Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Poo Magal
Poo Magal
Poo Magal
Ebook271 pages1 hour

Poo Magal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

அப்பா இறந்துவிட்டார் என்று சொல்லிதான் மகளை வளர்க்கிறாள் பிருந்தா. ஆனால் அப்பா உயிருடன் இருக்கிறார் என்று தெரியவரும்போது அம்மா ஏன் அப்படியொரு பொய் கூறினாள் என்று புரியாமல் அதற்கான காரணத்தைத் தேடும் மித்ரா அதைக் கண்டறிந்தாளா என்று தெரிந்து கொள்ள பூமகளை வாசியுங்கள். புஸ்தகாவில் மட்டுமே எக்ஸ்க்ளூஸிவாக வெளியாகும் நாவல் இது.
Languageதமிழ்
Release dateFeb 7, 2020
ISBN6580105704959
Poo Magal

Read more from Vidya Subramaniam

Related to Poo Magal

Related ebooks

Reviews for Poo Magal

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Poo Magal - Vidya Subramaniam

    http://www.pustaka.co.in

    பூமகள்

    Poo Magal

    Author:

    வித்யா சுப்ரமணியம்

    Vidya Subramaniam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vidya-subramaniam-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    1

    எந்த இடம் என்று தெரியவில்லை. ரயில் நின்று அரைமணிக்கு மேலாகிறது. ஜன்னல் கண்ணாடியை மறைத்திருந்த கர்ட்டனைத் தள்ளி வெளியில் பார்த்தாள் மித்ரா. கும்மிருட்டாக இருந்தது. எதற்கு இங்கு நின்றிருக்கிறது என்று தெரியவில்லை. சிக்னல் கிடைக்காமலா? இவ்வளவு நேரமாகவா? தலைமாட்டிலிருந்த கைப்பையில் வைத்திருந்த கைபேசியை எடுத்து மணி பார்த்தாள். மணி நள்ளிரவு ஒன்று நாற்பது. இரண்டாவது ஏசி பெட்டி என்பதால் அதிக ஆள் நடமாட்டமில்லை. எதிர் சீட்டில் மேலேயும் கீழேயும் ஒரு கணவன் மனைவி நல்ல உறக்கத்திலிருந்தார்கள். அவளது பெர்த்திற்கு மேல் பெர்த்தில் இருந்த மனிதரிடம் இருந்து நல்ல குறட்டை சப்தம். அவளிருந்த ‘பே’வின் கர்ட்டனை சற்றே தள்ளி வெளியில் எட்டிப் பார்த்தாள். எல்லோரும் தூங்கிக் கொண்டிருக்க, கைப்பையின் மீது போர்வையை வைத்து மூடி விட்டு எழுந்து கழிப்பறை நோக்கிச் சென்றாள். சில நிமிடங்களில் திரும்பி வந்தாள். ஏன் ரயில் நிக்குது? யாரோ யாரிடமோ கேட்பதும், தெரியலையே. என்ற பதிலும் காதில் விழுந்தது.

    மித்ரா தன் இருக்கையில் படுத்து போர்வையை மார்பு வரை இழுத்துப் போர்த்திக் கொண்டாள். கண்களை மூடி தூங்க முயன்றாலும் தூக்கம் வரவில்லை. எதிர்பாரா பயணம் இது. இரண்டு மாதம் முன்பு அலுவலகம் வந்ததும் வழக்கம் போல கணினி திறந்து மின்னஞ்சல்களை செக் செய்த போதுதான் அந்த மின்னஞ்சல் கண்ணில் பட்டது. வாத்சல்யன் என்ற பெயரிலிருந்து வந்திருந்தது.

    நான் உன்னை சந்திக்க விரும்புகிறேன். என் முகவரி கீழே.

    இப்படிக்கு அப்பா.

    அவள் திகைத்தாள். அப்பாவா? அவர் இறந்து விட்டார் என்றல்லவா சொன்னாள் அம்மா. எது உண்மை? எது பொய்? அம்மா சொன்னது பொய் எனில், ஏன் அப்படி சொன்னாள்? தன் அப்பா யார்? எப்படி இருப்பார்? அன்று முழுக்க ஆபீசில் வேலை ஓடவில்லை அவளுக்கு. அம்மாவிடம் போனில் கேட்கலாம். ஆனால் இது போனில் கேட்கும் விஷயமில்லை. அவள் முக்கியமான ஏதேனும் மீட்டிங்கில் கூட இருக்கக்கூடும். அது சரியாகாது. வீட்டிற்குச் சென்று எதுவுமே நடக்காதது போல பேசி, இரவு சிற்றுண்டி சாப்பிட்டு முடித்து படுக்கைக்குச் செல்லும் நேரத்தில் மெல்ல கேட்க வேண்டும். அம்மா என்ன சொல்கிறாள் என்பதைப் பொறுத்துதான் இந்த மெயில் நம்பக்கூடியதா அல்லது யாரேனும் அனுப்பிய ஸ்பாம் மெயிலா என்று தீர்மானிக்க முடியும்.

    அவள் அப்போதைக்கு தன் குழப்பங்களை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு பணியில் கவனம் செலுத்தினாள். ஏகப்பட்ட வேலைகள் இருந்தது. ஒவ்வொன்றாக முடித்துக் கொண்டிருக்கையில் மதிய உணவு நேரம் கடந்தது கூடத் தெரியவில்லை. இன்னுமா நீ சாப்டப் போகல என்று அனிதா நான்கைந்து முறை கேட்ட பிறகுதான் வேலைகளைத் தற்காலிகமாக நிறுத்தி விட்டு ரெஸ்ட்ரூம் சென்று கை கழுவி, ஒப்பனையை சரிசெய்து கொண்டு கேண்டீன் நோக்கி நடந்தாள். உணவு நேரம் முடிந்திருந்ததால் கேண்டீனில் கூட்டம் அதிகமில்லை. தினசரி உணவவை அனைவருக்கும் நிர்வாகம் அளித்து வருகிறது. அம்மாவுக்கும் அவள் பணிபுரியும் இடத்திலேயே சாப்பிடும் வசதி இருப்பதால் நித்தமும் காலை சிற்றுண்டி என்பது மிகவும் எளிமையாகவே இருக்கும். இரண்டு ரொட்டித் துண்டுகள், நான்கைந்து பழத்துண்டுகள், ஒரு கப் பால். சில நேரம் பழத்துண்டுகளுக்கு பதிலாக காய்கறிகளின் சாலட் இருக்கும். பெரும்பாலும் இரவுதான் வீட்டில் ஏதேனும் செய்வது வழக்கம். இரவு உணவு என்பதால் அதுவும் எளிமையாகத்தான் இருக்கும். சப்பாத்தி, ஏதேனும் சப்ஜி, பால், அல்லது இட்லி, தோசை கிச்சடி என்று இரவு உணவு விருப்பத்திற்கேற்ப மாறும். இருவரும் சேர்ந்துதான் செய்வார்கள். சாப்பிட்டுக் கொண்டே நிறைய பேசுவார்கள். நிறைய விஷயங்கள் பகிர்ந்து கொள்வார்கள். சில நாள் அப்பா பற்றி கூடக் கேட்டிருக்கிறாள் மித்ரா.

    அப்பா எப்டிம்மா இறந்தார்?

    மாரடைப்பு

    அப்பா போட்டோன்னு ஒண்ணுகூட இல்லையே வீட்டில். ஏம்மா?

    பார்த்தால் வருத்தம் வரும். அந்தக் குறை இல்லாம உன்னை வளர்க்கணும்னு நினைச்சேன். நானே அப்பா, நானே அம்மா. என் ரூபத்துலயே அவரையும் பாரு போதும்.

    "நா அப்டித்தான் நினைக்கறேன். இருந்தாலும் அவர் போட்டோவைக்கூட......

    கை கழுவலாமா?

    பேச்சைத் துண்டித்து எழுந்து விடுவாள் அம்மா.

    அப்போதெல்லாம் எதுவுமே தோன்றியதில்லை. இப்போது இந்த மின்னஞ்சல் பார்த்தபிறகு எல்லாவற்றையும் எதனோடோ தொடர்பு படுத்தி பார்க்கத் தோன்றுகிறது. ஏன் என்ற ஒரு கேள்வி மட்டுமே உள்ளுக்குள் சுற்றிச் சுற்றி வருகிறது.

    நினைவு தெரிந்ததிலிருந்து அவள் அம்மாவின் முகத்தை மட்டுமே பார்த்திருக்கிறாள். அம்மா ஒற்றை ஆளாக அவளை வளர்த்தாள். அம்மா பக்கத்து உறவுகள், அப்பா பக்கத்து உறவுகள் என்று யாரையும் அவளுக்குத் தெரியாது. அம்மாவுக்கு யாருமே இல்லையா? அல்லது இருந்தும் எல்லோரையும் அவள் ஒதுக்கி விட்டாளா என்ற கேள்வி உண்டு. அம்மாவிடமும் ஒரு முறை அதுபற்றி கேட்டிருக்கிறாள். அதற்கு அம்மா சொன்ன பதில், எனக்கு யாரும் இல்லை. அநாதை இல்லத்துல வளர்ந்தவ நான்.

    அப்டின்னா அப்பாவுக்கும் யாருமில்லையா?

    அப்பாவே இல்லைன்னு ஆனபிறகு உறவு கொண்டாட யார் விரும்புவாங்க? பிளீஸ் மித்ரா. இனி இதைப்பற்றி எல்லாம் பேசாதே. உனக்கு நான். எனக்கு நீ. உன்னை கஷ்டம் தெரியாம வளர்த்திருக்கேன். நல்லா படிக்க வெச்சிருக்கேன். நல்ல பையனா பார்த்து கட்டிக் கொடுக்க விரும்பறேன். அல்லது நல்லவனா பார்த்து நீ காதலிச்சாலும் ஆட்சேபணை இல்லை அதுவரை எதுவும் கேட்காம சந்தோஷமா இருக்கப்பாரு. என்னையும் சந்தோஷமா இருக்கவிடு அம்மா எவ்வித கடுகடுப்புமின்றி புன்னகையோடு சொல்லி அதற்கு முற்றுப்புள்ளி வைத்தபிறகு அவள் அப்பாவைப் பற்றி கேட்பதை நிறுத்தி விட்டாள்.

    அம்மா சொன்னது போல, அம்மா எப்படி எல்லாம் கஷ்டப்பட்டாள் என்று அவளுக்குத் தெரியாது. ஆனால் கஷ்டம் தெரியாமல் வளர்த்தாள் என்பது சத்தியம். எந்த உறவுகளும் இல்லாதவளுக்கு அம்மாதான் எல்லா உறவுமாக இருந்தாள். வெறும் பிஏ மட்டுமே படித்திருந்த அம்மா முதலில் ஒரு சாதாரண தனியார் நிறுவனத்தில்தான் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். அதற்குப் பிறகுதான் ஒரு பயிற்சி வகுப்பில் சேர்ந்தாள். மித்ரா இரண்டாம் வகுப்பு படிக்கும் போது அம்மா வடக்கே ஒரு பயிற்சி பெறப் போக வேண்டும் என்று இவளை தற்காலிகமாக பள்ளியின் ஹாஸ்டலில் சேர்த்தாள்.

    "மித்ரா...இங்க என்ன பண்ற? உன் மொபைல் போன் விடாம அடிச்சுக்கிட்டு இருக்கு.. யாருன்னு தெரியல. போய் யாருன்னு பாரு. அனிதாவின் குரல் பின்னால் கேட்டதும், மித்ரா, நினைவுகள் சட்டென அறுந்து போக, அவசரமாய் எழுந்து கை கழுவிக்கொண்டு தன் லிஃப்ட் நோக்கி நடந்தாள். ஏழாவது மாடிக்கு அது செல்லும் நேரம் யுகமாகத் தோன்றியது. இடைவிடாமல் அப்படி யார் போன் செய்திருப்பார்கள்? அம்மாவா? ஒருவேளை அவசர வேலை இருப்பதால் இரவு திரும்பி வருவதற்கு நேரமாகலாம் என்று சொல்ல அழைத்திருப்பாளோ? அப்படி அம்மா அழைப்பது வழக்கம்தான். எப்போதும் மொபைலை கையோடு எடுத்துக் கொண்டுதான் போவாள். இன்றைக்கு அந்த மின்னஞ்சல் ஏற்படுத்திய குழப்பத்தில் மொபைலை எடுத்துக் கொள்ளவும் மறந்திருந்தாள். என்றைக்கு மறக்கிறோமோ அன்றைக்குத்தான் கூடுதலாக அழைப்புகள் வரும்.

    மின்தூக்கி ஏழாவது மாடியில் நின்றது. விரைந்து நடந்து தன் கேபினுக்கு வந்து கைப்பையிலிருந்து மொபைலை எடுத்தாள். பன்னிரண்டு மிஸ்டு கால்கள். பெயரற்ற ஒரு புதிய எண்ணிலிருந்து வந்திருந்தது. அவள் அந்த எண்ணுடன் அவசரமாகத் தொடர்பு கொண்டாள். லேசில் தொடர்பு கிடைக்கவில்லை. நம்பர் பிசியாகவே இருந்தது. தொடர்ந்து முயற்சித்ததில் ஒரு முறை ரிங் போனது. யாரோ எடுத்தார்கள்.

    ஹலோ....இந்த நம்பர்லேர்ந்து எனக்கு மிஸ்டு கால் வந்திருந்தது. யாருங்க கூப்ட்டது?

    தெரியலையேம்மா.

    நீங்க யாரு? எந்த நம்பர் அது?

    இது கவர்ன்மென்ட் ஆபீஸ்மா. உங்களை யார் கூப்ட்டாங்கன்னு தெரியலையே" மறுமுனை சொல்லிவிட்டு தொடர்பைத் துண்டித்தது.

    அரசு அலுவலகமா? என்ன அலுவலகம்? எதற்கு அவளை அழைத்தார்கள்? ஒருவேளை அம்மா ஏதேனும் விசிட் போன சமயம் அங்கிருந்து அழைத்திருப்பாளோ?

    மித்ரா சட்டென அம்மாவின் மொபைல் நம்பரை எடுத்து அழுத்தினாள்.

    2

    தொலைபேசி அழைப்பு சென்று கொண்டே இருந்தது. ஒருவேளை சைலன்ட்டில் போட்டிருக்கிறாளா? நேரம் காலம் தெரியாமல் அழைக்கிறேனா? அதுசரி ஏதோ ஒரு நம்பரிலிருந்து வந்திருக்கும் அழைப்புதானே. தேவை என்றால் அவர்களே மீண்டும் அழைக்கட்டும். நான் எதற்கு பதறிக் கொண்டிருக்கிறேன்.

    மித்ரா இழுத்து மூச்சு விட்டபடி தன் இருக்கையில் அமர்ந்தாள். எதற்கு பன்னிரண்டு மிஸ்டுகால்? மீண்டும் குடைய ஆரம்பித்தது. வேலை ஓட மறுத்தது. .மீண்டும் போனை எடுத்து அந்த எண் எந்த அரசு அலுவலகத்தின் நம்பர் என்பதைக் கண்டு பிடித்தாள். பிறகு அந்த எண்ணிற்கு அழைத்தாள். சிறிது நேர தொடர் முயற்சிக்குப் பின் இணைப்பு கிடைத்தது. இம்முறை பேசியது ஒரு பெண் குரல். மித்ரா விஷயத்தைச் சொல்லி யார் அழைத்தது? எதற்காக அழைத்தது என்று கேட்டாள்.

    மேம் நீங்க பிருந்தா ஐஏஎஸ் அவங்களோட பெண்ணா?

    ஆமா. அம்மா அங்க வந்திருந்தாங்களா? அவங்கதான் அந்த நம்பர்லேர்ந்து கூப்ட்டாங்களா? சாரி நா சாப்ட போயிருந்தேன். அம்மா அங்கேர்ந்து கிளம்பிட்டாங்களா?

    "மேம் இன்னும் உங்களுக்கு யாரும் தகவல் சொல்லலையா? பிருந்தா மேடம் இங்க ஒரு ஆய்வுக்காக வந்திருந்தாங்க. வந்த இடத்துல திடீர்னு மயங்கி விழுந்துட்டாங்க. ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்காங்க.

    மித்ரா பதறினாள். எ...எந்த ஆஸ்பத்திரி? குரல் குழறக் கேட்டாள். எதிர்முனை ஆஸ்பத்திரி பெயரைக் கூறியதும் போனை வைத்துவிட்டு மேலதிகாரியின் அறை நோக்கி ஓடினாள். விஷயத்தைக் கூறி கிளம்ப அனுமதி கேட்டாள்.

    கிளம்பு மித்ரா. தனியா போய்டுவயா? இவ்ளோ பதட்டமா நீ எப்டி கார் ஒட்டுவ. யாரையாவது உன்கூட அழைச்சுக்கிட்டு போ.

    இல்ல சார் நா போய்டுவேன்

    இல்ல. வேணாம் இரு அவர் இன்டர்காம் எடுத்து யாரிடமோ பேசி, உடனே வரச்சொன்னார்.

    நா பத்ரியை அனுப்பறேன். அவன் உன் காரை ஒட்டுவான். உன்னைத் தனியா அனுப்ப மாட்டேன். உனக்கு என்ன உதவி வேணும்னாலும் அவன் செய்வான்.

    மித்ரா நன்றி சொல்லிவிட்டு மீண்டும் கேபினுக்கு வந்து அனிதாவிடம் மட்டும் விஷயத்தைச் சொல்லிவிட்டு கைப்பையை எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.

    மித்ரா ராத்திரி எவ்ளோ நாழியானாலும் எனக்கு தகவல் சொல்லு. என்ன உதவி வேணும்னாலும் கேளு. நா கவலையோட காத்திருப்பேன். அனிதா லிப்ட் வரை உடன் வந்தாள்.

    பத்ரி கார் அருகில் காத்திருந்தான். அவள் சாவியை நீட்டினாள்.

    பதற்றமில்லாம இரு மித்ரா. அம்மாக்கு ஒன்றும் ஆகியிருக்காது. ஓவர் ஒர்க் பிரஷர்ல மயங்கியிருப்பாங்க. சரியா சாப்டாமல் கூட மயங்கியிருக்கலாம்.

    நீ சொன்னபடி இருந்தா சந்தோஷம்தான் பத்ரி. அம்மாக்கு ஒண்ணும் இருக்கக்கூடாது.

    பத்ரி ஓட்டுனர் இருக்கையில் அமர, மித்ரா அவனருகில் அமர்ந்தாள். சாலையில் போக்குவரத்து நெருக்கடி அதிகமாக இருந்தது. அவள் மனசைப்போல கார் விரைந்து செல்லவில்லை. பத்ரி பார்த்து நிதானமாகவே ஓட்டினான். கண்ணாடிக்கு வெளியே தெரிந்த மனித முகங்களில் பல்வேறு ரஸங்கள். சிரித்த முகங்கள், விவாத முகங்கள், இறுகிய முகங்கள் கவலை முகங்கள், பதற்ற முகங்கள், ஒவ்வொருவரும் எதையோ தேடித்தான் நகர்கிறார்கள். அம்மாவுக்கு ஒன்றும் இருக்கக்கூடாது. சாதாரண பலஹீன மயக்கமாகவே இருக்கட்டும். ஒன்றுமில்லை நன்றாகி விட்டார். வீட்டுக்கு அழைத்துச் செல்லலாம் என்று டாக்டர் கூறிவிட்டால் தேவலை.

    மித்ரா தன் இஷ்ட தெய்வம் ஆஞ்சநேயரை மனசுக்குள் நினைத்து பிரார்த்தித்தாள். சின்ன வயதில் அம்மா ராமாயணம் சொல்லிதான் இரவில் அவளுக்கு சோறூட்டுவாள். ஒரு தொடர்கதை போல, ஒவ்வொருநாளும் சிறிது சிறிதாக சுவாரசியமாக சொல்லி ஊட்டுவாள். கடைசி உருண்டை அவள் வாய்க்குள் நுழைந்ததும் கதையை நிறுத்தி விடுவாள். அப்பறம் என்ன ஆச்சு என்று இவள் கேட்டால் சிரிப்பாள். அதை இப்பவே சொல்லிட்டா நாளைக்கு சாப்பாட்டுக்கு எதைத் தொட்டுக்கிட்டு சாப்டுவயாம்? இன்னைக்கு இது போதும் என்று, ஒரு நாள் தசரதர் கையில் பாயச பாத்திரத்தோடு நிறுத்துவாள். இன்னொரு நாள் தாடகைக்கு எதிரே ராம இலக்குவர்களை நிறுத்தி, ராமன் தாடகையைக் கொன்றானா இல்லையான்னு நாளைக்கும் நீ சமத்தா சாப்ட்டா சொல்றேன் சரியா? என்பாள். நாலு வயசில் ஆரம்பித்த இராமாயணத்தை அவள் முடிக்கும் போது மித்ராவுக்கு ஐந்து வயசு முடிந்திருந்தது. அதற்குப் பிறகு மகாபாரதம் ஆரம்பித்தது. ஒன்றுக்குள் ஒன்றாக அத்தனை கிளைக்கதைகள், நடுநடுவே குழந்தைத்தனமாக மித்ரா கேட்கும் கேள்விகளுக்கான சிறிய விவரங்கள் உட்பட அத்தனை சுவாரசியமாக கதை சொல்ல அம்மாவால் மட்டுமே முடியும். அதுவும் அனுமனின் வலிமையையும், ராமபக்தியும், பணிவும் கேட்க கேட்கத் திகட்டாது அவளுக்கு. அதனால்தானோ என்னமோ அனுமன் இஷ்ட தெய்வமானான். ஏன் ராமனைப் பிடிக்கலையா உனக்கு? என்பாள் அம்மா. அனுமனை வணங்கினால் ராமனை வணங்கினா மாதிரிதானே என்று மடக்குவாள் மித்ரா. ராமாயணம் கேட்டு அனுமனைப் பிடித்தாற் போல், மகா பாரதம் கேட்டு கிருஷ்ணனையும் பிடித்துப் போனது. படித்துத் தெரிந்து கொள்ளும் வயசு வந்த பிறகும்கூட, அம்மாவிடம் கதை கேட்கப் பிடிக்கும் அவளுக்கு. உனக்கு எத்தனை புத்தகங்கள் வாங்கித் தந்திருக்கேன். நீயே படி என்பாள் அம்மா. மத்த புத்தகமெல்லாம் நா படிச்சுக்கறேன். ஆனா நம்ம புராணங்களும் இதிகாசங்களும் மட்டும் நீ சொன்னால்தான் சுவாரசியம். அதனால் நீதான் சொல்லணும் என்று நச்சரிப்பாள், சிவபுராணம், பாகவதம், தேவி மகாத்மியம், விநாயகர் புராணம், கந்த புராணம் என்று அத்தனையும் அம்மா சொல்லித்தான் இவளுக்குத் தெரியும். இவளுக்கு சொல்வதற்காகவே அம்மா நிறைய படிப்பாள். எந்தக் கோவிலுக்குச் சென்றாலும் அந்த மூல விக்கிரகத்தைக் காணும்போது

    Enjoying the preview?
    Page 1 of 1