Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mahangalin Saritham Part - 2
Mahangalin Saritham Part - 2
Mahangalin Saritham Part - 2
Ebook225 pages1 hour

Mahangalin Saritham Part - 2

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அருளாளர்களை எப்பாடுபட்டேனும் அணுகி ஆசி பெற வேண்டும்; அவர்கள் உபதேசங்களைக் கேட்க வேண்டும்; அதை வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும். அவர்களின் அருளாசி ஆபத்தைச் சம்பத்தாக்கும். அசுபத்தைச் சுபம் ஆக்கும்!

அத்துடன் அவர்கள் பூவுலகில் பூதவுடலுடன் இல்லாவிட்டாலும் கூட ஜீவசமாதியில் இருந்து அருள் பாலிக்கிறார்கள். ஆகவே அவர்களை நினைப்பதும், அவர்களை வணங்கிப் போற்றுவதும், அவர்கள் கூறிய அருளுரைகளைப் படித்து அதன்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்வதும் நற்பயன் அளிக்க வல்லதே.

இந்த வகையில் முதல் பாகத்தைத் தொடர்ந்து இன்னும் பதினெட்டு அருளாளர்களைப் பற்றி அறிவதற்கான வாய்ப்பை இந்த நூல் தருகிறது.

Languageதமிழ்
Release dateFeb 7, 2022
ISBN6580151008030
Mahangalin Saritham Part - 2

Read more from S. Nagarajan

Related to Mahangalin Saritham Part - 2

Related ebooks

Reviews for Mahangalin Saritham Part - 2

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mahangalin Saritham Part - 2 - S. Nagarajan

    https://www.pustaka.co.in

    மகான்களின் சரிதம் பாகம் 2

    Mahangalin Saritham Part 2

    Author:

    ச. நாகராஜன்

    S. Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-nagarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    அத்தியாயங்கள்

    1. ஷீர்டி சாயிபாபா!

    2. ஸ்ரீ மத்வாசாரியர்!

    3. ஸ்ரீ ராகவேந்திரர்!

    4. ஸ்ரீ சதாசிவ ப்ரஹ்மேந்திராள்

    5. ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள்

    6. ஸ்ரீ முத்துசாமி தீக்ஷிதர்!

    7. ஸ்ரீ சியாமா சாஸ்திரிகள்!

    8. ஸ்ரீ திருஞானசம்பந்தர்!

    9. ஸ்ரீ திருநாவுக்கரசர்

    10.ஸ்ரீ சுந்தரர்!

    11. ஸ்ரீ மாணிக்கவாசகர்

    12. ஸ்ரீ அருணகிரிநாதர்

    13. ஸ்ரீ தாயுமானவர்!

    14. ஸ்ரீ உமாபதி சிவம்

    15. ஸ்வாமி தயானந்த சரஸ்வதி!

    16. ஸ்வாமி ராமதீர்த்தர்!

    17. மஹரிஷி அரவிந்தர்

    18. ஸ்ரீ சத்ய சாயி பாபா!

    என்னுரை

    (ஸ்ரீ ஷீர்டி சாயி பாபா முதல் ஸ்ரீ சத்ய சாயி பாபா வரை)

    லண்டனிலிருந்து வாரந்தோறும் ஒளிபரப்பாகும் ஞானமயம் ஒளிபரப்பில் பங்கு கொள்ளுமாறு லண்டன் திரு ச. சுவாமிநாதன் மற்றும் சிவஸ்ரீ கல்யாண்ஜி அழைப்பு விடுத்த போது அதை ஏற்றுக் கொண்டு வாரந்தோறும் ஒரு மகானின் சரிதத்தைக் கூறும் பாக்கியம் கிடைத்தது.

    அந்த உரைகளில் இடம் பெற்ற மகான்களின் சரிதம் முதல் பாகமாக மலர்ந்தது. இந்த இரண்டாம் பாகத்தில் இன்னும் 18 மகான்களின் சரிதமும் அவர் தம் அருளுரைகளும் விளக்கப்பட்டுள்ளன.

    ஞானமயம் வாய்ப்பை எனக்கு நல்கிய லண்டன் திரு ச. சுவாமிநாதன், திரு கல்யாண்ஜி ஆகியோருக்கு எனது உளம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அறக்குறைவை நிறைவாக்கும், சம்பத்தாக்கும்

    ஆபத்தை, சுபமாக்கும் அசுபம் தன்னை,

    சிறக்கும் உயர்ந்தவர் கூட்டம் என்னும் கங்கைச்

    சீத நீர் ஆடினார்க்குச் செந்தீ வேள்வி

    இறக்கரிய தவம் தானம் தீர்த்தம் வேண்டா,

    இடர் பந்தம் அறுத்தெவர்க்கும் இனியோர் ஆகிப்

    பிறப்பெனும் வேலைப் புணயாம் உணர்வு சான்ற

    பெரியோரை எவ்வகையும் பேணல் வேண்டும்

    என்பது பெரியோர் வாக்கு.

    அருளாளர்களை எப்பாடுபட்டேனும் அணுகி ஆசி பெற வேண்டும்; அவர்கள் உபதேசங்களைக் கேட்க வேண்டும்; அதை வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும். அவர்களின் அருளாசி ஆபத்தைச் சம்பத்தாக்கும். அசுபத்தைச் சுபம் ஆக்கும்!

    அத்துடன் அவர்கள் பூவுலகில் பூதவுடலுடன் இல்லாவிட்டாலும் கூட ஜீவசமாதியில் இருந்து அருள் பாலிக்கிறார்கள். ஆகவே அவர்களை நினைப்பதும், அவர்களை வணங்கிப் போற்றுவதும், அவர்கள் கூறிய அருளுரைகளைப் படித்து அதன்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்வதும் நற்பயன் அளிக்க வல்லதே.

    இந்த வகையில் முதல் பாகத்தைத் தொடர்ந்து இன்னும் பதினெட்டு அருளாளர்களைப் பற்றி அறிவதற்கான வாய்ப்பை இந்த நூல் தருகிறது.

    புத்தகமாக வெளிடுவதால் படிப்பதற்கு வசதியாக உரைகளில் சில சிறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

    இந்தப் புத்தகத்தை வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கும் அவரது குழுவினருக்கும் என் நன்றி உரித்தாகுக!

    இந்த உரைகளை வாரந்தோறும் கேட்டு என்னை ஊக்குவித்த உலகெங்கும் வாழ் பல்லாயிரக்கணக்கான இறையன்பர்களுக்கு சிரம் தாழ்த்தி என் நன்றியை உரித்தாக்குகிறேன்.

    இதைப் படிக்கும் அனைவர் வாழ்விலும் சர்வ மங்களத்தை எல்லா மகான்களும் அருளட்டும் என்ற பிரார்த்தனையுடன் நன்றி கூறி புத்தகத்தின் உள்ளே வாருங்கள் என உங்களை அழைக்கிறேன்.

    14-1-22

    ச.நாகராஜன்

    பங்களூர்

    1. ஷீர்டி சாயிபாபா!

    பாரதம் கண்ட அற்புத மகான்களின் வரிசையில் ஷீர்டி சாயிபாபாவின் பெயர் தனி இடத்தைப் பெறுகிறது.

    ஏனெனில் ஹிந்துக்களுக்கும் இஸ்லாமியருக்கும் அவர் பெரும் வழிகாட்டியாக, மகானாக, அருளாளராக விளங்கினார். மஹராஷ்டிரத்தில் பாத்ரி என்று ஒரு கிராமம். அங்கே கங்கா பாவத்யா, தேவகிரியம்மா என்ற தம்பதிகள் வசித்து வந்தனர். சிறந்த சிவ பக்தர்களான அவர்களுக்குக் குழந்தை பிறக்கவில்லை. ஒரு நாள் கங்கா பாவத்யா வெளியில் சென்றிருந்த போது ஒரு முதியவர் வீட்டின் கதவைத் தட்டி, மழை அதிகமாக இருக்கிறது. இன்று இரவு மட்டும் இங்கு தங்குகிறேன் என்றார். தேவகிரியம்மா சம்மதித்தார். திண்ணையில் அவர் படுத்தார். சிறிது நேரம் கழித்து கதவைத் தட்டி உணவு கேட்டார். தேவகிரியம்மாவும் உடனே தந்தார். அடுத்து சில நிமிடங்களில் மீண்டும் கதவு தட்டப்பட்டது. வந்த முதியவர் என் கால்கள் வலிக்கின்றன. அமுக்கி விட வேண்டும் என்றார். குழப்பத்தில் ஆழ்ந்தார் தேவகிரியம்மா. என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த சமயம் கதவு தட்டப்பட ஒரு பெண்மணி நின்றிருந்தார். நான் கால்களைப் பிடித்து விடலாமா, இந்த முதியவருக்கு என்று கேட்டார் அவர். சந்தோஷமாக சரி என்றார் தேவகிரியம்மா. அடுத்து சில நிமிடங்களில் மீண்டும் கதவு தட்டப்பட்டது. கதவைத் திறந்த தேவகிரியம்மாவுக்கு மெய் சிலிர்த்தது.வந்த முதியவரும் பெண்மணியும் அங்கு இல்லை. பார்வதி பரமேஸ்வரன் காட்சி தந்தனர்.

    உனக்கு மூன்று குழந்தைகள் பிறக்கும். மூன்றாவதாக நானே வந்து பிறப்பேன் என்று கூறி அருள் பாலித்தார் சிவபிரான். அப்படியே நடந்தது. நிறைமாத கர்ப்பிணியாக தேவகிரியம்மா இருந்த போது சிவபிரான் தனக்கும் தரிசனம் தர வேண்டுமென்று கங்கா பாவத்யா காடு மேடுகளில் அலைய ஆரம்பித்தார்.

    அவரைப் பின் தொடர்ந்து சென்ற தேவகிரியம்மா ஒரு ஆண் குழந்தையைப் பெற்றாள். ஆனால் கங்கா முன்னால் சென்று கொண்டே இருக்கவே, குழந்தையை இலைகளின் மீது வைத்துச் சென்றார் தேவ்கிரியம்மா. அந்தக் குழந்தையை ஒரு முஸ்லீம் பக்கீர் எடுத்து தன் கிராமமான மன்வாத்தில் வளர்க்கலானார். பின்னர் குழந்தை வளர்ந்து சிறுவனான போது, அந்தச் சிறுவனை வெங்குசா என்பவரிடம் கொடுத்தார்.

    சாயிபாபா 1838ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி பிறந்தார். 1918ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ஆம் தேதியன்று சமாதி எய்தினார்.

    இடைப்பட்ட 80 ஆண்டு காலத்தில் உலகில் அவர் நிகழ்த்திய லீலைகள் ஏராளம்.

    16ஆம் வயதில் அவரது அருள் சக்திகள் வெளி உலகிற்குத் தெரிய ஆரம்பித்தது. அவர் மீது செங்கல்லை விட்டு ஒருவன் எறிய அது அப்படியே அந்தரத்தில் நின்றது.

    இதைத் தொடர்ந்து, அவரை அணுகி நூற்றுக் கணக்கானவர்கள் வந்து அருளாசி பெறலாயினர்.

    அவரது பெயர் எப்படி ஸாயிபாபா ஆனது? இதற்கு பி.வி.நரசிம்மஸ்வாமி ஒரு விளக்கம் தருகிறார்.

    ஸாயின் என்ற பாரசீக வார்த்தைக்கு ‘ஸ்வாமி’ என்று பொருள். பாபா என்ற ஹிந்தி வார்த்தைக்கு அப்பா என்று பொருள். ஆகையால் ஸாயிபாபா என்றால் அன்பிற்குரிய ஒரு ஸ்வாமி அல்லது யதி என்று அர்த்தமாகிறது.

    ஸாயிபாபாவின் குரு யார் என்பது யாருக்கும் தெரியாது. ஒரு நாள் ராதாபாய் தேஷ்முகீன் என்ற பெண்மணி பாபாவிடம் தனக்கு ஒரு மந்திரத்தை உபதேசிக்குமாறு வேண்டி வற்புறுத்தினாள்.அவரோ அதை ஏற்கவில்லை. உடனே அந்தப் பெண்மணி உபதேசிக்கவில்லை என்றால் அன்ன ஆகாரமின்றி உயிரை விட்டு விடுவேன் என்றாள். இதைக் கேட்டு உருகிய பாபா தன்னைப் பற்றி அவளிடம் சொன்னார்.

    நான் பன்னிரெண்டு வருஷ காலம் என் குருவிடம் பாத சேவை செய்தேன். அவரைப் போல ஒரு கருணாநிதியைக் காண முடியாது. அவர் எனக்கு எந்த வித உபதேசமும் செய்யவில்லை. அவர் தனது கடாக்ஷ வீக்ஷண்யத்தால் என்னைக் காப்பாற்றி வந்தார்.குருவிடம் அனன்ய சிந்தை செய்தால் அவரையே பரமார்த்தம் என்று எண்ணினால் அதுவே போதும் என்று கூறினார்.

    வாழ்நாள் முழுவதும் பக்தர்களுக்கு அவர் அருளிய வார்த்தைகள் இரண்டே இரண்டு தான். ஒன்று சிரத்தா இன்னொறு சபூரி. அதாவது சிரத்தையும் பொறுமையும், அவ்வளவு தான்! ‘நானிருக்க பயமேன்’ என்பது அவரது அபய வாக்கு!

    உலகில் ஆயிரக்கணக்கான பேர் இருக்கிறார்கள். நானா, உன்னை மட்டும் ஏன் அழைத்தேன் தெரியுமா, நீயும் நானும் சென்ற நான்கு ஜென்மங்களாக நெருங்கி இருந்து வருகிறோம். உனக்கு அது தெரியாது. எனக்குத் தெரியும் என்று அணுக்க பக்தரான நானாவிடம் ஒரு முறை அவர் கூறினார்.

    இப்படி தனக்கும் பக்தர்களுக்கும் உள்ள நெருங்கிய உறவை ருணானுபந்தம் என்று அவர் கூறுவார்.

    ஒரு நாள் காலை 8 மணி. பாபா ரஹதா நதிக்கரையோரம் அமர்ந்திருக்க வழிப்போக்கன் ஒருவர் அவரிடம் வந்து அமர்ந்தார் தனது வீட்டிற்கு வந்து உணவருந்த வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். அப்போது தவளை ஒன்றின் ஓலக் குரல் கேட்டது. வந்த வழிப்போக்கரை அந்தக் குரல் வந்த திசையில் போகச் சொன்னார் பாபா. அங்கு ஒரு பாம்பு தவளை ஒன்றைப் பிடித்துக் கொண்டிருக்கும் பார் என்றார். வழிப்போக்கர் அந்த திசையில் சென்று பார்க்க ஒரு பெரிய பாம்பு ஒன்று தவளையை விழுங்க முயல்வதைப் பார்த்த அவர் ஒடி வந்து இன்னும் பத்து இருபது நிமிடங்களில் எல்லாம் முடிந்து விடும். தவளையை கரும்பாம்பு விழுங்கி விடும் என்றார்.

    பாபாவோ, நானே அதன் தந்தை. அப்படி சாக விட்டுவிடுவேனா என்று கூறி விட்டு அந்த பாம்பு இருந்த இடத்திற்குச் சென்று கூவினார்:

    ஹே, வீரபத்ரப்பா, இன்னும் கூட உன் எதிரி பசப்பா மீது உனக்கு இரக்கம் வரவில்லையா? இப்படிச் செய்ய நீ வெட்கப்பட வேண்டும் என்றார்.

    உடனே பாம்பு தவளையை விட்டு விட்டுச் சென்று மறைந்தது.

    வழிப்போக்கர் ஆச்சரியப்பட்டு வீரபத்ரப்பாவின் கதையைக் கேட்க, வீரபத்ரப்பாவுக்கும் பஸப்பாவிற்கும் சென்ற ஜென்மத்தில் நடந்த சண்டையை விரிவாக எடுத்துரைத்தார் பாபா. தனது சொற்களைக் கேட்டு வெட்கப்பட்டு வீரபத்ரப்பா விலகி ஓடியதாகவும் தெரிவித்தார்.

    இன்னொரு முறை ஒரு ஆட்டுக்குட்டியை அன்போது அணைத்துக் கொண்டார். அது அவரது பழைய சிஷ்யன். தன் அன்பைத் தெரிவித்து ஆசி தந்தார். எத்தனை ஜென்மமானாலும் உங்களைக் கை விட மாட்டேன் என்பது அவர் பக்தர்களுக்கு ஆறுதல் அளிக்கிறார். இது தான் பந்தத்தினால் ஏற்பட்ட கடன் - இதுவே ருணானுபந்தம் என்றார் அவர்.

    ஷீர்டி சாயிபாபாவின் அணுக்க பக்தரான என்.ஜி.சந்தோர்கர் (நானா) ஒரு முறை பாபா மசூதியில் இருக்கையில் அவர் கால்களை அமுக்கியவாறே ஸ்லோகம் ஒன்றை முணுமுணுத்துக் கொண்டிருந்தார். சந்தோர்கர் அவர் சங்கராசார்யரின் கீதை பாஷ்யத்தை நன்கு பயின்றவர். சம்ஸ்கிருத இலக்கணத்தைத் தெரிந்து கொண்டு அதில் நல்ல புலமை பெற்றவர். பாபா அவரிடம் கேட்டார்: நானா! என்ன முனகுகிறாய்?

    நானா: ஒரு சம்ஸ்க்ருத ஸ்லோகம்

    பாபா: என்ன ஸ்லோகம்?

    நானா: பகவத்கீதையிலிருந்து ஒரு ஸ்லோகம்

    பாபா: தெளிவாகக் கேட்கும்படி உரக்கச் சொல்லு

    நானா பகவத்கீதையில் நான்காம் அத்தியாயத்திலிருந்து 34ஆம் ஸ்லோகத்தை

    உரக்கக் கூறினார்.

    "தத்வித்தி ப்ரணிபாதேந பரிப்ரஸ்னேன ஸேவயா |

    உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞாநம் ஜ்ஞாநிநஸ் தத்வதர்சி||"

    பாபா; நானா, இதன் அர்த்தம் உனக்குப் புரிகிறதா?

    நானா: புரிகிறது

    பாபா; அப்படியானால் அதன் அர்த்தத்தைச் சொல்லு.

    சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து, குருவைக் கேள்வி கேட்டு, அவருக்குச் சேவை புரிந்து ஞானம் என்பதைக் கற்றுக் கொள்.பிறகு உண்மை அல்லது சத்வஸ்துவைப் பற்றித் தத்துவம் அறிந்த ஞானிகள் உனக்கு உபதேசம் செய்வார்கள் என்று நானா இவ்வாறு ஸ்லோகத்தின் அர்த்தத்தைக் கூறினார்.

    பாபா: நானா! பொதுவான அர்த்தத்தை நான் கேட்கவில்லை. இலக்கணவிதிகளின் படி எச்சம்,

    வேற்றுமை, காலம் ஆகியவற்றுடன் ஒவ்வொரு வார்த்தையாக விளக்கி அர்த்தத்தைக் கூறு,

    பாபாவுக்கு சம்ஸ்க்ருத இலக்கணம் என்ன தெரியும் என்ற வியப்புடன் நானா அப்படியே விரிவாக விளக்கினார்.

    பாபா: ப்ரணிபாதம் என்றால் என்ன?

    நானா: நமஸ்காரம் செய்வது!

    பாபா: பாதம் என்றால் என்ன?

    நானா: அதே அர்த்தம் தான்!

    பாபா; பாதத்திற்கும் ப்ரணிபாதத்திற்கும் ஒரே அர்த்தம் தான் என்றால் வியாஸர் அனாவசியமாக தேவையற்று (‘ப்ரணி’ என்று) இரண்டு எழுத்துக்களைச் சேர்த்திருப்பாரா?

    நானா: இரண்டுக்கும் என்ன வித்தியாசம் இருக்கக் கூடும் என்று எனக்குப் புரியவில்லை!

    பாபா: சரி, ப்ரஸ்ன என்றால் என்ன?

    நானா: கேள்வி கேட்பது

    பாபா: பரிப்ரஸ்ன என்றால் என்ன?

    நானா: அதே அர்த்தம் தான்!

    பாபா: இரண்டு வார்த்தைகளும் ஒரே அர்த்தத்தைத் தான் தருகின்றன என்றால் வியாஸருக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது நீளமான வார்த்தையைப் போட?

    நானா: எனக்கு என்னமோ இதற்கு மேல் என்ன அர்த்தம் இருக்கக்கூடும் என்று புரியவில்லை!

    பாபா: சரி சேவா என்றால் என்ன?

    நானா: சேவா என்றால் சேவை தான் இதோ கால் பிடிப்பதைப் போல!

    பாபா: இதை விட வேறு ஒன்றும் இல்லையா?

    நானா: இதற்கு மேல் இதில் என்ன அர்த்தம் இருக்கும் என்று எனக்குப் புரியவில்லை!

    அந்த ஒரே ஸ்லோகத்தை மட்டுமே குறித்து பாபா தொடர்ந்து கேள்விகளைக் கேட்கலானார் – ஞானமே ஒருவனது இயற்கை நிலை. அப்படிப்பட்ட இயற்கை நிலையான ஞானத்துடன் இருக்கும் ஜீவனான அர்ஜுனனுக்கு ஞானம் காட்டப்படும் என்று இரண்டாம் அடியில் ஏன் கிருஷ்ணர் சொல்ல வேண்டும்? என்று கேட்ட பாபா பின்னர் ஞானம் என்ற வார்த்தைக்கு முன்னால் ஒரு அவக்ரஹத்தைச் (அதாவது ஒரு வைச்) சேர்க்கச் சொன்னார்

    சங்கராசார்யர் பாஷ்யத்தில் இது இல்லையே என்றார் நானா. பாபாவோ இப்போது பொருள் நன்றாகப் புரியும் பார் என்று விளக்கலானார். அதிசயித்துப் போன சந்தோர்கர் ஒன்றும் தெரியாது

    Enjoying the preview?
    Page 1 of 1