Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Tharangini
Tharangini
Tharangini
Ebook229 pages1 hour

Tharangini

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை ‘ரன் மெஷின்’ என்றால், 83 வயதிலும் ஓயாமல் எழுதி வரும், மூத்த படைப்பாளர் மகரிஷியை, ‘எழுத்து இயந்திரம்’ என்றே சொல்லலாம். இதுவரை, 130 நாவல்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 60க்கும் மேற்பட்ட கட்டுரைகள் என 22 ஆயிரம் பக்கங்களுக்குமேல் எழுதிக் குவித்துள்ளார். இன்றும் அவரது பேனா மையின் ஈரம் காயவே இல்லை.

இவர் எழுதிய பல நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டு உள்ளன. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய, ‘புவனா ஒரு கேள்விக்குறி’ (1977) படத்தின் கதை மகரிஷியுடையது.

தவிர, ‘பனிமலை’ என்ற நாவல், ‘என்னதான் முடிவு?’ (1965) படமாக ஆக்கம் பெற்றது. ‘பத்ரகாளி’ (1976), ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு‘ (1977), ‘வட்டத்துக்குள் சதுரம்‘ (1978), ‘நதியை தேடிவந்த கடல்’ (1980) ஆகிய திரைப்படங்களும் மகரிஷியின் நாவல்களை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டன.

தமிழில் கல்கி, ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், சுஜாதா போன்ற நாவலாசிரியர்களின் படைப்புகளில் ஒருசில, திரைப்படமாக உருவாக்கம் பெற்றுள்ளன. எனினும், தனிப்பட்ட ஒரு எழுத்தாளரின் நாவல்கள் அதிக எண்ணிக்கையில் திரைமொழியில் சொல்லப்பட்டது என்றால் அது மகரிஷி உடையது மட்டுமே. இதை பெருமைக்குரியதாக சொல்லும் அதேநேரம், அதிகளவில் கதை திருட்டுக்கு உள்ளானதும் மகரிஷியின் படைப்புகள்தான்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580123803332
Tharangini

Read more from Maharishi

Related to Tharangini

Related ebooks

Reviews for Tharangini

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Tharangini - Maharishi

    http://www.pustaka.co.in

    தரங்கிணி

    Tharangini

    Author:

    மகரிஷி

    Maharishi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/maharishi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    மகன் கோபால் சொன்னதைத் தியாகி அலமேலு ஏற்கவில்லை. மகனுடைய முடிவு அவளுக்கு எரிச்சல் ஊட்டியது.

    எனக்குச் சரியென்று படவில்லை. நீ எந்தக் கட்சிக்குத் தேர்தல்லே நிற்க டிக்கெட் கேட்க முடிவு பண்ணியிருக்கியோ, இப்போ அந்தக் கட்சியிலே தர்மம் இல்லை. நீதியில்லை.. சத்தியம் இல்லை. அதோடு அக்கட்சியில் காந்தி வகுத்த அகிம்சை இல்லை. இவ்வளவு இல்லாத அந்தக் கட்சி இன்னும் நம் நாட்டில் இருக்கு என்றால் அதிகார வர்க்கத்தைக் கையில் வைத்துக்கொண்டு அதை வளர்க்கிறார்கள். தியாக சீலர்களால் உதயமான புனிதம் நிறைந்த கட்சியின் இன்றை நிலையைப் பார்த்துத்தான் நான் சொல்கிறேன். இனி நமக்கெல்லாம் அங்கே வேலை இல்லை. பரிசுத்தமான சத்தியாக்கிரகிகளுக்கு அங்கே இடம் இல்லை. உண்மையான ஜாதி வித்தியாசம் பாராட்டாத அரசியல் தியாகிகளுக்கு வேலை இல்லை. நான் ஜாதி வித்தியாசம் பேசறதா நினைக்காதே. உன்னை விட இந்தக் கட்சியில் பற்றும் பாசமும் கொண்டவ நான். தென்னாட்டில் அரிஜன ஆலயப் பிரவேசத்தைத் துணிந்து ஆதரிச்சு, கட்டுரை எழுதி அன்று ஏராளமான சனாதனிகளோட எதிர்ப்பையும், விரோத்ததையும் ஏற்றுக் கொண்டவ நான். வேதாரண்யம் உப்புச் சத்தியாக்கிரகத்தின்போது, உங்கப்பா வேதாரண்யம் போறப்போ, நானும் கூட வருவேன்னு அடம் புடிச்சேன். அப்பாவைச் சிறைபுடிச்சிண்டு போறப்போ நானும் வரேன்னு. போட்டுக் கொண்டிருந்த எல்லா நகைகளையும் கழட்டிக் கொடுத்துவிட்டு வெள்ளைக் கதர்ப் புடவையுடன் ஜெயிலுக்குப் போனவ நான். ஒரு நாளைக்கு ஒரு குஞ்சம் நுால் நூக்காம சாப்பிடக்கூட மாட்டேன்!

    கோபால் இடத்தை விட்டு எழுந்தார்.

    அந்தக் காங்கிரஸ் இல்லே இன்று... - தளர்வோடு அங்கே கிடந்த நாற்காலியில் உட்கார்ந்தாள் அலமேலு.

    "அம்மா நீ சொல்ற மாதிரி எவ்வளவு பெரிய தியாக வரலாற்றிலே பிறந்த கட்சி இது. எவ்வளவு நன்மைகளையெல்லாம் செஞ்சிருக்கு. மக்களுக்குப் பயன்தரவே உதயமான கட்சியம்மா இது. எவ்வளவு பெரிய தியாக வரலாற்றிலே........

    அலமேலு ஏளனமாகச் சிரித்தாள். '

    எந்தப் புஸ்தகத்திலே படித்துவிட்டு அளக்கறே? உனக்குத்தான் இந்த வரலாறெல்லாம் புடிக்காதே. உன்னோட இந்தக் காங்கிரஸ் மோகமெல்லாம் இந்தப் பத்து வருஷங்களாகத்தானே. அந்தக் கட்சியின் வரலாறோட வளர்ந்தவ நான். நீ காலேஜிலே படிக்கறப்ப அப்பாவை எதிர்த்துப் பேசுவே. உன் அறையிலே மாட்டியருந்த காந்தி படத்தைக் கழற்றி வெளிக் கூடத்திலே மாட்டினவன் தானே நீ? அதையெல்லாம் மறந்துடுவேன்னு நினைக்கிறாயா? மறக்கவே மாட்டேன். அப்படிப்பட்டவன் திடீரென்று காங்கிரஸ் தியாக வரலாற்றைப் பத்திப் பேசுகிறாய்........"

    கோபாலன் தாயாரைப் பார்த்து நகைத்தார்.அந்தக் குடும்பத்தில் அலமேலு அம்மாள் ஓர் உதாரணமானவள். புராதன பாரம்பரியம் நிறைந்த குடும்பத்தின் அரசியல் பிரவேசம் அக்காலத்தில் மிக முக்கியமான நிகழ்ச்சிகளில் ஒன்று. அதிலும் அலமேலு அம்மாளின் தீவிரமான அரசியல் தமிழகத்தில் பெண்கள் மத்தியில் ஒரு புதிய உத்வேகத்தைக் கிளப்பிவிட்ட நிகழ்ச்சியாக அரசியல் சரித்திரத்தில் குறிக்கப்பட்ட ஒன்றாகும்.

    வெள்ளையனின் எதிர்ப்பைவிட உறவினர்களின் எதிர்ப்புதான் அவளைக் கொஞ்சம் நிலை தடுமாற வைத்தது. பரிசுத்தமான சத்தியாக்கிரக உள்ளத்தைக் கணவனே அங்கீகரித்துக் கொண்டு விட்ட போது மலையென எதிர்ப்பட்ட மற்ற எதிர்ப்புகள் அவளுக்கு வெறும் தூசு போலாயின. –

    தனி நபர் சட்ட மறுப்பு இயக்கம், சத்தியாகிரகம், உண்ணாவிரதம் போன்ற சாத்விகப் போரில் தீவிரம் கொண்ட பெண் பிரதிநிதியாக அலமேலு அன்று திகழ்ந்தாள். சட்ட மறுப்பு இயக்கத்திலே ஈடுபட்டுச் சிறை சென்றாள். சத்தியத்துடன் நடந்து கொள்வது, வெள்ளையன் நிர்வாகமே ஆனாலும் சிறை அதிகாரிகளுடன் ஒத்துழைப்பது, கட்டுப்பாட்டோடும், பண்போடும் நடந்து மற்றவருக்கு உதாரணமாக இருப்பது, பாரபட்சமின்றி வரும் சலுகைகளை மட்டும் சிறையில் ஏற்பது. அவசியம் ஏற்படும்போது உரிமைகளைக் கேட்டுப் பெறுவது, நமக்குச் சிறையில் ஒதுக்கப்பட்ட கடமைகளைச் செய்வது என்று காந்திஜி, சிறை செல்லும் சத்தியாகிரகிகளுக்கு வகுத்துக் கொடுத்த நியதிகளைக் கட்டுப்பாட்டுடன் மேற்கொண்டு சிறை சென்றவள் அவள்.

    திருவாங்கூரில் உள்ள வைக்கம் என்ற ஊரில் உள்ள கோயிலைச் சுற்றி உள்ள ரஸ்தாக்களில் தீண்டாதவர்களை நுழைய விடாமல் தடுத்த சில சனாதனிகளைப் பணிய வைக்க 1924-1925-ஆம் ஆண்டு நடந்த வைக்கம் சத்தியாகிரகத்துக்கு அலமேலு தன் ஊரான புதூரிலிருந்த இருபது பேர்களுக்குத் தலைமை வகித்து அழைத்துச் சென்று வைக்கத்திலே அறப்போர் செய்து, சில குண்டர்களால் தாக்கப்பட்டு, அந்த ரணகாயங்களோடு சிறை சென்றவள். இந்தச் சாதாரண விஷயத்துக்காக இப்படி வீண் ஆர்ப்பாட்டம் செய்யலாமா, மன்னிப்புப் பெற்று இனி இவ்விஷயங்களில் தலையிடுவதில்லை என்று எழுதிக் கொடுத்தால் விடுதலை அளிப்பதாக அன்றைய திருவாங்கூர் சமஸ்தானம் அவளுக்குச் சலுகை காட்டியது. அதற்கு அவள், வைக்கம் சத்யாக்கிரகம் சாதாரண சத்யாக்கிரகம் இல்லை, போராடிக் கொண்டிருக்கும் சுயராஜ்யப் போராட்டத்தை விட எந்த வகையிலும் குறைந்த முக்கியத்துவம் பெற்றதன்று என்று தைரியமாகச் சொல்லிவிட்டாள். அப்படிப்பட்ட அலமேலுவுக்குக் காங்கிரஸின் சரித்திரம் பிறர் சொல்லித் தெரியவேண்டும் என்பதில்லை.

    தாயாரின் முகத்திலே தேங்கி நின்ற சிறு கலக்கத்தைக் கண்ணுற்ற கோபாலன் அருகில் வந்து நின்றார்.

    'அம்மா, உன்னோட தியாக வாழ்வுக்கு முன்னால நான் நிக்கவே அருகதை இல்லாதவன். நான் தியாகம் செய்யா விட்டாலுங்கூடத் தியாகப் பரம்பரையிலே பிறந்திருக்கோம் என்கிற பெருமை இப்பவெல்லாம் அதிகமாகவே இருக்கு, இதையெல்லாம் மனசுலே வைத்துக் கொண்டு எனக்கு அந்தப் பெருமையைத் தர முன் வந்திருக்கிறார்கள். அந்தப் பெருமையை அவர்களே உணர்ந்து கௌரவம் கொடுக்க வரும்போது, அதை உதறித் தள்ளளனுமா?"

    அலமேலு அதைக் கேட்டுவிட்டு மெளனமாக நின்றாள்.

    "நான் இதை ஏற்கமாட்டேன் கோபாலா! : நம் குடும்பத்தின் தியாக பாரம்பரியத்தை அவர்கள் இப்பொழுது ஓர் ஆயுதமாகப் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறார்கள். தியாக பரம்பரையை ஆதரிக்கணும்னா தியாகி வெங்கடாசலத்தை நிறுத்தி வைக்கட்டுமே! ஜெயிக்க வைக்கட்டுமே! தியாகி வெங்கடாசலம் என்ன சாதாரண ஆளா? நேருக்கு நேர் நின்று வெள்ளைக்காரப் போலீஸ் மீது அக்னித் திராவகத்தை வீசியவர். கால்முடம் எப்படி உண்டானது தெரியுமா? ஓடும்போது போலீஸ்காரன் சுட்டுட்டான். நல்ல வேளை கால் போகலே! நொண்டல் மட்டும் நிரந்தரமாய்ப் போச்சு! அவரைத் தேர்தல்ல நிறுத்தறதுதானே! அவரை நிறுத்த மாட்டா! ஏன்னா அவர் ஏழை! பணம் இல்லாதவர். உன்னைப் போல பஸ் ரூட் பர்மிட் இல்லாதவர். உண்மையான காங்கிரஸ்காரர். அவர்கிட்டே இருக்கிற ஐஸ்வர்யம் உண்மையான காந்தீயந்தான். ஆனா அதுதான் இப்போ தேர்தலுக்குப் பயன்படறதில்லையே! பண முதலைகள் தான் வேணும் அவர்களுக்கு. இவர்கள்தான் சோஷலிஸத்தைக் கொண்டு வரப் போகிறவர்கள், காந்திஜி, ராஜாஜி, விஜயராகவாசாரியார் போன்றவர்கள் பெயரைச் சொன்னாலே துவேஷம் பாராட்டற கூட்டத்தான் இன்னிக்குக் காங்கிரஸ்ல அதிகமா இருக்கிறார்கள். கேட்டால் புதிய தலைமுறை என்கிறார்கள்.

    "காந்தி காலத்திலே இருந்த மாதிரியா உலகம் இன்னிக்கு இருக்கு? நாளுக்கு நாள் தேவைகள் பெருகிக் கொண்டே போகின்றன. புதிய தேவைகளைப் புதிய சமுதாய, அரசியல் அமைப்பிலே தானே பெற முடியும். ஏழைகளுக்கு வசதி - வளமான வாழ்க்கைத் திட்டம். பேதமின்றி உழைப்பையும், அதன் பலனையும் பரவலா விநியோகிக்கும் முறை ஜனநாயக சோஷலிஸ பாணியலே சமுதாய சீரமைப்பு.....

    சத்தியாகிரகி அலமேலு சிரித்தாள். "சோஷலிஸத்தைப் பற்றி எனக்கும் கொஞ்சம் தெரியும். நான் படித்துவிட்டுக் கீழே போட்டதைத்தான் இப்போ நீ கையில் எடுத்துக் கொண்டு படிக்கிறே. சோஷலிஸம் என்றால் என்ன அர்த்தமோ அதில்லாமல் ஏதோ ஓர் 'மோசடி' போல ஆக்கிவிட்டார்கள், நமது சோஷலிஸ சிற்பிகள், அந்த மோசடியிலே தான் இன்று காலம் ஓடுகிறது. அந்த மோசடியான வாக்கியத்தை வைத்தே மக்களை ஏமாற்றுவது சுலபமாகப் போய்விட்டது. 'சோஷலிஸம்' என்று நீங்கள் ஜனங்களுக்குக் கூறுகிற லட்சியம் வேறு உங்களுக்கென அதன் மூலம் அடைய விரும்பும் லட்சியம் வேறு. ஆள்கிற கட்சிக்கும், கட்சிக்காரர்களுக்கும் சர்வாதிகாரம் வேண்டும் என்பதுதான் உங்களுடைய சோஷலிஸத்தின் உள்நோக்கம். சீரான சமவாய்ப்பு, வாழ்க்கை என்று கவர்ச்சிகரமாகப் பேசினால்தான் நீங்கள் கட்டி இருக்கின்ற பொய்த் தேரை மக்கள் இழுக்க வருவார்கள். அந்தப் பொய்த் தேரில் தெய்வம் இல்லை என்று மக்கள் புரிந்துகொண்டு விட்டால் போதும். பிறகு வடக்கயிற்றைக் கீழே போட்டுவிட்டுப் போய்விடுவார்கள்.

    சுதந்திரம் வாங்கினதே மக்கள் சுபிட்சம், சமவாய்ப்பு, சட்டத்தின் சீரான ஆட்சி இவற்றுக்காகத்தான். காந்தி கண்ட ராம ராஜ்ய கனவும் இதுதான். அவர் சோஷலிஸக் கனவு காணவில்லை. அந்த ஆன்மிகவாதியின் கனவைக் கலைத்து விட்டு இன்று கட்சியை ஒரு தனிநபர் சர்வாதிகாரத்துக்குள் கொண்டு போய்ச் சேர்த்து விட்டார்கள். காங்கிரஸிலே பரிசுத்தமான ஆத்மிகவாதி யாரும் இல்லே!" நீண்ட நேரம் பேசியதால் உண்டான களைப்பைப் போக்கிக் கொள்ளச் சிறிது நேரம் மௌனம் சாதித்தாள். பிறகு,

    ஒரு தரத்துக்கு நாலு தரமா யோசனை செய்; எனக் கென்னமோ உன் முடிவு சரியானதா படலே என்றாள்.

    கோபாலின் மனசில் என்றுமே எந்த அரசியலும் ஆழமாக வேரூன்றினதில்லை. சில சமயங்களில் அந்தந்தச் சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி பட்டும் படாமலும் சில அரசியல் கொள்கையின் ஆதரவாளன் போலக் காட்டிக் கொள்வார். அதுவும் அவ்வப்போது தேவைப்படும் ஆதாயம் கருதித்தான்.

    தியாகி அலமேலுவுக்கும், அவள் மகன் கோபாலனுக்கும் இடையே அப்படியொரு தலைமுறை இடைவெளி. அதிலும் ருசிகண்ட பூனையாகக் காங்கிரஸில் சேர்ந்திருப்பது போல காண்பித்து ; கொள்வதில் அதிக லாபம் இருப்பதாகத் தோன்றவே அதைக் கொஞ்சமம் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். அதில் அவனுக்கு இன்னொரு பெருமை. அதுவாகவே வந்து சேர்ந்தது. அந்தப் பெருமை அவர் தாயார் அலமேலு அம்மாளின் தியாக வாழ்வினால் சேர்க்கப்பட்ட பெருமை. 'தியாக குடும்பம்' - என்ற அந்தப் புனிதமான கேடயத்தின் மறைப்பில் அவர் தேடிக் கொண்ட லாபங்கள் ஏராளம். அலமேலு அம்மாள் காங்கிரஸை உதறித் தள்ளி எத்தனையோ நாட்களாகி விட்டன. அதில் கட்சி வெறியும், ஆதிக்கப் போட்டிகளும், பதவி மோகங்களும், தனி இனப்பற்றும் மலிந்துவிட்டன. அந்த ஸ்தாபனத்தை யாரோ சிலர் கையிலே வைத்துக் கொண்டிருந்தார்கள். நீ கட்சிக்கு வேலை செய்தா, உனக்கு ரெண்டு பர்மிட்

    நீ இவ்வளவு நன்கொடை கொடுத்தா கமிட்டித் தலைவர் என்ற ரீதியில் அதை ஒரு பண்ட மாற்றும் சாலையாக்கி விட்டார்கள். இனி மயான காந்தியவாதிக்கு இடம் இல்லை என்பது அவள் முடிவு. எனவே தனது அங்கத்தினர் பதவியைக் கூடப் புதுப்பித்துக் கொள்ளாமல் ஒதுங்கி விட்டாள்.

    பதவி ஆசை என்பது காங்கிரஸை ஆட்டி வைக்கும் நாளடைவில் அது மலிந்து புனிதமான ஸ்தாபனத்தை அழித்துவிடும். அப்படி ஒரு நிலை காங்கிரஸுக்கு வருமாயின் கதர் குல்லாய்களைக் கண்டால் மக்கள் ஓட ஓட அடிப்பர் மக்கள் மத்தியில் அது பெருவாரியான செல்வாக்கைக் கட்டாயம் இழக்கும் - என்று

    அன்று காந்திஜி சொன்ன தீர்க்க தரிசனமான வார்த்தைகளை நினைவு கூர்ந்த நிலையில் வயதான போதிலும் அவ்வப்போது பொது இடங்களில் பேசும் போதெல்லாம் அதையே வலியுறுத்திப் பேசினாள். ஸ்தாபன ரீதியில் அவளுடன் ஒட்டக் கொண்டு நின்ற பலர் தியாகி அலமேலு அம்மாள் இப்படிப் பேசத் தலைப்பட்டவுடன் அவளை விட்டு ஒதுங்கி விட்டனர். காங்கிரஸின் சீர் கேட்டை அவள் எடுத்துச் சொல்லச் சொல்ல அவள் காங்கிரஸ்காரர்களால் கண்டனத்துக்கு ஆளாக்கப்பட்டாள். அதற்கு அவள் அஞ்சவில்லை.

    வீர நெஞ்சம் கொண்டவள் அவள். அவ்வளவு சீக்கிரத்தில் அவளை யாரும் மாசு படுத்திவிட முடியாது. இந்த மாதிரி காலக்கட்டத்தில்தான் அவளுடைய மகன் கோபாலனை அவர்கள் அருமையான ஆயுதமாகப் பயன்படுத்திக் கொண்டனர். சின்ன மீனைப் போட்டுப் பெரிய மீனைப் பிடிப்பது போல ஒரு சிறு பதவியைக் கொடுப்பதன் மூலம் ஒரு பெரிய பணக்காரரைத் தன் பிடிக்குள் சிக்க வைத்துக் கொள்ளலாம் என்ற தத்துவத்தின் வலையில் கோபாலன் விழுந்துவிட்டார். அவரால் கட்சிக்கு லாபம். கட்சி கொடுக்கும் பதவியால் அவருக்கு லாபம் என்ற இரு முனை

    Enjoying the preview?
    Page 1 of 1