Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

பகல் நேர மின்னல்
பகல் நேர மின்னல்
பகல் நேர மின்னல்
Ebook135 pages31 minutes

பகல் நேர மின்னல்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வேதாவின் இருதயம் ஒரு கணம் ஸ்தம்பித்து பின் ரத்தத்தை இறைக்க ஆரம்பித்தது.
“எ... என்ன சொ... சொன்னீங்க... சீனிவாசன் ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆயிருக்காரா...?”
“ஆ... ஆமா...”
“என்னாச்சு...?”
“பஸ்ஸை விட்டு இறங்கி ஆபீஸ்க்கு போகிற வழியில... யாரோ ஒரு பொண்ணை ரெண்டு ரெள ங்க கலாட்டா பண்ணிகிட்டு இருந்திருக்காங்க... சீனி சன் அவங்களை கண்டிக்கப்போக கத்தியால் குத்திட்டாங்க...”
வேதாவுக்கு மார்பை அடைத்தது.
“க... க... கத்தியால் குத்திட்டாங்களா...?”
“ப்ளீஸ்! சீக்கிரம் வாங்க...! சீனிவாசன் உங்க பேரைச் சொல்லித்தான் முனகிட்டிருக்கான்...”
“ஏதும்... ஆபத்தில்லையே...?”
“டாக்டர் ஒண்ணும் சொல்லலை...”
“இப்ப... வர்றேன்...” ரிஸீவரை வைத்து விட்டு அரை நிமிஷத்திற்கு முன்னால் இருந்த சந்தோஷமெல்லாம் தொலைந்து போயிருக்க மானேஜரின் அறையை நோக்கி ஓடினாள்.
விஷயத்தைக் கேள்விப்பட்ட நந்தகோபால் ரிவால்விங் நாற்காலியினின்றும் அதிர்ந்து போய் எழுந்தான்.
“வாங்க... என் கார்லேயே போயிடலாம்...” கிளம்பினார்கள்தாம்பரம் ஜி ஹெச். நல்ல வெய்யிலில் நிறைய அவுட் பேஷண்ட்களோடு கசகசப்பாய் தெரிய காஸுவால்டி வார்டுக்கு முன்னால் சீனிவாசன் நண்பன் சதானந்தம் கலவர முகமாய் நின்றிருந்தான்.
பார்த்ததும் ஓடி வந்தான்.
“ஆபரேஷன் நடந்திட்டிருக்கு...”
வேதா பேச்சு வராமல் திணற நந்தகோபால் கேட்டான்.
“டாக்டர் என்ன சொன்னார்...?”
“கத்திக்குத்து கல்லீரல் வரைக்கும் இறங்கிட்டதாகவும்... ஒரு ஆபரேஷனை பண்ணிட்டுத்தான் ஒரு தீர்மானத்துக்கு வரமுடியும்ன்னு சொல்லிட்டார்.”
“கத்திக்குத்து சம்பவம் எங்கே நடந்தது...?”
“சிட்கோ ஸ்டாப்பிங்கில் இறங்கி நானும் சீனிவாசனும் எங்க ஆபீஸுக்கு போகிற ரோட்ல நடந்துகிட்டிருந்தோம். வழியில ஒரு பூக்கார பொண்ணை துரத்திகிட்டு ரெண்டுபேர் பைக்ல வந்து வம்பு பேசிட்டிருந்தாங்க... ஆள் நடமாட்டம் இல்லாத அந்த ஏரியாவில் பைக்ல வந்தவங்க துணிச்சலா அந்தப் பொண்ணோட கையைப் பிடிச்சு இழுக்கவும்... சீனிவாசன் சூடாகி நியாயம் கேக்கப் போனான். ரெண்டு வார்த்தைகூட பேசியிருக்க மாட்டான்... ரெண்டு பேர்ல ஒருத்தன் கையில் மடக்கி வெச்சிருந்த பேனாக் கத்தியை விரிச்சு... சீனியோட வயத்துல் குத்திட்டான்”
“குத்தினவங்களை பிடிச்சீங்களா...?”
“நான் முயற்சி பண்ணினேன். ஆனா முடியலை... கத்தியைக் காட்டிகிட்டே பைக்ல ஏறி பறந்திட்டாங்க...”
“பைக் நெம்பரைப் பார்த்தீங்களா?”
“ரத்தமா கீழே கிடக்கிற சீனிவாசனை அள்ளி ஹாஸ்பிடலுக்கு உடனே கொண்டு போகணும்ங்கிற... ஞாபகம்தான் இருந்ததே தவிர வேற எந்த ஞாபகமும் எனக்கு இல்ல...”
“போலீஸுக்கு இன்ஃபார்ம் பண்ணிட்டீங் ளாஇன்ஸ்பெக்டர் உள்ளே இருக்கார்...”
வேதா தளர்ந்து போய் அங்கே சுவரோரமாய் போடப்பட்டிருந்த பெஞ்சில் உட்கார்ந்து கொள்ள நந்தகோபால் வார்டுக்கு முன்னால் நின்றிருந்த இன்ஸ்பெக்டரை நோக்கிப் போனான்.

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateJan 13, 2024
பகல் நேர மின்னல்

Read more from ராஜேஷ்குமார்

Related to பகல் நேர மின்னல்

Related ebooks

Related categories

Reviews for பகல் நேர மின்னல்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    பகல் நேர மின்னல் - ராஜேஷ்குமார்

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    Copyright © By Pocket Books

    அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த புத்தகம் அல்லது புத்தகத்தின் எந்த பகுதியையும் வெளியீட்டாளர் அல்லது எழுத்தாளரின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி எந்தவொரு விதத்திலும் மறுபதிப்பு செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது. அனுமதியின்றி பயன்படுத்துவோர் மீது பதிப்புரிமை சட்டம் 2012-ன் படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    1

    தாம்பரத்தில் மின்சார ரெயில் நின்றதும் கும்பலோடு கும்பலாய் இறங்கிக் கொண்டார்கள் சீனிவாசனும் வேதாவும். ஒன்பதரை மணிக்கு சூரியன் நூறு டிகிரியில் கிழக்கின் உச்சியில் கொதிக்க எல்லோர் பிடரியிலும் அக்குளிலும் வெள்ளமாய் வியர்வை. வேதாவுக்கு அதிகமாய் வியர்த்தது. அவளுடைய சிவந்த முகம் வெம்மை தாளாமல் கன்றிப் போயிருக்க கையிலிருந்த கர்ச்சீப் தெப்பமாய் நனைந்திருந்தது. சீனிவாசன் வியர்க்காத முகமாய் நடந்து வர ஆச்சர்யப்பட்டாள்.

    நாம இரண்டு பேரும் சேர்த்துதான் வர்றோம். உங்களுக்கு வேர்வை கொஞ்சம் கூட வரலை...? வேதா டிபன் பாக்ஸ் இருந்த பிளாஸ்டிக் கூடையை வலது கைக்கு மாற்றிக் கொண்டே கேட்டாள். சீனிவாசன் சிரித்தான்.

    அது ஒரு வரம்...

    வரமா...?

    ம்... பாம்பாட்டி சித்தர்ன்னு கேள்விப்பட்டிருக்கியா?

    இல்லையே...?

    வெள்ளியங்கிரி மலையில் முன்னூறு வருஷமா... இருக்கார். அவர் கொடுத்த வரம் இது. வெய்யில் நூத்தி இருபது டிகிரியே கொளுத்தினாலும் சரி... உடம்பிலிருந்து ஒரு சொட்டு வேர்வைகூட வராது.

    வெய்யிலைக்கூட தாங்கிக்கலாம் போலிருக்கு."

    நான் பேசறது அறுவையாயிருக்குன்னு சொல்ல வர்றியா?

    பின்னே...?

    சரி... கூல்ட்ரிங்க் ஏதாவது சாப்பிடறியா...?

    வேண்டாம்... ஆபீஸுக்கு நேரமாச்சு...

    இன்னும் முழுசா... இருபது நிமிஷம் இருக்கே...

    நீங்க வேலை பார்க்கிற மாதிரி... இது ஒண்ணும் கவர்மெண்ட் ஆபீஸ் இல்லை... அஞ்சு நிமிஷம் லேட்டா போனாலும் மெமோ தர்ற பிரைவேட் ஆபீஸ்...

    இப்போ வந்திருக்கிற மானேஜர் ரொம்பவும் நல்ல மாதிரின்னு சொன்னியே...?

    ஐஸ்வாட்டர் மாதிரி இதமா பேசி வேலை வாங்கறார். எங்கப்பா ஒரு ரிடையர்ட் ஸ்கூல் டீச்சர்ன்னு தெரிஞ்சதும்... அவர்க்கு என் மேல...தனி பிடிப்புதான். அதுக்காக... அதையெல்லாம் ஒரு அட்வான்டேஜா எடுத்துகிட்டு... லேட்டா போறதா...?

    உனக்கு நல்லதைத்தானே சொன்னேன்... பார்! முதுகெல்லாம் என்னமா வேர்த்து... ஜாக்கெட்டெல்லாம்... தெப்பல் தெப்பலா...

    அங்கெல்லாம் ஏன் கண்ணு போகுது...?

    ஏன் போனா என்னவாம்... நீ என்னோட ஒண்ணுவிட்ட அத்தை பொண்ணு. என்னிக்கு இருந்தாலும் கட்டிக்கப் போறவன்...

    ஓ... ஓஹ்ஹோ...! அந்த கெட்ட நெனைப்பு வேற மனசுல இருக்கா...?

    இருவரும் சிரித்துக் கொண்டே ஓவர் பிரிட்ஜ் ஏறி ரோட்டுக்கு வந்தார்கள்.

    வேதா...

    ம்...

    நீ எப்பத்தான் கல்யாணத்துக்கு சரின்னு தலையாட்டப் போறே?

    திடீர்ன்னு ஒருநாள்...

    அந்த நாள் இந்த வருஷத்திலேயே வருமா...?

    வரலாம்...

    பிடி குடுக்காமே பேசறியே...

    இதோ பாருங்க சீனி... எனக்கு ஆபீஸ் லோன் சாங்க்ஷனாகி அப்பாவுக்கு அந்த ஹார்ட் ஆபரேஷன் முடிஞ்ச பின்னாடிதான் உங்களுக்கும் எனக்கும்... டும்...டும்...

    அதுவரை காத்து இருக்கணுமா?

    ஆமா...

    ஆபீஸ் லோன் பணத்தை நீ ஏன் எதிர்பார்க்கிறே... நா... வேணும்னா பணம் தர்றேன்.

    நீங்க சேர்த்து வெச்சிருக்கிற பணம் உங்க தங்கச்சியோட கல்யாணத்துக்கு...! அந்தப் பணத்தை நீங்க தொடவே கூடாது...

    எதுக்குமே... நீ ஒத்துவர மாட்டேங்கிறே...

    அதோ... உங்களுக்கு பஸ் வந்தாச்சு... ஏறி ஆபீஸுக்கு கிளம்புங்க.

    பாழாப்போன பஸ்காரன்... இன்னிக்கு அஞ்சு... நிமிஷம் முன்னாடி வர்றான்...

    புலம்பாதீங்க...! சாயந்தரம் அஞ்சு மணிக்கு... இங்கேயே நின்னுட்டிருக்கேன். இன்னிக்கு என்னோட சம்பள நாள்.

    அப்படீன்னா எனக்கு நாயர் ஹோட்டல்ல டிபன் உண்டு

    உண்டு... உண்டு...

    சீனிவாசன் கையை ஆட்டிக்கொண்டே போய் பஸ்ஸுக்குள் தாவி ஏறிக் கொண்டான். வேதாவும் கையசைத்துவிட்டு ரோட்டை க்ராஸ் செய்தாள். வேதாவுக்கு இருபத்தி மூன்று வயது. தலை கொள்ளாத கேசமும் உடம்பில் சிவந்துவிட்ட செம் பொன் நிறமும்... பிற பெண்களின் மனசில் பொறாமைத் தீயை உண்டு பண்ணக்கூடிய வல்லமை. படைத்தவை. ஆனால் வேதா தன் உடம்பு அழகாக இருக்க வேண்டுமே என்பதற்காக எந்த சிரத்தையும்

    Enjoying the preview?
    Page 1 of 1