்பாபா தொடரிலிருந்து சில அத்தியாயங்களைத் தேர்ந்தெடுத்து அற்புத மகான் ஷீர்டி சாய்பாபா என்ற நூலின் முதல் பாகத்தை வெளியிடுவது குறித்து எனது மனமார்ந்த வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய ஆன்மீக பணிகள் மேலும் சிறப்பாக தொடர இறைவனை வேண்டிக் கொள்கின்றேன்.

    அன்புடன்

    டாக்டர். சோ. அய்யர்

    நன்றி!

    சென்னை – 32

    5-1-17

    *****

    மாதா துணை

    கலைமாமணி – கலைவித்தகர்

    இயக்குனர்

    டாக்டர். ஆரூர் தாஸ்

    மாதா இல்லம்

    17, நாதமுனி தெரு,

    தி. நகர், சென்னை - 17.

    வாழ்த்துரை

    என் கண்ணில் நிறைந்தவரும், எங்கள் மண்ணில் பிறந்தவருமான, நீண்டகால என் அன்புக்குரிய இனிய நண்பர் திரு. ஆரூர். ஆர். சுப்பிரமணியன் (துணை கலெக்டர், ஆன்மீக நூலாசிரியர்) அவர்கள் தின இதழ் நாளிதழில், சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் வியாழக்கிழமை தோறும் தொடர்ந்து எழுதி வந்த அற்புத மகான் ஸ்ரீ ஷீரடி சாய்பாபா, மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

    இச்சமயத்தில், நண்பர்கள் திரு. ஆரூர். சுப்பிரமணியன் அவர்களுக்கு, என் அன்பு கலந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் களிப்படைகிறேன்.

    நன்றி.

    தி.நகர், சென்னை – 17

    5-1-2017

    அன்பன்

    டாக்டர். ஆரூர் தாஸ்

    *****

    கே. ஞானதேசிகன்

    இ.ஆ.ப.,

    அண்ணா நகர்,

    சென்னை.

    வாழ்த்துரை

    ஓய்வுபெற்ற துணை கலெக்டரும், என்னிடம் முன்பு, காஞ்சிபுரத்தில் வட்ட ஆட்சியராக சிறப்பாக பணியாற்றியவருமான திரு. ஆரூர். ஆர். சுப்பிரமணியன் அவர்கள் ஸ்ரீ ஷீர்டி சாய்பாபாவின் சரித்திர நூலை எழுதி, முதல் பாகத்தை பிரசுரிக்க இருப்பது குறித்து, மிக மகிழ்ச்சியடைகின்றேன். ஆன்மீக எழுத்துலகில், மேலும் பலநூல்களை அவர் எழுதி வெளியிட மனமார வாழ்த்துகிறேன்.

    அன்பன்,

    கே. ஞானதேசிகன் இ.ஆ.ப.,

    சென்னை

    *****

    சமர்ப்பணம்

    இந்த ஆன்மீக நூலை, தன் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை போராடி ஜெயித்து, என்னையும் வளர்த்து ஆளாக்கிய எனது அன்பு அன்னை திருமதி. கிருஷ்ணவேணி சேஷாத்ரி அவர்களுக்கு பணிந்து சமர்ப்பணம் செய்வதில் பெருமை கொள்கிறேன்.

    காஞ்சிபுரம். எஸ். குமரன்

    *****

    என்னுரை

    "நான் ஒவ்வொரு நொடியும் உங்களுடைய அனைத்து நன்னெறிச் செயல்களிலும் வழி நடத்துகிறேன்.

    இறைவனை விட மிகுந்த அன்பு செலுத்துபவர்கள் உலகில் யாருமே இல்லை. நீங்கள் பஜனையோ, சேவையோ செய்தாலும் அது அந்த இறைவனின் கருணையைப் பெறுவதற்காக மட்டுமே அமையும். ஒருவன் என்ன, எங்கே, எப்பொழுது, எப்படி செய்ய வேண்டும் என்பதெல்லாம் முன்னமேயே இறைவன் கொண்ட சங்கல்பத்தால் முடிவானவையே."

    இப்படி அருளியிருப்பவர், இன்று உலகெங்கம் போற்றிப் பேசப்படும் மகான் ஷீர்டி சாய்பாபாதான்!

    மகான் பாபா என்னை இயக்கியவாறே, என் அருமை மனைவி கீதா சுப்பிரமணியன் தூண்டியபடி, ஸ்ரீ பாபாவின் அற்புத சரித்திரத்தை எழுதினேன் என்பதே உண்மை.

    எங்கள் குடும்பத்துக்கும், மகான் பாபாவுக்கும் தொடர்பு ஏற்பட எது காரணமாகவிருந்தது! சற்று பின்னோக்கி செல்ல வேண்டும்.

    சுமார் 80 ஆண்டுகளுக்கும் முன்பாக திருவாரூர், விஜயபுரத்தில் உள்ள எங்கள் இல்லத்திற்கு, மகானை தமிழகத்தில் அறிமுகம் செய்யும் வகையில் பிரசாரம் புரிந்த பூஜ்யர் நரசிம்ம சுவாமி அவர்கள் வருகை தந்து என் பெற்றோர்களை (திரு. ஏ. இராமய்யர் -- தங்கம்) ஆசீர்வதித்து, அக்காலத்தில் அரிய புகைப்படமாகவிருந்த ஷீர்டி மகான் படம் ஒன்றை வழங்கி, இதை நீங்கள் தொடர்ந்து பூஜித்து வர, உங்கள் குடும்பப் பரம்பரை சிறப்புடன் விளங்கும் என அருளியவாறு, மூன்று சகோதரர்களாகிய நாங்கள் (திரு. ஆர். சுந்தர் துணை கலெக்டர் (ஓய்வு), திரு. ஆர். நாராயணன் லேபர் ஆபீசர் (ஓய்வு), அடியேன்) இன்று வரை பாபாவின் அருளால் அவரை பூஜித்து நன்கு வாழ்ந்து கொண்டாடி வருகிறோம்.

    நான் முன்பே குறிப்பிட்டபடி, அந்த மகானின் சரிதத்தை எழுதி முடித்து, அதை நூலாக வெளியிடலாம் என வைத்திருந்தேன். 2013 ஆம் ஆண்டின் மத்தியில் தின இதழ் நாளேட்டின் உதவி ஆசிரியர் நண்பர் திரு. ஸ்ரீதர் அவர்கள் தொலைபேசியில் எதேனும் ஆன்மீகத் தொடர் இருந்தால் இரண்டு நாளில் அனுப்பி வையுங்கள் என்று அன்புடன் கேட்டுக் கொண்டார். அதன்படி மகான் ஷீர்டி சாய்பாபா சரிதத்தை உடனடியாக அனுப்பி வைத்தேன். பிறகு அத்தொடர் ஒவ்வொரு வியாழக்கிழமையன்றும், சிறப்பு இணைப்புத் தாளில் அழகுற வெளிவரத் தொடங்கியது.

    இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கும்படி, நான் என்றும் பெரிதும் மதிக்கும் வணக்கத்துக்குரிய டாக்டர் திரு. சோ. அய்யர், இ.ஆ.ப. (ஓ) ஓம்பட்ஸ்மேன், தமிழ்நாடு உள்ளாட்சித் துறை) அவர்களை அணுகியபோது அதனை மகிழ்ச்சியுடன் ஏற்று, மிக அழகாக அணிந்துரை வழங்கியது எனது பேறே, அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகுக.

    அவ்வாறே, என் வேண்டுகோளை ஏற்று, நாடக கதை-வசனம் எழுத எனக்கு ஆசானாகவும் அமைந்த டாக்டர் ஆரூர் தாஸ் அவர்கள் இந்நூலுக்கு வாழ்த்துரை அளித்து என் பணியை கௌரவித்து விட்டார். சில மாதங்களுக்கு முன்பு, திரு. ஆரூர் தாஸ் அவர்கள் எனக்கிட்ட அன்பு கட்டளைப்படி, எனது கதை வசன நாடக ஆக்கத்தில், அவரே இயக்கி வரும் மதங்களை கடந்த மகான் (ஷீர்டி சாய்பாபா) என்ற நாடகம் சின்னத்திரை கலைஞர் நண்பர் திரு. முரளி அவர்களின் சடாட்சரம் தியேட்டர் மூலம்

    Enjoying the preview?
    Page 1 of 1