Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Anaivarukkum Aarogyam - Part 3
Anaivarukkum Aarogyam - Part 3
Anaivarukkum Aarogyam - Part 3
Ebook153 pages54 minutes

Anaivarukkum Aarogyam - Part 3

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உலகில் ஆரோக்கியமாக நீண்ட நாள் வாழ விரும்பாதோர் யாருமில்லை ஆனால் அன்றாட வாழ்விலோ பல நோய்நொடிகள் நம்மைப் பீடிக்க நாம் நொந்து போகிறோம். ஆகவே இந்த நிலையில் ஆரோக்கிய வாழ்வின் அடிப்படை ரகசியங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியது இன்றியமையாததாகிறது.

நவீன மருத்துவக் கண்டுபிடிப்புகள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றன. புதிய மருந்துகள், புதிய சிகிச்சை முறைகள் பெருகி வருகின்றன. இவை பற்றியும் அறிந்து கொண்டால் தான் நமது ஆரோக்கியத்தை நாம் உறுதி செய்ய முடியும். இதைக் கருத்தில் கொண்டு 'அனைவருக்கும் ஆரோக்கியம்' நூல் மூன்று பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது.

முகப்பருக்களைப் போக்கி சருமை அழகைப் பாதுகாத்தல், துணை உணவுகள் நமக்குச் செய்யும் நன்மைகள், கல்லீரல் மற்றும் மூளையைப் பாதுகாக்கும் அரிய மூலிகை, மைக்ரேனைத் தடுக்கும் விதம், எளிதில் தூக்கம் பெறும் வழி, ஆயுர்வேத ஆசார்யர் சரகர் கூறியுள்ள அற்புத ரகசியங்கள், நினைவாற்றலைக் கூட்டும் வழிகள், அற்புதமான வெண்டைக்காயின் மஹிமை, டயாபடீஸைக் குறைக்கும் காப்பி, ஆரோக்கியத்திற்கான வழிகள் மற்றும் பொருள்கள் ஆகியவை பற்றிப் பல்வேறு அத்தியாயங்கள் அரிய செய்திகளை இந்த மூன்றாம் பாகத்தில் படித்து அவற்றில் தேவையானவற்றைக் கடைப்பிடிக்கலாம். இத்துடன் செக்ஸ் பற்றிய கேள்வி பதில்கள், அரிய விஷயங்கள் தனிப் பகுதியாகத் தரப்பட்டுள்ளது. அனைவருக்குமான நூல் இது. பரிசாக அளிக்கவும் உகந்த நூல் இது.

Languageதமிழ்
Release dateMay 27, 2023
ISBN6580151009716
Anaivarukkum Aarogyam - Part 3

Read more from S. Nagarajan

Related to Anaivarukkum Aarogyam - Part 3

Related ebooks

Related categories

Reviews for Anaivarukkum Aarogyam - Part 3

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Anaivarukkum Aarogyam - Part 3 - S. Nagarajan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அனைவருக்கும் ஆரோக்கியம் - பாகம் 3

    Anaivarukkum Aarogyam - Part 3

    Author:

    ச. நாகராஜன்

    S. Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-nagarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    இரண்டாம் பதிப்பின் முன்னுரை

    பொறுப்புத் துறப்பு

    1. முகப்பருக்களை நீக்கி சரும அழகைப் பாதுகாப்போம்; புதிய ஆய்வுகள் காட்டும் வழி!

    2. உணவுத்திட்ட துணை உணவுகள் பற்றி ஒவ்வொருவரும் அறிய வேண்டிய ஐந்து விஷயங்கள்! - முதல் பகுதி

    3. உணவுத்திட்ட துணை உணவுகள் பற்றி ஒவ்வொருவரும் அறிய வேண்டிய ஐந்து விஷயங்கள்! - இரண்டாம் பகுதி

    4. உணவுத்திட்ட துணை உணவுகள் பற்றி ஒவ்வொருவரும் அறிய வேண்டிய ஐந்து விஷயங்கள்! - மூன்றாம் பகுதி

    5. கல்லீரலையும் மூளையையும் பாதுகாக்கும் அற்புத மூலிகை!

    6. மைக்ரேனைத் தடுக்கும் விதம் - 1 அமில-கார சமச்சீர் நிலை வேண்டும்

    7. மைக்ரேனைத் தடுக்கும் விதம் - 2 அமில-கார சமச்சீர் நிலை வேண்டும்

    8. எளிதில் தூக்கம் வரவில்லையா? இதோ இருக்கிறது தூக்கம் வர வழிகள்!

    9. எளிதில் தூக்கம் வரவில்லையா? இதோ இருக்கிறது தூக்கம் வர வழிகள்! - 2

    10. வாழும் போது தெரிந்துகொள்ள வேண்டிய ரகசியங்கள்!

    11. ஆயுர்வேத ஆசார்யர் சரகர் – 1

    12. ஆயுர்வேத ஆசார்யர் சரகர் – 2

    13. ஆயுர்வேத ஆசார்யர் சரகர் – 3

    14. நினைவாற்றலைக் கூட்டச் சின்னச்சின்ன வழிகள்!

    15. ஆரோக்கிய மேம்பாட்டைத் தரும் உபவாசத்தின் அற்புத மஹிமைகள்!

    16. வெண்டைக்காயின் மகிமை - 1

    17. வெண்டைக்காயின் மகிமை - 2

    18. டயாபடீஸ் அபாயத்தைக் குறைக்கும் காப்பி!

    19. ஆரோக்கியத்திற்கு உதவும் ஏழு இன்றியமையாத பொருள்கள்!

    20. மலேரியா நோயை ஒழிக்க விஞ்ஞானிகளின் புதிய வழி!

    21. செக்ஸ் உறவில் பழக்கப்பற்று

    22. குறைவான டெஸ்டோஸ்டெரோனும் செக்ஸ் இயக்கமும்

    23. டயாபடீஸும் செக்ஸும் - உங்கள் மாஜிக் கவர்ச்சியை மீண்டும் பெறுங்கள்- 1

    24. டயாபடீஸும் செக்ஸும் - உங்கள் மாஜிக் கவர்ச்சியை மீண்டும் பெறுங்கள் - 2

    25. செக்ஸ் பற்றிய கருத்துக்கள்: உண்மையா? பொய்யா? - 1

    26. செக்ஸ் பற்றிய கருத்துக்கள்: உண்மையா? பொய்யா? - 2

    27. செக்ஸ் தெராபியும் ஆலோசனையும்

    28. விறைப்புத்தன்மை இன்மை பற்றிய ஏழு மூடநம்பிக்கைகள்

    இரண்டாம் பதிப்பின் முன்னுரை

    ‘நூறு ஆண்டுகள் வாழ்வாயாக’ என்பது பெரியோர்களின் ஆசீர்வாதங்களில் ஒன்று; அது முக்கியமானதும்கூட!

    நூறு ஆண்டுகள் வாழ்வதுடன் நோயற்று மகிழ்ச்சியுடன் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதே அதன் கூரிய நேரிய உள்ளடங்கிய பொருள்!

    நோயற்ற வாழ்க்கைக்கான அடிப்படை உண்மைகளை நமது பண்டைய ரிஷிகள் மிகச்சிறப்பாக விளக்கி உள்ளனர். ஆசார்ய சரகர் உள்ளிட்ட பெரியோர் தங்கள் நூலில் ஏராளமான நல்ல நெறிகளைத் தந்துள்ளனர்.

    வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்ப உலகில் மருத்துவம் சம்பந்தமான ஆராய்ச்சிகள் ஆயிரமாயிரம் நடைபெற்று வருகின்றன. ஆரோக்கியம் சம்பந்தமாக அருமையான உண்மைகளைத் தருகின்றன.

    இவற்றையெல்லாம் மேலைநாட்டு பத்திரிகைகளிலும் இணையதள வாயிலாகவும் படித்து அவ்வப்பொழுது ஹெல்த்கேர் மாத இதழில் பல ஆண்டுகளாக எழுதி வந்தேன்.

    ஹெல்த்கேர் பத்திரிகை ஆசிரியரான திரு R.C. ராஜா அவர்கள் ஆர்வத்துடன் ஏராளமான கட்டுரைகளைச் சுட்டிக்காட்டி அவற்றை மொழிபெயர்த்துத் தருமாறு கூறியபோது அதை மகிழ்ச்சியுடன் ஏற்று அவருக்கு அனுப்பி வந்தேன். அவை அனைத்தும் ஹெல்த்கேர் மாத இதழில் வெளியாகின.

    அவற்றின் தொகுப்பே மூன்று பாகங்களாக மலர்ந்தது. அவருக்கு எனது நன்றியை இங்கு பதிவு செய்கிறேன்.

    முதல் பதிப்பு மின்னனு நூலாக மட்டும் லண்டன் நிலா பப்ளிஷர்ஸ் வாயிலாக வெளிவந்தது.

    அச்சுப் பதிப்பாகவும் மின்னணு நூலாகவும் பலரும் இந்த நூல்களைப் பெறவேண்டி ஆவலைத் தெரிவிப்பதால் இது இப்போது இரண்டாம் பதிப்பாக வெளிவருகிறது.

    ஆரோக்கியத்தை விரும்பும் தமிழ் உலகம் இதை வரவேற்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை.

    இதை டிஜிட்டல் வடிவிலும், அச்சுப் பதிப்பாகவும் மறுபதிப்பாகக்கொண்டு வர முன் வந்துள்ள பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIA-வின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஆரோக்கியம் சம்பந்தமான, நுட்பமான அனைத்துக் கருத்துக்களையும் தெரிந்துகொண்டு அவற்றை வாழ்க்கையில் பயன்படுத்தி நீண்ட ஆயுளுடன் அனைவரும் வாழ்வோம்; அதற்கு இறைவன் அருள் பாலிப்பானாக!

    நன்றி.

    ச. நாகராஜன்

    பங்களூரு

    7-3-2023

    பொறுப்புத் துறப்பு

    DISCLAIMER

    இந்த நூலில் உள்ள தகவல்கள் அனைத்தும் அனைவரும் நலமுடன் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையிலேயே தரப்பட்டுள்ளது.

    ஆயின் ஒவ்வொருவரின் உடலும் தனிப்பட்ட தன்மை வாய்ந்தது என்பதால் இதில் தரப்பட்டுள்ள ஆலோசனைகளைக் கடைப்பிடிக்கும் முன்பு, உங்கள் குடும்ப வைத்தியருடன் கலந்து ஆலோசித்து அவர் சொல்படி நடப்பதே சாலச்சிறந்தது. குடும்ப வைத்தியரின் அறிவுரையும் பரிந்துரையுமே கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

    இந்த நூலாசிரியரோ அல்லது இந்த நூலை வெளியிட்டவரோ எந்த விதத்திலும் பொறுப்பேற்கமாட்டார்கள்.

    ச. நாகராஜன்

    1. முகப்பருக்களை நீக்கி சரும அழகைப் பாதுகாப்போம்; புதிய ஆய்வுகள் காட்டும் வழி!

    ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.

    உங்களுக்கு சருமம் (தோல்) சம்பந்தமான வியாதிகள் ஏதேனும் இருக்கிறதா? அப்படியானால் நீங்கள் சருமத்திற்கும், குடலுக்கும் தொடர்புடைய குடல் சம்பந்தமான சீர்குலைவுகளை முதலில் சரி செய்துகொள்ள வேண்டும்!

    நோய் தோன்றும் விதம் பற்றிய ஆய்வின் முடிவுகள் சரும சம்பந்தமான சீர்குலைவுகளுக்கும் குடல் சம்பந்தமான பிரச்சினைகளுக்கும் நல்ல தொடர்பு உண்டு என்பதை நிரூபிக்கின்றன. தேவையற்ற பாக்டீரியாக்கள் சிறுகுடலில் இருப்பதைக் குறிக்கும் நோயான, ‘சிறுகுடல் பாக்டீரியாக்களின் அதிவளர்ச்சி’ (small intestine bacterial overgrowth -SIBO) என்பது முகப்பருக்கள் உள்ளவரிடம் அது இல்லாதவரைவிட பத்து மடங்கு அதிகம் உள்ளதாக சமீபத்திய அறிக்கை ஒன்று சுட்டிக் காட்டுகிறது. குடல் சம்பந்தமான கோளாறுகளை (SIBO) நிவர்த்தி செய்தவுடன் குறிப்பிடத் தகுந்த முன்னேற்றம் ஏற்படுவதையும் அது காட்டுகிறது.

    இது பற்றிய சில முக்கிய விவரங்கள் இதோ:-

    குடற்புண்கள் (ulcerative colitis) உள்ள 14% நோயாளிகளும் குரோன் நோய் (Crohn’s disease) உள்ள 24% நோயாளிகளும் சரும வெளிப்பாடுகளைக் கொண்டுள்ளனர். குளூட்டன் ஒவ்வாமை எனப்படும் Celiac disease, சருமம் சார்ந்த வெளிப்பாடுகளான அக்கி, சொட்டை (வழுக்கை), வெண்குஷ்டம் ஆகியவற்றை நான்கு பேரில் ஒருவருக்கு உருவாக்குகிறது.

    மாறுபட்ட குடல் இயக்கம் தோலைப் பாதிக்கிறது. லீக்கி கட் எனப்படும் Intestinal permeability உள்வீக்கத்தை ஏற்படுத்தி தோல் சம்பந்தமான நோய்களை உருவாக்குகிறது. இது பருக்களைக் கொண்டுள்ளோரிடம் அதிகமாகக் காணப்படுவதை முக்கிய ஆய்வு முடிவுகள் காண்பிக்கின்றன.

    கெமிக்கல், நுண்ணுயிர் எதிரிகள் எனப்படும் ஆன்டி மைக்ரோபியல் ஆகியவற்றிலிருந்தும் உடலையும் பாதுகாக்கும் ஒரு தற்காப்பு அமைப்பே சருமம் ஆகும். மன அழுத்தமும் குடல் அழற்சியும் இந்த அற்புதமான அமைப்பைப் பாதிப்பதை ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.

    இரைப்பை நுண்தாவரங்களும் தோலில் ஆதிக்கம் செலுத்துகின்றன. சப்ஸ்டான்ஸ் P என்ற நியூரோபெப்டைட் குடல் மூளை சருமம் ஆகியவற்றில் உருவாக்கப்படும் ஒன்று. இது சருமத்தில் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. மாறுபட்ட நுண்ணுயிரித் தொகுதிகள் சப்ஸ்டான்ஸ் P-யை வெளிப்படுத்துகிறது.

    குடல் நுண்ணுயிரித் தொகுதிகள் கொழுப்பு வகைப் பொருள்களையும், கொழுப்புள்ள அமிலங்களையும் சரும மெழுகையும்

    Enjoying the preview?
    Page 1 of 1