Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Indru Mudhal Happy
Indru Mudhal Happy
Indru Mudhal Happy
Ebook172 pages56 minutes

Indru Mudhal Happy

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

குழந்தைகளுக்கும் சிறு வயதினருக்கும் அடிக்கடி நோய் தாக்குதல் ஏற்படத்தான் செய்கிறது. ஆனால், அவர்கள் மின்னல் வேகத்தில் குணமடைந்துவிடுவார்கள். அதற்கு காரணம் என்ன தெரியுமா?

நோய் பற்றிய அறியாமை.

அதனால்தான் நோயைப் பொறுத்தவரை, ‘அறியாமையே வரம்’ என்கிறார்கள். கிராமத்து மனிதர்களை நிறைய நோய்கள் அண்டாமல் இருப்பதற்கான காரணமும் இந்த அறியாமைதான்.

உடல் மீது நம்பிக்கையும் மனம் மீது உறுதியும் கொண்ட மனிதரை நோயால் எளிதாக வீழ்த்திவிட முடியாது. புத்தகத்தில் நுழையுங்கள், நோய் அச்சத்தில் இருந்து வெல்வதற்கான வழிகளை அறிந்துகொண்டு மகிழ்வுடன் வாழுங்கள்.

Languageதமிழ்
Release dateFeb 26, 2022
ISBN6580152508182
Indru Mudhal Happy

Read more from S.K. Murugan

Related to Indru Mudhal Happy

Related ebooks

Reviews for Indru Mudhal Happy

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Indru Mudhal Happy - S.K. Murugan

    https://www.pustaka.co.in

    இன்று முதல் ஹேப்பி

    (நோய் அச்சம் நீக்கும் உற்சாக டானிக்)

    Indru Mudhal Happy

    (Noi Acham Neekkum Urchaga Tonic)

    Author:

    எஸ். கே. முருகன்

    S.K. Murugan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/sk-murugan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    ஆசிரியர் பக்கம்
    அறியாமையே வரம்

    குழந்தைகளுக்கும் சிறு வயதினருக்கும் அடிக்கடி நோய் தாக்குதல் ஏற்படத்தான் செய்கிறது. ஆனால், அவர்கள் மின்னல் வேகத்தில் குணமடைந்துவிடுவார்கள். அதற்கு காரணம் என்ன தெரியுமா?

    நோய் பற்றிய அறியாமை.

    தனக்கு வயிற்று வலி எப்படி உருவானது, வயிற்று வலியினால் அடுத்து என்ன பிரச்னை வரும், ஒருவேளை வயிற்றில் புற்றுநோய் வந்திருக்குமோ என்றெல்லாம் தேவையற்ற எண்ணங்களை அவர்கள் வளர்த்துக் கொள்வதில்லை. பெற்றோரையும், மருத்துவர்களையும் முழுமையாக நம்புகிறார்கள், அதனால் எளிதில் குணமடைகிறார்கள்.

    அதனால்தான் நோயைப் பொறுத்தவரை, ‘அறியாமையே வரம்’ என்கிறார்கள். கிராமத்து மனிதர்களை நிறைய நோய்கள் அண்டாமல் இருப்பதற்கான காரணமும் இந்த அறியாமைதான். ஆனால், அறியாமைக்கும் அசட்டைக்கும் நிறையவே வித்தியாசம் உண்டு. அதாவது, நோய் அறிகுறி தென்படுகிறது என்றால், அதனை நிச்சயம் அசட்டை செய்யக்கூடாது. உடனே ஒரு மருத்துவரை பார்த்து, அவர் என்ன சொல்கிறாரோ, அதன்படி நடந்துகொள்ள வேண்டும். அதுதான் ஒரு நோயாளியின் கடமை.

    ஆனால், இன்று அப்படி நடப்பதில்லை. ஒரு சிறிய நோய் அறிகுறி தென்பட்டதுமே, கூகுள் செய்து அதுகுறித்து தேடுகிறார்கள். என்னென்ன காரணங்களால் இந்த பிரச்னை வந்திருக்கிறது, இது எப்படியெல்லாம் உருமாறும், இதற்கு சிகிச்சை என்ன, இதற்கு சாப்பிடும் மாத்திரைகளால் என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படும், சிகிச்சை எடுத்துக் கொள்ளவில்லை என்றால், என்ன நடக்கும் என்று முழுமையாக அலசி, தேவையற்ற தகவல்களை எல்லாம் மனதில் பதித்துக்கொள்கிறார்கள்.

    ஆரம்பகட்டத்திலேயே, நோயின் இறுதிக்கட்டத்தை நினைத்து அச்சப்படுகிறார்கள். இந்த அச்சம், நோயை மேலும் மேலும் அதிகரிக்கச் செய்கிறது. எனவேதான், இதனை குணப்படுத்துவது மருத்துவர்களுக்கு சவாலாக மாறிவிடுகிறது. இரண்டு நாட்களில் தீரவேண்டிய வியாதி, ஒரு வாரத்திற்குப் பின்னே சரியாகிறது.

    உடல் என்று இருந்துவிட்டால், நோய் வருவதும் போவதும் இயல்புதான். நோய் வராமல் தடுத்துவிட வேண்டும் என்று அதிக முனைப்பு ஏற்பட்டவர்களுக்குத்தான் நோய்தாக்குதல் எளிதில் நிகழ்கிறது என்கிறது மருத்துவ ஆய்வு. ஏனென்றால், அவர்கள் எல்லா நேரமும் நோய் பற்றிய அச்சத்தில் இருக்கிறார்கள். அதனால் பதட்டம் அடைகிறார்கள். இந்த பதட்டம் மேலும் பல நோய்களுக்கு இழுத்துச் செல்கிறது.

    பயம் இருப்பது நல்லதுதான். ஆனால், அது கொஞ்சமாக இருக்க வேண்டும். அதாவது, கொரோனாநோய் தொற்று ஏற்பட்டுவிட்டால் தனிமைப்படுத்த வேண்டியிருக்கும், நாட்பட்ட உடல் பிரச்னைகள் ஏற்படும் என்றெல்லாம் பயந்து முகக்கவசம் அணிவிப்பது, கைகளைக் கழுவுதல், தனிமனித இடைவெளி கடைப்பிடித்தல் போன்றவற்றைக் கடைப்பிடிப்பது நல்ல விஷயம்தான். ஆனால், கொரோனா வந்துவிட்டாலே மரணம்தான் என்ற பயம் வந்துவிட்டால், பின்னர் சிகிச்சை அளிப்பதும், குணம் அடைவதும் சிக்கலாக மாறிவிடும்.

    நோய் பற்றிய பயம் கொஞ்சமாக இருக்கிறதா அல்லது அதிகமாக இருக்கிறதா என்பதை ஒவ்வொருவரும் அறிந்துகொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். அதாவது நோய் பற்றிய எண்ணம் வந்தாலே பாதம் ஜில்லிடுகிறது, உடல் குளிர்கிறது, வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது, சோர்வாகிவிடுகிறது, யாரிடமும் பேசப் பிடிக்கவில்லை என்றெல்லாம் ஏற்படுகிறதா...? இதுவெல்லாம், நோய் பற்றிய பயம் அதிகம் இருப்பதற்கான அறிகுறிகள்.

    இதயம் பக்கத்தில் லேசாக வலி ஏற்பட்டாலே, ஹார்ட் அட்டாக் என்று பயந்துவிடுவார்கள். முதுகுப்பக்கம் வலி எடுத்தால் கிட்னி பாதித்துவிட்டது என்று அஞ்சுவார்கள். தலை வலித்தால் மூளையில் புற்று நோயா என்று யோசிப்பார்கள். இந்த யோசனையே அவர்களை மேலும் பலவீனமாக்கிவிடும்.

    இதுபோன்ற சிந்தனைகள் ஏற்படாமல் தடுப்பதற்கான வழிகளை சொல்லித்தரவே, இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. உடல்நலம் மற்றும் மனநலத்தில் அனுபவம் வாய்ந்த சில மருத்துவர்கள் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையுடனே இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது.

    பொதுவாக நோய் பற்றிய பயம் அல்லது பதட்டம் ஏற்படும் நேரத்தில், அதில் இருந்து வெளியேறுவதற்கு ஒரு டெக்னிக்கை மனநல மருத்துவர்கள் பயன்படுத்துகிறார்கள். அது, ரிவர்ஸ் நம்பரிங் டெஸ்ட்.

    இதன்படி 5,4,3,2,1 ஆகிய எண்களைப் பயன்படுத்தி முடிந்த அளவுக்கு கவனத்தை அதன்மீது திருப்ப வேண்டும். முதலில் எண் 5. வெவ்வேறு இடங்களில் இருக்கும் ஐந்து பொருட்களை சில நொடிகள் கவனித்துப் பார்க்க வேண்டும். கண், காது, மூக்கு, நாக்கு, தோல் போன்ற ஐந்து அவயங்களும் இதற்குப் பயன்படுகிறது.

    அடுத்தது 4. இப்போது ஏதேனும் நான்கு பொருட்களை தொட்டுப்பார்க்க வேண்டும். உங்கள் சட்டைப் பையில் இருக்கும் பேனா அல்லது வாசலில் நிற்கும் உங்கள் வாகனம் என எதையாவது தொடலாம்.

    அடுத்தது 3. உங்களை சுற்றி மூன்று ஒலிகளைக் கேட்க வேண்டும். அது ஃபேன் சுற்றுவதாக இருக்கலாம், தொலைக்காட்சி பாடலாக இருக்கலாம் அல்லது ரோட்டில் கேட்கும் விற்பனையாளர் குரலாக இருக்கலாம்.

    அடுத்தது 2. இரண்டு வாசனைகளை நன்கு உணர்ந்து பார்க்க வேண்டும். அடுப்பில் வைக்கப்படும் குழம்பின் வாசனை அல்லது வீட்டுச் செடியில் பூத்திருக்கும் ரோஜாவின் மணமாக இருக்கலாம்.

    இறுதியில் 1. ஏதேனும் ஒரு சுவையை உணர வேண்டும். தண்ணீர், காபி, இனிப்பு இப்படி ஏதேனும் ஒன்றை சுவைத்து உணரவேண்டும்.

    இப்படி மனம் இணைந்து 5 வரை செயலாற்றி முடிந்துவிட்டால், மனதில் இருந்த பயம், பதட்டம், அச்சவுணர்வு ஓரளவு குறைந்திருப்பதை நன்கு உணரமுடியும். ஆனால், இதனால் நோய் தீர்ந்துவிடாது. ஆனால், நோயை தைரியத்துடன் எதிர்கொள்ள முடியும்.

    மரணம் என்பது நிஜம். அதனை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால், எல்லா நோய்களும் மரணத்தை நோக்கிச் செல்வதல்ல என்பதை உறுதியுடன் நம்புங்கள். உடல் மீது நம்பிக்கையும் மனம்மீது உறுதியும் கொண்ட மனிதரை நோயால் எளிதாக வீழ்த்திவிட முடியாது. புத்தகத்தில் நுழையுங்கள், நோய் அச்சத்தில் இருந்து வெல்வதற்கான வழிகளை அறிந்துகொண்டு மகிழ்வுடன் வாழுங்கள்.

    அன்புடன்

    எஸ்.கே.முருகன்

    skmnila1@gmail.com

    பொருளடக்கம்

    1 உடலும் உள்ளமும் ஹேப்பியாக ஆசையா...?

    2 யானை ஏன் பிச்சை எடுக்கிறது...?

    3 மனம் எனும் மாய விளக்கு…!

    4 இன்றே... இப்பொழுதே சிரியுங்கள்...!

    5 கவலை தீர்க்கும் மாமருந்து...!

    6 பிரசவ வலியின் சுவை அறிவாயா...?!

    7 நேருக்கு நேராக மோதிப்பார்...!

    8 விராட் கோலியால் எப்படி விரட்ட முடிகிறது...?!

    9 கொரோனா வந்தால் கல்யாணம் நடக்காதா?

    10 குறை ஒன்றும் இல்லை...!

    11 இலவச காதுகள் தேவை...!

    12 அலட்சியம் ஏன் ராஜா...?

    13 மனசுக்குள்ளே இருப்பது யாரு...?

    14 30 நிமிட மேஜிக்...!

    15 ஹக்குனா மட்டாடா

    16 புத்தருக்கு மட்டும்தான் போதி மரமா...?

    17 மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்

    1 உடலும் உள்ளமும் ஹேப்பியாக ஆசையா...?

    ‘நோயைவிட, நோய் பற்றிய அச்சமே நிறைய பேர் மரணத்துக்குக் காரணமாக அமைகிறது’ என்கிறார்கள் மருத்துவர்கள். அது, அக்மார்க் நிஜம் என்பதை சுட்டிக்காட்டுகிறது, கொரோனா கால மரணங்கள். இரண்டு பேர் சந்தித்துக்கொண்டால், அவர்களுடைய முதல் பேச்சு, ‘உங்க ஏரியாவில் கொரோனா எப்படி இருக்கிறது?’ என்பதாகவே இருக்கிறது. இதன் அர்த்தம், அந்த அளவுக்கு மனதளவில் பயந்து போயிருக்கிறார்கள் என்பதுதான்.

    புத்தர் ஒரு கிராமத்தின் வழியே சென்ற நேரத்தில், ஒரு பெண் ஓடோடிவந்து அவர் பாதங்களில் விழுந்தாள். ‘என்னுடைய கணவர் மிகவும் நல்லவர், என்மீதும் குழந்தைகள் மீதும் அன்பாக இருக்கிறார். அவர் என்னைவிட்டு பிரிந்துவிடுவார் என்று ஏனோ அச்சமாக இருக்கிறது, நான் என்னதான் செய்வது?’ என்று கேள்வி கேட்டார்.

    இதுகுறித்து உன் கணவரிடம் பேசினாயா பெண்ணே...? என்று புத்தர் கேட்டதும், ம்… பேசினேன். அவருக்கு அப்படியொரு எண்ணம் இல்லை என்று சொல்கிறார். ஆனாலும், எனக்கு ஏனோ அப்படித்தான் நடக்கும் என்று தோன்றுகிறது என்றாள்.

    ‘நீ அப்படி நினைப்பதற்கு ஏதேனும் காரணம் இருக்கிறதா...?’

    Enjoying the preview?
    Page 1 of 1