Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nizhal Tharum Tharuve
Nizhal Tharum Tharuve
Nizhal Tharum Tharuve
Ebook341 pages3 hours

Nizhal Tharum Tharuve

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மைசூர் பல்கலைக்கழகப் பட்டதாரி. நாவல்கள், குறுநாவல் தொகுப்புகள், சிறுகதைத்தொகுப்புகள், பயணக்கட்டுரை நூல்கள் என்று ஐம்பதுக்கும் மேலான நூல்கள் பதிப்பிக்கப் பெற்றுள்ளன. குறிப்பிடத்தக்க பத்திரிகையாளரும் கூட. இந்தியா டுடேயின் தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராக 9 ஆண்டுகள் வெற்றிகரமாகப் பணியாற்றி துணிச்சலான பத்திரிகையாளர் என்று முத்திரை பதித்தவர். கலை, கலாசாரம் அரசியல் என பல்வேறு புள்ளிகளை தொட்டுச் செல்லும் அவரது கட்டுரைகளில் பல அவை வெளி வந்த காலத்தில் தீவிர கவனம் பெற்றதுடன் விவாதங்களையும் தோற்றுவித்தன.

கலாசார பரிவர்த்தனைத் திட்டத்தின் கீழும் பல வெளிநாட்டு - இலக்கிய அமைப்புகளின் அழைப்பின் பேரிலும் உலக எ ழுத்தாளர் மாநாட்டுக்காக, சொற்பொழிவுகளுக்காக குறிப்பான பிரச்சினைகளை ஆராயும் பொருட்டு என்று பல்வேறு நாடுகளுக்குச் சென்று வந்தவர்.

பெண் சார்ந்த பிரச்சினைகளைப்பற்றி பல ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வறிக்கைகள் எழுதி வருபவர். கூர்மையான அரசியல் ஆய்வாளர். இவர் இந்தியா டுடேயில் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தின் போது ஏற்பட்ட தமிழ் நாட்டு அரசியல் நிகழ்வுகளை தமது அரசியல் சார்பற்ற பார்வையுடன் ஆங்கிலத்தில் எழுதிய 'CUT OUTS, CASTE AND CINE STARS' என்ற புத்தகத்தை பெங்குவின் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

பஞ்சாப், இலங்கை , ஃபீஜி நாடுகளின் இனப் பிரச்சினைகளைப் பின்புலமாக வைத்து இவர் எழுதிய நாவல்கள் - மௌனப் புயல், நிற்க நிழல் வேண்டும், தாகம் குறிப்பிடத் தகுந்தவை. மெளனப் புயல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பஞ்சாம் சாகித்திய அகாதெமி விருது பெற்றது. சமூக நாவலான 'ஆகாச வீடுகள் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஹிந்தி மொழிபெயர்ப்பிற்கு உத்தர் பிரதேஷ் சாஹித்ய சம்மான் விருது கிடைத்தது.

சமீபத்தில் வாஸந்தி சிறுகதைகள்' என்ற தொகுப்பிற்கு தமிழக அரசின் சிறந்த நூல் விருது கிடைத்தது.

Languageதமிழ்
Release dateOct 7, 2020
ISBN6580125406039
Nizhal Tharum Tharuve

Read more from Vaasanthi

Related to Nizhal Tharum Tharuve

Related ebooks

Reviews for Nizhal Tharum Tharuve

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nizhal Tharum Tharuve - Vaasanthi

    http://www.pustaka.co.in

    நிழல் தரும் தருவே

    Nizhal Tharum Tharuve

    Author:

    வாஸந்தி

    Vaasanthi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vaasanthi-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1.நிழல் தரும் தருவே...

    2.அநுபூதி

    3. சொர்க்க வாசல்

    4. கருவி

    5. வீடு

    6. நரபலி

    7. பாதிப்புகள்

    8. அனுமானங்கள் நம்பிக்கைகள்

    9. சதுரங்கம்

    10. நியாயங்கள்

    11. பயணம்

    12. திரிசங்கு

    13. பிறவி

    14. தனிவழிப்பாதைகள்

    15. எல்லைகள்

    16. வழக்கு

    17. வடிகால்

    18. சுத்தம்

    19. விசாரணை

    1.நிழல் தரும் தருவே...

    அப்பாவிடமிருந்து கடிதம் வந்திருந்தது. சேஷப்பா ஒரு தடவைக்கு இரண்டு தடவை படித்துப் பார்த்தான். கோத்துக் கோத்து சங்கிலியாய்ப் படர்ந்த எழுத்துக்களில் எல்லா சமாசாரமும் இருந்தது, அத்தைப் பெண்ணின் வரப்போகும் சீமந்தத்திலிருந்து மாடு கன்று போட்டது வரை. அவன் கேட்டிருந்த பணத்தைப் பற்றித்தான் பேச்சையே காணோம். சேஷப்பா குழப்பத்துடன் கடிதத்தை அர்த்தமில்லாமல் கைகளில் திருப்பித் திருப்பிப் பார்த்தான். பரீட்சைக்குக் கட்ட பணம் அனுப்பச் சொல்லி எழுதின கடிதம் போய்ச் சேர்ந்து தானே இந்தக் கடிதம் எழுதியிருக்கிறார்! பின் ஏன் அதைப்பற்றி ஒன்றுமே எழுதாமல் விட்டுவிட்டார்? மறதியா? அது எப்படி இவ்வளவு முக்கியமான விஷயத்தை மறப்பார்? பணமுடையாக இருக்குமோ? அப்பாவுக்குப் பணமுடையா? சேஷப்பா நம்ப முடியாமல் தலையை அசைத்துக் கொண்டான்.

    அப்பாவின் ஜரிகைக்கரைத் தலைப்பாகையும், கம்பீர உருவமும் அவனுக்கு மனத்தில் புரண்டெழுந்தன. எத்தனை பெரிய வீடு, அதில் ஒண்டியிருக்கும் எத்தனை உறவினர்கள், என்னென்னவோ உறவு சொல்லிக்கொண்டு! அவர்களுக்கும் அந்தப் பெரிய வீட்டிற்கும் அப்பாதான் ஏக சக்ராதிபதி. அவர் வீட்டில் இருக்கும் போது எல்லாரும் பெட்டிப் பாம்பாக இருப்பதை நினைத்துப் பார்த்து சேஷப்பா சிரித்துக்கொண்டான். அவர் மீது அவர்களுக்கு இருக்கும் உண்மையான மரியாதையினாலோ அல்லது தங்களுடைய கையாலாகாத பலவீனத்தினாலோ அவர் எதிரில் வரக்கூட தயங்குவார்கள். அவர் காதுவரைக்கும் போகாத எவ்வளவோ சின்னச் சின்ன பூசல்களையும் சச்சரவுகளையும் சேஷப்பா கவனித்திருக்கிறான். சொந்த முயற்சி எதுவும் இல்லாமலேயே அவர்களுக்கிருக்கும் ஆசைகளையும் சின்னத்தனத்தையும் நினைத்து வியந்திருக்கிறான். அவர் தன் பிள்ளைக்கு என்று செய்த ஒரே சலுகை, அவனைப் பெங்களூருக்கு அனுப்பிக் காலேஜில் சேர்த்ததுதான்.

    சேஷப்பா எதிரில் இருந்த காலண்டரைப் பார்த்தான். தேதி ஆறு. இன்னும் நான்கு நாட்கள்தான் இருந்தன, பணம் கட்ட அதற்குள் பணம் வராவிட்டால் என்ன செய்வது? யாரைப் போய்க் கேட்பது? அந்த நினைப்பே அவனுக்கு என்னவோபோல் இருந்தது. சேஷப்பா பலமாக மண்டையை அசைத்துக் கொண்டான். அப்படி ஒரு சந்தர்ப்பம் வராது. அவனுடைய அப்பாவை அவனுக்கு நன்றாகத் தெரியும். தலையையாவது அடகு வைப்பாரே தவிர, கடன் வாங்கமாட்டார். வீட்டில் இருக்கும் நூற்றெட்டுத் தொல்லைகளில் பணத்தைப் பற்றி எழுத மறந்திருப்பார். மறுநாள் வரை பொறுத்துப் பார்த்துப் பணம் வராவிட்டால் தந்தியடித்து, தந்தி மணியார்டர் அனுப்பச் சொல்வது என்று தீர்மானித்துக் கொண்டான் சேஷப்பா.

    யாரோ கதவைத் தட்டினார்கள்.

    ''யாரு?'' என்று குரல் கொடுத்துக் கொண்டே கதவைத் திறந்தான்.

    'குப்'பென்று 'லேவண்டர்' நெடியை வீசிக் கொண்டு நின்றிருந்தான் பிரபாகர்.

    சேஷப்பாவின் முதுகில் ஒருதட்டு தட்டி, "டேய், பெண்பிள்ளை மாதிரி உள்ளே உட்கார்ந்து கொண்டு என்னடா செய்கிறாய்?'' என்றான் கன்னடத்தில்.

    ஏனு இல்லா என்றான் சேஷப்பா.

    பின்னே வெளியிலே வா. இப்பவே பரீட்சைக்குப் படிக்க ஆரம்பித்துவிடாதே. சரியான சமயத்தில் மூளை கலங்கிப் போய்விடும்.

    இரு, முகம் கழுவிக்கொண்டு வருகிறேன் என்று கிளம்பினான் சேஷப்பா.

    இருவரும் சைக்கிளில் ஹாஸ்டல் காம்பவுண்டைத் தாண்டியதும் டபிள்ஸ் கிளம்பினார்கள்.

    எங்கேடா போகிறோம்?

    பிரபாகர் சிரித்தான்: ''எங்கேயோ! சைக்கிள் எங்கே அழைத்துக்கொண்டு போகிறதோ அங்கே!"

    அது இங்கிதம் தெரிந்த சைக்கிள். மகாராணி காலேஜ் வழியாகப் போயிற்று.

    பெண்கள் நாகரிகத்தின் பிரதிநிதிகளாக ரோட்டில் உலா சென்று கொண்டிருந்தார்கள்.

    பெங்களூரில் இத்தனை வருஷங்களாகப் படித்துக் கொண்டிருந்தாலும் சேஷப்பாவுக்கு கூச்சம் விடவில்லை. மனது சபலப்பட்டாலும் கண்கள் சரியாக ஒத்துழைக்கவில்லை. பிரபாகர் இந்த விஷயங்களில் எல்லாம் மன்னன். கொஞ்ச தூரம் சென்றதும் பிரபாகர், அந்த பிங்க் சாரியைப் பார்த்தாயாடா? என்றான்.

    எந்த பிங்க் சாரி?

    பிரபாகர் தலையில் அடித்துக் கொண்டான்:

    "உன்னுடைய ஹள்ளி (கிராம) மண்ணு இன்னும் உன் மண்டையில் இருக்கிறது. அந்தப் பெண்களில் ஒருத்திதானேடா பிங்க் உடுத்தியிருந்தாள்? எப்படி இருக்கிறாள், ரோஜாப் பூ மாதிரி? நாகண்ண கௌடாவின் பெண். எக்கச்சக்க பணம்!'' -

    சேஷப்பா நிச்சயமாகக் கவனிக்கவில்லை, அந்த ரோஜாப் பூவை. பணம் என்றதும் அவனுக்கு மறுபடி அப்பாவின் கடிதம் ஞாபகத்திற்கு வந்தது.

    பிரபாகர், நீ பரீட்சைக்குப் பணம் கட்டி விட்டாயா? என்று கேட்டான்.

    பிரபாகர் அலுத்துக்கொண்டான். டேய், உனக்கு ஒரு 'ஒன் டிராக் மைண்ட்'. குஷியாக ஊர் சுத்தலாம் என்று வந்தால் நீ பரீட்சையைப் பற்றிப் பேசுகிறாய் பார். எல்லாம் பணம் கட்டியாகி விட்டது. அதைப் பற்றி மறந்தும் ஆயிற்று. இருக்கவே இருக்கிறது செப்டம்பர் என்று அலட்சியமாகச் சிரித்தான். பிறகு, ஆமாம், ஒன்று கேட்கிறேன் சொல்லு, உங்க அப்பா என்ன பெரிய 'டெரர்ரோ? என்றான்.

    இல்லையே, ஏன்?

    இல்லை. நீ என்னவோ பரீட்சை என்றால் ஒரேயடியாய்ப் பறக்கிறாய். பாடங்களை விழுந்து விழுந்து படிக்கிறாய். அப்பாவுக்கு வாரம் தவறாமல் கடிதாசு போடுகிறாய்! நார்மலாக, நேச்சுரலாக எங்களைப்போல் எல்லாம் இல்லை நீ!

    சேஷப்பா, சீரியஸாகப் பேசினான்:

    ஏண்டா, அப்பாகிட்டே மரியாதையாக நடந்து கொண்டால் அதற்கு அப்பா டெரர் என்று அர்த்தமா? மேல் படிப்புக்குன்னு நம்மை அனுப்பிச்சப்புறம் நான் படிக்காமெ அவருடைய பணத்துக்கு நஷ்டத்தையும், மனசுக்கு வருத்தத்தையும் கொடுத்தா, அது நார்மல்னு சொல்றயா?

    பிரபாகர் சிரித்தான்: ''ஐயோ, ஐயோ, போரடிக்காதேடா! உனக்காகப் படிக்கிறேன்னு சொல்லு, உங்கப்பாவுக்காகப் படிக்கிறேன்னு சொல்லாதே. அப்பாவுக்காகப் படிக்கிறது, அம்மாவுக்காகக் கல்யாணம் பண்ணிக்கிறது.... ஐ ஹேட் ஆல் தீஸ்... அமெரிக்காவிலெல்லாம் பாரு. ஒரு வயசுக்கு மேல் அப்பனுக்கும் பிள்ளைக்கும் என்ன உறவு! 'இருக்கியா, இருக்கிறேன்'னு தான்."

    பிரபாகர் மேலும் சொன்னான்:

    உனக்கு உலக ஞானமே இல்லையடா. உன் கிராமத்து மண் உன்னுடைய மனசில் அவ்வளவு பெரிய கோட்டிங் கொடுத்திருக்கிறது என்றான்.

    ''வாஸ்தவந்தான்" என்று சிரித்தான் சேஷப்பா. அவனுடைய உலகம் மிகச் சிறியது. ஆனால் அந்த உலகம்தான் எத்தனை அழகானது? அத்தனை பெரிய குடும்பம், அதில் எந்தவித விரிசலும் ஏற்படாமல் அதை நிர்வகிக்கும் அப்பாவின் கம்பீரம்; கோபமே வராமல் எல்லோருக்கும் ஒரே சீராகச் செய்து போடும் அம்மா; அந்தச் சூழ்நிலையில் நிழலின் குளுமை இருந்தது; அன்பின் இதமான அரவணைப்பு இருந்தது.

    சைக்கிள் லால்பாக் கேட்டிற்குள் நுழைந்தது. பிரபாகர் உற்சாகமாக விசில் அடித்துக்கொண்டே பெடல் செய்து கொண்டிருந்தான். 'இந்தப் பிரபாகரைக் கேட்டாலென்ன' என்று திடீரென்று தோன்றிற்று. இவனுடைய அப்பாவோ பெரிய அரசாங்க அதிகாரி. இவனும் தன்னுடைய பாக்கெட் மணியைப் பற்றி அளப்பவன்.

    பிரபாகர், உன்கிட்டே ஒன்று கேட்கலாமா? என்று கேட்டான்.

    பணத்தைத் தவிர பாக்கி என்ன வேண்டுமானாலும் கேள்.

    சேஷப்பா ஏமாற்றத்தோடு சிரித்தான்.

    என்னடா சமாசாரம்?

    பரீட்சைக்குக் கட்ட பணம் அனுப்பச் சொல்லி அப்பாவுக்கு எழுதியிருந்தேன். பணம் வரவேயில்லை. கடைசித் தேதி நெருங்கிக் கொண்டிருக்கிறது!

    அடடா! என்று அனுதாபப்பட்டான் பிரபாகர்: என்னுடைய பாக்கெட் மணியெல்லாம் கூட தீர்ந்துவிட்டது! நாலு தரம் ஃபிரண்ட்ஸ்கூட த்ரீ ஏஸஸ் போனால் பணம் பறந்து விடுகிறது!'' என்று சொன்னவன், ஆமாம், உங்கப்பாவிடமிருந்து ஏன் இன்னும் பணம் வரவில்லை?" என்றான்.

    ''அதான் எனக்குப் புரியவில்லை. ஏதாவது பணமுடையோ என்னவோ?"

    என்னடா உங்களுக்கு கிராமத்தில் செலவு? எங்களுக்காவது அப்பாவின் ட்ரிங்க்ஸ், அம்மாவுடைய வெளிச்செலவுகள், என்னுடைய பிரத்தியேகச் செலவுகள், சமையல்காரன், ஆட்கள், கார் என்று செலவு. எப்பவும் பணமுடை.

    சேஷப்பா சிரித்தான்: நீங்கள் இருப்பது எண்ணி மூன்று பேர். எங்கள் வீட்டில் எவ்வளவு பேர் தெரியுமா? இருபது பேர்கள்!

    மை காட்! என்றான் பிரபாகர்:

    ''என்னடா இது அக்கிரமமாக இருக்கிறது? என்னுடைய வீட்டுக்கு வந்து பார். என்னுடைய அம்மா மகா கெட்டிக்காரி. அப்பாவின் பந்துக்களை அண்டவிட மாட்டாள்!''

    ரொம்ப பர்ஸனலாகப் பேச்சு போய்க் கொண்டிருப்பதாக சேஷப்பாவுக்குப் பட்டது. பேச்சை மாற்ற எண்ணி, 'டேய், உன் சைக்கிளை உன் வீட்டுக்குத் திருப்பி எனக்கு ஒரு கப் காபி கொடு. வருகிற அவசரத்தில் குடிக்காமல் வந்துவிட்டேன்" என்றான்.

    ஓ, வீட்டிற்கா? மகா போர் ஆச்சே. ஓட்டலுக்கே போகலாம் என்றவன், ''சரி சரி, வீட்டுக்கே போகலாம். இப்பொழுது அப்பாவும் இருக்கமாட்டார். அம்மாவுக்கும் எங்கோ ப்ரோக்ராம். நாம் காபி குடித்தபடி ஜாலியாக உஷாவின் பாட்டுக்களையாவது கேட்கலாம்" என்றான் பிரபாகர்.

    சேஷப்பா எவ்வளவோ முறை பிரபாகரின் வீட்டுக்குப் போயிருக்கிறான் அநேகமாகப் பிரபாகரின் அம்மா வீட்டில் இருக்கவே மாட்டாள். அப்படியிருந்தாலும் இவர்களைக் கவனிக்க அவளுக்குப் பொழுதில்லை.

    பிரபாகரின் அம்மா இடது கையில் ஒரு வாட்ச் மட்டும் அணிந்து கொண்டிருப்பாள். வலது கை மூளியாகத்தான் இருக்கும். சேஷப்பா தன் அம்மாவின் கைகளை நினைத்துக் கொள்வான். தங்கப்பட்டை வளைகளுக்கு இடையே சிவப்பும் பச்சையுமாய்க் கண்ணாடி வளையல்கள் இல்லாமல் இருக்கவே இருக்காது.

    அம்மாவை நினைக்கும் போதே அவனுடைய நெஞ்சு பூரித்து வழிந்தது. காலையிலும் மாலையிலும் துளசி மாடத்துக்குப் பூஜை செய்து நமஸ்கரிப்பதும், மாலையில் விளக்கேற்றிவிட்டு, நாள் முழுவதும் உழைத்த அலுப்பை மறந்து தூணில் சாய்ந்து உட்கார்ந்தபடி புரந்தரதாசர் கிருதிகளைப் பாடுவதும் கண்ணெதிரில் நின்றது.

    திடீரென்று பிரபாகர் சொன்னான்: ''என்னை உங்கள் கிராமத்துக்கு அழைத்துக் கொண்டு போடா, எனக்கும் இங்கு போரடித்து விட்டது."

    ஓ, அதுக்கென்ன, பரீட்சை முடிந்ததும் போகலாம், வாயேன்!

    உங்கம்மா நன்றாய்ச் சமைப்பாள், இல்லையா?

    ஓ, ஃபஸ்ட் கிளாஸ்! பிஸிபேளா ஹுளியன்னாவும் ஒப்பட்டுவும் எங்க அம்மா செய்கிற மாதிரி யாராலும் செய்ய முடியாது!

    அப்படியானால், நிச்சயமாகப் போக வேண்டும்.

    சேஷப்பா பதில் பேசவில்லை. பிரபாகரின் வீட்டில் நிழலே இல்லை என்று தோன்றிற்று அவனுக்கு. அதனால்தான் இப்படிப் புழுங்குகிறான். குஷியாக இருக்கிற மாதிரி வேஷம் போடுகிறான்.

    பிரபாகரின் வீடு வந்துவிட்டது. போர்ச்சில் அவனுடைய அப்பாவின் கார் நின்றிருந்தது.

    பிரபாகரின் அப்பா தன் ஸ்தூல சரீரத்தைச் சாய்த்தபடி சோபாவில் உட்கார்ந்திருந்தார். பிரபாகர் அவரைக் கவனிக்காதவன் மாதிரி தன் அறைப் பக்கமாக நடந்தான். அவரை ஒரு விநாடி கவனித்த சேஷப்பாவுக்கு மனத்தில் பகீர் என்றது. முகத்தில் ஆறாக வேர்த்திருந்தது. அவனை அரைகுறையாகப் பார்த்த அவர், அருகில் வா' என்று சைகை காட்டினார். உள்ளுணர்வு ஏதோ உந்த சேஷப்பா, அவரிடம் விரைந்தான், பிரபாகர், உங்க அப்பாவுக்கு ஏதோ உடம்புடா! என்றபடி.

    பிரபாகர் முகத்தைச் சுளுக்கியபடியே வந்தான், அவர் நன்றாகக் குடித்துவிட்டுப் படுத்திருப்பார்' என்று சைகை காட்டியபடி. சேஷப்பா அதைக் கவனியாமல் அருகில் சென்றதும் அவர் மெதுவாக டாக்டருக்கு போன் பண்ணு என்றார். சேஷப்பாவுக்குப் பதறிப் போய்விட்டது. பிரபாகரிடம் டேய், உங்கப்பா பக்கத்தில் இரு. உங்கள் டாக்டரின் நம்பரைச் சொல்லு என்றான்.

    டைரக்டரியில் முதல் பக்கம் எழுதியிருக்கிறது, டாக்டர் சம்பத் என்று என்றான்.

    சேஷப்பா அவசரமாக டயல் செய்தான். நல்லவேளையாக டாக்டர் இருந்தார். உடனே வருவதாகச் சொன்னார். சமையல்காரரிடம் சொல்லி ஒரு கப் காபி வரவழைத்து பிரபாகரின் தந்தைக்குக் கொடுத்து மெல்லப் பருகச் செய்தான் சேஷப்பா. அதற்குள் டாக்டர் வந்தார். பிரபாகரின் தந்தைக்கு அரைகுறை நினைவாக இருந்தது. டாக்டர் பரிசோதித்து ஓர் ஊசியைப் போட்டு, உடனே ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டும் என்றார். பிரபாகர் பிரமை பிடித்தாற் போல் நின்று கொண்டிருந்தான். சேஷப்பாதான் சட்டென்று பிரபாகரின் அம்மா போயிருந்த இடத்திற்குப் போன் செய்து உடனேயே வரும்படி சொன்னான். அந்த அம்மாள் பதறிக் கொண்டு ஓடி வந்தாள். ஏதோ ஹெமெரேஜ் என்றார்கள். மிக நல்ல நர்ஸிங் ஹோமில்தான் சேர்த்தார்கள். இரவுக்கு 'ஸ்பெஷல்' நர்ஸ் போட்டார்கள். 'இரண்டு நாட்கள் ரொம்ப க்ரிடிகல்' என்றார்கள்.

    அவன் கடைசியில் ஹாஸ்டலுக்குக் கிளம்பினபோது பிரபாகரும் வீட்டுக்குக் கிளம்பினது அவனுக்கே சற்று ஆச்சரியமாக இருந்தது.

    நீ இன்றிரவு இங்கு தங்கமாட்டாயா?

    "எதற்கு?'' என்றான் பிரபாகர் புருவத்தை உயர்த்தியபடி. ''அதான் ஸ்பெஷல் நர்ஸ் போட்டிருக்கிறோமே? யாருப்பா தூக்கத்தைக் கெடுத்துக்கொண்டு இங்கு உட்கார்ந்திருப்பார்கள்?'' என்றான்.

    அடப்பாவி! உனக்குத் தூக்கம் வேறு வருமா இன்றிரவு?' என்று நினைத்துக் கொண்டான் சேஷப்பா.

    பிரபாகர் மெல்லிய குரலில் சொல்லிக் கொண்டே காரைத் திறந்தான்: மனுஷன் கடன் கிடன் வைத்து என் தலையில் கட்டப் போகிறானோ என்னவோ!

    சேஷப்பாவுக்கு தூக்கிவாரிப் போட்டது.

    சே, அப்படியெல்லாம் பேசாதேடா, அவர் இந்த நிலையில் இருக்கும்போது!

    சேஷப்பாவுக்குக் கதவைத் திறந்து கொண்டே பிரபாகர் கோபத்துடன் சொன்னான்: "அவர்தானே இந்த நிலைக்கு உடம்பைக் கொண்டு வந்திருக்கிறார்! குடியென்றால் சாதாரணக் குடியில்லை.

    நானும் அம்மாவும் அதான் நிம்மதியைத் தேடிக் கொண்டு வெளியே அலைகிறோம். சே, லைஃப் இஸ் டிஸ்கஸ்டிங்!"

    சேஷப்பாவுக்குச் சொல்லத் தெரியாத சங்கடம் நெஞ்சை அழுத்தியது.

    ஹாஸ்டல் வந்ததும் இறங்கிக் கொண்டான். ''கவலைப்படாதேடா, கடவுள் இருக்கிறார்!" என்றான்.

    ஹாஸ்டலை நெருங்கியதும் வராண்டாவில் உட்கார்ந்திருந்த நபரைப் பார்த்ததும் சேஷப்பாவுக்குத் தூக்கிவாரிப் போட்டது.

    அப்பா!

    குபீரென்று மனம் மகிழ்ச்சியால் நிரம்பினாலும் எதற்காக வந்திருக்கிறார் என்ற சந்தேகம் எழுந்தது.

    வாருங்கள் அப்பா என்று கன்னடத்தில் சொல்லிக் கொண்டே ரூம் கதவைத் திறந்தான்.

    அவர் அவனை அளக்கிற மாதிரிப் பார்த்துவிட்டு, எங்கே போயிருந்தாய்? நான் சாயங்காலத்திலிருந்து காத்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.

    சேஷப்பா விஷயத்தைச் சொன்னான்.

    ''நீங்கள் வருவதாக எனக்கு எழுதவே இல்லையே, என்ன சமாசாரம்?'' என்றான் சேஷப்பா.

    அவர் எங்கேயோ பார்த்தபடி சொன்னார்: ''ஆமாம், நீ பணம் வேண்டும் பரீட்சைக்குக் கட்ட என்று எழுதியிருந்தாயே!"

    அவர் மேலே சொன்னார்:

    கையில் தற்சமயம் பணம் இல்லை. அதனால் இதை இங்கு விற்றுப் பணம் புரட்டலாம் என்று வந்தேன். இரண்டு ஜோடி கொண்டு வந்தேன். ஒரு ஜோடியிலேயே எதிர்பார்த்த பணம் கிடைத்து விட்ட து.

    அப்பாவின் குரல் தழுதழுத்த மாதிரி இருந்தது. திக்பிரமையடைந்தவனாய் சேஷப்பா பார்த்தான், அவர் கையில் ரோஜா நிற மஸ்லின் பேப்பருக்கிடையே பளபளத்துக் கொண்டிருந்தன அம்மாவின் ஜோடி வளையல்கள்.

    சேஷப்பாவுக்குக் கண் கலங்கிவிட்டது.

    அவனுடைய எண்ண ஓட்டங்களைப் புரிந்து கொண்டாற் போல் அவர் எங்கேயோ பார்த்தபடி சொன்னார்:

    ''இதற்கெல்லாம் கலங்காதே. நீயே நாளைக்கு சம்பாதிக்க ஆரம்பித்தால் பண்ணிப் போடுவாய்! குடும்பம் என்றால் எவ்வளவோ இருக்கும். இந்த வருஷம் நல்ல விளைச்சல் இல்லை. கல்யாணம், சீமந்தம் என்று நிறையச் செலவு...''

    அவர் பாதிப் பேச்சிலேயே நிறுத்தினாற் போல் திடீரென்று எழுந்தார்: ''சரி, நான் வருகிறேன். நன்றாகப் படி. கடைசி வருஷம் இது. ஏதேதோ நினைத்துக் கொண்டு மனத்தைக் குழப்பிக் கொள்ளாதே" என்றவர், சேஷப்பாவின் கண்களில் கண்ணீர் பெருகுவதைப் பார்த்து அவன் முதுகில் தட்டிக்கொடுத்தார்.

    ''ராஜப்பா வீட்டில் இறங்கியிருக்கிறேன். விடியற்காலை பஸ்ஸில் போகிறேன்' என்று கிளம்பினார்.

    "பஸ் ஸ்டாப் வரை வருகிறேன் அப்பா'' என்று சேஷப்பா கிளம்பினான்.

    வேண்டாம் என்று மறுத்து விட்டார் அவர். ஏற்கெனவே நாழியாகிவிட்டது. சாப்பிட்டுவிட்டுப் படுத்துக் கொள்.

    சேஷப்பா, நீர் மல்கிய கண்களுடன் அவர் செல்வதைப் பார்த்துக் கொண்டு நின்றான்.

    *****

    2.அநுபூதி

    "என்ன சீனு சார், சுவாமி புறப்பாட்டுக்குக் கிளம்பியாச்சு. இங்க உக்காந்துக்கிட்டு என்ன செய்யறீங்க?''

    இதோ வரேன், நீங்க போங்க.

    என்ன, உடம்பு சுகமில்லையா?

    ''அதெல்லாம் ஒண்ணுமில்லே. தலையெல்லாம் கொஞ்சம் பாரமா இருக்கு."

    இப்ப ஜாக்கிரதையா இருக்கணும் சார். குளிர் ஆரம்பமாகிற சமயத்திலேதான் ஜுரம், சளியெல்லாம் பிடிச்சுக்கும். ஸ்வெட்டரும் போட்டுக்காம வெட்டவெளியிலே உக்காந்திருக்கீங்க. முருக பக்தர்னா உடம்பு இரும்புன்னு நினைச்சுட்டீங்களா?

    தன் ஹாஸ்யத்தைத் தானே ரசித்துக் கொண்டு சண்முகம் சிரித்தார்.

    நேற்றைக்காயிருந்தால் சீனிவாசனும் புன்னகைத்திருப்பார். இன்றைக்கு அந்த வார்த்தைகள் சுரீரென்று புதிய பரிணாமங்களுடன் குத்தின; இனம் புரியாத ஆத்திரத்தைக் கிளப்பின.

    'நான் அத்தனை முட்டாளில்லை சண்முகம்... அதோ, புறப்பாட்டுக்குக் கிளம்பிண்டிருக்கானே, அவனுடைய மனசுதான் இரும்பு' என்று சொல்ல வேண்டும் போல் இருந்தது.

    ஜனக் கும்பல் இன்றைக்கு மிக அதிகமாக இருந்தது. கந்தசஷ்டி உற்சவ ஆரம்பம். எத்தனை தினுசு ஜனங்கள்! டில்லி தமிழர்களுடன் இடித்துப் பிடித்துக் கொண்டு நிற்கும் மலையாளிகளையும் வடக்கத்திக்காரர்களையும் பார்க்கும் போதெல்லாம் ஏற்படும் ஆச்சரியம் சீனிவாசனுக்கு அப்போதும் ஏற்பட்டது. 'முருகனிடம் இப்படி ஒரு பற்றுதல் எப்படி ஏற்பட்டது இவர்களுக்கு?'

    வெற்றிவேல் முருகனுக்கு...!

    அரோஹரா!

    ‘'ஆறுமுக வேலனுக்கு...!"

    அரோஹரா...!"

    ஜுர வேகத்துடன் கூட்டத்திலிருந்து கோஷம் எழுந்தது. கன்னத்தில் அறைந்து கொண்டு, சிரத்திற்கு மேல் கைகளால் தாளம் போட்டுக் கொண்டு, கண்களில் நீர் மல்க....

    இந்த மாதிரி ஒரு பைத்தியக்காரப் பிரமையில்தான் இத்தனை நாளும் இருந்தேன். அது பிரமைதான். சிந்தனையை மறக்கடிக்கும் பிரமை. இல்லாவிட்டால் இன்று அந்த அதிர்ச்சி நெஞ்சைத் தாக்கியதும் மனசு இப்படி ஸ்தம்பித்து நிற்காது....

    என்ன சீனு யோசனை? மூலஸ்தானத்துக்கு உற்சவமூர்த்தியை அழைச்சுண்டு போகணும். ஒரு கை கொடுக்கல்லியா?

    இல்லை. நீங்கள்லாம் போங்கோ. உடம்பு சித்த சரியாயில்லே!

    அப்ப சரி. இந்தக் குளிர் ஆரம்பிச்சாச்சுன்னா இதுதான் அவஸ்தை! சுவாமிக்குக்கூட வெந்நீரைப் போட்டுக் குளிப்பாட்டினா தேவலை.

    ஏன், அவருக்கு என்ன உடம்பு?

    தன் குரலில் இருக்கும் சூடு அவருக்கே வியப்பைத் தந்தது. இந்த ஊமைக் கோபத்தினால் என்ன லாபம்?

    உற்சாகமும் சுறுசுறுப்பும் கொப்பளிக்க, கூட்டம் உற்சவ மூர்த்தியுடன் படியேறி குன்றின் மேல் வீற்றிருந்த மூல விக்ரகர் ஸ்வாமிநாத சுவாமியை நோக்கிக் கிளம்பிற்று.

    எதிலோ மிக மோசமாக ஏமாற்றப்பட்ட மாதிரி மனசு பரிதவித்தது. 'என்னமாய் நீ என்னை ஏமாற்றலாம்?' என்ற கேள்வியை விடாமல் கேட்டது. 'உன்னையே நம்பிச் சரணடைந்ததற்கு இப்படிச்

    Enjoying the preview?
    Page 1 of 1