Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Luptup Ladakh
Luptup Ladakh
Luptup Ladakh
Ebook109 pages36 minutes

Luptup Ladakh

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கோயம்புத்தூரிலிருந்து சத்யசஞ்சீவி எனும் இளைஞன் லடாக்குக்கு பைக் பயணம் கிளம்புகிறான். அவனது பெற்றோரும் காதலியும் வழி அனுப்புகின்றனர். வழியில் சஞ்சீவிக்கு பல்வேறு விதமான அனுபவங்கள்.

இப்போது கேரளாவிலிருந்து வரும் ஆறு பைக்கர்கள் சஞ்சீவியுடன் கூட்டணி சேர்கின்றனர். கேரள பைக்கர்களில் ஒரு பெண் சஞ்சீவியை கண் மூடிதனமாக காதலிக்கிறாள். போபால், ஜான்சி, ஆக்ரா, ந்யூடெல்லி, தாண்டி லடாக்கின் எல்லையில் கால் வைக்கும் போது சஞ்சீவி அண்ட் கோ அதளபாதாளத்தில் பைக்குடன் தள்ளி விடப்பட்டு வன்கொலை செய்யப்படுகின்றனர். சஞ்சீவியின் காதலி அபர்ணாவின் வேண்டுகோளின் படி டியாரா ராஜ்குமார் சஞ்சீவியின் மரணத்தை பற்றி துப்பறிய லடாக் செல்கிறான். டியாராவின் துப்பறிதல் ஆரம்பிக்கிறது.

Languageதமிழ்
Release dateJun 28, 2023
ISBN6580111009904
Luptup Ladakh

Read more from Arnika Nasser

Related to Luptup Ladakh

Related ebooks

Related categories

Reviews for Luptup Ladakh

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Luptup Ladakh - Arnika Nasser

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    லப்டப் லடாக்

    Luptup Ladakh

    Author:

    ஆர்னிகா நாசர்

    Arnika Nasser

    For more books

    https://www.pustaka.co.in/home/author/arnika-nasser-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    கதைச்சுருக்கம்

    கோயம்புத்தூரிலிருந்து சத்யசஞ்சீவி எனும் இளைஞன் லடாக்குக்கு பைக் பயணம் கிளம்புகிறான். அவனது பெற்றோரும் காதலியும் வழி அனுப்புகின்றனர்.

    வழியில் சஞ்சீவிக்கு பல்வேறு விதமான அனுபவங்கள்.

    ஒரு விலைமகளை சந்தித்து அவளின் பசியாற்றுகிறான்.

    திருப்பதி தரிசனம் முடித்து கிளம்பும் சஞ்சீவியின் வாகனத்தின் மீது இருபதுக்கும் மேற்பட்ட ஸ்கூட்டி பெப்கள் சங்கிலி அறுந்து பாய்கின்றன.

    விஜயவாடா நெருங்கும் போது ஒரு வழிபறி கொள்ளையர் கூட்டம் சஞ்சீவியை தாக்குகிறது. சஞ்சீவியை போக்குவரத்து போலீஸார் காப்பாற்றுகின்றனர். பைக் பயணத்தை ரத்து செய்து கோவை திரும்ப சொல்கிறது. மறுக்கிறான் சஞ்சீவி.

    நாக்பூரை தாண்டும் போது சஞ்சீவிக்கு ஒளியியல் மாயைகள் தோன்றுகின்றன. மேற்குவங்க மணப்பெண், நாக்பூர் பாரம்பரிய நடனப்பெண்கள், நாற்பதுக்கும் மேற்பட்ட கரிய உருவங்கள். மாயைகளிலிருந்து தெளிவு பெறுகிறான் சஞ்சீவி.

    இப்போது கேரளாவிலிருந்து வரும் ஆறு பைக்கர்கள் சஞ்சீவியுடன் கூட்டணி சேர்கின்றனர். கேரள பைக்கர்களில் ஒரு பெண் சஞ்சீவியை கண் மூடிதனமாக காதலிக்கிறாள்.

    போபால், ஜான்சி, ஆக்ரா, ந்யூடெல்லி, தாண்டி லடாக்கின் எல்லையில் கால் வைக்கும் போது சஞ்சீவி அண்ட் கோ அதளபாதாளத்தில் பைக்குடன் தள்ளி விடப்பட்டு வன்கொலை செய்யப்படுகின்றனர்.

    சஞ்சீவியின் காதலி அபர்ணாவின் வேண்டுகோளின் படி டியாரா ராஜ்குமார் சஞ்சீவியின் மரணத்தை பற்றி துப்பறிய லடாக் செல்கிறான்.

    டியாராவின் துப்பறிதல் ஆரம்பிக்கிறது.

    டெபுடி கமிஷனர் மூலம் கடந்த ஒரு வருடத்தில் 143 பைக்கர்கள் மரணம் அடைந்த செய்தி கிடைக்கிறது.

    டியாராவும் டெபுடி கமிஷனரும் லடாக்கின் அரசியல் சூழ்நிலைகளை அலசி ஆராய்கின்றனர். பைக்கர்ஸ் வருகையால் சுற்றுலா வருமானம் குறைகிறதென்று விடுதிகள் உரிமையாளர்கள் வாடகை வாகன உரிமையளார்கள் உணவு விடுதி உரிமையாளர்கள் சேர்ந்து பைக்கர்களை கொல்கிறார்களோ?

    டியாரா சர்வ அரசியல் கட்சி பிரமுகர்கள் கூட்டத்தை கூட்டி விவாதிக்கிறான். பல அரசியல் அதிருப்திகள் லடாக்கில் உலாவுவதை காதுறுகிறான்.

    ஒரு நபர் லடாக்கின் ஒரு கிராமத்துக்கு டியாராவை வரச் சொல்கிறார்.

    அங்கு டியாரா அண்ட் கோ போனால் அவர்களை கொல்ல முயற்சிக்கிறான். ஒரு திபெத்தியன். பொலிவிழந்து மரணபடுக்கையில் கிடக்கும் லடாக்கை பார்க்க லட்சக்கணக்கில் சுற்றுலா பயணிகள் ஏன் வருகிறீர்கள்? அதனால்தான் 143 கொலைகள் என்கிறான்.

    அவனுடன் சண்டையிட்டு அவனை கைது செய்கிறாள் ஸிஜா.

    உள்துறை அமைச்சகம் விழித்துக்கொண்டு லடாக்கை நவீனபடுத்த அனைத்து நிதி உதவிகளையும் செய்கிறது. சஞ்சீவியின் ஆன்மா சாந்தியடைகிறது.

    இக்கதையில் பல சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த ஊர்களை வர்ணித்திருக்கிறேன். கதை படிக்க சஞ்சீவியுடன் நாமும் பைக் பயணம் போனது போல உணர்வோம்.

    அத்தியாயங்களின் முகப்பு கவிதைகளாக தஞ்சை ஹரிணியின் ‘என்பா’ எனப்படும் புது வகை கவிதைகளை இணைத்துள்ளேன்.

    மாலைமதிக்கு எழுதுவது எனக்கு தனிமகிழ்ச்சி. தொடர்ந்து சிறப்பான கதைகளை தருவேன் என உறுதியளிக்கிறேன்.

    என்றென்றும் அன்புடன்

    ஆர்னிகா நாசர்

    C/O டாக்டர் ஆ. நிலாமகன்

    61 பி. மனாஸ் கார்டன்

    ஜி.எம் நகர்.

    தெற்கு உக்கடம்

    கோவை: 641 001.

    கை பேசி: 7358962913 / 9442737404

    1

    பயணம் என்பது பந்தயக்குதிரை

    பறக்கும் பறவைக்கு பெரிதல்ல வானம்

    இலக்கின் தூரம் எறும்புக்கும் புரியும்

    பாய்ந்து பறப்போம் பிரபஞ்சம்

    - ஹரிணி

    கோவை வடவள்ளி பாரதிகாலனி.

    அந்த வீடு 2400 சதுர அடியில் மூன்றுமாடி கட்டடமாய் கட்டப்பட்டிருந்தது. மொட்டை மாடியில் தோட்டம்.

    ராம்பிரசாத் வயது 62. தபால்தந்தி துறையில் உயர் பதவி வகித்து ஓய்வு பெற்றவர்.

    அவரின் மனைவி கோகிலா வயது 59. கடமை உணர்வு தவறாத இல்லத்தரசி.

    ராம்பிரசாத்துக்கும் கோகிலாவுக்கும் ஒரே மகன் சத்யசஞ்சீவி. ராம்பிரசாத்தின் 38வது வயதில் சத்யசஞ்சீவி பிறந்தான். ஆர்க்கிடெக்சர் படித்தவன். உயரம் 175 செமீ. ரோஸ்நிறம் சுருள் முடி. மீசையும் தாடியும் இணைந்த பிரஞ்ச் தாடி. கழுத்தில் ஒற்றை உத்திராட்சங்கொட்டை. சத்யசஞ்சீவி ஒரு சாகச விரும்பி.

    பெற்றோருடன் அமர்ந்து காபி உறிஞ்சினான் சத்யசஞ்சீவி.

    மேஜையின் மீது பத்துக்கும் மேற்பட்ட லேமினேட் செய்யப்பட்ட பைக்குகளின் புகைப்படங்களை விசிறினான். அம்மா! இதில் ஒரு பைக்கை தான் வாங்கப்போறேன்…

    * ராயல் என்பீல்டு இன்டர்ஸெப்டர் 650

    * பஜாஜ் அவஞ்சர் க்ரூஸ் 220

    * கேடிஎன் 390 – ட்யூக் - இ

    * ராயல் என்பீல்டு தண்டர்பேர்டு 350

    Enjoying the preview?
    Page 1 of 1