Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pala Naal Kanave!
Pala Naal Kanave!
Pala Naal Kanave!
Ebook292 pages4 hours

Pala Naal Kanave!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கண்ணாடி பாத்திரம் போல நட்பும், நம்பிக்கையும் ஒருமுறை உடைந்துபோனால் மீண்டும் ஒட்டாது.எத்தனை இடையூறுகள் வந்தபோதும் விஷால் எப்படி தன்னுடைய பலநாள் காதலை கைப்பிடித்தான் என்பதை சுவாரஸ்யமான நிகழ்வுகளுடன் “பலநாள் கனவே!” என்ற இந்த கதையில் காணலாம்.

Languageதமிழ்
Release dateJun 17, 2020
ISBN6580133705477
Pala Naal Kanave!

Read more from Rajeshwari Sivakumar

Related to Pala Naal Kanave!

Related ebooks

Reviews for Pala Naal Kanave!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pala Naal Kanave! - Rajeshwari Sivakumar

    http://www.pustaka.co.in

    பல நாள் கனவே!

    Pala Naal Kanave!

    Author:

    ராஜேஸ்வரி சிவகுமார்

    Rajeshwari Sivakumar

    For more books

    http://pustaka.co.in/home/author/rajeshwari-sivakumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    கனவு - 1

    கனவு - 2

    கனவு - 3

    கனவு - 4

    கனவு - 5

    கனவு - 6

    கனவு - 7

    கனவு - 8

    கனவு - 9

    கனவு - 10

    கனவு - 11

    கனவு - 12

    கனவு - 13

    கனவு - 14

    கனவு - 15

    கனவு - 16

    கனவு - 17

    கனவு - 18

    கனவு - 19

    கனவு - 20

    கனவு - 21

    கனவு - 22

    கனவு - 23

    கனவு - 1

    டார்லிங் காலிங்... என மின்னி டேபிளின் மேல் இருந்த போன் விஷாலின் கவனத்தை ஈர்த்தது. யார் இது... சுறுசுறுவென எழுந்த கோபத்தில் போனை இவன் அட்டென்ட் செய்ததும், ஹேய்! எரும! அறிவிருக்கா-டி குரங்கே? காலையில ஆறு மணியில இருந்து எதுக்கு-டி போனைப் பண்ணி என் உயிர வாங்கற? என்ற குயில் குரலில் இவன் திகைத்துப் போய் ஹலோ என்றதும் "எதிர்முனை இப்போது அமைதியாகி விட்டது.

    ஹலோ! யாருங்க நீங்க? என விஷால் கேட்டுக்கொண்டிருக்கும் போது, தன் அறையில் இருந்து வெளியே வந்த ஷாலினி இவன் கையில் தன் போனைப்பார்த்ததும் ஓடி வந்து அதை வாங்கினாள்.

    அதன் பிறகு அவள் போனில் எதையோ குசுகுசுவென சிரித்து-சிரித்து பேசிக்கொண்டிருக்க, இவன் அந்தக்குரலுக்கு சொந்தக்காரி, 'தன் தனுவா?' என்ற குறுகுறுப்பில் இருந்தான்.

    விஷாலகிருஷ்ணன்... சங்கர், அருணா தம்பதியரின் இரண்டாவது மகன். 'நாம் இருவர் நமக்கு இருவர்!' என்ற வாசகத்தை வாழ்க்கையில் கடைப்பிடித்தவர்கள் இந்த தம்பதியினர். இவர்களுக்கு விசாலாட்சி என்ற ஒரு மகளும் உண்டு. அவள் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடித்து, கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் வெளிநாட்டில் வசித்து வருகிறாள்.

    சங்கரும், அருணாவும் மத்திய, மாநில அரசாங்க வேலையில் இருப்பவர்கள். அவர்களின் மகன் விஷால்... ஒரு புகழ்பெற்ற தனியார் நிறுவனத்தில் வேலையில் இருக்கிறான்.

    காலைவேளையில் அவ்வீடு எப்போதும் சற்றுப் பரபரப்பாகவே இருக்கும். அருணாவைத்தவிர அவ்வீட்டில் இன்னும் இரண்டு பெண்கள் இருந்தாலும் அவர்களின் உதவி, இவருக்கு அவ்வளவு எளிதாகக் கிடைத்துவிடாது. அப்படிக்கிடைக்கவில்லையே... என இவரும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை.

    சங்கரின், அன்னை சரஸ்வதியும், அவரின் தங்கை மகள் ஷாலினியும் தான் அவ்விரு பெண்கள்.சிறுவயதிலேயே தாயை இழந்து, தாய்மாமனிடம் அடைக்கலாமானவள் தான் ஷாலினி.

    ஒருவரிடம் அடைக்கலமாய் இருக்கிறோம்... என்ற எண்ணமே அவளை சங்கரின் குடும்பத்தோடு இயல்பாக இருக்கவிடவில்லை. அந்த வீட்டில் பிறந்தவர்களுக்கு கிடைத்த எல்லா சலுகைகளும் சிறுவயதிலிருந்தே அவளுக்கும் கிடைத்தது. அதெல்லாம்... உரிமையில் கிடைத்ததாக எண்ணாமல் அனுதாபத்தால் கிடைத்ததாக நினைத்த அவளின் எண்ணம் தான் அவளுக்கு விரோதியாகிப் போனது.

    சரஸ்வதி அம்மாவுக்கு, மகனும் மருமகளும் இந்த வயதிலும் அவரின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அவருக்கு யாரிடமும் எந்தக்குறையுமில்லை. மகனின் மக்களை கவனிக்க, அரவணைக்க அவர்களுக்கு பெற்றோர் இருப்பதால், தன் அன்பு மொத்தத்தையும் தன் மகள் வழிப் பேத்திக்கே கொடுத்து, அவளை கெடுத்து வைத்ததோடல்லாமல், மகனின் மக்களிடம் அவர் அறியாமலே விலகியும் போனார்.

    மகனும் மருமகளும் தன் பேச்சை இதுவரை மீறாததால், அந்த வீட்டின் மொத்த அதிகாரமும் தன்னிடமிருப்பதாக அவர் எண்ணிக்கொண்டிருந்தார். 'நம் உடனிருப்பவர்கள் அனுமதித்தால் மட்டுமே அதிகாரம் நம்முடன் இருக்கும்!' என்பதை அதிகமானவர்கள் மறந்துவிடுவதால் தான், நிறைய அனர்த்தங்கள் நடந்து விடுகின்றன.

    தன் அதிகாரம் பேரனுக்கு மனைவி வந்தால் போய்விடக்கூடும் என்ற பயம் அவருக்கு எப்போதும் இருந்ததால், அப்படி வருபவள் தனக்கு வேண்டியவளான, தன் பேத்தியாக இருப்பது நல்லது என்ற எண்ணத்தில் உறுதியாக இருந்தார்.

    சங்கருக்கு, தாயையும் தங்கை மகளையும் காக்கும் பொறுப்பு இருந்தாலும், அவரின் மனைவி மக்களுக்கு செய்யவேண்டிய கடமைகளிலும், யாருக்கு தன்னிடம் 'முதல் உரிமை' என்பதிலும் மிகத்தெளிவாக இருந்தார்.அதை அவரின் மனைவியும் நன்றாகவே அறிந்திருந்தார்.அதனால் குடும்பத்தில் பெரிய பிரச்சனைகள் இதுவரை வந்ததில்லை.

    அலுவலகத்திற்கு செல்லும் அவசரத்தில் அங்கும் இங்கும் சமையலறையில் ஓடிக்கொண்டிருந்த அன்னையிடம் சென்ற விஷால், அம்மா! காலையில இப்படி டென்ஷனா வேலை செய்யாதீங்கன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்? சமைக்க ஒரு ஆளைப் போடுங்கன்னு சொன்னா கேட்கவே மாட்டேங்கறீங்க என்று குறைப்பட்டான்.

    அவனுக்கு பதிலாய் ஒரு புன்னகையை சிந்திய அருணா, ஒன்னும் பெரிய வேலை இல்லை விஷால். இதோ முடிச்சிட்டேன்.நீ போய் அப்பாக்கு ஒரு குரல் கொடுத்துட்டு டைனிங் டேபிள்ல உட்கார். நான் இதெல்லாம் அங்க கொண்டு வந்துடறேன். என்றார்.

    அப்போதும் அமைதியாகாத விஷால், ஷாலினியை நீங்க துணைக்கு கூப்பிட்டுக்கலாம்ல-மா. பாட்டிக்கு தான் வயசாயிடுச்சு. அவங்களால முன்னைப்போல இப்ப வேலை செய்ய முடியாது. இவளுக்கு என்னவாம்? இவ வந்து உங்களுக்கு உதவலாம் தானே! என ஆதங்கப்பட்டான்.

    அதற்கு வாயே திறக்காது அருணா தன் போக்கில் தன் வேலையை கவனிக்க, உங்களை திருத்த முடியாது! என எரிச்சலாய் சொல்லி அங்கிருந்த தங்களின் டிபன் பாக்ஸ்களை எடுத்துக்கொண்டு வெளியே வந்து அவரவர் பைகளில் அதை வைத்தான்.

    அந்த வீட்டில் இது தினமும் நடக்கும் சம்பவம்தான். சரஸ்வதி அம்மா சில ஆண்டுகளுக்கு முன்புவரை சமையல் வேலையை கவனித்துக் கொண்டிருந்தார். மற்ற வெளி வேலைகளை செய்ய ஆள் இருந்ததால், அப்போதெல்லாம் அருணா மாமியாருக்கு எடுபிடி வேலை மட்டுமே செய்து வந்ததால் அலுவலகத்திற்கு செல்ல அவசரப்பட தேவையில்லாமல், நிதானமாக கிளம்ப முடிந்தது.

    ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சரஸ்வதி கீழே விழுந்து, இடுப்பில் ஒரு அறுவை சிகிச்சை செய்ததால், அவரின் வேலைகளை அவரே செய்யமுடிந்தாலும், இப்போதெல்லாம் அவரால் சிறிது நேரத்திற்கு மேல் தொடர்ந்து நிற்க முடியாமல் போய் விட்டது.

    அதனால் ஐந்து பேருக்கும் சமைக்கும் பொறுப்பு மொத்தமும் அருணாவின் தலையில் விடிந்தது. அதிலும் நான்கு பேர் காலையில் அலுவலகம் செல்ல வேண்டியவர்களாய் இருப்பதால் அந்த நேர டென்ஷன் இன்னும் அதிகமாய் போனது.

    கணவரிடமும் மகனிடமும் இருந்து உதவிகள் கிடைப்பதால் அவரால் அதை சமாளிக்க முடிந்தது. வளர்ந்து நிற்கும் நாத்தனார் மகளிடமிருந்து உதவி கிடைத்தால் எவ்வளவோ நன்றாகத்தான் இருக்கும். ஆனால் இவர் அவளை மகள் போல் நினைத்தாலும், அவளும் அப்படி நினைத்தால் தானே உறவில் சுமூகம் ஏற்பட முடியும்?

    காலை உணவு முடித்து அவரவர் பொருட்களை எடுத்துக்கொண்டு அலுவலகத்திற்கு பயணப்பட ஆயத்தமாகிக்கொண்டிருந்த வேளையில் ஷாலினியின் போன் ஒலித்தது.

    அதில், ஸ்ரீ குட்டி ப்ளீஸ்... ஒரு ஃபைவ் மினிட்ஸ் மேல வாயேன். நான் உன்கிட்ட ஒன்னை காட்டனும்.ப்ளீஸ்... மேல வாப்பா! என கெஞ்சிக் கொண்டிருப்பதைக் கேட்டதும் நின்ற இடத்திலேயே ஆல்ட்டாகி அவளின் சம்பாஷனையை கவனிக்க தொடங்கினான் விஷால்.

    அரக்க பரக்க ஓடிக்கொண்டிருந்த மகன் திடீரென அப்படியே நிற்கவும் அவனைக் கவனித்த அருணா, அவனின் கவனம் போகுமிடத்தைப் பார்த்து நமுட்டு சிரிப்புடன், விஷால்... உனக்கு டைம் ஆகலையா? என விஷமாமாய் கேட்டார்.

    அன்னை தன்னைக் கண்டுக்கொண்டதை அறிந்தவன் ஒரு அசட்டு சிரிப்புடன், இல்லம்மா... இன்னைக்கு நான் கொஞ்சம் லேட்டா போகலாம். ஒன்னும் அவசரமில்லை என்றான்.

    அவனின் பதிலில் வந்தப் புன்னகையோடு திரும்பியவரை அழைப்புமணி அழைத்தது. அவருக்கு முன் அந்த அழைப்பை ஏற்று கதவை திறந்த ஷாலினி, வாடி! என்னோட ரூமுக்கு வாயேன். உன்கிட்ட நான் பண்ணதை காட்டறேன் என சொல்லிக்கொண்டே, உள்ளே வந்தவளின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு சென்றாள்.

    கையை, இழுத்தவளிடமிருந்து அதை விடுவித்துக்கொண்ட ஸ்ரீ என்றழைக்கப்பட்ட தன்யஸ்ரீ, ஹலோ ஆன்ட்டி, எப்படி இருக்கீங்க? என அருணாவைப் பார்த்து முகம் மலர்ந்த சிரிப்புடன் கேட்டாள்.

    அதே புன்னகையை தன் இதழிலும் தேக்கி, நல்லா இருக்கேன்-டா. அம்மா கிளம்பிட்டாளா என பதில் கேள்விக் கேட்டார் அருணா.

    அதற்கு உரிய பதிலையும், அப்போது அங்கே வந்த சங்கரிடம் இரண்டு வார்த்தைகளையும், சரஸ்வதி பாட்டியிடம் நலம் விசாரித்தலையும் முடித்து, தன்னை அங்கே விட்டு முதலில் தனதறைக்கு சென்ற ஷாலினியை தொடர அடுத்த அடி வைத்தவளை, விஷால் முன் வந்து நின்று தடுத்தான்.

    அவன் அப்படி வந்து நின்றதை யதார்த்தமாக எடுத்துக்கொண்ட தன்யஸ்ரீ, அவனை பார்த்து ஒரு மெல்லிய புன்னகையை சிந்தி, அவனை சுற்றிக்கொண்டு தோழியிடம் சென்றாள்.

    அவளின், மூன்றாம் மனிதரிடம் நாம் செய்யும் சாதாரண புன்னகையைக் கண்டவனோ... கடுப்பானான். அதற்கு மேல் இப்போதைக்கு அவனால் வேறொன்றும் செய்யமுடியாததால் அதே கடுப்புடனே அங்கிருந்து சென்றான்.

    அருணாவும் தன்ய ஸ்ரீயின் அம்மா, வனஜாவும் ஒரே அலுவலகத்தில் பணிப் புரிபவர்கள். வனஜா வயதிலும், பணியிலும் அருணாவிற்கு இளையவர். இவர்கள் இருவருக்கும் தோழமையை தாண்டி ஒரு நெருக்கம் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.

    அதே நெருக்கம் ஷாலினிக்கும் ஸ்ரீக்கும் இருக்கிறது. ஸ்ரீயின் வீடு இவர்களின் வீட்டிற்கு அடுத்த தெருவில் உள்ளதால், சிறு வயதிலிருந்தே இருவரும் ஒன்றாக பள்ளி, காலேஜ், வேலை... என சேர்ந்தே சென்று வந்துக்கொண்டிருந்தனர். ஷாலினி பிறரிடம் எப்படி நடந்துக்கொண்டாலும் ஸ்ரீயிடம் நல்ல நட்புடனே பழகி வந்தாள்.

    தான் அறைக்கு வந்து பத்து நிமிடமாகிய பிறகே அங்கு வந்த ஸ்ரீயிடம், நான் தானே உன்னை மேல வரச்சொன்னது. நீ என்பின்னாடியே வராம, அங்க என்னடி கதை பேசிட்டு வர? நேற்று நான் ஆபீஸில் முடிக்காம விட்ட வேலையை, நைட் தூங்காம உக்காந்து முடிச்சேன். அதை உன்கிட்ட காட்டி கரைக்ட்டான்னு கேட்க தான் காலையில இருந்து தொல்லை பண்ணி உன்னை இங்க வரவச்சேன். நீ என்னடான்னா என்னோட அவசரம் புரியாம ஆடி அசைஞ்சிட்டு எல்லோரையும் குசலம் விசாரிச்சிட்டு வர! எனப் பொரிந்தாள்.

    அவள் சொன்ன வேலையைக் கவனித்துக்கொண்டே ஸ்ரீ, உன் பின்னாடியே எப்படி நான் வந்துட முடியும்? அங்க இருக்கறவங்ககிட்ட பேசாம வரது தப்பில்லையா ஷாலு? என்றாள்.

    என்னத்தப்பு! அவங்களா உன்னை வீட்டிற்கு வான்னு கூப்பிட்டாங்க? அப்புறம் ஏன் நீ அவங்ககிட்ட பேசிட்டு நிற்கனும்! வந்தமா...வந்த வேலையை பார்த்தோமான்னு இல்லாம இப்படி எல்லோர்கிட்டயும் 'நல்லவள் பட்டம்' வாங்க நீ பண்ற சில விஷயங்கள் தான் ஸ்ரீ எனக்கு உன்கிட்ட பிடிக்காதது என்ற ஷாலுவை செய்துக்கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு தீர்க்கமாய் பார்த்த ஸ்ரீ,

    நல்ல பெயரை கண்ணுல பார்க்கிற எல்லோர்கிட்டயும் வாங்கனுங்கறது என்னோட 'லைஃப் ஆம்பிஷன்' கிடையாது ஷாலு. நான் எப்போ யார்கிட்ட தேவையில்லாம பேசி நீ பார்த்திருக்க? அதுக்காக பெரியவங்களை மதிக்காம நடக்கறது எல்லாம் என்னால முடியாது.

    நான் இப்படிதான்னு எத்தனை தடவை உன்கிட்ட சொல்லிட்டேன்.நீ திரும்ப திரும்ப என்னைபத்தி இப்படியே சொல்லிட்டு இருந்தா... எனக்கு பயங்கரமா உன்மேல கோபம்தான் வருது. உன் பேச்சைக் கேட்டேல்லாம் என்னால என்னை மாத்திக்க முடியாது. என அழுத்தமாக சொன்னாள்.

    'வயதில் பெரியவர்களை மதிக்கவேண்டும்!' தன்ய ஸ்ரீக்கு அவளன்னை சொல்லிக்கொடுத்த பழக்கம். அவளின் இந்த பழக்கம் ஷாலினிக்கு தேவையில்லாதவர்களிடம் இவள் தேவையில்லாமல் வழிவதைப்போல தோன்றியது.

    'அவரவர் எண்ணங்கள் தான் அவரவருக்கு மதிப்பை பெற்றுத்தருகின்றன!' என்பதை நாம் அடிக்கடி மறந்துவிடுகிறோம்.... அதுதான் நம் பிரச்சனைகளுக்கு காரணம்!

    வந்த வேலையைப் பார்த்துக்கொண்டே, ஷாலு நாளைல இருந்து எல்லோரும் 'கொலு' வைக்க ஆரம்பிச்சுடுவாங்க.எங்க வீட்டிலையும் நாளைக்கே ஸ்டார்ட் பண்ணுவாங்க. இங்க உங்க வீட்டில் எப்போ ஆரம்பிக்கபோறீங்க? எனக்கேட்டாள்.

    என்னைக்கேட்டா எனக்கென்ன தெரியும்? மாமியை தான் கேட்கனும்!

    ஏன்டீ எரும! உங்க வீட்டுல எப்போ என்ன நடக்குதுன்னு கூட தெரிஞ்சிக்காம அப்படி என்ன பண்ணிட்டிருக்க நீ?

    என்னது! என்னோட வீடா? இது என்னோட மாமா வீடு எரும! இதைப்போய் என்னோட வீடுன்னு சொல்லிட்டிருக்க! எனக்கு கல்யாணம் ஆகி எனக்கே எனக்குன்னு தனியா ஒரு வீடு வரும் பாரு, அதுதான் என்னோட வீடு! என திட்டமாய் சொன்னவளை கோபமாகப் பார்த்தாள் ஸ்ரீ.

    ஏன்டி இப்படி இருக்கன்னு? என்னை எப்ப பார்த்தாலும் கேட்பியே... இப்ப நான் கேட்கறேன், நீ ஏன் ஷாலு இப்படி இருக்க? உனக்கு என்னக் குறை இந்த வீட்டுல? ஆன்ட்டி, அங்கிள் எல்லாம் உன்கிட்ட எப்படி பழகறாங்கன்னு ரொம்ப நாளா நான் பார்த்துகிட்டு தான் இருக்கேன்.அப்புறம் ஏன் நீ இப்படி பேசற? என சலிப்புடன் இவள் கேட்டதும்,

    அவங்க எல்லாம் உண்மையா என்கிட்ட அன்பா இருக்காங்கன்னு நீ நினைக்கிறியா? எல்லாம் வேஷம்! என் பாட்டிக்கு பயந்துகிட்டு வெளி வேஷம் போடறாங்க ஸ்ரீ. அதெல்லாம் உனக்கு புரியாது.நீ ஒரு பச்சமண்ணு! என ஷாலு சொன்னாள்.

    'அவங்க ஏன் வெளி வேஷம் போடனும்? அங்கிள் வேணும்னா அவங்க அம்மாவுக்கு பயப்படனும்.கைநிறைய சம்பாதிக்கும், வேலைக்கு போகும் ஆன்ட்டி ஏன் இந்த வயதிலும் மாமியாருக்கு பயப்படனும்? அவங்க நினைத்திருந்தா எப்போதோ இவளையும், இவ பாட்டியையும் வீட்டிலிருந்து வெளியேற்றியிருக்க முடிந்திருக்காதா, என்ன?'

    'அப்படி இருந்தும் அவங்க அதை செய்யாம, மாமியார் என்ற உறவுக்கும், அவரின் வயதுக்கும் மரியாதை கொடுப்பதை இவ, அவங்க பாட்டிக்கு பயப்படறதா நினைச்சிகிட்டிருந்தா, இவ அறிவை எப்படி பாராட்டறது! நியாயமா பார்த்தா பாட்டி தான், தன் பேத்தியை அவங்க நல்லாப் பாத்துக்கனும்னு, அவங்க கிட்ட பயந்துட்டு இருக்கனும். இதை சொன்னா... இந்த எருமைக்கு புரியவா போகுது!' என நினைத்த ஸ்ரீ, இனி இவளிடம் பேசி ஒன்றும் ஆவதற்கில்லை என்பதை புரிந்துக்கொண்டு தன் வேலையை முடித்து அவளுடன் கிளம்பி சென்றாள்.

    அவரவர் எண்ணம் போல அவர்களின் பார்வையும் இருக்கிறது. தர்மனுக்கு கண்ணில்பட்டவர்கள் எல்லாம் நல்லவர்களாக தெரிய... துரியோதனனுக்கு எல்லோரும் அயோக்கியர்களாய் தெரிந்தார்களாம்.இதில் குற்றம் யாரிடம்? பார்ப்பவர்களிடமா...? பார்க்கப்படுபவர்களிடமா!

    கனவு - 2

    நவராத்திரி கொண்டாட்டங்கள் கலைக்கட்டத் தொடங்கின. அருணா மற்றும் வனஜா வீட்டில் ஒவ்வொரு வருடமும் 'கொலு' வைப்பது வழக்கம். இந்த வருடமும் அவர்களின் வீட்டில் அவ்விசேஷம் தொடங்கியிருந்தது. தன்யஸ்ரீயின் வீட்டு கொலுவிற்கு ஷாலுவை, தன்னுடன் அழைத்துப்போக அருணா நினைக்க, அவள் வேறொரு நாள் அங்கே செல்லப் போவதாக சொல்லி, அவருடன் செல்ல மறுத்து விட்டாள்.

    அதனால் இவர்மட்டும் வனஜாவின் வீட்டிற்கு சென்று அன்றைய பூஜையில் கலந்துக்கொண்டு, அவர்களை அடுத்தநாள் குடும்பத்தோடு தங்களின் வீட்டிற்கு அழைத்திருந்தார். அந்த அழைப்பை ஏற்று வனஜாவும் தன்யஸ்ரீயும் மறுநாள் அருணாவின் வீட்டிற்கு வந்திருந்தனர்.

    தங்களின் வீட்டுப்பெண் ஷாலினி.விருந்தாளியைப்போல நின்றுக் கொண்டிருக்க, வந்தவள் வீட்டாளாய் வேலை செய்வதை அருணாவும் அவர் கணவரும் கவனித்துக்கொண்டு இருந்தனர்.

    ஸ்ரீ வேலை செய்கிறாள் என்றால், 'அன்றைய மொத்த வேலைகளையும் அவள் தலையில் போட்டுக்கொண்டாள்!' என்பது அதன் அர்த்தமில்லை. அவ்வப்போது அவரவரின் தேவைக்கேற்ப கொலுவிற்கு வருபவர்களுக்கு தண்ணீர், காபி, குளிர்பானம்... போன்றவற்றை கொடுப்பது, படையலுக்கு வேண்டியதை சமையலறையிலிருந்து கொண்டுவந்து அருணாவிடம் தருவது, வந்தவர்களுக்கு கொடுக்கவேண்டிய பரிசுப்பொருட்களை கவரில் போடுவது, தாம்பூலம் தாயர்படுத்துவது... இப்படி போன்ற சிறுசிறு வேலைகளை தான் அவள் செய்தது.அதுவே அருணாவின் மனதை நிறைத்து விட்டது.

    தாய் இப்படி ஸ்ரீயின் பொறுப்பான நடவடிக்கைகளில் மயங்கிப்போனார் என்றால், மகனோ அவளைப் பார்த்ததுமே மயங்கிப் போய் நின்றான்.அவளின் வருகை வருடாவருடம் நடப்பது தான்! ஆனால் இந்த வருடம் அவனுக்கு ஏன் ஸ்பெஷல் என்றால்... அவனின் 'தனு' அன்றுப் புடவைக் கட்டியிருந்தாள்.

    தன் மனதின் ஆசையை அவன் தன் பெற்றோரிடம் ஏற்கனவே சொல்லியிருந்தாலும், அதை இதுவரை அவன் ஒரு பார்வையில் கூட மற்றவர் அறியவிட்டதில்லை. இவ்வளவு ஏன்... சம்மந்தப்பட்டவள் கூட அறிநத்தில்லை! அவ்வளவு கவனமாக தான் இதுவரை அவனும் நடந்து வந்திருந்தான்.ஆனால் இன்று அவன் கண்கள் கட்டுப்பாட்டைமீறி அவனை காட்டிக்கொடுத்துவிட்டது.அதுவும் யாரிடம்? அவனின் பாட்டியிடம்!

    ஸ்ரீயை தன் மருமகள் ஆசையாகப் பார்பதும், அதன்பிறகு தன் மகனிடம் கண்ணில் ஏதோ சொல்வதுமாக இருப்பதை அதிர்ச்சியாய் பார்த்துக் கொண்டிருந்த சரஸ்வதி, தன் பேரனின் பார்வையும் ஸ்ரீயை தொடர்வதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். தன் எண்ணத்தை இப்போது சொல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது என நினைத்த அவர் வந்தவர்களெல்லாம் கிளம்ப காத்துக்கொண்டிருந்தார்.

    அனைவரும் கிளம்பியதும் வனஜாவும்

    Enjoying the preview?
    Page 1 of 1