Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vaarisu
Vaarisu
Vaarisu
Ebook159 pages55 minutes

Vaarisu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒவ்வொரு குடும்பமும் தன் வாரிசுகள் மூலம்தான் வளர்ந்து வருகின்றன. இதேபோல் சந்திராலயாவுக்கும் ஒரு உண்மையான வாரிசு தேவைப்படுகிறது. தீபா, அழகான படித்த, புத்திசாலி பெண். அருண் என்பவனை காதலித்து வருகிறாள். திடீரென ஒரு விபத்தில் தன் தாய், தந்தையை இழந்த தீபாவிற்கு அடைக்கலம் கொடுத்தது யார்? தீபாவின் தாயான சுந்தரிக்கும், ராஜசேகருக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன? இதில் சந்திரசேகர் என்பவர் யார்? தீபாவின் காதலனான அருண் தீபாவின் குடும்பத்தை பழிவாங்க காரணம் என்ன? சந்திரசேகரின் வாரிசு யார்? நாமும் அவரது வாரிசுடன் அழகு மிகுந்த சந்திராலயாவில்...

Languageதமிழ்
Release dateApr 2, 2022
ISBN6580132608250
Vaarisu

Read more from Kamala Sadagopan

Related to Vaarisu

Related ebooks

Reviews for Vaarisu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vaarisu - Kamala Sadagopan

    https://www.pustaka.co.in

    வாரிசு

    Vaarisu

    Author:

    கமலா சடகோபன்

    Kamala Sadagopan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kamala-sadakopan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    முன்னுரை

    சாதாரணமாக வெள்ளிக்கிழமைகளை லக்ஷ்மிக்கு உரிய நாட்களாக எண்ணி விசேஷ பூஜை செய்வதுண்டு, திருமகள் ‘லக்‌ஷ்மி’க்கு மட்டும் உரியதாக இல்லாமல், திரிபுரசுந்தரி ‘லக்‌ஷ்மி’க்கும் சுமார் முப்பது முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பாக வெள்ளிக்கிழமைகள் உரிய நாட்களாக விளங்கியது.

    ஏனெனில் ஆனந்தவிகடன் அந்த சமயங்களில் வெள்ளிக்கிழமை இரவுவேளைகளில் வெளிவரும். கடைகளில் பத்திரிகைகள் வெளிவந்தவுடன் வீதிகளில் பரபரப்பு, சிறுவர்கள் ஓட்டமும் நடையுமாக ஆனந்த விகடனை கூவிக்கொண்டு விற்பார்கள். ஒவ்வொரு வீட்டின் வாயிலிலும் ஆவலுடன் காத்திருந்து விகடனை வாங்குவார்கள். ஏன் இந்தப் பரபரப்பு?

    ஆனந்த விகடனின் ஆஸ்தான எழுத்தாளராக விளங்கிய திருமதி லக்‌ஷ்மி அவர்கள் தொடர்ந்து தொடர்கதைகள் அதில் எழுதுவார். யார் முன்னே படிப்பது என்ற போட்டி சண்டையில் முடியும் என்பதால், உரக்க ஒருவர் படித்து தாத்தா, பாட்டி, மாமா, அத்தை எல்லாருமே ஹாலில் குழுமி இருந்து கேட்பதில் உள்ள விசேஷமும், மனநிறைவும் இப்பொழுதும் நெஞ்சில் மனநிறைவாக இருக்கும் பள்ளிப்பருவத்தில் நானே அந்த நாளில் உரக்கப் படித்து, எங்கள் வீட்டுப் பெரியோர்களிலிருந்து கடைக்குட்டி குழந்தை தம்பிவரை கேட்டிருக்கிறார்கள்.

    இடையில் லக்‌ஷ்மி அவர்கள் ஆப்பிரிக்காவில் வாசம் செய்தபோது ஆனந்தவிகடனில் லக்‌ஷ்மி அவர்களின் கதை இல்லாமல், வாசகர்களுக்கு சுவாரஸ்யப்படவில்லை.

    அந்நாளில் எழுத்தாளர்களுக்குப் போதுமான விளம்பரம் செய்ய மாட்டார்கள். அவர்கள் விரும்பவும் மாட்டார்கள். திருமதி. லக்‌ஷ்மி அவர்களின் புகைப்படத்தைக் கூடப் பார்த்ததில்லை ஆனால் அவரது எழுத்தில் மோகம்கொண்ட நான், அவரை சந்தித்துப் பேசத் துடித்ததுண்டு, அந்தத் துடிப்பு என்னுள் வெறியாகவே வளர்த்து வந்தது.

    பிற்காலத்தில் என்னுடைய ‘வாரிசு’ எனும் இந்நாவலுக்கு அவரே அணிந்துரை எழுதும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கப் போகிறது என்பதை சிறிதும் நான் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. மங்கையர் மலரில் தான் துணை ஆசிரியையாக பணி ஆற்றும்போது அவருடன் நெருங்கிப் பழகியிருக்கிறேன், ஸ்டெதஸ்கோப்பின் தெளிவும், பேனாவின் உறுதியும் அவரிடம் காணப்பட்டன. எனக்கு அந்தச் சமயத்தில் பலவிதமாக ஒத்துழைத்து அவர் உதவி செய்ததை என்னால் மறக்கவே முடியாது.

    அணிந்துரை எழுதி ‘வாரிசு’ சிறப்புப்பெற வாழ்த்திய திருமதி ‘லக்‌ஷ்மி’ அவர்களுக்கும், எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    கமலா சடகோபன்

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    1

    அரைத் தூக்க திலையில், எழுந்திருக்க மனமில்லாமல் தீபா படுக்கையில் புரண்டுகொண்டிருந்தாள், பக்கத்து அபார்ட்மெண்டில் ரேடியோவை உரக்க வைத்திருந்தார்கள் மாநிலத்து செய்தி மிதந்து வந்தது.

    தீபா திடிரென்று எழுந்து உட்கார்ந்தாள். அவளுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது

    ‘புகழ்பெற்ற தொழிலதிபரான திரு. சந்திரசேகரன் அவர்கள் நேற்று இரவு தமது இல்லத்தில் காலமானார். பல நிறுவனங்களுக்கு அதிபரான அவர் கடந்த இரண்டு வருடங்களாகவே, தமது தொழில் நிர்வாகத்தை தன் புதல்வர் ராஜசேகரிடம் ஒப்படைத்துவிட்டு ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். தற்சமயம் வெளிநாட்டில் சுற்றுப்பயணம் செய்துகொண்டிருந்த திரு. ராஜசேகர் தமது பயணத்தை ரத்து செய்துவிட்டு ஒரு வாரத்திற்கு முன் தாயகம் திரும்பினார்.’

    தீபா விரைவுடன் எழுந்து கட்டிலின் அடியில் மூலைக்கொன்றாக விழுந்துகிடந்த தன் ஸ்லிப்பர்களை கால்களில் மாட்டிக்கொண்டாள். கண்ணாடியின் முன் நின்று இலேசாக தலையை வாரிக்கொண்டு தன் அறைக் கதவைத் திறந்தாள்.

    ஹாலில் அவளது தாய் சுந்தரி கண்களில் நீர் பெருக சோபாவில் சாய்ந்திருந்தாள்.

    அவளது தந்தை ஜனார்த்தனன் சிந்தனை நோக்குடன் எதிரில் நின்று கொண்டிருந்தார்.

    மம்மி, ரியலி ஐயம் வெரி ஸாரி சுந்தரி ஒருமுறை அவளை நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் தலைகுனிந்தாள்.

    தீபா தந்தையைப் பார்த்தாள், ‘இப்போ அடுத்ததாக நீங்க என்ன செய்யப்போறீங்க?’ என்ற கேள்வி அவளது கண்களில் பார்வையாக நின்றது.

    ஜனார்த்தனன் மௌனமாக டீபாயின் மேல் இருந்த செய்திப் பேப்பரை மகளிடம் நீட்டினார்.

    தீபா, தாயின் அருகில் உட்கார்ந்து அவர் சுட்டிக்காட்டிய இடத்தைப் பார்த்தாள் அதில் இருந்ததைப் படிக்க ஆரம்பித்தாள்:

    ‘டியர் சுந்தரி,

    உறவை வெறுத்து ஒதுக்கினாலும் உரிமையை சுலபமாக உதற முடியாது. எங்கிருந்தாலும் வந்துவிடு, கசப்பான நினைவுகளை சுமந்து ஒதுங்கி இருப்பதில் பொருள் இல்லை இனிப் பயனும் இல்லை.

    அன்புத் தம்பி

    ராஜசேகர்.’

    தீபா ஏளனத்துடன் உதட்டைப் பிதுக்கினாள் இது வெறும் ஐ வாஷ் இல்லே, ஊரை ஏமாத்தப் போடும் வேஷமா இருக்கணும்.

    சுந்தரி பெண்ணைக் கோபத்துடன் பார்த்தான் ராஜாவை அப்படிச் சொல்லாதே தீபா அவன் மணிசேகர் சித்தப்பாவின் பிள்ளை. அப்படியெல்லாம் இன்னொருத்தருக்காக வேஷம் போடத் தெரியாதவன்.

    உனக்கு எப்படித் தெரியும்? நீ சந்திராலயாவைவிட்டு வெளியேறின சமயத்திலே உன் ராஜாவுக்கு எழு வயதுன்னு நீயே சொல்லி இருக்கே. இந்த இருபத்திரண்டு வருடங்களில் எவ்வளவோ மாறி இருக்கலாம் அவனுடைய குணங்கள்.

    ஜனார்த்தனன் தீபாவை அடக்கினார். தீபா!... இப்போ ராஜாவைப்பத்தி பிரச்சினை இல்லை. அம்மா அங்கே போகலாமா, வேண்டாமா? இதைப்பத்திதான் நாம் ஒரு முடிவுக்கு உடனடியாக வந்தாகணும்.

    தீபா ஓரக்கண்ணால் அம்மாவைப் பார்த்துக்கொண்டே பேசினாள். பாவம். என்ன இருந்தாலும் அம்மாவைப் பெற்றவர் அவர். உயிருடன்தான் அவரைப் பார்க்க முடியல்லே, கடைசிப் பயணத்திலேயாவது அம்மா கலந்துக்க வேண்டாமா? ஒரே பொண்ணு. சந்திராலயாவின் நேர் வாரிசு...

    சுந்தரி வேதனையுடன் பேசினாள். தீபா, அப்பாவும் பெண்ணுமாக நொந்த புண்ணில் வேலை செருகாதிங்க, இருபத்திரண்டு வருஷமா அவரை நான் பார்க்கல்லே. இப்போ அவர் போனப்புறம் நான் போனா, சொத்துக்காக உறவு கொண்டாடினாப் போல்தான் இருக்கும் அதனாலே நான் அங்கே போறதாக இல்லே.

    சுந்தரி, உன் காலம் முழுதும் இதை நினைச்சு நீ வேதனைப்படுவே. அந்த இடத்திலே நின்னுட்டு வந்துவிடு. யாரோடும் பேசாதே... சொத்து, கித்துனு யாராவது பேசினால் நான் பார்த்துக்கிறேன்.

    உண்மையாவே நான் அங்கே போகணும்னு நீங்க நினைச்சா நீங்களும் வாங்க... தீபாவும் வரட்டும் அந்த சந்திராலயாவைவிட்டு உங்களோடே கூடதான் வந்தேன். மறுபடியும் தனியாக அங்கே காலெடுத்து வைக்க மாட்டேன். அப்படிப் போவதாக இருந்தால் எங்கப்பா உயிருடன் இருந்த நாட்களில் போயிருப்பேனே.

    எங்க ரெண்டுபேருக்கும், சந்திராலயாவிலே என்ன வேலை? நீ மட்டும் போய்விட்டு உடனே திரும்பி விடு. அப்பன் சாவுக்குக்கூட உன்னை அனுப்பாமெ நிறுத்திட்டேன்னு, அந்த மானேஜர் துரைசாமியும், உன் தம்பியும் என்னைத்தான் பேசுவாங்க...

    நீங்க நினைக்கறது தப்பு டாடி... அம்மாவும் நீங்களும் காதலிக்கலேன்னா, அந்த ராஜாவுக்கு இத்தனை சொத்து வந்திருக்குமா? இப்பவும் நீங்க அம்மாவை அனுப்பினால், அவனுக்கு சொத்தைப்பற்றி கவலை வந்து பயப்படுவான்.

    தீபா, ராஜாவை நீ பார்த்ததுகூட இல்லே. அவனை ஏன் இப்படிப் பழிக்கிறே... சந்திராலயாவோ, எங்கப்பாவோ உன் விஷயமா எந்தக் கெடுதியும் செய்யலியே!

    ஏன் செய்யல்லே? என்னை உங்க ரெண்டுபேரோடே சந்தோஷமா இருக்கவிடாமல், என்னை ஹாஸ்டலில் தள்ளிட்டு, நீங்க ரெண்டுபேரும் ஊர் ஊரா சுத்தினது அவருக்குப் பயந்துதானேம்மா?

    அது அவருடைய கெட்ட எண்ணத்தினாலே இல்லேம்மா. நாங்களே செய்துகொண்ட காதல் கல்யாணத்துக்காக அவர் காலில் விழுந்து நாங்க மன்னிப்புக் கேட்கணும்னு அவர் எதிர்பார்த்தார். உங்கப்பாவும் சுயகௌரவத்துக்கு இழுக்கா நினைச்சு பிடிவாதமாக இருந்தார். அவர் என்னென்னவோ செய்து எங்களை பணிய வைக்கப் பார்த்தார். அப்பா பிடிவாதமாக ‘ஊரைவிட்டு ஓடினாலும் ஓடுவோம் மன்னிப்புக் கேட்கமாட்டோம்ன்’னு சந்திராலயாவைவிட்டு தொலைதூரத்திற்கு என்னைக் கொண்டு போனார்.

    உன் சித்தப்பா பிள்ளை அனுபவிக்கிறான். அவன்தான் கொடுத்து வைச்சவன்.

    தீபா, ராஜாவை அப்படிப் பேசாதே. அவன் என்ன செய்வான் பாவம்? என்று கூறிய ஜனார்த்தனன் மீண்டும் தொடர்ந்தார்.

    மணிசேகர் அவரது அண்ணனுக்குக்கூடத் தெரியாமல் அடிக்கடி எங்களை வந்து பார்ப்பார். அவருக்குயிரே உங்கம்மாதான்.

    சுந்தரி பெருமூச்சுடன் கூறினாள் சித்தப்பா அவ்வளவு சீக்கிரம் போனது என்னுடைய துரதிர்ஷ்டம்தான்.

    தீபா பரிகாசமாகக் கூறினாள். டாடி தன் அப்பாவை நினைச்சு அழுதால் நீங்க என்ன சொல்லுவிங்களோன்னு மம்மிக்கு பயம். அதனாலே தன் சித்தப்பாவை நினைச்சுண்டு அழற மாதிரி அழுகிறாள்.

    சுந்தரி எழுந்து வேகமாக

    Enjoying the preview?
    Page 1 of 1