Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Koodu Sellum Paravai
Koodu Sellum Paravai
Koodu Sellum Paravai
Ebook191 pages1 hour

Koodu Sellum Paravai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை ‘ரன் மெஷின்’ என்றால், 83 வயதிலும் ஓயாமல் எழுதி வரும், மூத்த படைப்பாளர் மகரிஷியை, ‘எழுத்து இயந்திரம்’ என்றே சொல்லலாம். இதுவரை, 130 நாவல்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 60க்கும் மேற்பட்ட கட்டுரைகள் என 22 ஆயிரம் பக்கங்களுக்குமேல் எழுதிக் குவித்துள்ளார். இன்றும் அவரது பேனா மையின் ஈரம் காயவே இல்லை.

இவர் எழுதிய பல நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டு உள்ளன. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய, ‘புவனா ஒரு கேள்விக்குறி’ (1977) படத்தின் கதை மகரிஷியுடையது.

தவிர, ‘பனிமலை’ என்ற நாவல், ‘என்னதான் முடிவு?’ (1965) படமாக ஆக்கம் பெற்றது. ‘பத்ரகாளி’ (1976), ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு‘ (1977), ‘வட்டத்துக்குள் சதுரம்‘ (1978), ‘நதியை தேடிவந்த கடல்’ (1980) ஆகிய திரைப்படங்களும் மகரிஷியின் நாவல்களை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டன.

தமிழில் கல்கி, ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், சுஜாதா போன்ற நாவலாசிரியர்களின் படைப்புகளில் ஒருசில, திரைப்படமாக உருவாக்கம் பெற்றுள்ளன. எனினும், தனிப்பட்ட ஒரு எழுத்தாளரின் நாவல்கள் அதிக எண்ணிக்கையில் திரைமொழியில் சொல்லப்பட்டது என்றால் அது மகரிஷி உடையது மட்டுமே. இதை பெருமைக்குரியதாக சொல்லும் அதேநேரம், அதிகளவில் கதை திருட்டுக்கு உள்ளானதும் மகரிஷியின் படைப்புகள்தான்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580123803429
Koodu Sellum Paravai

Read more from Maharishi

Related to Koodu Sellum Paravai

Related ebooks

Reviews for Koodu Sellum Paravai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Koodu Sellum Paravai - Maharishi

    http://www.pustaka.co.in

    கூடு செல்லும் பறவை

    Koodu Sellum Paravai

    Author:

    மகரிஷி

    Maharishi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/maharishi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    ராஜேந்திரன் அந்த மெகானிகல் ஒர்க்க்ஷாப்பின் மூடப்பட்ட பெரிய இரும்புக் கதவின் முன் வந்து நின்றபோது இரவு மணி பத்திருக்கும்.

    கதவுதான் மூடப்பட்டிருந்ததே தவிர உள்ளே விளக்கொளியில் வேலை நடந்துகொண்டிருப்பதற்கான சப்த ஜாலங்கள் வந்துகொண்டிருந்தன.

    தெரு விளக்கின் ஒளி, முகத்தில் விழாதவாறு சுவர் மறைவில் நின்றுகொண்டு பெரிய இரும்புக் கதவை மெதுவாகத் தள்ளினான்.

    அது இடைவெளி விட்டுக்கொண்டது. வெளியே சுற்று முற்றும் பார்த்துவிட்டு அந்த இடைவெளியில் உடலை மட்டும் முதலில் உள்ளே திணித்துக்கொண்டான். கதவைப் பழைய படியே மூடிவிட்டுத் திரும்பினான். கதவைத் திறந்தவுடனேயே அந்த மோட்டார் பட்டறையின் விஸ்தாரமான திறந்தவெளி தெரிகிறது. தூரத்தில் ஆங்காங்கு சின்னதும் பெரிதுமாக கார்கள் நின்றுகொண்டிருந்தன. விளக்கொளியில் கார் ரிபேர் நடந்துகொண்டிருந்தது. பெரிய பென்ஸ் வண்டியின் அடியில் நூறு வாட்ஸ் மின்னொளியில் இரண்டு பேர் படுத்துக்கொண்டு பழுது பார்த்த வண்ணமிருந்தனர்.

    பிரயாணிகள் பஸ் ஒன்றின் உடம்பில் முன்பு பூசப்பட்ட வர்ணத்தைத் துடைத்து எடுத்துக் கொண்டிருந்தனர்.

    யாரிடமும் அதிக பேச்சில்லை, பழுது நடக்கும்போது உண்டாகும் உலோக உரசல்களின் சப்தம் தவிர.

    காரின் அடியில் படுத்துக்கொண்டு ஒருவன் ஒரு ஸ்பானரைக் கேட்டான்.

    எடுத்துக் கொடுத்த பையன், சரியான ஸ்பானரைத் தரவில்லை என்பதால், காரின் அடியில் இருக்கும் மெகானிக் பையனைத் திட்டினான்:

    போடா தேவடியா மவனே. அயோக்கிய கம்மினாட்டி. ரெண்டு வருஷமா வேல செய்யறான். பதினேழுக்கு இருபது ஸ்பானரை எடுடான்னா எதையோ எடுக்கறான்.

    பென்ஸ் லாரியின் அடியில் விளக்கொளியில் படுத்துக் கொண்டு திட்டும் மெகானிக்கின் வார்த்தையில் கொஞ்சம்கூட பிசிரில்லை.

    கதவைத் திறந்து கொண்டு நின்ற ராஜேந்திரன், ரிபேர் நடக்கும் இடத்திற்கு நேரிடையாக போகாமல் சற்றே மறைவாக அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களுக்கு நடுவே புகுந்து போனான்.

    டாய் வேலு. அந்த மடாடாரை சரிபண்ணிட்டியா? ஸ்டியரிங் வீல் இப்போ சரியா 'ப்ளே' கொடுக்குதா? பார்ட்டி வந்தாச்சு.

    ராஜேந்திரன் காதில் இது விழுந்தவுடன் அவன் வியப்புற்றான். மெதுவாக கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்ததை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள் என்று எண்ணிக்கொண்டிருந்தவனுக்கு அந்தக் குரல் ஆச்சரியத்தைக் கொடுத்தது!

    அல்லாம் பார்த்தாச்சு. கொஞ்சம் லூஸ் இருந்துச்சு; சரி பண்ணிட்டேன்

    எங்கோ ஒரு காரின் அடியிலிருந்து பதில் குரல் வந்தது.

    ஒரு ஷெட்டில் உட்கார்ந்திருந்த காதர் எழுந்து வந்தான். நீல நிற யூனிஃபார்மில் எண்ணைப்பிசுக்கு. தலை கலைந்திருந்தது. கட்டை குட்டையான உருவம்.

    அங்குள்ள மரத்தடியில் நின்றுகொண்டிருந்த மடாடார் வேனிடம் வந்தான்.

    ஏற்கனவே அதன் முன் ஆசனத்தில் ஏறி ராஜேந்திரன் அமர்ந்திருந்தான்.

    அதன் டிரைவர் ஆசனத்தில் ஏறி அமர்ந்த காதர் அதன் ஸ்டியரிங் வீலைச் சோதித்துக்கொண்டே அவனிடம் பேசினான்.

    "கார் வேணும்னு சொன்னியே, ரெடி பண்ணிட்டேன். இப்ப இதுதான் இருக்குது சார். நல்ல கண்டிஷன்லே இருக்கு. ஸ்டியரிங் வீல் மட்டும் கொஞ்சம் லூஸா இருந்துச்சு, அவ்வளவுதான் - என்றவன், இருளில் அவன் முகத்தைப் பார்த்தான்.

    அவர்களிடையே பல நிமிஷங்கள் அசாதாரணமான அமைதி நிலவியது.

    ஏன் ராஜா... நான் கேட்கறேனென்று வித்தியாசமா நினைக்காதே. என்னால உனக்கு எவ்வித ஆபத்தும் வராது. அதுவும் உறுதி. இப்போ எதுக்காக இப்படி வெளியே வந்திருக்கே.

    முக்கியமான வேலை ஒன்று இருக்கு காதர் அண்ணே.

    எந்த வேலயா இருந்தாலும் அதை அப்பறமா கொஞ்சநாள் தள்ளி பார்த்துக்கக் கூடாதா?

    அந்த வேலய தள்ளிப்போட முடியாது. உடனடியா கவனிக்கவேண்டும். இல்லேன்னா நான் எதுக்கு இப்படி அவசரம் அவசரமா வெளியே வரணும்?

    ஒனக்குதான் வெளியே ஏராளமான வேண்டாதவங்க, அவனவன் கண் கொத்திப் பாம்பு கணக்கா கவனிச்சுகிட்டு இருக்காங்க. இப்போ வெளியே வந்திருக்கே. வம்புலே மாட்டிகிட்டு பின்னால...

    இல்லே காதர். அதான் நான் என்னோட நடமாட்டத்தை ரொம்ப ரகஸியமா வச்சுக்கப்போறேன்.

    சரி, போயிட்டுவா. நல்ல வண்டியா ஒண்ணு கொடு. பெங்களூர் வரையிலே போவணும்ணு கார்த்தாலே டெலிபோன் பண்ணினே. அப்ப இதுதான் இருந்தது. இது மெட்ராஸ் வண்டி. மெதுவா குடுக்கலாம். எல்லா ரிபேரும் முடிச்சு ரெடிபண்ணித்தான் வச்சுருக்கேன். ஸ்டியரிங் வீலை மட்டும் மறுபடி கொஞ்சம் சரிபண்ணினேன். எடுத்துக்கிட்டுப் போ... நல்ல படியா காரியங்களை முடிச்சுட்டு விட்டுடு. வம்பு தும்பிலே மாட்டிக்காதே. அதுதான் உனக்கும் நல்லது. நீ இப்படி அவசரப்பட்டு வெளியே வந்ததை நான் சரின்னு சொல்லமாட்டேன். ஆனா, உன் விருப்பத்துக்குக் குறுக்கே நான் நிக்க விரும்பலே. எடுத்துக்கிட்டு பத்திரமா போ. டாங்கு நிறைய பெட்ரோல் போட்டிருக்கேன். ஆயில் லெவல் சரியா இருக்கு. காத்து சரியா இருக்கு. ஒரு ஸ்டெப்னி இருக்கு.

    பேசிக்கொண்டே காதர் கிழே இறங்கிக்கொண்டான்.

    நான் போயிட்டு வரேண்ணே . என் காரியம் நல்லபடியா நடக்கணும்ணு ஆசிர்வாதம்பண்ணு என்றான் டிரைவர் ஆசனத்தில் அமர்ந்துகொண்டே.

    நல்லபடியா நடக்கும். நீயும் உன்னுடைய நிலைமையை சரியா புரிஞ்சுகிட்டு நடந்துக்க...

    நீ சொல்றது புரியுது காதரு

    நான் வரேன்...

    அவன் மடாடார் வேனை மெதுவாக ஸ்டார்ட் செய்து கொண்டு பெரிய கேட்டைத்தாண்டி வெளியே வந்தான்.

    ஹோட்டல் ரேகாவின் முகப்பு, அலங்காரத் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. போகன் வில்லா தொங்கும் கொடிச்சரங்கள்போல வர்ணச் சரங்கள் மின்னின. பளபளக்கும் ஆண்டி கெரோஸிவ் அலுமினியம் வர்ணம் பூசப்பட்ட வெண்மை நிற பைப்புகளில் பளபளக்கும் ஸாட்டின் வர்ணக் கொடிகள், முக்கோண வடிவங்களில் பறந்தன. சிவப்பு, நீலம், வெளிர் நீலம், வெளிர் சிவப்பு, மஞ்சள், வெள்ளை, ஆரஞ்சு, லேசான காற்றில் கூட குலுங்கி நகைக்கும் ஜிகினாக்கள் யார்யாருக்கோ நல்வரவு கூறிக்கொண்டிருந்தன.

    உயர்ந்த ஐந்து மாடிக்கட்டிடம். ஐந்து நட்சத்திர ஹோட்டல். சுற்றிலும் வான்கள், பூந்தோட்டங்கள், நிலை கொள்ளாமல் வந்து பின் ஊர்ந்து கொண்டேயிருக்கும் டாக்ஸிகள், சுற்றிலும் வட்டம் வட்டமாக பூந்தொட்டிக் குவியல்கள். நீர் சுனை, நிர்வாண அழகியொருத்தி தன் ஏந்திய கைகளி லிருந்து தண்ணீரைத் தாரைவார்த்துக் கொண்டிருந்தாள். அவள் உயிருள்ளவளைவிட அழகாகக் காணப்பட்டாள். திண்ணென்று வெண்மை நிற உடம்பும், தோளும், மார்பகமும், உருண்டு திரண்டிருந்தன. வயிற்றின் அழகிய சுருக்கங்கள் கீழே இடை, அதற்குக் கீழே... ரசனையுள்ள கலைஞன், அங்கே தன் கலையுள்ளத்தை பிரமாதமாக பிரவாக மெடுக்கச் செய்திருந்தான். இருபதாம் நூற்றாண்டு மார்பில் ஸ்டோன் ஆர்கிடெக்சர், கனபரிமாணம் அளவெடுத்த மாதிரி, மாதிரியல்ல, அளவெடுத்தே செய்திருந்தான்.

    மழுமழுப்பான தொடைகளில் ஒன்றை சற்றே முன்பக்கம் உயர்த்தி, காலின் முன் விரலில் நின்று கொண்டிருந்தாள்.

    அவளைக் கடத்திக்கொண்டு போய்விடாமல் இருக்க அவளைச் சுற்றி ஒரு வட்டமான பாதுகாப்பு... 

    வெட்கம் இல்லாமல் அவள் எப்பொழுதும் நிர்வாணமாகவே அத்தனைபேர் முன்னிலையிலும் குளித்துக் கொண்டிருந்தாள்.

    அவள் அந்த ஹோட்டலுக்கு அடிக்கடி வந்திருக்கிறாள். அவள் வாழ்க்கையின் ஜீவ நீர் ஊற்று அம்மாதிரி ஹோட்டல்களில்தான் சுனை கொண்டிருக்கிறது.

    சினேகா.

    அவள் ஒரு காபரே!

    கண்ணியமானவள்! காரணம் அவள் கண்ணியமான, காபரே அனுசுயாவின் சிஷ்யை. தியாகத் தீயில் தன்னை அழித்துக்கொண்ட ஒரு நல்லவளின் தோழி.

    ரேகாவின் ஆடம்பரமான நுழை வாயிலில் அவள் கார் மெதுவாக நுழைந்தது. ஹோட்டல் போர்டிகோவில் டாக்ஸி நின்றது. சீருடை அணிந்த ஹோட்டல் பணியாள் ஒருவன் அவள் வந்த டாக்ஸியின் கதவைப் புன்னகையுடன் திறந்து விட்டான்.

    அடிக்கடி அந்த ஹோட்டலுக்கு அவள் ஆட வருவதால் உண்டான பரஸ்பர முன் அறிமுகமுள்ள புன்னகை.

    கதவைத் திறந்தவுடன் கீழே இறங்கினாள். வரவேற்பு அறையில் அவள் வருகைக்காகக் காத்திருந்த ஒரு சிறு கூட்டம் அவளை அன்புடன் வரவேற்றது.

    அந்த நாட்டியத்தை ஏற்பாடு செய்தவர்களில் ஒரு வாலிபன் அவளுடன் லிப்ட்டில் கலந்து கொண்டான்.

    மூன்றாவது மாடியில் லிப்ட் நின்றது. அவளும், அவளைச் சூழ்ந்து வந்த நான்கைந்து பேர்களும் வெளியே வந்தனர்.

    பகலை இருட்டாக்கி, அந்த இருட்டைப் போக்க ஒளி. ஒரு கலவையாக செயற்கை வெளிச்சம்.

    சினேகா, தான் வழக்கமாகப் போகும் கிரீன் ரூமுக்குள் நுழைந்தாள்.

    ஆளுயர நிலைக் கண்ணாடிகள் திரும்பிய இடங்களில் எல்லாம். அழகின் எல்லா கோணங்களையும் உடலின் எல்லா நிலைகளையும் ஒரே இடத்தில் நின்று கொண்டு பார்த்துக் கொள்ளக்கூடிய விதத்தில் அந்த அறை இருந்தது. கிட்டத்தட்ட சினிமா ஸ்டுடியோக்களில் உள்ள மேக்கப் அறைகளைப் போல செளகரியங்கள்.

    அவளுடைய நிகழ்ச்சிக்கு இன்னும் ஒரு மணி நேர அவகாசமிருந்தது.

    அணிந்து வந்திருந்த மெல்லிய புடவையை அவிழ்த்து ஸ்டாண்டில் போட்டாள். கூடவே ஜாக்கெட்டும் அதன்மேல் வந்து விழுந்தது.

    நல்ல அழகி அவள். அதிக உயரமோ, அதிக பருமனோ அற்ற நிதானித்த உடல் வளர்ச்சி கொண்ட அமைப்பு. சற்றே நீளவாக்கில் முகம், அகலமான கண்கள். நாசியும், உதடும் ரொம்ப அழகாக இருக்கும். காதிலிருந்து பெரிய வளையங்கள் தொங்குகின்ற அழகு தனி. உடலை மிக அற்புதமாக வைத்துக் கொள்ளத் தெரிந்தவள் அவள். ஆகையால் உடம்பில் எவ்வித சுருக்கங்களும் இல்லை. பீட்டர் பான் ப்ராவை விட்டு வெளியே தெரியும் அழகிய மார்பகங்கள். அதற்குக் கீழே வெளிரிய உடம்பில் பச்சை நரம்புகளின் ஓட்டம் தெரியும்.

    சாட்டின் பெட்டிகோட்டின் நாடாக்களைத் தளர்த்தி அதை அப்படியே கீழே நழுவவிட்டாள். இப்பொழுது அவள் முக்கால் நிர்வாணம், உடன் கொண்டு வந்திருந்த காபரேக்கான உடையை உடுத்திக்கொள்ள பெரிய கண்ணாடி முன் வந்து நின்று கொண்டாள். மிக துரிதமாக தன் மேக்கப்பை போட்டுக்கொள்ள ஆரம்பித்தாள். தலைமுடியைத் தளர்த்திக் கொண்டிருக்கும்போதே அறைக் கதவு தட்டப்படும் ஓசை கேட்டது.

    யாரது!

    நான்தான் லலிதா ராவ்...

    லலிதா ராவ் அவளுடைய ஹேர் டிரஸ்ஸர்...

    யெஸ் கம் இன்

    சற்றே பெரிய வானிடி பாக்குடன் கதவைத்திறந்து கொண்டு லலிதாராவ் உள்ளே நுழைந்தாள்.

    நாற்பது வயது மதிக்கத்தக்க நடு வயது மாது அவள். பாப் செய்த கேசம், கையில்லாத ரவிக். உடம்பைப் பிடித்த மாதிரி உடை. நீலமும் மஞ்சளுமாகக் குறுக்கு நெடுக்காக கோடுகள் ஓடும் புடவை... காலில் ஸ்லிப்பர். அவள் நடந்து வருவதே ஒரு நாட்டியமாக இருந்தது.

    தாமதத்திற்கு மன்னிக்க வேண்டும் என்றவள் வந்தவுடனேயே அரை விநாடிகூட தாமதிக்காமல் தன் சிகை அலங்காரத் தொழிலைத் தொடங்கிவிட்டாள்.

    Enjoying the preview?
    Page 1 of 1