Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thodaamal Naan Malarvean
Thodaamal Naan Malarvean
Thodaamal Naan Malarvean
Ebook105 pages45 minutes

Thodaamal Naan Malarvean

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Vidhya Subramaniam born in 1957. She was introduced in Mangaiyar Malar through a story Mudhal Konal in 1982. She has written more than 100 short stories and novels. She has got lots of rewards in her 27 years of career. Rewards like Anandhachari Arakattalai Virudhu for her essay Thennang Kaatru, Tamilnadu government award for her Vanathil Oru Maan short stories, Bharat State Bank's first prize for her Aagayam Arugil Varum essays, Kovai Lilly Deivasigamani Virudhu for her Kanniley Anbirunthal short stories. Beyond the Frontier has her outstanding short stories which are translated to english. Anthology of Tamil Pulp Fiction also has her 2 short stories.
Languageதமிழ்
Release dateMay 1, 2020
ISBN6580105705355
Thodaamal Naan Malarvean

Read more from Vidya Subramaniam

Related to Thodaamal Naan Malarvean

Related ebooks

Reviews for Thodaamal Naan Malarvean

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thodaamal Naan Malarvean - Vidya Subramaniam

    http://www.pustaka.co.in

    தொடாமல் நான் மலர்வேன்

    Thodaamal Naan Malarvean

    Author:

    வித்யா சுப்ரமணியம்

    Vidya Subramaniam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vidya-subramaniam-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    1

    கையிலிருந்த லிஸ்ட்படி சூப்பர் மார்க்கெட்டில் அனைத்து பொருட்களையும் தள்ளுவண்டியில் நிரப்பிக் கொண்டு பில் போடுவதற்கு வந்தாள் வினயா.

    டோர் டெலிவரியா மேடம்?

    இல்ல. கார்ல வெச்சா போதும்.

    இரண்டாயிரத்தி முன்னூற்று எட்டு கௌண்டர் பெண் சொல்ல ஹேண்ட் பேக் திறந்து பணம் எடுத்துக் கொடுத்தாள்.

    மற்றொருவர் சாமான்களை பேக் செய்தார். சென்ட்பாட்டில் ஒன்றும் பாக்கெட்டில் போடப்பட, வினயா சட்டென்று அதை எடுத்தாள்.

    இது என்னோடதில்லை.

    உங்களுக்குத்தான் மேடம்.

    நா சென்ட் எடுக்கலம்மா. பில்லுல பாருங்க.

    இது தனி பில் மேடம்.

    நா வாங்கலன்றேன்.

    உங்ககிட்ட குடுத்துடச் சொல்லி பத்து நிமிஷம் முந்தி ஒருத்தர் பில் போட்டு வாங்கினார் மேடம்.

    யாரது...?

    எனக்குத் தெரியாது. உங்களுக்குத் தெரிஞ்சவர்னு நினைச்சேன்.

    இருந்தாலும் ஒருத்தர் பில் போட்டு காசு கொடுத்துட்டா யார்கிட்ட வேணா அந்த பொருளை என்ன ஏதுன்னு கேக்காம கொடுத்துடுவீங்களா? எனக்கிந்த சென்ட் வேண்டாம்.

    ரெண்டாயிரம் ரூபா விலையுள்ள சென்ட் மேடம்.

    அதுக்காக? எவனோ முன்ன பின்ன தெரியாதவன் வாங்கிக் கொடுத்தா தூக்கிட்டு போயிட முடியுமா?

    சாரி மேடம், என்னாலயும் ஒண்ணும் செய்ய முடியாது. பில் போட்ட கஸ்டமர் சொன்னபடி நா செய்தேன். என்கிட்ட எந்த தப்புமில்ல...

    அப்ப ஒண்ணு செய். இந்த சென்ட்டை நீயே எடுத்துக் கிட்டு போய் யூஸ் பண்ணு...

    வினயா அந்த உயர்தர வெளிநாட்டு சென்ட் பாட்டிலை அந்த பெண்ணின் முன்பு டொக்கென்று வைத்துவிட்டு நகர்ந்தாள். அவளுக்குப் பின்னால் அவள் வாங்கிய சாமான்கள் பைகள் காரில் கொண்டு வந்து வைக்கப்பட்டன.

    காரை ரிவர்ஸ் எடுத்து ஓட்ட ஆரம்பித்த சற்று நேரத்தில் செல்போன் சிணுங்கியது. ஹெட் போனை காதில் மாட்டிக் கொண்டு செல்லை ஆன் பண்ணி மடியில் வைத்துக் கொண்டு வண்டி ஓட்டியபடி ஹலோ என்றாள்.

    ஹாய் வினயா... என்ன இவ்ளோ கோபப்படற நீ? பரவால்ல கோவத்துலயும் ஸ்வீட்டார்ந்த. நீ வேணாம்னு சொன்னா தராம விட்ருவோமா என்ன? வீட்டுக்குப் போய் பாரும்மா. சென்ட் பாட்டில் உன் சாமான் கூடதான் இருக்கு

    ஹலோ... யாரு... யாரது மேன்? வினயா கோபத்தோடு கத்த, எதிர்முனை தொடர்பு ஒரு மெல்லிய சிரிப்புடன் துண்டிக்கப்பட்டது.

    ராஸ்கல்... வினயா எரிச்சலுடன் செல்லை அணைத்தவள் உடனே அந்த கால் எங்கிருந்து வந்தது என்று பார்த்தாள்.

    அந்த எண்ணிற்கு உடனே தொடர்பு கொண்டாள்.

    தெரியுமே... மறுபடியும் இங்க உடனே போன் வரும்னு தெரியும். பட் சாரிமா கண்ணா. இதை வெச்சு நீ என்னை கண்டுபிடிச்சுட முடியாது. இது பப்ளிக் பூத் நம்பர்.

    யார் நீ...? எதுக்காக எங்கிட்ட இப்டி வழியற? என்ன வேனும் உனக்கு?

    இருபத்தஞ்சு வயசுல, ஒரு படிச்ச, பிஸினஸ்ல லட்ச லட்சமா சம்பாதிக்கற இளைஞன் என்ன பண்ணுவான்? ஒரு பொண்ணுகிட்ட எதுக்கு பேசுவான்?

    லவ்வா...?

    அப்பா...! எவ்ளோ புத்திசாலி நீ!

    முட்டாள்...

    தேங்க்யூ

    என்ன தேங்க்யூ....? வெக்கமால்ல உனக்கு? தமிழ் சினிமா நிறைய பார்ப்பயோ? லுக் மேன். இது வாழ்க்கை. சினிமா இல்ல. டோன்ட் வேஸ்ட் யுவர் கோல்டன் டைம். முதலாவதா நா உன்னை மாதிரி முட்டாள் இல்ல. எனக்குன்னு நிறைய லட்சியங்கள் இருக்கு. சாதிக்கத் துடிக்கறவ. காதல்ங்கற வார்த்தையைப் பொறுத்தவரை நா ஒரு கருங்கல். ஸோ... இனிமே இந்த முட்டாள்தனத்தை பண்ண மாட்டன்னு நம்பறேன். நீ என் பையில வெச்ச உயர்தர சென்ட் நாளைக்கு என் வீட்டு வாசல்ல இருக்கற குப்பைத்தொட்டில இருக்கும். உன் காதலும் சென்ட்டும் உனக்கு வேணா உயர்ந்ததா இருக்கலாம். எனக்கு அது குப்பைதான் புரிஞ்சுதா?

    தப்பு வினயா, சில தமிழ் சினிமாக்கள் வேணா காதலை குப்பையாக்கியிருக்கலாம். அதை வெச்சு காதலை மதிப்பீடு செய்யாதே. ஒருவேளை நீ பார்க்கற படங்கள் மட்டமா இருக்கக்கூடும். நல்ல படங்கள் எதுவும் நீ பார்க்கறதில்லன்னு நினைக்கறேன். காதலை உன்னதமா சொல்ற எத்தனையோ படங்கள் மொழி வித்யாசமில்லாம இருக்கு. நல்ல படங்களை செலக்ட் பண்ணி பாரு. நல்ல காதலுக்கும் குப்பைக்கும் வித்யாசம் புரியும். காதல்னா கெட்டவார்த்தை, காதலிக்கிற வன் லட்சியத்துக்கு எதிர் திசைல போறவன்ங்கறது உன் முட்டாள்தனத்துக்கு சாம்பிள்ஸ். உன்னை உயரத்துல நிறுத்திக்கறதுக்காக காதலை குப்பைன்னு சொல்றது உன்னை இன்னும் முட்டாளா அடையாளம் காட்டும்ங்கறதை மறந்துடாதே. நா யாருன்னு தெரியணுமா? தாராளமா உன் முன்னாடி வர நா ரெடி. ஒரு சென்ட்பாட்டிலை உன் பார்ஸல்ல போட்டதையும், டெலிபோன்ல பேசறதையும் வெச்சு மட்டும் என்னை வேலையத்தவன், லட்சியமில்லாதவன்னு நினைச்சா ஐ ஆம் சாரி டியர்; உன்னைப் பார்த்து இரக்கப்பட மட்டும்தான் என்னால முடியும். ஸோ... நல்லா யோசி. என்னைப் பார்க்கணும்னு நீ நினைச்சாலே போதும். எனக்கு தெரிஞ்சுடும். அடுத்த க்ஷணம் உன் முன்னால நிப்பேன் சரியா?

    அவன் தொடர்பை துண்டிக்க, வினயா மலைத்துப்

    Enjoying the preview?
    Page 1 of 1