Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Visithira Paarvaigal
Visithira Paarvaigal
Visithira Paarvaigal
Ebook115 pages32 minutes

Visithira Paarvaigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நாம் அனைவரும் அன்றாட வாழ்வியலில் பல்வேறுபட்ட பிரச்னைகளை சந்தித்து கொண்டிருக்கிறோம். அவற்றுக்கான தீர்வுகளின் முழுமைத் தன்மை, நம் சிந்தனையின் வழிகாட்டுதலில்தான் உள்ளது. தீர்வை நோக்கிய கண்ணோட்டம் மற்றும் அணுகுமுறை, மனிதருக்கு மனிதர் நிச்சயம் வேறுபடும். மாறுபட்ட சிந்தனைகள்தான், மனித குலத்தின் முன்னேற்றத்திற்கு வழி வகுத்துக் கொண்டிருக்கிறது. வெவ்வேறு மனிதர்களின் மாறுபட்ட சிந்தனைகள் அடங்கிய தொகுப்புதான், நீங்கள் வாசிக்கப்போகும் 'விசித்திர பார்வைகள்'.

'விசித்திர பார்வைகள்' வாசகர்களை மாறுபட்ட கோணத்தில் சிந்திக்க தூண்டும் நூலாக அமையும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையுடன்…

Languageதமிழ்
Release dateMar 11, 2023
ISBN6580164009684
Visithira Paarvaigal

Read more from S. Raman

Related to Visithira Paarvaigal

Related ebooks

Reviews for Visithira Paarvaigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Visithira Paarvaigal - S. Raman

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    விசித்திர பார்வைகள்

    (சிறுகதைகள்)

    Visithira Paarvaigal

    Author:

    எஸ். ராமன்

    S. Raman

    For more books

    https://www.pustaka.co.in/home/author/s-raman

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    ஒரு பக்கக் கதைகள்

    முதல் சமையல்

    மாறாதீங்க!

    குழந்தை மனசு

    உறவு

    சத்தம்

    பொறுப்பு

    முள்

    தப்பு தாளங்கள்

    பிரச்சனை

    திருத்தம்

    குண்டு

    திருப்தி

    திட்டம்

    வராதீங்க...!

    பரிசு

    குனிந்த தலை

    காரணம்

    கடியாரம்

    முடிவில் ஒரு மாற்றம்

    தோல்வி

    இல்லறம்

    கடமை

    நல்லாசிரியர்

    பொறுப்பு

    குளிர்ச்சி!

    கண்ணோட்டம்

    உள்ளூர்மாப்பிள்ளை

    மாற்றம்

    வார்த்தை

    இல்லற பாடம்!

    பொட்டலம்

    டொரோனா வைரஸ்!

    கஜினி!

    ஓசி கிராக்கி

    இரு பக்கக் கதைகள்

    நள தமயந்தி

    அட்வைஸ்

    விசித்திர பார்வைகள்

    வித்தியாசமானவள்!

    வீரம்!

    விரிசல்கள்

    சாப விமோசனம்

    காதல்

    துவரம் பருப்பு சாமியார்!

    மதிப்பீடுகள்

    தண்டனை

    விநாடிக் கதைகள்

    க்யூ

    ஜன்னல்

    ஏக்கம்

    மோப்பம்

    சமையல்

    டெஸ்ட்

    ஸ்வீட்

    பிறப்பு

    தீக்குச்சி

    மோதிரம்

    முன்னுரை

    உண்ணும் உணவிலிருந்து, படிக்கும் எழுத்துவரை, அனைத்திலும் வேகம் காண விழையும் தற்கால உலகிற்கு ஏற்ற வகையில் படைப்புகளையும் வழங்க வேண்டிய கட்டாயத்திற்கு எழுத்தாளன் உள்ளாகியிருக்கிறான் என்று சொன்னால் அது மிகையில்லை.

    வாசகர்களின் ரசனைக்கு மட்டுமின்றி, அவர்களின் அளவிடப்பட்ட நேரத்திற்கும் தகுந்தவாறு வழங்கப்படும் படைப்புகள்தான் வெற்றி பெற முடியும் என்ற நியதி நிலைத்து விட்டது.

    இந்த சூழலில், பல மணி நேரங்கள் செலவழித்து படிக்க வேண்டிய முழு நாவலுக்கு உண்டான கருவை, அதன் உரு மாறாமல், ஒரு சில பக்கங்களில் வடித்து கொடுப்பதில்தான் எழுத்தாளனின் வெற்றி அடங்கி இருக்கிறது.

    தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு, சில நிமிடங்களில் படித்து ரசிக்கக் கூடிய ஒரு பக்கக் கதைகள் மற்றும் இரு பக்கக் கதைகளை உள்ளடக்கிய இந்த சிறுகதை தொகுப்பை வாசகர்களுக்கு வழங்குவதில் பெருமை கொள்கிறேன்.

    ஒரு பெரும் கதையை சுருக்கி, சில விநாடிகளுக்குள் படிக்கக் கூடிய ‘நொடிக் கதை’ களையும் இந்த தொகுப்பில் சேர்த்துள்ளேன்.

    இந்த தொகுப்பில் உள்ள அனைத்து சிறுகதைகளும் விகடன், குமுதம், குங்குமம் போன்ற பிரபல வார பத்திரிகைகளில் பிரசுரம் கண்டவையாகும்.

    சிறுகதைகளில், குடும்பத்திற்கும், சமூகத்துக்கும் மிகத் தேவையான நல்ல செய்திகள் அடங்கியிருப்பது அவசியம். அந்த கருத்திற்கான முக்கியத்துவம், பெரும்பாலான கதைகளில், மருந்து போல் கலக்கப்பட்டிருக்கிறது என்பதை, வாசக அன்பர்கள், கதைகளை படிக்கும்போது புரிந்து கொள்ளலாம்.

    இந்த சிறுகதை தொகுப்பில் உள்ள அனைத்து படைப்புகளையும் வாசகர்கள் ரசித்து படித்தால், அதுவே, என் எழுத்து இயக்கத்தின் வெற்றிக் கல்லாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

    படித்து ரசிப்பதோடு நில்லாமல், இந்த தொகுப்பை, உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பரிசாக அளியுங்கள் என்பது என் தாழ்மையான வேண்டுகோளாகும்.

    வாசகர்களின் ஊக்குவிப்புதான் ஒரு எழுத்தாளனின் மூலதனமாகும்.

    நல்வாழ்த்துகளுடன்,

    எஸ். ராமன்

    Mobile / Whatsapp No.9840077902

    சென்னை.

    ஒரு பக்கக் கதைகள்

    முதல் சமையல்

    திருமணமாகி புகுந்த வீட்டுக்குப் போன முதல் நாள், முதல் சமையலை முடித்தாள் மேனகா.

    கணவனுடன் உறவை பலப்படுத்த, சுவையான சமையல் அவசியம். உறவைக் கெடுப்பதற்கு, மாமியார்காரி நீ செய்யும் சமையலை கெடுக்கும் வாய்ப்புகள் உண்டு. உஷாராக நடந்து கொள் என்ற அம்மாவின் அறிவுரை ஞாபகத்துக்கு வந்தது.

    ஒளிந்திருந்து, சமையலறையை நோட்டம் விட்டாள். அவள் சமைத்து வைத்திருந்த ஐட்டங்களை மாற்றிவிட்டு, மாமியார் வெளியேறியது போல் தோன்றியது.

    சமையல் சூப்பர். உப்பு, புளி எல்லாம் என் அம்மா மாதிரி கரெக்டா இருக்கு. கீப் இட் அப்! என்று, கணவன் பாராட்டிவிட்டு அலுவலகம் கிளம்பினான். அது ஒரு சம்பிராதய பாராட்டாக அவளுக்கு தோன்றியது.

    நான் சமைத்த ஐட்டங்களில், உப்பு, புளியை அள்ளிப்போட்டு, அவரிடம் கெட்ட பெயர் வாங்கிக்கொடுக்கணும்னுதானே முயற்சி பண்ணீங்க? என்றாள் மாமியாரிடம் கோபத்துடன்.

    "நீ சமையலுக்கு புதுசுன்னு எனக்கு தெரியும். அந்த அரிய கலையை, ஓரிரு நாளில், ரெசிப்பி புத்தகத்தை பார்த்து, வசியப்படுத்திவிட முடியாது. ஆனால், கணவனை வசியப்படுத்த, நல்ல சமையல் அவசியம் தேவை. முதல் நாளே, சமையலினால், உனக்கும்

    Enjoying the preview?
    Page 1 of 1