Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pachaipudavaikkaari Part - 2
Pachaipudavaikkaari Part - 2
Pachaipudavaikkaari Part - 2
Ebook379 pages3 hours

Pachaipudavaikkaari Part - 2

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர் வெறுத்துப் போய் 'நான் சிகிச்சை செய்துகொள்ள மாட்டேன்' என்று அடம் பிடித்தார். சென்ற ஆண்டு வந்த பச்சைப்புடவைக்காரி நூலைப் படித்துவிட்டு 'பிழைத்தாலும் இறந்தாலும் நான் இருக்கப்போவது அவள் காலடியில்தான் என்னும்போது எனக்கெதற்கு பயமும் வெறுப்பும்?' என்று உணர்ந்து மனம் திருந்தினார். மற்றவர்களுக்கு உபதேசம் செய்துகொண்டிருந்த நான் ஒரு விபத்தில் சிக்கிக்கொண்டு ரத்தம் சிந்தியபோது என் குருவாக வந்து ஞானத்தைக் கொடுத்து அருள்பாலித்தாள் அந்த அன்பரசி. குடிகாரத் தந்தையிடம் அன்பு காட்டிய ஒரு பெண்ணின் கதையை நான் எழுதப்போக அதுவே ஒரு சிறந்த கூட்டுப் பிரார்த்தனையாக அமைந்துவிட்டது. “இதெல்லாம் நம்பற மாதிரியாவா இருக்கு?” என்று கேட்பவர்கள் தயவு செய்து இந்தப் புத்தகத்தைப் படிக்காதீர்கள். 'நானே அன்பு, அன்பே நான்' என்று எனக்குப் பச்சைப்புடவைக்காரி உபதேசம் செய்ததை உண்மை என்று நீங்கள் நம்பினால் இது புத்தகம் இல்லை, பொக்கிஷம்.

Languageதமிழ்
Release dateSep 17, 2022
ISBN6580142409045
Pachaipudavaikkaari Part - 2

Read more from Varalotti Rengasamy

Related to Pachaipudavaikkaari Part - 2

Related ebooks

Reviews for Pachaipudavaikkaari Part - 2

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pachaipudavaikkaari Part - 2 - Varalotti Rengasamy

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பச்சைப்புடவைக்காரி பாகம் – 2

    Pachaipudavaikkaari Part - 2

    Author:

    வரலொட்டி ரெங்கசாமி

    Varalotti Rengasamy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/varalotti-rengasamy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. மகா மருத்துவச்சி மீனாட்சி

    2. யாவும் நான் தருவேன்!

    3. மரணத்துக்கே மரணம் விளைவித்தவள்!

    4. இதற்காகவா ஆசைப்பட்டாய்?

    5. பகுத்தறிவுவாதிகளின் மூடநம்பிக்கை

    6. சோதனை மேல் சோதனை.. போதுமடா சாமி!

    7. அவள் வருவாளா? வரம் தருவாளா?

    8. சண்டி ஹோமம் செய்தவரின் கதை

    9. சூழ்நிலைக் கைதி!

    10. பிரச்சினை வந்தால் அர்ச்சனை

    11. எழுத்தாளரும் பேனாவும்

    12. கர்மக்கணக்கும் தர்மக்கணக்கும்

    13. இறைவியும் தாயும்!

    14. புரியாத கணக்கு

    15. அந்தச் சக்தியும் இந்தச் சக்தியும்!

    16. சேர்ந்து பிரிந்த பாதைகள்!

    17. கேட்டதைக் கொடுத்தால்தான் என்னவாம்?

    18. அர்ச்சகருக்கு நேர்ந்த கொடுமை!

    19. காட்சிப்பிழை

    20. விரைவு வழி

    21. அன்பும் அகங்காரமும்

    22. அன்பும் பொறுமையும்!

    23. அவளே எழுதிய கதை!

    24. நன்மையும் தீமையும்!

    25. மாறனும் கதிரேசனும்

    26. அவள் கொடுத்த பதவி

    27. ‘சாமிக் குத்தம்’

    28. காலாவதியாகாத அன்பு

    29. இறை தரிசனம்

    30. பேசவைத்த பேரழகி

    31. தீர்ந்தது பிரச்சினை!

    32. கந்துவட்டிக்காரனும் கர்மக்கணக்கும்

    33. அவள் கொடுத்த அனுபவம்

    34. கர்மக்கணக்கில் சொதப்பல்

    35. அவள் அடித்துப் போட்ட அகந்தைப் பாம்பு

    36. துறவியும் உருவ வழிபாடும்

    37. பணியுமாம் பெருமை

    38. பாவமும் பரிகாரமும்!

    39. போலிச் சாமியார்

    40. செத்தபின் சிவலோகம்

    41. பாவிகளுக்காகச் செய்யும் பிரார்த்தனை

    42. அவள் நிகழ்த்திய அற்புதங்கள்!

    43. பாவமன்னிப்பு

    44. சனிப்பெயர்ச்சியும் பரிகாரமும்!

    45. அவள் தெளிவித்த மயக்கம்

    46. குருவாக வந்தவள்

    47. அறிவு என்னும் வாகனம்

    48. நடிகைக்குக் கிடைத்த பிடிமானம்

    49. வாழ்க்கையின் சாரம்

    50. நேர் செய்யப்பட்ட கர்மக்கணக்கு

    51. இருளும் ஒளியும்!

    52. நடை சாத்தும் நேரம்

    ஒரு பெரிய யாகம் நிறைவு பெற்றிருக்கிறது. இந்த யாகத்தைச் செய்பவளாகவும், யாகத்தில் வளர்க்கப்பட்டும் அக்னியாகவும், யாகத்தின் பலனைப் பெறும் தெய்வமாகவும் இருப்பவள் பச்சைப்புடவைக்காரிதான்.

    இந்தத் தொடரின் ஒவ்வொரு பகுதியும் பலர் மனதில் இருந்த கேள்விகளுக்குப் பதிலாக இருக்கும்படி பச்சைப்புடவைக்காரி பார்த்துக்கொண்டாள். என்னைப் பொருத்தமட்டில் ஒவ்வொரு பகுதியும் அவள் அன்பை வேண்டி நாம் செய்யும் பிரார்த்தனை. என்னிடம் அன்பைக் கேள், என்னையே உனக்குத் தருகிறேன். என்று பச்சைப்புடவைக்காரி சொல்வதை நீங்கள் புரிந்துகொண்டால் இந்த நூலின் நோக்கம் நிறைவேறிவிடும்.

    அன்பே ஆன்மிகம் வரிசையில் வெளிவரும் ஏழாவது நூல் இது. எனக்குப் பக்கபலமாக, வழிகாட்டியாக இருந்து என்னைக் கடனாளியாக்கியவர்களின் பட்டியல் இதோ:

    தன் வேலைகளுக்கு மத்தியில் தன் தூக்கத்தையும் எனக்காகத் தியாகம் செய்து இந்த நூலைப் பிழைதிருத்திய என் மனைவி இந்து;

    அனைத்திற்கும் மேலாக என்னை ஆதரிக்கும் வாசகர்களாகிய நீங்கள்.

    நமக்கே நமக்கென்று பச்சைப்புடவைக்காரி இருக்கிறாள் என்பதை உணர்ந்து மனதில் இருக்கும் கவலைகளை எல்லாம் கடாசிவிட்டு இந்த நூலைப் படிக்கத் தொடங்குங்கள். அன்புடன் வாழுங்கள். அன்னை நம்மை என்றும் காத்து நிற்பாள்.

    காலமெல்லாம் என்னைத் தன் கொத்தடிமையாய்க் கொண்டிருக்கும் கையில் கிளி தாங்கிய கோலக்கிளியாம் மரகதவல்லி, மதுரையின் அரசி, மீனாட்சி என் பச்சைப்புடவைக்காரியின் திருப்பாதகமலங்களைத் தொட்டு வணங்கி இதைப் படிக்கின்ற நீங்கள் எல்லோரும் எல்லா நலனும் பெற்று வாழவேண்டும் என்ற பிரார்த்தனையையும் அவள் முன் வைத்து வரலொட்டி ரெங்கசாமியாகிய நான் இன்று இந்த நூலை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

    1. மகா மருத்துவச்சி மீனாட்சி

    பிறந்ததிலிருந்தே தாய் இல்லாமல் பழகிவிட்டால் அது ஒரு மாதிரி. தாயில்லாமல் பல காலம் தவித்து, பிறகு தாய் வந்து, தாய்மை சுகத்திற்குப் பழகிப்போனபின் அவள் மறைந்துவிட்டால்... அதைவிடக் கொடிய நரகம் வேறு எதுவும் இல்லை.

    நான் அந்த நரகத்தில்தான் உழன்றுகொண்டிருந்தேன். லாபம், நட்டம், வருமானம், வரி, முதலீடு என்று போய்க்கொண்டிருந்த என் வாழ்க்கையை அன்பு, பக்தி, எழுத்து என்று புரட்டிப்போட்டுவிட்டாள் பச்சைப்புடவைக்காரி. வேண்டும்போதெல்லாம் காட்சி தந்து, கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் தந்து, அனைத்துப் பிரச்சினைகளையும் நுட்பமாகப் பார்க்கவைத்து... பெற்ற தாயினும் சாலப்பரிந்து என்னை வழி நடத்திச் சென்றவள் திடீரென்று ஒரு நாள் ‘பிறகு பார்க்கலாம்’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.

    என்ன செய்வேன்! அவள் கோவிலுக்குச் செல்வதுகூடக் கணிசமாகக் குறைந்துவிட்டது. மீண்டும் அவள் வருவாளா, இந்தப் பாவியுடன் பேசுவாளா என்ற ஏக்கம் என்னை வதைத்துக்கொண்டிருந்தது.

    நான் தினமும் நடைப்பயிற்சி செய்யும்போது மதுரையின் வடபகுதியில் இருக்கும் ஒரு பெரிய கார்ப்பரேட் மருத்துவமனையைக் கடந்து செல்வது வழக்கம். அன்று அந்த மருத்துவமனைக் கட்டிடத்தைப் பார்த்ததும் மனதில் ஒரு எண்ணம்.

    இந்த மருத்துவமனைக்குள் எத்தனை பேர் வலியால் துடித்துக்கொண்டிருப்பார்கள்! தீவிர சிகிச்சைப் பிரிவில் எத்தனை பேர் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பார்கள்! வெளியே நிற்கும் அவர்கள் உறவினர்கள் எப்படி வேதனையில் துடித்துக்கொண்டிருப்பார்கள்! நான் இங்கே வெளியே ஒரு நல்ல நாளின் சுகமான காலைப்பொழுதை அனுபவித்துக்கொண்டிருக்கும்போது உள்ளே எத்தனை பேர் இரவா பகலா என்று தெரியாத நிலையில் மரணத்தின் நிழலில் வாடிக்கொண்டிருப்பார்கள்!

    அம்மா! பச்சைபுடவைக்காரி! உள்ளே இருப்பவர்களுக்கு உடல் நலத்தையும் மன அமைதியையும் கொடுங்களேன் எனக்காக... உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்...

    ***

    மருத்துவமனையின் பிரதான வாயிலைக் கடந்து சென்ற சமயத்தில் உள்ளேயிருந்து வெள்ளையுடை அணிந்த ஒரு நர்ஸ் அரக்கப் பரக்க ஓடிவந்தாள். நேரே என்னிடம் வந்து என் கையைப் பிடித்துக்கொண்டாள்.

    உங்களை சீஃப் டாக்டர் கூப்பிடறாரு. என்கூட வாங்க.

    நீங்க தப்பா.. நீங்க நெனைக்கற ஆளு... நான்.. இல்ல..

    என் பெயர், தொழில், முகவரி, செல்போன் எண் போன்ற விவரங்களைப் படபடவென்று சொன்னாள்.

    இது போதுமா, இல்ல உங்க ஆதார் நம்பரச் சொல்லட்டுமா? இல்ல உங்க ஜாதகத்துல இருக்கற கட்டங்களப் போட்டுக் காட்டட்டுமா?

    நடுங்கிவிட்டேன்.

    என் கையைப் பிடித்துக்கொண்டு தரதரவென்று இழுக்காத குறையாக உள்ளே ஓடினாள். முதலில் தென்பட்ட லிஃப்டில் ஏறினோம். அதில் எங்களைத் தவிர வேறு யாரும் இல்லை.

    என்னப்பா அதற்குள் என்னை மறந்துவிட்டாயே!

    தாயே! நீங்களா?

    அவள் காலில் விழுந்து வணங்கினேன். அவளைப் பார்க்காதவரை பிரிவாற்றாமையால் அழுகை வந்தது. பார்த்ததும் அன்பின் மிகுதியால் உடைந்து போய் அழ ஆரம்பித்தேன். என்னை அழவிட்டு வேடிக்கை பார்த்தாள் உமையவள்.

    என்னப்பா, ஆறு மாதங்கள் உன்னோடு பேசவில்லை என்று கோபமோ?

    இல்லையம்மா. இப்போதாவது இந்த அடிமை நாயைத் தேடி வந்திருக்கிறீர்களே என்ற ஆனந்தம் தாங்காமல் அழுதுகொண்டிருக்கிறேன்.

    இந்த மருத்துவமனையில் இருப்பவர்கள் துன்பத்தைத் தீர்க்கவேண்டும் என்று அழுத்தமாகப் பிரார்த்தனை செய்தாய் அல்லவா? அது எவ்வளவு அபத்தமானது என்று காட்டவே வந்தேன்.

    மூன்றாவது மாடியில் லிஃப்ட் நின்றது. என்னை இழுத்துக்கொண்டு வெளியே ஓடினாள்.

    ***

    தீவிர சிகிச்சைப் பிரிவு. வெளியே இருந்த இருக்கைகளில் சிலர் தூங்கிக்கொண்டிருந்தார்கள். நாங்கள் உள்ளே நுழைந்தபோது எங்களை அங்குள்ள நர்ஸ்கள் யாரும் தடுக்கவில்லை. ஓரமாக இருந்த ஒரு படுக்கைக்கு அருகில் என்னை அழைத்துச் சென்றாள் பச்சைப்புடவைக்காரி.

    எட்டிப்பார்த்தேன். ஒரு ஐம்பது வயதுக்காரர் தாளாத வலியில் முனகிக்கொண்டிருந்தார். நாற்றம் தாளமுடியவில்லை.

    அன்னை மென்மையான குரலில் விளக்கினாள்.

    இவனுக்குச் சிறுநீரகத்தில் புற்று நோய். அதுபோக சர்க்கரை நோய். இரண்டு கால்களையும் நேற்று நடந்த அறுவை சிகிச்சையில் எடுத்துவிட்டார்கள். இவனுடைய மனைவி -பிள்ளைகள் எப்போதோ இவனைப் பிரிந்து சென்றுவிட்டார்கள். இவனிடம் கோடிக்கணக்கில் பணம் இருக்கிறது.

    தாயே இவன் படும் வேதனையைப் பார்க்கச் சகிக்கவில்லை. பேசாமல் இவன் உயிரை எடுத்துவிடுங்கள். அப்போதுதான் இவன் வேதனை போகும்.

    இவன் கர்மக்கணக்கை வைத்துப் பார்த்தால் இன்னும் பத்துவருடம் இவன் வலியிலும் வேதனையிலும் துடித்துப் பிறகுதான் சாகவேண்டும்.

    இது என்ன கொடுமை, தாயே!

    இவன் என்ன செய்தான் கேள். இவனும் இவன் தம்பியும் சேர்ந்து ஒரு கடை வைத்தார்கள். இவனுக்கும் இவன் தம்பிக்கும் சொந்தமான பூர்வீக வீட்டை விற்றுத்தான் கடைக்கு முதல் போட்டார்கள். வியாபாரம் நன்றாக நடந்தது. தம்பி இரவு பகல் பார்க்காமல் கடைக்காக உழைத்தான். வரிப்பிரச்சினை அது இதுவென்று காரணம் சொல்லித் தொழிலையும் சொத்துக்களையும் தன் பெயரில் மாற்றிக்கொண்டான் இவன். திடீரென்று ஒரு நாள், ‘எல்லாம் என்னுடையது. நீ வெளியே போ’ என்று தம்பியைத் துரத்திவிட்டான். வேறு போக்கிடம் இல்லாத இவன் தம்பியும் அவன் குடும்பமும் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டது. இவனைத் தன் தந்தையாக, தெய்வமாக நினைத்திருந்த தம்பிக்கு இவன் செய்த நம்பிக்கைத் துரோகம் தன் பலனைக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறது.

    ‘சே! இவன் துன்பத்தையா குறைக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டிருந்தேன்! நன்றாகப் படட்டும்.’

    வா அந்தப் படுக்கையில் இருப்பவளைப் பார்க்கலாம்..

    ***

    சற்றுத் தள்ளி இருந்த ஒரு படுக்கையில் நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண் படுத்திருந்தாள். வலி தாங்காமல் அரற்றிக்கொண்டிருந்தாள். அருகில் கவலையே உருவாக அவள் கணவன் அமர்ந்திருந்தான்.

    தன் கையை வாயில் வைத்து ‘சத்தம் செய்யாதே’ என்று அழகாகச் சாடைகாட்டிவிட்டு என்னை வெளியே அழைத்துக்கொண்டு போனாள் பச்சைப்புடவைக்காரி.

    இவள் கணவன் கந்துவட்டிக்காரன். செய்யாத கொடுமைகள் இல்லை. ஒரு முறை இவனிடம் கடன் வாங்கிய ஒருவன் அதைத் திருப்பித் தராததால் அவன் மனைவியை அவன் கண்முன்னால் எட்டி உதைத்தான். கர்ப்பிணியாக இருந்த அவளுக்குக் கருச்சிதைவு ஏற்பட்டது. இப்போது இவனுடைய மனைவிக்குக் கருப்பையில் புற்று நோய். கருப்பையை எடுத்துவிட்டார்கள். என்றாலும் நோய் பரவிவிட்டது. இவள் இன்னும் இரண்டு வருடங்கள் வலியால் துடிதுடித்துப் பின் சாவாள். அவள் படும் வேதனை அவள் கணவனை நல்வழிப்படுத்தும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

    தாயே கணவன் செய்த தவறுக்கு ஏன் மனைவி துன்பம் அனுபவிக்க வேண்டும்?

    கர்மக் கணக்கு கொஞ்சம் சிக்கலானது. ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று நீ போடும் வருமானவரிக்கணக்கு இல்லை. அதைப்பிறகு விளக்குகிறேன்.

    மருத்துவமனையைவிட்டு வெளியே வந்தோம்.

    இனிமேல் அடுத்தவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வதே கூடாது என்று தோன்றுகிறதோ?

    "ஆம் தாயே.!

    தப்பு. அது மகாத் தப்பு. நீ இவர்கள் செய்ததைத் தீமை என்று பார்க்கிறாய். நான் அதையும் நோயென்றே பார்க்கிறேன். என் பார்வையில் சர்க்கரை நோய் மட்டும் நோயல்ல. தம்பிக்கு துரோகம் செய்ய வேண்டும் என்ற அந்த எண்ணம்கூட ஒரு கொடிய நோய்தான். கருப்பைப் புற்று மட்டும் நோயல்ல; கர்ப்பிணிப்பெண்ணை வயிற்றில் உதைக்கவேண்டும் என்ற எண்ணமும் ஒரு நோய்தான்.

    குழப்புகிறீர்களே, தாயே! நான் இவர்களுக்காகப் பிரார்த்தனை செய்யலாமா கூடாதா? அதைத் தெளிவாகச் சொல்லுங்கள்.

    பிரார்த்தனை செய். இவர்கள் வலி குறைய வேண்டும் என்று வேண்டிக்கொள்ளாதே! இவர்கள் மனங்கள் அன்பால் நிறைந்து இருக்கட்டும் என்று வேண்டிக்கொள். உன் பிரார்த்தனை பலித்தால்.. அது நிச்சயம் பலிக்கும். தம்பிக்குத் துரோகம் செய்யவேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு இனிமேல் வரவே வராது. செய்த பாவத்திற்கு அனுபவிக்கும் துன்பத்தையும் நான் கணிசமாகக் குறைத்துவிடுவேன். அடுத்த பிறவியில் நல்லவனாக வாழ்வான்.

    பிரார்த்தனை வரிகளையும் நீங்களே சொன்னால்..

    "சரியான சோம்பேறியப்பா, நீ. சரி சொல்கிறேன் கேள்.

    "அல்லல் படுவோர் மனங்கள் எல்லாம் அன்பால் என்றும் நிறையட்டும்

    அதனால் அவர்கள் அனுபவிக்கும் வலியும் நோயும் குறையட்டும்

    அடுத்தவருக்குத் தீங்கு செய்யும் எண்ணம் எல்லாம் மறையட்டும்

    மனிதர் மேல் இவர்கள் கொள்ளும் அன்பு நாளும் வளரட்டும்

    அவர்கள் மனதில் நீங்கள் இருந்தால் போதுமே தாயே! வேறு எதுவும் வேண்டாமே! ஏன் அன்பு அது இது என்று சுற்றி வளைக்கிறீர்கள்?

    நான் என்றால் என்ன, அன்பு என்றால் என்ன?

    தாயே நீங்கள் எங்கள் உடல் நோயைத் தீர்க்கும் சாதாரண மருத்துவச்சியில்லை. எங்கள் பிறவி நோயைத் தீர்க்கவந்த மகா மருத்துவச்சி.

    அவள் காலில் விழுந்தேன். நிமிர்ந்து பார்த்தால் அவள் அங்கே இல்லை.

    2. யாவும் நான் தருவேன்!

    இனிமே அந்தப்பச்சைப்புடவைக்காரியப் பத்தி எழுதாதீங்க. ஆமா சொல்லிட்டேன். அவ தெய்வமேயில்ல. நாம கேட்டதக் கொடுப்பாங்கறது எல்லாம் சுத்தப் பொய். அவ எதையும் தர மாட்டா. இது நிச்சயம்.

    வார்த்தைகளின் கொடுமை தாங்காமல் காதைப் பொத்திக்கொண்டேன். என்றாலும் என் கண்கள் பொங்கிவிட்டன. நான் செய்த ஏதோ ஒரு கொடிய பாவத்தின் விளைவு என் தாயைப் பற்றிய கொடுமையான சொற்களை இந்தக் காலைவேளையில் கேட்கவேண்டியிருக்கிறது. கண்ணீர்த் திரையினூடே முன்னால் அமர்ந்து கத்திக்கொண்டிருந்தவரைப் பார்த்தேன். அவருக்கு ஐம்பது வயதுக்கு மேல் இருக்கும். ஒரு தனியார் நிறுவனத்தில் சாதாரண வேலையில் இருக்கிறார். ஒரு மகன். ஒரு மகள். சாதாரண வாழ்க்கை.

    எங்க ஆபீஸ்ல மேனேஜர் வேலை காலியாச்சு. அதுக்கு என்னையும் சேத்து அஞ்சு பேர் போட்டி போட்டோம். எனக்கு அந்த வேலையக் கொடுன்னு மீனாட்சிகிட்டக் கெஞ்சினேன். பிச்சையெடுத்தேன். பத்து நாள் விரதமிருந்து கோவிலுக்கு நடந்து போனேன். என்ன பிரயோஜனம்? வேலை எனக்குக் கெடைக்கலையே!

    அத விடுங்க. என் பையனுக்கு மெடிக்கல் சீட் கெடைக்கணும்னு அவகிட்டக் கெஞ்சிக்கேட்டுக்கிட்டேன். ப்ளஸ் டூல நல்ல மார்க் எடுத்திருந்தான். நீட் பரீட்சையில ரேங்க் சரியா கெடைக்கல. நாப்பது நாள் விரதம். எல்லாம் வீணாப்போச்சு. சீட் கெடைக்கல.

    இது மாதிரி வாழ்க்கையில நான் கேட்டது எதையுமே கொடுக்கல. எனக்குப் பணம் கொடுக்கல. புகழ் கொடுக்கல. சந்தோஷமான வாழ்க்கையக் கொடுக்கல. அவள எதுக்குக் கும்பிடணும் சொல்லுங்க? அவ மனசு கல்லு சார். நம்மளத் தவிக்கவிட்டு வேடிக்கை பாக்கறது அவளுக்குப் பிடிச்ச பொழுதுபோக்கு.

    எழுந்து நின்று நண்பரைக் கைகூப்பி வணங்கினேன்.

    போதுமய்யா. போதும். இனி ஒரு வார்த்தை பச்சைப்புடவைக்காரியைப் பற்றித் தவறாகப் பேசினால்.. ஒன்று நான் செத்துவிடுவேன். இல்லை உங்களைக் கொன்றுபோட்டுவிடுவேன். போய் வாருங்கள். பிறகு பார்க்கலாம்.

    ***

    அலுவலகத்தில் பார்க்கவேண்டிய வேலை மலைபோல் குவிந்திருந்தாலும் எதையும் செய்ய மனம் இல்லை. பக்கத்தில் இருக்கும் பூங்காவில் போய் அமர்ந்தேன். நண்பர் சொன்ன வார்த்தைகளை நினைக்கும்போதெல்லாம் கண்களிலிருந்து கண்ணீர் பெருகிக்கொண்டிருந்தது.

    அப்போது மாலை ஐந்து மணி என்பதால் பூங்காவில் அவ்வளவாகக் கூட்டமில்லை. கணவனும் மனைவியும் போல் இருந்த இருவர் என்னை நோக்கி நடந்து வந்தார்கள். என் அருகில் வந்ததும் அந்தப் பெண்மணி தன் கணவரிடம் சொன்னாள்:

    நீங்கள் நடந்துவிட்டு வாருங்கள். நான் இங்கே சிறிது நேரம் உட்கார்ந்திருக்கிறேன்.

    என் அருகில் அமர்ந்து கொண்டாள் அந்தப் பெண். நிறைவான அழகு. நன்றாக மஞ்சள் தேய்த்துக்குளித்த முகம். வட்டமான குங்குமம். நான் பார்ப்பதைப் பார்த்து லேசாக முறுவலித்தாள்.

    நண்பன் சொன்னதை நினைத்து நினைத்து இன்னும் மருகிக்கொண்டிருக்கிறாய் என்று தெரிந்துதான் நான் உன்னைக் காண வந்தேன்.

    தாயே நீங்களா?

    விழுந்து வணங்கினேன்.

    என் மனதைக் கல் என்று சொன்னவன் உண்மையில் சோம்பேறி. அலுவலகத்தில் பதவி உயர்வுக்குப் போட்டி போடுபவன் அதற்காகத் தன்னைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டாமா? மகன் மருத்துவம் படிக்கவேண்டும் என்றால் என் கோவிலுக்கு நடந்து வந்தால் போதுமா? அதற்கான முயற்சியும் பயிற்சியும் வேண்டாமா? பணம் வேண்டுமென்றால் உழைக்க வேண்டும். அறிவைக் கசக்கி வேலை செய்ய வேண்டும். புகழ் வேண்டுமென்றால் சாதனை செய்ய வேண்டும். எதையும் செய்யாமல் என்னைப் பழிக்கிறானே!

    அவர் செய்தது தவறுதான் தாயே! ஆனால் நீங்கள் எதையுமே கொடுக்கவில்லை என்று...

    மனிதர்களாகிய நீங்கள் ஆசைப்பட்டதை அடையும் சக்தியை உங்கள் மனங்களில் புதைத்துக் கொடுத்திருக்கிறேன். நீங்கள அதை உள்ளே தேடாமல் வெளியே தேடினால்..

    கொஞ்சம் இந்த மரமண்டைக்குப் புரியுமாறு சொல்லுங்களேன்.

    அங்கே நடக்கும் காட்சியைப் பார்.

    ***

    அது ஒரு பெரிய மென்பொருள் நிறுவனம். விற்பனைப் பிரிவில் ஒரு முக்கியமான பதவிக்கு ஆளெடுக்க நேர்காணல் நடந்து கொண்டிருந்தது. நூறு பேர் அந்தப் பதவிக்குப் போட்டி போட்டார்கள். இறுதிச் சுற்றில் இருவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

    கடைசிக் கட்டத் தேர்வு. இருவர் கையிலும் காலியாக இருந்த ஒரு மடிக் கணினிப் பை தரப்பட்டது.

    நீங்கள் மும்பைக்குச் சென்று ஒரு சிறந்த மடிக்கணினியை வாங்கிவரவேண்டும். யார் முதலில் வருகிறீர்களோ அவர்களுக்கே இந்தப் பதவி. எங்களிடம் எந்தக் கேள்வியும் கேட்கக்கூடாது.

    முதலாமவன் அந்த வேலையை எப்படியாவது வாங்கிவிடவேண்டும் என்ற வெறியில் இருந்தான். விமான நிலையத்திற்கு ஓடினான். கைக்காசைப் போட்டுப் பயணச்சீட்டு வாங்கிகொண்டு மும்பைக்குப் பறந்தான். தெரிந்தவர்களிடம் சிறந்த மடிக்கணினி எங்கே வாங்குவது என்று கேட்டுத் தெரிந்து கொண்டு அங்கே ஓடினான். அதை வாங்கும் அளவிற்கு அவன் கையில் காசு இல்லை. கையில் இருக்கும் கிரெடிட் கார்டை நீட்டினான். ஆனால் அது காலாவதியாகியிருந்தது. முந்தைய நாள்தான் புதிய கிரெடிட் கார்ட் வந்திருந்தது. அதை எடுத்து வராமல் விட்டது எவ்வளவு பெரிய முட்டாள்த்தனம் என்று தன்னைத் தானே நொந்துகொண்டான். ஹோட்டலில் தங்கவும் காசில்லை. மும்பையில் இருந்த தன் நண்பர்களிடம் கெஞ்சிக்கூத்தாடிக் கொஞ்சம் பணத்தைத் திரட்டிக்கொண்டு பேருந்து மூலமாக ஊர் வந்து சேர்ந்தான்.

    நீங்களாகக் கொடுத்தாலும் எனக்கு இந்த வேலை வேண்டாம். என்று கத்திவிட்டுக் கையில் இருந்த அவர்கள் பையை அவர்களிடமே வீசியெறிந்துவிட்டு வீடு திரும்பினான்.

    ***

    இரண்டாமவன் அவசரப்படவில்லை. என்னை ஒரு வேலை செய்யச் சொன்னார்கள். கையில் ஒரு பையையும் கொடுத்தார்கள் என்றால் அந்தப் பையில் ஏதாவது விஷயம் இருக்கும் என்று யோசித்தான். அந்தப் பையில் அப்படி என்னதான் இருக்கிறது என்று ஆராய்ந்தான். உள் பையில் ஒரே ஒரு காகிதம் மட்டும் இருந்தது. அது அந்த நிறுவனம் ஒரு பயண முகவருக்கு எழுதிய கடிதம்.

    இந்தக் தடிதத்தைக் கொண்டுவருபவர்க்கு மும்பை சென்று திரும்ப விமான டிக்கெட்டும் அங்கே ஒரு நல்ல ஹோட்டலில் தங்க ஏற்பாடும் செய்துகொடுக்கவும். அதற்கான செலவை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

    அந்தப் பயணமுகவரைத் தேடிப் போனான். அவர் வேண்டியதைச் செய்து கொடுத்தார். மும்பை விமானநிலையத்தில் அவனுக்காகக் காத்திருந்த வாடகைக்காரில் அவன் தங்கவேண்டிய ஹோட்டலுக்குச் சென்றான். அந்த ஹோட்டல்காரர்கள் அவனிடம் ஒரு கவரைக் கொடுத்தார்கள்.

    தன் அறைக்குப் போய் அதைத் திறந்து பார்த்தான். அதில் நான்கு கடைகளின் முகவரிகள் இருந்தன. இந்தக் கடைகளில் ஏதாவது ஒன்றில் நீங்கள் விருப்பமான மடிக்கணினியை வாங்கலாம். அதற்குப் பணம் தரத் தேவையில்லை. இந்தக் கடிதத்தைக் கொடுங்கள் போதும். நாங்கள் பணம் கொடுத்துக்கொள்கிறோம்.:

    நல்ல மடிக்கணினியாகப் பார்த்து வாங்கிகொண்டு விமானம் மூலம் சென்னை திரும்பினான்.

    அவனுக்குத்தான் வேலை கிடைத்தது என்று சொல்ல வேண்டுமா என்ன?

    ***

    "அந்த நிறுவனம் செய்ததைத்தான் நானும் செய்கிறேன். அவர்கள் கையில் பை கொடுத்தார்கள். அவர்கள் வேலையைச் செய்வதற்குத் தேவையானதெல்லாம் அந்தப் பையில் இருந்தது. நான் உங்களுக்கு அறிவையும் ஆற்றலையும் கொடுத்திருக்கிறேன். உழைப்பையும் முயற்சியையும் கொடுத்திருக்கிறேன். நான் கொடுத்ததை வைத்துக்கொண்டு உங்கள் ஆசைகள் எதுவானாலும் அவற்றைப் பூர்த்தி செய்துகொள்ளலாம். பையைத் திறந்து பார்க்காமல் பச்சைப்புடவைக்காரியைக் குறை சொல்வதில் என்ன பயன்? இதை உன் நண்பனிடம் சொல்."

    எனக்குப் பேச்சே வரவில்லை.

    சரியப்பா உன் பையில் இன்னும் என்ன போடவேண்டும் என்று சொல். உடனே செய்கிறேன்.

    "நண்பர் கேட்டதுபோல் எனக்குப் பதவி உயர்வு, பணம், புகழ்,

    Enjoying the preview?
    Page 1 of 1