Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pachaipudavaikkaari Part - 1
Pachaipudavaikkaari Part - 1
Pachaipudavaikkaari Part - 1
Ebook418 pages3 hours

Pachaipudavaikkaari Part - 1

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

காலமெல்லாம் என்னைத் தன் கொத்தடிமையாகக் கொண்டிருக்கும் பச்சைப்புடவைக்காரியை - மதுரை அரசாளும் மீனாட்சியைப் பல முறை சந்தித்தேன். மனித இனத்தின் வலிகளையும் வேதனைகளையும் அவளிடம் பகிர்ந்துகொண்டேன். அவள் தந்த வழிகாட்டுதலையும் ஆறுதல் வார்த்தைகளையும் எழுதினேன். வைகைப்பாலத்தில் படுத்துக்கிடந்த பிச்சைக்காரன், உறவுக்காரப் பெண் வளர்த்து வந்த தெரு நாய், கால்கள் விளங்காமல் வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிட்ட ஒரு பெண் பெற்ற அருட்கொடை என்று பல பரிமாணங்களில் தன் அன்பை எனக்குப் புரியவைத்தாள் பராசக்தி. முத்தாய்ப்பாகச் சாகும் நிலையில் இருந்த ஒரு எழுத்தாளரின் மனதில் என்னைப் புகவைத்துக் காலகாலத்திற்கும் நிலைத்து நிற்கும் ஆன்மீக உண்மைகளை எளிய நடையில் விளக்கினாள். ஏழு உலகிற்கும் சொந்தக்காரி. - 'நிஜமாகவே அவளைப் பார்த்தீர்களா? நீங்கள் எழுதுவதெல்லாம் உண்மையா?' என்பது போன்ற கேள்விகளில் தொடங்கி, 'எதற்கும் ஒரு நல்ல மனநல மருத்துவரைப் பார்த்துவிடுங்களேன்' என்ற போலிக் கரிசனம்வரை ஆயிரக்கணக்கான விமர்சனங்கள். | பச்சைப்புடவைக்காரியும் வலியும் ஒன்று. நாம் யாருமே வலியைப் பார்த்ததில்லை. ஆனால் வலியை உணர்வதுபோல் நாம் பார்க்கும் காட்சிகளை அழுத்தமாக உணரமுடிவதில்லை. வலியை உணராதவர்களுக்கு என்னதான் கரடியாய்க் கத்தினாலும் வலியைப் புரியவைக்க முடியாது. உங்களால் வலியை உணர முடியுமென்றால் நான் அவளைப் பார்த்தது, பேசியது எல்லாம் உண்மை . இது உங்களுக்காகவே எழுதப்பட்ட புத்தகம். 'வலின்னா என்ன?' என்று நீங்கள் கேட்டால்... இந்தப் புத்தகம் உங்களுக்கு அல்ல.

Languageதமிழ்
Release dateSep 17, 2022
ISBN6580142409044
Pachaipudavaikkaari Part - 1

Read more from Varalotti Rengasamy

Related to Pachaipudavaikkaari Part - 1

Related ebooks

Reviews for Pachaipudavaikkaari Part - 1

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pachaipudavaikkaari Part - 1 - Varalotti Rengasamy

    http://www.pustaka.co.in

    பச்சைப்புடவைக்காரி பாகம் – 1

    Pachaipudavaikkaari Part – 1

    Author :

    வரலொட்டி ரெங்கசாமி

    Varalotti Rengasamy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/varalotti-rengasamy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    நான்பட்ட நன்றிக்கடன்…

    1. வைத்துக்கொண்டு வஞ்சனை செய்கிறேனா?

    2. குறிசொல்ல வந்தவள்

    3. கப்பல் தலைவர் கற்றுத்தந்த பாடம்

    4. நிரந்தர நரகம்

    5. எல்லாம் வெறுத்துவிட்டது

    6. ஒரு பைத்தியக்காரியின் பிதற்றல்

    7. அவள் எங்கே இருக்கிறாள்?

    8. நாலா பக்கமும் பிரச்சினை

    9. திரை விலகியது

    10. சேவலும் பிரச்சினையும்

    11. எங்கிருந்து தீமை பிறக்கிறது?

    12. காசி முக்தி பவன்

    13. உணவகத்தில் நடந்த அதிசயம்

    14. அவள் எழுதிய கதை!

    15. தப்பு யாரிடம்?

    16. சிறந்த வழிபாடு

    17. அன்பே சக்தி

    18. வறுமை என்பது வெளியே இல்லை

    19. வரம் கேட்டு வாங்கிக் கட்டிக்கொண்டவர்கள்!

    20. விதிகளும் விதிமீறல்களும்

    21. கடவுளைக் காட்டு, நம்புகிறேன்.

    22. கண்ணுக்குத் தெரியாத வளர்ச்சி

    23. பிரச்சினைக் கரடி

    24. தெய்வத்தாயும் மானுட மகனும்!

    25. பெட்டியும் சாவியும்

    26. பட்டயக்கணக்கனும் பிச்சைக்காரனும்

    27. திருத்திய கதைகள்

    28. தாயா? தெய்வமா?

    29. கடவுள் இருந்திருந்தால்...

    30. கதைசொல்லிகள் தேவையில்லை!

    31. யாருக்கு யார் உதவி செய்கிறார்கள்?

    32. இறைவனும் அரசியல்வாதியும்

    33. தப்பு செய்துவிட்டாய் மகளே

    34. அம்பிகையின் அருட்கொடை

    35. கதறவைத்த காணொளி

    36. அவள் செய்த அநியாயங்கள்

    37. அன்னதானம் செய்ய ஆசை!

    38. நல்லவன் வாழ்வான்!

    39. அவள் ஒரு ஏமாற்றுக்காரி!

    40. ஊர்ந்து சென்ற துன்பப் பாம்பு!

    41. நான் என் பதவியை விடமாட்டேன்!

    42. கர்மக்கணக்கும் காளியின் அருளும்!

    43. காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி…

    44. ஒய்யாரமான ஓவியக்காரி

    45. அழைத்த குரலுக்கு வராத அன்னை!

    46. அவள் செய்த சிகிச்சை!

    47. அவள் தேர்ந்தெடுத்த வாழ்க்கை!

    48. தீயெனச் சுட்ட சொல்

    49. தாயா? தர்மமா?

    50. சோதனை மேல் சோதனை!

    51. மரணமில்லாப் பெருவாழ்வு

    52. கடைசித் தருணங்கள்…

    நிறைவாகச் சில வரிகள்...

    நான்பட்ட நன்றிக்கடன்…

    தொடரின் பகுதிகளை ஒன்றிற்கு இரண்டு முறை பொறுமையாகப் பிழை திருத்திய என் மனைவி இந்து;

    வித்தியாசமான அன்னை மீனாட்சியின் படம்வேண்டும் என்று ஓவியர் ஷ்யாமிடம் கோரிக்கை வைத்தபோது அவர் ஆப்கானிஸ்தானில் இருந்தார். என்றாலும் உடனே ஒரு படத்தை அனுப்பிவைத்தார். நான் ஆயிரம் பக்கங்களில் அன்னைக்குச் செய்ய முடியாத அஞ்சலியை ஒரே படத்தில் செய்த ஓவியர் ஷ்யாம்;

    இவர்களுக்கு வாய் வார்த்தையாக நன்றி சொல்லி முடித்துவிடமுடியாது. இவர்களுக்கு நான் பட்ட கடனை அடைக்க ஒரு பிறவி போதாது.

    காலமெல்லாம் என்னைத் தன் கொத்தடிமையாய்க் கொண்டிருக்கும் கையில் கிளி தாங்கிய கோலக்கிளியாம் மரகதவல்லி, மதுரையின் அரசி, மீனாட்சி என் பச்சைப்புடவைக்காரியின் திருப்பாதகமலங்களைத் தொட்டு வணங்கி இதைப் படிக்கின்ற நீங்கள் எல்லோரும் எல்லா நலனும் பெற்று வாழவேண்டும் என்ற பிரார்த்தனையையும் அவள் முன் வைத்து வரலொட்டி ரெங்கசாமியாகிய நான் இன்று இந்த நூலை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

    1. வைத்துக்கொண்டு வஞ்சனை செய்கிறேனா?

    அன்று சனிக்கிழமை. மீனாட்சி கோவிலில் அவ்வளவாகக் கூட்டம் இல்லை. தரிசனம் முடிந்தபின் கோவிலைவிட்டுச் செல்ல மனமில்லாமல் பொற்றாமரைக் குளத்தின் படிகளில் அமர்ந்திருந்தேன்.

    யாராவது வருகிறார்களா? இல்லை அருகில் அமரலாமா?

    குரல் கேட்டு நிமிர்ந்தேன். முன்னால் ஒரு பேரழகி நின்றுகொண்டிருந்தாள். வயது 25 இருக்கும். ஜொலிக்கும் முகம். கருணை பொங்கும் கண்கள்.

    நீங்கள்.. யார்...

    என் புடவையின் நிறத்தைப் பார்.

    பச்சை. ஆஹா அன்னையே நேரில் வந்துவிட்டாளா? அவள் கால்களில் விழுந்து வணங்கினேன். இவள் இப்படி எல்லோரும் பார்க்கும்படி வந்தால் இவள்மேல் கண்படாதோ? மக்கள் கூட்டம் மொய்த்துவிடுமே!

    நான் உன் கண்களுக்கு மட்டுமே தெரியும் உருவெளிப்பாடாக வந்திருக்கிறேன். உன் மனதைக் குடைந்து கொண்டிருக்கும் கேள்வியைக் கேள்.

    தாயே நீங்கள் இறைவி. உங்களிடம் உள்ள செல்வங்களும் சக்திகளும் அளவிடமுடியாதவை. இந்த உலகத்தில் உள்ள மனிதர்கள் கேட்ட அனைத்தையும் கொடுத்தாலும் உங்கள் செல்வத்தில் இம்மியளவுகூடக் குறையாது. பிறகு ஏன் கொடுக்க மாட்டேன் என்று அடம்பிடிக்கிறீர்கள்? ஏன் வைத்துக்கொண்டே வஞ்சனை செய்கிறீர்கள் அம்மா?

    ஒரு தாயிடம் ஒரு பெரிய பாத்திரம் நிறைய இனிப்புகள் இருக்கின்றன. அந்தத் தாயின் குழந்தைகள் நிறைய இனிப்பு வேண்டும் என்று அடம்பிடிக்கிறார்கள். பாத்திரத்தில் உள்ள இனிப்புகளை மொத்தமாகக் குழந்தைகளிடம் கொடுத்தால் என்ன ஆகும்? குழந்தைகளின் வயிறு கெட்டுப்போகும் அல்லவா? அதனால் அவள் அளந்து கொடுக்கிறாள். இறைவன் படியளக்கிறான் என்று சொல்வது அதனால்தான். அளந்து கொடுக்கக் காரணம் என்னிடம் உள்ளது குறையும் என்பதால் அல்ல. நீங்கள் அவதிப்படக்கூடாது என்பதற்காகத்தான். எந்த அளவு என் குழந்தைகள் இனிப்பு சாப்பிடமுடியும் என்று எனக்குத் தெரியும்.. அந்த அளவுவரை கொடுக்கிறேன். அதற்கு மேலும் வேண்டும் என்று அடம்பிடித்தால் நிர்தாட்சண்யமாக மறுத்துவிடுகிறேன்.

    அவளுடைய அழகு முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

    இதில் இன்னொரு விநோதமும் இருக்கிறது. நான் காட்டும் காட்சியைக் கவனித்துப் பார்.

    கண் முன்னால் திரைப்படமாகக் காட்சி விரிந்தது.

    காட்சியில் தெரிந்த பெண்ணுக்கு முப்பது வயது இருந்தால் அதிகம். ஒரு ஜோதிடர் அவளுடைய கணவரின் ஜாதகத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்.

    இன்னும் இரண்டு நாட்களில் உங்கள் கணவருக்கு நெருப்பில் பெரிய கண்டம் காத்திருக்கிறது. உயிர் பிழைப்பதே கொஞ்சம் கஷ்டம்தான்..

    அந்தப் பெண் அதிர்ச்சியில் மூர்ச்சை அடைகிறாள். மயக்கம் தெளிந்ததும் மீனாட்சியம்மன் கோவிலுக்கு ஓடி வருகிறாள்.

    தாலிப்பிச்சை கேட்டு வந்திருக்கிறேன், தாயே. கருணை காட்டுங்கள். என்று மீனாட்சியின் சன்னிதியில் கதறி அழுகிறாள். ‘கவலைப்படாதே நான் பார்த்துக்கொள்கிறே.’ என்று அன்னை சொன்னது எனக்குத் தெரிந்தது. ஆனால் அவள் காதில் விழவில்லை.

    காட்சி மாறியது.

    மாலை ஏழு மணி. அந்தப் பெண்ணின் கணவன் வீட்டிற்கு வருகிறான்.

    என்னங்க உங்க முகம் ஒரு மாதிரியா இருக்கே என்னாச்சு?

    எங்க ஆபீஸ்ல ஒரு சின்ன தீ விபத்து.

    ஐயையோ உங்களுக்கு ஒண்ணும் ஆகலையே?

    நல்ல வேளை. அந்த சமயம் பார்த்து நான் சிகரெட் பிடிக்க வெளிய போயிருந்ததால தப்பிச்சிக்கிட்டேன். பாவம் என் ஃப்ரண்டு சுரேஷுக்கு நல்ல காயம்.

    அந்தப் பெண் அன்னை மீனாட்சியின் படத்தை விழுந்து வணங்குகிறாள். பின் தன் தாலியை எடுத்துக் கண்களில் ஒற்றிக்கொள்கிறாள். கண்ணீர் மல்க மீனாட்சிக்கு நன்றி சொல்கிறாள்.

    பின் தீக்காயம் பட்ட சுரேஷின் மனைவி மாலதியைத் தொலைபேசியில் அழைக்கிறாள்.

    நல்ல வேளை சுமதி. காயம் அப்படி ஒண்ணும் பெரிசா இல்ல. தப்பிச்சிட்டாரு. ஒரு வாரம் ஆஸ்பத்திரில இருக்கணும்னு சொல்லிட்டாங்க. சின்னத் தழும்புகூட இருக்காதுன்னு சொல்லிட்டாங்க.

    ஓஹோ

    இன்னொரு விஷயம் தெரியுமா? நேத்து கம்பெனி எம் டி அவரைப் பாக்க வந்திருந்தாரு. தீ விபத்துல மாட்டிக்கிட்ட ஒவ்வொத்தருக்கும் பதினஞ்சு லட்சம் தரப் போறாங்களாம். அந்தப் பணத்த என்ன பண்றதுன்னுதான் நானும் அவரும் பேசிக்கிட்டு இருக்கோம்.

    அதற்குப் பின் மாலதி பேசியது எதுவும் சுமதியின் செவியில் ஏறவில்லை. தன் கணவன் மேல் பாய்கிறாள்.

    இந்தச் சனியன் பிடிச்ச சிகரெட் பழக்கத்த விடுங்கன்னு எத்தனை வருஷமா சொல்லிக்கிட்டு இருக்கேன். இன்னிக்கு நீங்க வெளிய போகாம தீவிபத்துல மாட்டிக்கிட்டு இருந்தீங்கன்னா உங்க ஃப்ரண்டுக்குக் கெடைச்ச மாதிரி உங்களுக்கும் 15 லட்ச ரூபாய் கெடைச்சிருக்கும்ல? உங்களால அது அநியாயமாப் போயிருச்சி.

    அதன்பின் மீனாட்சி படத்தைப் பார்த்துக் கத்துகிறாள்.

    தாயே உனக்குக் கண் இல்லையா? இப்படி வரவேண்டிய 15 லட்ச ரூபாய்ப் பணத்தை அநியாயமாப் பறிச்சிக்கிட்டயே? வெள்ளிக்கிழமை தவறாம உன் கோவிலுக்கு வந்ததுக்கு இதுதானா பலன்?

    ***

    "இப்போது சொல்லப்பா. நான் என்ன வைத்துக்கொண்டா வஞ்சனை செய்கிறேன்? அவள் கணவனுக்கு உண்மையிலே அன்று நெருப்பில் கண்டம் இருந்தது. பாவம் இவள் அழுகிறாளே என்று கர்மக் கணக்கு பார்க்கும் தர்ம தேவதைகளிடம் பேசி அவனைக் காப்பாற்றினேன். இவளோ பணம் போய்விட்டதே என்று அழுது கொண்டிருக்கிறாள். நான் என்ன செய்யட்டும் சொல்?"

    நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம் தாயே! ஆனால் நீங்கள் செய்தது பெரிய தவறு. இவ்வளவு அல்பமான மனிதர்கள் மேலும் உங்கள் அன்பைப் பொழிகிறீர்களே அது தவறம்மா. நாங்கள் நன்றிகெட்ட புழுக்கள் தாயே. எங்கள் மேல் கருணை காட்டாதீர்கள்.

    அதற்கு மேல் என்னால் தாங்கமுடியவில்லை. விம்மி அழுதபடி வேரறுந்த மரம் போல் அவள் காலடியில் விழுந்தேன்.. எழுந்து பார்த்தபோது அவள் அங்கு இல்லை.

    2. குறிசொல்ல வந்தவள்

    அன்று மனம் நிலைகொள்ளாமல் தவித்துக்கொண்டிருந்தது. காலையில் என் பால்ய சிநேகிதனைச் சந்தித்தேன். பொதுவாகக் குசலம் விசாரித்தபோது அவன் சொன்ன விஷயம் என்னைப் பெரிய அளவில் பாதித்துவிட்டது. ஒரு மனிதனின் வாழ்வில் இத்தனை சிக்கல்களா? அவனுடைய மகளின் திருமணம் முறிந்துவிட்டது. மகனுக்கு நிச்சயமாகியிருந்த திருமணம் நின்றுவிட்டது. இதனால் அவனுக்கு மாரடைப்பு வந்துவிட்டது.

    அன்று மாலை மீனாட்சியம்மன் கோவிலுக்கு நடந்தே சென்றேன். இவ்வளவு கனத்த மனதுடன் அவள் சன்னிதிக்குப் போக விரும்பவில்லை. ஆடிவீதியில் ஒரு நல்ல இடம் பார்த்து அமர்ந்துவிட்டேன்.

    சாமி சோசியம் பாக்கறீகளா?

    ‘ஆமாம்மா, இப்ப அது ஒண்ணுதான் குறைச்சல்.’ எரிச்சலுடன் அவளைப் பார்த்தேன்.

    ஏன் சாமி உன் கூட்டுக்காரன் குடும்பத்துல பிரச்சினை. அதுனால மனசு உடஞ்சி போயிருக்க. சரிதானே?

    அதிர்ச்சியில் எழுந்து நின்றுவிட்டேன்.

    நீ... நீங்க. யாரும்மா?

    என் புடவை நிறத்தைப் பாரு சாமி.

    பச்சைப்புடவைக்காரி.

    சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினேன்.

    உட்கார். பிரச்சினை என்னவென்று சொல்.

    சொன்னேன்.

    ஏன் தாயே சிலரின் வாழ்க்கை மட்டும் இடியாப்பச் சிக்கலாக இருக்க வேண்டும்?

    எல்லாம் நீங்களாக வரவழைத்துக்கொண்ட பிரச்சினைதான்.

    புரியவில்லையே.

    உன் நண்பனின் பிரச்சினைகள் எப்படி வந்தது என்று எனக்குத் தெரியும். ஆனால் அதை உன்னிடம் பகிர்ந்து கொள்ள முடியாத நிலையில் இருக்கிறேன்.

    என் முகம் சுண்டைக்காயாய்ச் சுருங்கியதை அவள் கவனித்துவிட்டாள்.

    அந்த ஞானம் இப்போது உனக்கு வேண்டாம். அந்தச் சிக்கலை எப்படி அணுக வேண்டும் என்று சொல்லித் தருகிறேன்.

    என் முகம் மலர்ந்தது.

    முன்னால் தெரியும் காட்சியைப் பார்.

    ***

    அது காசி போன்ற ஒரு புனித நகரமாக இருக்க வேண்டும்.. ஒரு வேளை அதுதான் கங்கை ஆற்றங்கரையோ? பல அந்தணர்கள் ஆங்காங்கே பூஜை புனஸ்காரங்களைச் செய்து கொண்டிருந்தார்கள். ஒரே ஒரு அந்தண இளைஞன் மட்டும் தனியாக அமர்ந்திருந்தான். அவன் முன்னால் தர்ப்பைப் புல், நீர், சுள்ளிகள் போன்ற சாமக்கிரியைகள் இருந்தன.

    அன்று அவன் ஒரு புதிய பூணும் நூலை அணிந்து கொண்டு சில சடங்குகள் செய்ய வேண்டும். அந்த நூல் பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டிருந்தது..

    அதைப் பிரித்து எடுக்கப் படாதபாடுபட்டுக்கொண்டிருந்தான். நேரம் ஆக ஆக சிக்கல் அதிமானதே தவிர குறையவில்லை. வானத்தைப் பார்த்தான். இன்னும் சிறிது நேரத்தில் இறந்து போன அவனுடைய பெற்றோருக்குச் செய்ய வேண்டிய தர்ப்பணத்திற்கான நேரம் போய்விடும். என்ன செய்வது என்று குழம்பிக்கொண்டிருந்தான்.

    அந்த இளைஞனின் பூணூலைப் போலப் பலருடைய வாழ்க்கையும் சிக்கலாகியிருக்கிறது. இப்போது சொல் அந்தச் சிக்கலை உண்டாக்கியது யார்? இறைவனா? தேவர்களா? அசுரர்களா? கிரகங்களா? இல்லை அவனுடைய எதிரிகளா?

    என்ன தாயே இது கேலிக்கூத்தாக இருக்கிறது? அந்தச் சிக்கலை உண்டாக்கியது அவனேதான். அதை எடுக்கும்போது முடிச்சைச் சரியாக அவிழ்க்காமல் விட்டிருப்பான். இல்லை பொழுதுபோகாமல் அந்த நூலை அப்படியும் இப்படியுமாக அலைக்கழித்தபோது அவனே அந்தச் சிக்கலை உருவாக்கியிருக்க வேண்டும்.

    சரி இப்போது சிக்கல் எப்படி வந்தது என்ற ஆராய்ச்சி முக்கியமா இல்லை அதை எப்படிக் களைய வேண்டும் என்ற முயற்சி முக்கியமா?

    சிக்கலை எப்படித் தீர்ப்பது என்பதுதான் முக்கியம்.

    அங்கே நடப்பதைக் கவனி.

    அந்த அந்தண இளைஞனை நோக்கி ஒரு பெரியவர் நடந்து வந்தார்.

    ஏண்டா இன்னும் தர்ப்பணம் தொடங்கலையா? அமாவாசை திதி இன்னும் ஒரு நாழிகைதானே இருக்கிறது?

    இந்தப் பூணலில் சிக்கல்...

    இங்கே கொண்டா நான் எடுத்துத் தருகிறேன்.

    இங்க பாருடா அம்பி இந்த முடிச்சுக்குப் பேர் பிரம்ம முடிச்சு. இதைப் பிடித்துக்கொண்டு இழுத்தால் எந்த மாதிரிச் சிக்கலும் தீர்ந்துவிடும்.

    அவர் சொன்ன மாதிரியே ஒரே விநாடியில் அந்தச் சிக்கல் போய்விட்டது.

    பூணூலில் ஏற்பட்ட சிக்கலைப் போக்க பிரம்ம முடிச்சைப் பற்றிக்கொள்ள வேண்டும். அதேபோல் வாழ்க்கையில் சிக்கல் உண்டானால் வாழ்க்கையின் பிரம்ம முடிச்சை அழுந்தப் பற்றிக்கொள்ள வேண்டும்.

    ஆஹா! அருமை தாயே!

    வாழ்க்கையின் பிரம்ம முடிச்சு என்ன?

    இறைவன்.

    அது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றாக இருக்குமே! சிலர் என்னை வணங்குகிறார்கள். சிலர் பரமசிவனை. சிலர் பெருமாளை. சிலர் பிள்ளையாரை. சிலர் முருகனை..

    இது என்ன தாயே அடுத்த சிக்கல்..

    இது சிக்கல் இல்லை. தெளிவு. இறைவன் என்றால் அன்பு என்பதை உணர்ந்துகொண்டு அந்த அன்பைப் பற்றிக்கொள்ள வேண்டும். ஒருவரின் வாழ்க்கையில் சிக்கல்கள் வந்தால் அவர் காட்டும் அன்பில் எங்கோ ஒரு குறைபாடு இருக்கிறது என்று புரிந்துகொண்டு சுற்றியிருப்பவர்கள் மீது மேலும் அன்பைப் பொழியவேண்டும். அன்பு அதிகமானால் சிக்கல்கள் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடி ஒளிந்து கொண்டுவிடும்.

    என் நண்பனின் மகள் – விவாகரத்து...

    அவள் சில நாட்கள் ஆசிரியப் பணியாற்றுவாள். அந்தச் சமயத்தில் தன் மாணவர்கள் மேல் அன்பைப் பொழிவாள். அந்த அன்பு அவளுடைய வாழ்க்கைச் சிக்கல்களைத் தீர்த்துவைத்துவிடும். உரியகாலத்தில் நல்ல மனம் கொண்ட ஒருவனைச் சந்திப்பாள். அவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள். பல ஆண்டுகள் நிறைவாக வாழ்வாள்.

    அ,ம்பிகையே சொல்லிவிட்டால் பின் அதற்கு அப்பீல் ஏது? அவளை மீண்டும் ஒரு முறை விழுந்து வணங்கினேன். நிமிர்ந்து பார்த்தால் குறி சொல்ல வந்தவளைக் காணவில்லை.

    3. கப்பல் தலைவர் கற்றுத்தந்த பாடம்

    நாளும் கிழமையுமா ஒரு பூஜை புனஸ்காரம் வேண்டாம்? எப்பப் பாத்தாலும் வேலை வேலைன்னு ஓடிக்கிட்டிருந்தா என்ன அர்த்தம்?

    என் தாயின் குற்றச்சாட்டிற்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. என்ன செய்வது? என் தொழில் அப்படி. என்னுடைய நெடுநாள் வாடிக்கையாளர் ஒரு இடியாப்பச் சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்கிறார். வருமானவரித் துறையிலிருந்து இன்று புதிதாக நான்கைந்து ஓலைகள் வந்திருக்கிறதாம். பதட்டத்துடன் என் அலுவலகத்தில் அவர் எனக்காகக் காத்துக்கொண்டிருக்கும்போது என்னால் மனம் லயித்துப் பூஜை செய்ய முடியவில்லை.

    வேலை முடிய மாலை ஐந்துமணியாகிவிட்டது. காலையில்தான் இறைவழிபாடு செய்யவில்லை. இப்போதாவது கோவிலுக்குப் போகலாம் என்று கிளம்பினேன். காரைச் சற்றுத் தள்ளி நிறுத்திவிட்டு அவசரம் அவசரமாகச் செருப்பு போடும் இடத்தை நோக்கி ஓடினேன். ஒரு பெண் காவல்துறை அதிகாரி வழிமறித்தார்.

    ***

    "ஒரு சின்ன விசாரணை. என்னுடன் வரமுடியுமா?"

    நீங்க தப்பான ஆள்கிட்ட. .

    உங்களைப் பற்றிய விவரங்களைச் சொல்லட்டுமா?

    என் பதிலை எதிர்பார்க்காமல் அவரே சொன்னார்.

    போதுமா இல்லை உங்கள் ஆதார் நம்பரைச் சொல்லட்டுமா?

    கொஞ்சம் தூரம் நடந்திருப்போம். அந்தப் பெண் அதிகாரியின் முகத்தைப் பார்த்துக்கொண்டேயிருக்கலாம் போல் இருந்தது. அவ்வளவு அழகு. சட்டென்று முகத்தைத் திருப்பிக்கொண்டேன். அப்புறம் வெறித்துப் பார்த்ததற்கு என்று தனியாக ஈவ் டீசிங் வழக்குப் போட்டுவிட்டால்?

    என்னப்பா பயந்துவிட்டாயா?

    பரிச்சயமான குரல். சட்டென்று நிமிர்ந்தேன். ஒரு கணத்தின் பத்தில் ஒரு பகுதியில் தன்னை அடையாளம் காட்டிவிட்டாள் அன்னை. பச்சைப்புடவைக்காரி.

    நடந்துகொண்டே பேசுவோமா?

    உங்கள் விருப்பம் தாயே!

    உன் மனதை ஏதோ அரித்துக்கொண்டிருக்கிறது.

    ஆம் தாயே. எனக்கு ஆழமான கடவுள் நம்பிக்கை உண்டு. என்றாலும் நான் செய்ய வேண்டிய முக்கியமான வேலை இருக்கும்போது எனக்காக யாராவது காத்துக்கொண்டிருக்கும்போது என்னால் மனமொப்பி இறைவழிபாடு செய்ய முடிவதில்லை. மோசமான பிரச்சினையை எதிர்நோக்கும்போது முதலில் நான் செய்ய வேண்டியதைச் செய்துவிட்டு அதன்பிறகுதான் இறைவனை நினைக்கிறேன். நான் செய்வது தவறா தாயே?

    நிச்சயமாக இல்லை. ஒரு நோயாளி உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும்போது அவனுக்கு சிகிச்சை அளிக்காமல் ஒரு மருத்துவன் எனக்குப் பாலாபிஷேகம் செய்வது என்னை அவமானப்படுத்துவதற்குச் சமமான பாவம்.

    சிலர் தங்கள் குழந்தைகள் நோயால் துடித்துக்கொண்டிருக்கும்போதுகூட அவர்களுக்கு சிகிச்சையளிக்காமல் ‘எல்லாம் அவள் பார்த்துக்கொள்வாள்’ என்று விட்டேத்தியாக இருக்கிறார்களே.

    பொறுப்பற்ற செய்கை. எனக்குப் பிடிக்காத செய்கை. இறைவழிபாடு எப்படி இருக்க வேண்டும் என்று நான் உனக்குக் காட்டுகிறேன் பார்.

    ***

    ஒரு பெரிய கடல். அதில் ஒரு கப்பல் சென்று கொண்டிருந்தது. கடல் அமைதியாக இருந்தது. கப்பல் அலுங்காமல் நலுங்காமல் சென்று கொண்டிருந்தது.

    கப்பலின் தலைவர் கப்பல் ஓட்டும் பொறுப்பைத் தன் உதவியாளர்களிடம் விட்டுவிட்டுத் தன் அறையில் இறைவன் திருமுன்பில் அமர்ந்தபடி புனித நூலைப்படித்துக்கொண்டிருந்தார். இறைவனின் அன்பை நினைத்தபடி கண்ணீர் சிந்திக்கொண்டிருந்தார்.

    சூழ்நிலையை மாற்றுகிறேன். தலைவர் என்ன செய்கிறார் என்று பார்.

    அன்னை கையசைத்தாள். அமைதியாக இருந்த கடல் ஆர்ப்பரிக்கத் தொடங்கியது. சூறாவளிக்காற்று வீசத்தொடங்கியது.

    கப்பலின் தலைவர் உடனே தன் அறையை விட்டு ஓடினார். கப்பலை ஓட்டும் பொறுப்பைத் தானே ஏற்றுக்கொண்டார். பயணிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யச் சொல்லிக் கட்டளையிட்டுக்கொண்டிருந்தார். தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலமாக அரசுத்துறை அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டார். புயல் எந்தத் திசையிலிருந்து என்ன வேகத்தில் வருகிறது என்று கண்டறிந்தார்.

    அந்தச் சமயத்தில் கப்பலை எந்தத் திசையில் செலுத்தினால் பாதுகாப்பானது என்பதைக் கணக்கிட்டு அப்படியே செலுத்தினார். ஒருவேளை புயலினால் கப்பலுக்கு ஆபத்து ஏற்பட்டால் பயணிகளும் பணியாளர்களும் தப்பித்துக்கொள்ளப் போதிய அளவு படகுகளைத் தயார் நிலையில் வைக்கச் சொல்லிக் கட்டளையிட்டார். இரண்டு மணிநேரம் பம்பரமாகச் சுழன்று வேலை பார்த்தார்.

    காற்றின் வேகம் படிப்படியாகக் குறைந்தது. கடல் மீண்டும் அமைதி நிலைக்குத் திரும்பியது. வானில் மேகங்கள். இல்லை. முழு நிலவு உதயமானது. பயணிகள் அனைவரும் மகிழ்ச்சிக் குரல் எழுப்பினார்கள். கப்பலை மீண்டும் உதவியாளர்களிடம் விட்டுவிட்டுத் தன் அறைக்குச் சென்றார் தலைவர். புனித நூலை விட்ட இடத்திலிருந்து படிக்கத் தொடங்கினா.ர்"

    "பார்த்தாயல்லவா? ஏதேனும் பிரச்சினை வந்தால் முதலில் அதனை எதிர்கொள்ள வேண்டும். பிரச்சினையைக் கண்டு பயந்து ஓடி ஒன்றுமே செய்யாமல் கடவுளை நாடுவது அப்பட்டமான கோழைத்தனம். அப்படிப்பட்ட கோழைகளுக்கு நான் ஒருபோதும் உதவி செய்ய மாட்டேன். மனித முயற்சியால் முடிந்த அளவு செய்துவிட்டுப் பின் அதன் பலனை இறைவனிடம் விட்டுவிடுவதே சரியான பக்தி.

    உனக்கு ஒன்று தெரியுமா? ஒரு ஆபத்து என்று வந்தவுடன் அந்தக் கப்பலின் தலைவர் ஓடிவந்து பயணிகள் பாதுகாப்பிற்குப் பரபரவென்று நடவடிக்கை எடுத்தது புனித நூலைப் படித்ததைவிட ஆயிரம் மடங்கு புனிதமான செய்கை..

    "பக்தி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். நிலைமை நன்றாக இருக்கும்போது நன்றியுணர்வால் மனம் நிறைந்து வழிபாடு செய்ய வேண்டும். நிலைமை மோசமானால் அதைச் சமாளிக்க முடிந்த அளவு முயற்சி செய்ய வேண்டும்.

    பல மனிதர்கள் இதைத் தலைகீழாக மாற்றிச் செய்கிறார்கள். எல்லாம் நன்றாக இருந்தால் இறைவன் என்று ஒருவன் இருக்கிறான் என்பதையே மறந்துவிட்டு ஆட்டம் போடவேண்டியது. ஒரு சின்னப் பிரச்சினை வந்துவிட்டால் அலறியடித்துக்கொண்டு கடவுளிடம் ஓட வேண்டியது. நெஞ்சில் உரமும் இன்றி நேர்மைத் திறனும் இன்றி வஞ்சனைகள் செய்வாரின் கூட்டம் அது. எந்தக் காலத்திலும் அந்தக் கூட்டத்தில் சேர்ந்துவிடாதே."

    காவல்துறை அதிகாரியின் வடிவில் வந்த மதுரையரசியை விழுந்து வணங்கினேன்.

    4. நிரந்தர நரகம்

    எங்கள் மதத்தில் சில பாவங்களுக்குத் தண்டனை நிரந்தர நரகம். அதிலிருந்து விடுதலையே இல்லை. அப்படி உங்கள் மதத்தில் இருக்கிறதா?

    வேற்று மதத்து நண்பர் கேட்டபோது மனதுக்குக் கஷ்டமாக இருந்தது. பாவம் எவ்வளவு கொடியதாக இருந்தாலும் அதற்கு நிரந்தர நரகம் என்பது அதைவிடக் கொடுமையான தண்டனை. நமது புராணங்களில் பல இடங்களில் முனிவர்களின் கொடிய சாபங்களைப் பற்றிப் படித்திருக்கிறேன். ஆனால் விமோசனமில்லாத சாபமும் விடுதலையில்லாத நரகமும் இருக்கமுடியாது என்றுதான் தோன்றுகிறது. ஒருவேளை அப்படி இருந்தால் .. நினைக்கவே குலை நடுங்குகிறது. நான் பெரிய பாவியும் இல்லை. அப்பழுக்கில்லாத உத்தமனும் இல்லை. என்றாலும் ஏதோ ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையில் கொடிய பாவம் ஒன்றைச் செய்ய நேர்ந்துவிட்டால்.. அப்புறம் என் ஆன்மா நிரந்தரமாக நரகத்தில் வேகவேண்டியதுதானா? எனக்கு விமோசனமே கிடையாதா?

    இந்தச் சிந்தனையோடு இரவு நேரத்தில் நடந்து கொண்டிருந்த நான் வீட்டை விட்டு வெகுதூரத்திற்கு வந்துவிட்டேன் போலும். போக்குவரத்து இல்லாத அழகர் கோவில் சாலையில் நின்றபடி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.

    ***

    "இந்த இடம் எங்கே இருக்கிறது?"

    முன்னால் ஒரு அழகான பெண் நின்று கொண்டிருந்தாள். பாவம் இந்த இரவு நேரத்தில் இவள் எப்படித் தனியாக, வழியும் தெரியாமல்...

    நான் வழிதேடி வந்தவள் இல்லை. வழிகாட்ட வந்தவள்.

    அந்த உறுதியான வார்த்தைகளில் வெளிப்பட்ட அழுத்தமான அன்பு அவளைக் காட்டிக்கொடுத்துவிட்டது. பொது இடம் என்றும் பார்க்காமல் அவள் கால்களில் விழுந்தேன்.

    இங்கே உட்கார்ந்து கொண்டு பேசுவோம். அன்னையின் காலடியின் கீழ் அமர்ந்து கருணை பொங்கும் அவள் கண்களைப் பார்ப்பதைவிடச் சிறந்த சொர்க்கம் எதுவுமே கிடையாது.

    உன் மனதை அரித்துக் கொண்டிருக்கும் கேள்வியைக் கேள்.

    கேட்டேன்.

    அங்கே என்ன நடக்கிறது என்று பார்.

    ***

    அது மதுரையின் புகழ் பெற்ற பெண்கள் கல்லூரி. மணி காலை ஒன்பதரை. கல்லூரியின் பெரிய கதவுகள் மூடப்பட்டிருந்தன. வெளியே ஒரு டஜன் மாணவிகள் கவலை தோய்ந்த முகத்துடன் நின்று கொண்டிருந்தார்கள்.

    என்ன நடக்கிறது தெரிகிறதா?

    "தாயே வெளியே நிற்கும் அந்தப் பெண்கள் கல்லூரிக்குத் தாமதமாக வந்திருக்கிறார்கள். குறித்த நேரத்திற்கு வராத மாணவிகளை அவர்கள் கல்லூரிக்குள் விடமாட்டார்கள். சுமார் அரை மணி நேரம் கதவருகில் காத்திருக்க வேண்டும். அதன்பின் ஒரு ஆசிரியை வருவார். அவர்களுடைய பெயர், வகுப்பு விவரங்களைக் கேட்பார். கல்லூரிக்குக் குறித்த நேரத்தில் வரவேண்டியதன் அவசியத்தைப் பற்றி விலாவாரியாகச்

    Enjoying the preview?
    Page 1 of 1