Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

ரத்தம் சிந்தும் ரோஜாக்கள்
ரத்தம் சிந்தும் ரோஜாக்கள்
ரத்தம் சிந்தும் ரோஜாக்கள்
Ebook185 pages44 minutes

ரத்தம் சிந்தும் ரோஜாக்கள்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஆர்.எஸ்.புரம் எக்ஸ்டன்ஷன் ஏரியா.
ஐந்தாவது செக்டாரில் இரண்டாவது பங்களா, மினி பங்களா.
காலை மணி ஆறு. போலீஸ் ஜீப் ஒன்று நிதானமான வேகத்தோடு பங்களாவின் காம்பௌண்ட் கேட்டுக்குள் நுழைந்து போர்டிகோவில் மெளனமானது. ஜீப்பின் முன் சீட்டிலிருந்து டி.எஸ்.பி. ராஜபாண்டியன் இறங்கினார். போர்டிகோ தூரமாய் போலியோ பூட்ஸ் அணிந்த காலோடு சாய்ந்து உட்கார்ந்தபடி - நாய்க் குட்டியோடு விளையாடிக் கொண்டிருந்த அந்த ஏழுவயது சிறுவன் - அவசர அவசரமாய் எழுந்து நின்றபடி கத்தினான்:
“அம்மா...! தாத்தா... வந்தாச்சு...” ராஜபாண்டியன் சிரித்துக் கொண்டே சிறுவனை நெருங்கி தன் தலையிலிருந்த தொப்பியை எடுத்து அவன் தலையில் பொருத்தி இரண்டு கைகளாலும் அவனை அள்ளித் தூக்கிக்கொண்டார்.
“என்னடா பாபு. இவ்வளவு காலையில எந்திரிச்சு... போர்டிகோ படியில வந்து உட்கார்ந்திட்டிருக்கே...?” ஐம்பத்தி மூன்று வயதான ராஜபாண்டியன் ஒரு சிம்மம் மாதிரி நடந்து உள்ளேப் போனார்.
“ஏன் தாத்தா ராத்திரி வரல்...?”
“திருடனைப் புடிச்சாத்தானே வரமுடியும்?”
“புடிச்சிட்டீங்களா தாத்தா...?”
“புடிக்காமே... வருவேனா...? புடிச்சு... ஜெயில்ல போட்டுட்டுத்தான் வர்றேன்...” ராஜபாண்டியன் மீசையை முறுக்கியபடி சொல்லிக் கொண்டிருக்கும் போதே பக்கத்து அறையிலிருந்து சியாமளா வெளிப்பட்டாள்இருபத்தேழு வயதை முடிக்கப் போகும் சியாமளாவுக்கு கொஞ்சம் பூசின மாதிரி உடம்பு. சந்தன நிறமான முகத்தில் குங்குமம் மட்டும் மிஸ்ஸிங்... அடர்த்தியான தலைக் கேசத்தை எவ்வளவு தான் அழகாக வாரிப் பின்னினாலும் துளியூண்டு பூ வைத்துக் கொள்ள முடியாது. கழுத்தில் சரம்சரமாய்த் தொங்கும் தங்கச் செயின்களுக்கு மத்தியில் தாலிக் கொடி காணாமல் போயிருந்தது. பத்தொன்பதாவது வயதில்- பாங்க் ஆபீஸர் சரவணகுமாருக்கு வாழ்க்கைப்பட்டு இருபதாவது வயதில் பாபுவுக்கு அம்மாவாகி இருபத்தி மூன்றாம் வயதில் கணவனை மஞ்சள் காமாலைக்குப் பலி கொடுத்து விட்டு மஞ்சள் பூசுவதை நிறுத்திக் கொண்டவள், அவளுடைய மாமாவும் அத்தையும் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் தன் அப்பாவோடும் தங்கை கவிதாவோடும் வந்து இணைந்து கொண்டாள்.
“என்னப்பா... ராத்திரி பூராவும்... நீங்க வருவீங்க வருவீங்கன்னு எதிர்பார்த்தே சரியானபடி தூங்கலை... பாபுவும் ஞாபகம் வந்தப்பல்லாம் கண்முழிச்சுப் பார்த்து- 'என்னம்மா... தாத்தா வந்துட்டாரா...? வந்துட்டாரா'ன்னு கேட்டுட்டே இருந்தான்... போன காரியம் என்னப்பா ஆச்சு...? அந்த வட நாட்டு முகமூடி ஆசாமிகளை மடக்கிட்டீங்களா?”
ராஜபாண்டியன் சிரித்தார்.
“ஏம்பா... சிரிக்கறீங்க...?”
“முகமூடி கொள்ளைக்காரங்க... வடநாட்டு ஆசாமிங்க இல்லேம்மா... எல்லோருமே தமிழ் ஆளுங்கதான். அதுமாதிரி ட்ரஸ் பண்ணிட்டு அரையும் குறையுமா... இந்தி பேசிக்... கொள்ளையடிச்ச ஆசாமிகளை மடக்கி... லத்தியால ரெண்டு தட்டுத் தட்டினா... அவனவன் தாய் பாஷையில ‘அய்யோ அம்மா'ங்கிறான். மொத்தம்... ஏழுபேர்... ஒரே கயத்துல கட்டி ஸ்டேஷன்ல கொண்டு போய்த் தள்ளிட்டு வர்றேன்... ஆமா... கவிதா எங்கே...? இன்னும் தூங்கறாளா...? நாற்காலியில் சாய்ந்தபடியே கேட்டார், ராஜபாண்டியன்.
சியாமளாவின் முகம் சட்டென்று மாறியது,
கவிதாவா...? அவ...அவ... வந்தப்பா...”
ராஜபாண்டியன் குழப்பமாய் நிமிர்ந்தார்“என்னம்மா...? கவிதாவைப் பத்தி கேட்டா... இந்தத் திணறு திணர்றே.?”
“அவ... அவளோட ஃப்ரெண்ட் ராணி வீட்டுக்குப் போயிருக்காப்பா...”
“ராணி வீட்டுக்கா...? இவ்வளவு காலங்கார்த்தாலே ராணி வீட்டுக்கு எதுக்காக போயிருக்கா...?”
“அவ... இப்போ... காலையில போகலையப்பா... நேத்திக்கு சாயந்தரம் அஞ்சு மணிக்கே கிளம்பிப் போயிட்டா... ராணிக்கு பெர்த்டேயாம்...அதைக்க் க்ராண்டா செலிபிரேட் பண்ணப்போறதாவும் உதவிக்கு கவிதாவும் கூட வந்தா... நல்லாயிருக்கும்ன்னு அந்த ராணிப்பொண்ணு கெஞ்சினா... அதான் அனுப்பி வெச்சேன்... ராத்திரி எட்டு மணிக்கெல்லாம் கொண்டு வந்து விட்டுடறேன்னு கூட்டிகிட்டுப் போனா...”
“எட்டுமணிக்கு வரலையா...?”
“ராணி வீட்டிலிருந்து போன் வந்தது... கவிதா ராத்திரி இங்கேயே தங்கி... நாளைக்குப் பர்த்டே பார்ட்டியில் கலந்துட்டு வருவாள்னு சொன்னாங்க...”
ராஜபாண்டியனின் முகம் கோபத்துக்குப் போனது.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 13, 2024
ரத்தம் சிந்தும் ரோஜாக்கள்

Read more from ராஜேஷ்குமார்

Related to ரத்தம் சிந்தும் ரோஜாக்கள்

Related ebooks

Related categories

Reviews for ரத்தம் சிந்தும் ரோஜாக்கள்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    ரத்தம் சிந்தும் ரோஜாக்கள் - ராஜேஷ்குமார்

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    Copyright © By Pocket Books

    அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த புத்தகம் அல்லது புத்தகத்தின் எந்த பகுதியையும் வெளியீட்டாளர் அல்லது எழுத்தாளரின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி எந்தவொரு விதத்திலும் மறுபதிப்பு செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது. அனுமதியின்றி பயன்படுத்துவோர் மீது பதிப்புரிமை சட்டம் 2012-ன் படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    1

    அந்த கண்டேசா க்ளாசிக் வேகம் அசாத்தியமாய் இருந்தது. பிரமிப்பாய்த் தெரிந்தது.

    நிச்சயமாய் அதன் ஸ்பீடாமீட்டரின் சிவப்பு இண்டிகேட்டர் முள், எண்பது அல்லது தொன்னூறில் அல்லாடிக் கொண்டிருக்கும் போல் தோன்றியது.

    ராத்திரி பதினோரு மணியின் சுத்தமான தேசிய நெடுஞ்சாலை. NH 47. சென்னைக்குப் போகின்ற... அல்லது சென்னையிலிருந்து வருகின்ற லாரிகளின் போக்குவரத்தைத் தவிர வேறு எந்த வாகனமும் கண்ணுக்குத் தெரியாத நீளமான கறுப்பு ரிப்பன் மாதிரி ரோடு,

    ரோட்டின் இருபக்கத்திலும் தொலைவில் எங்கேயோ சில வெளிச்சப் பொட்டுக்கள் விநாடி நேரத்தில் கண்ணுக்குப் பட்டு மறைய. அவன் காண்டேசாவின் ஸ்டீரியங்கை இடதுகையால் பற்றியிருந்தான், வலது கையின் விரலிடுக்குகளில் சிகரெட் புகைந்து கொண்டிருக்க அந்த சிகரெட் வாசனையையும் மீறி அவன் மேல் பரவியிருந்த இண்டிமேட். மூச்சையடைக் கிற மாதிரி மனத்தது, க்ரே நிற ஷபாரியில் கனமாய் நிறைந்திருந்த அவன் அந்த ராத்திரிக் குளிரிலும் கண்களுக்குக் குளிர் கண்ணாடியைக் கொடுத்திருந்தான். குளிர் கண்ணாடிக்குக் கீழே சரேலென்று வழுக்குகிற மாதிரி நாசி. நாசிக்கும் மேலுதட்டுக்கும் இடைப்பட்ட பிரதேசத்தை ‘கரு கரு' மீசையால் கவர்ச்சியாய் நிரப்பியிருந்தான்.

    ஸ்டீரியங்கின் அடிவாரத்திலிருந்த- டேப் ரிகார்டர் சேனலிலிருந்து அந்த மேற்கத்திய இசை பீறிட்டுக் கொண்டிருந்தது.

    I FEEL THE HEAT. TAKE THE HEAT OFF ME... பாப் பாடகி யான ஒரு பெண்ணின் ஸ்காட்ச் குரல் போதையாய் வழிய கேட்கிற எந்த ஆணையும் உஷ்ணப் படுத்துகிற மாதிரி ட்ரம்மின் ஒற்றையடி நரம்புகளை ஒற்றியெடுத்தது.

    கண்டேசா பி.எஸ்.ஜி. ஆர்ட்ஸ் காலேஜை நொடிக்கும் குறைவான நேரத்தில் கடக்க எதிரே வந்த பூதாகரமான லாரி தன் ஹெட் லைட் வெளிச்சத்தால் காரிலிருந்த அவனையும் பின்சீட்டில் சாய்ந்து உட்கார்ந்திருந்த அந்தப் பெண்ணையும் அலம்பி மறைந்தது.

    அவன் காரின் வேகத்தைக் குறைத்தான். மெல்லத் திரும்பிப் பார்த்து ஸாரி... இந்தக் குளிர்ல உன்னை ரொம்ப தூரம் கூட்டிட்டுப் போறேன்... ஒரு அஞ்சு நிமிஷம் பொறுத்துக்கோ... நாம போக வேண்டிய இடம் வந்துடும்...

    அந்த கவிதா ஒன்றும் பேசாமல் அவனையே வெறித்தாள், காரின் ஜன்னல் வழியே குபுக்கென்று உள்ளே புகுந்த காற்று அவள் தோள் மேல் உட்கார்ந்திருந்த முந்தானையை விசிறி விட அது மடியில் குழைந்து போய் விழுந்தது.

    முந்தானையை மறுபடியும் எடுத்து மார்புகளை மறைக்க வேண்டும் என்கிற பதைப்புணர்வு தோன்றாமல் அப்படியே உட்கார்ந்திருந்தாள்,

    ‘I FEEL THE HEAT. TAKE THE HEAT OFF ME'

    அந்த பாப் பாடகி ஒற்றையடி ட்ரம்மில் வெண்ணெயாய்க் குழைந்தாள். அதே வரியைத் திரும்பத் திரும்ப... விதவிதமானத் தொனியில் முக்கல் முனகல்களோடு கம்மினாள்.

    கவிதா...!

    .........

    இந்தப் பாட்டு தான் எனக்குப் பிடித்தமானப் பாட்டு. நான் கார்ல ஏறினாலே போதும் இந்தப் பாட்டு என்னோட காதை வருட ஆரம்பிச்சுடும்...

    எதிரே வந்த ஒரு கார், பீச்சிய ஹெட்லைட் வெளிச்சத்தில், அவள் மார்பில் துணியில்லாமல் ஒரு விநாடி தெரிந்து மறுபடியும் இருட்டுக்குப் போனாள்.

    அவன் காரின் வேகத்தைக் குறைத்தான். கண்ணாடிக்குக் கீழே குனிந்து ரோட்டோரத்தில் ஒரு பெரிய மரத்தைத் தேடினான்.

    சேலம் 140 கி.மீ, ஹைவேஸ் போர்டையொட்டி அந்த மரம் தெரிய-அதற்குக் கீழே கொண்டு போய்க் காரை நிறுத்தினான்.

    முன்புற ஹெட் லைட்டின் கண்களைக் குருடாக்கினான். காரின் பின்புறம் மட்டும் இரு செவ்வக சிவப்பு வெளிச்சங்கள்.

    டேப் ரிகார்டரின் தொனியைக் குறைத்தான். அது சின்ன வால்யூமில்,

    IFeel the heat. take the heat off me'...

    என்றது. அவன் காரினின்றும் கீழே இறங்கி- கதவைப் பூ மாதிரி சாத்தி விட்டு வலது கையின் விரலிடுக்கில் பாதி கரைந்து போன. சிகரெட்டை மரத்துக்குப் பின்னே சுண்டினான். அணிந்திருந்த ‘நார்த் ஸ்டார்' கான்வஸ் ஷூ ‘ச்சப்... ச்சப்' என்று சப்திக்க காரின் பின் கதவுக்கு வந்தான்.

    கவிதா... இறங்கலாமா...? கேட்டுக் கொண்டே கதவைத் திறக்க

    அவள், ஸ்லோமோஷனில் சரிந்தாள். அவளுடைய உடம்பைச் சுற்றியிருந்த சேலை அந்தச் சரியலில் நழுவ உள்ளே ஏதும் அணியாத வெற்றுடம்பு பளீரென்று தெரிந்தது.

    அவன் அவளை இழுத்தான், நேத்தைக்கு இருந்ததை விட இன்னிக்கு ரொம்பவும் வெயிட் ஏறிட்டே... கவிதா... சொல்லியபடி அவளைத் தூக்கிக் கொண்டான்.

    லேசாய் மூச்சு வாங்கி நடந்தான்.

    மரத்துக்குப் பின்னால் இறங்கின சரிவில் அவளைக் கிடத்தி மெல்ல உருட்டி விட்டான். அவள் அந்த சரிவில் உருண்டாள். ‘தட்... தப்... தட்... தப்...' சரிவின் மையத்தைத் தொடுவதற்குள் தன் உடம்பின் மேல் சுற்றியிருந்த சேலையைத் துடைத்துவிட்டு கீழே பிறந்த மேனியாய்ப் போய் மல்லாந்தாள்.

    ஒ...கே... கவிதா... உன்னை ஒரு பாது காப்பான இடத்துல ட்ராப் பண்ணிட்டேன். விடிஞ்சதும் பாராவது பார்ப்பாங்க... போலீஸ்ல போய்ச் சொல்லுவாங்க. அவங்க வந்து உன்னைக் கவனிச்சுக்குவாங்க... வரட்டுமா...? குட் நைட்...

    சொல்லிவிட்டு காண்டேசாவுக்குத் திரும்பினான். ட்ரைவிங் இருக்கையை ஆக்ரமிப்பதற்கு முன்னால் நீளமான இறக்குமதி சிகரெட் ஒன்றை சிகாரின் உதவியால் பற்ற வைத்துக் கொண்டான். டேப் ரிகார்டரின் வால்யூமை உயர்த்திக் கொண்டே காண்டேசாவைத் திருப்பினான்.

    கார் வந்த வழியே திரும்பி

    Enjoying the preview?
    Page 1 of 1