Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanaiyazhi - February 2020
Kanaiyazhi - February 2020
Kanaiyazhi - February 2020
Ebook209 pages1 hour

Kanaiyazhi - February 2020

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

February 2020 month issue of Kanaiyazhi Magazine.
Languageதமிழ்
Release dateMar 24, 2020
ISBN6580109505145
Kanaiyazhi - February 2020

Read more from Kanaiyazhi

Related authors

Related to Kanaiyazhi - February 2020

Related ebooks

Reviews for Kanaiyazhi - February 2020

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanaiyazhi - February 2020 - Kanaiyazhi

    http://www.pustaka.co.in

    கணையாழி பிப்ரவரி 2020

    மலர்: 54 இதழ்: 11 பிப்ரவரி 2019

    Kanaiyazhi February 2020

    Malar: 54 Idhazh: 11 February 2020

    Author:

    ம.ரா

    Ma. Raa

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    கணையாழி பிப்ரவரி 2020

    தலையங்கம் - ம.ரா.

    புறப்பட்டிருக்கிறது ஒரு புதிய நச்சுக்கிருமி!

    இராசராசன் கோயிலில்

    தமிழுக்கு இடம் மறுக்க

    ஊடகத்தில் கூச்சல்கள்!

    பாடமொழி, ஆட்சிமொழி கடந்து

    குடமுழுக்கு மொழி பற்றி

    முறையிடச் செல்லும்

    நீதிமன்ற முகப்புகளில்

    இப்போதும் மெட்ராஸ்!

    மனிதம் மேம்பட

    கடவுளை எதிர்த்தார்

    பெரியார்!

    துக்ளக்கைப் பாராட்ட

    பெரியாரைக் குறைக்கிறார்

    ரஜினி!

    இயலாமைகளின் இலக்கு

    பெரியார் சிலை!

    இதோ

    புறப்பட்டிருக்கிறது ஒரு

    புதிய நச்சுக்கிருமி!

    2019

    நமக்கு வழங்கிய கொடை.

    இதற்கு முன்பும் கண்டிருக்கிறோம்

    நச்சுக் கிருமிகளை!

    இது வேறு வகை.

    இதன் வீரியம்?

    கண்களை மறைப்பது!

    எப்படியெல்லாம் பாதிக்கும்?

    கண்டறிய முடியாது.

    பாதிக்கப்படுகிறவர்களைப்

    பட்டியலிட முடியாது.

    பாதுகாத்துக் கொள்வதற்கு

    வழி தேட வேண்டும்!

    இதோ

    புறப்பட்டிருக்கிறது ஒரு

    புதிய நச்சுக்கிருமி!

    நிம்மதியாக வாழ்ந்தவர்களை

    2019 இல் வந்த இது

    மூக்கு மூடச் சொல்கிறது!

    இதற்குமுன் பட்ட

    துன்ப துயரங்களை –

    பழைய கதைகளைத்

    தேடிப் பார்க்கச் சொல்கிறது.

    இதோ

    புறப்பட்டிருக்கிறது ஒரு

    புதிய நச்சுக்கிருமி!

    சீனாவின் வூகன் மாநகரில்

    நச்சுக் கிருமிகளின் நடமாட்டம் பற்றி

    டிசம்பர் 31, 2019 இல் தகவல் பெறுகிறது

    உலக சுகாதார நிறுவனம்.

    உறுதி செய்கிறது சீனா

    ஜனவரி 7 இல்.

    குடியுரிமைச் சட்டங்களை மீறி

    ஒரு மாதத்துக்குள்

    உலகமயம் ஆகியிருக்கிறது

    நச்சுக் கிருமி கரோனா!

    பாதுகாத்துக் கொள்ள

    தனி நபர்களுக்கும் நாடுகளுக்கும்

    உலகச் சுகாதார அமைப்பின்

    ஆலோசனைகள்!

    செய்வது அறியாமல்

    மூச்சு முட்டலில் உலக நாடுகள்.

    போர் நடக்காமலேயே

    மக்களின் மரணம்!

    மக்களுக்கு இடையே இல்லாமல்

    நாடுகளுக்கு இடையே இல்லாமல்

    மக்களுக்கும் நச்சுக் கிருமிகளுக்கும்

    போர் நடக்கிறது.

    இந்த போர்

    மக்கள் வாழ்வை அச்சுறுத்தும்

    நச்சுக் கிருமிகளுக்கு

    எதிரான போர்.

    மக்களை அச்சுறுத்துவன

    நச்சுக் கிருமிகள் மட்டுமில்லை

    நச்சுக் கருத்துகளும்

    சிந்தனைகளும் கூடத்தான்!

    இதோ

    புறப்பட்டிருக்கிறது ஒரு

    புதிய நச்சுக்கிருமி!

    ஏ.கே. 47, பீரங்கி,

    ஈழத்தில் வீசிய

    இரசாயனக் குண்டுகள்

    மக்களைத் தாக்க மட்டும்தானா?

    தன்னைத் தானே செலுத்திக் கொல்லும்

    ஏவுகணைகள் –

    நிலையான இலக்கு மட்டும் இல்லாமல்

    விமானம் போல

    பறந்துகொண்டிருக்கும்

    ஓடிக்கொண்டிருக்கும்

    நகர்ந்து கொண்டிருக்கும்

    இலக்குகளையும்

    தொடர்ந்து சென்று தாக்க

    வழிகாட்டப்பட்டிருக்கும்

    ஏவுகணைகள் –

    கண்டம் விட்டுக் கண்டம் தாவும்

    அக்னி ஏவுகணைகள்-

    கடலூர் மீனவர் வலையில் சிக்கிய

    உருளை வடிவிலான

    மர்மப் பொருளைப் (BIFP-04)

    பாகமாகக் கொண்ட

    இந்திய ரஷ்யத் தயாரிப்பான

    பிரம்மோஸ் போன்ற

    நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து

    புறப்பட்டு அழிக்கும்

    ஏவுகணைகள் –

    ஈராக் விமான நிலையத்திற்குச்

    சென்றுகொண்டிருந்த

    காசிம் சுலைமணியை

    வழியில் போட்டுத் தள்ள

    வடிவமைக்கப்பட்டு

    வழிகாட்டப்பட்டு –

    திட்டமிடப்பட்டு

    துல்லியமாக இலக்கை அழிக்க

    தூண்டிவிடப்பட்ட ஏவுகணைகள்

    இதோ

    புறப்பட்டிருக்கிற ஒரு

    புதிய நச்சுக்கிருமியிடமிருந்து

    காப்பாற்றிக் கொள்ள முடியாமல்

    கைபிசைந்து நிற்கின்றனவே!

    நச்சுக் கிருமிகள்

    நாட்டில் சுதந்திரமாக உலாவர

    வாழும் வீட்டையே

    அகதி முகாமாக்கி

    முகம் மூடி வாழச் செய்ய

    இதோ

    புறப்பட்டிருக்கிறது ஒரு

    புதிய நச்சுக்கிருமி!

    அன்புடன்ம.ரா

    ***

    உள்ளடக்கம்

    கட்டுரை - ஹாலாஸ்யன்

    கவிதை - இரா. கவியரசு

    சிறுகதை

    கவிதை - புலமி

    கட்டுரை - வழக்கறிஞர் எஸ்.எஸ். ராஜ்குமார்

    சிறுகதை - தேவகி கருணாகரன்

    வளவ. துரையன் கவிதைகள்

    வாசகர் கடிதம்

    சிறுகதை - அண்டனூர் சுரா

    கட்டுரை - மணி எம்.கே. மணி

    குறுநாவல் - கவிஜி

    முத்து.விஜயகுமார் கவிதைகள்

    கட்டுரை - முனைவர் த.நா. சந்திரசேகரன்

    கவிதை - விபீஷணன்

    கட்டுரை - ஓவியர் வேணுகோபால சர்மா

    கவிதை - காரைக்குடி சாதிக்

    கடைசிப்பக்கம் – இந்திராபார்த்தசாரதி

    ***

    கட்டுரை – ஹாலாஸ்யன்

    கரோனா

    ஊர்ப்பக்கம் கொள்ளையில போக என்று ஒரு வசவு உண்டு. கொள்ளை என்பது கொத்துக்கொத்தாக மக்களைத் தாக்குகிற தொற்று நோய். செய்யவே கூடாதவற்றைச் சொல்லும்போது ஆங்கிலத்தில் ‘Avoid like a plague’ என்று சொல்வார்கள். நம் ஊரில் மட்டுமல்ல, உலகெங்கிலும் கொள்ளை நோய் தொடர்பான வசவுகளும் சொலவடைகளும் ஏராளம் உண்டு. ஐரோப்பாவில் 15 மற்றும் 16 ஆம் நூற்றாண்டில் அலையடித்த கொள்ளை நோய்க்கு, ஐரோப்பாவின் மொத்த மக்கள் தொகையில் சுமார் மூன்றில் ஒரு பங்கு பேர் மாண்டார்கள். கடவுளின் சாபம் என்று அறியப்பட்ட இவற்றில் பலதும் விலங்குகளில் இருந்து நமக்கு வந்தவை. இப்படி விலங்குகளில் இருந்து நமக்கு வரும் தொற்றுநோய்களை ஸூநோடிக் (Zoonotic) என்பார்கள்.

    இந்த நோய்கள் கொத்துக்கொத்தாக மனிதர்களைத் தாக்கியதற்குக் காரணமும் இருக்கிறது. போதுமான சுகாதாரமின்மை. 15 ஆம் நூற்றாண்டுக் காலத்தில் லண்டனின் தெருக்களில் கணுக்கால் அளவுக்குக் குதிரைச் சாணமும் பிற கழிவுகளும் இருந்ததாகப் பதிவுகள் இருக்கின்றன. குளிர்காலத்தில் விவசாயிகள் பன்றிகள், ஆடு மாடுகள், வளர்ப்புப் பறவை அனைத்தும் வீட்டுக்குள் அனுமதித்து உறங்கியதாகவும் குறிப்புகள் உண்டு. அதிக மக்கள்தொகை அடர்த்தியும், மேற்சொன்ன சுகாதாரமற்ற சூழ்நிலையும் விலங்குகளில் இருந்து நமக்கும், மனிதர்களுக்கு இடையிலும் நோய்கள் பரவ ஏதுவான சூழ்நிலையை உருவாக்கின.

    கழிவறைகள், கழிவுநீர் மேலாண்மை, உழைக்கும் விலங்குகளில் இருந்து இயந்திரங்களுக்கு நகர்ந்தது இவையெல்லாம் தொற்றுநோய்கள் கொத்துக்கொத்தாக மனிதர்களைக் கொல்லாமல் காத்துவந்தன. ஆனால் அதன் பின்னும் சில தொற்றுநோய்கள் நம்மை அசைத்துப் பார்த்திருக்கின்றன. உதாரணமாக சார்ஸ் (SARS). Severe Acute Respiratory Syndrome என்பதன் சுருக்கமே சார்ஸ். வைரஸ் தோற்றினால் பரவும் இந்த நோய் உலகெங்கும் பல பேரை முகமூடி போட்டுக்கொள்ள வைத்தது. சுவாச மண்டலத்தைப் பயங்கரமாகத் தாக்கும் சார்ஸ் போலவே, மத்திய கிழக்கு நாடுகளில் மெர்ஸ் (MERS) என்ற வைரஸ் பீதியை உருவாக்கியது. Middle Eastern Respiratory Syndrome என்பதன் சுருக்கமே மெர்ஸ். இந்த இரண்டுமே வைரஸ்களால் பரவுபவை. முக்கியமாக விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு வந்து பின்னர் மனிதர்களுக்குள் வேகமாகப் பரவுபவை.

    கொள்ளை நோய் போலவே இந்த இரண்டு நோய்களும் மக்கள்தொகை அடர்த்தி அதிகம் இருக்கிற, இடப்பற்றாக்குறை கொண்ட நகரங்களில் இருந்தே உருவாகின. ஆனால் ஐரோப்பாவைத் தாக்கிய கொள்ளை நோய்க்கும், சார்ஸ், மெர்ஸ் வகை நோய்களுக்கும் தாக்கத்தில் வேறுபாடு உண்டு. கொள்ளை நோய் ஐரோப்பாவைத் தாக்குகையில், வட அமெரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த ஒருவர் அதனால் பாதிக்கப்பட வாய்ப்பில்லை. ஆனால் விமானப் போக்குவரத்து மலினமாகிவிட்ட இந்தக் காலகட்டத்தில் உலகின் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்கு இந்த நோய் பரவக் கூடும். இது ஒரு உலகளாவியத் தொற்றாக (Pandemic) மாற வாய்ப்புள்ளது. சார்ஸ் தொற்றுநோய் அப்படி ஒன்றாக மாற இருந்தது. ஆனால் உலகச் சுகாதார நிறுவனம் (World Health Organization - WHO) மற்றும் நாடுகளில் கூட்டு முயற்சியால் தடுக்கப்பட்டது. நாம் அடுத்ததாகக் கிட்டத்தட்ட அதே மாதிரியான ஒரு சூழலில் நிற்கிறோம்.

    சார்ஸ் போன்றே இம்முறையும் சீனாதான் துவக்கமாகி இருக்கிறது. 2019 ஆம் ஆண்டின் கடைசி நாள், சீனாவின் ஹுபெய் (Hubei) மாகாணத்தின் தலைநகரான வுஹான் (Wuhan) நகரத்தில், பலபேர் நிமோனியாவால் பாதிக்கப்படுகிறார்கள். வழக்கத்துக்கு மாறாக அதிகம் பேர் ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து தொற்றுநோய் தாக்கி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டால் அது உலகம் முழுவதும் கவனத்தை ஈர்க்கும்.

    அமெரிக்காவின் நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையன் (Center for Disease Control) உடனடியாகக் களமிறங்கி, வுஹான் மாகாணத்தில் இருக்கும் ஒரு மீன் மற்றும் இறைச்சிக் கூடமே இந்த நோய்த் தொற்றுகளுக்கான ஆரம்பப் புள்ளி என்று கண்டுபிடித்து அறிவிக்கிறார்கள். உடனடியாக அந்தச் சந்தை மூடப்படுகிறது.

    அடுத்த ஒரு வாரத்துக்கும் தீவிர ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, ஜனவரி 9 ஆம் தேதி, உலகச் சுகாதார நிறுவனம் நோய்க்குக் காரணமான வைரசைக் கண்டுபிடித்து அறிவிக்கிறார்கள்.

    ஜனவரி 11 ஆம் தேதி, இந்த வைரஸ் தாக்குதலினால் முதல் உயிரிழப்பு ஏற்படுகிறது. ஜனவரி 23 ஆம் தேதி மொத்த வுஹான் நகரமும் முடக்கப்படுகிறது.

    ஒரு நகரம், அதுவும் ஒரு மாகாணத்தின் தலைநகரம் முடக்கப்படுவது என்பது கற்பனைக்கு எட்டாத செயல். எவ்விதமான வாகன, விமானப் போக்குவரத்தும் நகருக்குள் செல்லவோ, வெளியேறவோ முடியாது. முக்கியமான நெடுஞ்சாலைகள் நகரத்தின் வழியே இருக்கிறதெனில் நகரத்தைச் சுற்றியபடிச் செல்லவேண்டும்.

    இந்த வைரசின் மரபணுவை ஆராய்ந்து அதன் பூர்வீகத்தையெல்லாம் தேடியாயிற்று. இந்த வைரஸ் புதிது. இதற்கு முன்னர் நம்மைத் தாக்கியதற்குச் சான்றுகள் இல்லை. இது புதிது என்பதற்காக novel Coronavirus 2019 சுருக்கமாக nCoV 2019 என்று பெயரிட்டிருக்கிறார்கள். அதென்ன கரோனாவைரஸ்?

    வைரஸ்களின் வடிவத்தைக் கொண்டு வைக்கப்பட்ட பெயர் அது. வைரசின் பரப்பில், சூரியன் அல்லது நிலவைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் தெரிவதுபோல ஒரு புரத ஓடு உண்டு. அதிதிறன் வாய்ந்த நுண்ணோக்கிகளின் வழியே அந்த வைரசைப் பார்த்தால் அந்த வளையங்கள் துல்லியமாகத் தெரியவரும். சூரியன் அல்லது நிலவின் வெளி ஒளிவட்டத்துக்கு Corona என்று பெயர். அதைவைத்துத்தான் இந்த வைரசுக்கும் பெயரிடப்பட்டிருக்கிறது.

    கரோனாவைரஸின் இந்த குறிப்பிட்ட வகையைத்தான்

    Enjoying the preview?
    Page 1 of 1