Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanaiyazhi - December 2020
Kanaiyazhi - December 2020
Kanaiyazhi - December 2020
Ebook182 pages56 minutes

Kanaiyazhi - December 2020

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

December 2020 month issue of Kanaiyazhi Magazine.
Languageதமிழ்
Release dateDec 21, 2021
ISBN6580109506429
Kanaiyazhi - December 2020

Read more from Kanaiyazhi

Related to Kanaiyazhi - December 2020

Related ebooks

Reviews for Kanaiyazhi - December 2020

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanaiyazhi - December 2020 - Kanaiyazhi

    https://www.pustaka.co.in

    கணையாழி டிசம்பர் 2020

    மலர்: 55 இதழ்: 09 டிசம்பர் 2020

    Kanaiyazhi December 2020

    Malar: 55 Idhazh: 09 December 2020

    Author:

    ம.ரா

    Ma. Raa

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    தலையங்கம் - ம.ரா.

    எப்போது வரும் அந்தப் புயல்?

    புயல் வருகிறது! புயல் வருகிறது!

    அடித்து ஓய்ந்திருக்கிறது

    ஊடகங்களின்

    அதிரடிப் புயல்!

    அடுத்தடுத்த புயலுக்கும்

    தயாராகிறது ஊடகம்!

    புயல்

    தரைக்கும் வானத்துக்கும்

    காற்றின் விசுவரூபம்!

    ஒவ்வொரு புயலும்

    கற்றுக்கொள்ள

    விட்டுச் செல்கிறது

    நிறைய தடயங்களை!

    காப்பாற்றும்

    முன்னேற்பாடுகளை விடப்

    புயலில்

    கைப்பற்றும் நடவடிக்கைகளே

    முன்னெடுக்கப்படுகின்றன.!

    புயல் காற்றின் மரணத்தில்

    சூரியனின் புது வருகை

    இயற்கையின் கொண்டாட்டம்!

    புவி ஈர்ப்போடு

    காற்று நடத்திய போராட்டத்தில்

    அப்பாவி மரம் செடி கொடிகளின்

    வேர்களும் அழுகின்றன.

    கண்ணில் அமைதி

    விளிம்பில் ஆர்ப்பாட்டம்!

    மையத்து அமைதியில்

    கிழிபடுகின்றன மேகங்கள்!

    எப்போதும்

    ஆர்ப்பாட்டங்கள்

    நீடிப்பதில்லை!

    இரண்டொரு நாட்களில்

    ஆர்ப்பாட்டக் காற்றின்

    ஆயுள் முடிகிறது!

    உலகமே புயல்தான்

    மையத்தைக் கண்டதும்

    காணாமல் போகிறது

    புயல் என்றார் ஓஷோ!

    கடலில் ஒத்திகை

    கரையில் தாண்டவம்

    மேக மலைகளில்

    பம்பர விளையாட்டு!

    ஒரே தேசம்

    ஒரே மதம்

    ஒரே மொழி

    ஒரே தேர்தல்

    புயலுக்கு இல்லை!

    புயலின் இலக்கு

    பணக்காரர்களுக்குப் பயம்

    ஏழைகளுக்குப் பாதிப்பு!

    புயலின் ஆயுதங்கள்

    காற்றும் மழையும்

    தேவைப்பட்டால் இடி!

    ஒரே நேரத்தில்

    இரண்டு புயல்கள்

    சூர சம்ஹாரமும்

    சூரரைப் போற்றும்.

    ஒன்று காற்று

    மற்றது மழை!

    வந்து போனது நிவர் புயல்!

    வரப்போகிறது

    பெரும்புயல்!

    ஐந்து ஆண்டுகளுக்கு

    ஒருமுறை வரும்

    சட்டமன்றத் தேர்தல்!

    கண்மண் தெரியாமல்

    அடிக்கப் போகிற

    தேர்தல் புயலுக்கான

    கண் இன்னும் தெரியவில்லை

    ஆனால்

    பிரச்சாரச் சுழலில்

    தமிழகம்!

    உள்துறை அமைச்சர்

    திரு அமித்ஷா வருகையில்

    விமான நிலையத்தில்

    புறப்பட்ட புயல்

    அவரை வழியனுப்பலில்

    வான் கடந்தது.

    கடந்த பின்பும்

    ஊடக அலசலில்

    தலையாட்டலும்

    தலைகீழ் விழுதலும்

    இன்னும் தொடர்கின்றன.

    திரு ப.சிதம்பரம்

    உள்துறை அமைச்சராக

    இருந்தபோது

    எந்த மாநிலத்திலும்

    ஏன்? சொந்த மாநிலத்திலும்

    இப்படி ஒரு வரவேற்பு

    கொடுக்கப்பட்டதாகத்

    தெரியவில்லையே!

    கொடுக்கப்பட்ட வரவேற்பில்

    வெளிப்பட்டது

    உள்துறை அமைச்சர் இல்லை

    தேர்தல் நேர ஆதரவு வேட்டை!

    அரசு விழா மேடையிலும்

    நேரலையிலும்

    கூட்டணி பேச்சு வார்த்தை!

    இப்படி

    வரப்போகிற புயலுக்கு

    அரசியல் கட்சிகள்

    கூட்டணி சுழற்சியில்

    வெள்ளப் பகுதியில்

    இசை நாற்காலிகளைத்

    தேடிக் கொண்டிருக்கின்றன.

    வழக்கமாகப்

    புயல் கரை கடந்த பின்பே

    கையில் பொருளோடு

    கட்சிகள் வலம் வரும்.

    கரை கடந்ததும்

    புயலைப் போல

    காணாமல் போவார்கள்!

    தேர்தல் காலப் புயல் என்றால்

    தேர்தல் முடியும் வரை

    எத்தனை புயல் வந்தாலும்

    புயல் முடிந்ததும்

    அடித்து ஓடிவர ஆளும் கட்சியை

    அதிகார ஆசை விரட்டும்!

    ஆனால் இதிலும்

    வித்தியாசமானது

    தேர்தல் புயல்!

    கரை கடக்கும் முன்புதான்

    மரியாதையோடு மக்கள்

    கவனிக்கப்படுவார்கள்!

    ஆகவே மக்கள்

    ஆவலோடு காத்திருக்கிறார்கள்

    எப்போது வரும் அந்தப் புயல்!

    அன்புடன்

    ம.ரா

    ***

    உள்ளடக்கம்

    கட்டுரை - பேரா. ஜெயதேவன்

    கவிதை - அன்றிலன்

    கவிதை - ஏகரசி தினேஷ்

    கட்டுரை - மு. இராமசுவாமி

    சிறுகதை - கவிதைக்காரன் இளங்கோ

    கட்டுரை - பேரா. பா.ரா. சுப்பிரமணியன்

    கவிதை - பொன்னியின் செல்வன்

    சிறுகதை - கவிஞர் இலக்கியா நடராஜன்

    கட்டுரை - கவிஞர் எஸ். சண்முகம்

    கவிதை - கார்த்திக் குமார்

    சிறுகதை - பா.செயப்பிரகாசம்

    அஞ்சலி - ம.ரா

    கட்டுரை - நா. முத்துநிலவன்

    கவிதை - தி.கலையரசி

    கட்டுரை - சு. வாசு

    கட்டுரை- கவிஜி

    கடைசிப் பக்கம் - இந்திரா பார்த்தசாரதி

    ***

    கட்டுரை – பேரா. ஜெயதேவன்

    ஜெயதேவன்.jpg

    பேராசிரியர் அலெக்சாந்தர் மிகைலோவ் துபியான்ஸ்கி

    Professor Alexander Mikhailovich Dubiansky

    தமிழுடனான ரஷியத் தொடர்பு கி.பி.15-ஆம் நூற்றாண்டிலேயே அரும்பிவிட்டது. அபனசி நிகிதினின் (Afanasy Nikitin) முக்கடல்களுக்கு அப்பாலான பயணம் (1466-1472) வாயிலாகப் பணம், இஞ்சி முதலிய சொற்கள் ரஷியர்களுக்கு அறிமுகமாயின. ஆயினும், 18-ஆம் நூற்றாண்டு முதலாகத் தமிழ் கற்றலிலும் கற்பித்தலிலும் ரஷியயர்கள் ஈடுபடலாயினர். தமிழாய்வு, தமிழ் மொழிக்கு இலக்கணம் எழுதுதல், தமிழ் நூல் வெளியீடு, தமிழ் பிணைந்த அகராதி ஆக்கம், தமிழ் நூல்களை ரஷியய மொழியிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்தல் முதலிய பணிகள் 19, 20-ஆம் நூற்றாண்டுகளில் பேரளவில் ரஷியயாவில் நடைபெற்றன. அப்பணிகளை மேற்கொண்டோருள் பேயர் (ThZ.Bayer), மெஸ்ஸெர்ஷ்மிட் (D.G.Messerschmidt), கேஹர் (G.J. Kehr), லெபெடெப் (G.S.Lebedeff), பெட்ரோவ் (L.P.Petrov), விலாடிமிர் மகரென்கோ (Vladimir Makarenko), புலிச் (Sergey Bulich), அலெக்சாந்தர் மெர்வர்ட் (Alexander Mervart), அவருடைய மனைவி மெர்வர்ட் (L.A.Mervart), வோரோபையெவ்-தேசியாடோவ்ஸ்கி (V.S.Vorobyev-Desiatovsky), ஆந்திரோனோவ்(M.S.Andronov), இப்ராகிமோவ் (A.Ibragimov), யுகனோவா (N.Yuganova), அலெக்சாந்தர் பியாதிகோர்ஸ்கி (Alexander Piatigorsky), செம்பியன் எனத் தமிழில் தன் பெயரை மாற்றிக்கொண்ட ரூதின் (S.G.Rudin), அவருடைய மாணவர்களான அலெக்சாந்தர் மிகைலோவ் துபியான்ஸ்கி, கிளாஸோவ் (Y.Y.Glazov) முதலியோர் குறிப்பிடத் தக்கவர்கள். ரஷியயாவில் தமிழ் கற்பித்த முதல் இந்தியப் பெண்மணி ஆதிலட்சுமி ஆவார். மேற்குறித்தவர்களுள் பலருக்கும் பேராசிரியர்கள் அ.சிதம்பரநாதன், தெ.பொ.மீ., மு.வ., ந.சஞ்சீவி, பி.சி. கணேசசுந்தரம் முதலிய பல அறிஞர்கள் பல வகைகளில் உதவியுள்ளனர். தமிழ் மொழியிலும் ரஷிய மொழியிலும் மொழிபெயர்க்கும் ஆற்றலுடைய பூரணம் சோமசுந்தரம், தமிழ் மொழிபெயர்ப்பாளர்களான ஜி.சுப்பிரமணியன், என்.சொக்கலிங்கம், ஏ.கிருட்டிணமூர்த்தி, பி.சோமசுந்தரம், எம்.பிள்ளை, சி.ஜி.எஸ்.மணிவர்மன் உள்ளிட்ட பலரும் ரஷிய அறிஞர்களின் தமிழ்ப் பணிக்கு உறுதுணையாக இருந்துள்ளனர். நட்பு நாடாக இந்தியாவைப் போற்றிய சோவியத் ரஷிய அரசின் ஊக்கமும் நிதியுதவியும் ரஷிய அறிஞர்களின் தமிழ்ப் பணிக்குப் பேருதவியாக இருந்துள்ளன. இப்படிக் கடந்த சில நூற்றாண்டுகளாகத் தொடர்ந்துவந்த ரஷிய அறிஞர்களின் தமிழ்ப்பணிச் சங்கிலித் தொடரின் ஒரு கண்ணியாக விளங்கியவர் அலெக்சாந்தர் மிகைலோவ் துபியான்ஸ்கி ஆவார்.

    துபியான்ஸ்கி 27.04.1941-இல் மாஸ்கோவில் பிறந்தார். தான் ஓர் இசைக் கலைஞராக ஆக வேண்டும் என ஆசைப்பட்ட அவர் இளம் வயதில் மாஸ்கோ இசைக் கழகத்தில் சேர்ந்து இசை பயின்றார். இராணுவச் சேவை புரிய வேண்டிய கட்டாயத்தால் இசைப் படிப்பை அவரால் நிறைவு செய்யமுடியாமற் போயிற்று. இராணுவத்திலிருந்து திரும்பி வந்ததும் மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகத்தில் மாணவராய்ச் சேர்ந்து கல்வி கற்கலானார். அங்கேயே முனைவர் பட்டமும் பெற்றார். அங்கு மாணவராய் இருந்த காலத்தில் அவருக்கு இந்தியவியலில், குறிப்பாகத் தமிழியலில் ஆர்வம் உண்டாயிற்று. தமிழ் இலக்கண, இலக்கியங்களை நன்கு கற்றுக்கொண்டார். அந்தப் பல்கலைக்கழகத்திலேயே 1973-இல் பணியில் சேர்ந்தார். 1978-79 இல் ஒன்பது மாதங்கள் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில் தமிழ் இலக்கியங்கள் குறித்துக் கற்றறிந்தார். மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகத்தில் ரஷிய அரசுக் கலையியல் பல்கலைக்கழகத்திலும் 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் கற்பித்தார். அன்றியும் ரஷிய மண்ணில் தமிழாய்வை ஊக்குவித்தார். தங்கு தடையின்றிச் சரளமாகத் தமிழில் பேசும் ஆற்றல் கொண்டிருந்தார். சோவியத் ரஷியா பிளவுபட்ட பின்னர், அதாவது 1991-க்குப் பிறகு ரஷியாவில் தமிழுக்கான அரசின் ஆதரவு மங்கிய நிலையில் தனியொருவராகக் கடந்த பன்னீராண்டுகளாகத் தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்கள் குறித்த முறைசாராக் கருத்தரங்குகளை நடத்தித் தமிழ் வளர்த்துவந்தார். அவருடைய மாணவர் வட்டம் ஆர்வத்துடன் அக்கருத்தரங்குகளில் பங்குபெற்று வந்தது.

    Alexander.jpg

    கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு உள்ளிட்ட உலகளாவிய மாநாடுகள் பலவற்றில் கலந்துகொண்டவர் அவர். சேலத்தில் நடைபெற்ற பாரதியார் நூற்றாண்டு

    Enjoying the preview?
    Page 1 of 1