Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

154 கிலோபைட்
154 கிலோபைட்
154 கிலோபைட்
Ebook226 pages2 hours

154 கிலோபைட்

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

இணைய இதழ்களிலும் குழுக்களிலும் பாரா அவர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. இந்தக் கட்டுரைகள் எல்லாம் பிற்கால சந்ததியினருக்கு தமிழர்களின் கலாச்சாரத்தைக் காட்டும் காலக் கண்ணாடி என்று ஒரு நமட்டு சிரிப்புடன் சொல்லலாம். இல்லை நம் நகைமுரண்களை நகைச்சுவை தொகுப்பு என்பதை ஒப்புக் கொள்ளலாம்!
.

Languageதமிழ்
PublisherAppu Pradeep
Release dateMay 29, 2013
ISBN9781301054060
154 கிலோபைட்

Read more from பா ராகவன்

Related to 154 கிலோபைட்

Related ebooks

Related categories

Reviews for 154 கிலோபைட்

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    154 கிலோபைட் - பா ராகவன்

    3. சொல்வேட்டைக்காரன்

    4. இரண்டு நோய்கள்

    5. உருப்படாத எழுத்தாளனும் உதவாத ஞாயிற்றுக்கிழமைகளூம்

    6. கதையைத் தூக்கி உடைப்பில் போடு

    7. விட்ட குறை; விடாத குறை

    8. தமிழ் வாழ்க்கை, இங்கிலீஷ் வாழ்க்கை

    9. தனுஷ்கோடி

    10. பாதி வித்வான்

    11. பாவம் செய்தவர்கள் ஃபர்ஸ்ட் க்ளாஸுக்குப் போவார்கள்

    12. சாமியார் ராசி

    13. பயம்

    14. மனைவி ஜாதி

    15. வாழ்விலே ஒருமுறை (மட்டுமல்ல.)

    16. பெர்முடா அணியாத பெருமாள்

    17. வெற்றிகரமான தோல்வி: சில குறிப்புகள்

    18. பார்ட் டைம் அசிஸ்டெண்ட் டைரக்டர்

    19. மடங்கள், மகான்கள், மற்றும் சில மனிதர்கள்

    20. ஒரு வெகுஜனக் கவலை

    21. தீராத பிரச்னையும் ஒரு தேவதைக் காகமும்

    22. சரித்திரச் சிக்கல்கள்

    23. சர்மா என்றொரு ஜர்னலிஸ்ட்

    24. உலகத் தொலைக்காட்சிகளில் முதல்முறையாக

    25. நிர்வாணம் பரம ஔஷதம்

    26. கேட்டுக்கிட்டே இருங்க

    27. படித்தேன், ரசித்தேன்

    28. கோட்டை விடப்பட்ட கோப்பை

    29. அசோகமித்திரன்: கலையும் கலைஞனும்

    30. ஒரு நம்பிக்கை துரோகம்

    155வது கிலோ பைட்

    விதவிதமான பேனாக்களின்மீது எனக்கிருந்த காதலை, சொற்களில் விவரித்துவிடமுடியாது. ஒரு காலகட்டத்தில் நான் எழுதியதைவிட என்னிடமிருந்த பேனாக்களின் எண்ணிக்கை அதிகமாயிருந்தது. ஒல்லிப் பேனா. குண்டுப் பேனா. ஐந்து ரூபாய் பேனா. ஐநூறு ரூபாய் பேனா. பார்க்கர் பேனா. பைலட் பேனா. கூராக எழுதும் பேனா. வழுக்கிக்கொண்டு ஓடும் பேனா. அன்பளிப்பாகக் கிடைத்தது. ஆசையாய் விலை கொடுத்து வாங்கியது.

    எந்தப் பேனாவையும் மூன்று மாதங்களூக்கு மேல் உபயோகித்தது கிடையாது. எடுத்து பத்திரமாக வைத்துவிட்டு, அடுத்ததற்கு மாறுவது வழக்கம்.

    இது குறித்த விமர்சனம் வீட்டில் எப்போதும் உண்டு. எத்தனை பேனாக்கள்! ஒன்றை நிராகரித்து, அடுத்ததற்கு மாறுவதற்கான காரணம் ஒன்றுமே இல்லாதபோது?

    திருமணத்துக்கு முன் என் தம்பிகள் கேட்பார்கள். திருமணமானபின் மனைவி கேட்கிறாள்.

    கொஞ்சம் உபயோகித்து, ஓய்வளித்து வைத்துள்ள பேனாக்களில் எது ஒன்றுமே எழுத உதவாமல் இல்லை. இப்போதும் கழுவி, மையூற்றி எழுதத் தொடங்கினால் தடையற்றுப் பொழியக்கூடியவை தான் எல்லாமே.

    ஆனாலும் தொடுவதில்லை. சௌகரியம் என்கிற சமாதானத்தின்பேரில் விருப்பங்கள் மாறிக்கொண்டே இருந்திருக்கிறது. என்னையறியாமல் இந்த விஷயத்தில் தறிகெட்டுப் பேனா வாங்கியிருக்கிறேன். என்றாவது என் பீரோவைக் குடையும்போது அந்த அட்டைப் பெட்டியை எடுத்துப் பார்த்தால் எனக்கே வியப்பாகவும் வருத்தமாகவும் இருக்கிறது. எத்தனை பேனாக்கள்!

    என்னைவிட நிறையவும் நிறைவாகவும் எழுதக்கூடிய எத்தனையோ எழுத்தாளர்களை நானறிவேன். யாரும் இந்தளவு பேனா வாங்கியிருக்கமாட்டார்கள்.

    இதெல்லாம் நேற்று முந்தினம் வரை. இப்போது நான் பேனாக்களை மாற்றுவதில்லை. எழுதும் முறையை மாற்றிவிட்டேன்.

    உலகம் கம்ப்யூட்டரில் எழுதத்தொடங்கிக் கொஞ்சம் காலதாமதமாகத் தான் நான் இதில் எழுதத் தொடங்கியிருக்கிறேன். ஆயினும் என் பேனாக்களின் வேகத்தைக் காட்டிலும் இதன் வேகமும் சௌகரியங்களும் அதிகமாக இருக்கிறது. மனம் ஓடும் வேகத்துக்கு விரல் நுனிகள் ஓடுகின்றன. விரும்பியவண்ணம் வெட்டி, சேர்த்து, மாற்றி, கோக்க முடிகிறது. கணிசமாக நேரம் மிச்சமாகிறது. அதைவிட முக்கியம், மணிக்கணக்கில் உட்கார்ந்து எழுதும்போது ஏற்படுகிற உடல் சார்ந்த வலிகள் இதில் அறவே இல்லாது போவது பெரிய விடுதலையாகப் படுகிறது. எழுதிய பக்கங்களை எண்ணி, எண் இட்டுச் சேர்த்துத் தொகுக்கும் பேஜார் இல்லை. எழுத எழுத எல்லாம் அழகிய வரிசையில் ஒன்று சேர்ந்துவிடுகின்றன. பக்கங்களும் கனமும் கண்ணெதிரே தெரிந்துவிடுகிறது. ஒரு கட்டுரை ஏழு கிலோபைட்டைத் தாண்டக்கூடாது என்பது எனக்கு நானே வகுத்துக்கொண்ட விதி. சிறுகதை என்றால் நாற்பது கிலோ பைட். கடிதம் என்றால் ஒரு கிலோபைட்.

    படைப்புக்கு இதெல்லாம் அநாவசியம் தான். ஆனால் குரங்கு மனத்துக்கு சேஷ்டைகள் தான் இஷ்டம். இந்தத் தொகுப்பின் கனம் 154 கிலோபைட்.

    என்ன ஒரு வருத்தம், ஒரே வெண்திரை. லாஜிடெக் மவுஸ். சாம்ஸங் கீபோர்டு. பேனாக்களைப் போல் நினைத்துக்கொண்டாற்போல் மாற்றிக்கொண்டிருக்க முடிகிறதில்லை. அப்படியும் விட்டுவிடுவதாயில்லை. நேற்று விண்டோஸ் 98. இன்று விண்டோஸ் 2000. நாளை எக்ஸ்.பி.க்கு மாறலாமா என்று ஒரு யோசனை இருக்கிறது.

    ***

    இந்தத் தொகுப்பில் உள்ள கட்டுரைகள் அனைத்தும் நான் கம்ப்யூட்டரிலும் இணைய இதழ்களிலும் குழுக்களிலும் எழுதத் தொடங்கிய பிறகு எழுதப்பட்டவை.

    சுமார் ஓராண்டு காலத்துக்குள் கிட்டத்தட்ட எழுபது கட்டுரைகள் வரை எழுத முடிந்திருக்கிறது என்பது ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. நண்பர்களின் நிர்ப்பந்தங்கள் இல்லாமல் இது சாத்தியமாகியிருக்க முடியாது.

    முக்கியமாக குமுதம் இணையத் தளத்தின் பொறுப்பாளராக இருந்த திரு. ஆர். பார்த்தசாரதி. அப்போது நான் ஜங்ஷன் இதழின் பொறுப்பாசிரியராக இருந்தேன். குமுதம் டாட்காமில் எனக்கொரு இடம் உருவாக்கிக் கொடுத்ததோடல்லாமல் வாரம்தோறும் விரட்டி, விரட்டிக் கட்டுரைகளை எழுதி வாங்கிப் பிரசுரித்து, உடனுக்குடன் வரும் வாசகர்களின் கடிதங்களையும் எனக்கு அனுப்பி உற்சாகம் கொள்ளச் செய்வார்.

    நான் வாரப் பத்திரிகைக்காரன். கிட்டத்தட்டப் பதினாலு வருஷங்கள் அந்த உலகில் ஊறித் திளைத்தவன். அதன் வாசகர்களின் நாடி நரம்புகளை நன்கு அறிந்தவன். எது எழுதினால் பிடிக்கும், எது எழுதினால் வெடிப்பார்கள், எதை வரவேற்பார்கள், எதை வெறுப்பார்கள், எதற்குக் கடிதம் எழுதுவார்கள், எதற்கு மொட்டைக்கடிதம் எழுதுவார்கள் என்று தெரியும்.

    ஆனால் குமுதம் இணையத் தளத்தில் எழுதத் தொடங்கியபிறகு நான் பார்த்த வாசகர்கள் முற்றிலும் வேறுவிதமாக இருந்தார்கள். அமெரிக்காவிலிருந்தும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் பிரான்ஸ், ஜெர்மன், ஸ்ரீலங்கா, தாய்லாந்து, மலேசியாவிலிருந்தும் வாரம் தோறும் வந்த மின் கடிதங்கள், தமிழ்நாட்டுக்கு வெளியே இருக்கிற தமிழர்களின் விருப்பு வெறுப்புகள் குறித்த ஓரளவு தெளிவான வரைபடத்தை எனக்குக் கொடுத்தன.

    அவர்கள் தமிழகத்தை விட்டுப் புறப்படுகிற தினத்தன்று என்னென்ன அறிந்திருந்தார்களோ, அதற்குமேல் இம்மியும் அறியமுடியாத கலாசாரத் துண்டிப்புக்கு துரதிருஷ்டவசமாக ஆளாகியிருப்பதைக் கண்டேன். ஆன்மிகம், இலக்கியம், சினிமா, புத்தகங்கள் மீதான தீராத விருப்பமுடன் சமகால நடப்புகளை அறிவதில் அவர்கள் காட்டிய ஆர்வம் என்னை பிரமிக்கச் செய்தது. அதே சமயம் தமிழக அரசியல் குறித்த அலட்சியமும் அறிய விரும்பாத மனோபாவமும் இருப்பதைக் கண்டேன். நண்பர்களாலும் சக எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களாலும் பெரிதும் சிலாகிக்கப்பட்ட பல அரசியல் கட்டுரைகளை அவர்கள் புறங்கையால் ஒதுக்கிவிட்டதையும் குறிப்பிட வேண்டும். நமது வாழ்வின் தவிர்க்கமுடியாததொரு மாபெரும் அம்சத்தைத் தவிர்த்துவிட்டு வாழவே பெரிதும் விரும்புகிறார்கள். இங்கிருந்து அவர்கள் இடம்பெயர்ந்து போனதற்கு வருமானம் நீங்கலான காரணங்களுள் அரசியலும் முக்கியமானதாக இருந்திருக்கக் கூடும்.

    பிறகு நான் ராயர் காப்பி க்ளப், தமிழோவியம், தினமொரு கவிதை போன்ற இணையத் தளங்களுக்கு எழுதவந்தபோதும் இதே மனோபாவம் உலகத் தமிழர்கள் மத்தியில் வேரோடி இருப்பதை மறுபடியும் எனக்கு நானே நிரூபித்துக்கொண்டேன். வாசிக்கக் கூட விரும்பாத அளவிலான அரசியல் சூழலிலா நாம் இருக்கிறோம்? யோசிக்கவேண்டிய விஷயமே. எது இல்லாதபோதும் ஜனநாயகம் இருக்கிறது என்பது இன்றைய சூழலில் திருப்தியடையப் போதுமானதாக இல்லை போலிருக்கிறது.

    ***

    இந்தக் கட்டுரைகளை நான் எழுதக் காரணமாயிருந்த நண்பர்கள் பார்த்தசாரதி, தினம் ஒரு கவிதை இணையக் குழுவின் ஆசிரியர் என். சொக்கன், தமிழோவியம் கணேஷ் சந்திரா, ராயர் காப்பி க்ளப் மின்னிதழ் நிர்வாகியும் என் இனிய நண்பருமான இரா. முருகன் ஆகியோருக்கு நன்றி.

    கடும் வேலை நெருக்கடிகளுக்கு நடுவில் தான் இந்தக் கட்டுரைகளை எழுதினேன். பெரும்பாலும் அலுவலக இரவுகளில். அல்லது மதிய உணவு இடைவேளைகளில். என் பணிச் சுமையின் மிகுதியை விரும்பி எடுத்துத் தன் தலையில் போட்டுக்கொண்டு நான் எழுதுவதற்கு நேரமும் சூழலும் உருவாக்கிக்கொடுத்த என் நண்பரும் துணை ஆசிரியருமான நாகராஜகுமாருக்குத் தனியே நன்றி சொல்லவேண்டும்.

    பல்லாயிரக்கணக்கான முகமறியாத வாசகர்களின் நடுவில் தனி முகமும் தனி அன்பும் அக்கறையும் காட்டிய தினம் ஒரு கவிதை தளத்தின் சுமார் இரண்டாயிரம் வாசகர்களைச் சிறப்பாகக் குறிப்பிடவேண்டும். ஒருவாரம் என் கட்டுரை வராதுபோனால் என் மின்னஞ்சல் பெட்டியைக் கடிதங்களால் நிரப்பிவிடுவார்கள். கிழித்துப் போட மனசு வராத கல்யாணப் பத்திரிகைகள் மாதிரி, அவர்களின் கடிதங்கள். எழுதுபவனின் ஆகப்பெரிய திருப்தி, எழுத்து தனக்கான பிரத்தியேக வாசகர்களைக் கண்டடைவது.

    அந்தவகையில் என்னையும் ஓர் அதிர்ஷ்டசாலியாகப் படைத்த எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனுக்கு ஸ்பெஷல் நன்றி.

    பா. ராகவன்

    சென்னை 10.07.2003

    பாபா ப்ளாக்ஷீப் 1

    அவர் பூஜை போடுவதற்கு முன்பே மீடியா பூஜை போட்டுவிட்டது. அவராவது ஒரு பூஜையோடு நிறுத்திக்கொண்டார். ஆனால் மீடியாவோ தினசரி ஆறுகால (சமயத்தில் எட்டு காலம்!) பூஜை தவிர, வாராந்திர சிறப்பு ஹோமங்கள், மாதாந்திர யாகங்கள் என்று மனம் போன போக்கில் இறங்கிவிட்டது. பிரிண்ட் மீடியா இப்படி என்றால் தொலைக்காட்சிகள் வேறு ரகம். சிறப்புப்பார்வை என்று மாதக்கணக்கில் அவரையே பார்த்துக்கொண்டிருந்தன. ஒரு தியானம் மாதிரி. நிற்கமாட்டாரா, நடக்கமாட்டாரா, ஹச்சென்று ஒரு தும்மல் வராதா, அதற்குள் ஒரு சில அர்த்தங்கள் கண்டுபிடிக்க சாத்தியங்கள் இருக்குமா - எல்லைகளை மீறிக்கடந்துவிட்டன அந்தச் சிலமாதகால நடப்புகள். அரசியல் சார்ந்த செய்திகள் பின்னுக்குத் தள்ளப்பட்டன. காவிரி, கர்நாடகா, கருணாநிதி, ஜெயலலிதா, வாஜ்பாயி, அயோத்தி இன்னோரன்ன சங்கதிகள் யாவும் விண்ணிலும் மண்ணிலுமாகத் தாற்காலிகமாகப் புதைக்கப்பட்டு அவருக்கு மட்டுமே எங்கும் எப்போதும் முக்கியத்துவம் தரப்பட்டது.

    மக்களூக்கும் வேண்டித்தான் இருந்தது. அவரைப் பற்றிய சிறு துணுக்காயினும் விழுந்து விழுந்து படித்தார்கள். அப்படியா, அப்படியா என்று ஆற்ற மாட்டாமல் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். உடன் நடிக்கிறவர்கள் யார், இசையமைக்கப் போவது யார், இயக்கப்போவது இவரா, அவரா போன்ற ஆதார சந்தேகங்களுக்கு விடை கிடைத்துவிட்ட பிறகு, ஆர்வத்தை மேலும் வளர்க்க, அந்த 'பஞ்ச்' டயலாக் என்னவாக இருக்கும் என்கிற யூகங்கள் வலம் வரத்தொடங்கின.

    ஒரு வாரமிருமுறைப் பத்திரிகை, தன் வாசகர்களுக்கே ஒரு போட்டி அறிவித்தது. அந்த பஞ்ச் டயலாகை நீங்கள் எழுதுங்கள். சிறந்த டயலாகை அவரே தேர்ந்தெடுப்பார். பரிசுத் தொகை தவிர, தேர்வாகும் டயலாக்குகள் படத்திலும் இடம்பெற ஒரு சந்தர்ப்பம்.

    நம்புவது கஷ்டம் தான் லட்சக்கணக்கில் வந்துவிட்டன பஞ்ச் டயலாக்குகள். கடவுளே, தமிழகத்தில் இத்தனை சொல்லின் செல்வர்கள் உண்டா?

    இதற்கிடையில் இன்னார் படத்திலிருந்து விலகிவிட்டார், இன்னாருக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் கிடக்கிறார், அவர் தான் முழு உதவியையும் மலர்ந்த முகத்துடன் செய்துகொண்டிருக்கிறார், இன்ன தேதிக்குப் படம் முடிந்துவிடும், இந்தத் தேதியில் அவர் பத்திரிகையாளர்களைச் சந்திப்பார், இந்த இந்த தியேட்டர்களில் படம் ரிலீஸ் ஆகிறது என்பது மாதிரியான செய்திகளில் சில வாரங்கள் சாபல்யம் அடைந்தன.

    பிறகு படப்பிடிப்பு நடந்த இடங்களில் ரகசியமாக நுழைந்து செய்தியும் படங்களூம் சேகரித்த துப்பறியும் ஜர்னலிச நடவடிக்கைகள். யார் அந்த இரண்டாயிரம் வருஷத்துச் சாமியார்? தீவிரமான தேடுதல் வேட்டைகள். ஆம். அவர் இமயமலைக்காரர். சிதம்பரத்தை அடுத்த பரங்கிப்பேட்டையில் அவருக்கு ஒரு பிராஞ்ச் ஆபீஸ்- சே, கிளை மடம் இருக்கிறது. பிரத்தியேகப் புகைப்படங்களுடன் அதிரடி ரிப்போர்ட்டுகள். அந்த இரண்டு விரல் முத்திரை குறித்த அபூர்வத் தகவல்கள். ம்ருகி முத்திரை. அதென்ன ம்ருகி?

    ஆராய்ச்சி, ஆராய்ச்சி, மேலும் ஆராய்ச்சி. ஒருவேளை அவர் எதிர்காலத்தில் தொடங்கவிருக்கும் அரசியல் கட்சிக்கு அதுவே சின்னமாக இருக்குமோ? யூகங்களே தகவல்களாக வெளிவந்தன.

    அது சரி, யாரோ ஜப்பானியப் பெண் நடிக்கிறாராமே? உடனே அவரது ஜப்பான் ரசிகர்கள் குறித்த ஓர் அலசல். காலம் கலிகாலம் . ரின் சுப்ரீம் போட்டு எதையும் அலசாவிட்டால் மீடியாவுக்கு மதிப்பே இல்லாது போய்விடுகிறது இப்போதெல்லாம். ஜப்பானியப் பெண், ஜப்பானிய ரசிகர்களை முன்வைத்து திடீரென்று அவருக்கொரு சர்வதேசப் பரிமாணம் கிடைத்துவிடுகிறது.

    யார்

    Enjoying the preview?
    Page 1 of 1