Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ariyum Arive Arivu
Ariyum Arive Arivu
Ariyum Arive Arivu
Ebook127 pages51 minutes

Ariyum Arive Arivu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

காலக்கிரமப்படிப் பார்த்தால் ரமணர் அருளிய பாடல் தொகுப்புகளின் வரிசை அருணாச்சல அக்ஷர மணமாலை,...உபதேச உந்தியார்,... உள்ளது நாற்பது.... என்று போகும். அவரது படைப்புகள் அனைத்திலுமே அக்ஷர மணமாலை உள்ளடக்கிய “அருணாச்சல ஸ்துதி பஞ்சகம்” ஒன்றில்தான் பக்தி ரசம் ததும்பும். ஏனைய தொகுப்புகள் எல்லாமே ஞான ரசம் கொண்டவைதான். படிப்பதற்கும், புரிந்து கொள்ளுவதற்கும் மேற்கண்ட வரிசையில் உள்ள படைப்புகளில் முன்னே வருவது எளிதானதாகவும், பின்னே வருவது போகப்போக கடினமானதாகவும் இருக்கிறது என்பது பலரது அனுபவம்.

ஆனாலும் நான் செய்த முன்வினைப் பயனோ என்னவோ, எனக்கு முதலில் அறிமுகமாகியது "உள்ளது நாற்பது" பாடல்களே. அவைகள் எனக்கு அறிமுகம் ஆகும் சமயம், அந்த நூலின் பிரதியும்என்னிடம் கிடையாது. பம்பாயில் வேலை பார்த்து விட்டு ஒய்வு பெறும் போது சென்னை வந்து தங்கிய JBS என்று நாங்கள் அழைத்த திரு. J. பாலசுப்பிரமணியன் என்ற ஒரு பெரியவரிடம்தான் நான் அவைகளை 1975 -ம் ஆண்டில் கற்றேன். தனது வாழ்நாளின் இறுதி வருடங்களில் இந்தப் பணியை அவர் என் பொருட்டு செய்து முடித்தார். அவர் சொல்லி நான் கேட்டு ஒவ்வொரு செய்யுளையும் என் கைப்பிரதியாக எழுதி வைத்துக் கொண்டேன். அந்த 83 பாடல்களையும் அவர் எனக்கு சுமார் நான்கு நாட்களில் படித்து, பொருள் சொல்லி, விளக்கி, அவ்வப்போது கேள்வியும் கேட்டுக் கொண்டிருந்தார். அவரும் என்னைப் போலவே பம்பாயில் இன்னொரு ரமண பக்தரிடம் அவை அனைத்தையும் குருமுகமாகக் கற்றுக் கொண்டாராம்.

"உள்ளது நாற்பது" கற்று முடித்த பின்புதான் "உபதேச உந்தியா"ரும், அதன் பின்னரே "அக்ஷர மணமாலை"யும் படித்தேன். ஆக எனது பயணம் இந்த மூன்று தொகுப்புகளைப் பொருத்தவரை பின்னோக்கிச் சென்றிருக்கிறது. ஆனாலும் கடினத்தில் தொடங்கி எளிதானதிற்குச் சென்றதால் எனது பயணம் சுகமானதாகத்தான் இருந்தது.

அந்தப் பெரியவர் அன்று போட்ட அஸ்திவாரத்தில் தான் இந்தக் கட்டுரையை இப்போது என்னால் எழுத முடிந்தது என்று சொன்னால் மிகையாகாது. நான் பெற்ற அந்தப் பெரும் பயனை மற்றோரும் ஓரளவுக்கேனும் பெறலாமே எனும் எண்ணத்தில்தான் இத்தொடரைத் தொடங்கினேன். இதைப் படித்த பலரில் ஒரு சிலரேனும் இப்பணியைத் தொடர்வார்கள் என்னும் நம்பிக்கை எனக்கு என்றும் உண்டு.

அண்மையில் காலமாகிய ரமண பக்தர் திருமதி. கனகம்மாள் அவர்கள் எனக்கு அறிமுகம் ஆகியதே ஓர் அதிசய சந்திப்பில்தான். அவர் ஒரு சுற்றுலாப் பயணியாக நியூயார்க் நகரில் Queens பகுதியில் இருக்கும் "அருணாச்சல ஆஸ்ரம"த்திற்கு வந்திருந்தார். அப்போது நானும் அங்கு எதேச்சையாகப் போயிருந்தேன். அவருக்கு ஆங்கிலம் சரளமாக வராததால், அவரது தமிழ்ப் பேச்சை என்னை மொழிபெயர்க்கச் சொன்னார்கள். அப்படியாக அவர் எனக்கு அறிமுகம் ஆனார். அவர் ரமணாஸ்ரமத்தின் அருகிலேயே தங்கியிருந்ததால் 2009-ம் ஆண்டு வரை அவ்வப்போது நான் சந்தித்துக் கொண்டிருந்தேன். அவர் எழுதி ரமணாஸ்ரமம் வெளியிட்டுள்ள "ஸ்ரீ ரமண நூற்றிரட்டு உரை" ஒன்றையே எனது துணை நூலாகக் கொண்டு இந்தத் தொடரை அளித்துள்ளேன். "உள்ளது நாற்பது" தொகுப்பில் இருந்து இந்தத் தொடரின் தலைப்புக்கு ஏற்றது என்று நான் எண்ணிய சில பாடல்களை மட்டுமே இத்தொடருக்கு எடுத்துக் கொண்டேன். மற்ற பாடல்களும் தத்துவ சாரத்தைப் பிழிந்துகொடுப்பவைதாம். இந்தத் தொடர் மூலம் வாசகர்கள் எவரேனும் "உள்ளது நாற்ப"தை முதன் முதலாக அறிந்து கொண்டவர்கள் என்றால், அவர்கள் மற்ற பாடல்களையும் தங்கள் முயற்சியினால் படித்து அறிந்து கொள்வது நன்மை பயக்கும்.
Languageதமிழ்
Release dateDec 11, 2019
ISBN6580130404809
Ariyum Arive Arivu

Read more from S. Raman

Related to Ariyum Arive Arivu

Related ebooks

Reviews for Ariyum Arive Arivu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ariyum Arive Arivu - S. Raman

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அறியும் அறிவே அறிவு

    Ariyum Arive Arivu

    Author:

    எஸ். ராமன்

    S. Raman

    For more books

    http://www.pustaka.co.in/home/author/s-raman

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    பின்னுரை

    1

    ஒருமுறை காஞ்சி மட பீடாதிபதி ஸ்ரீ சங்கராச்சாரியார் அவர்கள் நான் வேலை செய்துகொண்டிருந்த சென்னை IIT-யில் உள்ள சிவன் கோயிலுக்கு விஜயம் செய்தபோது, அவர்களுக்கு வரவேற்புரை வழங்கும் கௌரவத்தை எனக்குக் கொடுத்திருந்தார்கள். பெரியவர்கள் விஜயத்திற்கு சில நாட்கள் முன்பே நான் காஞ்சி மடத்திற்குச் சென்றிருந்தபோது, என்னைப் போல் அங்கு வந்திருந்த ஒருவரிடம் என்னை வேறொருவர் அறிமுகம் செய்து வைக்க, அவரோ திடீரென்று என்னிடம் ஒரு மாதிரியாகப் பேசினார். IIT என்னும் வார்த்தையில் இரண்டு I-கள் இருப்பதால் அங்கிருப்பவர்களுக்கு அகந்தை சற்றே அதிகமாக இருக்குமோ? என்றார். வந்தவருக்கு அங்கு என்ன நடந்ததோ, ஏன் இப்படிப் பேசுகிறார் என்றுதான் எனக்குத் தோன்றியதே தவிர, அவருக்கு ஏதும் உருப்படியான பதில் எதுவும் நான் சொல்லவில்லை என்றே நினைக்கிறேன். கேள்வி உருப்படியாக இருந்தால்தானே பதிலும் உருப்படியாக வர முடியும் என்றே இப்போதும் நினைக்கிறேன். ஆனாலும் அவரது கேள்வி என்னை பாதித்திருக்கக்கூடும். ஏனென்றால் அது என்னை மிகவும் யோசிக்க வைத்தது.

    ஆச்சாரியார்களுக்கு நான் அளித்த வரவேற்புரையின் போது, எப்படி அங்கு வெவ்வேறு இடங்களில் கட்டிடங்கள் கட்டுவதற்காக பூமியைத் தோண்டும்போது ஒரு சிவலிங்கம் கிடைத்தது, மகா பெரியவர் வழிகாட்டுதலில் கவர்னர் மாளிகை அமைந்துள்ள ராஜ்பவன் ஆவணங்களில் இருந்து அந்த லிங்கத்தின் நாமம்தான் ஜலகண்டேஸ்வரர் என்று கண்டுகொண்டது, அதை அப்பைய தீட்சிதர் பூசித்ததற்கான சாத்தியக்கூறுகள் முதலான IIT கோயில் பற்றிய சில விவரங்களைக் கூறினேன். பின்பு மடத்தில் என்னை IIT பற்றி கேள்வி கேட்ட மேற்கூறிய நிகழ்ச்சியையும் விவரித்தேன். அதன் பின் நான் யோசித்து உணர்ந்த விஷயங்களையும் பின்வருமாறு கூறினேன்.

    கேள்வி கேட்டவருக்கு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. பின்னரே நான் யோசித்துப் பார்க்கும்போது ஒன்றை உணர்ந்தேன். அவர் பார்த்ததில் ஒரு I-யை மட்டும் எடுத்துக்கொண்டு, மீதி உள்ள I T-யையும் சேர்த்துப் பார்த்தால், நான்+அது என்றாகிறது. தத் த்வம் அசி எனும் மகா வாக்கியத்தின் படி நான் அதுவே என்று உணர்த்தும் அதி உன்னத நிலையைத் தரும் இடம் IIT எனக் கொள்ளலாகுமோ என்று சொல்லி மேலும் சொன்னேன்.

    "இப்படியான விளக்கத்தை அந்தக் கேள்வியைப் போலவே இன்னுமொரு மிகைப்படுத்தல் என்று நீங்கள் சொல்லலாம். ஆனாலும் உங்களைச் சுற்றிப் பாருங்கள். எங்கு பார்த்தாலும் ஆலமரங்கள் இருக்கின்றன. ஆலமரத்திற்கு முதல் என்றும் முடிவு என்றும் இல்லாத நிலையாக விழுதுகளே வேராக வளர்ந்து ஒரு தொடர் நிகழ்வைக் குறிக்கின்றன. கல்வி, அறிவு இவைகளின் குணமும் அப்படித்தானே; அதற்கு முதல் என்றும் முடிவு என்றும் உண்டோ? நல்லறிவை உணர்த்தும் கல்வியும் அப்படித்தானே இருக்கவேண்டும்? இப்படிப்பட்ட சூழ்நிலையில் அமைக்கப்பட்டுள்ள கல்விக்கூடமும் அத்தகைய குணத்தைத்தானே கொண்டிருக்க வேண்டும்?

    அது மட்டுமல்லாது, கல்விக் கூடம் அமைந்துள்ள இடத்தையும் கவனியுங்கள். ஆதி காலத்தில் வடமொழியில் வேத ஸ்ரேணி என்றும், தூயதமிழில் வேள்விச் சேரி என்றும் சொல்வார்கள் என முன்பு ராஜ்பவனின் ஒரு பகுதியாக இருந்த இந்த இடத்தை அங்கு உள்ள ஆவணங்களும் குறிப்பிடுவதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். அது இப்போதைக்கு மருவி வேளச்சேரி என்று ஆகியுள்ளது. ஆக அக்னி வளர்த்து அன்றைய காலத்துக் கல்வியான வேதங்கள் எல்லாம் முறைப்படி ஓதப்பட்ட கானகத்தில்தான் இக்காலக் கல்விக்கூடமும் குடி கொண்டிருப்பது மிகப் பொருத்தம் அல்லவா? முன்வினை என்பது மனிதர்கள், மற்றும் சகல சீவ ராசிகளுக்கு மட்டுமல்லாது, ஒரு இயக்கத்துக்கும் இருக்கலாம் அல்லவா?" என்றேன்.

    நான் IIT என்பதற்கு ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு சற்றே மிகையான விளக்கம் கொடுத்திருந்தாலும், அன்று சொன்ன மற்ற விவரங்களைப் பாருங்கள். வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான் என்றபடிதானே இருக்கிறது. என்றோ நடந்திருக்கக் கூடிய போதிக்கும், மற்றும் கற்கும் முயற்சிகள் காலத்திற்கு ஏற்ப நின்று பலன் கொடுத்துக் கொண்டிருக்கலாம் அல்லவா? இது போன்றதைத்தான் மகாகவி ஆங்கோர் ஏழைக்குக் கல்வி கற்பித்தல் என்று அதனைச் சிறப்பித்தும், சான்றோர்கள் நெல்லைக் கொடுப்பதைவிட விதையைக் கொடுப்பது மேல் என்றும் சொன்னார்களோ?

    காலத்திற்கு ஏற்ற கல்வி, மற்றும் அறிவு என்று சொன்னேன். மூதாட்டி ஔவை சொன்னதுபோல் கற்றது கைமண்ணளவு, கல்லாதது உலகளவு என்று அறிவு வெவ்வேறு அளவினதாய் இருக்கலாம். அது தவிர கல்வியும், அறிவும் இடம், பொருள், காலம் இவைகளுக்கு ஏற்பவும் இருக்கலாம், அவைகள் காலத்தைக் கடந்தும் நிற்கலாம். ஒவ்வொருவர் திறனுக்கும், முயற்சிக்கும் ஏற்ப ஒருவரது அறிவின் முதிர்ச்சி எழுத்துக் கூட்டிப் படிப்பதாகவோ, கவிதை, கட்டுரை புனைவதாகவோ இருக்கலாம். இது தவிர ஒவ்வொருவரது தேவைக்கும், சூழ்நிலைக்கும் ஏற்றாற்போலும் அறிவு அமையலாம்.

    ஆனாலும் நம் முன்னோர்களில் முற்றும் உணர்ந்த முனிவர்கள் கண்டறிந்து கூறிய, காலத்தால் அழியாத உண்மைகளை எவனொருவன் கேட்டு, கண்டு, உணர்ந்து அந்த வழிப்படி வாழ்கிறானோ அவனே அறிவாளிகளில் முதன்மையானவன். அத்தகையவனுடைய அறிவுதான் என்ன? அதை அடையும் வழி எப்படி? உணர்வது எப்படி? என்று பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி உள்ளது நாற்பது எனும் தொகுப்பில் செய்யுள் வடிவில் இயற்றியுள்ளதில் சிலவற்றை, முதன்முறையாகப் படிப்போர்க்குப் புரிவதற்காக சொற்றொடரை சற்றே பிரித்து எழுதி, உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பில் நானும் எனது பணியைத் தொடர்கிறேன்.

    "ஒளி உனக்கெது? பகலில் இனன் எனக்கு, இருள் விளக்கு

    ஒளி உணர் ஒளி எது? கண், அது உணர் ஒளி எது?

    ஒளி மதி, மதி உணர் ஒளி எது? அது அகம்

    ஒளிதனில் ஒளியும் நீ, என குரு, அகம் அதே"

    பொருள்: உனக்குப் பிரகாசம் தரும் ஒளி எது? எனக்குப் பகலில் சூரியன், இருளில் விளக்கு. இந்தப் பிரகாசத்தை எல்லாம் உணரக்கூடிய பிரகாசம் எது? கண்ணின் ஒளியினால் உணர்கிறேன். அந்தக் கண்ணை உணர்கின்ற ஒளி எது? மதியின் ஒளியாகும். மதியை உணர்கின்ற ஒளி எது? அது நான். எல்லா ஒளிகளிலும் அவற்றிற்கு ஒளியாவது நீ என்று குரு சொல்ல, நான் அதுவே என்கிறான் சீடன்.

    குரு சீடனிடம் கேள்விகள் பல கேட்டு அவனிடமிருந்து வரும் மறுமொழிகளிலிருந்து சரியான முடிவை அவனே உணர்வதாக அமைந்துள்ள செய்யுள் இது. சாதாரணமாக கல்வி கற்கும்போது குரு சில விவரங்களை விளக்கிச் சொல்ல, சீடனும் தனது அளவில் புரிந்துகொண்டு குருவைக் கேள்விகள் கேட்டு மேலும் அறிந்து கொள்வதாகத்தான் இருக்கும். இங்கோ குருவே தொடக்கத்திலிருந்து கேள்வி கேட்பதாக

    Enjoying the preview?
    Page 1 of 1