Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

லேகா என் லேகா
லேகா என் லேகா
லேகா என் லேகா
Ebook299 pages1 hour

லேகா என் லேகா

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

யதார்த்த நிலைக்கு வர நிமிஷ நேரம் பிடித்தது டாக்டர் சுகவனத்துக்கு. கையிலிருந்த கடிதத்தை மறுபடியும் படித்தார். எந்நேரத்திலும் வெடித்து விடக் கூடிய ஒரு வெடிகுண்டைக் கையில் வைத்திருப்பவரைப் போல் ஓர் அவஸ்தை அவரை வியாபித்தது.
"லேகா... இந்த லெட்டர் எப்போது வந்தது?"
"இப்பத்தாங்க. ஒரு பதினைந்து நிமிஷத்துக்கு முன்னாடி. படித்ததுமே கண்ணை இருட்டி தலையைச் சுத்திடுச்சு. மரகதா போன் பண்ணினாளா?"
"உம்."
"ஆபரேஷன் பண்ணி முடிச்சுட்டீங்களா?"
"இல்லே லேகா. தியேட்டருக்குப் போறதுக்கு முன்னாடி போன் வந்தது. உடனே வந்துட்டேன். இப்போ உனக்கு உடம்பு எப்படியிருக்கு லேகா?"
"ஆபரேஷன்?"
"டாக்டர் சண்முகராஜனை பிக்ஸ் பண்ணிக்கச் சொல்லிட்டேன். நீ மயக்கமா விழுந்திருக்கிற விஷயம் தெரிஞ்ச பின்னாடி என்னால கத்தியை எடுக்க முடியுமா லேகா? டாக்டர் மாத்யூவுக்கு இதுல கொஞ்சம் வருத்தந்தான். அதிருக்கட்டும், உனக்கு ஒண்ணு ஆயிடுச்சுன்னு தெரிஞ்சப் பிறகும் இதயத்தை இரும்பாப் பண்ணிக்கிற மனோதிடம் என்கிட்டே இல்லே லேகா. ஒரு டாக்டர் இப்படிப் பேசக் கூடாதுதான். ஆனா பேசறேன்.லேகா கண்களைத் துடைத்துக் கொண்டாள். அவருடைய மார்பினின்றும் விலகி உட்கார்ந்தாள். அவருடைய கையிலிருந்த கடிதத்தைப் பார்த்தாள்.
"இந்தக் கடிதத்திலே இப்படி எழுதியிருக்கே. என்னங்க பண்ணலாம்?" லேகாவின் குரலில் பயம் தெரிந்தது. சுகவனம் எழுந்தார்.
"போலீசுக்கு இன்பார்ம் பண்ணுவோம் லேகா. அவங்க பார்த்துப்பாங்க."
"எனக்கென்னவோ பயமாயிருக்குங்க."
"எதுக்காக பயம் லேகா? எவனோ விளையாட்டுத்தனமா மிரட்டி இருக்கலாம். போலீஸ் கண்டுபிடிச்சுடுவாங்க. கையெழுத்தை வெச்சுக்கிட்டே ஆளைத் தேடி அமுக்கிடுவாங்க. பி.2 போலீஸ் ஸ்டேஷன்லே என்னோட படிச்ச கோகுல்நாத் இன்ஸ்பெக்டரா இருக்கார். அவரைக் கூப்பிட்டு லெட்டரைக் காட்டுவோம்."
லேகா மிரட்சியோடு தலையை அசைக்க...
சுகவனம் டெலிபோனை நோக்கிப் போனார்.
ரிஸீவரின் தலையைத் தொடுவதற்குள் -- அதுவே கூப்பிட்டது. சுகவனம் ரிஸீவரை எடுத்தார். "ஹலோ!"
"ஹலோ! டாக்டர்" மறுமுனையில் ஒரு புதிய குரல் உற்சாகமாய்க் கொப்பளித்தது. கொஞ்சம் இளமையான குரல்.
"யார் பேசறது?" சுகவனம் குரலை உயர்த்தினார்.
"அதையெல்லாம் அடுத்த வாரம் சொல்றேன். டாக்டர், அந்த லெட்டரைப் படிச்சீங்களா? ஷாக் நியூஸ்தான். எனக்கு வேறே வழி தெரியலை..."
சுகவனம் பயத்தில் மிடறு விழுங்கினார். "இந்தாப்பா, நீ யாரு? எதுக்காக அந்தக் கடிதம்? என் லேகாவை ஒண்ணும் பண்ணிடாதே. நீ எது கேட்டாலும் தர்றேன்."
"டாக்டர்! பயப்படாதீங்க. உங்க பிரிய மனைவி லேகாவுக்கு அடுத்த வார முடிவுக்குள்ளே ஏற்படப்போற பயங்கரத்துக்கு நீங்க உங்களைத் தயார் பண்ணிக்க வேண்டியது தவிர்க்க முடியாதது. நீங்க லேகா மேலேவெச்சிருக்கிற பிரியம் எனக்குத் தெரியும். அவ சுண்டு விரல்ல குண்டூசியைக் குத்தினா உங்களுக்கு நெஞ்சில கடப்பாறை பாய்ஞ்ச மாதிரி இருக்கும்ங்கிற சென்டிமெண்ட்ஸும் எனக்குத் தெரியும். ஆனா எனக்கு வேற வழியில்லை. லேகா எனக்கு வேணும்!"
"டேய்...ய்..ய்...ய்!"
"உங்களுக்கு ஆத்திரமாகத்தான் இருக்கும். மொதப் பொண்டாட்டி இறந்ததும் மறு கல்யாணம் செஞ்சுக்கப் பிரியப்படாத உங்களுக்கு உங்க மாமனார் சிவப்பிரகாசம் தன்னோட ரெண்டாவது மகள் லேகாவையே கட்டாயப் படுத்திக் கட்டி வெச்சார். யாருக்கு டாக்டர் கிடைக்கும் அந்த அதிர்ஷ்டம்? அந்த அதிர்ஷ்டத்தில் நானும் கொஞ்சம் கையை வைக்கிறேனே?"
"யூ...யூ...யூ ப்ளடி..."
"திட்டுங்க டாக்டர். அது உங்களோட ஆத்திரத்தை தணிச்சுக்க உதவும். ஒரு விஷயம் சொல்லட்டுமா? போலீசுக்குப் போகாதீங்க. உயிர் போன பின்னாடி ட்ரீட்மெண்ட் கொடுக்க வர்ற டாக்டர் மாதிரியான கேஸ் இது. இந்த ஒரு வாரம் உங்க லேகாவை நல்லாக் கொஞ்சிக்குங்க. அவளை நல்ல ஓட்டலுக்குக் கூட்டிட்டுப் போங்க. சினிமாவுக்கு கூட்டிட்டுப் போங்க. அவ ஆசைப்பட்டதை வாங்கிக் குடுங்க. ஐஸ்க்ரீம் சாப்பிடப் பிரியப்பட்டா தடுக்காதீங்க."
அவன் சிரித்துக் கொண்டே ரிஸீவரை வைத்து விட்டான்.
"யாருங்க அது?" கேட்டாள் லேகா.
"ஸ்கௌண்ட்ரல். லெட்டர் எழுதின ராஸ்கல். மிரட்டறான். போலீஸ்னா என்னான்னு அவனுக்குத் தெரியாது போலிருக்கு."
சுகவனம் டயலைச் சுற்றி பி.2 போலீஸ் ஸ்டேஷனைக் கூப்பிட்டார். இன்ஸ்பெக்டர் கோகுல்நாத் சுலபத்தில் கிடைத்தார்

Languageதமிழ்
PublisherPocket Books
Release dateFeb 8, 2024
லேகா என் லேகா

Read more from ராஜேஷ்குமார்

Related to லேகா என் லேகா

Related ebooks

Related categories

Reviews for லேகா என் லேகா

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    லேகா என் லேகா - ராஜேஷ்குமார்

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    Copyright © By Pocket Books

    அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த புத்தகம் அல்லது புத்தகத்தின் எந்த பகுதியையும் வெளியீட்டாளர் அல்லது எழுத்தாளரின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி எந்தவொரு விதத்திலும் மறுபதிப்பு செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது. அனுமதியின்றி பயன்படுத்துவோர் மீது பதிப்புரிமை சட்டம் 2012-ன் படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    1

    விடியல் நேரம் அது. சாம்பல் இருட்டுக் கழுவப்பட்டுக் கொண்டிருந்தன. முந்தைய ராத்திரியில் மரங்களில் அடைபட்டிருந்த பறவை சமாச்சாரங்கள் சந்தோஷக் கீச்சிட்டு வானத்துக்கு வந்தன. கோவை நகர ஆர்.எஸ்.புரத்து ஆரோக்கியமான பங்களாக்களில், கேஸட்டினின்றும் சுப்ரபாதங்கள் பீறிட்டுக் கொண்டிருக்க, மௌலி பிரவுன் ரோட்டின் ஓரமாய் இருந்த பேக்கரிகளில் சிலோன் ரேடியோ, இன்று பிறந்த நாள் கொண்டாடும் மட்டக் களப்பு ராதாமணிக்கு அவருடைய அப்பா, அம்மா, அப்பப்பா, அம்மம்மா, பாட்டி, தாத்தாமார், மாமன்மார் தங்களுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறார்கள் என்று கரகரத்துக் கொண்டிருந்தது.

    தலையைச் சுற்றி மப்ளர்களைக் கட்டிக்கொண்ட கோவாப்பரேஷன் மில்க் சொசைட்டிக்காரர்கள் சைக்கிள்களை அசுர வேகத்தில் மிதித்துக் கொண்டிருக்க, கணவனுக்கு முன்பாகப் படுக்கையினின்றும் எழுந்து பழக்கப்பட்ட பெண்கள் மட்டும் வாசல்களில் சாணி நீரைத் தெளித்துக் கோலம் போட்டுக் கொண்டிருந்தார்கள்.

    டாக்டர் சுகவனம் காலை வாக்கிங் போய்விட்டுத் தன்னுடைய பங்களா காம்பௌண்ட் கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தார். அணிந்திருந்த வெள்ளை பனியனும் ஷார்ட்ஸும் காலை நேரக் குளிரையும் மீறி வியர்த்து உடம்பால் லேசாய் நனைந்திருந்தன. வருகிற ஜூலையில் நாற்பத்தைந்து வயதைத் தொடப்போகும் டாக்டர் சுகவனத்திற்கு முன் மண்டை சுத்தமாய் வழுக்கையடித்திருந்தது. கண்களில் கிட்டப் பார்வைக்கு கண்ணாடி தங்கப் பிரேமில் அந்தஸ்தாய் உட்கார்ந்திருக்க, குழந்தைத்தனமான முகத்தில் நரையோடிய பிரஷ் மீசை அநியாயமாய் அரும்பியிருந்தது.

    கும்புடறோம் டாக்டரய்யா!

    ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் ஒரே விநாடியில் கோரஸாய் குரல் எழுப்ப, குனிந்தபடி வந்த டாக்டர் சுகவனம் சட்டென்று தலை நிமிர்ந்தார்.

    பங்களாவில் காம்பௌண்ட் சுவரோரமாய்க் கைகளில் பாத்திரங்களோடு ஒரு க்யூ நடுங்கியபடி நின்றிருந்தது.

    சுகவனம் புன்னகைத்தார்.

    உட்காருங்க. அப்படியே உட்காருங்க. நிதானமா இருந்து ஒருத்தருக்கொருத்தர் தள்ளாமே இடிக்காமே பால் வாங்கிட்டுப் போங்க. க்யூவில் முதல் ஆளாய் உட்கார்ந்திருந்த அந்தக் கிழவி தளர்வாய் எழுந்து நின்றபடி சொன்னாள். அய்யா... டாக்டர் அய்யா! தருமதுரை! நீங்க மகராசனா இருக்கணும். நீங்க குடுத்த மாத்திரையை ரெண்டு தடவை நான் சாப்பிட்டேன். பாழாய்ப்போன அந்த நெஞ்சுவலி பறந்து பூடுச்சய்யா!

    அப்படியா பாட்டி! சந்தோஷம் டாக்டர் சுகவனம் கிழவியின் தோளை செல்லமாய்த் தட்டிவிட்டுச் சிரித்தார்.

    வாராவாரம் வெள்ளிக்கிழமை தவறாமே இந்தக் குப்பத்து சனம் பூராவுக்கும் பால் ஊத்தறிங்க. அந்தப் புண்ணியம் உங்களுக்குத் பின்னாடி வர்ற ஒன்பது தலை முறைக்கும் காணும் டாக்டரய்யா. பெரியவர் ஒருவர் தன் எலும்புக் கைகளைக் குவித்தார்.

    எனக்கும் என் மனைவிக்கும் புண்ணியம் வரணும்னு அந்தப் பால் தானத்தைச் செய்யலை பெரியவரே. எங்களோட ஆத்ம திருப்பதிக்காகத்தான் செய்யறோம். இன்னும் கொஞ்ச நேரத்தில் பால் வந்துடும். ஊத்துவாங்க. வாங்கிட்டுப் போங்க!

    சுகவனம் சொல்லிக்கொண்டே பங்களாவின் போர்டிகோவை நோக்கி நடந்தார். கொஞ்சம் நிதானமான நடை. போர்டிகோவில் நின்றிருந்த அம்பாசிடரையும் டயோட்டாவையும் சுற்றிக் கொண்டு வாசற்படி ஏறியவர் சட்டென்று நின்றார்.

    லேகா நின்றிருந்தாள்.

    அவருடைய மனைவி. இரண்டாவது மனைவி. அதிகப் படியான அழகைத் சுமந்து கொண்டிருக்கும் இருபத்தைந்து வயதான மனைவி. இந்த நிமிஷம் கோபமாய் இருந்தாள். குங்குமத்தை லேசாய் முகம் பூராவும் தூவிவிட்ட மாதிரிச் சீற்றத்தில் ஜ்வலித்தது.

    அப்படியே நில்லுங்க!

    என்ன லேகா?

    இன்னிக்கு வெள்ளிக்கிழமைன்னு தெரிஞ்சும் எதுக்காக வாக்கிங் போனீங்க?

    ஸாரி லேகா கண்ணு, மறந்துட்டேன்.

    எப்படி மறக்கும்?

    மறந்தது தப்புதான். கன்னத்துல போட்டுக்கறேன். இனிமே மறக்கமாட்டேன் லேகா கண்ணு. என்னை உள்ளேவிட்டு ஒரு வாய் காப்பி குடேன், குளிர்ல வாக்கிங் போனது உடம்பு பூராவும் சில்லுன்னு இருக்கு.

    லேகா சிரிப்பை அடக்கிக் கொண்டு அவரை உர்ரென்று பார்த்தாள். கோயமுத்துர்லையே பெரிய சர்ஜன். ஆபரேஷன் கேஸ்களைத் தலைவலி கேஸ்களை விடச் சாதாரணமாய் நினைத்துக் குணப்படுத்துவதில் மன்னரான தன் கணவர், இந்த விநாடி தன் முன்னே நின்று ஒரு குழந்தை மாதிரிக் கொஞ்சுவது அவளுக்கு நிரம்பப் பிடித்திருந்தது. அந்த சந்தோஷத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வார்த்தைகளுக்குக் கோப முலாம் அடித்தாள்.

    சரி சரி, சீக்கிரமாய் போய்க் குளிச்சிட்டு வாங்க. இன்னிக்கு நீங்கதான் போய் அவர்களுக்கெல்லாம் பால் ஊத்தணும்.

    ஸாரி லேகா. இன்னிக்குக் குமரன் கிளினிக்கில ஒரு ஆபரேஷன் கேஸ். ஒன்பது மணிக்கு நான் போயாகணும். டாக்டர் மாத்யூ எனக்காகக் காத்திட்டிருப்பார்.

    என்ன, மேஜர் ஆபரேஷனா? லேகா கவலையாய்க் கேட்டாள்.

    ம். ஹார்ட்ல பிளட் க்ளாட்டிங். பெரிய மில் ஓனர், ஆபரேஷன் பீஸ் மட்டும் ஏழாயிரம் ருபாய்!

    ஆபரேஷன் முடிஞ்சு எத்தனை மணிக்கு வருவீங்க?

    மத்தியானம் ரெண்டு மணிக்கெல்லாம் வந்துடுவேன்.

    சீக்கிரமா வந்துடுங்க. இந்த ஒண்டி பங்களாவிலே தனியா இருக்கிறதுக்கு திக்திக்ன்னு இருக்கு.

    பட்டப் பகல். வாசல்ல கூர்க்கா. சமயற்கட்டுல மாதவன் பிள்ளை. வேலைக்காரி மரகதா. தோட்ட வேலை செய்யற வேலு. இத்தினி பேர் பங்களாவிலே இருந்தும் உனக்கு என்ன பயம் லேகா? நீ ரொம்பவும் பூஞ்சை மனசோட இருக்கே. போன வாரம் நான் கொடுத்த வைட்டமின் டேபிலேட்ஸ் ஒழுங்கா சாப்பிடறியா என்ன?

    ம். சாப்பிடறேன்.

    எங்கே சாப்பிடறே? பாட்டில்ல மாத்திரை அப்படியே இருக்கு. உன்னுடைய உடம்பைக் கவனிச்சுக்க உனக்குச் சோம்பேறித்தனம் என்று அதட்டலாய்ச் சொன்னவர் லேகாவின் தோள்மேல் கையை வைத்து நா தழுதழுத்தார்.

    லேகா! உன்னோட அக்காவும் இப்படித்தான். உடம்புக்கு என்ன வந்தாலும், கொடுத்த மருந்தை மாத்திரையை அலட்சியம் செய்வா. நான் என்ன சொன்னாலும் கேட்கமாட்டா. பிடிவாதம் பிடிச்சுப் பிடிச்சு நோயை உள்ளுக்குள்ளேயே வளர்த்துட்டு வந்து - ஒரு வெள்ளிக்கிழமை சாயங்கால நேரத்திலே என்னைத் தவிக்க விட்டுட்டுப் போயிட்டா. நீயும் அவ மாதிரி நடந்து என் மனசை நொறுங்கடிச்சுடாதே!

    சுகவனம் உதடுகள் பிதுங்க, கண்ணீரில் கனத்த விழிகளைத் தாழ்த்தினார். மூக்குக் கண்ணாடியில் நீர் சிதறியது.

    லேகா புன்னகைத்தாள்.

    அழ ஆரம்பிச்சுட்டீங்களா? ஒரு டாக்டருக்கு இவ்வளவு சென்டிமெண்ட்ஸ் இருக்கக் கூடாது. பொண்டாட்டி மேல் அன்பு காட்டலாம். அனுசரணையான இருக்கலாம். ஆனா உங்களை மாதிரி உருகக்கூடாது. போனவாரம் நடந்த லயன்ஸ் கிளப் மீட்டிங்கில் நான் ஐஸ்கீரிம் சாப்பிட்டப்போ நீங்க பதறிப்போய்த் தடுத்து, லேகா கண்ணு, இது உனக்கு வேண்டாம்மா. கோல்ட் அட்டாக்காயிடும்ன்னு சொன்னப்போ உங்க கொலீக்ஸ் அத்தனை பேரும் எவ்வளவு கேலியாச் சிரிச்சாங்க தெரியுமா?

    சிரிச்சிட்டு போறாங்க?

    நீங்க ரொம்ப மாறணும். ஹை சொஸைட்டியிலே இருக்கிற நீங்க பேருக்காவது கிளப் மீட்டிங்ஸ்ல லிக்கர் சிப் பண்ணனும். பைப் பிடிக்கணும். ஒரு சர்ஜனுக்குரிய பிகேவியர் பூராவும் உங்களுக்கு வரணும். பெண்டாட்டிதான் சகலமும் என்கிற மாதிரி எம் பின்னாலேயே 'லேகா என் லேகா'ன்னு குழையடிச்சிட்டு வரக்கூடாது.

    முயற்சி பண்றேன்.

    சீக்கிரமாய்ப் பண்ணுங்க. இப்போ குளிக்கப் போங்க. சுகவனம் பாத்ரூமை நோக்கிப் போனார்.

    குமரன் கிளினிக்:

    வெள்ளுடுப்பில் புகுந்து கொண்ட டாக்டர் சுகவனம், குளோரோபாம் கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்த நோயாளிக்காகக் காத்துக் கொண்டிருந்தார்.

    எதிரே உட்கார்ந்திருந்த டாக்டர் மாத்யூ நோயாளியின் மெடிக்கல் ரிப்போர்ட்டில் கவனமாயிருந்தார்.

    ஹெமோகுளோபின் இனி அஞ்சு பர்சென்ட் குறைந்தாலும் நோயாளி குணமாக வாய்ப்பில்லை டாக்டர் சுகவனம்.

    சிரமம்தான். ஆப்ரேஷன் பண்ணினாலும் ரிஸ்க் இருக்கு. பேஷண்ட்டோட ப்ளட் குரூப் ஸ்டாக் இருக்கா டாக்டர்?

    உம். நேத்தைக்கே ராமகிருஷ்ணா நர்சிங் ஹோமிலிருந்து வேண்டிய மட்டும் கலெக்ட் பண்ணிட்டோம். இவரோட ப்ளட் ரேர் டைப் இல்லை. அவெய்லபிள் க்ரூப்தான்.

    நோ ப்ராம்ப்ளம்.

    நர்ஸ் உள்ளே நுழைந்தாள்.

    டாக்டர்! பேஷண்டுக்குக் குளோரோபாரம் கொடுத்தாலும் கான்ஷியஸாவே இருக்கார். வீ ட்ரை ட்டு அன் கான்ஷியஸ் ஹிம். பட் பெயில்ட்.

    சில கேஸ் இப்படி இழுக்கும். எழுந்தார் சுகவனம்.

    வாங்க டாக்டர், போகலாம். பார்க்கலாம்.

    அவர்கள் புறப்பட எத்தனித்தபோது...

    டெலிபோன் கூப்பிட்டது.

    டாக்டர் மாத்யூ ரிஸீவரை எடுத்தார். மறுமுனையில் குரலை கிசுகிசுத்தவர் சுகவனத்தின் பக்கமாய்த் திரும்பி, போன் உங்களுக்குத்தான் என்றார்.

    சுகவனம் ரிஸிவரை வாங்கிக் காதுக்குக் கொடுத்து, ஹலோ! என்றார்.

    ஐயா! அம்மா திடீர்னு மயக்கமா விழுந்துட்டாங்க. பேச்சு மூச்சு இல்லீங்க. எனக்குப் பயமா இருக்குங்கய்யா!

    சுகவனத்தின் கையிலிருந்த ரிஸீவர் ஓர் இயக்கத்தால் உந்தப்பட்ட மாதிரி நடுங்கியது. அவசரமாய் வியர்த்தார்.

    எ... எ... எப்படி, எப்படி?

    எனக்குத் தெரியலீங்கய்யா. நீங்க உடனே வாங்கய்யா.

    சுகவனம் ரிஸீவரைப் பதட்டமாய்க் கீழே வைத்தார்.

    டாக்டர் மாத்யூ சுகவனத்தின் தோளைத் தொட்டார்.

    டிட் யூ ரிஸீவ் இனி ஷாக் நியூஸ் டாக்டர்?

    என் லேகா திடீர்னு மயக்கமா விழுந்துட்டாளாம். சுகவனம் ஆபரேஷனுக்கான வெள்ளுடுப்பைக் கழற்றினார்.

    டாக்டர், என்ன இது?

    நான் வீட்டுக்குப் போகணும். லேகாவைப் பார்க்கணும்.

    ஆபரேஷன்?

    அரேஞ்ஜ் எனிபடி.

    டாக்டர்! ஆர் யூ ஜோக்கிங்? இந்த லெவன்த் அவர்ல நான் யாரைத் தேடட்டும்?

    டாக்டர் சண்முகராஜன் கிடைப்பார். பிக்ஸ் பண்ணிக்கிங்க நகர ஆரம்பித்துவிட்ட சுகவனத்தை மறித்தார் மாத்யூ.

    மிஸ்டர் சுகவனம். உங்க மனைவி லேகாவைக் கவனிக்க டாக்டர் மனோரஞ்சிதத்தை ஏற்பாடு பண்றேன். யு கம் அண்ட் டூ த ஆப்ரேஷன்.

    ஸாரி மிஸ்டர் மாத்யூ. ஐ யம் அவுட் ஆஃப் மை கண்ட்ரோல். இந்த நிலைமையிலே என்னால் ஆப்ரேஷன் செய்ய முடியாது. அப்படியே செய்தாலும் இட் வில் லீட்டு தீ பிட்டர் ரிசல்ட். மனசிலேயும், உடம்பிலேயும் படபடப்பை வெச்சுக் கிட்டுக் கையில கத்தியை எடுக்கறது அவ்வளவு உத்தமமில்லை. லேகாவை நான் மொதல்ல பார்க்கணும். ப்ளீஸ் லெட் மீ கோ அவுட்.

    மாத்யூ நகர்ந்து நின்று வழி விட்டார்.

    வெளியே பாய்ந்தார் சுகந்தவனம்.

    வேப்பமரத்து நிழலில் நின்றிருந்த காரில் ஐக்கியமாகிச் சரேலென க்ளினிக்கின் காம்பௌண்டை விட்டு வெளியே வந்தார். ஆக்ஸிலேட்டரை அழுத்திப் பிடித்து ஸ்பீடா மீட்டரின் சிவப்பு முள்ளைக் கிறுகிறுக்க வைத்து ரோட்டைத் தேய்த்துக் கொண்டு சவீதா ஹாலைத் தாண்டினார். எதிரே வந்த பஸ்களும், லாரிகளும் அவருக்கு அற்பமாய்ப்பட, ரெண்டாவது நிமிஷ ஆரம்பத்தில் சாஸ்திரி மைதான ரோட்டைத் தொட்டு ராண்டி சாலையில் பறந்தார்.

    சரியாய்

    Enjoying the preview?
    Page 1 of 1