Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanniley Anbirunthal
Kanniley Anbirunthal
Kanniley Anbirunthal
Ebook281 pages3 hours

Kanniley Anbirunthal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அன்பு என்னும் உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. மனிதநேயம், இரக்கம், பாசம் ஆகியவற்றை குறிக்கும் நல்லொழுக்கமே அன்பு எனப்படுகிறது. அத்தகைய சுயநலமற்ற கருணையினை மனிதர்கள் எவ்வாறு பல கோணங்களில் வெளிப்படுத்துகின்றனர் என்பது பற்றிய தொகுப்பே இச்சிறுகதைகள் ஆகும். வாருங்கள் வாசித்து அறிந்துகொள்வோம் அன்பின் பரிமாற்றங்களை.

Languageதமிழ்
Release dateMay 8, 2023
ISBN6580105707315
Kanniley Anbirunthal

Read more from Vidya Subramaniam

Related to Kanniley Anbirunthal

Related ebooks

Reviews for Kanniley Anbirunthal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanniley Anbirunthal - Vidya Subramaniam

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கண்ணிலே அன்பிருந்தால்

    (சிறுகதைகள்)

    Kanniley Anbirunthal

    (Sirukathaigal)

    Author:

    வித்யா சுப்ரமணியம்

    Vidya Subramaniam

    For more books

    https://www.pustaka.co.in/home/author/vidya-subramaniam-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    இது விமர்சனமல்ல...

    அவர்கள்

    அன்பெனும் பூவால் துன்பம் தீர்த்து...

    இந்த எல்லை தாண்டினால்...

    எல்லைகளுக்கப்பால்...

    கண்ணிலே அன்பிருந்தால்

    கரு

    இது வெறும் கவிதையல்ல, ராக்கிக் கயிறு!

    கனவுகள்

    குப்பையில் ஒரு...

    சக்தி

    சாம்பல்

    தஞ்சாவூரும், காவிரியும், சங்கரனும்...

    துணை

    துர்கா பூஜை!

    தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில்...

    நம்பிக்கை நட்சத்திரங்கள்

    நல்முத்து

    நெட்டி பொம்மைகள்

    பசி

    பிரயாணம்

    புனரபி ஜனனம், புனரபி மரணம்

    மகர குண்டலம்

    மன்னி

    மாளிகை மனசுகள்

    யாருக்கு யாரோ?

    இது விமர்சனமல்ல...

    வெ. இறையன்பு இ.ஆ.ப,

    Present Chief Secretary,

    மாவட்ட ஆட்சித் தலைவர்,

    காஞ்சிபுரம்.

    விமர்சனத்திற்கும், அணிந்துரைக்குமான வேறுபாடு தெரிந்திருக்கவேண்டும். அணிந்துரை என்பது ஏதேனும் ஒரு சிறுகதையைப்பற்றிய அணுகுமுறையாகக்கூட இருக்கலாம். மொத்த தொகுப்பிலிருக்கும் சந்திப்பிழைகளைக்கூட பட்டியலிடத் தேவையில்லாத கௌரமானதாய் அது அமைந்துவிடுகிறது.

    சிறுகதை எழுதுவதற்குமுன் யோசித்த நேரத்தைவிட அதிகநேரம் நான், எழுதியபிறகு யோசிக்கவேண்டியிருந்தது. எது சரியான சிறுகதை என்பதை நான் உணர்ந்தபொழுது அது எனக்குத்தெரியும், ஆனால் சொல்லமுடியாது என்றே தோன்றியது.

    வாழ்க்கை எப்பொழுது ஆரம்பமானது என்பது தெரியாததைப்போன்றதாய் எந்த இலக்கியத்திற்கான தொடக்கமும் முடிவும் அகப்படாததாய் இருக்கவேண்டும் என்று மட்டும் புரிகிறது. எங்கே அது தொடங்கியது என்பது வாசகர்களின் திறமைக்கேற்ப புரிந்துகொள்ளுதலாய் விட்டுவிடும்போது அதன் முடிவின் போக்கையும் தெரிந்துகொள்ளும் யுக்தி அவர்களுக்கும் கிடைக்கிறது.

    பல சிறுகதைகளில் கடைசிவரி மட்டுமில்லாவிட்டால் அவற்றில் ஜீவனில்லாமல் இருப்பதாகத் தெரியும். ஒரு பிரம்மிக்கத்தக்க மாற்றம், எதிர்பாராத திருப்பம் கதையின் கடைசிவரியில் ஒளிந்திருக்கும். கதையை முழுமையாக வாசிக்க நேர்வதே அந்தக் கடைசிவரியைக் கண்ணுறுவதற்காகவே.

    சிலநேரங்களில் அந்தக் கடைசிவரியை ஆரம்பத்தில்போட்டு வித்தை பண்ணலாம். அல்லது நடுவிலேபோட்டு மூடலாம். எப்படியாயினும் அந்த ஒருவரிதானே என்று அது தானாகவே அடையாளம் காட்டிவிடும். கதையிலிருக்கும் சுவாரசியம் அத்தோடு முடிந்துபோகிறது. அதன்பிறகு வாசிப்பது வியர்த்தம்தான்...

    நல்ல சிறுகதை முந்தைய நிகழ்வுகளின் தொடர்பு என்பதைக் காட்டிவிடும். முதல்வரிக்கு முன்னமேயே கதை ஆரம்பித்துவிட்டது என்பது உணர்த்தப்படுவதாய் அமையும். கடைசிவரிக்கு அப்பாலும் நிகழ்வுகள் தொடர்கின்றன என்பதைக் கோடிட்டு காட்டும். சாவு நிகழாதவரை வாழ்க்கை அப்பட்டமாய் முடிந்துபோவதில்லையே.

    மேற்கண்ட அணுகுமுறையில் இந்தத் தொகுப்பிலுள்ள ‘எல்லைகளுக்கப்பால்,’ தஞ்சாவூரும், சங்கரனும், காவிரியும் என்ற கதைகளை வாசிக்க நேர்ந்தபோது எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது.

    மனிதநேயத்தைப்பற்றிய விரிவுபடுத்தப்பட்ட சித்திரமாய் ‘எல்லைகளுக்கப்பால்’ சிறுகதை எனக்குப்பட்டது. எல்லா எல்லா எல்லைகளும், சேர்ப்பதிலும் அதிகமாய்ப் பிரித்துவைக்கின்றன... எல்லா ஒன்றுசேரல்களும் பாதுகாப்பின்மையின் காரணமாகத்தான் ஆரம்பமாகின்றன. ஒவ்வொரு பாதுகாப்பும், பாதுகாப்பின்மையைத் தனக்குள் அடைகாத்துக்கொண்டுதானிருக்கிறது. இந்த எல்லைகள் தேசத்தின்வரை கோடுகளாகத்தானிருக்கவேண்டும் என்பதில்லை. அதைக் கடந்தும் கண்ணுக்குத் தெரியாமல் நம்மில் விரவிக்கிடக்கும் கோடுகளின் வழியாக மானுடம், தன்னைப் பிரித்துப்பிரித்து அடையாளம் காணும் கோர முயற்சிகளாய் நம் அத்தனை அமைப்புகளும் ஆகியிருக்கின்றன.

    குளிரிலும் பனியிலும் எந்நேரமும் இறக்க நேரிடலாம் எனும் அச்சத்தில், தான் படையிலிருந்து விடுபடப்போகின்ற நாளை நோக்கி இறங்குவரிசையில் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறவர்களது வேதனையில் ஒரு துளியேனும் தெரிந்துகொள்ளாமல் வறட்டு தேசியம் பேசும் நாக்குகள் அதிகம்.

    இந்த தேசம் எங்கு ஆரம்பமானது? ‘எங்கு முடியப்போகிறது?’ இந்த ஆற்றில், மலையில், புல்வெளிகளில் பனிப்பிரதேசங்களில் யார் தன்னுடைய கையெழுத்தைப் போட்டிருக்கிறார்கள்? என்ற கேள்விகளெல்லாம் என்னுள் இமயமலையின் உட்பகுதிகளுக்குப் பயணம் செய்தபோது எனக்குத் தோன்றியது.

    எங்கள் வீட்டுக்கு மேலேயிருக்கிற வானம் முழுமையும் எனக்கு மட்டுமே சொந்தமானது என எண்ணிய எனது நிர்வாண நாட்களை எண்ணி நான் வெட்கித்திருக்கிறேன்.

    எது எல்லை என நாம் வரையறுக்கிறோமோ, அது நம்முடைய குறைபாடுகளைக் குறிப்பனவாகத்தானிருக்கின்றன. தேசங்களுக்கான கீதங்களை வாசிக்கிற நம்மால் மனிதர்களுக்கானவற்றை எப்பொழுது வாசிக்கமுடியும்?

    இந்தக் கதை வாசித்த பிறகு நிறைய யோசிக்கவைக்கிறது. என்றேனும் ஒருநாள் இந்த உலகம் ஒரே கூரையின்கீழ் வராதா?

    எந்தக் கேள்வியுமே சரியான வகையில் கேட்கப்படுவதில்லை. பதில் தெரிந்து கேட்கப்படுகின்ற கேள்விகள் வேண்டுமானால் அழகாகத் தன்னை அலங்கரித்து நிற்கலாம். கேள்விகளுக்கும் பதில்களுக்கும் பின்னாலும் கேட்கப்படுபவை அப்படியேதானிருக்கும், என்கிறபோது கேட்பதினால் சிலவார்த்தைகள் மட்டுமே செலவாகமுடியும்.

    தஞ்சாவூரைப்பற்றி இலக்கியத்தில் படித்தபோது பின்னாளில் அதை ஒரு நீர் திறந்துவிடப்படும் காலத்திற்கு முன்பாக நான் பார்த்திருக்காமலே பார்த்திருக்கலாமெனத் தோன்றியதுண்டு. எதைப் பற்றியுமான உயர்ந்த கற்பனைகளிருக்கின்றனவோ அவை அப்படியே இருக்கட்டும். அவற்றை தரிசித்திராமலே இருந்துவிடலாம்... அதுதான் நல்லது. யாரைப்பற்றிய ஒப்பற்ற எண்ணங்களிருந்தாலும் அவர்களை சந்திப்பதைத் தவிர்க்கலாம். கற்பனைகளாவது: காயம்படாமல் காப்பாற்றப்படட்டுமே!

    சங்கரன் போன்ற எத்தனையோ வைரங்கள் மறுபடியும் பூமிக்குள் அமுங்கி நிலக்கரியாய் எதிர்ப் பரிணாமவளர்ச்சியுறும் நிலையை நான் அனுபவித்திருக்கிறேன். இன்னும் சற்றுமுன்னே நகர்ந்திருந்தால் எதிரே மிகப்பெரிய பள்ளத்தாக்கு இருக்கிற எச்சரிக்கையை அவர்கள் அறிந்திருக்கமுடியும். விழுந்துவிடுவது நிகழ்கிறபோது எந்த உயரத்திலிருந்து என்று பெருமைப்பட்டுக்கொள்ள முடியுமா?

    அதிக நுட்பமாக இருப்பவர்கள் அதீத ஜாக்கிரதையாக நடந்துகொள்ளாவிடின், தன் ஆத்மாவை சிதைத்துக்கொள்ளும் அவலம் ஏற்படலாம்.

    அதற்குமேல் என்ன சொல்லவிருக்கிறது. இந்த அணிந்துரையும் அப்படியே முடியாமலே தொங்கிக்கொண்டிருக்கட்டும்தான் போ...

    வெ. இறையன்பு

    அவர்கள்

    வாசற்கதவு படபடவென தட்டப்பட்டதும் சத்யா யார் இப்படி தட்டுவது என்ற வியப்போடு வேகமாய்வந்து நாதாங்கியை நீக்கி கதவைத் திறந்தாள். வெளியில் மூன்றுபேர் நின்றிருந்தார்கள்.

    யார் என்ன வேண்டும் என்று சத்யா கேட்பதற்கு வாய்திறக்குமுன் மூவரும் உள்ளே வந்துவிட்டார்கள். பார்த்தால் சந்தேகமின்றி சொல்லிவிடலாம் பேட்டை ரௌடிகள் என்று. அவள் வாயடைத்து நிற்கும் போதே மூவரும் நடுக்கூடத்தில் தங்கள் மேல் துண்டுகளை விரித்து அமர்ந்துகொண்டார்கள். ஒருவன் சிகரெட் பெட்டியிலிருந்து ஒரு சிகரெட்டை உருவிப் பற்றவைத்துக்கொண்டான். சத்யாவுக்கு புரிந்துவிட்டது எல்லாம் வீட்டுச் சொந்தக்காரரின் ஏற்பாடு என்று. மனிதர்களின் குணங்களை நினைத்து வியப்பேற்பட்டது அவளுக்கு.

    வீட்டுக்காரர் வீட்டை காலி செய்யச்சொல்லி மூன்றுமாதமாகிவிட்டது. மூன்று மாதத்திற்கு முன்னால் ஒருநாள் சத்யாவின் புருஷன் ரவி விபத்தில் உயிரைவிட்டான், சத்யா இரண்டு பெண் குழந்தைகளோடு தனியானாள், சத்யா வேலைக்குப்போகும் பெண் என்பதால் வாழ்க்கையை எதிர்நோக்கும் தைரியம் இருந்தது அவளுக்கு.

    இனிமே உன்னால மாசாமாசம் ஆயிரம் ரூபாய் வாடகை கொடுத்துக்கிட்டு இங்க இருக்கமுடியுமா? என்று கேட்டார் வீட்டுக்காரர்.

    கொஞ்சம் சிரமம்தாங்க. ஒரு ஆறுமாசமோ அல்லது ஒருவருஷமோ கழிச்சு கொஞ்சம் கம்மி வாடகைக்கு வீடு பார்த்துக்கிட்டு போய்டலாம்னுதான் இருக்கேன்.

    செய்ங்க. நானும் கொஞ்சம், வீட்டை ரிப்பேர்பண்ணிட்டு வேறயாருக்காவது வாடகைக்குவிடுவேன்.

    இந்த பேச்சுவார்த்தை நடந்த ஒரே மாதத்தில் சத்யாவின் ஒன்றுவிட்ட அண்ணன்மூலம் ஒரு நல்ல வீடு குறைந்த வாடகையில் மனதுக்கு பிடித்துப்போக டோக்கன் அட்வான்ஸ் கொடுத்துவிட்டு அன்றிரவே வீட்டுக்காரரிடம் சொல்லிவிட்டாள் சத்யா. தன் புருஷன் கொடுத்திருந்த அட்வான்ஸ் பணம் பதினைந்தாயிரத்தைத் திருப்பிக்கொடுத்தால் புதுவீட்டுக்கு அட்வான்ஸ் கொடுக்க ஏதுவாக இருக்கும் என்றாள். அதற்குப்பிறகுதான் பிரச்சனை கிளம்பியது. வீட்டுக்காரர் குண்டைத் தூக்கிப்போட்டார்.

    பதினைந்தாயிரமா... ஏம்மா விளையாடறீங்களா?

    ஏங்க?

    மாசாமாசம் வாடகையில் அட்வான்ஸ் பணத்தை கொஞ்சம் கழிச்சுக்கிட்டு வந்தாரே உங்க வீட்டுக்காரர், அப்டி கழிச்சது பத்தாயிரம்போக மீதம் அஞ்சாயிரம்தான் இப்பொ நிக்குது! மொத்தத்தையும் கொண்டான்னா எங்க போவறது?

    சத்யா திடுக்கிட்டாள். சத்தியமாக ஒற்றைப் பைசா இதுவரை வாடகையிலிருந்து குறைத்ததில்லை ரவி. மாதாமாதம் செலவு கணக்கு எழுதிவைத்திருக்கிறான் டைரியில். அதில் முழுதாக வாடகை கொடுத்திருப்பதாகத்தான் எழுதியிருந்தது. பின் எப்படி வீட்டுக்காரர்... டைரியை அவரிடம் கொண்டு காட்டினாள். வீட்டுக்காரர் அலட்சியமாக அவளிடமே திரும்பக்கொடுத்தார். உங்க செலவு கணக்கு காட்டிட்டீங்க. என் வரவு கணக்கையும் பாருங்க. நீங்க இங்கவந்து சரியா ரெண்டு வருஷமாகப்போவுது. சரியா இருபது மாசமாமாசம் ஐநூறு கழிச்சுக்கிட்டு ஐநூறுதான் வாங்கியிருக்கேன். பார்த்துக்கங்க.

    சத்யாவுக்கு தலைசுற்றியது.

    போனமாதம்கூட ரவி அட்வான்ஸ் பணத்தைப்பற்றி பேசினான். பதினஞ்சாயிரம் பாங்க்ல இருந்தா எவ்ளோ வட்டி வரும். இப்டி முடங்கிகிடக்கே என்று வருத்தப்பட்டான். அப்படியிருக்க, இப்படியா ஒருவர் பொய் சொல்லுவார் என்று வியந்தாள். வீட்டுக்காரர் அவளை ஏமாற்றத் தீர்மானித்திருப்பது வெட்ட வெளிச்சமாகப் புரிந்தது. எதற்கும் சாட்சியில்லை. கொடுத்ததற்கும் சாட்சியில்லை. வாங்கினதற்கும் சாட்சியில்லை. ஸ்டாம்ப் பேப்பரில் கையெழுத்து வாங்கிக்கொண்டு அட்வான்ஸ் கொடுங்கள் என்று அனைவரும் சொன்னபோது ரவியும் ஒருவார்த்தை வீட்டுக்காரரிடம் கேட்டான். கிட்டத்தட்ட இதுவரை முப்பது வருஷமா யார்யார்கிட்டயோ வாடகையும் அட்வான்ஸும் வாங்கிட்டு இருக்கேன். இதுவரை யார்கிட்டயாவது மோசடி செய்திருப்பேனான்னு கேட்டுப்பாருங்க. உங்களுக்கு நம்பிக்கையில்லன்னா சொல்லுங்க. எங்க கையெழுத்து போடணும் போட்டுட்டா போச்சு...

    அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட, ரவி இளகிவிட்டான். இ... இல்ல வேணாம் சார். நா உங்களை நம்பறேன் என்றபடி பணத்தைக் கொடுத்தான். ஐந்து பவுன் சங்கிலியை அடகுவைத்து வாங்கிய பணம் கைமாறியது. நானா மோசடி செய்துவிடுவேன் என்று சொன்னவர் இப்போது மோசடி செய்யவே தீர்மானித்துவிட்டார். ஆனால் சத்யா ஏமாற தயாராக இல்லை. அவள் வீட்டுக்காரரை கூர்ந்துபார்த்தாள். நீங்க பொய்சொல்றீங்க என்றாள் தைரியமாக.

    வீட்டுக்காரர் ஆங்காரத்தோடு சண்டைக்கு வந்தார், சத்யா அசரவில்லை. வீட்டை காலிபண்ண முடியாது சார். ஒழுங்கா அட்வான்ஸ் பணத்தை முழுசா திருப்பிக்கொடுங்க. இல்லாட்டி பதினஞ்சுமாசத்துல நானே வாடகை முழுசா கழிச்சுட்டு வேறவீடு பார்த்துக்கிட்டு போறேன் என்றாள்.

    அப்டியா... பொட்டச்சி உனக்கு இவ்ளோ திமிர் இருந்தா எனக்கு எவ்ளோ இருக்கும்னு காட்டறேன் பார்.

    பார்ப்போம் சார். கோர்ட்டுன்னு ஒண்ணு இருக்கு. கேஸ் போடுங்க என்மேல. நா நிரபராதின்னு நிரூபிக்கறேன். புருஷனில்லாதவன்னா உங்களுக்கெல்லாம் கிள்ளுக்கீரையா போச்சா. சுலபமா ஏமாத்திடலாம்னு நினைப்போ...?

    வீட்டுக்காரர் வேகமாக வெளியேறினார். அதற்குப்பிறகு அவருடைய பிள்ளைகளும், மனைவியும் வந்து மிரட்டினார்கள். சத்யா பிடிவாதமாக இருந்தாள். துளியும் அயரவில்லை. அனைவருக்கும் முடியாது என்ற ஒரே பதிலையேகூறி அனுப்பினாள்.

    அதன்பிறகுதான் வீட்டுக்காரர் பேட்டை ரௌடிகளை அனுப்பிவைத்திருக்கிறார் அவளை காலிசெய்யவைக்க.

    சத்யா கூடத்தில் அமர்ந்திருந்தவர்களையே ஒரு கணம் பார்த்தாள். பிறகு சமையல் கட்டுக்குச் சென்றாள். குழந்தைகளிரண்டும் தூங்கி எழுந்ததும் புதியவர்களை மிரண்டுபோய் பார்த்தனர். பெரியவளுக்கு ஏழு வயது. சிறியவளுக்கு ஐந்து வயது. கூடத்திலிருந்து வளையம் வளையமாய் கிளம்பிய சிகரெட்டு புகையும் பீடி நாற்றமும் ஏதோ செய்தது. சத்யா பாலை அடுப்பில்வைத்தாள். மனதுக்குள் சஷ்டிக் கவசத்தை சொல்லிக்கொண்டாள். புதுசாய் சக்தி பிறந்தாற்போலிருந்தது. காப்பி கலந்தாள். மூன்று கோப்பைகளில் ஊற்றி எடுத்துக்கொண்டு கூடத்துக்கு வந்தாள். காப்பி டிரேயை அவர்களுக்கருகில் வைத்தாள்.

    சாப்டுங்க.

    அவர்கள் லேசான வியப்போடு அவளைப் பார்த்தார்கள்.

    காப்பி குடுத்து எங்களை அனுப்பிடலாம்னு பாக்கறியா என்றான் ஒருவன்.

    அப்டி எதுவும் இல்ல. என் வீடு தேடிவந்த யாருக்குமே காப்பி கொடுக்கறது வழக்கம்தான்.

    அவர்கள் கொஞ்சம் யோசித்தாலும், காப்பியின் நறுமணமும் அடர்த்தியான நுரையும் நிறமும் மனதைக்கவர ஒருவன் எடுத்து மற்றவர்களுக்கும் கொடுத்தான். சத்தியமாக இத்தனை வாசனையான காப்பியை ஆயுளில் அருந்தியதில்லை அவர்கள்.

    அதன்பிறகு சமையலை கவனித்தாள். குழந்தைகளை குளிப்பாட்டி பள்ளிக்கு கிளப்பினாள். சாப்பாடு ஊட்டி கேரியர் தயார்செய்து ரிக்ஷா வந்ததும் ஏற்றி அனுப்பினாள்.

    ஒன்பது மணிக்கு அவனும் புறப்பட்டான். தானும் சாப்பிட்டு டிபன் பாக்ஸிலும் அடைத்துக்கொண்டாள். பிறகு கூடத்திற்கு வந்தாள்...

    டிபன் கொண்டுவரவா?

    மூவரும் ஒருசேரத் திரும்பினார்கள். அவர்கள் கைகளில் சீட்டுக்கட்டுகள்.

    சத்யா உள்ளே போனாள்.

    அலுமினியக் கடாய் நிறைய செய்துவைத்திருந்த உப்புமாவை கொண்டுவந்தாள். வெங்காய வாசனையோடு ஆவி பறந்தது. மூணு பிளேட்டுகள், தண்ணீர் கூஜா எல்லவற்றையும் கொண்டுவந்து வைத்தாள்.

    நீங்களே போட்டு சாப்ட்டுக்கங்க எனக்கு ஆபிஸுக்கு... நாழியாகுது. மத்தியான சாப்பாடும் உள்ள வெச்சிருக்கேன். நா புறப்படவா. ஒரு சின்ன ஹெல்ப். பசங்க சாயங்காலம் வந்ததும் அவங்களுக்கு ஒரு டம்ளர் பால்மட்டும் காய்ச்சிக் குடுத்திங்கன்னா ரொம்ப உதவியா இருக்கும். இல்லன்னா நா வரவரைக்கும் ஒட்டஒட்ட பட்டினிகிடப்பாங்க. தினமும் அப்டித்தான் இருக்காங்க. ஏதோ இன்னிக்கு நீங்க இருக்கறதால சொல்றேன்.

    சத்யா இயல்பாக சொல்லிவிட்டு புறப்பட அவர்கள் வாயடைத்துப்போனார்கள்.

    இ... இரும்மா... நீபாட்டுக்கு போனா... என்ன அர்த்தம்? போய் போலீஸைக் கூட்டிட்டுவருவ. வீட்ல அதைக்காணும் இதைக் காணும்ப. எதுக்கு வம்பு... ஒழுங்கா வீட்டை காலி செய்யறேன்னு வீட்டுக்காரர்கிட்ட சொல்லிட்டு ஜரூரா வீடு பார்த்துக்கிட்டு போ. இல்ல சாமான்செட்டைத் தூக்கிக்கிட்டு அம்மா வீட்டுக்கோ இல்ல யார் வீட்டுக்கோ போய்டு. ரெண்டுநாள்தான் உனக்கு டைம் சொல்லிட்டோம்.

    சத்யா அவர்களை நிதானமாகப் பார்த்தாள். எல்லாம் சாயந்திரம் வந்து பேசிப்போம். உங்களை நம்பி வீட்டையும் என் குழந்தைகளையும் ஒப்படைச்சுட்டுப் போறேன். அதேமாதிரி நீங்களும் என்னை நம்புங்க. நா வரேன் மணியாய்டுச்சு.

    சத்யா ஹேண்ட்பேகைத் தோளில் மாட்டிக்கொண்டு செல்ல அவர்கள் திகைப்போடு அவளைப் பார்த்தார்கள்.

    என்னாடா இது... இந்த பொம்பளை நமக்கு அல்வா குடுத்துடும் போலருக்கு!

    சிகரெட்டும் சீட்டும் பத்தாது மச்சி. நாளைக்கு பாட்டில் வாங்கிடுவோம். அப்பொதான் ஒரு கெத் இருக்கும்.

    ஊத்திக்கிட்டு ஒருதடவ கையப்புடிச்சு இழுத்தோம்னு வெச்சுக்க... பின்னங்கால் பிடரில இடிக்க ஓடிடமாட்டா?

    அதான் சரி! டேய் காளி, நீ ராத்திரிபோய் நல்ல சரக்கா வாங்கிட்டு வந்துடு.

    எல்லாம் சரிதான். இப்பொ இந்த நாஸ்தாவை துன்னலாமா வேணாமா?

    நாமளா கேட்டோம்? அவதான வெச்சுட்டு போய்ருக்கா?

    அப்பொ...?

    சாப்ட்டுடுவோம்.

    காலை டிபன் சாப்பிட்டு, மதியம் சாப்பாடும் சாப்பிட்டு சீட்டு விளையாடி, குட்டியாய் ஒரு தூக்கம் போட்டார்கள்.

    நாலு மணிக்கு ரிக்ஷா பெல் சப்தம் கேட்க, குழந்தைகள் இறங்கி ஓடிவந்தார்கள். வழக்கமாய் பக்கத்து வீட்டில் சாவி இருக்கும். இன்று வீடு திறந்திருக்க வியப்போடு உள்ளே நுழைந்தவர்கள், காலையில் வந்திருந்தவர்கள் இன்னும் போகாதது கண்டு ஒருவித பயத்தோடு பார்த்தார்கள்.

    பயத்தில் தன்னோடு ஒட்டிக்கொண்ட தங்கையை அணைத்துக்கொண்டாள் தமக்கை.

    ம்ம்... வாங்க...! பையவெச்சுட்டு கப்சுப்னு உட்காருங்க. உங்கம்மா வரவரைக்கும். புரிஞ்சுதா! அழுதுகிழுது செய்தீங்க...

    குழந்தைகள் சுவரோடு ஒட்டி உட்கார்ந்தார்கள்.

    அரைமணிநேரம் போனதும் ஒருவன் திரும்பிப் பார்த்தான். ஓடியாடவேண்டிய மலர்கள் வாடி அமர்ந்திருந்த காட்சி அவனுக்கே ஏதோ இரக்கத்தை வரவழைத்திருக்க வேண்டும்.

    டேய் அந்த பொம்பளை, பசங்க வந்தா பால் கொடுக்க சொல்லிச்சே.

    சொன்னா...? அதுக்கா நாம இங்க குந்திக்கிட்டுக் இருக்கோம்?

    ச்சீ சின்ன பசங்கடா பாவம்! அதுங்க என்ன செய்யும்.

    சரி, சரி போய் பால் எடுத்துக் கொடுத்துட்டு நீ சரக்கு வாங்க புறப்படு.

    காளி எழுந்து சமையலறைக்குள் சென்றான்.

    ஏழு மணிக்கு சத்யா வந்தாள்.

    Enjoying the preview?
    Page 1 of 1