Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kazhugu
Kazhugu
Kazhugu
Ebook254 pages1 hour

Kazhugu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் (1916 - அக்டோபர் 29, 2007) தமிழ்நாடு, லால்குடியில் பிறந்த தமிழ் எழுத்தாளர். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி காலத்தில் இருந்து எழுதி வந்தவர்.

லா.ச.ரா.வின் முதல் கதை 18வது வயதில் வெளியானது. தொடக்கத்தில் சிறுகதைகள் மட்டுமே எழுதிவந்த லா. ச. ராவை அவருடைய 50-வது வயதில் சென்னை வாசகர் வட்டம் "புத்ர" என்ற நாவல் எழுத வைத்தது. அவருக்கு 1989-ல் சாகித்ய அகாதமி விருது பெற்றுத் தந்த சுயசரிதை சிந்தாநதி தினமணி கதிரில் தொடராக வந்தது.

லா.ச.ரா.வின் படைப்புகள் பல இந்திய, அயல்நாட்டு மொழிகள் பலவற்றில் மொழியாக்கம் செய்யப்பட்டுப் பல இலக்கியத் தொகுப்புகளில் இடம் பெற்றிருக்கின்றன. குறிப்பாக சிகாகோ பல்கலைக்கழகம் வெளியிட்ட "மஹஃபில்", பெங்குவின் நிறுவனத்தார் வெளியிட்ட "நியூ ரைட்டிங் இன் இந்தியா" செக் மொழியில் அவரை மொழியாக்கம் செய்த கமீல் ஜீவலபில் என்ற தமிழ் ஆய்வாளர் சுதந்திர இந்தியாவின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவராக லா.ச.ரா.வைக் கருதினார்.

அவருடைய "பாற்கடல்" என்ற படைப்பைத் தலையாயதாகக் கூறுவார்கள். அவருடைய "புத்ர" மற்றும் "அபிதா" நாவல்கள் மொழிநடையால் தனித்துச் சிறந்து விளங்கும். கட்டுரை நூல் "சிந்தாநதி" அவருடைய இயல்பான குறியீட்டு நடையில் பிரமிக்கத்தக்க விதத்தில் எழுதப்பட்டது.

Languageதமிழ்
Release dateApr 8, 2020
ISBN6580112405179
Kazhugu

Read more from La. Sa. Ramamirtham

Related authors

Related to Kazhugu

Related ebooks

Reviews for Kazhugu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kazhugu - La. Sa. Ramamirtham

    http://www.pustaka.co.in

    கழுகு

    Kazhugu

    Author:

    லா. ச. ராமாமிருதம்

    La. Sa. Ramamirtham

    For more books

    http://www.pustaka.co.in/home/author/la-sa-ramamirtham

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    கருணை

    காமு

    கோமு

    என் பெற்றோர்களுக்கு

    கருணை

    இந்த நாவலை உங்கள் முன் வைக்கையில் தனிப் பெருமிதம் அடைகிறேன். இதை எழுத எனக்குப் பத்து வருடங்கள் பிடித்தன. விட்டுவிட்டுத்தான் எழுதினேன். ஆனால் பத்து வருடங்கள், இதன் விண் விண் தெறிப்பைச் சுமந்திருக்கிறேன்.

    எழுத்தும் ஆத்மாவின் யாத்திரைதான். ஆத்மா என்று ஒன்று இருக்கிறதா என்கிற சந்தேகமும் இந்த யாத்ரா மார்க்கத்துள் அடங்கியதுதான். இந்த யாத்ரையில் சேருமிடம் என்று கிடையாது. அங்கங்கே தங்குமிடங்கள், தங்கியே போய்விடும் இடம் தவிர.

    ஆகவே இந்த சிருஷ்டி, பத்து வருஷங்களின் நீளோட்டிய உழைப்பு மட்டுமன்று; இதில் இதுவரை என் வாழ்வின் சத்தே தோய்ந்திருக்கிறது.

    எந்த எழுத்துமே, சிறுகதையோ, நெடுங்கதையோ நாவலோ, கட்டுரையோ, கவிதையோ அப்படித்தான் அந்த சமயம் வரை, எழுதியவனின் வளர்ச்சியை, முதிர்ச்சியைப் பிரதிபலிக்கத்தான் செய்யும். ஆனால் நாவல் என்று வருகையில், அதன் திரைச்சீலை பெரிது. அதனாலேயே இந்த ப்ரயாணத்தின் பாதையும் பெரிதல்லவா? நாவல் என் முழங்கைகள் இடிபடாமல், கால்களைத் தாராளமாக வீசி நடக்க, ஆங்காங்கே என் உள் வானத்தின் வண்ணங்களை, அங்கே இறங்கி விட்ட உயிரின் கோலங்களைத் தங்கித் தயங்கிச் சிந்திக்க, சுவைக்க, பாட, ஓட, ஒளிக்க ஒளிய, எண்ணத்தின் இதழ்களைப் படிப்படியாகப் பிரிக்க - நாவல் விசாலம் தான்.

    அங்கீகரிக்கப்பட்ட முறையில் நான் எழுத்தாளன் இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. என்னிடம் எண்ணத்தின் மூட்டமும், சிந்தனையின் மந்தாரமும் ஆழமான இருள்களும் தான் கதை அம்சத்தைக் காட்டிலும் அதிகம். என் எண்ணத்தின் நிர்வாணத்தை அவசிய இடங்களில் மூடவோ அல்ல நுட்பங்கள் பிதுங்கவோ தான் எனக்குக் கதை பயன்படுகிறது.

    கவிதை என்பது வெறும் வார்த்தை ஜாலமட்டுமன்று. உணர்ச்சியின் எதுக்களிப்பு அன்று. பிறவிபோல், விதி போல் நேர்வது. 'மழையும் பிறப்பும் மகாதேவனுக்கும் தெரியாது'. கவிதையை மூன்றாவதாகச் சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் மொழி - வசனமோ, கவிதையோ - அதுவே அதன் வெளிப்பாட்டைக் கவனித்துக் கொள்ளும். அந்த மாதிரி சமயங்கள் இந்த நாவலில் அடிக்கடி நேர்ந்திருக்கின்றன. அடிக்கடி இதில் கட்டங்கள் தம்மைத் தாமே எழுதிக் கொண்டிருக்கின்றன.

    சில நாட்களாக ஒரு இளைஞன் என்னுடன் பேச வருகிறார். தனக்கென்று தனி அபிப்பிராயம் கொண்டவர்தான். மிகமிக. ஆனாலும் பல சமயங்களில் எங்கள் ஸ்ருதிகள் இணைகின்றன. சில சமயங்களில், த்வனிகள் கூட ஒன்று பேசுகின்றன.

    பேச்சுவாக்கில் சொன்னார்: Joy and Sorrow are nothing but extended distortions of Compassion (சந்தோஷமும் துயரமும் கருணையின் வக்ர நீட்டல்களன்றி வேறு அல்ல) உங்கள் நாவல் 'புத்ர’வைக் காட்டிலும் இதில் அந்த compassion நிறைய தெரிகிறது. (ஆம், இதன் படிவநிலையில் அவருக்குப் படிக்கக் கொடுத்தேன்)

    அவர் கூற்றின் அடிப்படை - அடிப்படைத் தன்மையில் எல்லோரும் நல்லவரே என்பதுதானோ?

    இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். இதுவே அதிகம் இதற்குமேல் மார்தட்டல் ஆகிவிடுமோ என்கிற பயம். சமையலைச் சொல்வது ருசி ஆகாது. உண்டு கண்டு கொள்வதுதான் ருசி.

    அவரவர்க்கு அவரவர் ருசி.

    ஆனால் எல்லோரும் சாப்பிட வாருங்கள்.

    இந்தப் புத்தகம் தயாராகுகையில் இதன் படிவங்களைப் பார்த்த நண்பர் நா. சீ. வரதராஜனுக்கு என் வந்தனங்கள்.

    புத்தகத்தை வெளிக் கொணர்ந்த ஐந்திணைப் பதிப்பகத்துக்கு நன்றி.

    ப்ளாட் 242,

    1, கிருஷ்ணன் தெரு,

    ஞானமூர்த்தி நகர்,

    அம்பத்தூர்.

    சென்னை 600 053

    லா. ச. ராமாமிருதம்

    1-12-90

    காமு

    போஸ்ட்!

    மதியம் 12-00/12-30க்குள் ஒரு 'பீட்'.

    தபால்காரன் வயதானவன். மரியாதையானவன், சைகிள்.

    பிறகு மாலை 4/15-5/30க்குள் ஒரு பீட்.

    ஒரு இளைஞன். கால் நடை. தலை மயிர் எத்தனை கட்டை! முன் நெற்றியில் சரிந்து சரிந்து ஒரு அடை விழுகையில், அதைப் பின் தள்ளுவதற்காக, தலையை உதறிக் கொள்வது அவனுக்கு இரண்டாம் இயல்பாகப் போய் விட்டது. கொஞ்சம் ஒட்டி வெட்டினால் இந்த அசௌகரியம் இருக்காது. அசௌகரியம் என்று நான் நினைத்துக் கொள்கிறேன். அதுவே 'ஸ்டைலாக' இருந்தாலோ? கேட்க நான் யார்?

    (கேட்டு, விலைக்கு வாங்கிக் கட்டிக் கொள்ளாமல் அப்பாவுக்கு இருக்க முடியாதே!

    மேதாவி நெ.2.

    பேசப் புதிதாகப் பையன்கள் பழக்குகிறான்கள். பேசவா, இவர்களுடன் நமக்கென்ன என்று வாயடைத்துப் போகவா?)

    முறைப்படி தபால் நேரங்கள் எத்தனை, எப்பெப்போ?

    12 to 12-30;

    4 to 5-30

    நான் என் கடிதங்களுக்குக் காத்திருக்கும் நேரங்கள்.

    ஆனால்

    காக்க காக்க

    அடை காக்க

    முட்டை கூட இல்லை.

    வெறும் நேரத்தை

    அடை காக்கிறேன்.

    எனக்குக் கடிதம் போட யாரிருக்கிறார்கள்?

    அது ஒரு பெரும் கேள்வி, அதை நேரிடை சந்திக்க அல்ல.

    சுற்றிச் சுற்றி அதைப் பிச்சை வருகிறேன்.

    செத்தவர் போக, மறந்தவர் போக ஒண்ணு, அதை. என்யுகத்தவர் யாரேனும்.....

    இது தான் Senility?

    தபாலை எதிர் பார்த்தும் எனக்குப் பொழுது போக்கு அல்ல, பொழுது புழுங்கும் நேரங்கள்.

    ஒரு கலியாணப் பத்திரிகை.

    ஒரு வரவேற்பு அழைப்பு.

    ஒரு மீட்டிங் அறிக்கை.

    ஒரு சாவுக் கடிதம் கூடத் தபால்தான்.

    தபால் மட்டுமல்ல. அடுத்து என் முறை எப்போ? என்று ஒரு நினைவு மூட்டல்.

    ஆனால், நான் இஷ்டப்பட்டாலும் அதுவும் என் கையிலா?

    என் ஜாதகப்படி, எனக்கு நிறையத்தான் பிடித்துப் போட்டிருக்கிறதாம். கழுகாய்க் காத்திரு.

    வேலையிருந்தவரை தபாலுக்குக் குறைவேது? கற்றை கற்றையாய், மேலிடத்திலிருந்து, கஸ்டமரிடருந்து, கத்திகள், கவண்கள், ஊசிகள் - நண்பர்கள், சுற்றத்தாரிடமிருந்து வந்த வண்ணம் தான். உத்தியோகத் தபால்களை வந்தவுடனே பதிவு செய்தபின் அடுத்த வாரத்துக்குள் அதனதன் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தாவிட்டால், சிலசில அதனதன் தரத்துக்குக்கேற்ப, விசுவரூபமெடுத்து விடும்.

    ***

    இது உங்களுக்கு என் கைப்பட எழுதும் நான்காவது D.O. இன்னமும் மேல் குறிப்பிட்ட ஸ்டேட்மெண்ட் உங்கள் ஆபீஸ் அனுப்பியபாடில்லை. இன்னும் தாமதமானால் கடுமையான நடவடிக்கைக்கு ஆளாவீர் என்று வருத்தத்துடன்........

    ***

    நான்கு கடிதங்கள் எழுதியும், என் டிபாஸிட் தொகை மீது வட்டி குறைவாகத் தப்புக் கணக்குப் பண்ணியிருக்கீங்க; விளக்கமும் தரல்லே. குறைத் தொகையையும் எனக்கு வரவு வெக்கல்லே.... மரியாதைக்கு ஒரு வரி பதில் போடாட்டி என்ன அர்த்தம் எங்கறேன். உங்கள் ஹெட்டு ஆபீசுக்குப் புகார் செய்வதுடன் என் கணக்கை வேறிடத்துக்கு மாத்திக்கிட வேண்டியதுதான். ஆனால் எங்கே போனாலும் என்ன வாழுது? அந்தத் துணிச்சல் தானே உங்களுக்கு? கணக்கு வெக்கிற வரைக்கும் எட்டுத்தடவை படியேறி வந்து பிராணனை வாங்கறீங்க. கணக்கு வச்சா இந்தப் பாடுதான்..."

    ***

    பையன் BA. பாஸ் பண்ணி விட்டு ஒரு வருடமா சும்மாயிருக்கிறான். II க்ளாஸ்தான். நன்றாய்ப் படிப்பவன் தான். அவனைச் சொல்லிக் குத்தமில்லை. அதுவும் என் ஏப்ராசிதான். இதைச் சாதிப்பதற்குள் எனக்கு முழி பிதுங்கிப் போயிற்று. அவள் கழுத்தில் வெறும் மஞ்சளைக் கோர்த்துப் போட்டுக் கொண்டிருக்கிறாள். இருபது வருடம் வாழ்ந்தவனுமில்லை. இருபது வருடம் கெட்டவனுமில்லை என்கிற பழமொழிகூட என் விஷயத்தில் பொய்த்துப் போயாச்சு. என் நிலையில் துளிக் கூட மாறுதல் இல்லை.

    உங்கள் சிபாரிசில் அவனுக்கு விடிந்தால் போதும் - எனக்கு இனி என்ன இருக்கிறது? இனி விடிந்தாலும் எனக்கு வித்தியாசம் தெரியப் போமோ? உடம்பை ஆயிரம் கோளாறு பிடுங்கித் தின்கிறது. நான் போனாலாவது இருப்பவர்களுக்கு விடியுமா? ஆனால் பொன் தாலி காட்டிலும் அவள் கோர்த்திக்கும் மஞ்சள் பலம் கெட்டியாயிருக்கிறது. என்ன செய்வேன்? என்ன செய்வோம்?

    அந்த நாள் சினேகிதத்தின் நம்பிக்கையில் எழுதும் கடிதத்தின் மேல் உன் ஆயிரம் ஜோலி நடுவில் உன் கண்பட்டதன் மூலம் மறுபடியும் நம்பிக்கை ஏற்படுமா?

    ***

    சென்று போன நாட்கள்.

    செயல் படும் நாட்கள்.

    முடிந்த போது, முடிந்தவரை உதவி கூட செய்யமுடிந்த நாட்கள்.

    ஆனால் கடிதம் எழுதுபவர்கள் என்னைக் கடவுளாக நினைத்துக் கொள்ளும் போது

    அவர்கள் எதிர்பார்ப்புக்கு ஈடுகொடுக்க முடியவில்லை.

    ஆனால் பல நாட்கள், வெறும் நினைவோடத்தை, காகிதக் கப்பலை, வாய்க்காலிலோ, நதியிலோ, கடலிலோ ஏற்றி, அவைகளின் மிதப்பை, தத்தளிப்பை, கவிழ்தலை வேடிக்கை பார்க்கும் விதி நாட்கள்.

    ஆனால் வெறும் நினைவோடமா? அங்குதான் கேள்வி - கேள்வி தூண்டிய நினைவுகள் பாம்பெனக் காலை, கழுத்தைச் சுற்றி, பிளந்த நாக்கு துருவித் துருவி இடம் தேடி நக்குகிறது.

    ***

    நீ இப்போ பதவியில் இருகாய்னு கேள்விப்பட்டேன். எனக்கு எழுத வறதுங்கறதே ஆச்சரியமாயிருக்கா? என்னை என்னன்னு நெனச்சுண்டிருக்கே? ரொம்ப சந்தோஷம். எங்கேனும் ஆயுசோட நன்னாயிருந்தால் சரி. காமுப்பாட்டி வளர்த்த கை வீணாகல்லே. என் வீட்டு மருதாணிமரம் இடிவிழுந்து பட்டுப் போன வரைக்கும் அப்பப்போ பறிச்சு, என் கையாலேயே அரைச்சு, விழுதை உருட்டி, மரச்சீப்பில் வெச்சுண்டு. நீ எனக்குப் பிள்ளைக்குப் பிள்ளையா, பொண்ணுக்குப் பொண்ணா, உனக்கு இட்டதை, நான் இப்போ நினைவுபடுத்தி, நினைப்பு வந்தால் சரி. நான் இட்ட ராசி இன்னும் உன் உள்ளங் கையில் லக்ஷ்மி பட்டா மின்னிண்டு விளையாடறாள். நீ பாங்கு மானேஜராமே; போடு சக்கை. அத்தனை பணமும் நீ தானே புழங்குவாய்? உனக்கு நான் உறவு இல்லே. ஆனால் நான் வளர்த்த பிள்ளைதானே! இருக்கறதைப் போட்டுத் தானே வளக்க முடியும்? குலோப் ஜாமுக்கும் கோவாவுக்கும் குல்கந்துக்கும் கோகுலத்துக்கு நான் எங்கே போறது? ஆஞ்சு பாத்தா அது வெறும் மைதாவும் பாலும் தான். பேருதான் பெத்தபேரு. நான் போட்ட பழையதையும், பழங்குழம்பையும் காஞ்ச கொளஞ்சிக் காயும் சாப்பிட்டு உருவாகித்தான் நீ இப்போ வாயிலே பேர் நுழையாத விதவிதப் பண்டங்கள், பக்ஷணங்கள் சாப்பிட்டிண்டுருக்கே. நீ சாப்பிடறதெல்லாம் எனக்கு வேண்டாம். யாருக்கு இந்த அனுசாரத் திண்டியெல்லாம் வேண்டிக் கிடக்கு. ஒரு முறுக்கு, சீடை, தட்டை காலில் கட்டி அடிக்கக் காணுமா? தித்திப்பை எடுத்துண்டா ஒக்காரை, திரட்டுப் பால், அதிர்சம், பொருவிளாங்கா உருண்டை - தின்காட்டா என்ன? சொன்னாலை வாயில் தேன் சொட்டல்லே?

    - சரி சரி இப்போ நான் உன்னோடே பக்ஷணக் கடை பேச வரல்லே. போன வருசமே ஒரு நூறு ரூவா கேட்டு எழுதியிருந்தேனே என்னாச்சு? யோசனை பண்ணினையா? சீட்டுப் போட்டுக் குலுக்கினையா? ஒரு முடிவுக்கு வந்தையா? இல்லை, என் நாட்டுப் பெண் - அதான் நான் இன்னும் கண்ணால் கண்டிராத, அனேகமாக காணப் போறதுமில்லாத உன் பட்டமகிஷி? என் கரதராசு உன் வரைக்கும் எட்டாதபடி அமுக்கிப்பிட்டாளா? நீ தான் ஒருவரிகூட தெரிவிக்காமே கலியாணம் பண்ணிண்டுட்டே, பண்ணிண்டிருப்பே ஆமா, இத்தனை நாளைக்கு பண்ணிக்காமே இருப்பையாக்கும், ஆனால் நீ பத்திரிகை அனுப்பிச்சால் மத்திரம் வந்திருப்பேனா? ரயில் சார்ஜ்? இப்போ நான் உன்னைக் கேக்கற ரூவாயும் கைச் செலவுக்குத்தான். அப்பப்போ என்னைச் சீட்டைக் கேட்டு, ரயில்காரன், கட்டையிலே போவான். அது என்னிடம் இல்லாமை, என்னை அங்கங்கே இறக்கி விட்டாலும், அப்படியே காசிவரை போய், கங்கையிலே கட்டையைப் போடறத முடிவு. பண்ணிட்டேன். இத்தனை நாள் கழிச்சு சுங்கம் கேக்கற கிழம் இதுயார்னு திகைப்பாயிருக்கா? எள்ளுக் கண்ணைக் கசக்கி முழிச்சுப் பாக்கறியா? உன் கண் பெரிசாயிடுத்தா? பிறவி எங்கே மாறும்? என்னிக்குமே நேர்முழி கிடையாது. அன்னிக்கே பல்லு கூடப்படாமே, முழுசா முழுங்கிட்டு, புத்தா, பூலோகமா, கைலாசமான்னு திறந்த கண்ணுலே மண்ணைப் போடுவே. இப்போ கேக்கணுமா? இன்னும் கத்துண்டிருப்பே இல்லியா? நான்தாண்டா காமுப்பாட்டி. வேறுயார் இவ்வளவு உரிமையா உனக்கு எழுதப் போறா? அதுக்கே நீ எத்தனையோ புண்ணியம் சேஞ்சிருக்கணும். நெனச்சுப் பார்த்துக்கோ. ஆமா நான் ஊருக்கெல்லாம் ஒரே காமுப் பாட்டின்னா, நீ எனக்கு ஒரே ஒரு பேராண்டி..."

    காமுப்பாட்டி இன்னும் உசிரோட இருந்தால், வயசு 110. எங்கே இருக்கப் போகிறாள்? ஆனால் சொல்ல முடியாது. கன்னி விதவை. வஜ்ரக்கட்டை. தேய்வா? செலவா? யமனே அவள் நாக்குக்கு அஞ்சி அவளிடம் வரவில்லை என்று சொல்வேன். நாக்கு விஷயத்தில் அவள் தனிச்சிகரம். அந்தக் கடுத்த நாட்களில் என் அவலத்தை எனக்கு அவ்வப்போது நினைவுபடுத்துவதில் ராஜா. புடவை கட்டியிருந்தாளே ஒழிய அவள் பெண்பால் இல்லை. ஆண்பாலும் இல்லை. ஏனெனில் ஆணும் அவளுக்கு அந்த நாளிலேயே அஞ்சும்.

    வெளியிடப் பயந்து உள்ளே அமுக்கிவிட்ட எண்ணங்கள் மேல் கூட எப்படித்தான் அவளுக்கு ஸெர்ச்லைட் அடிக்குமோ? அதுவும் அவள் வாயிலிருந்து வெளிப்படும் போது, சுவரோரம் உடல் நடுங்கும் எலிபோல், குற்றவாளி பதுங்க வேண்டியது தான். குற்றவாளி அவளுக்கு அகப்பட்டவன் நான்தான்.

    உருளையாய், அசிங்கமாய், பயத்தில் உடல் வெட வெடவென உதறிக் கொண்டு....

    எலி.

    "என்னடா முகம் சுளிக்கறே? கட்டெறும்பும் கரப்பான் பூச்சியும் மிதந்தால் தள்ளிட்டுக் கொட்டிக்கறது. தவிடு தின்கறத்துலே ஒய்யாரமோ? உனக்கோசம், பழையத்து மூலைக்குத் தனி விளக்குப் போடமுடியுமா? அதென்ன நாக்கு? நாங்கள் எல்லாம் அப்படித்தான் வளர்ந்தோம் சின்னவயசிலே கடவுள் என்னைத் தலையைத் தடவிட்டானே தவிர, வயத்திலே அடிச்சுடல்லே. இந்தத் தண்ணியும் சோறுக்கும் 'தறுக்' 'தறுக்’குனு கடிச்சுக்கப் பச்சை மிளராய்க்கும் உப்புக் கல்லுக்கும் என்னிக்கும் பஞ்சமில்லை. நீ ஒண்ணும் கொம்பில் ஏறிக் குதிச்சுட்ட மாதிரி நெனச்சுக்காதே. இப்பவே, எறும்பு, கரப்பான், பல்லி விஷத்தைத் தின்னு பழக்கிண்டால், பின்னால் என்ன விஷம் தீண்டினாலும் ஏறாது. உன் வராச் சாப்பாட்டுக்குக் கூட ஏற்பாடு பண்ணாமல் உன் அப்பனும் ஆயியும் சேர்ந்தாப்போல் காவேரிலே போனாளோ, அந்தி லக்ஷணத்துக்கு, இந்தத் திருடனின் ராஜமுழிதான் மிச்சம் வேறெத்தையும் நான் காணல்லே.

    அம்மாடி!

    போனது தான் போனாளே, சேந்தாப்போலே. ஒதுங்கினாளோ? கோவிந்தாக் கொள்ளியிலும் கொம்மாளமா? அவள் சிந்தாமணி, அவன் மூணுமைல் தாண்டி ஒரு வாய்க்காக் கரையோரம், அதிலும் ஒருகால் தொடை வரை காணல்லே. முதலைக்கு வேண்டுதலை, கால் வழுக்கியா, ஒருத்தரையொருத்தர் காப்பாத்தப் போயா இரண்டு கையைப் பிடிச்சுண்டு ஒரு குறிப்பில் தற்கொலையா, அல்லது உன்னோடு வாழ்ந்த லக்ஷணம் போதும்னு யார் யாரைப் பிடிச்சால் முன்னால் தள்ளினதுன்னு யார் கண்டது? விசாரணை நடத்தக் கூட வழியில்லே. சாக்ஷியா சம்மனா?"

    பேச்சென்னவோ சாவிலும் ஒத்துமையைப் பார்னு ஊர் மெச்சிக்கறது. அதிலேயும் ஒரு நல்ல பேர் கட்டிக்க இந்த மகாத்மியம் இங்கேதான் நடந்தது. இங்கேதான் நடக்க முடியும்னு சிதை நெருப்பிலே. ஊர் தனக்கு சாம்பிராணி போட்டுக்கறது. ஊர்தான் என்ன ஊரோ? செத்தவாதான் என்ன மனுஷாளோ? பிறந்ததுதான் நீ என்ன பிள்ளையோ?

    இப்படியேதான், சம்பந்தமா சம்பந்தமில்லாமல் ஒன்றுக்கொன்று முடிச்சுப் போட்டு, என் அடிவயிற்றில் அவள் மாட்டித் திருகியிழுக்கும் அழகை,

    Enjoying the preview?
    Page 1 of 1