Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanaiyazhi - March 2021
Kanaiyazhi - March 2021
Kanaiyazhi - March 2021
Ebook165 pages52 minutes

Kanaiyazhi - March 2021

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

December 2020 month issue of Kanaiyazhi Magazine.
Languageதமிழ்
Release dateDec 21, 2021
ISBN6580109507273
Kanaiyazhi - March 2021

Read more from Kanaiyazhi

Related authors

Related to Kanaiyazhi - March 2021

Related ebooks

Reviews for Kanaiyazhi - March 2021

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanaiyazhi - March 2021 - Kanaiyazhi

    https://www.pustaka.co.in

    கணையாழி மார்ச் 2021

    மலர்: 55 இதழ்: 12 மார்ச் 2021

    Kanaiyazhi March 2021

    Malar: 55 Idhazh: 12 March 2021

    Author:

    ம.ரா

    Ma. Raa

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    வெற்றி பெற...!

    திமுக தலைவருக்குப்

    பிறந்தநாள் வாழ்த்துகள்!

    ஒரு மொழிக்கு ஒரு நாடு என்பதும்

    ஒரு நாட்டுக்கு ஒரு மொழி என்பதும்

    பல நாடுகளில் ஒரு மொழி என்றும்

    ஒரே நாட்டில் பல மொழிகள் என்றும்

    ஒரு மதத்திற்கு ஒரு நாடு என்பதும்

    ஒரு நாட்டிற்கு ஒரு மதம் என்பதும்

    பல நாடுகளில் ஒரு மதம் என்றும்

    ஒரே நாட்டில் பல மதங்கள் என்றும்

    கால ஓட்டத்தில் மாறிக்கொண்டே இருக்கின்றன.

    மாற்றங்களுக்கு

    ஈடுகொடுக்க இயலாமல்

    உலக வழக்கை

    இழந்து கொண்டிருக்கும்

    கட்சிகள் மத்தியில்

    நவீனத்தை உள்வாங்கிக் கொண்டு

    இயங்கிவரும் இயக்கமாகத் திமுக!

    அறிஞர் அண்ணா காலத்தில்

    தரையிலிருந்து மேல் எழுந்து

    ஒருபக்கத் தோளில் பறக்கத் தொடங்கியது

    கருப்பு சிவப்புத் துண்டு!

    அது

    தமிழர்களின் சுயமரியாதையின்

    எழுச்சி வெளிப்பாடு!

    கலைஞர் காலத்தில் அது

    கழுத்தைச் சுற்றி மாலையானது.

    கலைஞரின் முதுகுவலிக்கு

    ஒத்தடமானதோடு தமிழர்களின்

    முதுகுத் தண்டையும் நிமிரச் செய்தது!

    பின்னர் துண்டு சால்வையாகி

    தன்மானத்திற்கு மரியாதையானது.

    அண்ணா காலத்தில்

    திமுக வே இளைஞர் அணிதான்.

    பின்னர்

    தலைவர்கள் தலைமுறை தாண்டி

    இயக்கம் வளர

    இளைஞர் அணி தேவைப்பட்டது.

    அப்போது துண்டு கைக்குட்டை ஆனது!

    இப்போது கருப்பு சிவப்பு

    தொப்பியாகி இருக்கிறது.

    எல்லோரும் மேடைகளை மட்டும்

    நம்பியிருந்த போது

    எழுதப் படிக்கத் தெரியாதவர்கள்

    அதிகம் இருந்த போதும்

    அச்சு ஊடகத்தில் கட்சி வளர்த்தது -

    நாடகத்தைக் கடந்து

    திரைக்குக் கூடிய மக்களிடம்

    மாற்றுச் சிந்தனைகளை விதைத்தது -

    காட்சி ஊடகச் செல்வாக்கில்

    ஒவ்வொரு வீட்டுக்குள்ளும்

    தொலைக்காட்சிப் பெட்டியில்

    இயக்கப் பரப்புரை நடத்துவது -

    தனிநபர் ஊடகமாக சமூக ஊடகம்

    தலையெடுக்கிற போது

    செயல்வீரர் செயலி என்று

    நவீனத் தொழில் நுட்பத்தைக்

    கையில் எடுப்பது -

    முரசொலி மட்டும் இருந்த கைகளில்

    ஐ போன், ஐ பேட் என்று

    கால மாற்றங்களோடு

    கைகோர்க்கும் இயக்கத்தின்

    நவீன குறியீடாகத் திமுக தலைவர்!

    குறை சொல்லத் துடிப்பவர்களையும்

    தலை வணங்கச் சொல்லும்

    உழைப்பு!

    பெரும்பாலும் படுத்தே கிடந்து

    ஓய்வெடுக்கும் கோயில் நந்திகூட

    உழைக்கத் தயாராய்

    நின்றுகொண்டிருக்கிறது

    தந்தை கலைஞர் வளர்ந்த

    திருவாரூரில்!

    பங்குனி உத்திரத் திருவிழா முடிந்து

    வீட்டுக்குப் போனவர்

    விழாவுக்கு வந்தவர்களால்

    தீட்டுப்பட்டிருக்கும் என்று

    திண்ணையில் படுத்தாராம்

    சிவபெருமான் கனவில் வந்து

    திருவாரூரைத் தொட்டவருக்குத்

    தீட்டு இல்லை என்று கண்டித்தாராம்!

    கடவுளைச் சொல்லித் தீண்டாமையைக்

    கண்டித்த ஊர் திருவாரூர்!

    சோமாசி மாற நாயனாருக்குக்

    கழுத்தில் செத்துப்போன

    கன்றைச் சுமந்து கொண்டு

    கழுத்தில் கயிறு கட்டி

    நான்கு வேதங்களையும் நாய்களாக்கி

    தனக்கு முன்னே நடக்கவிட்டு

    இருபக்கமும் விநாயகரும் முருகனும்

    இரு குழந்தைகளாக நடந்துவரத்

    தலையில் கள் சுமந்து வெட்டிச்சியாக

    மனைவி பார்வதி கூட வரச்

    சிவபெருமானும்

    வெட்டியானாகக் காட்சிதந்த ஊர்

    தாய் வளர்ந்த திருமாகாளம்!

    இப்போதும் ஆண்டுதோறும்

    வெட்டியானாக வரும்

    சிவபெருமானை வரவேற்கிறது

    திமுக தலைவரின் பாட்டி வீடு

    இப்படிப்

    புராணங்களும் கூடப்

    பகுத்தறிவுக்கு ஆட்படும்

    கதைகளின் ஊர்கள்

    திமுக தலைவரை வளர்த்திருக்கின்றன.

    இதோ அறிவித்து விட்டார்கள்

    தேர்தல் தேதி!.

    அறிவிக்கும் முன்பாகவே

    அரசியல் கட்சிகளின்

    தேர்தல் திருவிழா!

    கோயில் விழாவுக்குக்

    கொடி ஏற்றம் நடப்பது போல

    அங்கங்கே

    அரசியல் கட்சிகளின் கொடிகள்

    கூட்டம் வரும் முன்பே

    கொடிகளின் கூட்டம்!

    களைகட்டுகின்றன

    கட்சிகளின் பேரத்தில்

    தேர்தல் திருவிழா சந்தைகள்!

    போட்டிகள் எப்படி இருந்தாலும்

    வெற்றி தோல்வி இயல்பு என்று

    கட்சிகள் கருதலாம்.

    ஆனால்

    ஜனநாயகத்திற்கு

    வெற்றி மட்டுமே இயல்பாக வேண்டும்

    எனவே இந்தத் தேர்தலில்

    ஜனநாயகம்

    வெற்றிபெற வாழ்த்துவோம்! 

    அன்புடன்

    ம.ரா

    ***

    உள்ளடக்கம்

    வெற்றி பெற...!

    கட்டுரை - விவேக் கணநாதன்

    சிறுகதை - பா.செயப்பிரகாசம்

    கவிதை - ப.தனஞ்ஜெயன்

    கட்டுரை- கவிஜி

    கவிதை - ஆர். வத்ஸலா

    சிறுகதை - கபிலன் சசிகுமார்

    நினைக்கப்படும் - மரன்

    கட்டுரை - ஜா. திக்லா தங்கமயில்

    கவிதை - மு.முருகேஷ்

    சிறுகதை - கா.சி.தமிழ்க்குமரன்

    கவிதை – சுப்ரா

    கட்டுரை - சோ. ஷைன்சன்

    கவிதை - புதுகை கனராஜ்

    சிறுகதை - விக்னேஷ் குமார்

    கவிதை - மு.முபாரக்

    கட்டுரை- கோ.லீலா

    கவிதை -  உடுமலை கி. ராம்கணேஷ்

    சிறுகதை - செய்யாறு தி.தா.நாராயணன்

    கவிதை -  ஸ்ரீகா

    கவிதை -  ந.சிவநேசன்

    கட்டுரை – உஷாதீபன்

    கவிதை - நவீன்.ஜெ

    கவிதை -க.சி.அம்பிகாவர்ஷினி

    கடைசிப் பக்கம் - இந்திரா பார்த்தசாரதி

    கட்டுரை - விவேக் கணநாதன்

    விவேக் கணநாதன்,.jpeg

    ஸ்டாலின்: களமும், வரலாறும்!

    அதிகாரம் என்பதை ஒரு அமைப்பின் இயக்க ஆற்றலாகக் கருதும் புரிதலே, ‘நிறுவன அதிகாரம்’ (Institutional Power) என்பது வெவ்வேறு சிறுசிறு கூறுகளின் கூட்டுச் செயல்பாடு என்ற புரிதலின் அடிப்படை. இந்தியா போன்ற ஒருநாட்டில் சாதி, மதம், இனம், மொழி எனப் பல அடுக்குகளிலிருந்து இயங்கும் ஜனநாயக அடிப்படையிலான அதிகாரத்தைக் கொண்டு அமைப்பை நிர்வகிக்கவும், திருத்தவும், செயல்படவும் வைக்க நிறுவன அதிகாரத்தின் இயல்பை அறிந்துகொள்வது மிக முக்கியம்.

    20-ஆம் நூற்றாண்டில் தமிழ் நிறுவன அதிகாரத்தை இலக்காக வைத்து உருவாக்கப்பட்ட மிகச்சிறந்த கட்டமைப்பு திமுக மட்டுமே. தமிழ் நிறுவன அதிகாரத்தை நோக்கி மாற்றுப்பார்வைகளையும், புதிய கனவுகளையும் உருவாக்கியவர் அறிஞர் அண்ணா. அண்ணாவின் கோட்பாடுகளுக்கான அமைப்பு வடிவமாகவே திமுக உருவாக்கப்பட்டது. எனவே தான் திமுகவில் நடக்கும் அதிகார மாற்றங்கள், தேர்தலுக்காக இயங்கும் வாக்கரசியல் கட்சியின் மாற்றங்கள் என்பதைத் தாண்டிய, தமிழ் நிறுவன அதிகாரத்தோடு ( Institutional power of Tamil People ) சேர்ந்து பார்க்கப்பட வேண்டியவையாக இருக்கின்றது.

    அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, அண்ணாவின் சமகாலத்தில் அவரோடு இயைவான வளர்ச்சி கண்ட கருணாநிதி வசம் திமுக வந்தது. அண்ணாவின் கனவுகளுக்கு ஈடாக நிறுவன அதிகாரத்தைச் செயல்படவைக்கும் ஆற்றல் கருணாநிதியிடம் இருந்தது.

    001.jpg

    தனிப்பட்ட வகையிலும், கருணாநிதி தன் அரசியல் விதியாட்டங்களின் மையமாக ‘அமைப்பை மையப்படுத்திய அரசியல்’ என்பதைத்தான் வரித்துக் கொண்டார். ஒரு தேர்தல், ஒரு கூட்டணி, ஒரு சந்தர்ப்பம், ஒரு முன்னேற்றம், ஒரு வளர்ச்சி எனத் தற்காலிக இருப்புகளின் மீது தன் அரசியலைக் கட்டமைக்காமல், சமூகம் - இனம் - சித்தாந்தம் - இயக்கம் என்கிற ஒட்டுமொத்த அமைப்பின் இயக்கத்தோடு தன் அரசியல் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர் கருணாநிதி. அதனால் தான், கருணாநிதி மீதான விமர்சனங்களும் இதே தளத்தில் இருந்து எழுந்தன.

    மொத்த சமூக அமைப்பின் மீது கருணாநிதிக்கு இருந்த பிரக்ஞையால்தான், அரசியலதிகாரம் அவரிடம் கிடைத்தபோது அவர் அமைப்பைத் திருத்துபவராகவும், புதிய நிறுவனங்களை உருவாக்குபவராகவும்,

    Enjoying the preview?
    Page 1 of 1