Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aalayam Arivom! Part - 1
Aalayam Arivom! Part - 1
Aalayam Arivom! Part - 1
Ebook153 pages58 minutes

Aalayam Arivom! Part - 1

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஆலயம் தொழுவது சாலவும் நன்று! இப்படிப்பட்ட கோவில்கள் இருக்கும் திருத்தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டு தம் ஆன்மீக வாழ்க்கையை மேம்படுத்திக் கொண்டு வாழ்ந்தனர் அறிவுசால் நம் பாரத மக்கள்.

பாரதத்தில் உள்ள ஆலயங்களின் வரலாறு மற்றும் சிறப்புகளை லண்டனிலிருந்து ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சி வாரந்தோறும் ஒளிபரப்பியது. அதில் இடம் பெற்ற ஆலயங்கள் பற்றிய உரைகளின் தொகுப்பே இந்த நூல். சக்தி பீடங்கள், சிவாலயங்கள், வைணவ ஆலயங்கள் உள்ளிட்ட 30 ஆலயங்களின் விவரங்கள் இந்த முதல் பாகத்தில் இடம் பெற்றுள்ளன.

Languageதமிழ்
Release dateJul 16, 2022
ISBN6580151008659
Aalayam Arivom! Part - 1

Read more from S. Nagarajan

Related to Aalayam Arivom! Part - 1

Related ebooks

Reviews for Aalayam Arivom! Part - 1

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aalayam Arivom! Part - 1 - S. Nagarajan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஆலயம் அறிவோம்! பாகம் – 1

    Aalayam Arivom! Part – 1

    Author:

    ச. நாகராஜன்

    S. Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-nagarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    அத்தியாயங்கள்

    1) மும்பை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்

    2) மதுரை ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் ஆலயம்

    3) காஞ்சி ஸ்ரீ காமாக்ஷி அம்மன் கோவில்

    4) காமாக்யா ஆலயம்

    5) கன்யாகுமாரி

    6) ஸ்ரீ வைஷ்ணவி தேவி ஆலயம், ஜம்மு-காஷ்மீர்

    7) உஜ்ஜயினி

    8) திருவானைக்காவல்

    9) மைசூர் ஸ்ரீ சாமுண்டீஸ்வரி ஆலயம்

    10) கொல்லூர் மூகாம்பிகை

    11) ராமேஸ்வரம்

    12) சிதம்பரம்

    13) திருவண்ணாமலை

    14) வைத்தீஸ்வரன் கோவில்

    15) காசி

    16) கேதார்நாத்

    17) சோம்நாத்

    18) கைலாயம்

    19) பத்ரிநாத்

    20) ரிஷிகேஷ்

    21) மதுரா

    22) பிருந்தாவனம்

    23) த்வாரகா

    24) பண்டரிபுரம்

    25) புரி ஜகந்நாத்

    26) திருப்பதி

    27) குருவாயூர்

    28) திருவனந்தபுரம்

    29) ஒப்பிலியப்பன்

    30) ஸ்ரீரங்கம்

    என்னுரை

    ஆலயம் தொழுவது சாலவும் நன்று!

    கொன்றைவேந்தனில் உள்ள 91 பாக்களில் இரண்டாவது பாடலில் ஔவையார் தரும் அன்புரை இது!

    உலகநாத பண்டிதர் இயற்றிய உலக நீதியில் அவர் தரும் அறிவுரை இது - ‘கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’.

    இன்னும் ஆலயத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் பாடல்கள் தமிழில் ஏராளம்.

    ஆலயம் அகவாழ்வு மற்றும் புறவாழ்வு ஆகியவற்றின் மையம். அதை வைத்தே நமது வாழ்க்கை சுழன்றது. சுழல்கிறது. சுழலப் போகிறது.

    இந்திய நாட்டில் உள்ள பல்லாயிரக்கணக்கான கிராமங்களிலும், நகரங்களிலும் உள்ள கோவில்களின் எண்ணிக்கை எண்ணுக்கு அடங்காதது.

    இப்படிப்பட்ட கோவில்கள் இருக்கும் திருத்தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டு தம் ஆன்மீக வாழ்க்கையை மேம்படுத்திக் கொண்டு வாழ்ந்தனர் அறிவு சால் நம் பாரத மக்கள்.

    கன்யாகுமரியிலிருந்து கைலாயம் வரை உள்ள கோவில்களில் ஒவ்வொன்றுக்கும் ஒரு சிறப்பு உண்டு.

    அன்பர்கள் குடும்பத்தோடும், சுற்றத்தோடும் தலம் தலமாக யாத்திரை மேற்கொண்டு அங்கு இருக்கும் சிறப்புகளை அறிந்து அவற்றை எங்கும் பரப்பி வந்தனர்; அருளாளர்கள் பல நூல்களின் வாயிலாக அவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வந்தனர்.

    இப்படிப்பட்ட ஆலயங்கள் பற்றிய சிறப்புகளைச் சொல்வதற்கான அரிய வாய்ப்பு லண்டனிலிருந்து ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியின் வாயிலாகக் கிடைத்தது.

    நிகழ்ச்சியை இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, ஜெர்மனி, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, இலங்கை, இந்தியா உள்ளிட்ட ஏராளமான நாடுகளில் உள்ள அன்பர்கள் கேட்டனர்; பாராட்டினர்.

    அவர்கள் அனைவருக்கும் எனது நன்றி உரித்தாகுக.

    ஞானமயம் நிகழ்ச்சியை நடத்தும் திரு சுவாமிநாதன் அவர்களுக்கும் திரு கல்யாணசுந்தர சிவாச்சாரியார் அவர்களுக்கும் எனது உளமார்ந்த நன்றி.

    ஆலயம் அறிவோம் உரைகளை 2019 செப்டம்பர் இறுதியில் தொடங்கி தொய்வின்றி வாரந்தோறும் லண்டனிலிருந்து ஒளிபரப்பாகிய ஞானமயம் நிகழ்ச்சியில் இனிய குரலில் வழங்கியவர் திருமதி பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

    Facebook.com/gnanamayam மற்றும் YOUTUBEஇல் ஆலயம் அறிவோம் தொடரை வாரந்தோறும் கேட் பல அன்பர்களும் இந்த உரைகளை அப்படியே நூல் வடிவாக வெளியிட வேண்டும் என்று கூறவே இந்த நூல் இப்போது வெளி வருகிறது.

    இதை வெளியிட முன்வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக!

    30 திருத்தலங்கள் முதல் பாகத்தில் இடம் பெற, அடுத்த பாகத்தில் இன்னும் பல தலங்கள் இடம் பெறும் என்ற நற்செய்தியுடன் உங்களை திருத்தல யாத்திரைக்கு அழைக்கிறேன்.

    சான்பிரான்ஸிஸ்கோ

    18-6-2022

    ச.நாகராஜன்

    1) மும்பை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்

    ஆலயம் அறிவோம்!

    வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

    விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்

    விநாயகனே வேட்கை தணிவிப்பான் – விநாயகனே

    விண்ணுக்கும் மண்ணுக்கும் நாதனுமாந் தன்மையினால்

    கண்ணிற் பணிமின் கனிந்து

    கபில தேவ நாயனார் திருவடி போற்றி

    ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது பாரதத்தின் வணிகச் சிறப்பு நகரான மும்பையிலிருந்து அருள் பாலிக்கும் சித்தி விநாயகர் ஆலயமாகும்.

    மும்பை நகரில் மிகுந்த போக்குவரத்தும் ஜன நடமாட்டமும் உள்ள பிரபா தேவி பகுதியில் காகாசாஹிப் காட்கில் ரோடு, எஸ்.கே, போலே ரோட் சந்திப்பில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

    இந்த ஆலயம் தோன்றியது பற்றிய சுவையான வரலாறு ஒன்று உண்டு.

    டியூபாய் படீல் என்ற பணக்காரப் பெண்மணி மாதுங்காவில் வசித்து வந்தார். ஆர்ய சமாஜத்தைச் சேர்ந்தவர் அவர். அவருக்குக் குழந்தைப் பேறு இல்லை. அவர் விநாயக பக்தர். தனக்கு குழந்தைப் பேறு வேண்டி விநாயகருக்கு இந்த ஆலயத்தை அமைத்தார். ஆனால் அவருக்குக் குழந்தைப் பேறு இல்லாமல் போயிற்று. என்றாலும் இங்கு வந்து வழிபடும் பெண்மணிகளுக்குக் குழந்தைச் செல்வத்தை அருள வேண்டுமென அவர் மனமுருகப் பிரார்த்தித்தார். அவரது பிரார்த்தனை பலிக்கும் விதமாக இங்கு வந்து வழிபடும் அனைவருக்கும் தடைகள் நீங்கின. வளங்கள் ஓங்கின. குழந்தைச் செல்வம் உள்ளிட்ட அனைத்து நலன்களும் வரவே சித்தி விநாயகர், வரம் தரும் வர சித்தி விநாயகராகப் பிரசித்தி பெற்றார்.

    பக்தர்களும்,அரசியல் வாதிகளும், திரைப்பட நடிக, நடிகையரும், கலைஞர்களும், சாமான்யர்களும் காலை ஐந்தரை மணி முதல் இரவு வரை கூட்டம் கூட்டமாக இங்கு வந்து விநாயகரை வழிபட்டு அவர் அருள் கிடைக்கப் பெற்று ஆனந்தத்தில் திளைக்கின்றனர்.

    இவரை நவசாலா பவனர கணபதி என்று சிறப்புப் பெயரிட்டு அழைக்கின்றனர். தூரத்தில் இருந்து பார்த்தாலும் தெரியும் வகையில் உள்ள இந்தக் கோவில் ஐந்து அடுக்கு கட்டிடமாக அமைக்கப்பட்டுள்ளது. கருவறையின் மேலே சுமார் 12 அடி உயர தங்க முலாம் பூசப்பட்ட கலசமும் உள்ளது.

    விநாயகர் இரண்டரை அடி உயரமும் இரண்டடி அகலமும் உள்ள ஒரே கல்லில் செதுக்கப்பட்ட விநாயகராக அமைகிறார். சாதாரணமாக விநாயகரின் தும்பிக்கை இடப்புறமே வளைந்து இருக்கும். இந்த விநாயகருக்கு உள்ள தனிச் சிறப்பு இவரது துதிக்கை வலப்புறமாகத் திரும்பி இருப்பது தான். இவருக்கு சிவபிரான் போல நெற்றியிலும் ஒரு கண் உண்டு. நான்கு கரங்களை இவர் கொண்டிருப்பதால் சதுர் புஜ விநாயகர் என்று அனைவரும் இவரை அழைக்கின்றனர்.

    மேற்புற வலது கையில் தாமரை மலரையும் இடது கையில் கோடாரியையும் ஏந்தி இருக்கிறார். கீழே உள்ள கரங்களில் வலது கரத்தில் ஜபமாலையையும் இடது கரத்தில் மோதகத்தையும் கொண்டுள்ளார். பூணூலுக்குப் பதிலாக ஒரு நாகம் வலது தோளில் ஆரம்பித்து வயிற்றின் இடது பக்கம் வரை செல்கிறது.

    விநாயகரின் இன்னொரு முக்கியமான சிறப்பு அம்சம் இவரது இரு பக்கங்களிலும் ஸித்தி, புத்தி ஆகிய இருவரும் இருப்பது தான். புத்தியை ரித்தி என்று வடக்கே சொல்வது பழக்கம் என்பதால் இவரை ஸித்தி, ரித்தி விநாயகர் என்று அனைவரும் குறிப்பிடுகின்றனர்.

    இன்றைய நவீன யுகத்திற்கேற்ப அமைக்கப்பட்டுள்ள மடப்பள்ளியில் தயாரிக்கப்படும் நைவேத்தியம் ஒரு பிரத்யேகமான லிஃப்ட் மூலம் கர்பகிரஹத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விநாயகருக்கு படைக்கப்படுகிறது.

    பழைய காலத்தில் விநாயகரின் அருகே ஒரு பெரிய ஏரி இருந்தது.  இதர கட்டிடங்களும் இருந்தன. ஆனால் காலப் போக்கில் ஏரி இல்லை; கட்டிடங்கள் மாறி விட்டன. என்றாலும் விநாயகர் தனது இடத்தில் அப்படியே இருந்து அனைவருக்கும் அருள் பாலித்து வருகிறார்; அவ்வப்பொழுது கோவில் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

    1952ஆம் ஆண்டில் மும்பையில் எலிஃபின்ஸ்டன் சாலை அருகில் உள்ள சயானி சாலையை விரிவு படுத்தினர். அப்போது சாலையைத் தோண்டிய போது ஒரு அனுமார் சிலை கண்டெடுக்கப்பட்டது. அந்த அனுமார் இந்த சித்தி விநாயகர் ஆலையில் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆக இங்கு அநுமாருக்கும் தனி சந்நிதி ஒன்று உண்டு.

    மஹராஷ்டிரத்திற்கே உரித்தான முறையில் இங்கு விநாயக சதுர்த்தி உள்ளிட்ட பல விழாக்கள் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றன. மஹராஷ்டிரத்தை ஆண்ட பேஷ்வாக்கள் விநாயக சதுர்த்தியைப் பெரும் விழாவாக ஆக்கிக் கொண்டாடினர்.

    பால கங்காதர திலகர் நாட்டு மக்களை ஒன்றிணைக்க இந்த பண்டிகையை மக்கள்

    Enjoying the preview?
    Page 1 of 1