Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Marma Yogi
Marma Yogi
Marma Yogi
Ebook301 pages2 hours

Marma Yogi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தனக்கு பதிலாக கடவுளை அரசனாக்கி விட்டு அவரின் சார்பாக கொடுங்கோலாட்சி நடத்துகிறான் ஜெயசிம்மன். அவனை எதிர்த்து புரட்சி செய்கிறான் பார்த்திபன். அவனுக்கு உதவி செய்ய வந்து சேர்கிறார்கள் கள்வனானஆதித்தனும் அரிஞ்சயனும். மூவரும் இணைந்து எப்படி ஆட்சியை கைப்பற்றுகிறார்கள் என்பதுதான் நாவலின் சுருக்கம்.

Languageதமிழ்
Release dateJan 18, 2021
ISBN6580135307981
Marma Yogi

Read more from Erode Karthik

Related to Marma Yogi

Related ebooks

Related categories

Reviews for Marma Yogi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Marma Yogi - Erode Karthik

    https://www.pustaka.co.in

    மர்மயோகி

    Marma Yogi

    Author:

    ஈரோடு கார்த்திக்

    Erode Karthik

    For more books

    https://www.pustaka.co.in/home/author/erode-karthik

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் - 1

    அத்தியாயம் - 2

    அத்தியாயம் - 3

    அத்தியாயம் - 4

    அத்தியாயம் - 5

    அத்தியாயம் - 6

    அத்தியாயம் - 7

    அத்தியாயம் - 8

    அத்தியாயம் - 9

    அத்தியாயம் - 10

    அத்தியாயம் - 11

    அத்தியாயம் - 12

    அத்தியாயம் - 13

    அத்தியாயம் - 14

    அத்தியாயம் - 15

    அத்தியாயம் - 16

    அத்தியாயம் - 17

    அத்தியாயம் - 18

    அத்தியாயம் - 19

    அத்தியாயம் - 20

    அத்தியாயம் - 21

    அத்தியாயம் - 22

    அத்தியாயம் - 23

    அத்தியாயம் - 24

    அத்தியாயம் - 25

    அத்தியாயம் - 26

    அத்தியாயம் - 27

    அத்தியாயம் - 28

    அத்தியாயம் - 29

    அத்தியாயம் - 30

    அத்தியாயம் - 31

    அத்தியாயம் - 32

    அத்தியாயம் - 33

    அத்தியாயம் - 34

    அத்தியாயம் - 35

    அத்தியாயம் - 36

    அத்தியாயம் - 37

    அத்தியாயம் - 1

    ரத்னபுரியின் எல்லையில் இரண்டு குதிரைகள் களைப்புடன் மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தன. அவற்றின் மேல் ஆரோகணத்திருந்த இரண்டு வாலிப வீரர்களும் தங்களின் குதிரையைப் போலவே வெகுவாக களைத்து போயிருந்தனர். அந்த வாலிப வீரர்களில் இளையவன் குதிரையின் பக்கவாட்டில் தொங்கிய தண்ணீர் குடுவையை எடுத்தான். எடுக்கும் போதே அதன் கனம் குறைவாக இருப்பதை கைகளால் உணர்ந்தவன் அதில் நீர் குறைவாகவே இருப்பதையும் இருவரது தாகத்தையும் தணிக்க அந்த நீர் போதாது என்பதையும் உணர்ந்தவனாக அண்ணா! உனக்கு தாகம் அடிக்கிறதா? என்று அருகில் இருந்தவனிடம் கேட்டான். நீர் அதிகமாக இருந்த போதெல்லாம் தான் அதை குடித்துவிட்டு மீதியைதன் அண்ணனுக்கு தரும் பழக்கம் உள்ள அவன் இப்போது நீர் வேண்டுமா என்று கேட்பதிலிருந்து தம்பிக்கு தாகம் அதிகம் என்பதையும் தன்னை விட்டு விட்டு நீர் அருந்த அவன் விரும்பவில்லை என்பதையும் அறிந்து கொண்ட அண்ணன் எனக்கு தேவையில்லை. நீயே முழு நீரையும் அருந்தலாம் என்று தம்பிக்கு பரிபூரண அனுமதியை கொடுத்தான்.

    கட்டுமஸ்தான தேகத்தை கொண்ட இளையவன் தண்ணீர் குடுவையை முழுமையாக வாயில் கவிழ்த்தான். அதிலிருந்த சொற்ப நீரும் அவன் வாயினுள் சிறு நீர்வீழ்ச்சியாக பாய்ந்தது. தண்ணீர் குடுவையை பழையபடி தொங்க விட்ட இளையவன் நம்மிடம் தண்ணீர் இல்லை. கையிருப்பில் உணவும் இல்லை. நாம் சீக்கிரமாக அவற்றை தேடி கொள்ள வேண்டும் என்றான்.

    பொறு. வழியில் தென்பட்ட பயணி ஒருவன் இந்த வழியில் ஒரு கிராமம் இருப்பதை கூறினானல்லவா? அந்த கிராமம் நெருங்கி விட்டதென்று நினைக்கிறேன். அங்கே நமக்கான தேவைகளை நாம் பூர்த்தி செய்து கொள்ளலாம் என்றான் மூத்தவன். அவனது பதிலைக் கேட்ட இளையவன் அமைதியாக பாதையின் இரு மருங்கிலும் இருந்த இயற்கை காட்சிகளை ரசிக்க துவங்கினான். நீண்ட தூர பயணம் காரணமாக குதிரைகளின் வாயில் நுரை தழும்பி தரையில் ஒழுகி பாதையில் தனித்த அடையாளத்தை உண்டாக்கி கொண்டிருந்தது. செம்மண் புழுதி குதிரைகளின் காலில் ஏறி அவற்றின் இயற்கையான நிறத்தை மாற்றி சிவப்பு நிறமாக மாற்றியிருந்தன.

    மூத்தவன் குதிரைகளைப் போல் வெகுவாக களைத்திருந்தாலும் அவனது முகத்தில் அதை வெளிகாட்டாத ஒரு புன்னகை இருந்தது. யாரும் எளிதில் நம்பும்படியான ஒரு வசீகரம் அவனது முகத்தில் குடிகொண்டிருந்தது. எதையும் ஆழமாக யோசித்து முடிவெடுப்பவன் என்பதை அவனது தீட்சண்யமான கண்கள் வெளிகாட்டின. அவனுக்கு அருகில் வந்து கொண்டிருந்த இளையவனோ துடுக்கும், குறும்புத்தனமும் இணைந்த கலவையாக இருந்தான். எந்த வம்பு தும்புக்கும் போகாதவன் போல் அவனது முகம் இருந்தாலும் வருகிற வம்புகளை இரண்டில் ஒன்று பார்த்து விட அவன் எப்போதும் தயாராகவே இருந்தான்.

    இருவரும் சாலையோரத்தில் இருந்த மரங்களையும் அவற்றில் இருந்த கனி பூ வகைகளையும் ரசித்தபடி மெதுவாக குதிரையில் வந்து கொண்டிருந்தனர். பாதையின் ஓரத்தில் நிறைய குதிரைகள் நின்று கொண்டிருப்பதை பார்த்த மூத்தவன் கடிவாளத்தை இழுத்துப் பிடித்து குதிரையின் வேகத்தை இன்னமும் குறைத்தான். குதிரைகள் நின்ற இடத்திலிருந்து உள்ளே ஓரு தோப்பு இருப்பதையும் அங்கே ஒரு கும்பல் பேசிக் கொண்டு நிற்பதை இருவரும் பார்த்தனர்.

    அண்ணா! அங்கே ஓரே கூட்டமாக இருக்கிறது. என்னவென்று பார்ப்போமா? என்றான் இளையவன்.

    நானும் அதை கவனித்தேன். நம் குதிரைகளை இங்கேயே ஏதாவது மரத்தில் கட்டி வைத்துவிட்டு உள்ளே சென்று பார்ப்போம் என்றான் மூத்தவன்.

    இருவரும் குதிரைகளை மரத்தில் கட்டி வைத்துவிட்டு தோப்பை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.

    நடக்கும் போதே வேலி ஓரத்தில் நின்று கொண்டிருந்த குதிரைகளை பார்த்த இளையவன் இவை அரசாங்க குதிரைகள் போல் தோன்றுகின்றன. அவற்றின் முதுகில் ரத்னபுரியின் அரசாங்க சின்னங்கள் சூட்டு கோலால் பதியப்பட்டிருப்பதை என்னால் இங்கிருந்தே பார்க்க முடிகிறது.

    அப்படியானால் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவர்களிடம் நாம் எந்த வம்பு தும்பும் வைத்து கொள்ள கூடாது.

    நாமாக வம்பிற்கு போவதில்லை. வந்த சண்டையை விடுவதில்லை. எல்லாமே அவர்கள் நம்மிடம் நடந்து கொள்ளும் முறையில் தான் இருக்கிறது.

    சரியாகச் சொன்னாய். இன்று யாருடைய ராசியில் சந்திராஷ்டமம் இருக்கிறதென்று பார்த்து விடுவோம் என்றான் மூத்தவன்.

    புதிதாக இரண்டு பேர் தோப்பினுள் நுழைவதை பார்த்த மொத்த கூட்டமும் பேசுவதை நிறுத்திவிட்டு அமைதியானது. யார் இந்த புதியவர்கள் என்பது போல் எல்லோரும் தங்களையே பார்ப்பதை உணர்ந்த இளையவன் நாங்கள் இந்த நாட்டிற்கு புதியவர்கள். இங்கே என்ன நடக்கிறதென்று நாங்கள் தெரிந்து கொள்ளலாமா? என்றான்.

    உன் வேலையை பார்த்துக் கொண்டு உன் வழியே செல். இது அரசாங்கத்தின் பிரச்சனை என்றான் காவலர் தலைவன் போலிருந்தவன்.

    அவர்களிடமே நியாயம் கேட்போம். மரத்திலிருந்து இளநீரும், பனை மட்டைகளும் காற்றடித்து தானாகவே கீழே விழுந்து கிடந்தால் அதற்கும் வரி கேட்கிறார்கள் தம்பி. இப்படி ஒரு அநியாயத்தை வேறு எங்காவது கேட்டதுண்டா? என்றான் தோட்டத்தின் உரிமையாளன்.

    இதென்ன விந்தை? இப்படி ஒரு அராஜகத்தை நான் வேறு எங்குமே பார்த்ததில்லையே? என்றான் மூத்தவன்.

    எங்கள் நாட்டை தூய்மையாக வைத்திருக்க மன்னர் போட்ட உத்தரவு அது. யார் குப்பை போட்டாலும் அதன் எடைக்கு தகுந்தபடி வரி செலுத்தியாக வேண்டும் என்பது மன்னரின் கடுமையான உத்தரவு என்றான் காவலர்களில் ஒருவன்.

    அய்யா. அது தேவையில்லாமல் குப்பை போடுபவர்களுக்காக கொண்டு வரப்பட்ட சட்டமாக இருக்கலாம். தானாகவே கீழே விழும் இயற்கை பொருட்களுக்கு அவை பொருந்தாது. என்றான் இளையவன்.

    உனக்கு ஓன்றும் தெரியாது. நீ வாயை மூடிக் கொண்டு அமைதியாக இரு. வெளிநாட்டை சேர்ந்தவர்களிடம் நீ நம் மன்னரின் சட்டத்தை குறை கூறி பிலக்கணம் வைத்து நம் நாட்டின் நற்பெயரை கெடுத்த குற்றத்திற்காக இந்த நிமிடத்திலிருந்து நீ தேசவிரோதியாகிறாய் என்றான் காவல் படை தலைவன் தோட்டக்காரனை பார்த்து.

    என்ன? நான் தேசவிரோதியா? என்று அதிர்ச்சியடைந்தான் தோட்ட உரிமையாளன்.

    இளநீர் காற்றடித்து விழுந்ததற்கெல்லாம் கைதா? இது அநியாயம் என்றான் இளையவன்.

    எங்கள் நாட்டு சட்டத்தை குறை கூறியதுடன் அநியாயம் என்று விமர்சனம் செய்த குற்றத்திற்காக உங்கள் இருவரையும் நான் கைது செய்ய உத்தரவிடுகிறேன் என்றான் காவல் படை தலைவன்.

    இதற்கு மேல் நாம் வாயை திறந்து கொட்டாவி விட்டாலும் அதையும் குற்றத்தில் சேர்த்து கொள்வான் போலிருக்கிறதே? என்றான் மூத்தவன்.

    அதிகப்பிரசங்கி. திமிராக வா பேசுகிறாய்? என்ற காவல் படை தலைவன் தன் கையில் சுற்றி வைத்திருந்த நீளமான சவுக்கை கீழே விட்டு ஒரு சொடுக்கு சொடுக்கினான்.

    சந்திராஷ்டமம் யாருக்கென்று இப்போது தெளிவாக தெரிந்து விட்டது என்றான் இளையவன்.

    அவன் தன் நீளமான சவுக்கை சுழற்றும் முன்பாகவே எங்கிருந்தோ வந்த ஒரு குறுவாள் அவன் கையில் மின்னல் வேகத்தில் பாய்ந்தது.

    அனைவரும் கத்தி வந்த திசையில் பார்த்தனர். அங்கே பாதையின் நடுவே குதிரையில் ஓருவன் அமர்ந்திருந்தான். அவனது கையில் மற்றோரு குறுவாள் எறிய தயார் நிலையில் இருந்தது.

    கூட்டம் மொத்தமும் பார்த்திபன் என்றது.

    அவனை பிடியுங்கள் என்று தன் ஆட்களுக்கு கட்டளையிட்டான் காவல் தலைவன். அவனை பிடிக்க நகர்ந்த வீரர்களை வழிமறித்தனர் சகோதர்கள் இருவரும்.

    எங்களை தாண்டி சென்று விட்டால் என் சொத்து முழுவதும் உனக்கே என்றான் இளையவன் வாளை உருவியபடி.

    மேன்மேலும் தவறு செய்கிறீர்கள்? என்றான் காவல் அதிகாரி.

    அவர்களை தடுக்க வேண்டாம் நண்பர்களே! அவர்களுக்கு நான் ஒருவன் போதும் என்றான் அந்த பார்த்திபன். தன்னை நோக்கி ஓடி வந்த வீரர்களில் ஓருவனது காலை நோக்கி குறுவாளை எறிந்தான் பார்த்திபன். அவன் வலி தாளாமல் சட்டென்று நின்றதால் அவனுக்கு பின்னால் வந்த வீரர்கள் அவன் மீது மோதி விழுந்தனர்.

    முட்டாள்கள். படுத்தபடி வானத்தை பார்த்தது போதும். எழுந்து தாக்குதல் நடத்துங்கள் என்று கத்தினான் காவல் அதிகாரி.

    தன்னை சூழ்ந்து கொண்ட வீரர்களை வாளால் தேக்கி நிறுத்திய பார்த்திபன் சொற்ப நேரத்திலேயே அவர்களை துரத்தியடித்தான்.

    காவல் அதிகாரி தட்டு தடுமாறி நடந்தபடி என் கையில் காயம் ஏற்பட்டுவிட்டது. இல்லையென்றால் உன்னை பந்தாடியிருப்பேன். என்றான்.

    அதனால் என்ன பூபதி? உன் காயம் ஆறும் வரை நான் காத்திருக்கிறேன். நானும் நீயும் அடிக்கடி சந்திப்பவர்கள் தானே? அடுத்தமுறை என்னை பார்த்ததும் ஓடாமல் என்னை வாள் சண்டையில் வென்றுகாட்டேன். பார்ப்போம் என்றான் கேலியாக,

    காவல் அதிகாரி தனியாக நின்ற தன் குதிரையில் ஏறிய படி கோழைகள் என்னை தனியாக விட்டு விட்டு ஓடிவிட்டார்கள். என்று முணுமுணுத்தான்.

    பூபதி! அப்படியே ஓடி விடு. உன் பயந்தாங்கொள்ளி வீரர்களை நம்பி வீர சாகசங்கள் செய்ய நினைக்காதே! இந்த முறையும் உன்னை மன்னித்து தொலைக்கிறேன். போய் விடு. இன்னொரு முறை இந்த இடத்தில் உன்னை பார்த்தால் உன் உயிர் உன்னிடம் இருக்காது என்றான் பார்த்திபன்.

    உன்னை நான் பிறகு பார்த்துக் கொள்கிறேன். முதலில் என் காயத்தை பார்க்கிறேன்

    காவல் அதிகாரி அங்கிருந்து போன பின் திரும்பி பார்த்தவன்

    அந்நியர்களே! யார் நீங்கள்? என்றான்.

    என் பெயர் ஆதித்தன். இவர் என் அண்ணன் அரிஞ்சயன்

    நல்லது. ரத்னபுரிக்கு உங்களை வரவேற்கிறேன். பத்திரமாக பயணம் செய்யுங்கள் என்ற பார்த்திபன் தன் குதிரையில் சிட்டாக பறந்து மறைந்து விட்டான்.

    யார் இந்த ஆபத்பாந்தவன்? என்றான் அரிஞ்சயன்.

    அரசனாக இருக்க வேண்டியவர். இப்படி தலைமறைவாக இருக்கிறார் என்றான் ஒருவன்.

    சகோதரர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

    இப்படி ஒரு ஆசாமி இருப்பதை ரணதீரன் நம்மிடம் சொல்லவே இல்லையே? என்றான் ஆதித்தன்.

    அதுதான் எனக்கும் புரியவில்லை என்றான் அரிஞ்சயன்.

    இருவரும் அங்கிருந்து கிளம்பினர்.

    அத்தியாயம் - 2

    சகோதரர்கள் இருவரும் பிரச்சனைக்குரிய அந்த இடத்தில் இதற்கு மேலும் இருப்பது உசிதமல்ல என்பதால் அங்கிருந்து தங்களின் குதிரைகளுடன் மெல்ல நழவினர். களைப்படைந்திருந்த குதிரைகளை பார்த்த அரிஞ்சயன் ஆதித்தா! குதிரைகள் வெகுவாக களைத்திருக்கின்றன. அவற்றுக்கு ஓய்வு கொடுப்பது அவசியம் – இல்லையென்றால் களைப்பின் மிகுதியால் குதிரைகள் மயங்கி விழுந்து விடவும் கூடும். என்று தன் தம்பியை எச்சரித்தான்.

    அதை நானும் கவனித்தேன். இந்த கோமாளிகள் மட்டும் நம் வழியில் குறுக்கிடாமல் இருந்திருந்தால் நாமும் நம் குதிரைகளும் சற்று நேரம் இளைப்பாறியிருக்கலாம். அந்த காவல் அதிகாரியின் கெடுபிடியால் அந்த கிராம மக்கள் வேறு பயந்து போயிருக்கிறார்கள். அவர்களை மேலும் தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்க வேண்டாம் என்று தான் நாம் கிளம்பி வந்து விட்டோம் என்றான் ஆதித்தன்.

    ஆமாம். யார் இந்த பார்த்திபன்? இவனைப் பற்றி ரணதீரன் நம்மிடம் எதுவுமே சொல்லவில்லையே?

    அதைப் பற்றித்தான் நானும் யோசிக்கிறேன் அண்ணா. ஒரு வேளை ஜெயசிம்மனின் ஆட்சிக்கு எதிராக இந்த பார்த்திபன் கிளம்பி இருப்பானோ? என்று எனக்கு தோன்றுகிறது.

    அந்த பெரியவர் ஜெயசிம்மனுக்கு பதிலாக இப்போது அரசனாக இருக்க வேண்டியது இந்த பார்த்திபன் தான் என்று சொன்னதை நீ கவனித்தாயா?

    கவனித்தேன். ஆனால் அதைப் பற்றி முழுமையான தகவல்கள் எதையும் என்னால் அறிய முடியவில்லை. அந்த காவல் அதிகாரி பூபதியும் அவனது பரிவாரங்களும் அதற்கு இடையூறாக வந்து தொலைந்து விட்டார்கள். எனக்கென்னவோ இந்த பார்த்திபன் சமீப காலமாகத் தான் இந்த மாதிரி அரசுக்கு எதிரான கலகங்களில் ஈடுபட்டு வருவது போல் தோன்றுகிறது. இல்லையென்றால் இவனைப் பற்றி ராயரோ அல்லது ரணதீரனோ நம்மிடம் சொல்லி இருப்பார்கள்

    ஆனால் ஒரு விசயத்தை கவனித்தாயா? பிரம்மராயரும் ரணதீரனும் நம்மிடம் சொன்னது போலவே கொடுமையான ஆட்சியைத் தான் ஜெயசிம்மன் நடத்தி கொண்டிருக்கிறான் என்பதை நாம் நம் கண்களாலேயே பார்த்து விட்டோம்

    கீழே விழுந்த இளநீரையும், பனை மட்டைகளையும் குப்பையின் கணக்கில் சேர்த்து வரி விதிப்பதெல்லாம் கொடுமையின் உச்சம்

    இதுவரை நாம் எத்தனையோ எதிரிகளை சந்தித்திருக்கிறோம். அவர்கள் அனைவருமே மக்களை கசக்கி பிழிந்தவர்கள். தன் நலத்திற்காக பொது நலத்தை மறந்தவர்கள். ஆனால் இந்த ஜெயசிம்மன் வேறு மாதிரியான எதிரியாக இருக்கிறான். தன்னுடைய அரசியல் லாபங்களுக்காக மதத்தை பயன்படுத்தி கொண்டிருக்கிறான். இவனை வெல்வது மிகவும் கடினம்.

    அதுதான் எனக்கும் சிந்தனையாக இருக்கிறது. அருகில் இருக்கும் மலைநாட்டு மன்னன் ரணதீரன் ஜெயசிம்மனை விட படைபலத்தில் வலுவானவன். அவனாலேயே ரத்னபுரியின் மீது படையெடுக்க முடியவில்லை. வரி என்ற மக்களை வாட்டி வதைக்கும் ஜெயசிம்மனின் மீது ரணதீரனுக்கு தீராத வெறுப்பு இருக்கிறது. தன் நண்பர்களான தீரனையும் விரனையும் வஞ்சகமாக கொன்ற ஜெயசிம்மனின் மீது அவனுக்கு தீராத பகையும் இருக்கிறது. அந்த பகையை தீர்த்து கொள்ள ஜெயசிம்மனை அழித்தொழிக்க வழி தெரியாமல் கையை பிசைந்து கொண்டிருக்கிறான்

    அதற்கு காரணம் ஜெயசிம்மனின் மதம் கலந்த அரசியல். அந்த கேடயம் அவனை ரணதீரனிடம் இருந்தும் காப்பாற்றுகிறது. மக்களிடம் இருந்தும் காப்பாற்றுகிறது!

    அந்த கேடயத்தை சுக்குநூறாக உடைக்கத் தானே நம்மை இங்கே அனுப்பியிருக்கிறார்கள்.

    இதுவரை இப்படி ஒரு சூழலை நாம் இருவருமே எதிர்கொண்டதில்லை. அதனால் தான் எனக்கு கொஞ்சம் தடுமாற்றமாக இருக்கிறது

    இப்போதைக்கு என்னிடம் இருக்கும் ஒரே திட்டம் முள்ளை முள்ளால் எடுப்பது தான். கடவுளின் அடிமை என்று கூறி அரசியல் செய்பவனை அவனது கடவுளைப் பயன்படுத்தியே வீழ்த்துவோம். அதற்கு முதலில் நீ பழையபடி இளம் துறவியாக மாறிவிட வேண்டியது தான்

    அடப்பாவி. மீண்டும் எனக்கு காவி வேடமா? என்றான் அயர்ச்சியுடன் அரிஞ்சயன்.

    அதற்கு உங்களின் முகம் வெகு பொருத்தமாக இருக்கிறது. பார்க்கும் அனைவரும் உங்களை துறவியாகவே நினைக்கும் படி உங்களின் பேச்சும், செய்கையும் இருப்பதை நானே பல முறை வியப்புடன் பார்த்திருக்கிறேன்.

    அடிக்கடி துறவி வேடம் போட்டு போட்டு கடைசியில் ஒரு நாள் நான் உண்மையாகவே துறவியாக மாறி விடப் போகிறேன் பார்

    மக்கள் அவர்களைத் தான் நம்புகிறார்கள். ஆண்டவனின் தூதுவராக நினைத்து நீங்கள் சொல்வதை வேதவாக்காக நினைத்து நடக்கிறார்கள்

    அதுவும் சரிதான். எனக்கு இளம் தூறவி வேடம் என்றால் உனக்கு?

    நான் வழக்கம் போல் உங்களின் தலைமை சீடன். பைராகியின் மாளிகையில் நீங்கள் சில கண்கட்டு வித்தைகளை கற்று கொண்டிர்களே? அதை பிரயோகிக்கும் நேரம் நெருங்கி விட்டது என்று நான் நினைக்கிறேன்.

    ஆமாம். அவற்றை செய்தால் பாமர மக்கள் என்னை மிக எளிதாக நம்பி விடுவார்கள். நல்ல நேரத்தில் அதை நீ ஞாபகப்படுத்தினாய்

    நம் நோக்கம் மக்களை ஏமாற்றுவதல்ல. மதத்தை வைத்து மக்களை ஏமாற்றும் அந்த எத்தனை ஏமாற்றுவது தான்

    கவலைப் படாதே! இந்த யோகி செய்யும் சித்து வேலைகள் வெகு விரைவிலேயே அந்த ஜெயசிம்மனின் காதுகளை சென்றடையும். அவனே நம்மை அரண்மனைக்கு அழைப்பான்

    ஆனால் நாம் அங்கே போக கூடாது. அவனை நம் இடத்தை தேடி வர வைக்க வேண்டும்

    அவனது அரண்மனைக்கு போவது நமக்கு அனுகூலம் தானே? பிறகு ஏன் நாம் அங்கு போக மறுக்கவேண்டும்?

    துறவிக்கு வேந்தன் துரும்பல்லவா? அவன் அழைத்ததும் நாம் போனால் நம்மை இளப்பமாக நினைப்பான் நமக்கு மதிப்பிருக்காது. அதுவே வரமுடியாது என்று பிகு செய்தால் அவன் நம்மை உண்மையாகவே நம்புவான்

    ஆஹா.! இதற்குத்தான் என் தம்பி வேண்டும் என்பது என்று அரிஞ்சயன் ஆதித்தனின் தோளில் தட்டி கொடுத்தான்.

    இருவரும் பேசியபடியே குதிரைகளை மெதுவாக நடத்தி சென்றனர். மெதுவாகவே சென்றதால் குதிரைகள் பாதையின் ஓரமாக இருந்த பசும் புற்களையும் செடி கொடிகளையும் மேய்ந்தபடி நடை போட்டன. ஆதித்தனின் கண்களில் சற்று தூரத்தில் இருந்த ஒரு சத்திரம் தென்பட்டது.

    அப்பாடா! அதோ அங்கே ஓரு சத்திரம் தென்படுகிறது. வாருங்கள் அங்கே சற்று நேரம் இளைப்பாறுவோம்.

    "நம்மை விட குதிரைகள் அதிகமாக களைத்திருக்கின்றன. அவற்றிற்குத் தான் உணவும் தண்ணீரும் ஓய்வும்

    Enjoying the preview?
    Page 1 of 1