Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Manathin Ragasiyangal
Manathin Ragasiyangal
Manathin Ragasiyangal
Ebook125 pages33 minutes

Manathin Ragasiyangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மனோதத்துவம் என்றழைக்கப்படும் உளவியல் ஒரு வசீகரமான பிரிவு ஆகும். உளவியலைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும், கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் நிறைய மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் கல்வியாளர்களிடையே உண்டு. ஏனெனில், மனோதத்துவதை புரிந்து கொண்டால் பிறர் மனதில் ஓடும் எண்ண ஓட்டங்களை தெரிந்து கொள்ளலாமே எனும் ஆர்வ மிகுதியே அதற்கு காரணம். உண்மையில், உளவியலிலுள்ள அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்வது பலவிதங்களில் உங்களுக்கு பயன்படும். நம்முடைய பலம், பலவீனங்களை தெரிந்து கொள்வதற்கும், எண்ணங்களை / வாழ்க்கையை ஒழுங்குபடுத்திக் கொள்வதற்கும், சமூகத்தில் சக மனிதர்களிடம் சுமூகமாக, அன்பாக உறவாடுவதற்கும், நமக்கு ஏதேனும் உளவியல் சிக்கல்கள் இருப்பின் அதைப்பற்றிய விழிப்புணர்வு பெறவும் - எனப் பலவாறாக உளவியல் உதவும். மனோதத்துவம் என்பது ஓர் கடல். எனினும், பல்வேறு அடிப்படை உளவியல் கருத்துக்களை இந்நூல் தெளிவாக, விரிவாக, எளிமையாக விளக்குகிறது.

Languageதமிழ்
Release dateDec 31, 2022
ISBN6580155809449
Manathin Ragasiyangal

Read more from P. Lingeswaran

Related to Manathin Ragasiyangal

Related ebooks

Reviews for Manathin Ragasiyangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Manathin Ragasiyangal - P. Lingeswaran

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மனதின் ரகசியங்கள்

    Mind - The Wonderland

    Manathin Ragasiyangal

    Author:

    ப. லிங்கேஸ்வரன்

    P. Lingeswaran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/p-lingeswaran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    E:\Priya\Book Generation\Manathin Ragasiyangal\1-min.jpg

    மிக முக்கியமான குறிப்பு

    இந்த நூல் உளவியல் மற்றும் தத்துவம் தொடர்பான உண்மைகள்/கருத்துக்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் முயற்சி மட்டுமே. எனவே இம்முயற்சியை ஒரு விழிப்புணர்வாகவோ, கல்வியாகவோ, தகவல் பகிர்தலாகவோ மட்டுமே கருதவேண்டும். புத்தகத்தில் கூறப்பட்டுள்ளவை எவ்வித சிகிச்சைமுறையும் ஆகாது. தங்களுக்கு ஏதேனும் உளவியல் சிக்கல்கள் இருப்பின் அதற்கு உரிய நிபுணத்துவம் பெற்ற மனநல ஆலோசகரையோ/மனநல மருத்துவரையோ நாடுமாறு வலியுறுத்தி கூறிக் கொள்ளப்படுகிறது.

    சமர்ப்பணம்

    சிறு வயதில் 'உளவியல்’என்ற வார்த்தையை என் தந்தையிடம் இருந்துதான் கேள்விப்பட்டேன். அவர் இப்போது அமரராகி விட்டார். எனினும் அவருடன் நடந்த உரையாடல்களும், அவர் கற்றுக் கொடுத்த விஷயங்களும் துல்லியமாக நினைவில் நிற்கின்றன. எனக்குள் அறிவுச்சுடரை ஏற்றி வைத்தவர் அவரே. அரசாங்க அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற என் தந்தை தமிழிலும், ஆங்கிலத்திலும் நல்ல புலமை உள்ளவர். மனித வாழ்க்கையின் போக்கு குறித்து என் தந்தை ஒரு தெளிவான, தீர்க்கமான ‘தத்துவார்த்த பார்வையை ‘கொண்டிருந்தார். அவ்வப்போது எனக்கு வாழ்வியல், உளவியல் தொடர்பான கருத்துக்களை நாசூக்காக சுட்டிக்காட்டுவார். அவருடன் நெருங்கிப் பேசுவதற்கு ஒரு பயமும் தயக்கமும் எனக்குள் இருந்தன. எனக்கு சரியாக புரியவில்லை என்றால், கடிந்து கொள்வார். அவரிடம் நான் கற்றுக்கொண்ட பாடங்கள் ஏராளம். அவர் உயிருடன் இருக்கும்போது அவர் ஒரு மேதை என்பது எனக்கு தெரியவில்லை. எனினும், அவரின் நினைவுகள் இன்றும் என்னை வழிநடத்துகின்றன. என் தந்தையும், என் முதல் குருவுமான திரு. க. பழனிச்சாமி அவர்களுக்கு நன்றியுணர்வோடு இச்சிறுநூலை காணிக்கை ஆக்குகிறேன்.

    முன்னுரை

    உளவியல் என்ற வார்த்தை வசீகரமானது. பெரும்பாலான மக்கள் மனோதத்துவம் எனப்படும் உளவியலை கேட்டுத் தெரிந்துகொள்ளவோ, படிக்கவோ, கற்றுக்கொள்ளவோ விரும்புவார்கள். இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. முதல் காரணம், தன்னைப் பற்றியே தெரிந்து கொள்ளலாம் என்பது. இரண்டாம் காரணம், மனோதத்துவம் கற்றுக்கொள்வதன் மூலம் பிறர் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம் என்ற காரணம். இதில், பிறர் மனதில் உள்ளதை அப்படியே தெரிந்து கொள்வது எளிதில் சாத்தியமில்லாதது. மறைமுகமான சிலவழிகளில் வேண்டுமானால் தெரிந்து கொள்ளலாம். ஒருவரின், முகத்தில் படர்ந்துள்ள உணர்வுகள், உடல் அசைவுகள், வாய்தவறி கூறும்வார்த்தைகள் (slip of tongue), ஒருவரின் சொல்லுக்கும் செயலுக்கும் இடையிலான முரண்பாடுகள் (discrepancy between words and actions) – இவற்றை கூர்ந்து கவனிப்பதன் உள்ளத்தில் ஓடும் எண்ண ஓட்டத்தை அறிந்துகொள்ளலாம். ஆனால் இதற்கு நல்ல அனுபவமும், உள்ளுணர்வும், அடிப்படை உளவியல் விஷயங்களும் நன்கு கைவரப் பெற்றிக்கவேண்டும்.

    நான் 10-ம்வகுப்பு படிக்கும்போது, மாவட்டநூலகத்தில் ‘கனவுகளின்விளக்கம் ‘எனும் சிறுநூலை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுவே என்னுடைய உளவியல் கற்றலின் தொடக்கம் எனலாம். அதே சமயத்தில், என் தந்தை மெட்ராஸ் யூனிவர்சிட்டியில் தொலைதூரகல்வி மூலம் உளவியல் படித்துக்கொண்டிருந்தார். அவ்வப்போது அவருடைய புத்தகங்களை புரட்டிப்பார்ப்பேன். எதுவும் புரிந்ததில்லை.

    ஒரு உண்மை புரிய பல நாட்கள் ஆனது. அது என்னவென்றால், உளவியல் புத்தகங்களையோ/கருத்துக்களையோ படிப்பதன் மூலம் முற்றிலும் நிபுணத்துவம் பெறமுடியாது.காலப்போக்கில் வயது கூடகூட, வாழ்க்கை அனுபவங்களை ஒட்டியே உளவியல் தத்துவங்கள் பளிச்சென புரியவரும். அவ்வாறு நான் கற்றுக்கொண்ட, படித்த விஷயங்களில் இருந்தும்/அனுபவங்களில் இருந்தும்/உள்ளுணர்வாக தெரிந்து கொண்டவற்றிலிருந்தும் இப்புத்தகத்தை எழுதியுள்ளேன். எனவே, இவற்றை படிக்கும் ஒவ்வொருவரும் நூலில் ஏதோ ஓரிடத்தில் உங்களை பொருத்திப் பார்க்கமுடியுமென நம்புகிறேன். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்கும், குடும்ப வாழ்க்கைக்கும், பொதுவாகவும் நீங்கள் பயன்படுத்திக்கொள்ள முக்கியமான குறிப்புகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன எனவும் நம்புகிறேன்.

    இந்த புத்தகத்தை கூர்ந்து படிக்கும் எவரும் ஒரு விஷயத்தை கவனிக்கலாம். அனைத்து கட்டுரைகளிலும் ஒரு ஆன்மீக/தத்துவசாயல் தொனிப்பதை கவனிக்க முடியும். இந்தியனாக பிறந்த ஒருவர், மனோதத்துவத்தில் ஆர்வம் கொண்ட ஒருவர், வாசிப்பு பழக்கமுள்ள ஒருவர் – இந்திய தத்துவங்களையோ/கிழக்கத்திய தத்துவங்களையோ உளவியல் கருத்துக்களோடு தன்னையும் அறியாமல் ஒப்பிட்டு பார்ப்பதை தவிர்க்க முடியாது என்றே கருதுகிறேன். அதுவும் தமிழனாக பிறந்த ஒருவர், தமிழார்வம் கொண்ட ஒருவர் சித்தர் பாடல்களையோ, திருக்குறளையோ, சங்க இலக்கியங்களையோ- மேற்கோள் காட்டாமல் ஒரு உளவியல் நூல் எழுதுவது மிக சிரமம் என்றே நினைக்கிறேன். உதாரணமாக ‘மரத்தை மறைத்தது மாமதயானை ‘என்ற திருமந்திரப்

    Enjoying the preview?
    Page 1 of 1