Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Akhanda Bharatham
Akhanda Bharatham
Akhanda Bharatham
Ebook401 pages2 hours

Akhanda Bharatham

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

1938-ம் ஆண்டில் தொடங்கி நான் எழுதிய பல கட்டுரைகள், மற்றும் பல்வேறு இடங்களில் ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்பே இந்த நூலாக உருவெடுத்திருக்கிறது. இது விதவிதமான அம்சங்களைப் பற்றிக் கூறுவது போலத் தோன்றினாலும் இந்திய வாழ்க்கை, வரலாறு, மற்றும் கலாச்சாரங்களின் இடையே உள்ள ஒற்றுமையைப் பற்றிச் செய்யப்பட்ட ஓர் ஆராய்ச்சியின் பயனாக விளைந்த கருத்துக்களின் பிரதிபலிப்பே என்பதை இதைப் படிப்போர் அறிந்துகொள்வார்கள்.

இந்திய நாட்டில் காணப்படும் ஓர் ஒற்றுமையைப் பற்றி ஆராய விரும்பும் அனைத்து மாணவர்களுக்கும் இந்நூல் பயன் தரும் என்று நம்புகிறேன். அவ்வாறான ஓர் ஒற்றுமை இருப்பதை அவர்கள் நம்பினால் போதாது; அதை அவர்கள் உணர வேண்டும்; அது முடியாது போனால் அதை உணர்ந்துகொள்ள அவர்கள் முயற்சிக்க வேண்டும்; அதற்கு ஒரு போராட்டம் தேவை என்று கருதினால் அதையும் அவர்கள் தொடங்க வேண்டும்.

Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580130406323
Akhanda Bharatham

Read more from S. Raman

Related to Akhanda Bharatham

Related ebooks

Reviews for Akhanda Bharatham

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Akhanda Bharatham - S. Raman

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அகண்ட பாரதம்

    Akhanda Bharatham

    Author:

    எஸ். ராமன்

    S. Raman

    For more books

    http://www.pustaka.co.in/home/author/s-raman

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. பிரிவினைவாதிகளுடன் ஒரு சமாதானப் போக்கு

    2. அகண்ட பாரதம்

    3. ஈசாவின் ஆன்ம சக்தி

    4. அஞ்சும் மனப்பாங்கு

    5. அகண்ட பாரதமும், சர்வதேச அமைப்புகளும்

    6. ஒரு தொல்லை

    7. தேச அந்தஸ்து ஒருவேளை மறுக்கப்பட்டால்

    8. நாகரீக உணர்வு

    9. ஒரு முஸ்லீம் தேசியவாதி

    10. அகண்ட பாரதம் என்றும் மறையாது

    11. பாரதத்தின் வரலாறுகள்

    12. பண்டைய பாரதத்தின் வளர்ச்சிக் காலம்

    13. எதிரிகளுக்குச் சவாலாக நின்ற காலம்

    14. சவால் விடுவதற்கென்றே பிறந்த தலைவர்

    15. பைனி சாஹேப்பின் பொற்காலம்

    16. இந்தியக் கலாச்சாரம்

    17. கூட்டுக் குடும்பம்

    18. வர்ணாஸ்ரமம்

    19. ஆர்யவர்த்தம்

    20. பேருணர்வு அடைதல்

    21. நீதி தர்மத்தின் அடிப்படையிலான விதி

    22. எதிர்ப்பதற்கான மனோதைரியம்

    23. ஆக்கபூர்வமான எதிர்ப்பு

    24. நான் அறிந்த அஹிம்சாவாதம்

    25. சும்மா இருப்பதா, அல்லது ஏதேனும் செய்வதா என்பதே என் கேள்வி

    26. பந்தங்களை அறுத்தல்

    27. உண்மையே ஒற்றுமை

    28. இறைவனிடம் தஞ்சம் புகு

    29. அமைதியும், தனிமையும் தரும் உணர்வு

    பிற்சேர்க்கை - 1

    பிற்சேர்க்கை - 2

    முன்னுரை

    1938ம் ஆண்டில் தொடங்கி நான் எழுதிய பல கட்டுரைகள், மற்றும் பல்வேறு இடங்களில் ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்பே இந்த நூலாக உருவெடுத்திருக்கிறது. இது விதவிதமான அம்சங்களைப் பற்றிக் கூறுவது போலத் தோன்றினாலும் இந்திய வாழ்க்கை, வரலாறு, மற்றும் கலாச்சாரங்களின் இடையே உள்ள ஒற்றுமையைப் பற்றிச் செய்யப்பட்ட ஓர் ஆராய்ச்சியின் பயனாக விளைந்த கருத்துக்களின் பிரதிபலிப்பே என்பதை இதைப் படிப்போர் அறிந்துகொள்வார்கள்.

    இந்திய நாட்டில் காணப்படும் ஓர் ஒற்றுமையைப் பற்றி ஆராய விரும்பும் அனைத்து மாணவர்களுக்கும் இந்நூல் பயன் தரும் என்று நம்புகிறேன். அவ்வாறான ஓர் ஒற்றுமை இருப்பதை அவர்கள் நம்பினால் போதாது; அதை அவர்கள் உணர வேண்டும்; அது முடியாது போனால் அதை உணர்ந்துகொள்ள அவர்கள் முயற்சிக்க வேண்டும்; அதற்கு ஒரு போராட்டம் தேவை என்று கருதினால் அதையும் அவர்கள் தொடங்க வேண்டும்.

    பம்பாய்

    K.M. முன்ஷி

    மொழி பெயர்ப்பாளரின் குறிப்பு:

    இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைக்கும் முன்பு இந்த நூல் எழுதப்பட்டது என்பதை வாசகர்கள் நினைவில் கொள்ளவேண்டும்.

    ###

    1. பிரிவினைவாதிகளுடன் ஒரு சமாதானப் போக்கு

    இந்திய நாட்டின் மறுக்க முடியாத உரிமைகளுக்காக மக்களைத் திரட்டும் பணியில் ஈடுபட்டால், அது நாட்டின் ஒற்றுமையைக் குலைக்க விரும்பும் சில எதிரிகளின் கைகளைப் பலப்படுத்துவது போல ஆகிவிடலாம் என்று என் நண்பர்களில் சிலர் கூறுகிறார்கள். அதாவது பிரிவினைவாதிகளுடன் ஒரு சமாதானப் போக்கைக் கடைப்பிடித்தால், பிரிவினையே வராமல் தடுத்துவிடலாம் என்பதே அவ்வாறு கூறுபவர்களின் எண்ணம். அதைக் கேட்டபோது, எனக்கு இங்கிலாந்தின் பிரதமராக இருந்து விலகிய நெவில் சேம்பர்லினின் கொள்கை எத்தகைய முடிவைத் தந்தது என்றுதான் அப்போது ஞாபகத்திற்கு வந்தது. அகண்ட பாரதம் என்ற எண்ணத்தைக்கொண்ட ஒருவனின் வளைந்து கொடுக்கும் தன்மையும், எதையும் நம்பும் வெகுளித்தனமுமே, பிரிவினைவாதிகளின் ஊக்கத்திற்கு கைகொடுப்பது போலாகிவிடும். பிரிவினை வேண்டும் என்று கூறும் கூட்டத்தின் வலிமையே, அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் சமாதானப் பேச்சினால்தான் இதுவரை வளர்ந்து வந்திருக்கிறது. இதை இந்தியர்கள் தெளிவாகப் புரிந்துகொண்டு ஆவன செய்யவில்லை என்றால், வரப்போவது என்ன என்று அறிந்துகொள்வதற்கு முன்பாகவே நம் தேசம் துண்டு துண்டாகிச் சிதறிவிடும்.

    சட்ட சபையின் தீர்மானத்தைத் தள்ளிவைக்கும் அதிகாரத்தைப் பிரிவினையாளர்களுக்கு ஒரு பரிசாக அளிக்கலாம் என்ற திரு. அமேரியின் கருத்து ஓர் அபாயகரமான முன்னுதாரணம் ஆகும். நம் போராட்டத்தின் பல கட்டங்களிலே அதுதான் முதல் சுற்றாக இருக்கும். இந்த முதல் சுற்றிலேயே இந்தியா தோற்றுவிட்டால், அந்த இழப்பில் இருந்து நாம் மீளவே முடியாது போகும். அதனால் ஆங்கிலேய அரசின் இந்தக் கருத்தை மாற்றுவதற்கு நாம் கவனமாகச் செயல்படவேண்டும். உலகப் போரில் பங்கு கொள்கிறோமோ இல்லையோ, பிரிவினையாளர்களின் வேண்டுதல்களுக்கு இணங்கி நம் அரசியலின் போக்கைத் தடை செய்யும் முயற்சிகள் எதிலும் பங்குகொள்ள மாட்டோம் என்று அவர்களை முதலில் உறுதி அளிக்கச் சொல்லவேண்டும்.

    தேசத்தை முன்னிலைப்படுத்தி, முதலில் இந்தியா என்று தொடங்கிய திரு. அமேரி, பிரிவினையாளர்களைக் கண்டு அஞ்சி, தன் நிலையில் இருந்து பின்வாங்கினார். பிரிவினையை எதிர்க்கும் பெரும்பான்மையான இந்தியர்களுக்கு இருக்கும் ‘ஒன்றுபட்ட இந்தியா’ என்ற கருத்தில், ஆங்கிலேய அரசுக்கு ஆர்வம் இருக்கிறதா என்று அறிந்துகொள்ளும் உரிமை நமக்கு உண்டு. அவ்வாறான ஆர்வம் அவர்களுக்கு இல்லையென்றால் எந்த இந்தியனுடைய ஒத்துழைப்பையும் நாடிப் பெறுவதற்கான உரிமையும் ஆங்கிலேயர்களுக்கு கிடையாது என்றே அர்த்தம். அவர்கள் தங்களது விருப்பப்படி, இந்திய அரசாங்க அமைப்பில் சில சிறிய மாற்றங்களைச் செய்துகொண்டு இருக்கலாம். அதிகாரம் ஏதுமில்லாத அரசுக் குழுக்களுக்குத் தங்களுக்குப் பிடித்த பெயரையும் அவர்கள் சூட்டிக்கொள்ளலாம். அதையெல்லாம் இந்தியா சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் இருக்கும்.

    இந்தியாவின் எதிர்காலத்தை மட்டும் அல்லாது இங்கிலாந்தின் எதிர்காலத்தையும் நிர்ணயிக்கும் அளவிற்கு, விரைவில் வரவிருக்கும் உலகப் போர் வளர்ந்துவிட்டது என்பதை அனைவரும் உணர்ந்திருக்கின்றனர். அந்தப் போரில் இந்தியர்களின் பங்கு மிக முக்கியம் என்பதை ஆங்கிலேயர்கள் இந்தியர்களுக்கு எடுத்துச்சொல்லி உணர்த்தவேண்டும் என்றால், ஒன்றுபட்ட இந்தியாவும் அவசியம் என்பதை இங்கிலாந்தும் உணர வேண்டும். தற்காலிக அரசியல் இலாபங்களுக்காக, அவர்கள் இந்தியாவின் அரசியல் எதிர்காலத்தைத் பணயம் வைக்க அனுமதிக்கக்கூடாது.

    பிரிவினையாளர்களுடன் சமரசமாகப் போவதில் எவர்க்கெல்லாம் ஆழ்ந்த நம்பிக்கை இருக்கிறதோ அவர்கள் அனைவருமே டாக்கா கலவர விசாரணைக் குழுவிற்கு வங்காளப் பிரதேச காங்கிரஸ் குழு அளித்துள்ள அறிக்கையைச் சற்றே படித்துப் பார்க்கவேண்டும். அதைப் படிக்கும்போது மனம் புழுங்குகிறது. நடைபெற்ற கலவரத்தைப் பற்றிய விசாரணை முழுவதும் முடியும் முன்பாகவே அந்தக் குழுவின் முடிவைப்பற்றி கருத்தைச் சொல்வது ஒரு நியாயமான செயலாக இருக்க முடியாது. ஆனாலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மாநில முதல்வர் மற்றும் வங்கத்தின் மதிப்பிற்குரிய முஸ்லீம்களின் பேச்சுக்களைப் படிப்போர்க்கு சமாதானத்திலும், சமரசத்திலும் உள்ள நம்பிக்கை நிச்சயமாகத் தளர்ந்துவிடும். கோடிக்கணக்கான இந்துக்கள் மற்றும் முஸ்லீம்களின் விதியை நிர்ணயிக்கும் அதிகாரம் பெற்றுள்ள வங்கத்து முதல்வர் கீழ்க்கண்ட முத்துக்களை அங்குமிங்குமாக உதிர்த்திருக்கிறார்:

    அனைத்து முஸ்லீம்களும் இணைந்து ஒற்றுமையாகச் செயல்பட்டால் இந்த நாட்டை ஆளும் அதிகாரத்தை அவர்கள் மீண்டும் கைப்பற்ற முடியும்.

    ***

    "அல்லாவைத் தவிர வேறெவருக்கும் நான் அஞ்சவில்லை; ஒரு சிறிய விரலைக் கூட அசைக்காமல் 22 கோடி இந்துக்களை என்னால் எதிர்கொள்ள முடியும். இறைவனிடம் எனக்கு நம்பிக்கை இருக்கிறது; அதனால் அளவில் மிகுந்தவர்களாக அவர்கள் இருந்தாலும், அவர்களை என்னால் அடக்கி ஆள முடியும். முஸ்லீம்களுக்கு மட்டுமே எதிர்காலம் இருக்கிறது. நமது மதம் கூறும் நம்பிக்கையற்ற அந்த காஃபிர்களுக்குத் தங்களது எதிர்காலம் பற்றி சந்தேகம் இருப்பதால் அவர்களுக்கு எதிர்காலம் நிச்சயம் இல்லை."

    ***

    (மக்கட்தொகையில்) முஸ்லீம்கள் 30 சதவிகிதமும், இந்துக்கள் 60 சதவிகிதத்திற்கு மேலாகவும் வங்கத்தில் இருப்பதாகப் புள்ளி விவரங்கள் இருக்கின்றன என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. வழக்கறிஞர்கள், விஞ்ஞானிகள், பேராசிரியர்கள், நில உரிமையாளர்கள், வர்த்தகர்கள், பிராமணர்கள், பிராமணர்-அல்லாதோர்கள், மற்றும் சகல சாதி இனத்தவர்களும் ஒன்று சேர்ந்து கைகோத்ததுபோலப் பொய்களைக் கூறி, பித்தலாட்டப் பிரமாணங்கள் அளித்து, தங்களுடைய தொகையை அதிகரித்துக்கொண்டு போனால் வேறெப்படித்தான் அந்த விவரங்கள் இருக்க முடியும்?

    முதல்வர் இப்படிக் கூறுகிறார் என்றால் அவரது அமைச்சர்கள் பேசுவதையும், செய்வதைப் பற்றியும் கேளுங்கள். முஸ்லீம் லீக் தலைமையை ஏற்று, ஆட்சியை இந்துக்களிடம் இருந்து கைப்பற்ற வேண்டும் என்று அவரது அமைச்சரவையில் இருக்கும் திரு. ஸுஹ்ராவர்த்தி, பைராப் மாநாட்டில் கூடியுள்ள முஸ்லிம்களைத் தூண்டிவிடும் வகையில் பேசுகிறார். ஓர் இந்துவிற்குச் சொந்தமாக இருப்பதாகக் கூறப்படும் நிலம் ஒன்றில், அதன் சொந்தக்காரரின் அனுமதி இல்லாமலேயே, பாகிஸ்தான் பூங்கா ஒன்றை அந்த உள்ளூர் துறை அமைச்சரான மாண்புமிகு க்வாஜா சர் நசீமுத்தீன் திறந்து

    வைக்கிறார்.

    மேலும் அதிகார பூர்வமான வங்கத்து அரசின் வெளியீடான ஸ்டார் ஆப் இந்தியா என்ற பத்திரிகையில் கீழ்க்கண்டவாறு எழுதப்பட்டிருந்தது:

    வங்கத்தின் ஒவ்வொரு மூலையிலும் இருக்கும் முஸ்லீம்களின் பொறுமை எல்லை மீறிப்போய், தாங்கமுடியாத அளவிற்கு இருக்கிறது. ‘சிங்கம் இறக்கவில்லை; உறங்கிக்கொண்டுதான் இருக்கிறது’ என்பதை அந்தச் சுண்டெலிகளுக்குக் காட்டும் நேரம் வந்துவிட்டது. இந்துக்களிலேயே மாபெரும் தலைவர்கள் என்று கருதப்படுபவர்கள் கூட, தங்களது நடுநிலைமையைக் கைவிட்டுத் தாங்களும் கொள்கையற்ற சாதி வெறியர்கள்தான் என்பது போலத் தங்களின் சுயரூபத்தைக் காட்டத் துவங்கிவிட்டார்கள். அவர்களுக்கெல்லாம் தேவையான பதிலடி கிடைக்கும். வங்கம் யாருக்குச் சொந்தமானது என்று அப்போது அவர்களுக்குத் தெரியவரும். அவர்களுக்குத் தேவையான பாடங்கள் கற்பிக்கப்படும்.

    1941 மார்ச் 10 என்று தேதியிட்ட மற்றுமொரு அரசின் வெளியீடான ஆசாத் எனும் பத்திரிகையில், உருவ வழிபாடு செய்யும் இந்துக்களுக்கு எதிராக முஸ்லீம் லீக், தொண்டர்களை அணிவகுத்து ஒரு பேரணியை நடத்தக் கோரி, ஒரு கவிதையையே வெளியிட்டிருந்தது. தேவை இருக்கும் என்றால் இரத்தம் சிந்தவும் தயாராக இருப்பதற்கு அந்த வீரர்களை அக்கவிதை கேட்டுக்கொண்டிருந்தது. நமக்குப் பாகிஸ்தான் வேண்டும்; பிரிவினை வேண்டும். அதை நாம் வாய் பேச்சு மூலம் அடைய முடியாது என்றால், வாள் வீச்சினாலாவது அதை அடைவதற்கு முஸ்லீம் வீரர்கள் பயப்படக் கூடாது என்றும் அந்தக் கவிதையில் கூறப்பட்டிருந்தது. அந்தக் கவிதையின் ஒரு பகுதி இதோ:

    விரைந்து ஓடி வாருங்கள்; தளர் மனதைத் தவிடு பொடியாக்குங்கள்.

    விடுதலை வேண்டும் என்றால் இந்துக்களின் வீடுகளைக் கொளுத்துங்கள்;

    வீட்டைத் தீக்கு இரையாக்குங்கள். தீமைக்கெல்லாம் ஒரு முடிவு கட்டுங்கள்.

    நாட்டில் கலவரம் ஏதும் நடக்காமல் இருக்கவும், அமைதி நிலவுவதற்கும், அமைச்சர்களைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் பொறுப்பேற்றிருக்கும் ஆங்கிலேய ஆளுநரோ, தனது அதிகாரம் எதையும் பயன்படுத்த விரும்பாமல், இவை போன்ற வரம்புகளை மீறிய கூக்குரல்களுக்குத் தங்களது சம்மதமும் இருப்பது போல, மௌனம் சாதித்துக்கொண்டிருக்கிறார். அந்த ஆளுநரை மட்டும் குறைகூறிப் பயனில்லை. அவர் தனது இங்கிலாந்து அரசின் கட்டுப்பாட்டில் இருந்து, அதற்கு அடங்கியவராகத்தானே எப்போதும் இருப்பார்.

    முன்னாள் அமைச்சரான திரு. ஜி.எம். சையது தலைமையேற்ற, சிந்து மாகாணத்து சுல்தான்கோட் நகரத்தில் அண்மையில் நடந்த, முஸ்லீம் லீக் மாநாட்டில் அரங்கேறிய ஓர் உருதுக் கவிதை இவ்வாறு கூறுகிறது:

    பாகிஸ்தானில் இஸ்லாமிய மையம் ஒன்று தனியே உருவாகட்டும்;

    பாகிஸ்தானில் முஸ்லீம் அல்லாதவர்களின் முகங்கள் எதையும் நாம் காணவேண்டி இருக்காது.

    உருவ வழிபாடு செய்யும் முட்கள் அகன்றால் மட்டுமே முஸ்லீம்கள் குடியேறும் நாடு ஒளிரும்.

    அடிமைகளாகப் பணியாற்ற வேண்டிய அந்த இந்துக்கள் அரசில் பங்கேற்க உரிமையற்றவர்கள்.

    அரசுக் கட்டிலில் வீற்றிருந்து அவர்கள் எங்குமே வெற்றி கண்டதில்லை.

    இப்படிப்பட்டவர்கள்தான் மக்களின் உளப்பாங்கை உருவாக்கும் பொறுப்பும், அதிகாரமும் படைத்தவர்களாக இருக்கிறார்கள். இவர்களே மேற்கூறியவை போன்ற கருத்துக்களைப் பரப்பிக்கொண்டிருந்தால் நாம் என்னதான் செய்வது? நாம் அனைத்தையும் கேட்டுக்கொண்டு பொறுமையுடன் அதற்கு மறுப்பு தெரிவித்தால் போதுமா? அவர்கள் முன் மண்டியிட்டுக்கொண்டு நீங்கள் பொறுப்புடன் பேசவேண்டும் என்று வேண்டிக்கொண்டால் போதுமா? நாம் அவர்களிடம் எந்த விதமான சமரசப் போக்கைக் கையாள வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? நமது கோவில்களிலும், மசூதிகளிலும், கிறிஸ்துவ தேவாலயங்களிலும் கூடி நின்று பிரார்த்தனை செய்து, கடவுளின் எல்லையற்ற கருணையால் இவர்கள் போன்ற மனிதர்களுக்கு நல்ல புத்தியும், கருணையும் வரவேண்டும் என்று வேண்டிக்கொண்டால் மட்டும் போதுமா?

    இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்காகக் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகக் காந்திஜி தனது வாழ்வை அர்ப்பணித்து, அதன்படி வாழ்ந்துகொண்டிருக்கிறார். அதனால் தங்களைத் தவிக்கவிட்டுள்ளார் என்று கருதும் தனது இந்து சகோதரர்களில் சிலரது வெறுப்பையும் அவர் சம்பாதித்துக்கொண்டு, அவருக்கு உரித்தான பெருமையையும் காந்திஜி சற்றே இழந்திருக்கிறார் என்பதே உண்மை. ஆனால் அவரது நோக்கங்கள் இவ்வாறு கண்டபடி பேசும் மக்களால் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கின்றன. அவரது வேண்டுகோள்கள் மறுக்கப்பட்டிருக்கின்றன. அவரது எண்ணங்கள் திரித்துக் கூறப்பட்டிருக்கின்றன. பிரிவினை வேண்டுவோர்களின் பத்திரிகைகளில் அவர் ஓர் இஸ்லாமிய எதிரியாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறார். மேலும் அவரது உயிருக்குக்கூட கெடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.

    இஸ்லாமிய மதம் பற்றி நன்கு அறிந்தவரும், மேன்மையான குணம் கொண்டதொரு தியாகியும், சிறந்த தேசியவாதியுமான மௌலானா அபுல்கலாம் ஆசாத் அவர்கள் இந்து-முஸ்லீம் ஒற்றுமையின் அடிப்படையில் வரவிருக்கும் ஓர் அகண்ட பாரதத்தை வரவேற்பதால், அவரையும் அந்தப் பிரிவினையாளர்கள் கேலி செய்கின்றார்கள்.

    அகிம்சையின் ஆசான் ஒருவரும், கண்ணியம் மிக்க முஸ்லீம் ஒருவரும் இந்த நாட்டில் அடைய முடியாத குறிக்கோளை எட்டுவதற்காக, நமது சமரசப் போக்கும், அவர்களுடனான சமாதானப் பேச்சும் உதவுமா?

    நல்லதையே எதிர்நோக்கும் ஒரு கோழையின் அறிவற்ற செயல்கள் ஒருபோதும் அழிவதில்லை. மாறாக, அவைகள் அவனது விருப்பங்களின் மூல காரணத்தையே கொன்றுவிடுகின்றன.

    ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுக்கும் பெருந்தன்மையே, அவர்கள் இருவருக்கும் உள்ள நட்பையும், மரியாதையையும் வளர்க்கிறது. பொய்யும், புனைச் சுருட்டும், சமரசமும், சமாதானமும் அவைகளை வளர்ப்பதில்லை.

    தங்களது அகண்ட பாரதத்தில் மாறாத நம்பிக்கை வைத்து, அதற்காக அச்சமின்றி நாட்டின் ஒற்றுமைக்குப் பாடுபடுபவர்கள் எப்போது பிரிவினையாளர்களின் மதிப்பையும், மரியாதையையும் பெறுகிறார்களோ அப்போது, இரவுக்குப் பின் பகல் தானே விடிவது போல, நட்பும், புரிதலும் அவர்களிடையே இயல்பாகவே வளரும்.

    ###

    2. அகண்ட பாரதம்

    இரவு வந்துவிட்டால் போதும்; பேய்கள் இருப்பதாகக் கூறப்பட்ட வீடொன்றில் தங்கியிருந்தவர்கள், இதோ வந்துட்டேன், இதோ வந்துட்டேன் என்றதொரு குரலை, தினமும் நடுக்கத்துடனும், பயந்துகொண்டேயும் கேட்டுக்கொண்டிருந்தனர்.

    அதற்கு என்ன செய்வது என்று தெரியாமலேயே, அவர்கள் முதலில் அதைப் பற்றிப் பீதியடைந்ததோடு சரி. அப்புறமாக அவர்கள் அந்தணர்களை அழைத்து வந்து, அதற்குப் பரிகாரமாக ஏதாவது செய்யலாம் என்றெண்ணி, விதவிதமான பூஜைகளையும் செய்து பார்த்தனர். மேலும் அவர்களுக்குத் தெரிந்த வேண்டுதல்களை எல்லாம் நிறைவேற்றுவதாவும், அவர்கள் இறைவனிடம் வேண்டிக்கொண்டனர். இவ்வாறாக அவர்கள் மிகுந்த செலவு செய்து, பேய் ஓட்டிகளையும் வரவழைத்து, மாந்திரீக மற்றும் தாந்திரீக முறைகளையும் செய்துபார்த்தனர்.

    ஆனாலும் எதுவும் பயன் அளிக்கவில்லை. ஒவ்வொரு இரவும் நடு நிசியில் சரியாகப் பன்னிரண்டு மணிக்கு அந்தக் குரல் கேட்டுக்கொண்டே இருந்தது. அங்கு தங்கியிருந்தோர் பயந்துபோய், தலையில் இருந்து கால் வரை போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு, நடுங்கிக்கொண்டே உள்ளே பதுங்கி இருந்தனர்.

    அவ்வாறு இருக்கும்போது, ஒருநாள் இரவில் அவர்களில் ஒருவன் பொறுமை இழந்துபோய், அந்தக் குரல் கேட்கும்போது, போர்வையை உதறித் தள்ளி, வெளியே வந்து, விளக்கு ஒன்றை ஏற்றிவிட்டு, சரி, வா பார்ப்போம் என்று பதிலுக்குக் குரல் கொடுத்து சவால் விட்டான்.

    அன்றிலிருந்து அந்தப் பேய் அந்த வீட்டை விட்டு ஒரு வழியாக வெளியேறிவிட்டது. நம் நிலைமையும் அப்படித்தான் இருக்கிறது.

    இந்தியா பிரிக்கப்படவேண்டும் என்று அவ்வப்போது நமக்குச் சொல்லப்படுகிறது. அதற்கு நாம் ஒத்துக்கொள்ளவில்லை என்றால் அதன் விளைவுகளை நாம் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் நமக்கு எச்சரிக்கை விடப்படுகிறது. அந்தப் பேய் வீட்டில் இருந்த பொறுமை இழந்த மனிதன் சவால் விட்டது போல, இதற்கும் ஒரேயொரு பதில்தான் இருக்கிறது. அந்தப் பதிலை அண்மையில் ராஜேந்திர பிரசாத் அவர்கள் அழகாகக் கூறினார்:

    இந்தியா முன்பும் ஒன்றாகவே இருந்தது; இப்போதும், எப்போதும் ஒன்றாகவே இருக்கும்.

    இந்திய தேசம் பிரிக்கப்படாமல் ஒன்றாவே இருக்கவேண்டும் என்பதற்கு ஆறு நியாயமான காரணங்கள் இருக்கின்றன. முதலாவதாக, அந்தப் பிரிவினையை பல முஸ்லீம்கள் வரவேற்கமாட்டார்கள். இரண்டாவதாக, இந்துக்களும் அதற்கு ஒப்புதல் தெரிவிக்கமாட்டார்கள். மூன்றாவதாக, இந்திய தேசியவாதிகள் அதை விரும்பமாட்டார்கள். நான்காவதாக, இந்தியாவின் வெவ்வேறு அரசவைகளும், மாநிலங்களும் அது தொடர்பான ஆணைக்கு அடிபணியமாட்டார்கள். ஐந்தாவதாக, இங்கிலாந்து அரசும் அதைச் செய்வதற்கு முயற்சிக்காது. ஆறாவதாக, உலகின் தற்போதைய நிகழ்வுகளும் பிரிவினைக்குச் சாதகமாக இருக்காது.

    சில முஸ்லீம்களைத் தவிர, பெரும்பாலானவர்கள் இந்தியாவைத் துண்டாடுவதில் விருப்பம் காட்டவில்லை. அவர்கள் எங்கிருந்தாலும் இந்தியத் தாய் நாட்டின் குடிமக்களே தவிர, அவர்கள் இருக்கும் இடத்தை மட்டுமே சார்ந்தவர்கள் என்று உணர்வதில்லை. ஒரு முஸ்லீமோ, ஓர் இந்துவோ, ஒரு கிறிஸ்துவனோ, அல்லது ஒரு சீக்கியரோ தாங்கள் வசிக்கும் பிரதேசத்தை மட்டும் தனது தாய் நாடாகக் கருதுவதில்லை. தேசத்தளவில் ஒவ்வொருவரையும் அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் கட்டுப்படுத்துவது போல, இதுவும் இவர்களைப் பாதிக்கிறது. அனைவரையும் சரிசமமாகப் பாவித்து, தேசத்தின் ஒட்டுமொத்த விதிக்கேற்ப, அவர்களது கடந்த, நிகழ் மற்றும் வருங்காலத்தின் வளங்களையும் இது நிர்ணயிக்கிறது.

    அதனாலேயே, முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள நான்கு மாகாணங்களில் வடமேற்கு எல்லை மாகாணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தாலும், சிந்து மாகாணம் தேசிய அரசின் பகுதியாக இயங்குவது போலவே, பஞ்சாப் மற்றும் வங்கம் இரண்டும் இந்து-முஸ்லீம் கூட்டணி அரசுகளாகவும் இயங்குவதால், அவர்களும் இந்தியாவைத் துண்டாடுவதில் விருப்பம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். பாகிஸ்தான் உருவானால் இந்த நான்கு மாகாணங்கள்தான் அதில் இடம் பெறும்; அதன் மக்கட்தொகையில் நாலரைக் கோடி முஸ்லீம்கள் இருப்பார்கள். இந்த நான்கு மாகாணங்களில் எதுவும் பிரிவினைக்கு ஆதரவு அளிக்கவில்லை.

    ஆங்கிலேய ஆதிக்கத்தில் உள்ள இந்தியாவில், இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் மாகாணங்களில் மட்டும் சுமார் இரண்டு கோடி முஸ்லீம்கள் இருப்பார்கள். இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் பொதுவான தாய்நாடாகக் கருதப்படும் இந்தியாவில் இருக்கும் முஸ்லீம்கள் தங்கள் நாட்டிலேயே தாங்கள் அந்நியர்களாகக் கருதப்படுவதை விரும்பமாட்டார்கள். இந்துக்களை மனதாலும் வெறுக்காத மற்றவர்களும் இந்தியா ஒருங்கிணைந்ததாக இருப்பதையே விரும்புவார்கள். அதனால் வரும் மாட்சிமை, பலம், மற்றும் புகழ் என்பவைகளால் அடையப்படும் பயன்களால் ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படுவார்களே தவிர, மதவெறியினால் துண்டாடப்படும் இரண்டு தேசங்கள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டு இருப்பதைக் காண ஆசைப்படமாட்டார்கள்.

    மோமின் இனப்பிரிவின் புகழ் பெற்ற தலைவரான திரு. அப்துல் கையூம் அன்ஸாரி ஒரு நேர்காணலில் இவ்வாறு கூறுகிறார்:

    அகில இந்தியாவில் இருக்கும் முஸ்லீம்களில் கிட்டத்தட்ட பாதி என்று சொல்லத்தக்க ஐந்து கோடிக்கும் மேலான முஸ்லீம்கள் இருக்கும் ‘இந்திய மோமின்’ பிரிவு, தங்களின் அரசியல் மற்றும் வேறெந்த இலட்சியங்களுக்கும் தங்களது பிரதிநிதியாக ‘முஸ்லீம் லீக்’ கட்சியைக் கருதுவதே கிடையாது. மோமின் பிரிவுக்கு ‘அனைத்திந்திய மோமின் கூட்டமைப்பு’ என்றதொரு தனி அமைப்பே இருக்கிறது. இந்திய முஸ்லீம்கள் அனைவரின் ஏகபோகப் பிரதிநிதியாக முஸ்லீம் லீக் கட்சி தன்னைப் பறைசாற்றிக்கொள்வதை அந்தக் கூட்டமைப்பு எப்போதும் எதிர்த்து வந்திருக்கிறது. அது மட்டும் அல்லாமல், மோமின்கள் தாய்நாடாகக் கருதும் இந்திய நாட்டின் இலட்சியக் கனவுகளைப் பாதிக்கும் என்பதால், முஸ்லீம் லீகின் பாகிஸ்தான் திட்டத்தையும் அது வன்மையாக மறுத்தும், கண்டித்தும் வந்திருக்கிறது.

    அகில வங்க க்ரிஷக் ப்ரோஜா சமிதி (விவசாயிகள் சங்கம்) தலைவரான திரு. சையது ஹபிபூர் ரஹ்மான் சமீபத்தில் இவ்வாறு கூறினார்:

    இந்தியாவிற்குக் குடிபெயர்ந்தபின் முஸ்லீம்கள் இந்தியாவைத் தங்கள் தாய்நாடாகத் தழுவிக்கொண்டுள்ளனர். இங்கு அவர்கள் புதிய தேசத்தை உண்டாக்கியதும் அல்லாமல், உருது மற்றும் இந்தி கலந்ததொரு இந்திய வட்டாரப் பேச்சு மொழியையே உருவாக்கியுள்ளனர்… அவ்வாறு இந்துக்களும், முஸ்லீம்களும் சமூக அளவில் கலந்து ஒரு நவீன கலாச்சாரத்தையும், புதிய குடியேற்றங்களையும் வளர்த்திருக்கின்றனர். அந்த இரண்டு சமூகங்களுக்கும் இடையில் தனித்தன்மை என்பது அவ்வளவாகக் கிடையாது. இந்துக்களின் வாழ்வாதாரங்களை வளப்படுத்தும் வகையில் பெரும்பான்மையான முஸ்லீம்கள் பங்கு பெற்றுள்ளனர். ஒரு தேசம் எனப்படுவது அதில் வாழும் பல சமூகங்களுக்கும் மேலானதோர் அமைப்பு என்ற கருத்து ஓங்கவேண்டும். உலகில் எங்குமே அந்தந்தச் சமூகங்களின் உரிமைகள், மற்றும் இலட்சியங்களின் அடிப்படையிலேயே அவைகள் வாழும் தேசத்தின் உரிமைகளும், இலட்சியங்களும் ஒத்திருக்க வேண்டும். ஆனால் முஸ்லீம் லீகின் கொள்கையால் இந்தியாவில் அவ்வாறான சூழ்நிலை அமையாது இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதொரு நிலையே.

    மத்திய மாகாணத்தின் முன்னாள் அமைச்சரான திரு. முஹம்மது யூசூப் ஷரீப், தான் தலைமையேற்ற தென்னிந்தியப் பிரிவினை எதிர்ப்பு மாநாட்டில் இவ்வாறு கூறினார்:

    இந்தியாவில் அமைதி நிலவுவதற்கும், அதை வலிமைப்படுத்துவதற்கும் பதிலாக இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் தனித்தனி நாடுகள் என்று பிரித்துக்கொடுத்தால், அந்நாடுகள் இரண்டிற்கும் இடையே ஆவேசத்தால் எழும் பூசல்களும், சகோதரச் சண்டை - சச்சரவுகளும் வந்து, எப்போதும் நாட்டை ஓர் ரணகள பூமியாக ஆக்கிவிடும். அப்போது அதன் சுதந்திரத் தன்மை எவ்வளவு காலம்தான் நீடிக்க முடியும்? இல்லவே இல்லை; நாட்டைத் துண்டாடுவது மொத்தத்தில் தேசத்திற்கும் நல்லதல்ல; தனிப்பட்ட முறையில் அதில் வாழும் சமூகங்களுக்கும் நல்லதல்ல. தனித்தனியான சமூகங்கள் உள்ள நாடு என்று இந்தியா தன்னைக் கருதுமானால், ஒன்றையொன்று சந்தேகம் கொள்ளும் மனப்பான்மையும் அவைகளுக்கு இடையே ஓங்கி வளரும்.

    இஸ்மாயிலி கோஜா என்ற சமூகத்தின் தலைவரான திரு. முஹமதுபாய் அவர்கள் கூறுவதாவது:

    பாகிஸ்தான் வேண்டும் என்ற கூற்றை அடியோடு நிராகரிக்காமல், அதை மேற்கொண்டு எடுத்துச் செல்லும் கடமை இந்தியாவின் பொறுப்பு மிக்க ஒருசில முஸ்லீம் தலைவர்களுக்கு வந்துவிட்டது என்பது துரதிருஷ்டமானதே. பாகிஸ்தான் என்னும் எண்ணமே வேதனையில் விளைந்த ஒரு சிந்தனை என்பதும், அது சாதனையாக உருவெடுத்தால் ஒட்டுமொத்த முஸ்லீம் இனத்திற்கே அது ஒரு சாபக்கேடாகவும் முடியலாம் என்பதும் இந்தியாவைச் சேர்ந்த பொறுப்பான மற்றும் பண்புள்ள முஸ்லீம்களுக்குத் தற்போது புரிந்துவிட்டது. சுருங்கச் சொல்லப்போனால், அத்தகைய பொறுப்பற்ற சிந்தனையைச் செயல்படுத்தினால், நம் நாட்டிற்கே அது ஓர் அரசியல் தற்கொலையாக முடியலாம்.

    இப்போது இருக்கும் இந்து-முஸ்லீம்களின் கொடுக்கல்-வாங்கலில், முஸ்லீம்களின் தினப்படித் தேவைகளைத் தற்போது நிறைவு செய்யும் ஒரு சமுதாய அமைப்பு இதனால் சீரழிவை அடையலாம். அதைத் தடுக்க முடியாத வகையில், இந்த மாற்றத்தின் விளைவு இருக்கும் என்றதொரு பொருளாதாரக் கோணமும் இதில் அடங்கியிருக்கிறது. வர்த்தகத்திலும், பண்டப் பரிமாற்றத்திலும், இந்து வங்கிகளே முஸ்லீம்களின் வர்த்தகத்திற்குத் தேவையான முதலீடுகளை அளிக்கின்றன. அதேபோல முஸ்லீம்களின் வர்த்தகத்தில் இந்துக்கள் பங்குதாரர்களாக இருக்கின்றனர். பற்பல தொழில்களிலும், உற்பத்திச் சாலைகளிலும் இருக்கும் விதவிதமான அம்சங்களில் ஒரு சிலவற்றில் இந்துக்களும், வேறு சிலவற்றில்

    Enjoying the preview?
    Page 1 of 1