Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

காகித ஆயுதங்கள் and வா அருகில் வா
காகித ஆயுதங்கள் and வா அருகில் வா
காகித ஆயுதங்கள் and வா அருகில் வா
Ebook256 pages1 hour

காகித ஆயுதங்கள் and வா அருகில் வா

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அந்த எக்ஸ்பிரஸ் ரயில் ராட்சஸ இரைச்சலோடு ஸ்டேஷனுக்குள் பிரவேசித்துக் கொண்டிருக்க – பிரயாணிகள் தத்தம் லக்கேஜ்களை எடுத்து வைத்துக் கொண்டு இறங்கத் தயாரானார்கள்.
எஸ்-5 கம்பார்ட்மென்ட்டில் இருந்தாள் ஆஷிகா. பர்ப்பிள் நிறத்தில் தொள தொள டி.சர்ட்டும் கறுப்பில் இறுக்கமான ஜீன்ஸும் அணிந்திருந்தாள். தோள்வரை நின்றிருந்த கூந்தல் காற்றில் பறந்தது.
ஹேண்ட் பேகைத் தோளில் மாட்டிக் கொண்டவள் - பெரிய சூட்கேஸை வலது கைக்கு கொடுத்து எடுத்துக் கொண்டாள்.
ரயில் கம்பார்ட்மெண்ட்கள் ஏர் பிரேக்கின் அழுத்தம் தாங்காமல் ஆங்காங்கே கிறீச்சென்று அலறியபடி இயக்கங்களைப் படிப்படியாய் நிறுத்திக் கொண்டது.
வாயிலை அடைத்துக் கொண்டு சக பயணிகள் இறங்க - சூட்கேஸைத் தூக்கிக் கொண்டு சிரம மூச்சுடன் கடைசி ஆளாக பிளாட்பாரத்தில் காலை வைத்தாள்.
சூழ்ந்த போர்ட்டர்களைத் தவிர்த்துவிட்டு ரோலரின் உதவியுடன் சூட்கேஸை இழுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.
சூட்கேஸ் நாய்க்குட்டி மாதிரி விசுவாசமாய் அவளை தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.
எரிச்சலான - ஒரு போர்ட்டர் ஆசாமி மட்டும் விடாமல் அவள் பின்னே வந்தான். அழுக்காய் இருந்தவனின் முகத்தில் முள்முள்ளாய் தாடி. எண்ணெய்ப் பசை இல்லாத பரட்டைத் தலை.
அவளோடு இணையாய் நடந்து வந்து கொண்டே சொன்னான்.
“பிளாட்பாரம் முடிஞ்சதுன்னா ரோலரை வெச்சு சூட்கேஸை உருட்டிட்டுப் போக முடியாதும்மா...”நான் பார்த்துக்கிறேன்... நீ தொந்தரவு பண்ணாம போயிடு...”
“ஸ்டேஷனை விட்டு ஆட்டோ ஸ்டாண்ட் கொஞ்சம் தள்ளி இருக்கும்... அது வரைக்கும் தூக்கிட்டுப் போறதுன்னா கஷ்டம்...”
“நான்தான் போர்ட்டர் வேண்டாம்ன்னு சொல்றேனே.”
“நான் போர்ட்டர் இல்லையம்மா... அவங்க இந்த லக்கேஜுக்கு பத்து ரூபா கேப்பாங்க. நீங்க எனக்கு அஞ்சு ரூபா தந்தா போதும். சாப்பிட்டு நாலு நாளாச்சு...”
மூச்சு வாங்க நடந்து கொண்டே அவனைத் திரும்பிப் பார்த்தாள் ஆஷிகா.
நெற்றியில் ஒரு வெட்டுக் காயத் தழும்பு... கண்களில் நிரந்தரமாத் தேங்கியிருந்த சிவப்பு... அவன் வாய் திறந்து பேசும்போதெல்லாம் குமட்டலாய் வீசும் சாராய நாற்றம்...
அவன் தோற்றம் அவளுக்குள் நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தவில்லை. சற்றே ஒதுங்கி நடந்து கொண்டே கொஞ்சம் இறுக்கமான குரலில் சொன்னாள்.
“நீ இப்ப அந்தப் பக்கம் போறியா இல்லையா...?”
அவள் சற்றே குரலை உயர்த்தியதும் - திடீரென்று அவன் முகத்தில் இருந்த கெஞ்சல்தனம் காணாமல் போனது.
“நான் போறேண்டி… நியாயமா கேட்டா நீங்க தர மாட்டீங்க…”
கோபமாய் கத்தியவன் - வெடுக்கென்று அவள் தோளில் மாட்டியிருந்த ஹேண்ட் பேகை வேகமாய் இழுத்தான்.
ஆஷிகா தடுமாறி அவனை அதிர்ச்சியாய்ப் பார்க்கிற போதே பேகின் வார் அறுந்து அவன் கைக்குப் போனது.
அவன் ஒடத் துவங்கினான்.
“பிடிங்க... பிடிங்க... திருடன்... திருடன்...”
முன்னால் போய்க் கொண்டிருந்த நபர்களைத் பார்த்துக் கத்தினாள் ஆஷிகா.அவன் ஒரு கையால் கத்தியைக் காட்டிக் கொண்டே ஓட ஸ்டேஷனில் இருந்த எல்லாரும் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றார்கள்.
“யாரை நம்பியும் பிரயோசனம் இல்லை” ஒரு முடிவுக்கு வந்தவளாய்
சூட்கேஸை அருகிலிருந்த பத்திரிகை ஸ்டால் ஆளிடம் தந்துவிட்டு அவனைத் துரத்திக் கொண்டு ஓட ஆரம்பித்தாள் ஆஷிகா.
ஐந்து நிமிஷ ராட்சஸ ஒட்டம்...
சாலையின் கூட்டமான பகுதியை நெருங்கிய போது அவனுடைய வேகம் தடை பட - ஆஷிகா தன் மின்னல் ஓட்டத்தில் அவனை எட்டிப் பிடித்து அவன் சார்ட் காலரைக் கொத்தாய் பற்றினாள்.
“நில்லுடா”
அவன் பளபளக்கிற கத்தியை அவளுக்கு எதிரே நீட்டினாள்.
“என்னை விடு! இல்லைன்னா சொருகிடுவேன்…”
அவனுடைய மிரட்டலை அலட்சியப்படுத்திய ஆஷிகா மின்னல் வேகத்தில் காலை உயர்த்தி அவன் கையிலிருந்த கத்தியைத் தட்டி விட்டாள்.
அது “டிங் டிணார்” என்ற சப்தத்தோடு ப்ளாட்பாரத்தில் விழுந்து கொண்டிருக்க - ஆஷிகாவின் அதிரடி தாக்குதலை சற்றும் எதிர்பார்க்காத அதிர்ச்சியில் தடுமாறி நின்றிருந்த அவனுடைய வயிற்றுப் பிரதேசத்தில் எட்டி உதைத்தாள்.
“த்த்த்த்ட்ட்ட்ட்”
அவன் நிலை குலைந்து விழுந்தான்.
கும்பல் இப்போது பக்கத்தில் வர ஆஷிகா சீறினாள்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 8, 2024
காகித ஆயுதங்கள் and வா அருகில் வா

Read more from ராஜேஷ்குமார்

Related to காகித ஆயுதங்கள் and வா அருகில் வா

Related ebooks

Related categories

Reviews for காகித ஆயுதங்கள் and வா அருகில் வா

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    காகித ஆயுதங்கள் and வா அருகில் வா - ராஜேஷ்குமார்

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    Copyright © By Pocket Books

    அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த புத்தகம் அல்லது புத்தகத்தின் எந்த பகுதியையும் வெளியீட்டாளர் அல்லது எழுத்தாளரின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி எந்தவொரு விதத்திலும் மறுபதிப்பு செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது. அனுமதியின்றி பயன்படுத்துவோர் மீது பதிப்புரிமை சட்டம் 2012-ன் படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    வா அருகில் வா

    1

    அந்த நள்ளிரவு வேளையில்

    வினிதா தன் அருகில் படுத்திருந்த கணவன் மகேந்திரனை உலுப்பினாள்.

    என்னங்க...

    ம்…

    புரண்டு படுத்த மகேந்திரன் கம்பளியை நன்றாக இழுத்துப் போர்த்திக் கொண்டு மறுபடியும் மெலிதாக குறட்டைச் சத்தத்தை தொடர்ந்தான்.

    என்னங்க... உங்களைத்தாங்க...

    இந்த முறை கலவரம் கலந்த குரலில் கூப்பிட்டபடியே சற்று பலமாக அவனை உசுப்பினாள்.

    தூக்கத்தில் இருந்து விடுபட விருப்பம் இல்லாமல் கண்ணை மூடியபடியே திரும்பிப் பார்க்காமலே கேட்டான்.

    என்ன வினிதா...?

    கொஞ்சம் எந்திரிங்க...

    எதுக்கு...?

    நீங்க எந்திரிச்சாதானே சொல்ல முடியும்...? தூக்கத்தில் உம் உம்ன்னு உம் கொட்டிட்டு திரும்பிப் படுத்துடுவீங்க…

    மணி எத்தனை...?

    சரியா பனிரெண்டு…

    முன்னேதான் பாத்ரூம் போகணும் துணைக்கு வாங்கன்னு தூக்கத்தில் இருக்கறப்போ தொந்தரவு பண்ணுவே... உன் தொந்தரவு தாங்காமதான் நான் அட்டாச்டு பாத்ரூம் கட்டிக் கொடுத்துட்டேனே... போயிட்டுவா

    அது இல்லீங்க

    பின்னே என்ன...?

    காத்துல ஏதோ வாசனை அடிக்கிற மாதிரி இருக்கு…"

    வாசனையா...?

    கேட்டவன் மூச்சை இழுத்துப் பார்த்து விட்டு தலையை ஆட்டினான்.

    எனக்கு ஒண்ணும் தெரியலையே...?

    எனக்கு தெரியுது... என்னால் தூங்கக் கூட முடியலை... அந்த வாசனை மூக்கைத் துளைச்சுகிட்டு போய் குடலைப் புரட்டுது...

    கொல்லைப் பக்கம் எலி ஏதாவது செத்துக் கிடக்கலாம்... காலைல பார்த்து எடுத்துப் போட்டுடலாம்... இப்போ நடு ராத்திரியில்... நீயும் தூங்காம தூங்கறவனையும் ஏன் தொந்தரவு பண்ணிட்டு இருக்கே...? காலைல அஞ்சு மணிக்கெல்லாம் எந்திரிச்சாதான் நான் ட்யூட்டிக்குப் போக முடியும்... இந்த வாரம் மார்னிங் ஷிப்ட்... ஞாபகம் இருக்கா... இல்லையா...?

    சொல்லிக் கொண்டே திரும்பிப் படுத்தவனின் முகத்தைத் திருப்பினாள்.

    எலி செத்துக் கிடக்கிற நாத்தம் வேற மாதிரி இருக்கும். இது வேற ஸ்மெல்ங்க...

    வினிதா... அது என்னவா இருந்தாத்தான் என்ன...? இப்ப நடு ராத்திரில எதுக்கு இந்த ஆராய்ச்சி...?

    அவள் குரல் நடுங்கச் சொன்னாள்.

    அதில்லைங்க... எ… எனக்கு... ரொம்ப பயமாயிருக்கு...

    அவன் சலிப்போடு எழுந்து உட்கார்ந்தான்.

    எது எதுக்கு பயப்படறதுன்னு ஒரு விவஸ்தையே கிடையாதா...?

    நான் சொன்னதை அலட்சியம் செய்யாம கொஞ்சம் கவனமா ஸ்மெல் பண்ணிப் பாருங்க...

    மகேந்திரன் வினிதாவை முறைத்துப் பார்த்துவிட்டு மூச்சை உள்ளே இழுத்தான்.

    இப்போது அவன் நெற்றி சுருங்கியது. ஆமா ஏதோ நெடி

    ஒரு மாதிரி மோசமான நெடி

    ஆமா...

    அது என்ன நெடின்னு ஃபீல் பண்ண முடியுதுங்களா...?

    இன்னும் சில விநாடிகள் நெடியை உணர்ந்து பார்த்தவன் மெல்லிய குரலில் சொன்னான். அது ஒரு குறிப்பிட்ட பொருளோட வாசனை கிடையாது வினிதா எல்லாமும் கலந்த மாதிரி ஒரு வாசனை

    மட்டமான ஊதுபத்திப் புகை... வினிதா சொன்னாள்.

    "கரெக்ட்.

    கூடவே அழுகின பழ வாசனை...

    அப்புறம் சாம்பிராணி வாசனை

    எல்லாம் கலந்து ஒரு மாதிரி குடலைப் புரட்டுது

    அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே - அந்த நடுராத்திரி நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு வெகு தூரத்தில் ஒரு தெரு நாய் ஊளையிட்டது.

    ஊளைச் சத்தம் கொஞ்சம் கொஞ்சமாய் நெருங்கி வருவதுபோல் தோன்றியது.

    ஸ்மெல் எங்கிருந்து வருதுன்னு நான் பார்த்துட்டு வரட்டுமா...?

    கேட்டுக் கொண்டே எழுந்த மகேந்திரளைத் தடுத்தாள்.

    வேண்டாங்க…

    பின்னே எதுக்காக என்னை எழுப்பினே...?

    எனக்கு பயமாயிருந்தது... அதான்

    கெட்ட வாசனை அடிக்குது. என்னன்னு பார்த்துட்டு வந்துடலாம்...

    வேண்டாங்க தலையை பலமாய் ஆட்டிய வினிதா சொன்னாள்.

    சுடுகாட்டுப் பக்கமா போறப்ப மட்டும்தான் இந்த மாதிரி வாசனை வரும். நீங்க வெளியே போகாதீங்க

    அநாவசியமா கற்பனை பண்ணாதே...

    இல்லைங்க. நீங்க இப்போ வெளியே போக வேண்டாம். நாய் வேற ஓயாம ஊளையிட்டுட்டே இருக்கு...

    தொப்...

    வினிதா பயம் இழையோடும் குரலில் சொல்லிக் கொண்டிருந்த விநாடி - சமையலறையிலிருந்து பெரிய சத்தமும் தொடர்ந்து பாத்திரங்கள் உருளும் ஒசையும் கேட்டது.

    திடுக்கிட்டு போய் சட்டென்று எழுந்தான் மகேந்திரன்.

    என்ன சத்தம்...?

    கிச்சன் பக்கமிருந்ததுதான் சத்தம் வந்தது.

    பெட் ரூமை விட்டு வெளியே வந்து சமையலறை லைட் சுவிட்சைப் போட்டாள்.

    வினிதா அவன் பின்னாலேயே வந்து கலவரப் பார்வையோடு கணவனின் தோளைப் பற்றிக் கொண்டு நின்றாள்.

    டம்ளர்கள் சில உருண்டிருக்க - சமையலறைத் திட்டின் மேல் அட்டைக்கரி நிறத்தில் ஒரு பூனை வெளிர் பச்சை நிறக் கண்களால் அவர்களை முறைத்து மெல்ல பின் வாங்கி சுவரோரம் போய் உடல் முடிகள் அத்தனையையும் சிலிர்த்துக் கொண்டு நின்றது.

    இந்தப் பூனைதான் ஜன்னல் வழியா வீட்டுக்குள் குதிச்சு பாத்திரங்களைத் தட்டி விட்டிருக்கு... மகேந்திரன் சொல்ல வினிதா பயத்தில் நடுங்கினாள்.

    உடம்பையெல்லாம் விறைச்சிகிட்டு நிக்குதே...?

    வெளியே எதையோ பார்த்து பயந்து போய்த்தான் வீட்டுக்குள்ளே குதிச்சிருக்குன்னு நினைக்கிறேன்...

    வினிதாவுக்குள் வியர்வை சுரப்பிகள் ஓவர் டைம் பார்க்க ஆரம்பித்தன.

    மகேந்திரன் அந்தப் பூனையை விரட்டி விட்டு - நடுக்கமாய் நின்றிருந்த வினிதாவை அணைத்தாற்போலக் கூட்டிச் சென்றான்.

    வா போய்ப் படுக்கலாம்.

    சில அடிகள் எடுத்து வைப்பதற்குள் –

    தட்... தட்... தட்...

    வாசல் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.

    மகேந்திரன் நின்றான்.

    வினிதா… யாரோ கதவைத் தட்டறாங்க

    இந்த நடு ராத்திரியில் யார் வந்திருப்பாங்க...?

    தட்... தட்... தட்...

    தெரியலையே… காலிங் பெல் இருக்கிறப்போ ஏன் கதவைத் தட்டறாங்க...?

    யாருன்னு பார்க்கலாம் வா

    வினிதாவிடம் நடுக்கம் அதிகரித்திருந்தது.

    ஜன்னல் வழியா எட்டிப் பாருங்க... வெளியே யார் இருந்தாலும்... வீட்டுக்குள்ளிருந்தே பேசி அனுப்பிடுங்க...

    மகேந்திரன் முன்னறையை நோக்கிச் சென்றான்.

    வாசல் விளக்கின் ஸ்விட்சைப் போட்ட அதே விநாடி மின்சாரம் இறந்து போக -

    தார் டிரம்முக்குள் முக்கி எடுத்த மாதிரி அந்த பிரதேசம் அடர்த்தியான இருட்டுக்குப் போனது.

    வியர்த்துக் கொட்டிய வினிதா இருதயம் படபடக்க மகேந்திரனின் கையைப் பிடித்துக் கொண்டாள்.

    தட்… தட்... தட்...

    அந்த நடுநிசி நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு கதவுத் தட்டல் இன்னும் தொடர்ந்து கொண்டே இருந்தது.

    டார்ச் லைட் எங்கிருக்கு...?

    ஷெல்ஃபில்

    எடுத்துட்டு வர்றியா...?

    ஊஹூம்... நான் உங்களை விட்டுட்டு... நான் போக மாட்டேன்... எனக்கு ரொம்ப பயமா இருக்கு.

    கதவைத் தட்டிட்டே இருக்காங்க… யாருன்னு பார்க்கணுமே...

    இங்கிருந்தே யாருன்னு கேளுங்க...

    கதவுக்குப் பக்கவாட்டில் இருந்த ஜன்னலைக் கொஞ்சமாய்த் திறந்து வெளியே பார்த்தான் - மகேந்திரன்.

    கெட்டியான இருட்டில் தெளிவாக எதுவும் அவன் கண்களுக்குக் கிடைக்கவில்லை.

    கதவுத் தட்டல் மட்டும் நிற்கவே இல்லை.

    மகேந்திரன் உலர்ந்திருந்த தொண்டைக் குழியை ஈரப்படுத்திக் கொண்டு கேட்டான்.

    யாரது?

    பதிலுக்கு கிணற்றின் ஆழத்தில் இருந்து பேசுவதைப் போல வெளியேயிருந்து ஒரு குரல் வந்தது. முக்கல் முனகலோடு ஒரு வாக்கியம்.

    வார்த்தைகள் தெளிவாய்ப் புரியவில்லை.

    யாரது…? உங்களுக்கு என்ன வேணும்…?

    சற்றே பலமான குரலில் மகேந்திரன் கேட்க - மறுபடியும், பதிலாக அதே தெளிவற்ற குரல்.

    மகேந்திரன் வினிதாவைப் பார்த்தான்.

    யாரோ வயசான ஆள் மாதிரி தெரியுது... கதவைத் திறந்து பார்த்துடலாம்... உடம்பு சரியில்லையோ என்னவோ... உதவிக்காக நம்ம வீட்டுக் கதவைத் தட்டியிருக்கலாம்...

    கதவைத் திறக்கப் போனவனின் உள்ளங்கையைப் பற்றி அழுத்தினாள் வினிதா -

    டார்ச் லைட்டை எடுத்துகிட்டு வந்து கதவைத் திறங்க...

    இருட்டுக்குள் தட்டுத் தடுமாறி நடந்து ஷெல்ஃபைத் தொட்டான் மகேந்திரன். அரை நிமிடத் தேடலுக்குப் பின் -

    டார்ச் லைட் கிடைத்தது.

    சுவிட்சைத் தள்ளி அதை உயிர்ப்பிக்க முயன்றான்.

    பேட்டரி காலாவதியாகியிருக்க - அது பலஹீனமாய்க் கண்ணைச் சிமிட்டியது.

    மகேந்திரன் அதை ஷெல்ஃப்லேயே தூக்கி எறிந்தான்.

    சமயத்துக்கு எதுவுமே கை கொடுக்காது

    என்னங்க...?

    பேட்டரி வீக்

    சரி வந்து கதவைத் திறந்து பாருங்க

    வினிதா சொல்ல மகேந்திரன்

    Enjoying the preview?
    Page 1 of 1