Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Maha Periyavaa - Part 1
Maha Periyavaa - Part 1
Maha Periyavaa - Part 1
Ebook568 pages8 hours

Maha Periyavaa - Part 1

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

‘மகா பெரியவா’ என்று அன்புடனும் மரியாதையுடனும் அழைக்கப்படும் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், காஞ்சி ஸ்ரீமடத்தின் 68-வது ஆச்சார்ய புருஷர். எளிமையின் எடுத்துக்காட்டு. கருணையின் பிறப்பிடம். அன்பின் வடிவம்.
தான் வாழ்ந்த நூறு வருடங்களிலும் அடியவர்களுக்கென்றே வாழ்ந்து, தன் அனுக்ரஹத்தை அனைவருக்கும் வாரி வழங்கி வந்திருக்கிறார் காஞ்சி பெரியவா.
உணவாகட்டும்; உறக்கமாகட்டும்; உரையாடலாகட்டும். எதிலுமே பகட்டு இருக்காது. கட்டுப்பாடு இருக்கும். காஞ்சி ஸ்ரீமடத்தில் அந்த மகான் வாழ்ந்த காலத்தில் ஓலைக் கொட்டகையின் ஓரமாக அவர் உடலை வளைத்துக் குறுக்கிப் படுத்து உறங்கியதைப் பார்த்து நெகிழ்ந்தவர்கள் இன்னமும் இருக்கிறார்கள்.
இறைவனோடு பக்தர்கள் நேருக்கு நேர் பேசும் ஒரு காட்சியை திருவனந்தபுரம் ஸ்ரீஅனந்தபத்மநாப ஸ்வாமி ஆலயத்தில் சில வருடங்களுக்கு முன் பார்த்துப் பரவசப்பட்டேன். அங்கு வந்த வயது முதிர்ந்த பெண்மணி ஒருவர், படுத்துறங்கும் பரந்தாமன் சந்நிதிக்கு எதிரே உள்ள ஒரு மேடையில் நின்று, ஸ்ரீஅனந்தனைப் பார்த்து வெகு நேரத்துக்கு மலையாளத்தில் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார். முதலில், தனக்கு முன்னால் உள்ள ஒரு பக்தருடன் அவர் பேசிக் கொண்டிருக்கிறார் என்று எண்ணி, கொஞ்சம் எட்டிப் பார்த்தேன். ஆனால், அவருக்கு முன்னும் பின்னும் நின்றிருந்த பக்தர்கள் அனைவரும் ஸ்ரீஅனந்தன் தரிசனத்திலேயே திளைத்திருந்தார்கள். அப்படி என்றால், வேறு யாரிடம் இவர் மனமுருகப் பேசிக் கொண்டிருக்கிறார் என்ற கேள்வி என் மனதைக் குடைய... சற்று நேரத்துக்குப் பிறகுதான் இந்தப் பெண்மணி, சாட்சாத் அந்த அனந்தனுடன் உரையாடிக் கொண்டிருக்கிறார் என்பது என் சிற்றறிவுக்கு எட்டியது.
அந்தக் கேரளப் பெண்மணியின் பக்தி என்னை வியக்க வைத்தது. பின்னர் ஒரு முறை கேரள நண்பர் ஒருவர் சொன்னார்: ‘இறை பக்தியில் இங்குள்ள பலரும் அப்படித்தான். தன் வீட்டில் உள்ளவருடன் பேசுவது போலவே இறைவனுடன் பேசுவார்கள். சில நேரங்களில் இறைவனும் அவர்களுக்குப் பதில் தருவான்.’
அடுத்து வந்த சில மாதங்களில் இதே காட்சியை குருவாயூர் திருக்கோயிலிலும் காண நேர்ந்தது. மெய் சிலிர்த்தேன்.
கிட்டத்தட்ட இதே போன்ற காட்சியை காஞ்சி ஸ்ரீமகா ஸ்வாமிகளின் அதிஷ்டானத்தின் முன்னாலும் சில நேரங்களில் நான் கண்டிருக்கிறேன். கண்களில் ஈரம் கசிய, அவரது அதிஷ்டானத்தின் முன் உருக்கமாகப் பிரார்த்தனை செய்து கொள்வார்கள். இவரிடம் பூரண சரணாகதி அடைந்தோர், நற்பலன்களை சுகமாக அனுபவித்து வருகிறார்கள்.
மகா பெரியவாளின் அன்புக்கும் ஆசிக்கும் பாத்திரமான எத்தனையோ பக்தர்கள் கடல் கடந்தும், மாநிலம் கடந்தும் தங்கள் அனுபவங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டார்கள்; இன்றும் பகிர்ந்து வருகிறார்கள். அதனால்தான், மகா பெரியவா நூல் தற்போது பத்து தொகுதி வரை வந்திருக்கிறது.
மகா பெரியவாளின் திருவடிகளுக்கு சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.
Languageதமிழ்
Release dateOct 23, 2020
ISBN6580138306188
Maha Periyavaa - Part 1

Read more from P. Swaminathan

Related to Maha Periyavaa - Part 1

Related ebooks

Reviews for Maha Periyavaa - Part 1

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Maha Periyavaa - Part 1 - P. Swaminathan

    http://www.pustaka.co.in

    மகா பெரியவா – தொகுதி 1

    Maha Periyavaa - Part 1

    Author:

    பி. சுவாமிநாதன்

    P. Swaminathan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/p-swaminathan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. சங்கரனாவது... கிங்கரனாவது?

    2. 'ஐயங்கார் ஸ்வாமிகளே... சந்தோஷமா?'

    3. சந்தியாவந்தனத்தின் பெருமை!

    4. அமைச்சருக்கு ஏன் அனுமதி இல்லை?

    5. சிதம்பர அனுபவம்!

    6. சுவிட்ஸர்லாந்து டூ இளையாற்றங்குடி!

    7. தன சம்பத்தா? புத்திர சம்பத்தா?

    8. பேத்திக்கு வேணுமாம் தாழம்பூ!

    9. தூய பக்திக்கு மதம் இல்லை!

    10. டி.வி.எஸ். வாகனத்தில் பெரியவா!

    11. ஆஞ்சநேயருக்கு ஏன் வடை மாலை?

    12. யோகி ராம்சுரத்குமாரும் பெரியவாளும்!

    13. பேரனை குணமாக்கிய பெரியவா

    14. காஞ்சிக்குப் போனார்... சிக்கல் தீர்ந்தது

    15. எம்.எம். இஸ்மாயிலுக்கு என்ன பிரசாதம்?

    16. குங்குமம் எடுக்க ஏன் தயக்கம்?

    17. அட்சதையை ஏன் தரையில் போட்டார்?

    18. மணி சாஸ்திரிக்கு வந்த பிரசாதம்

    19. 'எழுந்திரு சீதே... எங்கே ராமன்?'

    20. உணவும் கட்டுப்பாடும்!

    21. ஆசிர்வதித்துக் கொடுத்த வேல்

    22. ஓரிருக்கையும் பாதுகா பிரதிஷ்டையும்

    23. காப்பாற்றினார் மகா ஸ்வாமிகள்

    24. குழந்தைக்கு பெரியவா அருளிய பிரசாதம்!

    25. பெரியவா விரும்பி அணிந்த துளசிமாலை!

    26. அருள் இருந்தால் மட்டுமே தரிசனம்

    27. 'விளக்கு வைக்கறதுக்குள்ள கொண்டு சேர்க்கணும்!'

    28. சாப்டூர் ஜமீன்தாரும் கலவை கலகலப்பும்

    29. அமைதியைக் குலைத்த அப்பாவி பெண்மணி

    30. துரத்தித் துரத்தி தரிசித்த பக்தர்

    31. சங்கரன் பெற்ற தங்கக் காசு

    32. ஏழையின் திருமணத்துக்கு உதவச் சொன்ன மகான்

    33. 'பூர்ணாஹுதிக்குள்ள வரணும்...'

    34. தீரா நோய் தீர்த்த பாத தூளி மண்

    35. குழந்தை வரம் தந்த கொய்யாப்பழம்

    36. திடீரென வந்த பணக் கட்டுகள்

    37. 'தெரியறதா?' 'தெரியலை...'

    38. வீதிக்கே வந்தளித்த விஸ்வரூப தரிசனம்

    39. அருணாசலத்துக்கு காத்திருந்த ஆபத்து

    40. காமாட்சி அம்மன் கோயிலில் கிடைத்த திடீர் தரிசனம்

    41. விபத்தும் அருளாசியும்

    42. மருத்துவத் துறையில் மீண்டும் அதிசயம்

    43. கதவைத் திறந்த கருணை தெய்வம்

    44. தம்பதியை இணைக்க நடத்திய நாடகம்

    45. 'எனக்கும் தருவாளா ஊக்கத் தொகை?'

    46. பாக்கியசாலி பக்தர் டாக்டர் பத்ரிநாத்

    47. பெரியவா ஃபைபர் சிலை ஸ்ரீமடம் வந்த கதை

    மகா பெரியவா - தொகுதி 1

    நெகிழ வைக்கும் நினைவுகள்

    புது மெருகுடன்

    'செந்தமிழ்க் கலாநிதி'

    'குருகீர்த்தி ப்ரச்சாரமணி'

    பி. சுவாமிநாதன்

    என்னுரை

    நமது புராதனமான பாரத தேசத்தில் ஆலயங்களுக்கு எப்படிப் பஞ்சம் இல்லையோ, அதுபோல் அதிஷ்டானங்களுக்கும் பஞ்சமில்லை. தெய்வ சக்திதான் நம் இந்தியாவை முன்னேற்றப் பாதையில் வழி நடத்திச் செல்கிறது என்பது சத்தியமான உண்மை.

    தங்கள் ஜீவன் அடங்கிய பிறகும் சமாதிக்குள்ளும், அதிஷ்டானத்துக்குள்ளும், பிருந்தாவனத்துக்குள்ளும் குடி கொண்டிருக்கும் போற்றுதலுக்குரிய மகான்கள் சத்திய சொரூபமாக இருந்து, இந்த நாட்டையும் பக்தர்களையும் காத்து வருகிறார்கள்.

    தன் ஜீவ சமாதியில் இன்னும் சில நூறு ஆண்டுகளுக்கு வாழ்வேன் என்றார் மந்த்ராலய மகான் ஸ்ரீராகவேந்திரர்.

    'என் ஆத்மார்த்தமான பக்தர்களை இரவும் பகலும் விழித்திருந்து நான் காத்து வருகிறேன்' என்று சொல்லி இருக்கிறார் ஷீர்டி சாய் பகவான்.

    'தபோவனத்துக்கு என்னை நாடி வருபவர்களின் வாழ்க்கையை நான் பார்த்துக் கொள்வேன்' என்று திருக்கோவிலூர் மகான் ஞானானந்தகிரி ஸ்வாமிகள் அருளி இருக்கிறார்.

    பக்திக்கு நம்பிக்கைதான் முதல் தேவை. இந்த நம்பிக்கையோடு எந்த ஒரு மகானின் சந்நிதி தேடிச் செல்லும் பக்தரும் ஏமாற்றப்பட்டதாக சரித்திரம் இல்லை. இத்தகைய அரிதான மகான்களில் ஒருவர்தான் - காஞ்சி மகா ஸ்வாமிகள்.

    'மகா பெரியவா' என்று அன்புடனும் மரியாதையுடனும் அழைக்கப்படும் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், காஞ்சி ஸ்ரீமடத்தின் 68-வது ஆச்சார்ய புருஷர். எளிமையின் எடுத்துக்காட்டு. கருணையின் பிறப்பிடம். அன்பின் வடிவம்.

    தான் வாழ்ந்த நூறு வருடங்களிலும் அடியவர்களுக்கென்றே வாழ்ந்து, தன் அனுக்ரஹத்தை அனைவருக்கும் வாரி வழங்கி வந்திருக்கிறார் காஞ்சி பெரியவா.

    உணவாகட்டும்; உறக்கமாகட்டும்; உரையாடலாகட்டும். எதிலுமே பகட்டு இருக்காது. கட்டுப்பாடு இருக்கும். காஞ்சி ஸ்ரீமடத்தில் அந்த மகான் வாழ்ந்த காலத்தில் ஓலைக் கொட்டகையின் ஓரமாக அவர் உடலை வளைத்துக் குறுக்கிப் படுத்து உறங்கியதைப் பார்த்து நெகிழ்ந்தவர்கள் இன்னமும் இருக்கிறார்கள்.

    ஆன்மிக க்ஷேத்திரமாம் காஞ்சி மாநகருக்குச் சென்று எந்த ஒரு ஆலயத்தையும் தரிசிக்காமல், சாலைத் தெருவில் உள்ள அந்த சந்நியாசியின் அதிஷ்டானத்தை மட்டுமே தரிசித்து ஊர் திரும்பும் பக்தர்கள் உண்டு என்பதை நான் கண்ணாரக் கண்டிருக்கிறேன்.

    இறைவனோடு பக்தர்கள் நேருக்கு நேர் பேசும் ஒரு காட்சியை திருவனந்தபுரம் ஸ்ரீஅனந்தபத்மநாப ஸ்வாமி ஆலயத்தில் சில வருடங்களுக்கு முன் பார்த்துப் பரவசப்பட்டேன். அங்கு வந்த வயது முதிர்ந்த பெண்மணி ஒருவர், படுத்துறங்கும் பரந்தாமன் சந்நிதிக்கு எதிரே உள்ள ஒரு மேடையில் நின்று, ஸ்ரீஅனந்தனைப் பார்த்து வெகு நேரத்துக்கு மலையாளத்தில் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார். முதலில், தனக்கு முன்னால் உள்ள ஒரு பக்தருடன் அவர் பேசிக் கொண்டிருக்கிறார் என்று எண்ணி, கொஞ்சம் எட்டிப் பார்த்தேன். ஆனால், அவருக்கு முன்னும் பின்னும் நின்றிருந்த பக்தர்கள் அனைவரும் ஸ்ரீஅனந்தன் தரிசனத்திலேயே திளைத்திருந்தார்கள். அப்படி என்றால், வேறு யாரிடம் இவர் மனமுருகப் பேசிக் கொண்டிருக்கிறார் என்ற கேள்வி என் மனதைக் குடைய... சற்று நேரத்துக்குப் பிறகுதான் இந்தப் பெண்மணி, சாட்சாத் அந்த அனந்தனுடன் உரையாடிக் கொண்டிருக்கிறார் என்பது என் சிற்றறிவுக்கு எட்டியது.

    அந்தக் கேரளப் பெண்மணியின் பக்தி என்னை வியக்க வைத்தது. பின்னர் ஒரு முறை கேரள நண்பர் ஒருவர் சொன்னார்: 'இறை பக்தியில் இங்குள்ள பலரும் அப்படித்தான். தன் வீட்டில் உள்ளவருடன் பேசுவது போலவே இறைவனுடன் பேசுவார்கள். சில நேரங்களில் இறைவனும் அவர்களுக்குப் பதில் தருவான்.'

    அடுத்து வந்த சில மாதங்களில் இதே காட்சியை குருவாயூர் திருக்கோயிலிலும் காண நேர்ந்தது. மெய் சிலிர்த்தேன்.

    கிட்டத்தட்ட இதே போன்ற காட்சியை காஞ்சி ஸ்ரீமகா ஸ்வாமிகளின் அதிஷ்டானத்தின் முன்னாலும் சில நேரங்களில் நான் கண்டிருக்கிறேன். கண்களில் ஈரம் கசிய, அவரது அதிஷ்டானத்தின் முன் உருக்கமாகப் பிரார்த்தனை செய்து கொள்வார்கள். இவரிடம் பூரண சரணாகதி அடைந்தோர், நற்பலன்களை சுகமாக அனுபவித்து வருகிறார்கள்.

    இந்த பிரமாண்டமான நூலில் வந்திருக்கும் அனுபவங்கள் அனைத்தும் 'திரிசக்தி' இதழில் வெளியானவை.

    மகா பெரியவாளின் அன்புக்கும் ஆசிக்கும் பாத்திரமான எத்தனையோ பக்தர்கள் கடல் கடந்தும், மாநிலம் கடந்தும் தங்கள் அனுபவங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டார்கள்; இன்றும் பகிர்ந்து வருகிறார்கள். அதனால்தான், மகா பெரியவா நூல் தற்போது பத்து தொகுதி வரை வந்திருக்கிறது.

    மகா பெரியவாளின் திருவடிகளுக்கு சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.

    என்றும் அடியவன்

    பி. சுவாமிநாதன்

    'மதுரா வில்லா'

    புது எண்: 7, பீட்டர் தெரு, கிழக்குத் தாம்பரம், சென்னை - 600 059.

    இல்லம்: 044 - 2239 1788 கைப்பேசி: 98401 42031

    email: swami1964@gmail.com

    facebook:

    www.facebook.com/swami1964

    Website:

    http://pswaminathan.in

    youtube channel:

    www.youtube.com/channel/UCVPS6VyvZW2oJVB3zkzh7Ng

    1. சங்கரனாவது... கிங்கரனாவது?

    பாரத மண்ணில் பிறந்த ஒவ்வொரு ஆத்மாவும் - இங்கு ஜனித்திருக்கும் ஒவ்வொரு ஜீவராசியும் - அது மரமோ, செடியோ, கொடியோ, புழுவோ, பூச்சியோ... 'இத்தகைய புண்ணிய பூமியில் நாம் புனிதப் பிறப்பு எடுத்திருக்கிறோமே' என்று அனுதினமும் பெருமை கொள்ள வேண்டும்; பாரத மண்ணைப் போற்றி வணங்க வேண்டும்.

    இந்த மண்ணுக்கு நாம் செய்யும் ஒரே நன்றிக் கடன் - இறை சேவைதான்! இங்கு அவதரித்த ரிஷிகளும் மகான்களும் அதை செவ்வனே செய்துள்ளார்கள். தங்களைச் சார்ந்திருக்கும் மனித குலத்தின் அமைதிக்கும் இதையே வலியுறுத்திச் சென்றுள்ளார்கள்.

    மகான்கள் என்பவர்களும் மனிதனாக இந்த மண்ணில் தோன்றியவர்கள்தான். ஒரு தாயின் கருவறைக்குள் பத்து மாதம் குடி இருந்தவர்கள்தான்.

    இருந்தாலும், மனிதனுக்கும் மகானுக்கும் என்ன வேறுபாடு?

    மனிதர்கள் பிறக்கிறார்கள்; வாழ்கிறார்கள்; இறக்கிறார்கள்.

    மகான்கள் அவதரிக்கிறார்கள்; அருள்கிறார்கள்; முக்தி அடைகிறார்கள்.

    மனிதனும் மகான் ஆகலாம். எப்போது?

    - ஆசைகளை வேரறுக்கும்போது.

    - புலன்களை அடக்கும்போது.

    - தர்ம சிந்தனை தலைதூக்கும்போது.

    இப்படி மிகச் சிறந்த உதாரண புருஷராக வாழ்ந்த ஒரு மகான்தான் - காஞ்சி மகா ஸ்வாமிகள்! இவரது தரிசனத்தால் இன்புற்றவர்கள் ஏராளம்; அடைந்த பலன்களோ தாராளம். சுவாரஸ்யமான அவரது வாழ்க்கைச் சரிதம்தான் இந்த நூல். இதுவரை கேள்விப்பட்டிராத அனுபவங்களும், படித்திராத சுவையான செய்திகளும் இந்த நூலை அலங்கரிக்கப் போகிறது.

    அதற்கு முன், அவரது அருளாசிக்குப் பாத்திரமான ஒருவரது மெய்சிலிர்க்கும் அனுபவத்தைப் பார்ப்போம்.

    இந்த சம்பவம் நடந்து சுமார் முப்பது வருடங்களுக்கு மேல் இருக்கும். சதாசிவம்- ஜானகி, கும்பகோணத்தில் வசித்து வந்த தம்பதியர். பக்தியில் பெருமளவு திளைத்திருந்த இவர்களுக்கு ஒரே ஒரு மகன். அமெரிக்காவில் ஒரு பல்கலைக்கழகத்தில் பணி புரிந்து வந்தான்.

    சென்னையில் பணியாற்றி, ஓய்வு பெற்ற சதாசிவத்துக்குத் தன் எஞ்சிய நாட்களை ஓர் ஒப்பற்ற ஆன்மிக க்ஷேத்திரத்தில் செலவிட வேண்டும் என்பது உயரிய விருப்பம். எனவே, மனைவி ஜானகியோடு கும்பகோணத்துக்குக் குடி பெயர்ந்தார். கோயில்கள் நிறைந்த அந்தப் புனித நகரில் அவரது பொழுதுகள் ரொம்பவும் நிம்மதியாகவே கழிந்தன. தினமும் காவிரி ஸ்நானம், கோயில்- குளம் என்று ஜானகியோடு பயணித்து வந்தார்.

    சதாசிவத்தின் தந்தையார் வைத்தீஸ்வரனுக்கு அந்தக் காலத்தில் - மகா பெரியவா மேல் அபரிமிதமான பக்தி இருந்தது. மகனைக் கூட்டிக் கொண்டு அடிக்கடி காஞ்சிபுரம் பயணிப்பார் வைத்தீஸ்வரன். மகா ஸ்வாமிகளின் திருக்கரங்களால் பிரசாதம் பெற்றுக் கொள்ளும் பாக்கியம் சதாசிவத்துக்கு அடிக்கடி வாய்த்தது. மகா ஸ்வாமிகளின் மேல் இருந்த இந்த பக்தி, சதாசிவத்தின் பிற்காலத்திலும் தொடர்ந்ததில் ஆச்சரியமில்லை.

    தந்தையார் வைத்தீஸ்வரன் காலமான பின்னும் மகா ஸ்வாமிகள் காஞ்சிபுரத்தில் இருக்கும் காலத்தில் ஒவ்வொரு அனுஷ (பெரியவாளின் ஜன்ம நட்சத்திரம்) தினத்தன்றும் தம்பதி சமேதராகக் காஞ்சிக்குச் சென்று விடுவார் சதாசிவம். இதில், எந்த ஒரு இடையூறோ, மாற்றமோ வந்ததில்லை. தான் கும்பகோணத்தில் இருந்தாலும் சரி... சென்னையில் இருந்தாலும் சரி... அனுஷ தினத்தன்று ஸ்வாமிகள் காஞ்சியில் இருக்கிறாரா என்பதை மட்டும் உறுதி செய்து கொண்டு தன் பயணத்தைத் துவங்கி விடுவார். ஒருவேளை, க்ஷேத்திராடனம் காரணமாக காஞ்சிபுரம் தவிர்த்து வேறு எங்கேனும் மகா ஸ்வாமிகள் முகாமிட்டிருந்தால், அப்போது பயணப்பட மாட்டார். சிவ சொரூபமான ஆச்சார்யாளை, அனுஷ தினத்தன்று காஞ்சியில் கண்டு வணங்குவது என்பதை, இப்பிறவியில் தான் பெற்ற பெரும் பேறாக எண்ணி பூரித்திருந்தார் சதாசிவம்.

    நல்ல வசதி வாய்ப்பு உள்ளவர் என்று சொல்ல முடியாவிட்டாலும், ஓய்வு பெற்ற வாழ்க்கையைக் கொஞ்சம் நிம்மதியாகவே கழித்து வந்தார் சதாசிவம். கும்பகோணத்தில் இவர் வசித்து வந்த காலத்தில், காஞ்சிக்குச் செல்லும்போது, முதல் நாள் இரவே புறப்பட்டு விடுவார். சென்னைக்குச் செல்லும் ஏதேனும் ஒரு அரசுப் பேருந்தில் பயணித்து விழுப்புரம் சென்று விடுவார். பிறகு, அங்கிருந்து வேறொரு பேருந்தில் காஞ்சிக்குப் பயணப்படுவார். இது எந்த விதமான சிக்கலும் இல்லாமல் நல்ல விதமாகப் போய்க் கொண்டிருந்தது. 'இதெல்லாம் மகா பெரியவாளின் அருள்தான்' என்று தன் மனைவியிடம் பெருமையாகச் சொல்லி சந்தோஷப்படுவார் சதாசிவம்.

    எதுவுமே சுமுகமாகப் போய்க் கொண்டிருந்தால் அதில் ஒரு சுவாரஸ்யமும் இருக்காது; விறுவிறுப்பும் இருக்காது. எந்த ஒரு நிகழ்விலும் ஒரு தடையோ, இடர்ப்பாடோ வந்தால்தான் அதில் ஒரு ரசிப்புத் தன்மை இருக்கும். அந்தத் தடையில் இருந்து மீளும்போது நம்மையும் அறியாமல் ஒரு பரவசம் ஏற்படும்; பரமானந்தம் கிடைக்கும். இதனால்தான் தன்னைத் தரிசிக்க வரும் நாயன்மார்களுக்கும் ஆழ்வார்களுக்கும் அவ்வப்போது ஏதாவது சோதனைகளைத் தந்து பின் சுமுகமாக ஆட்கொண்டு அருள்வான் ஆண்டவன்.

    அவ்வளவு ஏன்... ஒரு கல்யாணம் என்று வந்தால், மகளின் கழுத்தில் தாலி ஏறுவதற்கு முன், பெண்ணைப் பெற்ற தகப்பனுக்கு ஓரிரண்டு இடைஞ்சல்கள் வந்து, அதில் இருந்து அவர் சுமுகமாக மீண்டால்தான் அந்தக் கல்யாணம் பின்னாட்களில் சிறப்பாகப் பேசப்படும். 'யப்பப்பா... நம்ம பானுவோட கல்யாணத்தன்னிக்குக் கார்த்தால மாப்பிள்ளை பல் தேய்க்க சீர்வரிசை கொடுத்தப்ப, திரட்டுப்பால் அனுப்பலையேனு மாப்பிள்ளையோட அப்பா எந்த அளவுக்கு நடு மண்டபத்துல உக்காந்து கலாட்டா பண்ணார்? நல்லவேளை, பக்கத்துலயே ஆவின் கடை இருந்ததுனால பொழைச்சோம். பானுவோட அப்பாவே பதறி அடிச்சிண்டு போய் வாங்கிண்டு வந்துட்டார்' என்றெல்லாம், பிற்காலத்தில் சிலாகித்துப் பேசுவது பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம், அல்லவா?

    கிட்டத்தட்ட இதைப் போன்ற ஒரு சம்பவம், சதாசிவத்தின் அனுஷ யாத்திரையின்போது நிகழ்ந்து விட்டது. குறிப்பிட்ட அந்த அனுஷ தினத்தன்று மகா ஸ்வாமிகள் காஞ்சிபுரத்தில்தான் இருக்கிறார் என்பதை முன்கூட்டியே உறுதிப்படுத்திக் கொண்டார் சதாசிவம். மனைவி ஜானகியிடம் சொல்லி விட்டு, முந்தைய நாள் மாலையே காஞ்சிபுரம் புறப்பட்டு விடுவது என்பதுதான் திட்டம். மகா ஸ்வாமிகளின் தரிசனத்துக்கு உண்டான பழங்கள், கல்கண்டு போன்றவற்றை மாலை வேளையில் வாங்கி வரலாம் என்று தன் வீட்டு வாசலுக்கு வந்தவருக்கு சின்ன அதிர்ச்சி. வழக்கமான பரபரப்புடன் காணப்படும் அந்தத் தெரு, அன்று சுரத்து குறைந்து காணப்பட்டது. தெருவின் ஓரத்தில் ஆங்காங்கே விரிக்கப்பட்டிருக்கும் கடைகளையும் காணவில்லை.

    குழம்பித் தவித்த சதாசிவத்தின் முகத்தைப் பார்த்த ஒரு கீரை வியாபாரி - அவர் வீட்டு அருகே கடை விரித்திருப்பவர், என்ன சாமீ... பையும் கையுமா கடைக்குப் பொறப் படறியா... மெட்ராஸ்ல ஏதோ அரசியல் பிரச்னை யாம். ஒரு கட்சிக்காரங்க கூட்டமா திரண்டு வந்து எல்லா கடைங்களையும் மூடச் சொல்லி உத்தரவு போட்டுட்டுப் போறாங்க. 'நமக்கேன் வம்பு'னு எல்லா கடைக்காரங்களும் மூடிட்டு வீட்டுக்குப் பொறப் பட்டுட்டாங்க. அதான் தெருவே வெறிச்சோடிக் கிடக்கு என்றார்.

    அட ஈஸ்வரா... வெளியூருக்கு பஸ்ஸெல்லாம் போறதோ? என்று கீரை வியாபாரியிடமே ஒரு கேள்வியைப் போட்டார் சதாசிவம். ஏஞ் சாமீ... அரசியல் பிரச்னைனு சொல்றேன்... கடைங்களையே பூட்ட வெச்சவங்க, பஸ்ஸுங்களை மட்டும் ரோட்டுல போக விடுவாங்களா... புளியஞ்சேரி போகணும்னு ஒண்ணரை மணி நேரமா உக்காந்திருக்கேன். இன்னிக்கு நடை யாத்திரையாத்தான் வீட்டுக்குப் போகணும் போலிருக்கு. சரி சாமீ... நான் பொறப்படறேன். ரோட்டுல கீட்டுல அலையாத... எவனாவது கல் விட்டு அடிச்சுரப் போறான் என்று சொல்லி விட்டு அந்த புளியஞ்சேரி கீரை வியாபாரி, காலியான கூடையைத் தலையில் கவிழ்த்துக் கொண்டு நடையைக் கட்ட ஆரம்பித்தார்.

    தளர்வான முகத்தோடு வீட்டுக்குள் வந்தார் சதாசிவம். ஏங்க... பழங்கள் வாங்கிட்டு வர்றேன்னு போனீங்க... வெறும் பையோட வந்திருக்கீங்க... எதுவுமே வாங்கலையா? என்று பரபரத்தாள் ஜானகி. விஷயத்தை முழுவதுமாக மனைவிக்கு விளக்கினார் சதாசிவம். பிறகு, என்ன ஜானகீ... இப்படி ஆயிடுத்து? நாளைய அனுஷத்தன்னிக்கு காஞ்சிபுரம் போக முடியுமானு தெரியலியே... ஏன் இந்த சோதனை? என்று கலங்கியவர், மகா ஸ்வாமிகளை மனதுக்குள் நினைத்துப் பிரார்த்தித்துக் கொண்டார். பிறகு, சரி, நான் வாசல்ல உக்காந்துக்கறேன். ஏதாவது பஸ் போறதானு பாக்கறேன். நாளைக்கு நாம காஞ்சிபுரத்துல இருக்கணும்னு பிராப்தம் இருந்தா, நிச்சயம் அங்கே இருப்போம் என்று சொல்லி விட்டு, வாசலுக்கு வந்தார். மெள்ள வீட்டு வாசலில் நின்று, சாலையின் இரு பக்கத்தையும் பார்வையால் துழாவிக் கொண்டிருந்தார்.

    அப்போதுதான் அந்த சம்பவம் நிகழ்ந்தது. வாசலில் நின்று கொண்டிருந்த சதாசிவத்தின் அருகே வெள்ளை நிற அம்பாஸடர் கார் ஒன்று வேகமாக வந்து நின்றது. கார் வந்த வேகத்தைக் கண்ட சதாசிவம், மெள்ளப் பின்வாங்கி பிரமிப்புடன் நின்றார். பிறகு, காருக்குள் இருந்து யார் இறங்குகிறார்கள் என்பதை வியப்புடன் கவனிக்க ஆரம்பித்தார்.

    பஞ்சகச்சம் அணிந்து தும்பைப்பூ மாதிரியான வெள்ளை நிறத்தில் சட்டையுடன்- நெற்றி நிறைய விபூதி தரித்த ஒருவர் டிரைவர் இருக்கையில் இருந்து கீழே இறங்கினார். உள்ளே- அவருடைய மனைவி முன் இருக்கையில் இருந்தார். இப்படிப்பட்ட ஒருவர் காரில் இருந்து இறங்கியதைப் பார்த்ததும், சதாசிவத்துக்கு என்ன சொல்வது என்று தோன்றவில்லை. எதற்காக இவர் இங்கே காரை நிறுத்தினார் என்பதும் புரியவில்லை. பஞ்சகச்ச ஆசாமியே ஆரம்பித்தார்: சார், நமஸ்காரம்... எம் பேரு சங்கரன். உள்ளே இருக்கிறது என் மனைவி. தஞ்சாவூர்லேருந்து வந்திண்டிருக்கோம். என் மனைவிக்குத் திடீர்னு தலைவலி. அவளுக்கு ஒரு நல்ல டிகிரி காபி சாப்பிட்டா, எல்லாமே பறந்தோடி விடும். இன்னிக்குன்னு பார்த்து ஓட்டல் எதுவும் இல்லை. திடீர்னு ஏதோ களேபரத்தால எல்லா ஓட்டலும் மூடிட்டா போலிருக்கு. உங்களைப் பார்த்தவுடனே காரை நிறுத்தினேன். இது உங்க வீடுன்னு நினைக்கறேன். உங்களுக்கு சிரமம் இல்லேன்னா, எனக்கும் என் மனைவிக்கும் ஸ்ட்ராங்கா ஒரு காபி கொடுக்க முடியுமா?

    புதியவரின் தேஜஸையும், அவரது அணுகுமுறையையும் பார்த்தால், அவர்களுக்கு சாப்பாடே போடலாம் போல இருந்தது சதாசிவத்துக்கு. எனவே, கொஞ்சமும் தயங்காமல், தாராளமா... உள்ளே வாங்கோ. காபி என்ன... டிபன் வேணும்னாகூட பண்ணித் தர்றேன். என் மனைவி ஜானகியும் இருக்கா. வாங்கோ என்று இருவரையும் பார்த்துக் கனிவாகச் சொன்னார்.

    வண்டியை 'லாக்' செய்து விட்டு, சங்கரனும் அவரது மனைவியும் சதாசிவத்தின் வீட்டின் உள்ளே நுழைந்தனர். அதற்கு முன் சங்கரனின் மனைவி, மறக்காமல் சில பழங்களையும் மல்லிகைப்பூவையும் எடுத்துக் கொண்டாள். புதியவர்களின் வீட்டுக்கு நுழைவதற்கு முன், ஏதாவது எடுத்துச் செல்லுதல் பண்பாடு ஆயிற்றே!

    ஜானகி போட்டுக் கொடுத்த மணக்கும் காபியைக் குடித்து முடித்து விட்டு, இருவரும் வாயார வாழ்த்தினார்கள். பிறகு, புறப்பட ஆயத்தம் ஆனார்கள். அப்போது சதாசிவம், இப்ப நீங்க எதுவரைக்கும் பயணப்பட்டுண்டிருக்கேள்? என்று கேட்டார். ஒருவேளை சங்கரன், 'சென்னை' என்று சொன்னால், போகிற வழியில் தானும் தன் மனைவி ஜானகியும் தொற்றிக் கொண்டு போகலாமே என்கிற ஒரு நப்பாசை. நான் காஞ்சிபுரத்துல பெரியவாளைத் தரிசிக்கப் போயிண்டிருக்கேன். ஆறு மாசம் ஆஸ்திரேலியால எம் பையனோட இருந்தேன். போன வாரம்தான் தஞ்சாவூர் வந்தேன். நாளைக்கு அனுஷமா இருக்கு. பெரியவாளைப் பார்த்து ஆசிர்வாதம் வாங்கிண்டு வரலாம்னு கிளம்பினேன். நீங்களும் வரேளா? வண்டில இடம் இருக்கு என்று அவராகவே அழைப்பு விடுத்தபோது, சதாசிவமும் ஜானகியும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

    பிறகென்ன... சதாசிவமும் ஜானகியும், ஏதோ கிடைத்த உடைகளை ஒரு பைக்குள் அள்ளிக் கொண்டு சங்கரனுக்கு மனமார்ந்த நன்றியையும் சொல்லி விட்டு, வீட்டைப் பூட்டிக் கொண்டு அவர்களைப் பின்தொடர்ந்து வந்து காருக்குள் ஏறிக் கொண்டார்கள்.

    மகா பெரியவாளின் நெகிழ்வான சரிதத்தை மனமுருகப் பேசிக் கொண்டு வந்தபோது கார் சேத்தியாத்தோப்பைத் தாண்டி விட்டது. அதன் பிறகு, சதாசிவத்தின் கண்கள் மெள்ள செருகவே... சங்கரனிடம் சொல்லி விட்டுக் கண் அயர்ந்தார்.

    நேரம் எப்படி ஓடியது என்று தெரியவில்லை. சதாசிவம் கண் விழித்தபோது, காஞ்சி சங்கர மடத்தின் வாசலில் கார் நின்றிருந்தது. ஒரு கார் மடத்து வாசலில் நள்ளிரவு வேளையில் வந்து நிற்பதைப் பார்த்து ஓடோடி வந்தார், யூனிஃபார்ம் அணிந்திருந்த மடத்தின் வாட்ச்மேன். சதாசிவமும் அவரது மனைவியும் கீழே இறங்கிக் கொண்டதும் அவர்களைப் பார்த்து, உங்களை மடத்தின் வாசலில் இறக்கி விடுவதற்காகத்தான் இங்கே வந்தேன். என்னோட நண்பர் ஒருவர் பக்கத்துல இருக்கார். நான் அவா கிரஹத்துல தங்கிட்டு, நாளைக்குக் கார்த்தால உங்களை வந்து பார்க்கறேன் என்று சொல்லி விட்டு, புயல் போல் வண்டியை ஓட்டிக் கொண்டு நகர்ந்தார் சங்கரன். ஒரு சில நொடிகளிலேயே, அந்த கார் சதாசிவத்தின் பார்வையில் இருந்து மறைந்தது.

    மறுநாள் காலை... அனுஷத்தன்று பெரியவாளைத் தரிசிப்பதற்காக ஏராளமான பக்தர்கள் மடத்தில் கூடி இருந்தனர். மடத்துக்கு அருகே உள்ள கடைகளில் தான் வாங்கிய பழங்கள், கல்கண்டு, புஷ்பங்கள் போன்றவற்றை ஒரு மூங்கில் தட்டில் எடுத்துக் கொண்டு பஞ்சகச்சம் மற்றும் மடிசார் உடையுடன் சதாசிவமும் அவருடைய மனைவி ஜானகியும் பெரியவா தரிசனத்துக்காகக் காத்துக் கொண்டிருந்தனர். கூடவே, நேற்று இரவு தான் சந்தித்த சங்கரனையும் ஜனத் திரள் இடையே தேடினார்; ஆனால், அவரோ, அவரது மனைவியோ பார்வையில் சிக்கவில்லை. 'எப்படியும் மடத்தில் இருந்து புறப்படுவதற்கு முன் அவரை மீண்டும் ஒரு முறை பார்த்து நன்றி சொல்லி விட வேண்டும்' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டார் சதாசிவம்.

    அப்போது ஸ்ரீமடத்தின் உதவியாளர் ஒருவர், சதாசிவத்தின் தோளைத் தொட்டு, மாமா... கூப்பிட்டுண்டே இருக்கேன்... அப்படி யாரைத் தேடறேள்? பெரியவா உங்களைக் கூப்பிடறா... வாங்கோ, எம் பின்னால என்று சொல்லி விட்டு, சதாசிவத்தின் பதிலையும் எதிர்பாராமல் விறுவிறுவென்று நடந்தார். எதுவும் புரியாமல் உதவியாளரைப் பின்தொடர்ந்தனர் இருவரும்.

    வேத விற்பன்னர்களும் பாடசாலை மாணவர்களும் சூழ்ந்திருக்க... சாட்சாத் சிவபெருமானே கயிலாசத்தில் காட்சி தருவது போல் தன் ஆசனத்தில் அந்தப் பரபிரம்மம் வீற்றிருந்தது. முகத்தில் சாந்தம் தவழ, அந்த சங்கர சொரூபம் தன்னைத் தேடி வந்த பக்தர்களுக்கு அருள் பாலித்துக் கொண்டிருந்தது. அந்த மகானின் ஒரு பார்வை அசைவுக்காக அங்கே பல பண்டிதர்களும் செல்வந்தர்களும் கைகளைக் கட்டிக் கொண்டு பவ்யமாக காத்து நின்றிருந்தனர்.

    வாப்பா சதாசிவம்... கும்மோணத்துல உனக்கு பழம் ஏதும் கிடைக்கலையோ? அதான் மடத்து வாசல்லயே வாங்கிண்டு வந்திருக்கே போலிருக்கு என்று மகா பெரியவா திருவாய் மலர்ந்தபோது ஆடித்தான் போனார் சதாசிவம். ஆமாம் பெரியவா... அங்கே ஏதோ பிரச்னை... கடைங்களும் இல்லை... பஸ்ஸும் இல்லை...

    அதான், சொகுசா ஒரு கார்ல நன்னா தூங்கிண்டே மடத்துக்கு வந்து சேர்ந்துட்டியே... அப்புறம் என்ன... இந்தா என்று அவர் பிரசாதத்தை நீட்டவும், என்ன பதில் சொல்வதென்று தெரியாமல், தன் இரு கைகளையும் தாழப் பிடித்து, பிரசாதத்தை வாங்கிக் கொண்டு கண்களில் ஒற்றிக் கொண்டார். பிறகு, சங்கரன்னு ஒருத்தர்... அவர்தான் தன்னோட கார்ல என்னைக் கூட்டிண்டு வந்து நேத்து ராத்திரி இறக்கி விட்டுட்டுப் போனார். அவருக்குத்தான் நன்றி சொல்லணும் என்றார் குரலில் குழைவாக.

    மடத்துக்கு வரணும்னு நினைச்சே... வந்துட்டே... இனிமே சங்கரனாவது, கிங்கரனாவது என்று பெரும் குரல் எடுத்து, சிரிக்க ஆரம்பித்தது அந்தப் பரபிரம்மம். சதாசிவத்துக்கு ஏதோ புரிவது போல் இருந்தது. ஆனால், புரியாதது மாதிரியும் இருந்தது. முகம் குழப்பத்துடனே காணப்பட்டது. பஸ் எல்லாம் ஓட ஆரம்பிச்சுடுத்து... மடத்துல போஜனம் பண்ணிட்டு, ஜாக்கிரதையா ஊர் போயிட்டு வா என்று ஆசிர்வதித்தார் பெரியவா.

    நடந்து முடிந்த காட்சிகளின் பிரமிப்பில் இருந்து மீள முடியாமல், வெளியே வந்த சதாசிவம், நேற்று நள்ளிரவு தான் மடத்து வாசலில் இறங்கியபோது பணியில் இருந்த வாட்ச்மேனைக் கண்டார். அவரை அருகே அழைத்தார். ஏம்ப்பா... நேத்து ராத்திரி பன்னிரண்டு மணிக்கு ஒரு வெள்ளை அம்பாஸடர் கார்ல நான் மடத்து வாசல்ல இறங்கினபோது ஒரு பெரியவர் வண்டி ஓட்டிண்டு வந்தாரே... அவர் திரும்ப இன்னிக்கு வந்தாரா? என்று கேட்டார்.

    என்ன சாமீ... நேத்து ராத்திரியா? எனக்கு டூட்டியே இல்லியே சாமீ... காலைலதானே நான் வந்திருக்கேன்.

    சதாசிவம் மீண்டும் அதிர்ந்தார். இல்லேப்பா... நேத்து ராத்திரி நான் உன்னைப் பார்த்தேனே... இதே இடத்து வாசல்ல... என்றார், புருவம் உயர்த்தி. என்ன சாமீ நீங்க... சொன்னதையே திரும்பத் திரும்பத் சொல்றீங்க... நேத்திக்கு ராத்திரி செக்யூரிட்டி டூட்டிக்கு ஆளே இங்க இல்ல சாமீ என்று சொல்லி விட்டு, பக்தர்களை ஒழுங்குபடுத்தும் பணிக்குத் திரும்பினார்.

    சதாசிவத்தின் கண்களில் ஜலம் தளும்பியது. அப்படி என்றால்..... நேற்று இரவு என்னையும் என் மனைவியையும் கும்பகோணத்தில் இருந்து இங்கே கூட்டிக் கொண்டு வந்த சங்கரன் யார்? என்று மனம் நெகிழ்ந்து அரற்றினார். சர்வமும் உணர்ந்த சங்கரனாக அவருக்கு மகா பெரியவா ஒரு விநாடி காட்சி தந்து மறைந்தார்.

    பெரியவா... என்று பெரும் குரலெடுத்து அழைத்து, அந்த மடத்தின் வாசலில்- மண் தரையில் - பெரியவா இருக்கும் திசையை நோக்கி சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார் சதாசிவம். கூடவே, அவரது மனைவியும்!

    2. 'ஐயங்கார் ஸ்வாமிகளே... சந்தோஷமா?'

    கொஞ்சம் பழைய சம்பவம் இது... காஞ்சி மடத்தில் அந்த நாட்களில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் தர்க்க சாஸ்திரக் கூட்டங்கள் நடக்கும். 'சதஸ்' என்பார்கள். இது போன்ற நாட்களில் மடமே களை கட்டி இருக்கும். விழாக் கோலம் பூண்டிருக்கும். வேத முழக்கங்கள் காதில் தேனாகப் பாயும்.

    மகா பெரியவாள் நடு நாயகமாக கம்பீரமான ஓர் ஆசனத்தில் அமர்ந்திருக்க, பெரிய பெரிய பண்டிதர்கள், வித்வான்கள் போட்டி போட்டுக் கொண்டு இந்த சதஸில் கலந்து கொள்வார்கள். அவர்களின் முகத்தில் தென்படும் தேஜஸைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர்கள் கற்ற வித்தையைக் கண் கொண்டு உணர முடியும். ஆன்மிகம், ஆகமம், சாஸ்திரம், சம்பிரதாயம் என்று பல தலைப்புகளுடன் விவாதங்கள் ஆதாரபூர்வமாக அனல் பறக்கும். வாதங்கள் பூதாகரமாகக் கிளம்புகின்ற சந்தர்ப்பங்களில் பெரியவா இன்முகத்துடன் தலையிட்டு, அதற்கு ஒரு தீர்ப்பைச் சொல்லி முடித்து வைப்பார். பண்டிதர்கள் சமாதானம் ஆவார்கள்.

    இந்த விவாதங்களில் கலந்து கொள்ளும் பண்டிதர்களுக்கு கலைமகளின் ஆசி நிரம்பவே உண்டு. ஆனால், அலைமகளின் ஆதரவு கொஞ்சமும் இருக்காது. அதாவது, படிப்பு விஷயத்தில் ஜாம்பவன்கள்; ஆனால், லௌகீக விஷயத்தில் பெரும்பாலும் கஷ்டப்படுபவர்கள். எனவே, இதில் கலந்து கொள்ள வருகிற அனைவருக்கும் - வயது வித்தியாசம் பாராமல் தலா நூறு ரூபாய் சன்மானமாகக் கொடுக்கும் வழக்கத்தை ஒரு முறை பெரியவாளே ஆரம்பித்து வைத்திருந்தார்.

    அது ஒரு வெள்ளிக்கிழமை... வழக்கம்போல் பண்டிதர்கள் பலரும் காஞ்சி ஸ்ரீமடத்தில் உற்சாகமாகக் கூடி இருந்தனர். இதில் கலந்து கொள்கிற பண்டிதர்கள் விஷயத்தில் சைவம், வைணவம் என்கிற பேதம் எப்போதும் இருக்காது. மகா பெரியவா உட்கார்ந்திருக்கும் சதஸ் மண்டபத்தில் தாங்களெல்லாம் கலந்து கொண்டு பேசுவதையே பெரும் பேறாக எண்ணினார்கள் அவர்கள்.

    சின்ன காஞ்சிபுரத்தில் இருந்து ஒரு வைணவ பண்டிதரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு வந்திருந்தார். அன்றைய விவாதங்கள் வெகு விறுவிறுப்பாகப் போய் முடிந்தது. கூட்டம் முடிந்த பிறகு பெரியவா முன்னிலையில் மடத்து உயர் அதிகாரிகள், பண்டிதர்கள் ஒவ்வொருவருக்கும் சம்பாவணை கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அனைவரும் சம்பாவணையை வாங்கிக் கொண்டு, பெரியவாளின் பாதார விந்தங்களுக்கு நமஸ்காரம் செய்து விட்டுப் புறப்பட்டுப் போய்க் கொண்டிருந்தார்கள். சின்ன காஞ்சிபுரத்து வைணவ பண்டிதரின் முறை வந்தது. மகா பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்து விட்டு, சம்பாவணையைப் பெற்றுக் கொண்டார். முழு நூறு ரூபாய் நோட்டை சம்பாவணையாகப் பெற்றவரின் முகத்தில் ஏனோ மலர்ச்சி இல்லை. மாறாக, வாட்டம் தெரிந்தது. காரணம்- அவருக்கு முன்னால் சம்பாவணை வாங்கியவன் - சிறு வயது பாலகன் ஒருவன். 'அவனுக்கும் நூறு ரூபாய்... எனக்கும் நூறு ரூபாய்தானா?' என்கிற வாட்டம்தான் அது.

    பரப்பிரம்மம் இதை எல்லாம் அறியாமல் இருக்குமா? என்ன ஐயங்கார் ஸ்வாமிகளே... திருப்திதானா? என்று கேட்டு வைத்தார் ஸ்வாமிகள்.

    தன்னுடைய இயலாமையைப் பெரியவாளுக்கு முன் காட்டக் கூடாது என்கிற சபை நாகரிகம் கருதி, உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல், சந்தோஷம் பெரியவா... நான் புறப்படுகிறேன் என்று, தான் கொண்டு வந்திருந்த மஞ்சள் பையைச் சுருட்டி கக்கத்தில் வைத்துக் கொண்டு வெளியேறினார்.

    உள்ளுக்குள் புன்னகைத்துக் கொண்டது அந்த பரப்பிரம்மம். வேதம் கற்ற ஒரு பிராமணன், மனம் வருந்திச் செல்வதை, அவ்வளவு சுலபத்தில் விட்டு விடுமா அந்தப் பரப்பிரம்மம்?

    சதஸில் கலந்து கொண்ட அனைத்து பண்டிதர்-களுக்கும் சம்பாவணை கொடுத்து முடித்தாயிற்று என்று ஓர் உயர் அதிகாரி, மகானின் காதில் சென்று பவ்யமாகச் சொன்னார். சரி... தரிசனத் துக்கு வர்றவாளை வரச் சொல்லுங்கோ. பாவம், ரொம்ப நேரம் வெயிட் பண்றா என்று உத்தர-விட்டார் மகா பெரியவா.

    முதலில், சென்னையில் இருந்து வந்திருந்த வக்கீல் ஒருவர் குடும்பத்தினருடன் முன்னால் நின்றார். இரண்டு மூன்று பெரிய மூங்கில் தட்டுகளில் பல வகையான கனிகள், புஷ்பங்கள், கல்கண்டு, முந்திரி, திராட்சை என்று ஏகத்துக்கும் நிரப்பிக் கொண்டு வந்திருந்தார். பெரியவாளின் திருவடி முன் அந்த மூங்கில் தட்டுகளை வைத்து விட்டு, குடும்பத்தினருடன் விழுந்து நமஸ்கரித்தார். கையோடு தான் கொண்டு வந்திருந்த ஒரு ருத்திராட்ச மாலையைப் பெரியவாளின் திருக்கரங்களில் கொடுத்து விட்டு, ஆசிர்வாதத்துடன் திரும்பத் தருமாறு வேண்டினார். பரப்பிரம்மமும் அதைத் தன் கையால் தொட்டு ஆசிர்வதித்து, ஒரு சின்ன பூக்கிள்ளலுடன் திரும்பக் கொடுத்தார்.

    உடல் வளைந்து, முகம் மலர - சாட்சாத் அந்த மகேஸ்வரனிடம் இருந்தே ருத்திராட்ச மாலையை வாங்கிக் கொள்ளும் பாவனையில் பெற்றுக் கொண்ட வக்கீலின் முகம் ஏகத்துக்கும் பிரகாசமாகியது. பிறகு, பெரியவா... ஒரு விண்ணப்பம்... என்று இழுத்தார் வக்கீல்.

    சித்த இருங்கோ... என்று அவரிடம் சொன்ன பெரியவா, பார்வையை வேறு பக்கம் திருப்பி, கொஞ்சம் தள்ளி நின்றிருந்த ஒரு சிஷ்யனை சைகை காட்டி அழைத்தார்.

    அந்த சிஷ்யன் வேகவேகமாக வந்து பெரியவாளின் முன் வாய் பொத்தி பவ்யமாக நின்றான். அவர் சொல்லப் போகும் உத்தரவுக்காகக் காத்திருந்தான். சின்ன காஞ்சிபுரத்துலேர்ந்து இப்ப வந்துட்டுப் போனாரே, ஒரு ஐயங்கார் ஸ்வாமிகள்... நீதான் பாத்திருப்பியே... அவர் வெளியேதான் இருப்பார். இல்லேன்னா மண்டபம் பஸ் ஸ்டாண்டுல பாரு... பஸ்ஸுல உக்காந்துண்டிருப்பார். போய் நான் கூப்பிட்டேன்னு சட்டுன்னு அழைச்சிண்டு வா என்றார்.

    உத்தரவு வந்த அடுத்த நிமிடம் றெக்கை கட்டிப் பறந்தான் அந்த சிஷ்யன். மடத்து வாசலில் பரபரவென்று தேடினான். ஐயங்கார் ஸ்வாமிகள் சிக்கவி ல்லை. அடுத்து, பெரியவா சொன்னதன்படி கங்கைகொண் டான் மண்டபத்து பஸ் ஸ்டாண்டுக்கு வந்தான். அங்கே சின்ன காஞ்சிபுரம் செல்வதற்குத் தயாராக ஒரு பஸ் நின்றிருந்தது. நடத்துநர் டிக்கெட்டுகளை விநியோகித்துக் கொண்டி ருந்தார். விறுவிறுவென்று அதில் ஏறிப் பயணிகளைப் பார்வையால் துழாவினான். ஜன்னலோரத்து இருக்கை ஒன்றில் அந்த ஐயங்கார் ஸ்வாமிகள் சிஷ்யனது பார்வை வளையத்துக்குள் சிக்கி விட்டார். அவர் அருகே போய், பெரியவா உங்களை உடனே கூட்டிண்டு வரச் சொன்னார் என்றான். இதைச் சற்றும் எதிர்பார்க்காத ஐயங்கார் ஸ்வாமிகள், விஷயம் என்ன ஏதென்று உணராமல், அம்பீ... முப்பது காசு கொடுத்து சின்ன காஞ்சிபுரத்துக்கு டிக்கெட் வாங்கிட்டேன். நான் இப்ப இறங்கி வந்தா முப்பது காசு வீணாகிப் போயிடுமேடா என்றார்.

    சிஷ்யனுக்கு சுரீரென்று கோபம் வந்தது. அது என்னமோ தெரியல... உங்களை உடனே கூட்டிண்டு வரணும்னு பெரியவா எனக்கு உத்தரவு போட்டிருக்கா. அவா உத்தரவை என்னால மீற முடியாது. அந்த முப்பது காசு டிக்கெட்டைக் கிழிச்சுப் போடுங்கோ... கையோட உங்களுக்கு முப்பது காசு நான் தர்றேன் என்று அடமாகப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தார் ஐயங்கார் ஸ்வாமிகள்.

    நடந்து கொண்டிருக்கும் சம்பாஷணையைக் கவனித்த நடத்துநரே, ஐயரே (ஐயங்காரே)... அந்த டிக்கெட்டை என்கிட்ட கொடு. முப்பது காசு உனக்கு நான் தர்றேன். மடத்து சாமீ கூப்பிடுதுன்னு தம்பி எவ்ளோ அடம் பண்றான். ஏதாச்சும் முக்கிய விஷயமாத்தான் இருக்கும். போய்ப் பாரேன். அவனவன் தவமா தவம் இருந்து அவரைப் பாக்கறதுக்காக எங்கெங்கிருந்தோ வர்றான். கூப்பிட்டா போவியா? என்று சிடுசிடுவென்று சொல்ல... வேஷ்டியில் சுருட்டி வைத்திருந்த கசங்கலான டிக்கெட்டை நடத்துநரிடம் கொடுத்து விட்டு, முப்பது காசு வாங்கிக் கொண்டுதான் கீழே இறங்கினார் ஐயங்கார் ஸ்வாமிகள்.

    மகா பெரியவாளின் உத்தரவைப் பூர்த்தி செய்து விட்ட தோர ணையில் மடத்துக்குள் கம்பீரமாக ஐயங்கார் ஸ்வாமிகளுடன் நுழைந்தான் சுறுசுறுப்பான அந்த சிஷ்யன். அதற்குள், பெரியவாளைச் சுற்றி ஏகத்துக்கும் கூட்டம் சேர்ந்திருந்தது. உள்ளே நுழையும் இந்த இருவரையும் தன் இடத்தில் இருந்தே பார்த்து விட்டார் ஸ்வாமிகள். அருகே நெருங்கியதும், பவ்யமாக வாய் பொத்தி நின்றார் சின்ன காஞ்சிபுரத்து ஐயங்கார் ஸ்வாமிகள்.

    என்ன ஐயங்கார் ஸ்வாமிகளே... கண்டக்டர் கிட்டேர்ந்து முப்பது காசை வாங்காம பஸ்ஸை விட்டு நீர் இறங்க மாட்டீ ராக்கும்? என்று கேட்டு, பலமாகச் சிரித்தபோது, ஐயங்கார் ஸ்வாமிகள் அதிர்ந்து விட்டார். சிஷ்யன் சாதுவாக இருந்தான். அவன் இது மாதிரி, ஏகப்பட்ட அனுபவங்களை சந்தித்திருக்கிறான் போலிருக்கிறது. இவர்களைச் சுற்றி இருந்தவர்களுக்கு இந்த சம்பாஷணையின் விவரம் புரியவில்லை.

    சென்னை வக்கீல் ஆசாமி இன்னமும் மகா பெரியவா முன்னாலேயே வாய் பொத்தி அமர்ந்திருந்தார். திடீரென, பெரியவா... ஒரு விண்ணப்பம்... என்று முன்பு ஆரம்பித்த மாதிரியே மீண்டும் தொடர்ந்தார்.

    சித்த இருங்கோ... உங்க விஷயத்துக்குத்தான் வர்றேன்... என்ற ஸ்வாமிகள், ஐயங்காரை வக்கீலுக்கு அருகே உட்காரச் சொன்னார். அமர்ந்தார். பிறகு, வக்கீல் சார்... இவரோட அட்ரஸைக் கேட்டுக் கொஞ்சம் தெளிவா குறிச்சுக்கோங்கோ என்றார் காஞ்சி மகான்.

    'இவருடைய அட்ரஸை நான் ஏன் குறித்துக் கொள்ள வேண்டும்?' என்று விவரம் ஏதும் கேட்காமல், கைவசம் இருந்த ஒரு குறிப்பேட்டில், ஐயங்கார் ஸ்வாமிகள் அவரது விலாசத்தைச் சொல்லச் சொல்ல... தன்வசம் இருந்த குறிப்பேட்டில் தெளிவாகக் குறித்துக் கொண்டார் வக்கீல்.

    நீர் புறப்படும் ஐயங்கார் ஸ்வாமிகளே... அடுத்த பஸ் மண்டபம் ஸ்டாண்டுக்கு வந்துடுத்து. அந்த கண்டக்டர் ரிடர்ன் பண்ண அதே முப்பது காசுலயே இப்ப வேற டிக்கெட் வாங்கிடுங்கோ என்று சொல்லி, அந்த மண்டபமே அதிரும் வண்ணம் பலமாகச் சிரித்தார் ஸ்வாமிகள்.

    ஐயங்கார் ஸ்வாமிகள் குழம்பி விட்டார். 'முப்பது காசுக்கு இந்த சிஷ்யன்கிட்ட நான் தகராறு பண்ணது இவருக்கு எப்படித் தெரியும்?' என்கிற சந்தேகம் ஒரு பக்கம் இருந்தாலும், எதற்காக அந்தப்

    Enjoying the preview?
    Page 1 of 1