Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vergalai Thedi….
Vergalai Thedi….
Vergalai Thedi….
Ebook221 pages1 hour

Vergalai Thedi….

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மைசூர் பல்கலைக்கழகப் பட்டதாரி. நாவல்கள், குறுநாவல் தொகுப்புகள், சிறுகதைத்தொகுப்புகள், பயணக்கட்டுரை நூல்கள் என்று ஐம்பதுக்கும் மேலான நூல்கள் பதிப்பிக்கப் பெற்றுள்ளன. குறிப்பிடத்தக்க பத்திரிகையாளரும் கூட. இந்தியா டுடேயின் தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராக 9 ஆண்டுகள் வெற்றிகரமாகப் பணியாற்றி துணிச்சலான பத்திரிகையாளர் என்று முத்திரை பதித்தவர். கலை, கலாசாரம் அரசியல் என பல்வேறு புள்ளிகளை தொட்டுச் செல்லும் அவரது கட்டுரைகளில் பல அவை வெளி வந்த காலத்தில் தீவிர கவனம் பெற்றதுடன் விவாதங்களையும் தோற்றுவித்தன.

கலாசார பரிவர்த்தனைத் திட்டத்தின் கீழும் பல வெளிநாட்டு - இலக்கிய அமைப்புகளின் அழைப்பின் பேரிலும் உலக எ ழுத்தாளர் மாநாட்டுக்காக, சொற்பொழிவுகளுக்காக குறிப்பான பிரச்சினைகளை ஆராயும் பொருட்டு என்று பல்வேறு நாடுகளுக்குச் சென்று வந்தவர்.

பெண் சார்ந்த பிரச்சினைகளைப்பற்றி பல ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வறிக்கைகள் எழுதி வருபவர். கூர்மையான அரசியல் ஆய்வாளர். இவர் இந்தியா டுடேயில் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தின் போது ஏற்பட்ட தமிழ் நாட்டு அரசியல் நிகழ்வுகளை தமது அரசியல் சார்பற்ற பார்வையுடன் ஆங்கிலத்தில் எழுதிய 'CUT OUTS, CASTE AND CINE STARS' என்ற புத்தகத்தை பெங்குவின் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

பஞ்சாப், இலங்கை , ஃபீஜி நாடுகளின் இனப் பிரச்சினைகளைப் பின்புலமாக வைத்து இவர் எழுதிய நாவல்கள் - மௌனப் புயல், நிற்க நிழல் வேண்டும், தாகம் குறிப்பிடத் தகுந்தவை. மெளனப் புயல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பஞ்சாம் சாகித்திய அகாதெமி விருது பெற்றது. சமூக நாவலான 'ஆகாச வீடுகள் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஹிந்தி மொழிபெயர்ப்பிற்கு உத்தர் பிரதேஷ் சாஹித்ய சம்மான் விருது கிடைத்தது.

சமீபத்தில் வாஸந்தி சிறுகதைகள்' என்ற தொகுப்பிற்கு தமிழக அரசின் சிறந்த நூல் விருது கிடைத்தது.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580125404007
Vergalai Thedi….

Read more from Vaasanthi

Related to Vergalai Thedi….

Related ebooks

Reviews for Vergalai Thedi….

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vergalai Thedi…. - Vaasanthi

    A picture containing icon Description automatically generated

    http://www.pustaka.co.in

    வேர்களைத் தேடி....

    Vergalai Thedi….

    Author :

    வாஸந்தி

    Vaasanthi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/vaasanthi-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    சம்சாரம், துக்கம், சாகரம்

    வேர்களைத் தேடி...

    சம்சாரம், துக்கம், சாகரம்

    மணமுறிவு என்பது இல்லாது போனால் உலகத்தில் லட்சக்கணக்கான நாவல்கள் எழுதப்படாமலே போயிருக்கும். தமிழின் இரண்டாவது நாவலாகிய ‘கமலம்மாள் சரித்திர’த்திலும் மணமுறிவு ஏற்பட்டுவிட்ட பின்தான் தீர்வு வருகிறது. அந்த நாவலில் கணவன் மனைவி மீண்டும் சேர்ந்து வாழ்வது போலிருந்தாலும் நடந்ததைத் துடைத்துவிட்டு எதுவுமே நடக்காதது போல் இருந்துவிட முடியாது.

    வேர்களைத் தேடி நாவலின் சாராம்சம் இந்த மணமுறிவுதான், பொருத்தமாகவே ஆசிரியர் வாஸந்தி இதைச் கதாநாயகியின் கண்ணோட்டத்திலிருந்து எழுதியிருக்கிறார்.

    ‘வந்தவரை வாழ வைக்கும் நாடு’ என்று தமிழகத்தைப் பற்றி ஒருபுறம் சொன்னாலும் இன்னொருபுறம் ஏராளமான தமிழர்கள் லட்சக்கணக்கில் என்று சொன்னால் மிகையாகாது. நூறு நூற்றைம்பது ஆண்டுகளாகத் தமிழகத்தை விட்டு வேறுவேறு பிரதேசங்களில் பிழைப்பைத் தேடிப் போயிருக்கிறார்கள். திரும்பி வந்தவர்கள் மிகச் சிலர். பெரும்பாலானோர் போன இடத்திலேயே வாழ்ந்து குடித்தனம் நடத்திப் பேரன், பேத்தி எடுத்திருக்கிறார்கள். வேர்களைத் தேடுவது என்பது இரண்டாம் உலக யுத்தம் முடிந்தபிறகு உலகெங்கும் பரவிய ஒருவித தேசியவாத உணர்வு. ஒரு தலைமுறையைத் தாண்டிவிட்டால் இந்தத் தேடல் அதன் தன்மையில் மிகவும் மாறி விடுகிறது. அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த தமிழ்ச் சிறுவர் சிறுமியர் தென்னிந்திய தோசை ஊத்தப்பத்தைவிட சப்பென்றிருக்கும் ஹாம்பெர்க்கருக்கும் டோநட்டுக்கும் ஏங்குவதைக் காணலாம். சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு அலெக்ஸ் ஹெய்லி என்ற அமெரிக்கக் கறுப்பர் ‘வேர்கள்’ (ரூட்ஸ்) என்றொரு நாவல் எழுதினார். அவருடைய பாட்டியின் அம்மா சொல்லுவாள் என்று அவருடைய பாட்டி சொன்ன ஒரு பெயர், அவர் ஆப்பிரிக்காவுக்குச் சென்றபோது ஒரு பழைய ஆவணத்தில் இருந்ததைக் கண்டு அவர் மெய் சிலிர்த்துப் போனதாகவும் அதன் பிறகு அவருடைய மூதாதையர் வேர்களைத் தேடி அவர் சேகரித்த தகவல்களின் (புனைகதை) வடிவம் ‘ரூட்ஸ்’ என்றும் அவர் சொன்னார், அந்த நூல் ஏராளமாக விற்று, தொலைக்காட்சித் தொடராகத் தயாரிக்கப்பட்டு, வானொலியில் ஒலிபரப்பப்பட்டு, மேடையில் நடிக்கப்பட்டு, மொழிபெயர்க்கப்பட்டு, புத்தகம் படிப்போர், படிக்கும் பழக்கம் இல்லாதோர் அனைவரையும் எட்டியது. பின்னர் அந்த நூலின் ஆதாரம் அலெக்ஸ் ஹெய்லி காண நேர்ந்த ஆவணம் அல்ல, தன்னுடைய ஒரு புத்தகம் என்று இன்னொரு அமெரிக்கக் கறுப்பர் அறிக்கை விட்டதோடு வழக்கும் தொடர்ந்தார். இந்த வழக்கு, வழக்குமன்றத்துக்கு வெளியில் தீர்க்கப்பட்டது.

    இன்றைய யதார்த்த உலகில் இந்த வேர்களைத் தேடுதல் பெரும்பான்மையோருக்கு ஒரு கற்பனைச் சரணாலயம். ஏனெனில் எது வேர்கள் என்று நாம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று, என்றென்றுமான எல்லோருக்குமான விதி என்று ஒன்றும் கிடையாது. நம் சுபாவம், நம் சௌகரியத்துக்கு உகந்தபடி நாம் சில விஷயங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். நிறைய விஷயங்களைக் கழித்துக்கட்டி விடலாம். இந்த ‘வேர்களைத் தேடி’ நாவலில் இரு வேறு குடும்பங்களில் இப்போக்கு நன்கு விளங்கும்படி வாஸந்தி அவர்கள் எழுதியிருக்கிறார். நாம் இன்று வாழும் வாழ்க்கைக்கு நாமாகப் பழையதிலிருந்தும் பழையதில் இருந்தது என்று நாமாக நினைத்துக் கொள்வதிலிருந்தும் சிலவற்றையும் தேர்ந்தெடுத்து நம்மை நாமே தனித்துவம் உள்ளவர்களாகத் தோற்றம் காணச் செய்து கொள்கிறோம்.

    ஆனால் மணமுறிவு என்றும் ஆறாத காயத்தை ஏற்படுத்திச் செல்வது. ‘வேர்களைத் தேடி’ நாவலில் கதாநாயகி விவாகம் முடித்து, ரத்து செய்தவள். விவாகம் செயல்பட்டிருந்த நாளில் ஏற்பட்ட மனத்தடங்களை இப்போது அழிக்க முடியாமல் தவிக்கிறாள். ஒரு விவாகமே இவ்வளவு சித்திரவதையை விளைவிக்குமானால் மேலைநாட்டில் மூன்று நான்கு விவாகத்துக்கு உட்படும் பெண்கள் கதி என்ன? இது பற்றி அவளே நினைத்துப் பார்க்கிறாள்.

    இப்படி எழுதுவது நாவலை எளிமைப்படுத்துவதாகும், எந்த முன்னுரையும் எந்த விமரிசனமும் பூரணமல்ல. அந்தப் படைப்பு பிழைபட்டதாக இருந்தால்கூட, ‘வேர்களைத் தேடி’ நாவல் உண்மையில் ஒரு குறிப்பிட்ட நிலையில் பெண்ணினத்தின் தவிப்பு பற்றியது. என்ன பெண் இவள், அடுத்த வேளைச் சாப்பாடு உண்டா? அடுத்த இரவுக்குக் கூரை இருக்குமா? என்பது போன்று கவலை ஏதுமில்லாத சூழ்நிலை தந்த பாதுகாப்பில் ‘கொழுத்துக் கொம்மாளம் போட்டவள்’ இவளுக்கு இதுவும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று சொல்பவர் இருக்கக்கூடும். உண்மை, இப்பெண் படும் பாடெல்லாம் இவளே வரவழைத்துக் கொண்டதுதான். ஆனால் அவள் படும் சித்திரவதை உண்மையானது. அது அவள் பெண்ணாயிருப்பதால் அல்லவா அவ்விதம் நேருகிறது?

    வாஸந்தி அவர்கள் எழுத்தில் என்றுமே கட்டுப்பாடும் உருவ அமைதியும் இருக்கும். அவருடைய விசாலமான படிப்பும் பொதுஅறிவும் அவருடைய ஒவ்வொரு படைப்பிலும் காணக் கிடைக்கும். ‘வேர்களைத் தேடி’ நாவலில் நிதானித்துச் சிந்தனையில் மூழ்க வேண்டிய இடங்கள் பல இருக்கின்றன.

    ஒரு சமகாலப் படைப்பைத் துல்லியமாக மதிப்பிடுவது மிகவும் கடினம். முடியவே முடியாது என்றுகூட நினைக்கிறேன் ‘வேர்களைத் தேடி’ நாவல் இன்றைய வாழ்க்கையின் பிரச்சனைகள் சிலவற்றைப் பற்றிக் கூறுகிறது நாவலின் பல பாத்திரங்கள் தத்துவ தர்க்கம் புரிகிறார்கள். பாப்ரி மஸ்ஜித் சம்பவம் நாவலின் இறுதிக் கட்டத்தில் பிணைக்கப்பட்டிருக்கிறது. யார் துயரத்தை நோக்கிச் செல்கிறார்கள். யார் மீட்சி நோக்கி அடியெடுத்து வைக்கிறார்கள் என்று கூறுவது எளிதல்ல. பாரம்பரியச் சுமை, சுய தவறுகளின் சுமை என எல்லாப் பாத்திரங்களும் சுமையேற்றப்பட்டு அவதிப்படுகிறவர்கள். ஒருவிதத்தில் தம்முடைய எல்லாச் செய்கைகளுமே துக்கத்தை விளைவிக்க கூடியவையே அல்லவா?

    அசோகமித்திரன்.

    வேர்களைத் தேடி...

    ஜன்னலைத் திறந்ததும் தென்படும் அந்த மரத்தைப் பார்க்கும்போதெல்லாம் என்னுள் ஆச்சரியம் ஏற்படுகிறது. முதன்முதலாகப் பார்ப்பதுபோல, சென்ற ஆண்டு இது நிச்சயம் இருக்கவில்லை. இந்தக் கோட்டையில்கூட நான் இதைக் கவனித்திருக்கவில்லை. கவனிக்கும்படியாக இது வளர்ந்திருக்கவில்லை என்பது காரணமாக இருக்கும். கடந்த மூன்று, நான்கு மாதங்களிலேயே இது வளர்ந்திருக்க வேண்டும். அத்தனை குறுகிய காலத்துக்கு இது ராட்சஸ வளர்ச்சி. அது எப்படிச் சாத்தியமாயிற்று என்று என்னுள் தினமும் கேள்வி எட்டிப் பார்க்கிறது. பிரமிப்பை ஏற்படுத்துவதுபோல அச்சமும் ஏற்படுகிறது. நர்ஸரி கதைகளில் படித்த ‘ஜாக்கும் பீன்ஸ் செடியும்’, கதையில் வருவதுபோல் இதுவும் ஆகாசத்தைத் தொட்டுக்கொண்டு நிற்கலாம். இதன் கிடுகிடு வளர்ச்சிக்கு வானமே எல்லை என்று எனக்கு சினிமாத்தனமான கற்பனைகூட விரிகிறது. அதுவும் ஒரு தமிழ் சினிமாப் பெயரில் கற்பனை விரிவது, ஆச்சரியம். நிதானமான அதிர்ச்சியும் அளிப்பதாகும்.

    இப்படிப்பட்ட ஆச்சரியங்களும், அதிர்ச்சிகளும் என்னுடைய தினசரி அனுபவங்கள், அலுவலகத்திலிருந்து திரும்பி இந்தக் காவேரி அபார்ட்மென்ட்ஸ் காம்பவுண்டுக்குள் நுழைந்து என்னுடைய ஃப்ளாட்டுக்கு நடந்து படியேறுவதற்குள் என்னுடைய மூக்கு மோப்பம் பிடிக்கும். ஏ 104-ல் இன்னிக்கு வத்தல் குழம்பு, பீ 208-ல் வெங்காய சாம்பார். இங்கே பிட்ளை, அங்கே பொரித்த கூட்டு. இந்த மோப்பமும், அந்த ருசிகளின் ஞாபகமும் என்னுள் சாகும்வரை இருக்கும் என்று தோன்றுகிறது. வேறு ருசிகளும் உண்டு. ஆங்காங்கே ஒலிக்கும் சங்கீதம் செவியில் பட்ட மாத்திரத்தில் மூளைக்குள் குரல் சொல்லும். இது லால்குடி, இது மதுரை மணி. இந்த ருசிகள் என்னுடைய அங்கமாகிப் போக வேண்டும் என்ற எண்ணத்துடனேயே அம்மாவும், அப்பாவும் இந்த இடத்தில் ஃப்ளாட் வாங்கியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அல்லது கடைசிக் காலத்தில் தமிழ்நாட்டில் இருக்க முடியாமல் போனாலும் தமிழ்நாட்டில் இருப்பதான பிரமையை ஏற்படுத்தக்கூடிய ஒரு கும்பலுக்குள் இருப்பது தங்களுக்கு ஒரு கலாசாரப் பாதுகாப்பு என்று அவர்கள் நினைத்திருக்கலாம். இங்கு வீடு வாங்கியிருக்கும் தமிழர்கள் எல்லாருமே அப்படிப்பட்ட எண்ணத்துடன் தங்கியிருப்பவர்கள் என்று எனக்குத் தெரியும்.

    அம்மாவும், அப்பாவும் எனக்காக இங்கே தங்கிவிட்டார்களோ என்று வெகுநாட்களுக்கு என்னுள் ஒரு குற்ற உணர்வு இருந்தது.

    ரிடையரானவுடனேயே மெட்ராசுக்கு மூட்டையைக் கட்டிண்டு கிளம்பிட வேண்டியதுதான் என்று அப்பா விடாமல் சொல்லி வந்தவர். தில்லியிலே எவன் இருப்பான்?

    தனது ஓய்வுக்காலத்தைப் பற்றின கனவுகளை உரத்துச் சொல்வதில் உற்சாகம் கண்டவர்.

    தினமும் கற்பகாம்பாளைத் தரிசிக்கலாம், டிசம்பர் கச்சேரி ஒண்ணு விடாம கேட்கலாம். தியாகபிரும்ம உற்சவத்துக்குத் திருவையாற்றுக்குப் போகலாம், டி.வி-யிலே காண்பிப்பான், ஞாபகமாப் பாரு. பாடகாளோடு நானும் பஞ்சரத்னக் கிருதி சொல்லிண்டிருப்பேன்!

    பஞ்ச கச்சம் கட்டி வெற்று மார்புடன் அப்பாவை நானும் அப்போது கற்பனை செய்து பார்த்திருக்கிறேன், சிரித்திருக்கிறேன்.

    டி.வி-யிலே பார்க்கறது போதும் எனக்கு. தான்சேன் உற்சவமும் தியாகபிரும்ம உற்சவமும் எனக்கு ஒண்ணுதான்.

    அப்பா பெருமூச்சு விடுவார். இந்தக் குற்றத்துக்குத் தான்ந்தான் பொறுப்பு என்ற விசனத்துடன்.

    நீ இரு இங்கேயே, இங்கேதான் உனக்கு வேர் இருக்கு, என்னுடைய வேர்கள் தமிழ்நாட்டிலேதான். அதை நா மறக்க முடியாது சொன்னபடிக்கே அப்பா ரிடையரான உடனேயே அம்மாவுடன் மூட்டை கட்டிக்கொண்டு கிளம்பி விட்டார். பெஸன்ட் நகரில் முன்னேற்பாடாக ஒரு ஃபிளாட் வாங்கிப் போட்டிருந்தார். ஒரே வருஷம்தான். திரும்பிவிட்டார்கள்.

    ஏம்ப்பா?

    பிடிக்கலேம்மா, என்னமோ மனசு அங்கே பொருந்தல்லே. நா ரொம்ப மாறிட்ட மாதிரி தோணறது.

    தூண்டித் துருவிக் கேட்பதற்கு அவசியமே இல்லை என்று எனக்குத் தெரியும். மாற்றம் என்பது ஒருதலைப் பட்சமானது இல்லை. அங்கேயும் மாறிவிட்டது. அதனால்தான் உங்களுக்கு அடையாளம் கண்டுக்கொள்ள முடியவில்லை. இங்கு இருப்பவர்கள் எல்லாருமே அந்த அடையாளத்தைத் தேடுபவர்கள்தான். அதனால்தான் இந்தக் கோட்டை, இந்த அரண்கள், பண்டிகைகள், தமிழ் இலக்கியக் கூட்டங்கள், கோயில்கள், பஜனை சமாஜங்கள். இரு ஒரு ‘கெட்டோ’ கலாசாரம்.

    இவர்களுக்குப் பிறக்கும் சந்ததிகளுக்கும் இந்த அரண்களுக்கும் உள்ள சம்பந்தம் பூர்வ ஜன்மத்துத் தொடர்புபோல. வத்தல் குழம்பையும், பொரித்த குழம்பையும் மோப்பம் பிடிக்கும் தொடர்பு. மதுரை மணியையும் ஜேசுதாஸையும் இனம் கண்டுகொள்ளும் தொடர்பு. அதுவும் பின்னதில் ருசி இருந்தால் அதற்குமேல் எதுவும் இல்லை. தில்லி மகாசமுத்திரத்தில் கரைந்துபோன பெருங்காயம் அது. கடகடவென்று நான்கு வார்த்தை தமிழில் கொட்ட முடியாத பாதாளத்துக்குப் போய்விட்ட கரைசல்.

    இங்கேதான் உனக்கு வேர் இருக்கு. இல்லை, வேர்கள் அற்ற சந்ததியின் பிரதிநிதி நான். இந்த மரத்தைப் பார்க்கும்போது எனக்கு அதனால்தான் ஆச்சரியம் ஏற்படுகிறது. இந்த மரமே ஓர் அடையாளம் என்று என்னுள் கவித்துவமாய் எண்ணத் தோன்றுகிறது. ஐம்பது வருஷ காலத்தில் தமிழன் தில்லியில் நாலாபக்கமும் கிளை பரப்பியிருக்கும் அசுர வேகத்திற்கு இணையாக இதுவும். மலையைக் கண்ட காலத்தில் பேராசையுடன் துளிர்த்து ‘கிண்’ணென்று இறுமாப்புடன் நிற்கிறது. ஆனால், இது என்ன மரம் என்று தெரியவில்லை. சுயகுணத்தை இழந்த இரண்டுங்கெட்டான் மரம்போல் பூவுமில்லாத, காயுமில்லாத மரமாக. ஆனால் கவர்ச்சியான ஆக்ருதி கொண்டது. தாவரவியலில் இதற்குப் பெயர் இருக்குமா என்பது சந்தேகம்தான்.

    அப்பா நினைப்பது தவறு. எனக்கு வேர்கள் கிடையாது. அங்கும், இங்கும், எங்கும். நீ தமிழச்சியா? என்று எல்லோரும் ஆச்சரியத்துடன் கேட்கிறார்கள். என் முகம் அப்படி, பிறக்கும்போதே அப்படியா, இல்லை இந்தச் சூழலில் தனது பாரம்பர்ய முக விலாசத்தைத் தொலைத்துவிட்டதா என்று தெரியவில்லை. இத்தனைக்கும் அம்மாவையும், அப்பாவையும் பார்ப்பவர்கள், அவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று குழம்ப வேண்டியதில்லை. எழுதி ஒட்டியிருக்கிறது, முகத்தில் பூர்வீகம் தமிழ்நாட்டு அக்ரகாரம் என்று.

    நான் யார்? இவர்களுக்கும், எனக்கும் என்ன சம்பந்தம்? என்று நான்ந்தான் அடிக்கடி குழம்பிப் போகிறேன்.

    ஆனால், வேர்கள் இல்லையென்பதனால் எனக்கு ஏதும் தடுமாற்றமில்லை. என்னுடைய சந்ததிகள் எல்லாருமே வேர்கள் இல்லாதவர்கள் என்று எனக்குத் தோன்றுகிறது. நான் தமிழருக்குப் பிறந்து, தில்லியில் வளர்ந்ததால் வேர்கள் இல்லை என்று சொல்ல முடியாது. ஆங்கிலேயர்கள் 200 ஆண்டுகள் இந்த நாட்டை ஆண்டபோது செய்யாத விஷயத்தை, இங்கிருந்து சென்றபோது செய்துவிட்டுப் போனதுபோல் தோன்றுகிறது. நமது வேர்களைப் பிடுங்கிக் கொண்டு போய்விட்டார்கள். என்னுடைய சந்ததிக்குத் தெரிவது இந்தியக் கலாசாரம் இல்லை. மேற்கத்திய கலாசாரம் அல்லது இதுவுமில்லாத, அதுவுமில்லாத ஒன்று. வேர் எங்கிருந்து பிடிக்கும் வேர்?

    அதனால்தான் எனக்கு அடிக்கடி இந்த ‘கெட்டோ’ அரணிலிருந்து பிய்த்துக் கொண்டு ஓடவேண்டும் என்கிற வெறி ஏற்படுகிறது. ‘அதான் காயம் பட்டுக்கறே’ என்கிறாள் அம்மா. காயம் ஏற்படுவது அதனால் இல்லை! என்பது அவளுக்குப் புரியவில்லை.

    மைதிலி, என்ன இன்னிக்கு இன்னும் கிளம்பல்லே?

    அப்பாவின் குரல் அறையின் வாசற்படியில் ஒலித்தது.

    இதோ கிளம்பியாச்சு என்றபடி நான் பீரோவிலிருந்து கைப்பையை எடுத்து பீரோவைப் பூட்டி கண்ணாடியில் ஒருமுறை என்னைப் பார்த்துக் கொண்டேன். பாகிஸ்தானிய ஸ்டைலில் ஷல்வாரும் ‘கலிவாலி’ நீளக் கம்மீஸும் குட்டைத் தலைமயிரும் என்னுடைய அந்நியத்தனமான முகமும் கொண்ட பிம்பம் தமிழ்நாட்டிலிருந்து ஒரு யுகத்தொலைவில் நின்றது.

    நான் யார்?

    இந்தக் கேள்விக்கான பதிலின் தேடலில்,

    Enjoying the preview?
    Page 1 of 1