Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kalyanam! Kacheri!
Kalyanam! Kacheri!
Kalyanam! Kacheri!
Ebook124 pages1 hour

Kalyanam! Kacheri!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் போது, அது காதலோ, பெரியவர்கள் பார்த்து செய்யும் வரனோ, எதுவாக இருந்தாலும் ஒன்றுக்கு பல முறை யோசித்து, சற்றே அவகாசம் எடுத்து, எடை போட்டு, கணித்து யார் கட்டாயமும் இல்லாமல், எதிர்காலம் பற்றிய ஒரு கணக்கையும் மனதில் கொண்டு ஈகோ இல்லாமல் ஆணோ, பெண்ணோ செயல்பட்டால் நல்ல வாழ்க்கை அமைய வாய்ப்புண்டு! பணம், பதவி, சுயநலம், பேராசை இந்த நான்கும் இன்று பல பந்தங்களை உடைக்கிறது! கல்யாணம் கச்சேரி, வெறும் ஒரு நாள் கூத்து அல்ல, அது வாழ்க்கை என்பது தான் இந்த புதினம்!

Languageதமிழ்
Release dateDec 11, 2023
ISBN6580100610535
Kalyanam! Kacheri!

Read more from Devibala

Related to Kalyanam! Kacheri!

Related ebooks

Reviews for Kalyanam! Kacheri!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kalyanam! Kacheri! - Devibala

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    கல்யாணம்! கச்சேரி!

    Kalyanam! Kacheri!

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/devibala-novels

    பொருளடக்கம்

    அத்தியாயம் 01.

    அத்தியாயம் 02.

    அத்தியாயம் 03.

    அத்தியாயம் 04.

    அத்தியாயம் 05.

    அத்தியாயம் 06.

    அத்தியாயம் 07.

    அத்தியாயம் 08.

    அத்தியாயம் 09.

    அத்தியாயம் 10.

    அத்தியாயம் 11.

    அத்தியாயம் 12.

    அத்தியாயம் 13.

    அத்தியாயம் 14.

    அத்தியாயம் 15.

    அத்தியாயம் 16.

    அத்தியாயம் 17.

    அத்தியாயம் 18.

    அத்தியாயம் 19.

    அத்தியாயம் 20.

    ஒரு முன் குறிப்பு

    வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் போது, அது காதலோ, பெரியவர்கள் பார்த்து செய்யும் வரனோ, எதுவாக இருந்தாலும் ஒன்றுக்கு பல முறை யோசித்து, சற்றே அவகாசம் எடுத்து, எடை போட்டு, கணித்து யார் கட்டாயமும் இல்லாமல், எதிர்காலம் பற்றிய ஒரு கணக்கையும் மனதில் கொண்டு ஈகோ இல்லாமல் ஆணோ, பெண்ணோ செயல்பட்டால் நல்ல வாழ்க்கை அமைய வாய்ப்புண்டு! பணம், பதவி, சுயநலம், பேராசை இந்த நான்கும் இன்று பல பந்தங்களை உடைக்கிறது! கல்யாணம் கச்சேரி, வெறும் ஒரு நாள் கூத்து அல்ல, அது வாழ்க்கை என்பது தான் இந்த புதினம்!

    அத்தியாயம் 01.

    நீ இது வரைக்கும் பதினெட்டு வரன்களை வேண்டாம்னு ஒதுக்கியாச்சு மீனா! இதுக்கு மேல மேட்ரிமோனியல் சார்ட்ல பையன்கள் இல்லை!

    சுந்தர் கோபமாக சொல்ல, அவர் மனைவி மீனா விசுக்கென தலை தூக்கினாள்!

    என்ன பேசறீங்க நீங்க? நமக்கு ஒரே பொண்ணு! அவளுக்கு எந்த குறையும் இல்லை! அவளை எம். பி. ஏ. படிக்க வச்சாச்சு! நல்ல mnc கம்பெனில ஓரளவுக்கு பெரிய சம்பளம் வாங்கறா! நீங்க பெரிய கம்பெனில வேலை! எனக்கு பேங்க் உத்யோகம்! நமக்கு சொந்த வீடு, கார் எல்லாம் இருக்கு! நம்ம பொண்ணும் கார் ஓட்டறா! அவளுக்கு தெரியாத சங்கதி இல்லை!

    இதையெல்லாம் எதுக்கு இப்ப எங்கிட்ட நீ ஒப்பிக்கறே? எனக்கு எதுவுமே தெரியாதா மீனா?

    பதினெட்டுல ஜாதகம் பொருந்தாம அடிபட்டது பன்னண்டு! மீதி ஆறுல படிப்பு, அழகு, குடும்ப தகுதிகள், பையனோட அழகு, உத்யோகம், அவங்க பழகற முறைகள்னு நான் வச்சிருக்கற எதிர்பார்ப்புகள் சரியா இல்லை!"

    மீனா! நீ எதிர்பாக்கறது தப்புனு நான் சொல்லலை! ஆனா கல்யாண விஷயம்னு வரும் போது கொஞ்சம் காம்ப்ரமைசும் வேணும்!

    காம்ப்ரமைஸ்னா, எனக்கு புரியலை!

    முதல் படி ஜாதகம்னா, அதுல பத்து பொருத்தம் கேக்காதே! எட்டோ, ஏழோ ஓரளவுக்கு பொருந்தினா பாக்கலாம்! கட்டங்கள் முக்கியம் தான்! ஆனா அதுவே வாழ்க்கையை முழுமையா தீர்மானிக்கறதில்லை!

    இல்லீங்க, இதுல காம்ப்ரமைஸ் பண்ணிட்டு நாளைக்கு நாலு தும்மல் கூடுதலா போட்டாக்கூட மனசுக்கு நெருடலா இருக்கும்!

    அடுத்தது பையன் பற்றின உன்னோட எதிர்பார்ப்பு?

    ஆமாம், இவ நல்லா படிச்சிருக்கா! இவளுக்கு மேல அவன் படிக்கணும்னு நான் நினைக்கலை! ஆனா இவளுக்கு சமமா படிப்பு வேண்டாமா? இதே மாதிரி, உத்யோகம், சம்பளம் இதெல்லாம் இவளுக்கு நிகரா வேண்டாமா? அதுல கூட வேண்டாம்! ஆனா குறையக்கூடாதில்லையா?

    குடும்ப வசதிகள், அந்தஸ்த்து, ஒரே பையனா இருக்கணும்னு நீ எதிர்பாக்கறது சரியா? உனக்கு, எனக்கு உடன் பிறப்புகள் இல்லையா?

    பையனுக்கு அண்ணன் தம்பி இருந்தாக்கூட ஓக்கே தான்! நம்ம பொண்ணுக்கு நாத்தனார் வேண்டாம்! நான் உங்கக்கா கிட்ட பட்ட பாடு போதும்!

    நீ என்ன வாயில்லா பூச்சியா? பேசவே மாட்டியா?

    பத்து ரூபாய்க்கு வக்கில்லாத உங்கக்கா, எஸ்ஸெல்சில எட்டு தடவை பெயிலாயிட்டு, புருஷன் கூடவும் வாழாம நம்ம கூட வந்து ஒக்காந்து வாய் மட்டும் காது வரைக்கும் கிழிய எல்லாத்துக்கும் எதிர்ப்பு! கை நிறைய சம்பாதிக்கற நான் உங்க அமைதி கெடக்கூடாது, நம்ம பொண்ணு வாழ்க்கை சீரா இருக்கணும்னு எத்தனை அடங்கி போனேன்? போதும்டா சாமி! என் பொண்ணுக்கு நாத்தனார்ங்கற உறவை சத்தியமா நான் அனுமதிக்க மாட்டேன்!

    மாமியாரும் வேண்டாம்னு சொல்றியே!

    முதல்ல அதை நான் தடுக்கலை! பெத்தவங்க தேவை தான்! ஆனா தனியா வந்துட்டா நம்ம பொண்ணு நிம்மதியா வாழ்வா! உடன் பிறப்புகளே இல்லாம இருந்தா நாளைக்கு வீடு வாசல் எல்லாத்துக்கும் நம்ம பிரகதி சொந்தக்காரியா இருப்பா இல்லையா?

    பேராசைடி!

    என்ன பேராசை? நமக்கு மாப்பிள்ளை ஆகப்போறவன் தானே நம்ம சொத்துக்களை முழுசா அனுபவிக்கப்போறான்? அந்த மாதிரி நம்ம பொண்ணு ஏக போக வாரிசா இருக்கணும்னு ஒரு அம்மாவா இருந்து நான் யோசிச்சா அது தப்பா? நானா கேக்கறேன் அவங்க சொத்துக்களை? நான் உங்களையே நம்பாதவ!

    பேங்க்ல வேலை! சொந்தக்கால்ல நிக்கற அகங்காரம்?

    அதுல தப்பில்லீங்க! நல்லா படிச்சு, சொந்தமா சம்பாதிக்கற ஒரு பெண்ணுக்கு திமிர் இருந்தா அதுல தப்பே இல்லை! அது அகங்காரம் இல்லை! தன் கால்ல நிக்கற தைரியம், தன்னம்பிக்கை! இப்பவும் ஆணாதிக்கம் தலைக்கேறி, மனைவியை ஆட்டி படைக்கற ஆண்கள் இல்லையா? சமைக்கவும், வீட்டை பராமரிக்கவும், சம்போகத்துக்கும் மட்டும் தான் மனைவினு நினைக்கற ஆண்களுக்கு மத்தில நாங்க வாழ வேண்டியிருக்கு இல்லையா?

    நான் அப்படி உன் கிட்ட நடந்திருக்கேனா?

    அப்படி நான் சொல்லலை! ஆனா அதுக்கு நான் அனுமதிக்கவும் இல்லை! இந்த வீடு, கார், பேங்க் பேலன்ஸ் எல்லாமே உங்க ஒருத்தரால சேர்த்திருக்க முடியுமா? நானும் சம்பாதிச்ச காரணமாத்தானே இத்தனை வசதிகள்?

    சுந்தருக்கு முகம் சிவந்து விட்டது!

    ஒப்புக்கறேன்! நீ இல்லைன்னா நான் பிச்சை எடுத்திருப்பேன்! நான் இப்படி ஒரு வாழ்க்கை வாழறதே நீ போட்ட பிச்சை தான்! உனக்கு இப்ப என்ன வேணும்? நான் பிரகதி கல்யாண விஷயத்துல எதுவும் பேசலை! நீயே முடிவெடு! நீ கூப்பிட்ட இடத்துக்கு நான் வர்றேன்! ஏன்னா சகல திராணியும் உனக்கிருந்தாலும் அப்பானு நான் ஒருத்தன் வந்து நின்னாத்தானே என் பொண்ணுக்கு மரியாதை! அதனால வர்றேன்!

    என்ன இப்படியெல்லாம் பேசறீங்க?

    எனக்கு பேசத்தெரியாதம்மா! எப்படி பேசணும்னு சொல்லிக்குடு! அதை நான் பேசறேன்! என் மகளுக்காக எல்லா அவமானங்களையும் பட நான் தயாரா இருக்கேன்!

    யார் உங்களை அவமானப்படுத்தினது?

    பிரகதி வெளியே வந்தாள்!

    ஏன் ரெண்டு பேரும் இப்படி சண்டை போடறீங்க? என் கல்யாண பேச்சை எடுத்த முதல், தினசரி உங்களுக்குள்ள பிரச்னை போயிட்டே இருக்கு!

    உனக்கு எல்லா தகுதிகளும் படைச்ச ஒருத்தன் வரணும்னு நான் ஆசைப்படறது தப்பா? எடுத்தேன் கவிழ்த்தேன்னு வரன் பார்க்க முடியுமா? உனக்கு வயசு இருபத்தி அஞ்சு தான்! ஏன் அவசரப்படணும்?

    யாரும் ஏனோ தானோன்னு வரன் பார்க்க சொல்லலை! அம்மாவுக்கு பொண்ணு வாழ்க்கைல உள்ள எதிர்பார்ப்புகளும் ஆசைகளும் அப்பாக்களுக்கும் இங்கே உண்டு! ஓரளவு காம்ப்ரமைஸா போனா நல்லதுன்னு என் மனசுல பட்டதை நான் சொல்லக்கூடாதா? எங்கக்கா மோசம் தான்! அவளுக்கு பட்டி வாய் தான்! நான் அதை மறுக்கலை! இவளோட உடன் பிறப்புகள் யோக்யமா? ஒவ்வொருத்தர் லட்சணங்களையும் எடுத்து விடவா? என் மனுஷங்க யாரு எதுக்கு வர்றாங்க? இப்பல்லாம் பெரும்பாலான குடும்பங்கள்ள தாய் வழி சொந்தங்கள் தானே தலை விரிச்சாடுது?

    அப்பா! விடுங்க!"

    Enjoying the preview?
    Page 1 of 1