Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

En Iniya Manthira Koley
En Iniya Manthira Koley
En Iniya Manthira Koley
Ebook185 pages1 hour

En Iniya Manthira Koley

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கீர்த்தி - அபர்ணா இருவரும் காதலர்கள். கீர்த்தியை விட்டு அபர்ணா பிரிந்து செல்ல நேரிடுகிறது. இதனால் அவன் தனிமைச் சிறையில் வாழ்கிறான். இதற்கிடையில் மந்த்ரா என்னும் பெண்ணை பெற்றோர்கள் கீர்த்திக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். திருமணத்திற்கு பிறகு கீர்த்தியின் வாழ்வில் நடந்த மாற்றம் என்ன? கீர்த்தி மந்த்ராவை புரிந்துகொண்டு வாழ்க்கை நடத்தினானா? இல்லையா? மந்திரக்கோலுக்கு இருக்கும் சக்தியானது மந்த்ராவின் சொல்லுக்கு இருந்ததா? அபர்ணா கீர்த்தியை விட்டுச் செல்ல காரணம் என்ன? வாசித்து அறிவோம்…

Languageதமிழ்
Release dateApr 9, 2022
ISBN6580132608251
En Iniya Manthira Koley

Read more from Kamala Sadagopan

Related to En Iniya Manthira Koley

Related ebooks

Reviews for En Iniya Manthira Koley

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    En Iniya Manthira Koley - Kamala Sadagopan

    https://www.pustaka.co.in

    என் இனிய மந்திரக்கோலே

    En Iniya Manthira Koley

    Author:

    கமலா சடகோபன்

    Kamala Sadagopan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kamala-sadakopan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    1

    அதோ... அம்மு...

    ஆபீஸிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த மந்த்ரா புன்னகை செய்தாள் அவள் வீட்டு வாசலில், படிக்கட்டுகளில் அவனது மாமா நாராயணனின் பெண் அம்மு உட்கார்ந்துகொண்டிருந்தாள். அவள் உட்கார்ந்திருந்த தோரணை மந்த்ராவிற்குச் சிரிப்பு வந்தது.

    அக்கா... நீ ஆபிஸிலிருந்து இன்னிக்கு ரொம்ப லேட்டா வரயே...

    இல்லேம்மா... தினம் வர டைமுக்குதான் கரெக்டா வந்திருக்கேன்..." குனிந்து அவளது கன்னத்தில் முத்தமிட்டாள்

    இல்லே, நீ லேட்தான்... எத்தனை நேரமா நான் வாசலில் உட்கார்ந்திருக்கேன் தெரியுமா?

    அடப்பாவமே! எதுக்குமா நீ இங்கே உட்காரணும்?

    எல்லாம் உனக்காகதான்... செல்லமாக சிணுங்கினாள்.

    நீ இங்கே உக்காரல்லேனா... வீடு அடையாளம் தெரியாமே... வேறே யார் வீட்டுக்காவது போயிடுவேன்னு உனக்கு பயமா?

    எப்படியும்தான் நீ இன்னொரு இடத்துக்குப் போகப் போறே. நேக்குதான் தெரியுமே!

    அம்மு பாட்டி, நீ புதுகதை எல்லாம் பேச ஆரம்பிச்சுட்டே. இனிமே டேஞ்சர்தான்...

    உன் கையைக் காட்டேன். திடீரென்று அம்மு அவளது கரத்தைப் பற்றி இழுத்தாள்,

    பேஷ்.. இது வேறேயா? மந்த்ரா தன் இடது கரத்தை நீட்டினாள்.

    ஐய்ய, ரெண்டு கையையுமே நீட்டுக்கா…

    மந்தரா புன்னகையுடன் மற்றொரு கரத்தையும் நீட்டினாள்.

    அக்கா உன் கை வெள்ளை வௌளேர்னு மெத்துனு எவ்வளவு அழகா இருக்கு?

    உன் கைகள் கூடதான்…

    ஆனா மருதாணியை அரைச்சு உன் கைக்குதானே இடணும்... அது செக்கசெவேல்னு பத்தினா... எவ்வளவு அழகா இருக்கும்?

    இப்ப ஏன் உனக்கு திடீர்னு மருதாணி மேலே ஆசைபோச்சு?

    கல்யாணம்னா மருதாணி இடமாட்டாளா?

    மந்தரா அதிர்ச்சி அடைந்தாள். இந்த ஏழு வயதுப் பெண்ணுக்கு மருதாணியையும் கல்யாணத்தையும் பற்றி யார் சொல்லி இருக்கக்கூடும்...?

    அம்மு, மருதாணி எப்போ வேணுமானாலும் இட்டுக்கலாம். கல்யாணம் வந்தா நிச்சயமா இடுவர்.

    உனக்கு கல்யாணம் இப்பவே நடக்கப் போறதாம்... உனக்கு மருதாணி இடப்போறா. அப்ப நானும் இட்டுக்கப்போறேன்

    பெரியவர்கள் ஏதோ பேசின சமயத்தில் இவள் அறை குறையாகப் புரிந்துகொண்டு சிறுபிள்ளைத் தனமாகப் பேசுகிறாள்.

    அப்படியானால்,

    தனக்குத் தெரியாமல் ஏதோ ஏற்பாடு இங்கே நடக்கிறது... அம்மா மாமாவுடன் சேர்ந்து இவளது கல்யாணத்திற்காக மறுபடியும் முயற்சி செய்ய ஆரம்பித்து விட்டாளா?

    அம்முகண்னு, உள்ளே வா...- மந்த்ரா கையைப் பற்றிக்கொண்டு உள்ளே நுழைந்தாள்.

    விஜயா சமையலறையிலிருந்து எட்டிப் பார்த்து புன்னகை செய்தாள்.

    கூடத்துத் தூணில் தலையை முட்டுக் கொடுத்து தடுத்துக்கொண்டிருந்த நாராயண மாமா மந்த்ராவைப் பார்த்ததும் நிமிர்ந்து உட்கார்ந்தார்.

    அம்மா அவளை அன்றுதான் பெற்றதைப்போல மந்த்ரா வாம்மா கண்ணு என்று வாயெல்லாம் பல்லாக சிரித்தாள்.

    மந்த்ரா தினமும் ஆபிசுக்குக் காலை எட்டுமணிக்குப் புறப்படுகிறாள். நங்கநல்லூரிலிருந்து எலெக்டிரிக் ட்ரெய்ன் பிடித்து நுங்கம்பாக்கம் ஸ்டேஷனில் இறங்க வேண்டும். அங்கிருந்து பஸ் பிடித்து நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையிலுள்ள இவளது ஆபீசுக்குப் போக வேண்டும். மறுபடியும் இதே மாதிரி திரும்பி வரவேண்டும். வீட்டுக்கு. இவள் களைப்புடன் திரும்பி வரும்போது அம்மா முகத்தைத் திருப்பிக் கொண்டு பெருமூச்சு விடுவாள். தினமும் வழக்கமாகவே நடக்கும் நிகழ்ச்சி இது.

    அந்தப் பெருமூச்சு இவளுக்காகப் பரிதாபப்பட்தனால் ஏற்படும் மூச்சு அல்ல. அந்தமட்டும் நல்லபடி வந்து சேர்ந்துவிட்டாளே என்று கவலையிலிருந்து விடுபட்ட நிம்மதிப் பெருமூச்சும் அல்ல,

    இவளுக்கென்று கல்யாண விஷயத்தில் ஒரு வழியும் செய்ய முடியவில்லையே என்ற கையாலாகாத பெருமூச்சுதான்.

    இன்று... இப்பொழுது ஒரு மாறுதலான உற்சாக வரவேற்பு ‘மந்தராக்கண்ணு’னு, குழைவான குரல் இதற்குக் காரணம் என்ன...?

    நாராயணன் பரிவு கலந்த குரலில் பேசினான். "மந்த்ரா, முதல்லே உள்ளே போய் ஏதாவது சாப்பிட்டு வா, அக்காவும் நானும் உன்கிட்டே கொஞ்சம் பேசணும்,

    மந்த்ரா ஹேண்ட்பாகை ஆணியில் மாட்டிவிட்டு பின்பக்கம் போனாள்.

    முகம் கழுவி வந்ததும், கண்ணாடி எதிரில் நின்றாள் அவள் சிந்தனை வேகமாக ஓடியது,

    ஏற்கெனவே அவளது கல்யாண முயற்சிகள் ஆறு தடவைகள் பெண் பார்க்கும் படலத்தோடு தோல்வி அடைந்தன.

    இவளை வந்தவர்களுக்குப் பிடிக்காததினால் தோல்வி அடைந்ததாக நிச்சயம் கூற முடியாது.

    இவளை மிகவும் பிடித்தது. இவளைவிட அதிகம் இவளது வேலையும் பிடித்திருந்தது. ஏனெனில் சென்னையிலேயே உயர்ந்த கம்பெனி ஒன்றில் ஸ்டெனோவில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள்.

    ஐந்த சவரன் நகையும், ஒன்னரை கிலோ வெள்ளி. இவள் கொண்டு வரும் சீர் என்பது தான் வந்தவர்களை முகம் சுளிக்க வைத்தது. நான்காவது பார்ட்டி சீருக்கு சம்மதித்தது. ஆனால் பையனுக்கு ஒரு ஸ்கூட்டர் வேண்டுமென்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்கள்,

    மந்த்ரா வெறுத்துப்போய் தனக்குக் கல்யாணமே வேண்டாம் என்றும், அந்த வீட்டில் இனிமேல் கல்யாணப் பேச்சே பேசக்கூடாது என்றும் மாமாவின் முன் அம்மாவிடம் கூறிவிட்டாள்.

    இன்று வரும்போதுகூட ட்ரெய்னில், அவள் தோழிகளிடையே பேச்சு வந்தது.

    இந்தக் காலத்திலே எந்த அப்பன் தன் பொன்ணுக்கு இருபத்தோரு வயசிலேயே கல்யாணம் செய்ய ரெடியாயிருக்கான். ஆட்டோ ரிக்‌ஷாவின் பின்னாலே பெண்ணுக்கு திருமண வயது இருபத்தொண்ணுனு எழுதி ‘வைத்திருக்கிறானே’ என்று எரிச்சலோடு கூறினாள்.

    அதற்கு பதிலாக இன்னொருத்தி அதே எரிச்சலுடன் கூறினாள். போடி பைத்தியம்... பெண்களுக்கு கல்யாண வயசு இப்படி அப்படினு முப்பதுக்கு மேலே ஏறிப் போகிறது. அந்த கவலையிலே இருபத்தோரு வயசுதான் கல்யாணத்துக்கு உரிய வயசுன்னு பெண்ணைப் பெற்றவர்களுக்கு ஆட்டோக்காரங்க நினைவுபடுத்தறாங்க... அவ்வளவுதான்.

    கூடி இருந்த இதர பிரயாணிகள் உட்பட அனைவரும் அவளது பேச்சிற்கு உரக்க சிரித்தனர்.

    கூடத்திலிருந்து நாராயணன் மந்தரா என்று உரக்க அழைத்தார். மந்த்ரா அவசரமாக ஸ்டிக்கர் பொட்டை நெற்றியில் அழுத்திக் கொண்டாள்.

    மந்த்ரா சமையலறைக்குள் நுழைந்தாள். ஒரு தட்டில் உப்புமாவும், சுடச்சுட காபியும் தயாராகக் காத்திருந்தன.

    மன்னி, என்ன ஆச்சரியம்? இன்னிக்கு காபிக்கு துணையாக ஒரு திடப்பொருளும் உப்புமா என்னும் பேருடன் வீற்றிருக்கிறது. ஏதாவது விசேஷமா?

    டிபன் செய்யும் வழக்கமில்லை என்பதை அவள் குத்திக் காட்டுவதை விஜயா புரிந்து கொண்டாள்.

    அதது... வேளை… காலம்னு வந்தா துணைகளும் தானா சேர்ந்திடும்... காபிக்குக்கூட துணை சேர்க்கக் கையாலாகாதவளாலா மாமாவும் நானும் இருக்கோம்...

    மந்த்ராவிற்கு விஜயா, மாமாவின் மனைவி என்பதால் மாமி உறவுதான். ஆனால் மாமி என்று கூறுவதால் அவ்வளவு நெருக்கமாகத் தோன்றவில்லை என்பதால் விஜயாவை மன்னி என்றே அவன் கூப்பிடுவான்.

    ஸாரி... மன்னி! சும்மா ஜோக்குக்காக சொன்னேன்..

    பரவாயில்லே... உண்மையைச் சொல்லிடறேன் நானும் மாமாவும் நாகலக்ஷ்மி மாமியோடே மைலாப்பூர் போனோம், மாமா லீவு போட வேண்டி இருந்தது அதனால் டிபனும் செய்ய வேண்டி இருந்தது...

    நாகலக்ஷ்மி மாமி யாரு... மைலாப்பூருக்கு எதுக்கு போனீங்க? அங்கே யார் இருக்கா?

    நான் தினம் அனுமார் கோவிலுக்குப் போறேன் இல்லியா? அங்கே இந்த மாமி எனக்குப் பரிச்சயம் ஆனார் ஒரு ஞாயிற்றுக்கிழமை நீ என்னோடே வந்தே... நான் உன்னை அந்த மாமிக்கு அறிமுகம் செய்து வைச்சேன் உனக்கு நினைவில்லியா?

    அந்த மாமியை விடு... மத்த கேள்விகளுக்கு பதிலைச் சொல்லு.

    இதோ பாரும்மா குழந்தே... இன்னும் பத்து ஸ்டெப்ஸ் கூடத்துக்கு நடந்துபோனா மெய்ன் மாட்டரே விவரமாத் தெரிஞ்சிடும்... கையை தட்டிலேயே அலம்பிட்டு நீ சீக்கிரம் எழுந்து போம்மா...

    ஹா… ராஜமரியாதைதான்... மந்த்ரா கூடத்திற்குச் சென்றாள்,

    மந்த்ரா, இங்கே வாம்மா, என் பக்கத்திலே வந்து உக்காரு…

    என்னம்மா, தரகர் சபாபதி ஐயர் மறுபடியும் தலை காட்டினாரா…?

    நாராயணா, நீயே விவரத்தைச் சொல்லு. இந்த இடக்குப் பேச்சும் கிண்டலும் எனக்குக் கைகால வெல வெலக்கச் செய்துடும் ராஜம் தம்பியினுடைய ஆதரவைத் தேடினாள்.

    மந்த்ரா… இதோ பாரும்மா... இந்த வரன் விஷயமே வேறே… தரகர் வந்தாரானு நீ கேட்டு நான் பதில் ஒவ்வொண்ணாச் சொல்ல இப்ப நேரமில்லே... இந்த வரன் தரகர் மூலம் வரல்லே... விஜயா ஃப்ரெண்ட் நாகலக்ஷ்மி மாமி மூலமா வந்த வரன். இந்த வரன் அந்த மாமிக்குப் பெரியப்பா பேரனாம்... அதாவது பிள்ளையின் அப்பா நடராஜன் இந்த மாமிக்குப் பெரியப்பா பிள்ளையாம்...

    ஆரம்பம் வேறமாதிரிதான் இருக்கு... இருந்தாலும் கல்யாணம் நிச்சயமாகும் நேரத்திலே எந்த சேஞ்சும் இருக்காம பழைய வரன்கள் மாதிரியே ஆகிவிடுமோ?

    அது உன் பதிலப் பொறுத்து இருக்கு... நீ ஏதாவது ஏடாகூடமாப் பேசினா... அப்புறம் எதுக்கு இப்பவே கூட இந்த கல்யாணம் நின்னு போகலாம்.

    மந்த்ரா, மாமாவை முழுக்கதான் பேசவிடேன், நீ சீர்செனத்தியைப் பத்தி பயப்படறதா இருந்தா, அந்த பயமே உனக்கு வேண்டாம். இந்த எட்டு சவரன் இரண்டு கிலோ வெள்ளிக்கு அவர்கள் சம்மதிச்சுட்டார்கள்.

    மந்த்திரா புருவத்தைத் தூக்கினாள். நம்ம ஸ்கேல் ஐந்து சவரனிலிருந்து எட்டு சவரனுக்கு எப்போ, எப்படி உயர்ந்தது வெள்ளியும் எடை கூடி இருக்கு…

    நாராயணன் சற்று கடுமையுடன் கூறினார். மந்த்ரா, என் பொறுமைக்கும் எல்லை உண்டு. அந்த மாமிகூடப் போய் விஜயாவும் நானும் அந்த நடராஜனிடம் பேசி முடிச்சுட்டோம்... கல்யாணம் செட்டில் ஆன மாதிரிதான்.

    அவள் திகைப்புடன் மாமாவைப் பார்த்தாள். வாட் டு யூ மீன்... என்னை யாருமே பெண் பார்க்க வரல்லே...

    நடுவிலே நிக்கற மாமி உன்னைப் பார்த்திருக்கா உன் போட்டோவை அவர்கள் பார்த்தார்கள்...

    மந்த்ரா, அதுமட்டும் இல்லேடி... கல்யாணம் ஸிம்பிள் டெம்பிள்னு உன் மாமனாரே சொல்லிட்டார்.

    Enjoying the preview?
    Page 1 of 1