Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vetri... 2023
Vetri... 2023
Vetri... 2023
Ebook123 pages1 hour

Vetri... 2023

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கதையின் நாயகன் வெற்றி ஒரு ஆச்சாரமான குடும்பத்தை சேர்ந்தவன். மூன்று பெண்களை தாண்டி கடைசியாக பிறந்த ஒரே மகன் தான் வெற்றி. மிகவும் பொறுப்பாகவும் கண்ணியமாகவும் நடந்து கொள்வான். இவர்களுக்கு நேர் எதிரான குடும்பம்தான் மகிமா குடும்பத்தினர், எதைப்பற்றியும் கவலைபடாமல் இருப்பவள் தான் மகிமா. வெற்றிக்கும் மகிமாவுக்கும் இடையில் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் என்ன? வெற்றி குடும்பத்தினர் மகிமாவை ஏற்றுக்கொண்டார்களா? மகிமாவின் இந்த குணத்தை வெற்றி எப்படி கையாள்கிறான் என்பதை வாசித்து அறியுங்கள்.

Languageதமிழ்
Release dateJan 27, 2024
ISBN6580100610247
Vetri... 2023

Read more from Devibala

Related to Vetri... 2023

Related ebooks

Reviews for Vetri... 2023

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vetri... 2023 - Devibala

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    வெற்றி... 2023

    Vetri... 2023

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/devibala-novels

    பொருளடக்கம்

    அத்தியாயம் 01.

    அத்தியாயம் 02.

    அத்தியாயம் 03.

    அத்தியாயம் 04.

    அத்தியாயம் 05.

    அத்தியாயம் 06.

    அத்தியாயம் 07.

    அத்தியாயம் 08.

    அத்தியாயம் 09.

    அத்தியாயம் 10.

    அத்தியாயம் 11.

    அத்தியாயம் 12.

    அத்தியாயம் 13.

    அத்தியாயம் 14.

    அத்தியாயம் 15.

    அத்தியாயம் 16.

    அத்தியாயம் 17.

    அத்தியாயம் 18.

    அத்தியாயம் 19.

    அத்தியாயம் 20.

    அத்தியாயம் 21.

    அத்தியாயம் 22.

    அத்தியாயம் 23.

    அத்தியாயம் 01.

    ரெண்டு பேரும் ஒரு வெளியூர் டூர் போகலாமா வெற்றி?

    மகிமா இயல்பாக கேட்க,

    வெளியூரா? நாம ரெண்டு பேர் தனியாவா?

    ஏன் இதுக்கு இத்தனை அதிர்ச்சி உனக்கு? நாம ரெண்டு பேர் போகாம, ஊரையே கூட்டிட்டு போகணுமா? என்ன நீ? பால் குடிக்கற பாப்பாவை விட மோசமா இருக்கே?

    அதில்லை மகி! நமக்கு இன்னும் கல்யாணம் நிச்சயம் கூட ஆகலை. பரஸ்பரம் பார்த்திருக்கோம். குடும்பங்கள் சந்திச்சு முழுமையா ஒருத்தரையொருத்தர் புரிஞ்சுக ஆரம்பிக்கலை. நாமே இது வரைக்கும் நாலு தடவை கூட சந்திக்கலை. அதுக்குள்ள தனியா வெளியூர் போக வேண்டிய அவசியம் என்ன மகி? குடும்பங்கள், பாரம்பர்யமான குடும்பங்கள். இதையெல்லாம் அனுமதிப்பாங்களானு தெரியலை.

    இத்தனை மோசமா இருக்கீங்க? நல்லா படிச்சு பெரிய உத்யோகத்துல உள்ளவரா நீங்க? நம்ப முடியலியே வெற்றி. காலத்துக்கு தகுந்த மாதிரி நாம மாறலைன்னா, நாம ஒதுக்கப்படுவோம் வெற்றி. என்னாலயே உங்களை ஜீரணிக்க முடியலை வெற்றி.

    அவன் அவளை பரிதாபமாக பார்த்தான்

    குட்! உங்களுக்கு ஒரு நாள் அவகாசம் தர்றேன். யோசனை பண்ணி, நாளைக்கு நீங்க பதில் சொல்லணும். நான் ஃப்ளைட் டிக்கெட் புக் பண்ணணும்!

    எங்கே போறதா யோசனை?

    குலு, மணாலி போகலாம், இல்லைன்னா கோவா போகலாம்!

    உங்க வீட்ல சம்மதிப்பாங்களா?

    எங்க வீட்ல இதுக்கெல்லாம் தடையே சொல்ல மாட்டாங்க. சொல்ற உரிமையும் அவங்களுக்கு இல்லை! அப்படியே தடுத்தாலும், நான் கேக்கவும் மாட்டேன்!

    அதிர்ந்து போனான் வெற்றி.

    "இப்படி ஒரு பெண்ணா? எதைப்பற்றியும் கவலைப்படாமல், தான் நினைத்தது நடக்க வேண்டும் என்ற திடம், மற்றவர் கருத்துக்களை பற்றி கவலைப்படாத குணம், சில சமூக நிர்பந்தங்கள், நியாயங்கள், கோட்பாடுகளை மதிக்க வேண்டும் என்ற எண்ணம் எதுவும் இல்லாமல், யாருக்கும் பயப்படாத பெண் மகிமா!

    அவளை வெற்றிக்கு பிடிக்கக்காரணம் அவளது இந்த குணம் தான்! ஆனால் குடும்பத்தார் அவளை சந்தித்ததே இரண்டு முறை தான்! ஜாதக அலசல்கள் முடிந்து இன்னும் அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை! அதனால் இது தொடர்பான பேச்சு தீவிரமாக தொடங்கவில்லை! அதற்குள் வெற்றியை வெளியூருக்கு அழைக்கிறாள் மகிமா! ஒரு ஆணுடன் தனியாக போகலாமா என்ற சஞ்சலம் அவளுக்கு இல்லையா? அல்லது தன் மேல் அளவு கடந்த நம்பிக்கையா? இல்லை, எதற்கும் துணிந்த பெண்ணா? இதில் எது மகிமா?

    சரி வெற்றி! நான் ஒரு பர்த் டே அட்டெண்ட் பண்ணணும். ஸ்டார் ஓட்டல்ல நடக்குது. டின்னர் முடிச்சு, நான் வீட்டுக்கு போக ராத்திரி ரெண்டு மணி ஆயிடும்!

    தனியா போயிடுவியா மகி?

    என்ன பயம் வெற்றி? நீ எந்த ஊர்ல இருக்கே? அதுவா பிரச்னை இப்ப?

    எதையுமே நீ ஈசியாத்தான் எடுத்துப்பியா மகி?

    சரி, எனக்கு நேரமாச்சு. நம்ம வெளியூர் பயணம் பற்றி சீக்கிரம் எனக்கு சொல்லு. நம்ம ப்ளைட் டிக்கெட், தங்கற இடம் எல்லாம் நான் புக் பண்ணணும்.ஹலோ, உன் செலவுக்கான பணத்தை நீ குடுத்துடணும். காசுல நான் ரொம்ப கறார். புரியுதா?

    அவள் தன் வண்டியை எடுத்துக்கொண்டு நொடியில் புறப்பட்டாள். வெற்றிக்கு ஒரு மாதிரி கவலையே வந்தது. இரண்டு பேருமே ஒரே மாதிரி படிப்பு, ஏறத்தாழ ஒரே மாதிரி உத்யோகம். சம்பளமும் கூடக்குறைய ஒரே அளவு தான். மகிமா அவனுக்கு அறிவில் எந்த விதத்திலும் குறைந்தவள் அல்ல. அவளது அப்பா, அம்மா இருவரும் உத்யோகஸ்தர்கள், சொந்த வீடு, கல்யாணமான ஒரு அக்கா ரம்யா, பெங்களூரில் கணவர் இரண்டு குழந்கைளுடன். இது முறையாக பார்த்து ஒரு கல்யாண ஏஜென்சி மூலம் வந்த வரன் தான்! மகிமா அப்பா நடராஜன் மகளை சுதந்திரமாக வளர்த்தவர். ஒரு பிரபல பத்திரிகையில் அவர் தலைமை நிருபர். அம்மா கல்பனா, தனியார் பள்ளியில் டீச்சர். யார் சங்கதியிலும் யாரும் தலையிடாத ஒரு மாதிரி முற் போக்கு குடும்பம்.

    அதே நேரம் வெற்றியின் குடும்பம் நேர் எதிர். அப்பா ஒரு பெரிய ஆலயத்தில் அர்ச்சகர். ஆச்சாரமான குடும்பம். அப்பா கணபதி கோடு போட்டு வாழும் மனிதர். அம்மா கங்கா, குடும்பத்தலைவி, கணவர் கிழித்த கோட்டை தாண்டாத மனைவி. மூன்று பெண்கள்! மூவரும் கல்யாணமாகி மத்ய குடும்பத்தில் வாழும் சராசரி பெண்கள். அதில் ஒருத்திக்கு மட்டும் நர்ஸ் வேலை. கொஞ்சம் மாறுதலாக யோசிக்கும் பெண். முதல் இருவர், பெற்றவர்கள் பார்த்து வைத்த பையனை மணந்தவர்கள். இவள் மட்டும் ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கும் ஒரு ஏசி மெக்கானிக்கை காதலித்தாள். அவன் திவாகர் வேறு ஜாதி. இந்த விவரம் வீட்டில் பெரிய புயலை கிளப்ப, அர்ச்சகர் கணபதி கடைசி வரை அதை கடுமையாக எதிர்க்க, அம்மா போராட, அக்காக்களும் அப்பா பக்கம் நிற்க, திவாகர், சீதா குடும்பங்களை எதிர்த்து கோயிலில் கல்யாணம் முடித்து, பதிவும் முடித்து வர, கணபதி, மகளை உள்ளே சேர்க்காமல் பக்கெட் நிறைய தண்ணீர் மொண்டு நடுக்கூடத்தில் தலை முழுகினார். இன்று வரை சீதாவை ஏற்கவில்லை. அம்மா கங்காவுக்கு கண்ணீர் தான் மிஞ்சியது. கடைசியாக பிறந்த வெற்றிக்கு சீதா அக்காவின் காதல் இன்று வரை தப்பாக தெரியவில்லை! அவன் அக்கா வீட்டுக்கு செல்வது, அவள் சமைப்பதை உண்பது, அவள் வீட்டில் உறங்குவது என திவாகருடன் நல்ல உறவை வளர்த்து கொண்டான். முதலில் இது தெரிந்து, கணபதி மகனையும் சேர்க்க மாட்டேன் என ரகளை செய்ய, அம்மா கங்கா ஒரு கட்டத்தில் தற்கொலை வரை போக, குடும்பமே நிலை குலைந்தது!

    மூணு பொண்ணுகளை தாண்டி கடைசியா நமக்கு பிறந்த ஒரே மகன் வெற்றி! நம்ம குடும்பங்கள்ள வெற்றினு பேர் வைக்கற பழக்கமில்லை! அதையும் மீறி, என் பிரார்த்தனைக்கு கிடைச்ச வெற்றி தான் நமக்கு மகன்னு அந்த பேரை நான் வச்சேன்! அவன் பிறந்த பிறகு தான் உங்களுக்கு தலைமை அர்ச்சகரா பதவி உயர்வு, நமக்கு வருமானம், சமூகத்துல ஒரு கௌரவம், வீடு வாசல்னு எல்லா தகுதிகளும் வந்திருக்கு. அவனும் படிச்சு பெரிய பதவிக்கு வந்திருக்கான். மூணு பொண்ணுகளையும் கரை சேர்க்க முடிஞ்சிருக்கு! உங்களுக்கு பிடிக்கலைன்னு சீதாவை ஒதுக்கியாச்சு. உங்களுக்கு வாக்கப்பட்ட பாவத்துக்கு நானும் தலை ஆட்டியாச்சு. ஆனா வெற்றியை கட்டுப்படுத்தி அவனையும் இழக்கப்போறீங்களா?

    அதன் பிறகு அப்பா கணபதி பலதும் யோசித்து ஒரு கட்டத்தில் அடங்கி விட்டார். அவர் பிடிவாதங்களை அவர் விடவில்லை. ஆனால் வெற்றியின் சங்கதியில் தலையிடவில்லை. வெற்றியும் நியாயமான மகனாக, அவருக்கு உறுத்தல் தரும் விதமாக

    Enjoying the preview?
    Page 1 of 1