Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanaiyazhi - April 2021
Kanaiyazhi - April 2021
Kanaiyazhi - April 2021
Ebook182 pages51 minutes

Kanaiyazhi - April 2021

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

December 2020 month issue of Kanaiyazhi Magazine.
Languageதமிழ்
Release dateDec 21, 2021
ISBN6580109507274
Kanaiyazhi - April 2021

Read more from Kanaiyazhi

Related authors

Related to Kanaiyazhi - April 2021

Related ebooks

Reviews for Kanaiyazhi - April 2021

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanaiyazhi - April 2021 - Kanaiyazhi

    https://www.pustaka.co.in

    கணையாழி ஏப்ரல் 2021

    மலர்: 56 இதழ்: 01 ஏப்ரல் 2021

    Kanaiyazhi April 2021

    Malar: 56 Idhazh: 01 April 2021

    Author:

    ம.ரா

    Ma. Raa

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    அரசியல் கட்சிகள் ஏலம் விட அனுமதிக்கிறோமா?

    ஒருமுறை… இருமுறை…. என்று

    ஏலம் விடுவதைப்போல

    இடமும் நிதியும் பேச்சுவார்த்தையில்

    இழுபறி ஆன பின்னர்

    இதோ

    கைக்கு எட்டிய காலத்தில் தேர்தல்!

    ஆட்சிக்கு வரவும்

    ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்கவும்

    கட்சியைக் கைப்பற்றவுமாகக்

    களத்தில் நிற்கின்றன கட்சிகள்!

    தங்கள் கட்சி மட்டும்

    வெற்றி பெற வேண்டும்

    பெரிய கட்சிகளின் தோல்வியில்தான்

    தங்களது வரும் காலம்

    வருமானக் காலமாக இருக்கும் என்று

    கூட்டணிக் கட்சிகளுக்குள்

    உருவாகிறது ஒரு கூட்டணி!

    தமிழக அரசியலில்

    பாஜக காலூன்ற

    இந்தத் தேர்தலில்

    ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்

    அதிமுக தோல்வியை!

    ஆட்சியை இழந்தால்

    அதிகாரப் பாதுகாப்புக்காக

    அதிமுக, பாஜக ஆகலாம் என்று

    கூட்டணிக் கட்சிகளின் தோல்வியில்

    தங்களின் எதிர்காலத்தைத்

    தக்கவைக்க நினைக்கிறார்கள்!

    போட்டியிடும் எல்லோரும்

    வெற்றி பெற வாய்ப்பில்லை.

    வியப்பாக இல்லையா?

    வாய்ப்பில்லை என்பதறிந்தும்

    களத்தில் வேட்பாளர்கள் பலர்!

    ஆட்சியைப் பிடிக்கவும்

    அதிகாரத்தில் பங்கு பெறவும்

    எல்லோரும்

    தேர்தலில் நிற்கவில்லை

    ஆட்சிக்கு ஒரு கட்சி வரக்கூடாது

    அதிகாரம் ஒரு கட்சிக்குப்

    போய்விடக் கூடாது என்பதற்காக

    ஆதாயம் கேட்டு அலையும்

    அரசியலும் தேர்தலில் நிற்கிறது.

    கூட்டணிக் கட்சிகளுக்குத்

    தொகுதிகள் மட்டுமில்லை

    நிதி ஒதுக்கீடும் நடக்கிறது!

    ஒருமுறை… இருமுறை…

    இதோ தேர்தல்

    கைக்கு எட்டிய காலத்தில்!

    ஒவ்வொரு தொகுதிக்கும்

    வாக்குப் பணம்

    பாதுகாப்பாகப் போயிருக்கிறது!

    வாக்காளர் கைக்குப் போவதற்குக்

    களத்தில் நிற்பவர்கள்

    கணக்குப் போடுகிறார்களாம்

    ஆட்சிக்கு மீண்டும் வர

    வாய்ப்பில்லாத போது

    கைக்கு வந்த செல்வத்தைக்

    கரைக்க மனசில்லையாம்!

    அதட்டிக் கேட்கவும்

    ஆள்வைத்து மிரட்டவும்

    தேர்தல் ஆணையக் கண்காணிப்பில்

    அதிகாரிகளின் ஒத்துழையாமையில்

    கைபிசைந்து நிற்கிறார்களாம்!

    ஓருமுறை... இருமுறை...

    இதோ

    கைக்கு எட்டிய காலத்தில் தேர்தல்!

    எரிவாயு, பணம்

    இலவச டேட்டா அட்டை

    வீடு தேடி ரேஷன் என்று

    வாக்குகளை

    வெளிப்படையாக

    ஏலம் விடுகிறார்கள்!

    பலசாளி ஆண்களும்

    அழகிய பெண்களும்

    ஏலம் விடப்பட்ட

    காலம் இருந்தது!

    அப்போது பலமும் அழகும்

    ஏலப்பொருள்கள்!

    புகழ் பெற்றவர்கள்

    பயன்படுத்திய பொருட்கள்

    இப்போதும் கூட

    ஏலம் விடப்படுகின்றன.

    பொருட்களுக்குப் பதில்

    பயன்படுத்தியவர்களின்

    புகழ் ஏலம் விடப்படுகிறது!

    அடகு வைத்த பொருளுக்கு

    அசலும் வட்டியும் கட்டாத போது

    அதுவும் ஏலத்திற்குப் போகிறது!

    ஆடு மாடுகள், மீன்கள் மட்டுமின்றி

    உழைப்பின் விளைச்சலையும் கூட

    விற்பதற்காக ஏலம் விடுகிறார்கள்!

    அடிப்படையில்

    ஏலம் விடுவதில் இருவகை

    ஒன்று

    தனக்கு உரிமை உடையதைத்

    தானே விடுவது

    மற்றது

    அடகு வைத்தவர் உடைமையை

    அடகு பிடித்தவர் விடுவது!

    ஒருமுறை… இருமுறை….

    இதோ

    கைக்கு எட்டிய காலத்தில் தேர்தல்!

    அடுத்தத் தேர்தல் வரை

    அதிகாரம் பெற

    தேர்தல் களத்தில்

    வாக்குகளின் ஏலம்!

    நம்மை நாமே விற்றுக்கொள்ள

    அடுத்தத் தேர்தல்வரை

    அடிமையாய்க் கிடக்க

    ஒருநாளில் உரிமையை

    ஏலம் கேட்கிறார்கள்!

    அதிகார வியாபாரத்தில்

    அடித்த கொள்ளையில்

    அப்பாவி மக்களின்

    வாக்குகள் கொள்முதல்!

    ஏலம் என்பது விற்பனைதான்

    வழக்கமாக ஏலம் விடுபவரே

    விலையைத் தீர்மானிக்கிறார்!

    ஆனால் தேர்தலில் மட்டும்

    வாங்குபவர் தீர்மானிக்கிறார்!

    அது எப்படி?

    எப்போது நாம் அடகு வைத்தோம்?

    அடகு வைக்காத நம் உரிமையை

    அரசியல் கட்சிகள் ஏலம் விட

    அனுமதிக்கிறோமா?

    அன்புடன் ம.ரா

    ***

    உள்ளடக்கம்

    படைப்பாளர்கள் பார்வையில் தேர்தல்

    கவிதை - காசாவயல் கண்ணன்

    கட்டுரை - கவிஞர் எஸ். சண்முகம்

    கவிதை - குமரன்விஜி

    சிறுகதை - விக்னேஷ் குமார்

    குறுநாவல் - க.சி.அம்பிகாவர்ஷினி

    கவிதை - கவிஜி

    கட்டுரை - தமிழவன்

    சிறுகதை - அண்டனூர் சுரா

    கவிதை - ப்ரியா வெங்கடேசன்

    கட்டுரை - கி. அரங்கன், தஞ்சாவூர்

    சிறுகதை - நலங்கிள்ளி

    கவிதை - சன்மது

    கட்டுரை - பேரா ம.கருணாநிதி

    கவிதை - ந. சிவநேசன்

    கடைசிப் பக்கம் - இந்திரா பார்த்தசாரதி

    ***

    படைப்பாளர்கள் பார்வையில் தேர்தல்

    எந்த அணி வெற்றிபெற வேண்டும்? ஏன்?

    shy.jpg

    கம்யூனிஸ்ட் கட்சியை உள்ளடக்கிய திமுக அணி வெற்றி பெற வேண்டும். அறிவு சார்ந்த விஷயமாகக் கடைக்கோடி கிராமத்திலும் நூலகம் அமைத்து எந்த லஞ்சமும் இல்லாமல் எல்லோருக்கும் புத்தகங்கள் கிடைக்கச் செய்வது அறிவார்ந்த சமூகத்தை உருவாக்கும். அது இந்தக் கூட்டணி வந்தால் மட்டுமே சாத்தியப்படும்.

    - எழுத்தாளர் ஷைலஜா

    ***

    82139410_10215416014930456_5231788311382589440_n.jpg

    வெற்றி பெற வேண்டிய கூட்டணி : மதச்சார்பற்ற திமுக கூட்டணி.

    பாரதீய ஜனதா கட்சியை RSS போன்ற (ஒரு)மதச்சார்புள்ள இயக்கங்கள் பின்னணியில் இயக்குகின்றன என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை. இதனுடன் கூட்டணி வைத்திருக்கும்/வைக்கப்போகும் எந்தக் கட்சியையும் வெறுக்கிறேன். BJP செயல்பாடுகள் இந்தியா முழுக்க ஒரே தேசமாக ஒரே மொழியாக(ஹிந்தி via சமஸ்கிருதம்) ஒரே இனமாக - ஹிந்து இனம் மட்டுமே - மாற்றுவதில் பல முயற்சிகள் நடக்கின்றன. இன்றளவும் என்றளவும் தமிழ் நாடு தனித்தே நிற்கும், உயர்ந்து பறக்கும்.

    அ.ம.மு.கழக கூட்டணி, மக்கள் நீதி மய்யக் கூட்டணி, நாம் தமிழர் போன்றவை மதச்சார்பற்ற அணியாகத் தான் இன்றளவில் இயங்குகின்றன. இதிலிருந்து திமுக, அனுபவ அரசியலாலும் எதிர்காலத் திட்டங்களாலும் மாறுபட்டும் வேறுபட்டும் மேம்படுத்தியும் தோன்றுகிறது.

    மதச்சார்பற்ற திமுக கூட்டணி வெற்றி பெற வாழ்த்துகள்.

    - கவிஞர் வேல்கண்ணன்

    ***

    த நா சந்திர.jpg

    நடைபெறும் 2021 சட்டமன்றப் பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெற வேண்டும். அதன் பின் திமுக தவிர அதன் அனைத்துக் கூட்டணிக் கட்சிகளும் ஆக்கப்பூர்வமான எதிர்க் கட்சியினராக வேண்டும். தமிழ் இன-மொழி-மாநில உரிமைகள் முழுமையும் பாதுகாக்கப்பட எதிர்க்கட்சியினரோடு ஆளும்கட்சியினர் அரசியல் கடமையாற்ற வேண்டும். மேற்சுட்டிய உரிமைகள் மூலம் தான் கல்வி( நீட் உள்ளிட்ட பொது நுழைவுத் தேர்வுகள், செம்மொழி நிறுவனச் சிக்கல்கள்), வேளாண்மை, சுற்றுச்சூழல், கனிம வளம், மின் ஆற்றல், மீன் வளம் என ஒரு மாநிலம் மட்டுமே செயல்பட்டாக வேண்டிய துறைகளின் மீதான மைய அரசின் மேலாதிக்கம் தடுக்கப்பட முடியும். இதற்கு எதிர் வரும் காலங்களில் திமுக தனது ஆட்சியை நிலைநிறுத்தல், நீட்டித்துத் தொடர்தல் என்ற நோக்கில் மட்டும் செலுத்தாமல் தமிழ் மாநிலம் மட்டுமின்றி ஈழம் மற்றும் உலகெங்கும் உள்ள தமிழ்மக்கள்நல உரிமைகளுக்காக மட்டுமே செயல்படுதல் என்ற பாங்கில் இயங்க வேண்டும். அதற்கு முட்டுக்கட்டையாகும் அல்லது அதனைச் சீர்குலைக்கும் வண்ணம் மைய அரசின் வருமான வரி, உளவுத்துறை போன்ற அதிகார முகமைகளால் ஏவப்பட்டு அச்சுறுத்தப்படும் நிலையையும் வெற்றிகரமாக எதிர்கொண்டிட ‘மடியில் கனமில்லை (அதனால் அரசியல் பயண)வழிக்கும் பயமில்லை’ என்ற பொருளாதார

    Enjoying the preview?
    Page 1 of 1