Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Smile Please
Smile Please
Smile Please
Ebook235 pages23 minutes

Smile Please

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மனித மன உணர்வுகளில் முக்கியமான ஒன்று சந்தோஷம். சந்தோஷ உணர்வை உருவாக்குவதில், நகைச்சுவைக்கு முக்கிய பங்கு உண்டு. சிரிப்பு என்பது சந்தோஷத்தின் ஒரு வெளிப்பாடு. அந்த சிரிப்புக்கான வரவேற்பு வளையம்தான் ‘ஜோக்ஸ்’ எனப்படும் நகைச்சுவை துணுக்குகளாகும்.

நம் பேச்சாலும், செய்கையாலும், மற்றவர்களை சிரிக்க வைப்பதை ஒரு சமூக சேவையாக கருதலாம். சிரிப்பு, இறுக்கமான சூழ்நிலைகளையும், மென்மையாக மாற்றும் வல்லமை படைத்தது. மற்றவர் மனம் நோகாமல் சிரிக்க வைப்பதில்தான், நகைச்சுவையின் வெற்றி அடங்கி இருக்கிறது. படித்தவுடன் குபீர் சிரிப்பை தூண்டுவது ஒன்றுதான் ஜோக்கிற்கான ஒரே இலக்கணமாகும். படிப்பவர்களை சிரிக்க வைக்கும் ஜோக்குகளுக்கு வாசகர்கள் மனதில் எப்பொழுதுமே பிரத்தியேக இடம் உண்டு. ஆனந்த விகடன். குமுதம், குங்குமம், கல்கி, தினமலர் போன்ற பிரபல இதழ்களில் இடம்பெற்ற என்னுடைய ஜோக் படைப்புகளை புத்தகமாக தொகுத்து வழங்கி இருக்கிறேன்.

Languageதமிழ்
Release dateMay 20, 2023
ISBN6580164009866
Smile Please

Read more from S. Raman

Related to Smile Please

Related ebooks

Related categories

Reviews for Smile Please

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Smile Please - S. Raman

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஸ்மைல் ப்ளீஸ்

    (ஜோக்ஸ் தொகுப்பு)

    Smile Please

    Author:

    எஸ். ராமன்

    S. Raman

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-raman

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    ஆசிரியரைப் பற்றிய குறிப்பு

    ஸ்மைல் ப்ளீஸ் ஜோக்ஸ்

    முன்னுரை

    மனித மன உணர்வுகளில் முக்கியமான ஒன்று சந்தோஷம். சந்தோஷ உணர்வை உருவாக்குவதில், நகைச்சுவைக்கு முக்கிய பங்கு உண்டு. சிரிப்பு என்பது சந்தோஷத்தின் ஒரு வெளிப்பாடு. அந்த சிரிப்புக்கான வரவேற்பு வளையம்தான் ‘ஜோக்ஸ்’ எனப்படும் நகைச்சுவை துணுக்குகளாகும்.

    ‘கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது’ என்ற சொலவடைக்கு ஏற்ப, அளவில் சிறியதாக இருந்தாலும், சிரிப்பை வெளிக்கொணர்வதில், நகைச்சுவை துணுக்குகள், அணுகுண்டுகளாக செயல்படுகின்றன.

    மன இறுக்கத்தைப் போக்க, சிரிப்பு ஒரு அருமருந்தாகும். சிரிக்கும்போது, இதயத்தின் செயல்பாடு மென்மை அடைகிறது. சிரிக்கும்போது, மூளையிலிருந்து சுரக்கும் ‘என்டார்பின்’ என்ற வேதியப் பொருள், உடம்பின் களைப்பையும், அசதியையும் மறக்க வைக்கிறது.

    நம் பேச்சாலும், செய்கையாலும், மற்றவர்களை சிரிக்க வைப்பதை ஒரு சமூக சேவையாக கருதலாம்.

    சிரிப்பு, இறுக்கமான சூழ்நிலைகளையும், மென்மையாக மாற்றும் வல்லமை படைத்தது.

    மற்றவர் மனம் நோகாமல் சிரிக்க வைப்பதில்தான், நகைச்சுவையின் வெற்றி அடங்கி இருக்கிறது.

    படித்தவுடன் குபீர் சிரிப்பை தூண்டுவது ஒன்றுதான் ஜோக்கிற்கான ஒரே இலக்கணமாகும். படிப்பவர்களை சிரிக்க வைக்கும் ஜோக்குகளுக்கு வாசகர்கள் மனதில் எப்பொழுதுமே பிரத்தியேக இடம் உண்டு.

    ஆனந்த விகடன். குமுதம், குங்குமம், கல்கி, தினமலர் போன்ற பிரபல இதழ்களில் இடம்பெற்ற என்னுடைய ஜோக் படைப்புகளை புத்தகமாக தொகுத்து வழங்கி இருக்கிறேன். இந்த ஜோக்குகளை வெளியிட்ட அனைத்து பத்திரிகைகளுக்கும், என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த தொகுப்பில் இடம் பெற்ற ஜோக்குகளை வாசகர்கள் படித்து சிரித்தால், அதையே என் வெற்றியாக கருதுவேன். இந்த ஜோக் தொகுப்பை உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பரிசாக அளிப்பதன் மூலம், சந்தோஷ உணர்வை பரப்புங்கள்.

    அனைவரும் சிரித்து மகிழ என் வாழ்த்துகள்.

    எஸ். ராமன்

    (தொடர்பு எண்: 9840077902)

    ஆசிரியரைப் பற்றிய குறிப்பு

    பல நாடுகளில், வங்கித் துறையில் அதிகாரியாக பணியாற்றி, தற்போது, அதே துறையில் ஆலோசகராக பணியாற்றுகிறேன். நகைச்சுவை உணர்வு, பல தருணங்களில் என் பணிச்சுமையை மறக்க வைத்து, மனதை லேசாக்கிய அனுபவங்களை மறக்க முடியாது. என் பணிசார்ந்த துறையில், பல்வேறுபட்ட மனிதர்களுடன் பேசுவதற்கான வாய்ப்புகள் ஏராளமாக அமைந்தது. கோபமாக பேச முயல்பவர்களிடம், நகைச்சுவையாக பேசி, சூழ்நிலையை சாதகமாக மாற்ற முடிந்த அனுபவங்கள் ஏராளம். அது போன்ற அனுபவங்களை நகைச்சுவை படைப்புகளாக மாற்றி, மற்றவர்களை சிரிக்க வைத்துக் கொண்டிருப்பதில் ஒரு தனி சந்தோஷம் அடங்கி இருக்கிறது என்றால் அது மிகையாகாது.

    ஜோக்குகள் முதல் நகைச்சுவை கதைகள், கட்டுரைகள் வடிவிலான என் படைப்புகளை தொடர்ந்து வெளியிட்டு, என்னை ஊக்குவித்த ஆனந்தவிகடன், குமுதம், குங்குமம், கல்கி, தினமலர் போன்ற அனைத்து பத்திரிகைகளுக்கும் என் நன்றி உரித்தாகும்.

    எஸ்.ராமன்

    ஸ்மைல் ப்ளீஸ் ஜோக்ஸ்

    ‘அவளுக்கென்ன.. எம்.எல்.ஏ வீட்டு வேலைக்காரியாச்சே...!"

    ***

    A black and white drawing of a crowd of people Description automatically generated with low confidence

    ‘இதுக்குத்தான் சொன்னேன்... சர்க்கஸ் கம்பெனி முதலாளியின் வீட்டிலே சம்பந்தம் வச்சுக்க வேண்டாம்னு...!"

    ***

    A cartoon of two men Description automatically generated with low confidence

    இது ஒரு டாக்டர் எழுதின கதை’ன்னு எப்படிக் கண்டுபிடிச்சே...

    கதையை சாப்பாட்டுக்கு முன்பு சாப்பாட்டுக்குப் பின்பு’னு இரண்டு அந்தியாயங்களாகப் பிரிச்சு எழுதியிருக்காரே...!"

    ***

    A cartoon of a person reading a book Description automatically generated

    கணக்கு நோட்டுலே மாதச் செலவுகளை ‘கி.மு...’ ‘கி.பி...’ன்னு ரெண்டா பிரிச்சு எழுதியிருக்கிரியே... இதுக்கு என்ன அர்த்தம்...?

    கிழம் வருவதற்கு முன்பு கிழவி வந்த பின்புனு செலவுகளைப் பிரிச்சு எழுதினேன்.

    ***

    A cartoon of two men Description automatically generated with medium confidence

    கிரிக்கெட் அம்பயராக உங்களுக்கு என்ன தகுதி இருக்குன்னு நினைக்கறீங்க? "எனக்கு ஆறுவிரல் இருக்கே...! அதுனாலே பந்து எண்ண கல் தேவையில்லை...

    ***

    A cartoon of a group of people Description automatically generated with low confidence
    Enjoying the preview?
    Page 1 of 1