Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Noi Theera, Inbam Sera, Vinai Theya Devaram, Thiruvasagam!
Noi Theera, Inbam Sera, Vinai Theya Devaram, Thiruvasagam!
Noi Theera, Inbam Sera, Vinai Theya Devaram, Thiruvasagam!
Ebook149 pages49 minutes

Noi Theera, Inbam Sera, Vinai Theya Devaram, Thiruvasagam!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தமிழ் மொழி தெய்வ மொழி!

தெய்வத் தமிழின் பெருமையை உணர ஏராளமான பாடல்கள் உள்ளன.

பன்னிரு திருமுறை, நாலாயிர திவ்யபிரபந்தம் உள்ளிட்ட நூல்களை ஒரு முறை படித்தாலேயே போதும் தெய்வத் தமிழின் பெருமையை உணர்வதோடு இறைவனின் திருவருளையும் பெறலாம்.

உலகியல் சம்பந்தப்பட்ட அனைத்துப் பேறுகளை தர வல்லது பன்னிரு திருமுறைப் பாடல்கள்.

செல்வம் பெருகும். நோய் தீரும். வினை தேயும். சிவனருள் கிட்டும். அந்தம் ஒன்று இல்லா ஆனந்தம் பெருகும்.

Languageதமிழ்
Release dateMay 14, 2022
ISBN6580151008381
Noi Theera, Inbam Sera, Vinai Theya Devaram, Thiruvasagam!

Read more from S. Nagarajan

Related to Noi Theera, Inbam Sera, Vinai Theya Devaram, Thiruvasagam!

Related ebooks

Reviews for Noi Theera, Inbam Sera, Vinai Theya Devaram, Thiruvasagam!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Noi Theera, Inbam Sera, Vinai Theya Devaram, Thiruvasagam! - S. Nagarajan

    https://www.pustaka.co.in

    நோய் தீர, இன்பம் சேர, வினை தேய தேவாரம், திருவாசகம்!

    Noi Theera, Inbam Sera, Vinai Theya Devaram, Thiruvasagam!

    Author:

    ச. நாகராஜன்

    S. Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-nagarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    திருஞானசம்பந்தர்

    1. ஒரே பாட்டில் சம்பந்தரின் அருட் செயல்கள்!

    2. அடியார்கள் வானில் அரசாள ஆணையிட்ட அற்புதர் சம்பந்தர்!

    3. நோய் தீரும், இன்பம் சேரும், வினை தேயும், சிவகதி சேரும், திண்ணம், திண்ணமே - சம்பந்தர் அருள் வாக்கு!

    4. ஞானசம்பந்தர் அருளிய ஒரு நல்ல, நல்ல, நல்ல, நல்ல, நல்ல பதிகம்!

    5. நம் பந்தம் போக்க வந்த சம்பந்தர் கவசம் அணிவோம்!

    6. நமது கேள்விகளும் அப்பர் பதில்களும்!

    7. பிறவியை வேண்டும் பேரருளாளர்!

    8. அப்பரின் ஹஹ்ஹஹ்ஹா சிரிப்பு!

    9. வெகுண்டெழுந்த அப்பர் விரட்டுவது எவற்றை?

    10. அப்பரின் அருமையான லாபரட்டரி!

    11. தேவாரத்தில் வரும் தேனினும் இனிய சொற்கள்!

    12. யமனுக்கு அப்பரின் பாராட்டும்

    13. வைச்ச பொருள்?! – 1

    14. வைச்ச பொருள்?! – 2

    15. வைச்ச பொருள்?! – 3

    16. வைச்ச பொருள் – 4

    17.வைச்ச பொருள்?! – 5

    சுந்தரர்

    18. முதலைப் பாடல்கள் - 1

    19. முதலைப் பாடல்கள் - 2

    மணிவாசகர்

    20. இறைவன் ஏமாந்தான்! சதுரன் யார்? மணிவாசகரின் ஹஹ்ஹா!

    சிவபிரகாசர்

    21. ‘சிவ சிவ’ என்றால் தீய கோள்களின் குற்றம் போகும்; ஆயுள் பெருகும்!

    உமாபதி சிவம்

    22. சிவப் பிரசாதம், குருப்பிரசாதம்!

    23. ஏறாத கொடியை ஏற்றுவித்த கொடிப்பாட்டு!

    24. முள்ளிச் செடிக்கு மோக்ஷம் கொடுத்தது!

    25. உமாபதி சிவம் இயற்றியுள்ள தமிழ் மட்டும் சம்ஸ்கிருத நூல்கள்!

    முடிவுரை

    என்னுரை

    தமிழ் மொழி தெய்வ மொழி!

    தெய்வத் தமிழின் பெருமையை உணர ஏராளமான பாடல்கள் உள்ளன.

    பன்னிரு திருமுறை, நாலாயிர திவ்யபிரபந்தம் உள்ளிட்ட நூல்களை ஒரு முறை படித்தாலேயே போதும் தெய்வத் தமிழின் பெருமையை உணர்வதோடு இறைவனின் திருவருளையும் பெறலாம்.

    உலகியல் சம்பந்தப்பட்ட அனைத்துப் பேறுகளை தர வல்லது பன்னிரு திருமுறைப் பாடல்கள்.

    செல்வம் பெருகும். நோய் தீரும். வினை தேயும். சிவனருள் கிட்டும். அந்தம் ஒன்று இல்லா ஆனந்தம் பெருகும்.

    திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மணிவாசகர் ஆகியோர் பற்றிய கட்டுரைகளை ஞான ஆலயம், www.tamilandvedas.com உள்ளிட்ட பத்திரிகைகள், ப்ளாக்குகளில் எழுதி வந்தேன்.

    அந்தக் கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்.

    கட்டுரைகள் வெளியாகி வந்த போது படித்துப் பாராட்டிய அனைவருக்கும் எனது நன்றி உரித்தாகுக.

    இந்தக் கட்டுரைகளை வெளியிட்ட ஞான ஆலயம் ஆசிரியர் திருமதி மஞ்சளா ரமேஷ். லண்டன் திரு ச.சுவாமிநாதன் ஆகியோருக்கு எனது நன்றியை பதிவு செய்கிறேன்.

    இந்தப் புத்தகத்தை வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

    தேவார, திருவாசகத்தை ஓதி அனைத்து நல் பேறுகளையும் பெற இருக்கும் அனைவருக்கும் எனது  வாழ்த்துக்கள்.

    நன்றி.

    பங்களூர்

    ச.நாகராஜன்

    11-4-2022

    திருஞானசம்பந்தர்

    1. ஒரே பாட்டில் சம்பந்தரின் அருட் செயல்கள்!

    தமிழாகரன்

    தமிழக வரலாற்றில் பொன்னேட்டினால் பொறிக்க வேண்டிய ஏடுகள் திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் வாழ்ந்த காலம்!

    அறம் தலை நிறுத்த, மறத்தை நீக்க அவதாரங்கள் தோன்றுவது இந்து மத கொள்கையின் படி இடைவிடாத சுழற்சி கொண்ட ஒரு தத்துவமாகும்.

    இப்படிப்பட்ட அவதாரங்களுள் முருகனே தோன்றியது போல வந்த இளம் பாலகன் திருஞானசம்பந்தர்.

    முருகனுக்கும் இவருக்கும் உள்ள ஒற்றுமைகள் ‘எண்ணி’ மாளா. எண்ணி, நினைக்கவும் அதிசயம், எண்ணிக்கையிலும் அதிசயம். (இரண்டு ‘எண்ணி’ போட்டுக் கொள்ளலாம். எண்ணி எண்ணி மாளா!)

    இளமை, தேவியிடம் பால் அருந்தியது, துடிப்பு, ஆற்றல், எதிலும் வெற்றி, சூர சம்ஹாரம் (சமண சம்ஹாரம் என அர்த்தம் கொள்க), பக்தர்களுக்கு அருள் பாலிப்பு, இப்படிப் பல ஒற்றுமைகளுள் தலையாய ஒன்று தமிழை உடலாகத் தரித்தது.

    பல சந்த வகைகளையும், புதுப் பாணிகளையும், உவமான உவமேயங்களையும், பல்வேறு தோஷ நிவர்த்திக்கான பதிகங்களையும், இறைவனின் பெருமையைச் சொல்லும் பாடல்களையும் தம் பாக்களில் தந்தவர் ஞான சம்பந்தர். பதினாறாயிரம் பதிகங்கள் (ஒரு பதிகம் என்பது 10 பாடல்கள் + பதிக பலனைச் சொல்லும் பாடல் ஒன்று, ஆக மொத்தம் பதினொன்று) என்பதைக் கணக்கிட்டால் வருவது ஒரு லட்சத்தி எழுபத்தி ஆறாயிரம் பாடல்கள். அடேயப்பா என்று சொல்ல வைக்கும் பெரிய தொகை. அந்தப் பாடல்களை மூன்றாம் வயது தொடங்கி பதினாறாம் வயதுக்குள் பாடி இருக்கிறார். அதாவது 4748 நாட்களுக்குள் (365 x 13 + லீப் வருட நாட்கள் 3 = 4748) அப்படியென்றால் ஒரு நாளைக்கு 37.06 பாடல்கள், அதாவது ஒரு நாழிகைக்கு ஒரு பாடல்; ஒரு நாழிகை = 20 நிமிடம்) இப்படிப் பொருள் பொதிந்த இறைவன் துதிகளை இவ்வளவு சிறப்புடனும் வனப்புடனும் உலக சரித்திரத்தில் பாடியதாக கற்பனையாகக் கூட கதை ஒன்று இல்லை!

    ஒரே பாட்டில் சம்பந்தரின் அருட்செயல்கள்

    அவரது அருட்செயல்களோ ஏராளம். அவற்றுள் முக்கியமான பத்தை மனதிற்குள் என்றும் நினைவில் நிறுத்தும் வண்ணம் ஒரு சிறிய பாட்டில் அடக்கினார் பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருக்கடவூர் உய்ய வந்த தேவனார் என்னும் பக்தர்.

    "ஓடம், சிவிகை, உலவாக் கிழி, அடைக்கப்

    பாடல், பனை, தாளம், பாலை நெய்தல்,ஏடு எதிர், வெப்பு,

    என்புக்கு உயிர் கொடுத்தல், ஈங்கிவைதாம் ஓங்கு புகழ்த்

    தென்புகலி வேந்தன் செயல்"

    என்ன அருமையான பாடல்!

    இன்று நமக்குக் கிடைத்துள்ள திருஞானசம்பந்தரின் பாடல்கள் சுமார்  4287இல் 1256 பாடல்களில் அவரது வரலாறு (அவர் மூலமாகவே)  விளக்கப்படுவதால் அகச்சான்று நிலை பெறுகிறது. இது பொய்,

    புனைகதை என்ற வாதம் எழுவதற்கான வாய்ப்பே இல்லாமல் போய் விடுகிறது!

    இது நாம் செய்த தவப்பயனே!

    அருள் செயல்கள்

    அருட்செயல்களின் பதிகங்களாவன:-

    ஓடம் – திருக்கொள்ளம்பூதூர்ப் பதிகம் (‘கொட்டமே கமழும்’ என்று தொடங்கும் பதிகம்)

    சிவிகை – நெல்வாயில் அரத்துறைப் பதிகம் (‘எந்தை ஈசம் எம்பெருமான்’ எனத் தொடங்கும் பதிகம்)

    உலவாக் கிழி – திருவாவடுதுறைப் பதிகம் (‘இடரினும் தளரினும்’ என்று தொடங்கும் பதிகம்)

    அடைக்கப் பாடல் – மறைக்காட்டுச் ‘சதுரம் மறை’ப் பதிகம்

    பனை – திரு ஓத்தூர்ப் பதிகம் (‘பூந்தேர்ந்தாயன கொண்டு நின் பொன்னடி’ என்று தொடங்கும் பதிகம்)

    தாளம் – திருக்கோலக்காப் பதிகம் (‘மடையில் வாளை பாய மாதரார்’ என்று தொடங்கும் பதிகம்)

    பாலை நெய்தல் –

    Enjoying the preview?
    Page 1 of 1