Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thirumarai Nabimozhi Islamiya Neethikathaigal Thoguthi - 8
Thirumarai Nabimozhi Islamiya Neethikathaigal Thoguthi - 8
Thirumarai Nabimozhi Islamiya Neethikathaigal Thoguthi - 8
Ebook235 pages1 hour

Thirumarai Nabimozhi Islamiya Neethikathaigal Thoguthi - 8

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நீண்ட நாட்கள் மதத்தின் கரையில் அமர்ந்து வேடிக்கை பார்த்தேன். பின் மதத்திற்குள் குதித்து நீந்த ஆரம்பித்தேன். நீந்தினாலும் நான் மதத்திற்குள் மூழ்கி விடவில்லை நான்.

திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ் கருத்துக்களை உள்வாங்கி நீதிக்கதைகள் எழுதியுள்ளேன். பைபிள் கதைகளும் திருக்குறள் கதைகளும்தான் எனக்கு அழகிய முன்மாதிரி.

இஸ்லாமிய விழுமியங்கள் கோட்பாடுகள் உணவு பழக்கவழக்கங்கள் வட்டார மொழி வழக்கு அனைத்தையும் கதையாக்கியுள்ளேன்.

Languageதமிழ்
Release dateJun 4, 2022
ISBN6580111008310
Thirumarai Nabimozhi Islamiya Neethikathaigal Thoguthi - 8

Read more from Arnika Nasser

Related to Thirumarai Nabimozhi Islamiya Neethikathaigal Thoguthi - 8

Related ebooks

Reviews for Thirumarai Nabimozhi Islamiya Neethikathaigal Thoguthi - 8

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thirumarai Nabimozhi Islamiya Neethikathaigal Thoguthi - 8 - Arnika Nasser

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    திருமறை நபிமொழி இஸ்லாமிய நீதிக்கதைகள் தொகுதி – 8

    Thirumarai Nabimozhi Islamiya Neethikathaigal Thoguthi - 8

    Author:

    ஆர்னிகா நாசர்

    Arnika Nasser

    For more books

    https://www.pustaka.co.in/home/author/arnika-nasser

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    உள்ளடக்கம்

    1. கிளை விட்டு கிளை தாவி...

    2. கணவன் கட்டளை

    3. கொடுத்ததை திருப்பிக் கொடு!

    4. ஒஸாமா பின்லேடன்

    5. எனது கிறிஸ்துவ மனைவி

    6. குடும்ப வக்பு

    7. லியான்

    8. பல் மருத்துவன்

    9. முக்கால் முஸ்லிம்

    10. பெண் முத்தவல்லி

    11. திருமண வரவேற்பு

    12. நயன்தாராவும் தமன்னாவும்

    13. நானே குளிப்பாட்டுவேன்

    14. எட்டுப்பெயர்கள்

    15. காலண்டர்

    16. பேத்தி

    17. வாசியுங்கள் வாரிசுகளே!

    18. இமாம்பரா

    19. பள்ளிக்குள் கடன் பிரச்சனை

    20. ஒச்சாயீ

    21. எட்டு வயது இமாம்

    22. மோதினாரின் ஆசை

    23. வான் கோழி இறைச்சி

    24. மேலான சாட்சியம்

    25. இரவலை தானமாக...

    சமர்ப்பணம்

    WhatsApp Image 2022-05-11 at 10

    நாகூர் இஎம் ஹனிபா

    மதநல்லிணக்க மாமனிதர் நாகூர் ஹனிபா அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

    1. கிளை விட்டு கிளை தாவி...

    மயிலாப்பூர்.

    ஜன நெரிசல் மிக்க ஒரு தெருவில் அமைந்திருந்தது அட்வகேட் அமீர் அலியின் அலுவலகம் இணைந்த வீடு.

    சட்டப்புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்ட நான்கு சுண்ணாடி பீரோக்கள் நின்றிருந்தன. இருக்கையில் அமர்ந்து ஒரு கேஸ்கட்டை பிரித்து வாசித்துக்கொண்டிருந்தார் அட்வகேட் அமீர் அலி. வயது 62, ஆறடி உயரம். கச்சிதமான தாடி. பவர் கிளாஸ்.

    வக்கீல் குமாஸ்தா வந்து நின்றான். சார்

    நிமிர்ந்தார். என்னப்பா?

    உங்களை பாக்க ஒரு கிளையன்ட் வந்திருக்காரு!

    உள்ளே வரச் சொல்லு.

    முப்பது நொடி அவகாசத்தில் ஒரு 35 வயது முதிர்இளைஞன் வந்து நின்றான். அஸ்ஸலாமு அலைக்கும்!

    வஅலைக்கும் ஸலாம்! என்றார். முகமன் கூறுவதில் திணறுகிறானே... பார்க்கவும் முஸ்லிம் போல் இல்லையே...

    எனக்கு ஒரு விஷயத்தில் சட்ட ஆலோசனை வேண்டும் பாய்!

    உட்காருங்கள். உங்களுக்கு என்ன பிரச்சனை?

    வந்தவன் ஒரு மாதிரி அசடு வழிய சிரித்தான். ‘வரிசையா அட்வகேட் வீடுகளா பாத்திட்டு வந்தேன். முஸ்லிம் அட்வகேட்னு போர்டு பாத்ததும் உள்ளே நுழைஞ்சேன். என் பிரச்சனையை உங்களாலதான் தீர்த்து வைக்க முடியும்.’

    அப்டியா? நல்லது! உங்க பெயரென்ன என்ன வேலை பாக்றீங்க?

    எ... எ... எந்த பேரை சொல்றதுன்னு தெரியல!

    நீங்க பேசுறது புரியல. தெளிவா சொல்லுங்க!

    என்னுடைய ஒரிஜினல் பெயர் ஆராவமுதன். ரெவின்யூ டிபார்ட்மென்ட்ல வொர்க் பண்றேன். பின்னாளில் நான் முஸ்லிம் மதத்துக்கு மாறினப்ப என் பெயர் ஜியாவுத்தீன் ஆய்ருச்சு!

    உங்க பிறந்த ஊர் எது?

    கடலூர்!

    உங்க பிறந்த தேதி என்னா?

    09.08.1975!

    உங்க பெற்றோர் பெயர் என்ன?

    முத்துராமன் - பழனியம்மாள்!

    உங்க ஒரிஜினல் மதம் எது? அதன் எந்த உட்பிரிவை சேர்ந்தவர். நீங்க?

    இந்து – படையாச்சி.

    என்ன படிச்சிருக்கீங்க?

    டிகிரி ப்ளஸ் டிபார்ட்மென்ட்டல் டெஸ்ட் பாஸ் பண்ணியிருக்கேன்!

    உங்களுக்கு எப்ப கல்யாணமாச்சுது?

    எட்டு வருஷங்களுக்கு முன்னாடி, 2002 ஆம் ஆண்டு!

    இந்து திருமணப்படிதானே உங்க கல்யாணம் நடந்துச்சு?

    ஆமா பாய்!

    உங்க மனைவி பெயர் என்ன?

    புஷ்பலதா!

    காதல் திருமணமா. அரேன்ஞ்சுடு மேரேஜா?

    அந்தக் கழுதையை எவன்ங்க காதலிச்சு கல்யாணம் பண்ணிப்பான்? அரேன்ஞ்சுடு மேரேஜ்தாங்கா!

    அப்றம் என்ன நடந்துச்சுன்னு சுருக்கமா சொல்லுங்க ஆராவமுதன்!

    நீங்க என்னை ஜியாவுத்தீன் என்றே கூப்பிடுங்கள். அதுதான் எனக்கும் என் வாழ்க்கைக்கும் நல்லது!

    சரி சொல்லுங்க!

    மூணு வருஷத்துக்கு முன்னாடி ‘காவ்யா’ என்ற பெண்ணை சந்திச்சேன். அவளும் அரசு அலுவலகம் ஒன்றில் எல்டிசி கிளார்க்கா இருந்தா. எங்களுக்குள்ள காதல் வலுவாகிப் போச்சு. எங்க காதல் விஷயத்தை மனைவிகிட்ட நைச்சியமா வெளிப்படுத்தினேன். என் மனைவி சாமியாடிட்டா. என்னையையும் என் காதலியையும் வெட்டிக் கொன்னிருவேன்னு மிரட்னா. நாங்க வேலை பாக்ற ஆபிஸ்கள்ல புகார் பண்ணி எங்க எங்க வேலைகளை தொலைச்சுபுடுவேன்னு கொக்கரிச்சா. எங்க ரெண்டாவது கல்யாணம் அவ பிணத்துமேலதான் நடக்கும்னு எச்சரிச்சா.

    பொண்டாட்டின்னா அப்டிதான் இருப்பா இருக்கனும். அப்றம் நடந்தத சொல்லுங்க!

    தாலி கட்டாமலே புருஷன் பொண்டாட்டியா வாழ்வோம்னு காவ்யாகிட்ட யோசனை சொன்னேன். அவளோ கல்யாணம் கட்டிக்கிட்டா சேர்ந்து வாழலாம். இல்லன்னா பிரிஞ்சு அவங்க அவங்க வழில போயிட்டே இருக்கலாம்னா. அங்கயும் இங்கயும் மாட்டிக்கிட்டு அல்லாட சள்ளையா இருந்துச்சு. யோசிச்சேன் என்ன பண்ணலாம்னு!

    மொத பொண்டாட்டி புஷ்பலதாவை கொல்லக்கூட திட்டம் போட்ருப்பிங்களே?

    ஆப் தி ரிக்கார்ட்... ஆமா பாய்!

    அப்புறம்?

    காவ்யா இல்லாம என்னால் ஒரு நிமிஷம் இருக்க முடியாது பாய். அவளை மாதிரி ஒரு பேரழகியை நீங்க மயிலாப்பூர்ல கூட பாக்கமுடியாது. அவளை தக்க வச்சிக்க புஷ்பலதாவை வெட்டிவிட என்ன செய்யலாம்னு விழுந்து விழுந்து யோசிச்சேன்!

    சரி!

    எனக்கு கீழே நவாப்ஜான் என்ற கிழவன் ஒருத்தன் வேலை பார்த்தான். அவனுக்கு மூணு பொண்டாட்டிகள். ரிட்டையர்மென்ட்க்குள்ள இன்னொன்றும் கட்டிக்காட்ரேன்னு சவால் விட்டான். அவனது மூன்று திருமணங்களும் சகமனைவிகளின் சம்மதத்துடன் நடந்திருந்திருக்கிறது. தவிர அவனுக்கு இந்து திருமணச்சட்டம் பொருந்தாது; இஸ்லாமிய திருமணசட்டம்தான் பொருந்தும். ஆகையால் அவனது மூன்று திருமணங்கள் அவனது வேலையை பலி கேட்கவில்லை. அவனிடம் என் பிரச்சனையை கூறினேன்!

    அவன் என்ன சொன்னான்?

    அவன் ஒரு சூப்பர் ஐடியா கொடுத்தான். முஸ்லிமுக்கு மாறு. மாறுனா புஷ்பலதா, காவ்யா தவிர இன்னும் ரெண்டு திருமணங்கள் செய்யலாம் என்றாள். அவளது யோசனை எனக்கு பிடித்திருந்தது. டாக்டரிடம் போய் சுன்னத் செய்து கொண்டேன். பள்ளிவாசல் போல் அஞ்சு கலிமா சொல்லி தொழுதேன். என் பெயர் ஜியாவுத்தீன் என மாறுச்சு. காவ்யாகிட்ட பேசிப்பேசி அவளையும் சம்மதிக்க வைச்சேன். அவ முஸ்லிமானா. அவ பேரு ஹஸ்மத் சகினா ஆச்சு.

    ஸோ முஸ்லிம் தம்பதிகள் ஆய்ட்டீங்க. ஆப் தி ரெக்கர்ட் கேக்றேன் ஜியாவுத்தீன், புனித திருக்குர்ஆன் தமிழ் மொழி பெயர்ப்பாவது வாசிச்சிருக்கீங்களா? தினம் ஐவேளை தொழுவீங்களா? மொதல்ல தொழ தெரியுமா உங்களுக்கு? இந்த மூணு வருஷத்ல நோன்புகீன்பு வச்சிருக்கீங்களா? ஜக்காத் கிக்காத் ஏழை மக்களுக்கு குடுத்திருக்கீங்களா?

    அதெல்லாம் எனக்கு ஒன்னும் தெரியாது. சுயபாதுகாப்புக்காக இந்த கிளைலயிருந்து அந்த கிளைக்கு தாவிட்டேன்!

    அடுத்து என்ன நடந்துச்சு?

    என்னுடைய இந்து மனைவி என்னோடு வந்து சண்டை போட்டா. மாறு வேஷம் போட்டாலும் திருடன் திருடன்தான்னுட்டா. போலீஸ்ல போய் புகார் பண்ணினா. புகாரை அவங்க மொதல்ல எடுக்கல, எஸ்.பி.வரைக்கும் போய் புகாரை பதிஞ்சிட்டா.

    புகார்ல அந்த பொண்ணு என்ன சொல்லிருக்கு?

    எனது இரண்டாவது திருமணம் ஒரு சட்ட வஞ்சனை என சொல்லியிருந்தாள். அத்துடன் நான் இந்துவாய் இருந்த போது இந்து பெண்ணை திருமணம் செய்திருக்கிறேன். இந்துப்பெண்னை இந்து திருமணசட்டப்படி விவாகரத்து செய்திருக்க வேண்டும் நான். அதன் பின்தான் முஸ்லிமுக்கு மாறி காதலித்தவளை முஸ்லிமுக்கு மாற்றி திருமணம் செய்திருக்கவேண்டும் நான் என வாதாடுகிறாள்.

    பலே... அப்புறம்?

    வக்கீலை முறைத்தபடியே தொடர்ந்தான்.

    எனது இரண்டாவது திருமணம் சட்டப்படி செல்லாது என்கிறாள் என் முதல் மனைவி புஷ்பலதா. இங்கு மதமாறியிருப்பதாக நான் சொல்வது தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ள வழி வகுத்துக் கொண்ட ஒரு சட்டவஞ்சனையே. மதம் மாறிவிட்டதாக சொல்வதால் மட்டும் முதல் இந்துசமய முறைப்படி செய்து கொண்ட திருமணம் முறிந்துவிடாது. எனவே முதல் திருமணம் நிலுவையில் இருக்கையில் முஸ்லிம் சட்டப்படி செய்து கொண்ட இரண்டாவது திருமணம் செல்லுபடியாகாது என ஆணித்தரமாக வாதிடுகிறாள்.

    சபாஷ் புத்திசாலிப் பெண்!

    அட்வகேட் பாய். உங்க முஸ்லிம் மதத்திற்கு மாறி என் காதலியையும் முஸ்லிமுக்கு மாற்றியுள்ளேன். நாளை எங்களுக்கு பிறக்கும் குழந்தைகளும் முஸ்லிம்களே. என்னால் இஸ்லாமியரின் எண்ணிக்கை கூடியுள்ளது. அதனை நன்றியுடன் பரிசீலித்து எனது பிரச்சனைக்கு தீர்வு சொல்லுங்க, என் முதல்மனைவியை முற்றிலும் நசுக்குவதாக அடியோடு வேரறுப்பதாக இருக்க வேண்டும் உங்க யோசனை!

    இஸ்லாமை நீண்டநாள் ஊன்றி கவனித்து அதன் கொள்கைகளை வாசித்தறிந்து அதனில் இணைய வேண்டும் என்கிற உயரிய நோக்கத்துடன் வந்தால் வா என வரவேற்பேன். உனது முதல் மனைவிக்கு துரோகம் செய்ய அவளுடனான திருமணத்தை சட்டவஞ்சனையாய் துண்டிக்க விரும்பி இஸ்லாமுக்குள் பிரவேசித்திருக்கிறாய். உன்னுடைய நரி தந்திரத்தை உண்மையான முஸ்லிம்கள் வரவேற்கமாட்டார்கள் ஆராவமுதன்! ஒருமையில் விளிப்பு.

    யூ ஆர் டாக்கிங் டூ மச் அட்வகேட்.

    முஸ்லிம் சட்டம் இந்தியாவில் வழக்கமாக பயன்படுத்தப்பட்டு வருவதோடு பொருள்கோளும் செய்யப்படுகிறது. முஸ்லிம் சட்டப்படி இரண்டாவது திருமணம் செய்வோர் இரு மனைவியரிடையேயும் தார தம்மியமில்லாமல் நடந்து கொள்ள வேண்டும். எனவே முஸ்லிம் சட்டத்திலும் பலதார மணம் நிபந்தனைகளுடன் கூடியதே. முதல் திருமணத்தாலான மனைவிக்கு ஊறு விளைப்பதற்காக செய்யப்படும் திருமணம் முஸ்லிம் சட்டத்தில் ஏற்றுக்கொள்ளத்தக்கதன்று. மதம் மாற்றத்தால் மட்டும் நீங்க ரெண்டாம் திருமணம் செய்ய உரிமை பெற்றிருக்கிறீர்கள் என்றால் அது முஸ்லிம் சட்டத்திற்கு அநீதி இழைத்ததாகி விடும். சட்டத்தை மீறியவர்கள் இரண்டாம் திருமணம் செய்தது சட்டப்படி குற்றமாகாது என்று வாதிடமுடியாது. இவ்விதம் அநீதி இழைக்கும் உங்களைப் போன்ற நபர்களால் முஸ்லிம் சட்டத்தின் பரந்த முன்னேற்றக் கொள்கைகளையும் விரிந்த நோக்கத்தையும் நசுக்கி விட முடியாது!

    தவறான அட்வகேட்டிடம் ஐடியா கேட்டு வந்து விட்டேன் போல...

    வக்கீல் என்பவன் தவறான நபர்களின் அல்லக்கை என நினைத்து விட்டாயா? ராங். எங்களுக்கும் மனசாட்சியும் சுயமரியாதையும் உண்டு. இனி உன் முதல் மனைவியின் சார்பாக வாதாடப்போகும் வக்கீலே நான்தான். உன் சார்பாக யார் வாதாடினாலும் விடமாட்டேன். குள்ளநரித்தனத்தோடு மதம் மாறிய உனக்கும் உன் இரண்டாவது மனைவிக்கும் தகுந்த தண்டனை பெற்றுத் தருவேன். உங்களிருவரின் அரசுபணிகளை தொலைப்பேன். சமயம் என்பது ஒருவருடைய நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயமாகும். அது அவ்வளவு எளிதில் மாற்றக்கூடியதன்று. அது மனத்தின் ஆழத்திலிருந்தும் நெஞ்சத்தின் அடித்தளத்திலிருந்தும் உருவாகக் கூடியது. இது போன்று பயன்படுத்தத் தக்க ஒரு சந்தைப் பொருளன்று அது!

    அய்யய்யோ... மோசம் போனேனே..." நெற்றியில் அடித்துக்கொண்டு அறையை விட்டு வெளியேறினான் ஆராவமுதன்.

    கோர்ட்டின் மூலம் உனக்கு நான் புகட்டப்போகும் பாடம் சுயநலத்துக்காக காம இச்சைக்காக எமோஷனல் பிளாக்மெயிலுக்காக நடத்தப்படும் மதமாற்ற மனிதர்களுக்கு கிடைக்கப்போகும் பாடம். நீ ஜியாவுத்தீன் அல்ல, நீ என்றைக்குமே ஆராவமுதன்தான். பி ரெடி பார் எ லீகல் பாட்டில்!... ஜியாவுத்தின் ஒப்பனையில் ஒளித்திருக்கும் ஆராவமுதனே!... உன்மேல் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 494 பாயும்!

    இஸ்லாம் பெண்டிதர் நலனை பாதுகாக்கவே செய்யும்; ஒருபோதும் வழுவாது!

    2. கணவன் கட்டளை

    தரைவழி தொலைபேசியை தொடர்ந்து அழைத்தான் ஷைகுல் அக்பர், அக்பர் குவைத்தில் மின் பொறியாளராக பணிபுரிகிறான். அவனது மனைவியின் பெயர் சபானா பிஸ்மி.

    இருவருக்கும் திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகின்றன. குழந்தை இல்லை. இவர்கள் இருக்கும் வாடகை வீடு கடையத் தெருவில் உள்ளது. நான்கைந்து தெருக்கள் தாண்டி சாமி சன்னதித்தெருவில் அம்மா வீடு இருந்தது.

    பிஸ்மிக்கு தனது அம்மாவின் மீது கொள்ளைப்பிரியம். திருமணமாகியிருந்தாலும் கூட அம்மாவின் புடவையைத்தான் சுற்றிசுற்றி வருவாள் பிஸ்மி. அம்மா மடியில் படுத்துக்கிடப்பாள். அம்மாவுக்கு இவள் தலைவாரி விடுவாள். இவருக்கு அம்மா தலைவாரி விடுவாள்.

    கணவனின் தரைவழி தொலைபேசி அழைப்பை ஏற்க எதிர்முனையில் பிஸ்மி இல்லை, அவள் வழக்கம் போல அம்மா வீட்டுக்கு போயிருந்தான். கணவன் எந்த நேரத்தில் அழைக்கமாட்டான் என கருதி கைபேசியை ஆஃப் செய்து வைத்திருக்கிறாளோ அந்த நேரத்தில்தான் கணவன் கைபேசி எண்ணை தொடர்புவான். இன்றும் தொடர்பினான். ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதாக இயந்திர பதில் கிடைக்கப்பெற்று வெறியானான் அக்பர். தரையை உதைத்தான், பற்களை நறநறவென கடித்தான்.

    வழக்கம் போல அம்மா வீட்டுக்குப் பேப்ய்விட்டானோ கல்யாணமானவளுக்கு அம்மாவுடன் எதற்கு பசைபோல் அட்டை போல் ஒட்டும் நட்பு? பத்து வயது ஆனவுடனேயே பெண்பிள்ளைகள் பெற்ற தாயின் அருகாமையைத் தொலைத்துவிடுகின்றன. திருமணமான முதல்நாளே அம்மாவை இந்த கிழவியை யார் கல்யாண வீட்டில் மொட்டை

    Enjoying the preview?
    Page 1 of 1