Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Oonjal
Oonjal
Oonjal
Ebook162 pages1 hour

Oonjal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அசிஸ்டெண்ட் டைரக்டரான தாஸ் தன் முதல் பட வாய்ப்புக்காக பல கதைகளை தயாரிப்பாளரிடம் சொல்லி தோற்கிறான்.பேய் கதைதான் டிரெண்ட் என்பதால் தனக்கு திடிரென தோன்றும் ஒரு பேய் கதையை பாதிவரை கூறி பட வாய்ப்பை பெறுகிறான்.அவன் சொன்ன பாதிகதை அவனது அக்கா வீட்டிலேயே நடந்து கொண்டிருப்பதை அறிந்து அதிர்கிறான். கற்பனை உண்மையாகவே நடப்பதால் தாஸ் பயந்து போகிறான்.படத்தின் மீதி கதையை தாஸ் எப்படி எழுதி முடிக்கிறான் என்பதே கதை!

Languageதமிழ்
Release dateAug 10, 2020
ISBN6580135305703
Oonjal

Read more from Erode Karthik

Related to Oonjal

Related ebooks

Related categories

Reviews for Oonjal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Oonjal - Erode Karthik

    http://www.pustaka.co.in

    ஊஞ்சல்

    Oonjal

    Author:

    ஈரோடு கார்த்திக்

    Erode Karthik

    For more books

    http://www.pustaka.co.in/home/author/erode-karthik

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    அத்தியாயம் 40

    1

    கடிகாரத்தின் விண்டர்ஸ்பிரிங் ஓசையை கேட்டு கண் திறந்தான் தாஸ். அவனது கைகள் அனிச்சை செயலாக பக்கத்திலிருந்த அனிதாவை தேடியது. அவளது மென்மையான இடுப்பு கைக்கு அகப்படாமல் ஏமாற்றத்துடன் கண் விழித்தான் தாஸ். கடிகாரம் தன் ஓசையை நிறுத்தி கொண்ட போது அனிதா கையில் ஆவின் பால் பாக்கெட்டுடன் நுழைந்தாள். பால் வாங்க போயிட்டியா? இங்க வாவேன். ஒரு முக்கியமான விசயம் பேசனும் என்றான் தாஸ் அவளை கிறக்கமாக பார்த்தபடி.

    நீ நைட் பேசுனதே போதும். போய்பேஸ் வாஷ் பண்ணிட்டு பிரஷ் பண்ணிட்டு வா என்றாள் அனிதா லைட்டாக வீங்கியிருந்த உதடுகளை தேய்த்தபடி.

    லிப்ஸ்டிக் போட்டு மறைச்சிரு என்றபடி அவன் பாத்ரூமிற்குள் நுழைந்தான். அவன் அரை மணி நேரம் கழித்து வெளியே வந்த போது ஆவி பறக்க டீ டம்ளருடன் நின்றிருந்தவள் இன்னைக்கு நீ வேலன் கம்பெனில கதை சொல்ல போகனும்! ஞாபகம் இருக்கா? என்றாள்.

    இருக்கு! ஆனா இருக்கிற நாலு கதையில எதை சொல்றதுன்னு குழப்பமா இருக்குடி ரெண்டிங் வேற அடிக்கடி மாறிட்டே இருக்கு. என்றபடி டீயை உறிஞ்சினான்.

    உங்கிட்ட இருக்கிற நாலு கதையில ஓன்னு கூடவா அவருக்கு பிடிக்காம போயிரப்போகுது?

    நானும் அதைத்தான் நினைக்கிறேன். என்னோட டைரக்டர் வேற இரண்டாவது ஷெட் யூ லோட படத்தை நிறுத்திட்டு ஊருக்கு போயிட்டாரு

    "ஏன்? என்னாச்சு?

    பைனான்ஸ் பிராபளம் தான். தயாரிப்பாளர் கிட்ட இருந்த காசு காலியாயிருச்சு. லேண்ட் ஓன்னை விலை பேசிட்டு இருக்காரு. அதைவித்து பணம் கைக்கு வந்ததும் தான் மூணாவது ஷெட்யூல் ஷூட்டிங் ஆரம்பமாகும்

    அப்ப இனி உனக்கு வேலையில்லை.?

    ஏன் இல்லை? பகல்ல நிறைய கம்பெனில கதை சொல்வேன். நைட் அனிதாங்குற புத்தகத்தை பிரிச்சு படிப்பேன்.

    இந்த லிவ்விங் டுகெதர் ரிலேசன் ஷூப்பை விட்டுட்டு எப்பத்தான் என்னை கல்யாணம் பண்ணிக்க போற?

    என்னை நம்பலயா? நீ?

    அதுக்கு இது பதில் இல்லை.

    என்னோட முதல் படத்துக்கு பூஜை போடற அன்னைக்கு நமக்கு கல்யாணம். உன்னை ஏமாத்த மாட்டேன். என்னை நம்பு. மெடிக்கல் ஷாப்புல செலவு அதிகமாகுது என்றவன் கீழே கிடந்த காண்டம் பாக்கெட்டை மெத்தைக்கு அடியில் சொருகினான்.

    உங்க அக்காவும் மாமாவும் இதுக்கு ஒத்துக்கணுமே? என்றாள் அனிதா கவலையாக.

    அதை நான் பாத்துக்கிறேன். என்றான் தாஸ் அவளின் தலையை தட்டி.

    இந்த ரிலேசன்ஷிப்பை பத்தி அக்காவுக்கு தெரியுமா? என்றாள் அனிதா.

    தெரியாது. தெரிஞ்சா விளக்கு மாத்தை கையில் எடுத்துருவா! இதை ஏத்துக்கிற அளவுக்கு அவளுக்கு பக்குவம் பத்தாது. மாமாவுக்கு லேசு பாசா விசயம் தெரியும்

    சரி! நான் சமைக்கிறேன். குளிச்சுட்டு சீக்கிரமா கிளம்பு

    தாஸ் கிச்சனில் டம்ளரை கழவி வைத்துவிட்டு துண்டோடு பாத்ரூமில் நுழைந்தான்.

    ஒ ன்பது மணிக்கு அனிதாவை அவளுடைய ஆபிசில் விட்டு விட்டு வேலன் ஆபிசை நோக்கி வண்டியை கிளப்பினான்.

    அப்போதுதான் சாமி கும்பிட்டு விட்டு பூவை காதில் வைத்திருந்த பட்டை போட்டிருந்த வேலன் வாங்க தம்பி! உக்காருங்க! எப்படி இருக்கீங்க? என்றார். நல்லா இருக்கேன் சார் என்று நாற்காலியில் சாய்ந்தவனை டீ, காபி? என்ன சாப்பிடறீங்க?" என்றார்.

    அதெல்லாம் வேணாம். இப்பத்தான் சாப்பிட்டேன் என்றான் தாஸ்.

    உங்கள பத்தி நிறைய கேள்விப்பட்டுக்கேன். ஏவிஎம் ல அசிஸ்டெண்டா நீங்க வேல செய்யறதை நான் பார்த்திருக்கேன்.நல்ல கதையா ஒரு கதைய சொல்லுங்க. வர்ர தையில பூஜைய போட்டு ஆரம்பிச்சிருவோம்

    நாலு கதை இருக்கு சார். ஒவ்வொன்னும் ஓவ்வொரு ஜேன்ர்

    வரிசையா சொல்லுங்க! கேப்போம் என்றார் வேலன்.

    கண்ணை மூடிட்டு தான் கதை கேட்பேன். தூங்கிட்டேன்னு நினைச்சுராதிங்க. உள்ளே விசுவலா ஓடும்

    இரண்டு மணி நேரத்திற்கு பிறகு கைகளை உயர்த்தி நெட்டி முறித்து கொட்டாவி விட்ட வேலன்

    தம்பி! நீங்க சொன்ன நாலு கதையும் நாலு ஜே னர்ல நல்லாத்தான் இருக்கு. ஆனா அதையெல்லாம் இப்ப எடுக்க முடியாது. இப்ப பேய் கதை தான் டிரெண்டிங் ல இருக்கு. நல்லதா ஓரு பேய் கதைய சொல்லுங்க. ஆடியன்ஸ் பயந்து நடுங்கனும். அதுக்கு முன்னால நான் பயப்படனும். அந்த மாதிரி ஒரு கதைய சொல்லுங்க.

    தாஸ் மேசையிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து வாயில் கவிழ்த்து கொண்டான்.

    எப்போதோ உருவாக்கி பாதியில் நிற்கும் ஓரு கதையை யோசித்தவன் இது வாழ்வா சாவா என்ற போராட்டம். கிடைத்த வாய்ப்பை விட்டு விடக் கூடாது என்று நினைத்தவனாக இந்த கதையாவது இந்தாளுக்கு பிடிக்கனுமே என்ற தவிப்போடு அப்படி ஓரு கதை இருக்கு சார்.! கதையோட பேரு ஊஞ்சல் என்றான்.

    டைட்டிலே வித்தியாசமா இருக்கேப்பா! கதைய சொல்லு கேட்போம் என்றார் வேலன்.

    தாஸ் கதை சொல்ல துவங்கினான்.

    2

    மோகன் தூக்கத்திலிருந்து உலுக்கி எழப்பப்பட்டான். அவன் கண் விழித்தபோது எதிரே நின்ற லீலா கையில் டீ டம்ளர் இருந்தது.

    டாக்டர் ஹரிபிரசாத் அதுக்குள்ள பால் வாங்கிட்டு வந்துட்டாரா? என்றான் மோகன் ஆச்சரியமாக.

    உங்களை எழப்பத்தான் வந்தார். தூங்குறதை பார்த்துட்டு டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு வாக்கிங் போயிட்டு பால் வாங்கிட்டு வந்து கொடுத்துட்டு இப்ப ஜாகிங் போயிருக்காரு. என்றாள் லீலா.

    அவரை பேயிங் கெஸ்ட்டா என்னால நினைக்க முடியலை. அவர் வயசுக்கு மீறிய சில வேலைகளை செய்து நம்மை சங்கடப்படுத்தி விடுகிறார்.

    சில நேரம் அவரை நினைச்சா எனக்கு அப்பா மாதிரி பீல் வருது!

    எனக்கும் தான் என்றான் மோகன். டீயை குடித்துவிட்டு வெறும் டம்ளரை அவன் கீழே வைத்த போது அவனது தோளில் இரண்டு பிஞ்சு கரங்கள் விழந்தன.

    தேவி

    நான் தான். குட் மார்னிங் டாடி என்றாள் நான்கு வயது தேவி தன்முன் பற்களை இழந்த பொக்கை வாயோடு.

    போய் பிரஷ் பண்ணிட்டு வா! அம்மா ஹார்லிங்ஸ் போட்டு வைச்சிருக்கா

    ஓகே! ஹார்லிங்ஸ் குடிச்சதும் நான் ஊஞ்சலில் கொஞ்ச நேரம் ஆடுவேன். நீ திட்டக் கூடாது

    இல்லை. திட்ட மாட்டேன். அடுத்த வருசம் ஸ்கூல்ல சேர்க்கும் வரை என்ஜாய் பண்ணிக்க. அப்புறம் ஸ்கூல் போயிட்டா உன்னால ஊஞ்சல்ல ஆட முடியாது.

    ஸ்கூல்ல டீச்சரெல்லாம் அடிப்பாங்கன்னு சொல்றாங்க

    பொய். நல்லா படிச்சா கன்னத்துல முத்தம் கொடுத்து மிஸ் சாக்லேட் தருவாங்க. நீ நல்லா படிக்கனும் சரியா?

    நான் நல்லா படிப்பேன். டாக்டர் தாத்தா எங்க போனாரு?

    வாக்கிங் போயிருக்காரு.வந்துருவாரு.

    தேவி தன் பல்லை பிரஷ் செய்து விட்டு ஹார்லிக்ஸை உதட்டின் மீது வெண்மீசை படிய குடித்தாள்.

    மம்மி! நான் ஊஞ்சல்ல விளையாடப் போறேன். அப்பா கிட்ட பர்மிசன் வாங்கிட்டேன்.

    பாத்து விளையாடு, கீழே விழந்து அடிகிடிபட்றப் போகுது என்றாள் லீலா அடுப்பின் மீது கவனமாக.

    தேவி வீட்டை விட்டு வெளியே வந்தாள். வீட்டிற்கு வெளியே இருந்ததோட்டத்தில் பூத்திருந்த ரோஜா மலர்களை பார்த்து வியந்தாள். நான் நட்டியது எவ்வளவு பெருசா வளர்ந்திருச்சு என்று நினைத்தவள் செருப்பை அணிந்து கொண்டு நீண்ட தார் சாலையில் நடந்தாள்.அவள் வீட்டை சுற்றி வேறு வீடுகளே இல்லை. சுற்றிலும் புதர்கள் நிறைந்த ரோட்டில் மெதுவாக நடந்தாள் தேவி. அவளது வீட்டிலிருந்து

    Enjoying the preview?
    Page 1 of 1