Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Siragukal
Siragukal
Siragukal
Ebook156 pages1 hour

Siragukal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உற்றார் உறவினர் யாருடைய துணையுமின்றி பணிபுரியும் நம்பிக்கையான மனிதர்களின் துணையோடு தன் கட்டிட கான்ட்ராக்ட் தொழில் சிறந்து விளங்கும் கதையின் நாயகி சீதா. இளம்வயதில் காதல் திருமணம் செய்துகொண்டதால் இருவீட்டாரது அன்பையும் இழந்து கனவோடு காதல் வாழ்வை தொடங்குகிறாள். ஆனால் திடீரென அவள் வாழ்வில் ஏற்பட்ட புயலால் கணவனை விடுத்து இரு குழந்தைகளை நன்கு வளர்த்து அவர்கள் மனதில் நிறைந்தாளா? அவளது வாழ்வை மாற்றிய நிகழ்வு என்ன? தொழிலில் சிறந்து விளங்கியவள் குடும்ப வாழ்க்கையில் நற்பெயர் பெற்றாளா? கதையுடன் பயணித்து அறிவோம்.

Languageதமிழ்
Release dateDec 6, 2021
ISBN6580125407760
Siragukal

Read more from Vaasanthi

Related to Siragukal

Related ebooks

Reviews for Siragukal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Siragukal - Vaasanthi

    https://www.pustaka.co.in

    சிறகுகள்

    Siragukal

    Author:

    வாஸந்தி

    Vaasanthi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/vaasanthi-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    1

    அறையில் அமர்ந்தபடி ஜன்னல் வழியே பார்க்கும்போது உலகம் மிக ரம்யமாகக் காட்சி அளித்தது. அசையும் இலைகளும் கிளைக்குக் கிளைத் தாவிச்செல்லும் பசேலென்ற பச்சைக் கிளிகளும் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. மரங்களும் மற்ற தாவரங்களும் சற்று முன்வரைப் பெய்த மழையில் ஆசைத் தீரக் குளித்து சிலிர்த்து நிற்பதுபோல இன்னமும் நீர்முத்துக்கள் பளபளக்க நின்றன.

    சீதாவுக்கு மழைக்காலம் பிடிக்கும். அதுவும் பெங்களூரில் பெய்யும் மழையை பார்க்க இரவு முழுவதும் கொட்டோ கொட்டென்று பெய்யும் காலையில் பளிச்சென்று இதமான வெயில் அடிக்கும். ஏற்றமும் இறக்கமுமான தார் சாலைகள் நீர் தேங்காமல் உலர்ந்து இருக்கும். அவள் தன்னை மறந்து வெளியில் தெரிந்த காட்சியில் லயித்துப் போனாள். மழை மீண்டும் பிடித்துக்கொண்டது சடசடவென்று ஓசையுடன் சற்று நேரத்தில் வானத்துக்கும் பூமிக்கும் இழை கோர்த்ததுபோல ஓசை அடங்கி பெய்ய ஆரம்பித்தது.

    அலுவலக வேலை ஆரம்பிக்கும் நேரம் அவள் யோசனையுடன், ஒரு ரசனையுடன் மீண்டும் துவங்கிய மழையைப் பார்த்தாள். யாரோ வருவதுபோல இருந்தது. அவள் எழுந்து அவசரமாக மேஜையை ஒழுங்குபடுத்தினாள். வருபவர் யாராயிருக்கும் என்று யோசித்தபடி, வெகு வேகமாக மாடிப்படிகளைத் தாண்டும் ஓசையும், தொடர்ந்து 'குட் மார்னிங்' என்ற ஒலியும் கேட்டு சீதா நிமிர்ந்து பார்த்தாள்.

    சேஷன்.

    அவள் மலர்ந்த முகத்துடன் ஹல்லோ, குட்மார்னிங்! வாருங்கள்! என்றாள். சேஷன் ஷூ அணிந்த கால்களை மிதியடியில் தேய்த்தவாறே, என்ன பயங்கர மழை போங்கள் என்று அலுத்துக் கொண்டார்.

    சீதா சிரித்தாள்.

    பயங்கரமாகவா இருக்கிறது? ரொம்ப அழகாக இருக்கிறதென்று நான் நினைத்தேனே!

    உங்களுக்கு எல்லாம் அழகாக இருக்கும். பிறகு நம்முடைய 'க்ளையண்ட்ஸ்' ஏன் கட்டடம் முடியவில்லை என்று கேட்டால், 'மழை அழகாயிருந்தது, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்' என்பீர்களா?

    சீதா மறுபடியும் சிரித்தாள்.

    மழைக் காலமே ஆரம்பித்து விட்ட மாதிரி பதறுகிறீர்களே! அதற்கு இன்னும் நான்கு மாதங்கள் இருக்கின்றன என்று தெரியாதா உங்களுக்கு? இந்த மழை வெறும் பதில் வெட்டு. இதற்கெல்லாம் பயப்படலாமா? என்றபடி ‘பெல்'லைத் தட்டினாள்.

    சேஷன் அசட்டுச் சிரிப்புடன் தான் கொண்டு வந்த ஃபைல்களை மேஜையின் மேல் வைத்தார்.

    கதவருகில் வந்து நின்ற ஆளிடம் இரண்டு கப் டீ கொண்டு வரச் சொல் என்றாள் சீதா.

    ஃபைல்களைப் பிரித்தபடியே, அந்த குமார் அண்ட் கோ கட்டடத்திற்கு எலெக்டிரிக் கனெக்‌ஷன் தான் பாக்கி... என்றார் சேஷன்.

    நான் அதற்கு ஏற்பாடு பண்ணியாகி விட்டது. ராம்ஜிக்குக் காலையிலேயே போன் பண்ணினேன். அவன், ஆட்களுடன் போயிருப்பான். நாளை மாலைக்குள் வேலை முடிந்து விடும். நாளன்றைக்குக் கட்டடத்தை 'ஹாண்ட் ஓவர்' செய்து விடலாம்.

    உங்கள் சுறுசுறுப்பு யாருக்கும் வராது என்ற சேஷன், அவளுடைய கையெழுத்துத் தேவையாக இருந்த தஸ்தாவேஜுகளைக் காட்டினார். அவள் மேலோட்டமாக ஒரு பார்வை எல்லாவற்றையும் பார்த்துவிட்டுக் கையெழுத்துப் போட்டாள்.

    ஆவி பறக்கும் டீயையும், ஒரு தட்டில் பிஸ்கெட்டையும் கொண்டு வந்து வைத்தான் மணி.

    'சேஷனுக்கு' ஒரு கோப்பையைக் கொடுத்துவிட்டுத் தான் ஒன்று எடுத்தபடி சீதா கேட்டாள்: அந்த ராமப்பா அண்ட் ஸன்ஸின் கட்டடத்திற்கான சிமெண்ட் மூட்டைகளை ரமேஷ் சேர்ப்பித்து விட்டான் அல்லவா? கோடவுனுக்குப் பாதுகாப்பாக ஒரு சவுக்கீதாப் போட்டுவிடுங்கள்...

    சேஷன் தயங்கிக்கொண்டே சொன்னார்: சிமெண்ட் மூட்டைகள் இன்னும் கோடவுனுக்கு வரவில்லை.

    சுரீரென்று எழும்பிய கோபத்தை அடக்கியபடி சீதா வியப்புடன் அவரைப் பார்த்தாள்.

    ரமேஷ், மைசூருக்குப் போயிருக்கிறான், மனைவியைப் பார்க்க...

    சீதா கோப்பையை 'டக்' கென்று மேஜை மேல் வைத்தாள்.

    வாட் நான்ஸென்ஸ்! இதுவா அதற்குச் சமயம்? ராமப்பாவுக்கு நான் உறுதியளித்திருக்கிறேன், மழைக் காலத்துக்கு முன் கட்டடம் முடிந்து விடும் என்று... சுறுசுறுப்பாக இருக்க வேண்டிய நாட்களில் இப்படி அசிரத்தையாக இருந்துவிட்டால் கம்பெனியே படுத்து விடும்.

    சேஷன் கனைத்துக் கொண்டார். இப்பத்தான் கல்யாணமாகி இரண்டு மாசமாகிறது. வாலிப வயசு. உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தக்கூடிய வயசா?

    சீதா அவரைக் கூர்ந்து பார்த்தாள்; இவர் ஏதாவது பொடி வைத்துப் பேசுகிறாரா?

    அவள் பார்வையின் தீட்சண்யத்தைத் தாங்காமல் அவர் மழையைப் பார்த்தபடி சொன்னார்: அவனும் பாவம். அலையாய் அலைகிறான் வீட்டுக்கு. ஒரு வீடும் கிடைக்கவில்லை. இரண்டாயிரம், மூவாயிரம் என்று அட்வான்ஸ் கேட்கிறார்கள் இரண்டு ரூமுக்கு... ஆனாலும் இந்த பெங்களூர் மகாமோசம் ஆகிவிட்டது...

    ஏதோ யோசனையில் இருந்த சீதா, ஆமாம், கோடவுனில் சிமெண்டைப் போடாததும் நல்லதாய்ப் போயிற்று. இன்று பெய்த மழையில் கோடவுனின் ரூஃபில் ஏதாவது லீக்கேஜ் இருக்கிறதா என்று தெரிந்துகொண்டு ரிப்பேர் செய்துவிட்டுப் போடுவதே நல்லது.

    சேஷன் அயர்ந்து போனார்: 'இவளுக்கு வேறுவிதமான சிந்தனைகளே கிடையாதா? எப்பவும் பிஸினஸ் நினைவுதானா? இத்தனை அழகான உருவத்தைக் கொடுத்த ஆண்டவன், அதில் மெல்லிய உணர்ச்சிகளை வைக்கவே மறந்து போனானோ?'

    அவர் கொண்டு வந்திருந்த தஸ்தாவேஜுகளைத் தீவிரமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள். என்ன அழகு! 'தக தக' வென்று மின்னும் நிறம். ஒடிசலான உடம்பு. செதுக்கி வைத்த மாதிரி மூக்கும், விழியும், அங்கங்களும். இவளைப் பார்த்து 38 வயது என்று யார் சொல்வார்கள்? 30கூட மதிப்பிட முடியாது. இப்படியும் ஓர் இளமையா? ஆனால் இந்த அழகு மயக்கவில்லை; கம்பீரமாய் இருக்கிறது. அவளுடைய புத்திக் கூர்மையினால் தேஜஸ்ஸாக நெருப்பாய் ஜொலிக்கிறது, தபஸ்வினி மாதிரி!... தபஸ்வினிதான். ஆனால் யாருக்கு லாபம், இவள் செய்யும் தபஸ்ஸினால்!

    தான் அவளைப் பார்ப்பது அவளுக்குத் தெரிந்துவிடுமோ என்கிற அச்சத்தில் அவர் எழுந்து ஜன்னலண்டை சென்றார். வெளியில் இன்னும் மழை பெய்து கொண்டிருந்தது. ஆனால் ஆர்ப்பாட்டம் குறைந்திருக்கிறது. ஜன்னல் கண்ணாடிகள் மட்டும் திரை போட்ட மாதிரி மங்கிப் போயிருந்தன. தெருவே தெரியவில்லை. சேஷன் ஒரு குறிப்பிட்ட சிந்தனையில்லாமல் ஜன்னலண்டை போய் நின்று தன்னுடைய கைக்குட்டையினால் ஒரு ஜன்னலைத் துடைத்துப் பார்த்தார், மழை இன்னும் பெய்து கொண்டிருந்ததால் எதிர்ச்சாரியிலிருந்த கடைகளில் இன்னும் அடைத்தபடி ஜனங்கள் நின்று கொண்டிருந்தார்கள். நாயரின் டீ வியாபாரம் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. டீயை அவன் கெட்டிலிலிருந்து க்ளாஸுக்குக் கையை உயரத் தூக்கி ஊற்றும் லாகவத்தை ரஸித்தபடி அவர் நிற்கையில்

    இந்தாருங்கள். முடித்து விட்டேன் என்று குரல் கொடுத்தபடி சீதாவும் எழுந்து வந்தாள்.

    இது என்ன டிஸைன்? அழகாகப் போட்டிருக்கிறீர்களே? என்று சீதா சிரித்துக்கொண்டே கேட்ட போது தான் அவரே கவனித்தார். தன்னை அறியாமலே ஜன்னலில் விரல் நுனியால் தேய்த்திருந்த சித்திரத்தை.

    அட! எனக்கே தெரியவில்லை நான் வரைந்தது. வேடிக்கையாக இல்லை! நம்மையறியாமலேயே நாம் எவ்வளவு வேலைகள் செய்கிறோம் என்று நமக்கே தெரிவதில்லை!

    ஆமாம். பல விஷயங்கள் நம்மை அறியாமலே நம்மாலேயே செயல்படுகின்றன என்றாள் சீதா. நிதானமாக சேஷன் ஒரு விநாடி அவளைப் பார்த்தார் , இவள் மனசு மிகவும் ஆழம் என்று நினைத்த மாதிரி..

    ரமேஷ் எப்போது வருகிறான்? என்று அவள் சட்டென்று பேச்சைத் திருப்பினாள்.

    நாளைக்கு.

    நல்லது. நாளைக்கு கோடவுனை ஏதாவது பழுது பார்க்க வேண்டுமா என்று பாருங்கள். ரமேஷ் வந்ததும் என்னை வந்து பார்க்கச் சொல்லுங்கள்.

    ஆகட்டும் என்றபடி சேஷன் எழுந்தார்.

    ஃபைல்களை எடுத்தபடி, நான் வரேன் அப்ப என்றவர், உங்கள் கணவரிடம் இருந்து லெட்டர் வருகிறதா? அவர் சவுக்கியமா? என்று கேட்டார்.

    மென்மையாகப் புன்னகைத்தபடி, ஓ, வருகிறதே! சவுக்கியந்தான். தாங்க்யூ என்றாள் சீதா.

    அந்த மென்மை அவள் முகத்துக்கு எத்தனை அழகூட்டியது என்று நினைத்துக் கொண்டார் சேஷன்.

    எப்பொழுது இங்கு வருகிறார்?

    எங்கேயோ நழுவிவிட்டிருந்த தன் எண்ணங்களை இழுத்தவள் மாதிரி உம்? என்றவள், தெரியாது. அவருக்கு வர முடியுமோ? இல்லை, நான் தான் போகப் போகிறேனோ தெரியவில்லை என்றாள்.

    பாவம்! உங்கள் இரண்டு பேருக்குமே கஷ்டம் இப்படித் தனித்தனியே இருப்பது.

    மறுபடியும் அதே மென்மையான புன்னகை. இல்லையே, பழகிவிட்டது.

    உங்களுக்கு மனோதிடம் அதிகம்

    Enjoying the preview?
    Page 1 of 1