Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Anaivarukkum Arockkiyam - Part 1
Anaivarukkum Arockkiyam - Part 1
Anaivarukkum Arockkiyam - Part 1
Ebook152 pages57 minutes

Anaivarukkum Arockkiyam - Part 1

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உலகில் ஆரோக்கியமாக நீண்ட நாள் வாழ விரும்பாதோர் யாருமில்லை ஆனால் அன்றாட வாழ்விலோ பல நோய்நொடிகள் நம்மைப் பீடிக்க நாம் நொந்து போகிறோம். ஆகவே இந்த நிலையில் ஆரோக்கிய வாழ்வின் அடிப்படை ரகசியங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியது இன்றியமையாததாகிறது. நவீன மருத்துவக் கண்டுபிடிப்புகள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றன. புதிய மருந்துகள், புதிய சிகிச்சை முறைகள் பெருகி வருகின்றன. இவை பற்றியும் அறிந்து கொண்டால் தான் நமது ஆரோக்கியத்தை நாம் உறுதி செய்ய முடியும். இதைக் கருத்தில் கொண்டு ‘அனைவருக்கும் ஆரோக்கியம்’ நூல் மூன்று பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது.

ஆரோக்கியத்திற்கு அவசியமான நடைப்பயிற்சி, வியாதி வராமல் இருக்க நாம் அறிய வேண்டிய பிஹெச் வேல்யூ பற்றிய உண்மைகள், பசு கோமியத்தின் நோய் தீர்க்கும் ஆற்றல்கள், மோரில் உள்ள புரதச் சத்து, செக்ஸ் தரும் ஆரோக்கிய வாழ்வு, ஆகியவை பற்றிப் பல்வேறு அரிய செய்திகளை இந்த முதல் பாகத்தில் படித்து மகிழலாம்; அவற்றில் தேவையானவற்றைக் கடைப்பிடிக்கலாம். அத்துடன் மருத்துவ உலகில் மகிழ்ச்சி தரும் பல அரிய கண்டுபிடிப்புகளை எட்டு அத்தியாயங்களில் அறிமுகப்படுத்துகிறது இந்த நூல் அனைவருக்குமான நூல் இது. பரிசாக அளிக்கவும் உகந்த நூல் இது.

Languageதமிழ்
Release dateMar 23, 2024
ISBN6580151010802
Anaivarukkum Arockkiyam - Part 1

Read more from S. Nagarajan

Related to Anaivarukkum Arockkiyam - Part 1

Related ebooks

Reviews for Anaivarukkum Arockkiyam - Part 1

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Anaivarukkum Arockkiyam - Part 1 - S. Nagarajan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அனைவருக்கும் ஆரோக்கியம் - பாகம் 1

    Anaivarukkum Arockkiyam - Part 1

    Author:

    ச. நாகராஜன்

    S. Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-nagarajan

    பொருளடக்கம்

    இரண்டாம் பதிப்பின் முன்னுரை

    1. ஆரோக்கியத்திற்கு அவசியமான நடைப்பயிற்சி!

    2. வியாதி வராமல் இருக்க நீங்கள் அறிய வேண்டிய பிஹெச் வால்யூ!

    3. சரியான பிஹெச் வால்யூ பெறுவதற்கான உணவு வகைகள்!

    4. எச்சிலை சோதித்தால் ஒரு மனிதனின் வயதை அறிய முடியும்!

    5. உங்கள் குழந்தை குண்டாக இருக்கிறதா? விட்டமின் டி தேவை!

    6. இரத்த ஆல்கஹால் இருப்பை - பி ஏ சி யை(Blood Alcohol Content -BAC) எப்படிக் கணக்கிடுவது?

    7. செயற்கை உணவில் சேர்க்கப்படும் சேர்ப்புப் பொருள்கள்

    8. முதுமையை முறியடியுங்கள்,ஆயுளைக் கூட்டுங்கள்: இதோ வழி!

    9. பசு மூத்திரத்தின் நோய் தீர்க்கும் அற்புத ஆற்றல்கள் - 1

    10. பசு மூத்திரத்தின் நோய் தீர்க்கும் அற்புத ஆற்றல்கள் - 2

    11. ஸமோனெல்லா - கேள்விகளும் விடைகளும்

    12. செக்ஸ் பற்றிய நுணுக்கமான கேள்வி பதில்கள்!

    13. தூக்க வியர்வை மிகைப்பு

    14. விட்டமின் 12 குறைபாடு ஏன்? அதைப் போக்குவது எப்படி?

    15. மோர் நீர் அல்லது மோர்த் தெளிவில் உள்ள புரதச் சத்து பற்றிய உண்மைகள்!

    16. உடல் பயிற்சிகள் மூலம் மூளை ஆற்றல் கூடுகிறது!

    17. டயாபடீஸா? கெமிக்கல்கள் ஜாக்கிரதை!

    18. செக்ஸ் தரும் ஆரோக்கிய வாழ்வு!

    19. மாறிவரும் மாடர்ன் செக்ஸ் உறவுகள்!

    20. மருத்துவ உலகில் மகிழ்ச்சி தரும் புதிய கண்டுபிடிப்புகள்! - 1

    21. மருத்துவ உலகில் மகிழ்ச்சி தரும் புதிய கண்டுபிடிப்புகள்! - 2

    22. மருத்துவ உலகில் மகிழ்ச்சி தரும் புதிய கண்டுபிடிப்புகள்! - 3

    23. மருத்துவ உலகில் மகிழ்ச்சி தரும் புதிய கண்டுபிடிப்புகள்! - 4

    24. மருத்துவ உலகில் மகிழ்ச்சி தரும் புதிய கண்டுபிடிப்புகள்! - 5

    25. மருத்துவ உலகில் மகிழ்ச்சி தரும் புதிய கண்டுபிடிப்புகள்! - 6

    26. மருத்துவ உலகில் மகிழ்ச்சி தரும் புதிய கண்டுபிடிப்புகள்! - 7

    27. மருத்துவ உலகில் மகிழ்ச்சி தரும் புதிய கண்டுபிடிப்புகள்! - 8

    பொறுப்புத் துறப்பு

    இந்த நூலில் உள்ள தகவல்கள் அனைத்தும் அனைவரும் நலமுடன் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையிலேயே தரப்பட்டுள்ளது.

    ஆயின் ஒவ்வொருவரின் உடலும் தனிப்பட்ட தன்மை வாய்ந்தது என்பதால் இதில் தரப்பட்டுள்ள ஆலோசனைகளைக் கடைப்பிடிக்கும் முன்பு, உங்கள் குடும்ப வைத்தியருடன் கலந்து  ஆலோசித்து அவர் சொல்படி நடப்பதே சாலச் சிறந்தது. குடும்ப வைத்தியரின் அறிவுரையும் பரிந்துரையுமே கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

    இந்த நூலாசிரியரோ அல்லது இந்த நூலை வெளியிட்டவரோ எந்த விதத்திலும் பொறுப்பேற்க மாட்டார்கள்.

    ச.நாகராஜன்

    இரண்டாம் பதிப்பின் முன்னுரை

    ‘நூறு ஆண்டுகள் வாழ்வாயாக’ என்பது பெரியோர்களின் ஆசீர்வாதங்களில் ஒன்று; அது முக்கியமானதும் கூட!

    நூறு ஆண்டுகள் வாழ்வதுடன் நோயற்று மகிழ்ச்சியுடன் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதே அதன் கூரிய நேரிய உள்ளடங்கிய பொருள்!

    நோயற்ற வாழ்க்கைக்கான அடிப்படை உண்மைகளை நமது பண்டைய ரிஷிகள் மிகச் சிறப்பாக விளக்கி உள்ளனர். ஆசார்ய சரகர் உள்ளிட்ட பெரியோர் தங்கள் நூலில் ஏராளமான நல்ல நெறிகளைத் தந்துள்ளனர்.

    வளர்ந்து வரும் நவீன தொழில் நுட்ப உலகில் மருத்துவம் சம்பந்தமான ஆராய்ச்சிகள் ஆயிரமாயிரம் நடைபெற்று வருகின்றன. ஆரோக்கியம் சம்பந்தமாக அருமையான உண்மைகளைத் தருகின்றன.

    இவற்றையெல்லாம் மேலை நாட்டு பத்திரிகைகளிலும் இணையதள வாயிலாகவும் படித்து அவ்வப்பொழுது ஹெல்த்கேர் மாத இதழில் 2008ஆம் ஆண்டு முதல் கடந்த 16 ஆண்டுகளாக எழுதி வந்தேன்.

    ஹெல்த்கேர் பத்திரிகை ஆசிரியரான திரு R.C. ராஜா அவர்கள் ஆர்வத்துடன் ஏராளமான கட்டுரைகளைச் சுட்டிக் காட்டி அவற்றை மொழி பெயர்த்துத் தருமாறு கூறிய போது அதை மகிழ்ச்சியுடன் ஏற்று அவருக்கு அனுப்பி வந்தேன். அவை அனைத்தும் ஹெல்த்கேர் மாத இதழில் வெளியாகின.

    அவற்றின் தொகுப்பே அனைவருக்கும் ஆரோக்கியம் என்ற தலைப்பில் மூன்று பாகங்களாக மலர்ந்துள்ளன. அவருக்கு எனது நன்றியை இங்கு பதிவு செய்கிறேன்.

    அனைவருக்கும் ஆரோக்கியம் மூன்று பாகங்களும் மின்னணு நூலாக மட்டும் லண்டன் நிலா பப்ளிஷர்ஸ் வாயிலாக வெளி வந்தன.

    அச்சுப் பதிப்பாகவும் மின்னணு நூலாகவும் பலரும் இந்த நூல்களைப் பெற வேண்டி ஆவலைத் தெரிவிப்பதால் இப்போது மூன்று பாகங்களும் இரண்டாம் பதிப்பாக வெளி வருகிறது.

    ஆரோக்கியத்தை விரும்பும் தமிழ் உலகம் இதை வரவேற்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை.

    இதை டிஜிடல் வடிவிலும், அச்சுப் பதிப்பாகவும் மறு பதிப்பாகக் கொண்டு வர முன் வந்துள்ள பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவராஜ் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இதன் தொடர்ச்சியாக ஹெல்த்கேர் இதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு நோயில்லா வாழ்வு பெற சில ரகசியங்கள், மற்றும் உணவு உங்கள் உடலுக்கு எப்படி சக்தியூட்டுகிறது ஆகிய இரண்டு நூல்களாக புஸ்தகா நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

    ஆரோக்கியம் சம்பந்தமான, நுட்பமான அனைத்துக் கருத்துக்களையும் தெரிந்து கொண்டு அவற்றை வாழ்க்கையில் பயன்படுத்தி நீண்ட ஆயுளுடன் அனைவரும் வாழ்வோம்; அதற்கு இறைவன் அருள் பாலிப்பானாக!

    நன்றி.

    பங்களூரு

    ச. நாகராஜன்

    27-2 -2024

    1. ஆரோக்கியத்திற்கு அவசியமான நடைப்பயிற்சி!

    செலவே இல்லாத ஒரு எளிய முறை!

    ஆரோக்கியமாக நீண்ட நாள் வாழ சுலபமான ஆபத்தில்லாத எளிய உடல் பயிற்சி நடைப் பயிற்சியே! குறிப்பாக சற்று பருமனாக உள்ளவர்கL உடனடியாக ஆரம்பிக்க வேண்டிய உடல் பயிற்சி நடைப் பயிற்சி தான்!

    ஆரம்பத்தில் நன்கு சௌகரியமாக மூச்சு விடும் படி நடந்தால் போதுமானது. வேக வேகமாக நடந்து மூச்சு இரைக்க நடக்கக் கூடாது! ஜாகிங் செய்கிறேன் என்று ஆரம்பத்திலேயே அதை மேற்கொள்ளுதல் ஆபத்திற்கு சில சமயம் அடி கோலி விடும். மருத்துவரின் ஆலோசனையின் பெயரிலேயே உங்கள் உடல் தகுதிக்கேற்ப எதையும் மேற்கொள்ளுதல் வேண்டும்.

    மலைப் பகுதிகளில் வசிப்போர் தாங்கள் வசிக்கும் பகுதியின் அதிர்ஷ்டத்தை எண்ணி அங்கு நடைப் பயிற்சியை மேற்கொள்ளுதல் நலம் பயக்கும்.

    நடைப் பயிற்சிக்கு எந்த வித செலவும் இல்லை என்பது ஒரு மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட்! ஒரு அடியை எடுத்து வையுங்கள் அடுத்து அடுத்த அடியை எடுத்து வையுங்கள். நடக்கலாம் நடக்கலாம் நடந்து கொண்டே இருக்கலாம். செலவே இல்லை.

    நல்ல பயன்கள்

    நடப்பதினால் ரத்த அழுத்தம் குறைகிறது. இதயம் நன்கு செயல் படுகிறது.

    எடை குறைகிறது. வயது ஏற ஏற வரும் வியாதிகள் அனைத்தும் நடையினால் குறையும். தசை (மஸில்) வலு கூடும். எதையும் பொறுக்கும் தன்மை கூடும். வலுவான எலும்புகள், மூட்டுகள் என அனைத்தும் நலமாக இருக்க நடை உதவும்!

    மன அழுத்தம் குறைவதாலும், பெரும்பாலானோருக்கு அறவே இல்லாமல் போவதாலும் நடைப் பயிற்சி முதுமையை விரட்ட ஒரு சிறந்த வழி என்பதை உணர்ந்தால் நடக்காமல் இருக்க முடியுமா என்ன?

    ஒரு நடை நடந்தவுடன் உடலில் ஏற்படும் புத்துணர்ச்சியும் புதிய சக்தியும் ஒவ்வொரு நாளையும் நன்கு எதிர்கொள்ள வழி கோலும்.

    எடை கட்டுப்பாட்டில் இருக்கும்!

    தினமும் நடக்க நடக்க கலோரிகள் செலவழிக்கப்பட்டு ஒரு புதிய மாறுதலை நீங்கள் நன்கு உணர முடியும். நடையின் வேகத்திற்குத் தக்கவாறும் தூரத்திற்கு ஏற்றவாறும் கலோரிகள் செலவழிக்கப்படுவதால் எடை கட்டுப்பாட்டிற்குள்ளேயே இருக்கும்!

    இயற்கையான முதுமை எதிர்ப்பு உத்தி

    இயல்பான இயற்கைக்கு உகந்த முதுமை எதிர்ப்பு உத்தி நடைப் பயிற்சியே! தினமும் நடப்பது உங்களின் இரத்த ஓட்டத்தை சீர்ப்படுத்தி உங்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்பட வைக்கிறது. சக்தியை அதிகரித்து உங்களின் உற்சாகத்தைக் கூட்டுகிறது! உற்சாகத்துடன் எப்போதும் இருக்க முடிவதால் இயல்பாகவே இளமையுடன் இருக்க வழி வகுக்கிறது.

    அழகு கூடும்

    சூரிய ஒளியில் காலையிலோ அல்லது மாலையிலோ நடப்பது உங்கள் சருமத்தில் விடமின் டி-யை உருவாக்குகிறது. விடமின் டி ஆரோக்கியத்தின் அடிப்படைத் தேவை என்பதை அனைவரும் அறிவர். விடமின் டி கான்ஸரை தடுக்கும் வல்லமை உடையது என்பதை கனடா மற்றும் அமெரிக்காவில்

    Enjoying the preview?
    Page 1 of 1