Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Anaivarukkum Arockkiyam - Part 2
Anaivarukkum Arockkiyam - Part 2
Anaivarukkum Arockkiyam - Part 2
Ebook91 pages34 minutes

Anaivarukkum Arockkiyam - Part 2

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உலகில் ஆரோக்கியமாக நீண்ட நாள் வாழ விரும்பாதோர் யாருமில்லை ஆனால் அன்றாட வாழ்விலோ பல நோய்நொடிகள் நம்மைப் பீடிக்க நாம் நொந்து போகிறோம். ஆகவே இந்த நிலையில் ஆரோக்கிய வாழ்வின் அடிப்படை ரகசியங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியது இன்றியமையாததாகிறது.

நவீன மருத்துவக் கண்டுபிடிப்புகள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றன. புதிய மருந்துகள், புதிய சிகிச்சை முறைகள் பெருகி வருகின்றன. இவை பற்றியும் அறிந்து கொண்டால் தான் நமது ஆரோக்கியத்தை நாம் உறுதி செய்ய முடியும். இதைக் கருத்தில் கொண்டு ‘அனைவருக்கும் ஆரோக்கியம்’ நூல் மூன்று பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது.

தோல் ஆரோக்கியத்திற்கு சோயா பால், நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க இயற்கையான எளிய வழிகள், ஆரோக்கிய வாழ்வுக்கு கொத்தமல்லி, கறிவேப்பிலை நெல்லிக்காய், விந்தணு எண்ணிக்கை குறைபாடு பற்றிய கேள்வி-பதில்கள், நரைமுடியைக் கறுப்பாக்கும் இரசாயன டையின் அபாயம், பளபளப்பான கேசம் பெற எளிய குறிப்புகள், என்றும் இளமையோடு இருக்க வழிகள், டயாபடீஸ் பற்றிய அடிப்படை உண்மைகள் ஆகியவை பற்றிப் பல்வேறு அரிய செய்திகளை இந்த இரண்டாம் பாகத்தில் படித்து மகிழலாம்; அவற்றில் தேவையானவற்றைக் கடைப்பிடிக்கலாம். அனைவருக்குமான நூல் இது. பரிசாக அளிக்கவும் உகந்த நூல் இது.

Languageதமிழ்
Release dateMar 23, 2024
ISBN6580151010803
Anaivarukkum Arockkiyam - Part 2

Read more from S. Nagarajan

Related to Anaivarukkum Arockkiyam - Part 2

Related ebooks

Reviews for Anaivarukkum Arockkiyam - Part 2

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Anaivarukkum Arockkiyam - Part 2 - S. Nagarajan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அனைவருக்கும் ஆரோக்கியம் - பாகம் 2

    Anaivarukkum Arockkiyam - Part 2

    Author:

    ச. நாகராஜன்

    S. Nagarajan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-nagarajan

    பொருளடக்கம்

    இரண்டாம் பதிப்பின் முன்னுரை

    1. தோல் ஆரோக்கியத்திற்கு சோயா பால்

    2. நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க 4 இயற்கையான எளிய வழிகள்!

    3. டயாபடீஸா? கவலை வேண்டாம் இரவு நேர நொறுக்குத் தீனிகளைச் சாப்பிடுங்கள்!

    4. ஆரோக்கிய வாழ்வுக்கு கொத்தமல்லி, கருகப்பிலை நெல்லிக்காய் அகத்திக்கிரை; அட! எளிய உணவு வகைகள்!

    5. மனச்சோர்வை அகற்ற ஒரு அபூர்வ மருந்து!

    6. ஒளி உணரும் மூளைத் திசுக்கள் நம்மை விழிப்புடன் வைத்திருப்பது எப்படி?

    7. விந்தணு எண்ணிக்கை குறைபாடு - முக்கிய கேள்விகளும் பதில்களும்

    8. நரைமுடியைக் கறுப்பாக்கும் இரசாயன டைகளின் அபாயம்

    9. பளபளப்பான செழுமையான கேசம் பெற எளிய குறிப்புகள்!

    10. காச உறையழல் நோய் அல்லது காச மூளை உறையழற்சி நோயும் அதற்கான தடுப்பூசியும்!

    11. என்றும் இளமையோடு இருக்கலாமே!

    12. டயாபடீஸ் - அடிப்படை உண்மைகள்

    13. டயாபடீஸ் மற்றும் இதய நோயைத் தடுக்கும் அதிசய பாதாம் பருப்பு

    14. மூளைச் சிதைவைத் தடுக்கும் 6 சக்தி வாய்ந்த ஊட்டச்சத்துகள்

    15. நமக்கில்லை இனி குறைவான ஆயுள் எல்லை!

    16. மருத்துவ உலகில் இந்தியா உயரும் உயரும், உயர்ந்துகொண்டே இருக்கும்!

    இரண்டாம் பதிப்பின் முன்னுரை

    ‘நூறு ஆண்டுகள் வாழ்வாயாக’ என்பது பெரியோர்களின் ஆசீர்வாதங்களில் ஒன்று; அது முக்கியமானதும் கூட!

    நூறு ஆண்டுகள் வாழ்வதுடன் நோயற்று மகிழ்ச்சியுடன் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதே அதன் கூரிய நேரிய உள்ளடங்கிய பொருள்!

    நோயற்ற வாழ்க்கைக்கான அடிப்படை உண்மைகளை நமது பண்டைய ரிஷிகள் மிகச் சிறப்பாக விளக்கி உள்ளனர். ஆசார்ய சரகர் உள்ளிட்ட பெரியோர் தங்கள் நூலில் ஏராளமான நல்ல நெறிகளைத் தந்துள்ளனர்.

    வளர்ந்து வரும் நவீன தொழில் நுட்ப உலகில் மருத்துவம் சம்பந்தமான ஆராய்ச்சிகள் ஆயிரமாயிரம் நடைபெற்று வருகின்றன. ஆரோக்கியம் சம்பந்தமாக அருமையான உண்மைகளைத் தருகின்றன.

    இவற்றையெல்லாம் மேலை நாட்டு பத்திரிகைகளிலும் இணையதள வாயிலாகவும் படித்து அவ்வப்பொழுது ஹெல்த்கேர் மாத இதழில் 2008ஆம் ஆண்டு முதல் கடந்த 16 ஆண்டுகளாக எழுதி வந்தேன்.

    ஹெல்த்கேர் பத்திரிகை ஆசிரியரான திரு R.C. ராஜா அவர்கள் ஆர்வத்துடன் ஏராளமான கட்டுரைகளைச் சுட்டிக் காட்டி அவற்றை மொழி பெயர்த்துத் தருமாறு கூறிய போது அதை மகிழ்ச்சியுடன் ஏற்று அவருக்கு அனுப்பி வந்தேன். அவை அனைத்தும் ஹெல்த்கேர் மாத இதழில் வெளியாகின.

    அவற்றின் தொகுப்பே அனைவருக்கும் ஆரோக்கியம் என்ற தலைப்பில் மூன்று பாகங்களாக மலர்ந்துள்ளன. அவருக்கு எனது நன்றியை இங்கு பதிவு செய்கிறேன்.

    அனைவருக்கும் ஆரோக்கியம் மூன்று பாகங்களும் மின்னணு நூலாக மட்டும் லண்டன் நிலா பப்ளிஷர்ஸ் வாயிலாக வெளி வந்தன.

    அச்சுப் பதிப்பாகவும் மின்னணு நூலாகவும் பலரும் இந்த நூல்களைப் பெற வேண்டி ஆவலைத் தெரிவிப்பதால் இப்போது மூன்று பாகங்களும் இரண்டாம் பதிப்பாக வெளி வருகிறது.

    ஆரோக்கியத்தை விரும்பும் தமிழ் உலகம் இதை வரவேற்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை.

    இதை டிஜிடல் வடிவிலும், அச்சுப் பதிப்பாகவும் மறு பதிப்பாகக் கொண்டு வர முன் வந்துள்ள பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவராஜ் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இதன் தொடர்ச்சியாக ஹெல்த்கேர் இதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு நோயில்லா வாழ்வு பெற சில ரகசியங்கள், மற்றும் உணவு உங்கள் உடலுக்கு எப்படி சக்தியூட்டுகிறது ஆகிய இரண்டு நூல்களாக புஸ்தகா நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

    ஆரோக்கியம் சம்பந்தமான, நுட்பமான அனைத்துக் கருத்துக்களையும் தெரிந்து கொண்டு அவற்றை வாழ்க்கையில் பயன்படுத்தி நீண்ட ஆயுளுடன் அனைவரும் வாழ்வோம்; அதற்கு இறைவன் அருள் பாலிப்பானாக!

    நன்றி.

    பங்களூரு

    ச. நாகராஜன்

    27-3-2024

    பொறுப்புத் துறப்பு

    DISCLAIMER

    இந்த நூலில் உள்ள தகவல்கள் அனைத்தும் அனைவரும் நலமுடன் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையிலேயே தரப்பட்டுள்ளது.

    ஆயின் ஒவ்வொருவரின் உடலும் தனிப்பட்ட தன்மை வாய்ந்தது என்பதால் இதில் தரப்பட்டுள்ள ஆலோசனைகளைக் கடைப்பிடிக்கும் முன்பு, உங்கள் குடும்ப வைத்தியருடன் கலந்து ஆலோசித்து அவர் சொல்படி நடப்பதே சாலச் சிறந்தது. குடும்ப வைத்தியரின் அறிவுரையும் பரிந்துரையுமே கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

    இந்த நூலாசிரியரோ அல்லது இந்த நூலை வெளியிட்டவரோ எந்த விதத்திலும் பொறுப்பேற்க மாட்டார்கள்.

    ச.நாகராஜன்

    1. தோல் ஆரோக்கியத்திற்கு சோயா பால்

    சோயா பால் தோலுக்கு எப்படி நன்மை தருகிறது?

    தோல் ஆரோக்கியத்திற்கு சோயா பால் ஒன்றே தான் அடிப்படையானதும் முழுக்க முழுக்க நலம் தரும் ஒன்றுமாகும். தோலுக்கு சோயா பால் என்னென்ன நன்மைகளைத் தரும் என்பதைக்

    Enjoying the preview?
    Page 1 of 1